ரியா தேவின் பார்வையை உணர்ந்து, ” இவரை நான் லவ் பண்ணேன் தேவ் “என்றாள்.
அவளது வார்த்தையில் லேசாக இதழ் வளைத்து சிரித்தவன்..
அந்த ஆடவனை பார்க்க..
” சரி ஓகே! நீங்க பேசுங்க!” என்று விட்டு , “நான் சொன்னதை யோசிச்சு பதில் சொல்லு” என்று அவளிடமும் சொல்லிவிட்டு நகர்ந்தான் ..ரியாவின் காதலன் என அறிமுகப்படுத்தப்பட்ட சதீஷ்.
அவன் சென்ற பிறகு ,ரியாவை கைகளை கட்டிக்கொண்டு குறுகுறுவென பார்த்த படி
“இப்ப சொல்லு என்ன பிரச்சனை ?”என்றான் தேவ்.
“இல்ல தேவ்”என்றவள் அமைதியாக..
” நான் வரும்போதே காரசாரமா தான் ஏதோ பேசிட்டு இருந்த.. நான் வந்ததுக்கு அப்புறம் தான் உன்னோட முக பாவனை கூட மாத்துன ,அண்ட் நீ என்கிட்ட அவன் யாருன்னு சொல்லும்போதே, இவனை லவ் பண்ணேன்னு தான் சொன்னியே தவிர.. லவ் பண்றேன்னு சொல்லல, மேல சொல்லு ?” என பேசிக் கொண்டிருக்கும்போதே அவளது ஃபோனில் மெசேஜ் வந்ததற்கான நோட்டிபிகேஷன் வர ..
வேகமாக அவள் போன் எடுத்துப் பார்க்க, அந்த போனை பிடுங்கி இருந்தான்.
“தேவ்” என்றவள் பதற..
“உஷ் !”என்று விட்டு அந்த மெசேஜை படித்தான். அதில் ஒரு போட்டோவும் இருக்க ,
கண்களில் அனல் பறக்க, “விஷயத்தை சொல்லு ?”என்றான் பற்களை கடித்த படி,
அவளும் ,”இவனை ஒரு சிக்ஸ் மந்தா எனக்கு தெரியும் “
“ஓ !இந்த விஷயம் உங்க அக்காவுக்கு தெரியுமா?”
” இல்லை” என்று தலையாட்டினாள்.
“உங்க ரெண்டு பேருக்குள்ள எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லன்னு தானே அவ நினைச்சுட்டு இருக்கா?”
” தேவ் பிளீஸ் ! நான் அவகிட்ட மறைக்கணும்னு எதுவும் மோட்டிவ் ஓட பண்ணல.அப்போ தான் உங்க ரெண்டு பேத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுச்சு, அவ அவ்வளவு ஜாலியா உன்னை பத்தி பேசிட்டு இருக்கும்போது ,எனக்கு இதை சொல்ல தோணல,இப்போ என்ன அவசரம்னு தோணுச்சு”
“ஓ! அவரசம் இல்ல..சரி..ஆன,இதை நீ வீட்டில் சொல்ல போறது இல்லையே,உன் அக்கா கிட்ட தானே சொல்ல போற, அதுவும் ரெண்டு பேரும் பிரண்ட்லியா தானே பேசுகிறீங்க,அப்புறம் என்ன பிரச்சனை?, சரி இப்போ அதை விடு! இப்போ என்ன பிரச்சனை? இவனால “
“ஒரு 4 மந்த் நல்லா தான் போச்சு.ஒரு ரெண்டு ,மூணு டைம் வெளிய மீட் பண்ணி இருக்கோம், அப்போ ஒரு ரெண்டு மூணு போட்டோஸ் எடுத்து இருக்கோம், கிளோசா போட்டோ எடுக்க கிடையாது. ஆனா,”..
அந்த போட்டோவை பார்த்தவன். “நான் இந்த போட்டோவை உண்மை என்று நம்பி உன் மேல நம்பிக்கை இல்லாம கேட்கல சரியா ?”
” அது எனக்கும் தெரியுது. ஆனா, இது போல நிறைய போட்டோ வச்சு இருக்கான்..இப்போ ஒன் வீக்கா வீட்ல சொல்லிடுவேன் என்று பிளாக் மெயில் பண்றான்”
” அதுக்கு முன்னாடி ஏதோ ஒன்னு நடந்திருக்கணுமே?”
“ஹம். அடிக்கடி என்னை நேரில் பார்க்கணும் ,வெளிய மீட் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தான்.அப்போ எனக்கு அவனோட ஆக்டிவிட்டீஸ்ல கொஞ்சம் டிஃபரன்ஸ் தெரிய ஆரம்பிச்சுச்சு,கைய புடிச்சு பேச ஆரம்பிச்சான்,அப்புறம் கொஞ்ச கொஞ்சமா, தோளில் கை போடுவது ,தோளோடு அணைத்துக் கொள்வது என்று அவனுடைய ஆக்டிவிட்டிஸ்ல சேஞ்சஸ் தெரிய ஆரம்பிச்சுருச்சு.. அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சமா நான் அவன் கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சிட்டேன். நான் விலகுகிறேன் என்று தெரிஞ்சவுடனே ..இப்போ பிளாக் மெயில் பண்ண ஆரம்பிச்சிட்டான். போட்டோஸ்.. அவன் கூட நான் எடுக்காத மாதிரி போட்டோஸ் எல்லாம் எடுத்து ,இதை நெட்ல விட்ருவேன் ,வீட்டில் சொல்லிடுவேன் என்று சொல்லிட்டு இருக்கான்”
” சோ நீ பயப்படுறியா ?”
“இல்ல தேவ் பயப்படல. ஆனா, இன்னைக்கு தான் ,இந்த போட்டோஸ் பத்தி பேசுறான். அதுக்கு முன்னாடி ஒரு வாரமா வீட்ல என்னுடைய லவ் பத்தி சொல்லுவேன்னு சொல்லி பிளாக்மெயில் பண்ணான். அதுக்கு நான் பயப்படல என்று தெரிந்தவுடன்..உன் கிட்ட இந்த ஒரே ஒரு முறை நேர்ல பார்த்து பேசணும் வா அப்படின்னு மட்டும் தான் சொல்லி இருந்தான் “
” சரி இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க?”
” நான் எந்த தப்பும் பண்ணல தேவ்.சோ நான் ஏன் பயப்படனும்.. நான் பண்ண ஒரே தப்பு அவன் ஒரு கேடுகெட்டவன் என்று தெரியாம அவனை விரும்பியது தான்..அதை இப்போ நான் தான சரி பண்ணனும்”..
” இல்ல .. இதை நீ ஃப்ரீயா விடு! நான் பாத்துக்குறேன்”
“இல்ல தேவ் இது என்னால உருவான பிரச்சனை நான் தான சரி பண்ணனும்”
“நான் தான் நான் பாத்துக்குறேன்னு சொல்றேன்ல எனக்கு அந்த உரிமை இல்லையா?” என்றான் அவளது கண்களை ஊடுருவி,
” சரி” என்று அமைதியானாள்.
“தேவ் அ..அது”
“மித்ரா கிட்ட நீ சொல்ல வேண்டாம். நானும் சொல்ல மாட்டேன், ஓகே வா ?”
“ஹம்” என்று அவளும் தலையசைக்க,
” சரி “என்று அவளை அனுப்பி வைத்துவிட்டு, இவனும் வீட்டிற்கு கிளம்பி இருந்தான் .
வீட்டிற்கு சென்று யோசனை உடனே இருந்தான். இதை எப்படியாவது சரி பண்ண வேண்டும் என்று ,அவனைப் பற்றி டீடைலையும் கிளம்புவதற்கு முன்பு ரியாவிடம் வாங்கி இருந்தான் .
அடுத்து இரண்டு நாட்களில் அவனைப் பிடித்து பேசி பார்த்தான். அவன் பேச்சுக்கு சரிப்பட்டு வர மாட்டான் என்று தெரிந்தவுடன், தனது நண்பர்களை வர வைத்து அவனை அடி வெளுத்து விட்டான்.. அவனிடம் இருக்கும் அனைத்து போட்டோகளையும் வாங்கியிருந்தான். அவன் ரியாவிடம் மட்டும் இல்லை. இன்னும் இரண்டு ,மூன்று பெண்களிடமும் இப்படித்தான் பழகி இருக்கிறான் என்பது புரியவர, இன்னும் அடி வெளுத்து வாங்கி விட்டான் ..இதே ஒரு பொழப்பா இருந்து இருக்கியா டா சாக்கடை நாயே என்று,
ஒரு வாரங்களுக்கு பிறகு, ரியா இரவு வேளையில் தேவுக்கு ஃபோன் பண்ணி இருந்தாள்.
” சொல்லு ரியா ?”
“தேவ் அவனை என்ன பண்ண ?”என்றாள் எடுத்து எடுப்பில்,
” ஏன் சார் வந்து என்ன சொன்னாரு? அவன் உன்ன மட்டும் ஏமாத்தல ,ரெண்டு ,மூணு பொண்ணுங்களையும் ஏமாத்தி இருக்கான் “என்று விபரத்தை சொல்ல,
” அவன் வந்து கத்திட்டு போறான். ஆள் வச்சு அடிக்கிறியா டி உன்ன பாத்துக்கிறேன் ?”என்று சவால் விட்டுட்டு போறான்.
“இவ்வளவு தான! இதுக்கா ஃபீல் பண்ற?”
“நான் இப்படி ஒருத்தன லவ் பண்ண போய் தான இவ்ளோ பிரச்சனை தேவ்!”
என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, மித்ரா ரூமுக்குள் நுழைந்து இருந்தாள்.
” என்ன லவ்வா? யாருடி ?”என்று கேட்டுக் கொண்டே வர ,
“அச்சோ” என்று நாக்கை கடித்தாள்.
இங்கு தேவும்,”இந்த லூசு அவள வச்சுக்கிட்டு தான் பேசுமா ?”என்று தலையில் அடித்து கொண்டான்.
” இ..இல்ல மித்ரா உங்க லவ் பத்தி பேசுறேன்”..
” எங்க லவ் பத்தி பேசுறியா ? நீ வேற லவ் ..அதாவது உன்னோட லவ் பத்தி பேசுறன்னு எனக்கு தெரியும்”என்று அவளை குறுகுறுவென பார்க்க ..
“அவ நம்பள பத்தி தாண்டி பேசுறா”என்றான் சத்தமாக தேவ்..
” ஓ! அப்ப அவ லவ் பண்றது உங்களுக்கும் தெரியும்.எனக்கு தான் தெரியாது இல்லையா? அவர்கிட்ட உன்னால சொல்ல முடியும், என்கிட்ட சொல்ல முடியாது அப்படி தானே!”என்றாள்.
” அப்படி எல்லாம் இல்ல மித்ரா”என்றாள்..
“நான் சொல்றத கேளுடி”என்று இங்கு இருந்து கத்தினான் போன் ஸ்பீக்கரில் இல்லாததால்,
” நான் என் தங்கச்சி கிட்ட பேசிட்டு இருக்கேன். உங்க கிட்ட இல்ல சரியா?” என்றவள் பட்டென்று போனை ஆஃப் பண்ணிவிட்டு, தன் தங்கையை குறுகுறுவென பார்த்தாள்.
“மித்து நான் சொல்றதை கேளு”
” என்னடி சொல்லணும் லவ் பண்ணிருக்க. ஆனா என்கிட்ட சொல்ல முடியாது உனக்கு.ஆன அவர் கிட்ட சொல்ல முடியும். நம்ம ரெண்டு பேருக்குள்ள எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லனு தான இவ்வளவு நாள் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா நீ அப்படி இல்லைன்றத நிரூபிச்சிட்ட. அவர் கிட்ட சொல்ல முடியுது, அப்போ என்கிட்ட சொல்ல முடியல ?அப்போ இவ்வளவு நாள் நான் தான் லூசு மாறி நினைச்சிட்டு இருந்து இருக்கேன் இல்லையா?”
” லூசு மாதிரி பேசாத மித்து. நான் என்ன சொல்றேன்னு கொஞ்சம் கேளு”
“நான் லூசு தான். ஒரே ரூம்ல இருந்தும் கூட நீ லவ் பண்றது கூட தெரியாம இருந்திருக்கேன். நான் தான் லூசு மாதிரி எல்லாத்தையும் உலரி கொட்டிட்டு இருக்கேன். நீ எல்லாத்தையும் மூடி வச்சி மறச்சி தான் பண்ணிட்டு இருக்க நல்லது” என்று அவளிடம் வேறு எந்த வாதமும் பண்ணாமல் எழுந்து சென்று விட்டாள்.
” ஐயோ!” என்று இருந்தது ரியாவிற்கு, தன்னால் இப்பொழுது அவர்களுக்குள் ஏதாவது சண்டை ஏற்படுமோ? என்று எண்ணினாள்.
தேவிக்கு மெசேஜ் மட்டும் தட்டிவிட்டு படுத்து விட்டாள் ரியா.
” நான் பாத்துக்குறேன் சரியா? நீ அவ கிட்ட எதுவும் சொல்ல வேணாம் .அவ ரொம்ப ஃபீல் பண்ணுவா, நீ லவ் பண்றது தெரியல என்றதை விட ,ஏமாந்துட்ட என்ற ஃபீலிங் அவளோ ரொம்ப பாதிக்கும். நான் பேசுறேன்” என்று அனுப்பி இருந்தான்.
அவளும் “சரி” என்று அமைதியாக இருந்தாள். இரண்டு நாட்கள் சென்றது. தேவ் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான். போன் மெசேஜ் எதற்கும் பதில் இல்லை. ஸ்கூலிலும் அவனை நேரில் பார்க்காமல் ஆட்டம் காட்டினாள்.
அவளது கேபினுக்கு சென்றும் பார்க்க இயலாது. இரண்டு நாட்கள் அப்படியே சென்றது .
அவனோ, போன், மெசேஜ் என்று எவ்வளவோ செய்து பார்த்து விட்டான் .ஆனால், அவள் எதற்கும் பிடி கொடுக்கவில்லை. ரியாவிடமும் பேசவில்லை.ரியா பேச முயற்சி செய்தாலும், பேசவில்லை.அவள் முகம் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள். வீட்டில் தனது அப்பா ,அம்மாவின் முன்பு ஏதாவது ஒரு வார்த்தை பேசுவாள். அவர்களுக்கு எதுவும் தெரியக்கூடாது என்பதற்காக, ரூமில் அது கூட இல்லாமல் தன் வேலையை பார்த்துவிட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து விடுவாள்.
இப்படியே இரண்டு நாட்கள் செல்ல, ரியா தேவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல. “சரி கொஞ்ச நாள் பொறு. அவளா பேசுவா நான் பார்த்துக்கிறேன் “என்றான்.
“உன்கிட்ட பேசறாளா ?”என்றாள். அவன் ஒரு சில நொடி அமைதியாக இருக்க..
தன்னிடம் பேசவில்லை என்றால் கூட பரவாயில்லை, தன்னால் தேவிடமும் அவள் பேசமால் இருக்க,
ஒரு நாள் மாலை பொழுது தேவை ஒரு இடத்திற்கு வரச் சொல்லி அங்கு மித்ராவையும் அழைத்துக் கொண்டு கிளம்பி இருந்தாள்.
குகனை வீட்டில் விட்டுவிட்டு தான் தேவ் அங்கு சென்று இருந்தான்.
ஏதோ ஏதோ பேசி மித்ராவை அழைத்து கொண்டு வந்தாள் ரியா.
மூவரும் ஓர் இடத்தில் கூடியிருக்க, அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு இருவரையும் பார்த்துக் கொண்டு நின்றாள் மித்ரா.
“மித்து நான் சொல்றதை கேளு !” என்றாள் ரியா.
“என்ன சொல்லணும்டி. சொல்ல வேண்டிய எதையும் சொல்ல மாட்ட. அதுவும் நானா இப்ப கேட்க போய் சொல்லப் போறியோ?”.
” அவனை நான் லவ் பண்ணவே இல்லடி!”என்று சத்தமாகவே கத்தினாள்.. எவ்வளவு பேச முயன்றும் , பேசுவதையே காது கொடுத்து கேட்க மாட்டேன் என்பவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் ,ஆத்திரத்தில் கத்தி விட்டாள்.
” என்ன?” என்றாள் அதிர்வாக ..
“ஆமாம்” என்று தேவ் வேண்டாம் என்று சொல்ல சொல்ல கேட்காமல் அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
” அப்போ அந்த பையன்?” என்றவள் ஒரு சில நொடி அமைதியாக இருக்க ,
“ஆமா நான் ஏமாந்துட்டேன் போதுமா! அதுக்காக நான் ஒன்னும் கோழை கிடையாது. அவனை எதிர்த்து பேஸ் பண்றதுக்காக போயிருந்தேன். அப்ப தான் தேவை எதர்ச்சியாக பார்க்கிற மாதிரி வந்துச்சு. நானா போய் தேவ்கிட்டயும் சொல்லல. அதுக்கப்புறம் அந்த பிரச்சனையை நானே சரி பன்றணு தேவ் எல்லாம் பண்ணாரு. இப்போ நான் அன்னைக்கு பேசிட்டு இருந்ததுக்கு காரணம் அவன் தேவை விட்டு வைக்க மாட்டேன். உன்ன மட்டும் இல்ல ,அவனையும் இனி உசுரோட நடமாட விட மாட்டேன். என்னையவே அடிச்சிட்டானா ?,என் மேலயே கை வச்சுட்டான் .இனி அவன் எப்படி உசுரோட இருக்கான்னு நான் பாக்குறேன் என்பது போல பேசிட்டு போனான். அந்த பயம்தான் !” என்றாள் மூச்சு வாங்க ..
” என்ன? இத நீ என் கிட்ட சொல்லவே இல்ல”என்று ரியாவை பார்த்தான் தேவ்.
“அத சொல்ல தான் அன்னைக்கு போன் பண்ணேன். அதுக்குள்ள தான் இவ வந்தா.. அதனால அதுக்கப்புறம் என்னால சொல்ல முடியல”
இப்பொழுது ரியாவும் ,தேவும் பேசிக் கொண்டிருக்க ,
ரியா காதலித்தவன் என்று சொல்லப்பட்ட சதீஷ் வேகமாக தேவை குத்துவதற்கு கத்தியை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். அவன் அதற்கு முன்பாகவே தேவை ஃபாலோ பண்ணிக் கொண்டுதான் இருந்தான். இப்பொழுது ரியாவுடன் ஒரு பெண்ணும் இருக்க,
மூவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவன்.. சமயம் பார்த்து அவனை குத்த வந்திருக்க, ஆள் நடமாட்டம் இல்லை,அவன் கூட இருப்பது இரண்டும் பெண்கள் என்பதால் ,அவனை கொல்ல இது தான் சமயம் என்று கத்தியை எடுத்துக்கொண்டு வேகமாக வர,
அதை பார்த்த மித்ரா, வேகமாக “தேவ்” என்று கத்திய படி,அவன் தேவை குத்த ஓங்கிய, கத்தியை அவள் கையில் பிடித்திருந்தாள்.
கத்தியை குத்த ஓங்கிய சதீஷ். கத்தியை வேறொரு பெண் பிடித்து விட்டவுடன், வேகமாக அங்கிருந்து தப்பிப்பது தான் சரி என்று ஓடி விட்டான்.
அவனை துரத்திக் கொண்டு தேவ் போக..
“தேவ் அவன் போன போறான்.மித்துவை பாரு “என்றாள்.
அதன் பிறகு, இரண்டடி எடுத்து வைத்தவன்,அவள் அருகில் வந்தான்.கையில் இருந்த கத்தியை உடனே மித்ரா கீழே விட்டிருந்தாலும், கையில் ஆழமாக காயம் ஏற்பட்டிருந்தது ..ரத்தமும் அதிகமாக சென்றது..அவள் மயக்க நிலைக்கு செல்ல,
” மித்ரா.. மித்ரா..” என்று கன்னத்தில் தட்டி பார்த்தான்.
ஆனால்,அவள் எதுவும் பேசாமல் மயக்க நிலைக்கு செல்ல,
” இவளை வண்டியில் எல்லாம் கூட்டிட்டு போக முடியாது ரியா” என்றவன் அருகில் உள்ள ஆட்டோவை அழைத்து அதில் இருவரையும் அனுப்பி வைத்து விட்டு,மித்ராவின் வண்டியை அங்கே ஓரிடத்தில் பார்க் செய்துவிட்டு, தானும் ஆட்டோவின் பின்னாடியே சென்றான்.
இரு வீட்டிற்கும் போன் பண்ணி சொல்லியும் இருந்தான் விஷயத்தை ..அனைவரும் அடித்து பிடித்து ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள்.
மேலோட்டமாக அவள் அடிபட்டதாக மட்டும் கூறியிருந்தான், வேறு எதுவும் பெரிதாக சொல்லவில்லை.
வெளியில் வந்த டாக்டர்,” கொஞ்சம் ஆழமா காயம் ஏற்பட்டிருக்கு. வேற ஒன்னும் ரொம்ப பிரச்சனை இல்லை. பிளட் ரொம்ப லாஸ் ஆனதால மயக்கமா இருக்காங்க. வேற ஒன்னும் இல்ல,கையில் தண்ணி படாம பார்த்துக்கோங்க ,இல்லனா இன்பெக்சன் ஆயிடும்,கை கொஞ்சம் அசைக்கிறது கஷ்டம்.. இரண்டு ,மூன்று நாளைக்கு எதுவும் பண்ண வேணாம்” என்று விட்டு சென்றிருந்தார்.
“நிச்சயம் இன்னும் 10 நாளில் வைக்கிறதா முடிவு பண்ணி, கல்யாண பேச்சு எடுத்துருக்க நேரத்தில் இப்படி அடிபட்டு ரத்த காயம் ஆகி இருக்கே” என்று புலம்பினார் சத்யா.
இளவரசன் கூட சிரித்து விட்டார். “நீ அமைதியாவே இருக்க மாட்டியா சத்யா? எந்த நேரத்துல என்ன பேசிட்டு இருக்க”
” உங்களுக்கு என்ன வந்துச்சு?” என்று தனது கணவனிடம் எகிறி கொண்டு செல்ல..
” அத்தை ப்ளீஸ்! அதால இப்படி ஆயிடுச்சோ ? இதனால இப்படி ஆகிவிடுமோ? இது போல பேசறதை முதல்ல நிறுத்துங்க. ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் அவளை எனக்கு பிடிக்கிறதுக்கு காரணம் கூட ஏதோ ஒரு வகையில நீங்க தான்..! உங்களோட இந்த பேச்சும் ,செயலும் தான் காரணம்”
“என்ன?” என்று முறைத்தார்.
வித்யா, வேலு ,ரியா மூவரும் சிரித்து விட்டார்கள்.
அன்றைய முதல் சந்திப்பை பற்றி பேசியவுடன், குகனும் சிரித்து விட்டான்.
சிரித்துக் கொண்டே,” நான் சொல்றேன் பாட்டி “என்று குதித்தான்.
அவர் குகனை பார்க்க. அவனின் தலையை கோதியவன் அமைதியாகி விட்டான்.
அன்று தங்களுக்குள் நடந்த விஷயத்தை குகன் சொல்லி முடிக்க,
” சாமி கும்பிடலாம் அத்தை தப்பில்லை. ஆன, ஓவரா அதிலே முழுகிட கூடாது. அதுக்காக எனக்கு சாமி நம்பிக்கை இல்லைன்னு இல்லை .நான் சாமி விஷயத்துக்கு மட்டும் சொல்லல. ரத்த காயம் பட்டுருச்சு.. அதுக்கு இப்ப என்ன பண்ண முடியும் ?நடந்த விசியம் இல்லனு ஆகிடுமா? அடிபட்டா ரத்தம் வரத்தான் செய்யும் ..அதுக்கும் ,இதுக்கும் முடிச்சு போட்டுக்க முடியுமா? நாம் வீட்டில் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தாலும், கால் ஸ்லிப் ஆகி மோதிட்டா சின்னதா அடிபடலாம் ஒரு சொட்டு ரத்தம் கூட வரலாம் இப்படி ஒரு ஒவ்வொன்னுக்கும் காரணம் தேடிட்டு இருக்க முடியுமா? எல்லாத்துக்கும் பயந்தா வாழ முடியுமா? “
“அப்படி சொல்லலப்பா. இருந்தாலும் , கல்யாண பேச்சு எடுத்திருக்கும் சமயத்தில்”
“ப்ளீஸ் அத்தை! எதையாவது சொல்லி! மனசை கஷ்டப்படுத்தாதீங்க” என்றான்.
இளவரசனும் ,”அமையாக இரு ..எல்லாம் நல்லாதா நடக்கும்” என்று கூறியதால் ,” சரி” என்று அவரும் அமைதியாகிவிட்டார்.
ஒரு வாரங்கள் சென்றது. ஒரு வாரம் அவள் ஸ்கூலுக்கு செல்லவில்லை. ரியா வீட்டில் இருக்கும் வரை அவளுக்கு தேவையானதை பார்த்துக் கொண்டாள். அவள் காலேஜ் சென்ற பிறகு, அவளுக்கு தேவையானதை சத்யா பார்த்துக் கொண்டார்.
இரண்டு நாட்கள் எழிலும் ,தனமும் வந்து பார்த்துவிட்டு சென்றார்கள். பகல் வேளையில், ஒரு நாள் வித்யா ,வேலுவுடன் வந்து பார்த்துவிட்டு சென்றாள். இன்னொரு நாள் வித்யா ,குகனை அழைத்துக் கொண்டு வந்து பார்த்துவிட்டு சென்றாள்.
தேவ் ஹாஸ்பிடலில் அடி பட்ட அன்று கட்டு போட்டுவிட்டு அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்த அன்று பார்த்ததோடு சரி. அதன் பிறகு நேரில் பார்க்கவில்லை. போனில் மட்டும் பேசி அவளுடைய உடல் நலனை கேட்டு தெரிந்து கொண்டான் .
ஒரு வாரங்கள் சென்ற பிறகு, தேவ் தன் குடும்பத்துடன் வந்திருந்தான்.
” மாமா கொஞ்சம் பேசணும்!” என்றான் .
அவரும் அவனை கேள்வியாக பார்க்க,
” கல்யாணம் நீங்க சொன்னது போல சீக்கிரமாவே வச்சுக்கலாம்” என்றான்.
அனைவருக்கும் அதிர்ச்சியாக அவனை பார்த்தார்கள்.
தன் வீட்டில் உள்ளவர்களிடம் கூட ,”இன்னைக்கு லீவு தான மித்ராவை எல்லாரும் ஒண்ணா போய் பாத்துட்டு வரலாம் “என்று மட்டும் சொல்லி தான் அழைத்துக் கொண்டு வந்தான்.
ஆனால் ,இங்கு வந்தவுடன் கல்யாணம் சீக்கிரம் வைக்க வேண்டும் என்றவுடன் ..அனைவருக்கும் அதிர்ச்சி..
அவனின் வார்த்தையில் இரு வீட்டு பெற்றவர்களுக்கும், சந்தோஷம்தான். இருந்தாலும், கேள்வியாக பார்த்தார்கள்.
” நீ தானடா இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்ன?” என்று வேலு கேட்க.
” சொன்னேன் தான். ஆனால்,” என்றவன் அமைதியாகி விட ,
“இப்போ சாரால அவளை விட்டுட்டு இருக்க முடியலையோ?”..
தனம் தான்” டேய் சும்மா இருடா. அவனே மனசு வந்து கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கான். அவன் மனசு மாறுறதுக்குள்ள முடிச்சிடலாமே!” என்றார் பரிதவிப்பாக..
இளவரசனும் சிரித்துக் கொண்டே, தலையாட்டினார்.
இப்பொழுது அனைவரின் பார்வையும் மித்ராவிடம் இருந்தது.
அவளோ ,தேவை தான் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.
” ப்ளீஸ் டி”என்று கண்களாலே அவளிடம் கெஞ்சினான்.
அவள் அப்பொழுதும் அமைதியாக இருக்க..
” அவ கல்யாணத்துக்கு அப்புறமா வேலைக்கு போறதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை மாமா.அவ விருப்பம் இருந்தா வேலைக்கு போகட்டும். இல்லனாலும் வீட்டில் இருக்கட்டும்”என்றான் அவள் எண்ணம் புரிந்து,
இளவரசன் தன் மகளை பார்த்தார். ஆனால், மித்ரா எந்த பதிலும் சொல்லாமல், தேவை அமைதியாக பார்த்துக் கொண்டு நின்றாள்.