மித்ரா கண் மூடி அவனது முத்தத்தில் லயித்திருக்க.உடலில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு இருவருக்கும் ..
புதுவிதமான உணர்வு உள்ளுக்குள் ஆட்டிப்படைக்க ஒரு சில நொடி இருவருமே கண்களை மூடிய படி இனிய நிகழ்வில் கட்டுண்டு இருந்தார்கள்.
முதலில் வெளியில் வந்த தேவ் தான். மித்ரா இன்னும் கண் மூடிய நிலையில் முதல் முத்தத்தில் லயித்திருப்பதை உணர்ந்து, “கண்ணை திறந்து பாருடி ராங்கி. இன்னும் எவ்வளவு நேரம் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுவ” என்றான் புன் சிரிப்புடன்.
அப்போதும், அவள் கண் மூடியபடியே கண் இமைகளை மட்டும் உருட்ட ,”கண்ணை திறடி. பேசணும்” என்று இப்பொழுது அவள் கன்னங்களை பற்றிய படி ஏங்கினான்.
ஒரு சில நொடிக்குப் பிறகு ,அவள் கண்களை திறக்க, அவளை பார்த்து கண் சிமிட்டி முத்துப்பற்கள் தெரிய சிரித்தான்.
“தேவ் “என்று ஹஸ்கி குரலில் அழைத்து, அவன் நெஞ்சில் குத்திய படியே, அவளுக்கு சொந்தமான அவனது பறந்த மார்பில் நெற்றியை வைத்து தேய்க்க,
அவளது செயலில் உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகள் தோன்ற, “சும்மா இருடி!” என்று அவளை தன்னில் இருந்து பிரித்து நேருக்கு நேர் பார்க்குமாறு நிற்க வைத்து,
“நீ இங்க இருக்க போதுமாடி”என்று திரும்பவும் தன் நெஞ்சை சுட்டிக்காட்டியவன். “வாய் வார்த்தையா சொன்னா தான் நம்புவியோ ?எனக்கு உன்ன பிடிச்சிருக்குடி !எப்படி புடிச்சுச்சு ,எப்ப இருந்து புடிச்சது, இந்த மாதிரி கேள்விக்கலாம் பதில் என்கிட்ட இல்ல.. காரணத்தோட உன்ன புடிச்சிருந்தா,அந்த காரணம் போகும்போது, உன் மேல நான் வச்சிருக்க விருப்பமும் போயிடும் சரியா? இதான் காரணம் அப்படி எல்லாம் கிடையாது. ஃபர்ஸ்ட் டைம் உன்ன பார்க்கும்போது ஏதோ ஒரு உணர்வு ஏற்பட்டுச்சு , அன்றைய பொழுது உன்னை வம்பு இழுக்க மட்டும் தோணிச்சு,அதுக்கப்புறம் நீ பண்ண ஒவ்வொரு செயலும், உன் பேச்சும் , உன் பார்வையும் எனக்குள் நீ புகுந்துட்ட என்றதையும்.. என் இதயத்தில் சிம்மாசனம் போட்டு உக்காந்துட்ட என்றதையும் காட்டி கொடுத்துச்சு, அவ்வளவுதான். இதுக்கு மேல எனக்கு இத எப்படி சொல்றது என்று தெரியல.. ஸ்டார்டிங்ல உன்ன வம்பு இழுத்து உன் கிட்ட சரிக்கு சமமா பேசணும் என்ற மாதிரி இருந்துச்சு..அந்த பேச்சு வார்த்தை ஜாலியா இருந்துச்சு. ஆனா,இப்போ,நீ மொத்தமா என் லைஃப்ல எப்பவும் இருந்தா என்னனு தோணுது.. இப்ப இல்ல இனி எப்பவும்.. நான் சாகுற வரைக்கும்.. என் கடைசி மூச்சு நிக்கிற வரைக்கும்” என்று சொல்லும் போதே ,அவனது வாய் மீது கை வைத்திருந்தாள்..
குறும்பு புன்னகையுடன், கள்ள சிரிப்பை உதட்டில் தேக்கி, தன் உதட்டின் மீது இருக்கும் அவள் வெண்டை பிஞ்சு கையில் பட்டும் படாமல் லேசாக இதழ் ஒற்றி இருந்தான் .
அவளோ, கூச்சமும், நாணமும் போட்டி போட அதிர்வாக அவனை கண்கள் விரிய பார்த்தாள்.
புன் சிரிப்பை இதழ்களில் தவழ விட்டவன் ..”வார்த்தைக்கு தானடி சொன்னேன்”..
” இல்ல வேணாம்” என்பது போல் அவள் தலையாட்ட..
அவள் தலையை பிடித்து இவனும் ஆட்டியவன் .. நெற்றியோடு முட்டி,”போதுமா? மேடமுக்கு வாய் வார்த்தையா சொல்லியாச்சு ?ஓகேவா ? இப்போ தைரியமா வீட்ல பேசலாமா ?”என்றான் கண் சிமிட்டி புருவத்தை உயர்த்தி,
“ஹம்” என்றாள் ஹஸ்கி குரலில் அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற்றமாக,
“சிரிச்ச முகமா சொல்லுடி.. இன்னமும் மூஞ்ச உர்ன்னு வச்சிருக்க.. “என்று அவளை சீண்டினான்.. ஏனோ அவனுக்கு அவளை சீண்டிப் பார்க்க அவ்வளவு ஆசையும் ,ஆனந்தமும்..
அவளும் சிரிப்புடன் சொல்ல..
அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் ..
“தேவ் அ..அது” என்று நெளிந்தாள் சுற்றம் உணர்ந்து,
“இங்கு யாரும் வர மாட்டாங்க தான். இருந்தாலும்” என்றவன்.. புன்னகைத்தான்..
சிறிது நேரத்திற்கும் முன்பு நடந்த நிகழ்வில், தான் அவள் நெற்றியில் இதழ் பதித்திருக்க.. தன் உடலில் வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்ததை உணர்ந்தவன்.. அவளை பார்க்க. அவள் உடலில் மின்சாரம் தாக்கப்பட்டது போல் நடுக்கம் ஏற்பட்டதை எண்ணி புன்னகைத்துக் கொண்டவன்..
” ஓகேவா போதுமா !”என்று அவளது நெற்றியில் பூத்திருந்த வேர்வை முத்துக்களை தன் கைகுட்டை கொண்டு துடைத்து விட்டான்..
கூச்சத்தில் அவனது கைகளை தட்டி விட்டவள் ..”வெளியே போலாமா ? குகனை ரொம்ப நேரமா ரியா தனியா சமாளிச்சிட்டு இருப்பா. அது மட்டும் இல்லாம “என்றவள் நிறுத்த,
” புரியுதுவா. ரெண்டு பேரையும் அங்க தனியா உட்கார வச்சுட்டு இங்க வந்து நாம தனியா பேசுறது ஒரு மாதிரி தான் இருக்கு வா!” என்று சிரித்த முகமாக அவளை அழைத்து கொண்டு சிரித்து பேசிக்கொண்டு வெளியில் வர..
இருவரும் சிரித்து பேசிக்கொண்டு வருவதை பார்த்த ரியா…’ ஹப்பா இந்த பிரச்சனை சரியான வரை சந்தோஷம்’ என்று எண்ணிக்கொண்டு அமைதியானள்.
இருவரையும் பார்த்து சிரித்த ரியா,”தேவ் இப்போ ஓகேவா ?”
அவளைப் பார்த்து புன்னகைத்தவன்..” ஓகே” என்பது போல் தலையாட்ட,
” சரி சாப்பிடுங்க” என்று இருவருக்கும் ஆர்டர் பண்ணியதை அவர்கள் புறம் திருப்பி வைக்க,
சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு கிளம்பும் முன் ,” வீட்டில் வந்து பேசட்டா” என்றான் மீண்டும் ஒருமுறை ..
“இல்ல தேவ். நான் ஃபர்ஸ்ட் அப்பாகிட்ட பேசறேன். அதுக்கப்புறம் நீங்க பேசுங்க!”
“ஹம்”என்றான்.
“மித்து! குகன் ஏதோ கேட்டான். அவனுக்கு வாங்கி கொடு” என்று அவளை குகனுடன் அனுப்பி வைக்க ..
“என்ன சொல்லணும் ரியா” என்றான் அவளைப் பார்த்து புன்னகையுடன்..
தன் எண்ணத்தை புரிந்து கொண்டவனை எண்ணி சிரித்தவள்.” பரவாயில்லையே ரொம்ப ஷார்ப்பா தான் இருக்கீங்க”..
” நீ அவளை அனுப்பி வைக்கும் போதே தெரியுது! என்கிட்ட ஏதோ சொல்ல நினைச்சி இருக்கனு “
“சொல்லணும் தான். அவ உங்க விஷயத்தை உங்க கிட்ட பேசாம அப்பா கிட்ட சொல்ல தயங்கியதிற்கு ஒரே ஒரு காரணம் மட்டும் தான்”.. என்றாள்.
அவன் புருவம் முடிச்சிட அவளை பார்த்தான்..
“சொல்றேன் தேவ்.அது மித்து காலேஜ் பைனல் இயர் படிச்சிட்டு இருக்கும்போது அவகிட்ட அவளோட சீனியர் ஒரு பையன் ப்ரொபோஸ் பண்ணினான்…” என்று நிறுத்த,
அவன் அமைதியாக கேட்டான். அவன் கேட்கிறான் என்றவுடன், இவளும் பேச்சை தொடர்ந்தாள்.
“இவளுக்கு விருப்பம் இல்லன்னு சொல்லி அவாய்ட் பண்ணிட்டா..ஆன, அவன் பேசி பழகி பார்த்தால் உனக்கு என்ன புடிக்கும் என்று ஏதேதோ சொல்லி தினமும் அவளை ரொம்ப டார்ச்சர் பண்ணி இருக்கான். இவ ஒரு கட்டத்துல அவன் பேசுறதை கூட காது கொடுத்து கேட்காம அவாய்ட் பண்ணவும்.. ஒரு நாள் காலேஜ் முடியற டைம்ல கிளாஸ் ரூம்ல ஏதோ நோட் மிஸ் பண்ணிட்டேன்னு ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு தனியா நோட் எடுக்க போயிருக்கா.. அதை கண்காணிச்சிட்டு இருந்தவன். அந்த கிளாஸ் ரூமுக்குள்ள அவ பின்னாடியே சத்தம் வராமல் புகுந்து இருக்கான்.
அவனோட பிரண்ட்ஸ் வச்சு வெளியே டோர் க்ளோஸ் பண்ணிட்டான். கிட்டத்தட்ட நைட் ஏழு மணி ஆயிடுச்சு.. அப்ப வரை மித்து வீட்டுக்கு வரலன்னு நாங்க பயந்து அவ பிரண்ட்ஸ்க்கு போன் பண்ணோம்.
அவ அப்பவே கிளம்பிட்டதா சொன்னாங்க.. என்ன செய்றதுன்னு புரியாம காலேஜுக்கு போனோம்.. அப்போ நாங்க அங்க போகும்போதே கொஞ்சம் பிரச்சனை நடந்துட்டு இருந்துச்சு “.
“என்ன பிரச்சனை?” என்றான் இப்போது வாய் திறந்து,
“சொல்றேன்.ஒரு பையனோட ஒரே கிளாஸ் ரூம்ல மித்து ரெண்டு மணி நேரமா தனியா இருந்ததா பியூன் வந்து சொல்லி, வீட்டுக்கு போய் இருந்த ஸ்டாப் எல்லாம் வந்து இருந்தாங்க,அவளை கார்னர் பண்ணி எல்லாம் பேசிட்டு இருந்தாங்க,அவ அந்த பையன் கூட..” என்றவள் பேச்சை நிறுத்த..
” மேலே சொல்” என்பது போல் அவன் கை காண்பிக்க..
” சுத்தி இருக்க எல்லோரும் அவளை தப்பா பேசவும்.. அவ ரொம்ப பயந்து இருந்தா .. அழுகையோட கையை பிசைஞ்சிட்டு நின்னுட்டு இருந்தா.. அவளை அப்படி பார்த்த உடனே எங்க எல்லாருக்கும் பதறிடுச்சு, எங்களை பார்த்தவள் வேகமாக ஓடி வந்து அப்பாவை கட்டி புடிச்சு அழுதா..
நான் எதும் செய்யல அப்பானு வேற உலறினாள். அப்பாவும் அவளை தோளோடு அணைச்சு கிட்டாரு. அம்மா தான் அப்ப இருந்த பதட்டத்துல பொம்பள புள்ள ஒரு பையனோட ஒரே ரூம்ல இருந்தது அப்படின்னு எதைதையோ யோசிச்சு அவ முதுகுல ரெண்டு மூணு அடி அடிக்க செஞ்சுட்டாங்க ..
சுத்தி இருந்த ஸ்டாப் கூட அவ தப்பு பண்ணிட்ட மாதிரி ஒரு சீன் கிரியேட் பண்ணிட்டாங்க.. அப்பா தான் அவளோட அழுகையை நிறுத்தி என்ன நடந்துச்சுன்னு கேட்க ,அவளும் முழு விவரத்தையும் சொல்ல , அப்பா ஸ்டாப் அனைவரையும் பார்த்தவர்
. உங்க காலேஜ்ல சிசிடிவி ஃபுட்டேஜ் இருக்கு தானே முதல்ல அதை செக் பண்ணுங்க.. யார் மேல தப்பு இருக்குன்னு அப்போ தெரிய வந்துடும்..எனக்கு என் பொண்ணு மேல நம்பிக்கை இருக்குனு அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு .
ஆனா, வீட்டுக்கு கூட்டிட்டு வந்த பிறகு அவ கிட்ட எதுவும் பேசாம அமைதியா இருந்தார்..இவ பயந்து ,”நான் எதும் தப்பு பண்ணல நம்புங்கனு அழுதா.. “
அப்ப தான் அப்பா சொன்னாரு, “உன்னால அந்த இடத்தில தைரியமா கூட பேச முடியாதா? “என்று கேள்வி கேட்டார் ..
“இ..இல்லப்பா அ..அது “என்று அவள் தடுமாற,
” அவன் உன்கிட்ட வந்து பேசும் போதே நீ வீட்ல வந்து சொல்லியிருந்தா? இது இந்த அளவுக்கு பிரச்சினை ஆயிருக்காது இல்ல மித்து.. நாங்க உன்ன அப்படித்தான் வளர்த்து இருக்கோமா? எங்க பொண்ணு தைரியமானவள் எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணிடுவா என்று இல்ல நினைச்சுட்டு இருக்கோம்”
“இல்லப்பா இதை நானே ஃபேஸ் பண்ணிடலாம் அப்படின்னு நினைச்சேன். ஆனா, அவன் இந்த அளவுக்கு கீழ் தனமா இறங்குவான்னு நினைக்கல ப்பா! “என்று சொல்லும் போதே,
அம்மா தான் ,”அதெல்லாம் நினைக்கனும் டி. இப்ப இருக்க காலகட்டத்தில் பொம்பள புள்ளையை தனியா வெளியே அனுப்பவே அவ்வளவு பயமா இருக்கு,வயித்துல நெருப்ப கட்டிட்டு தான் உங்களை வெளியே அனுப்ப வேண்டியதா இருக்கு.. இந்த லட்சணத்துல ஒருத்தன் உன் கிட்ட வம்பு பண்ணத கூட நீ வீட்ல வந்து சொல்ல மாட்டியா ?என்ன விடுடி உங்க அப்பா உங்களுக்கு எப்பவும் சப்போர்ட் பண்றவர் தானே! அந்த மனுஷன் கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல.. இன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி உனக்கு அந்த அவ பேரு தேவையில்லை இல்ல ” என்றார் ஆதங்கமாகவும் அழுகையாகவும்,
” கொஞ்ச நேரம் நீ கம்முனு இருக்கியா சத்யா, நீயாவே ஏதாவது பேசிட்டே போகாத. என் புள்ள மேல நம்பிக்கை இல்லாம ஒன்னும் நான் பேசிட்டு இல்ல”
“நானும் அவ மேல நம்பிக்கை இல்லாம ஒன்னும் பேசல. ஆனா, நாளை மறுநாள் அவ வெளியே போகணும் இல்ல? ஒரு தாயா எனக்கு அந்த பதட்டம் இருக்கத்தானே செய்யும்”என்றார் சத்யா ..
“சரி விடு! சத்யா” என்றார் தன் மனைவியிடம் இளவரசன்..
‘தன் மகள் ,எங்கு தான் அவள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்று எண்ணி விடுவாளோ ? ‘என்று பயந்த சத்யா வேகமாக, அவளிடம், ” அம்மாவுக்கு உன் மேல நம்பிக்கை இல்லாம கிடையாது டி. ஆனா, அந்த இடத்தில நீ ஏன் எதும் பேசமா பயந்து நின்னுட்டு இருந்த? அப்போ அவங்க சொல்ற எல்லாம் உண்மை என்பது போல இருக்கும் இல்லையா ?அந்த பயம் தான் டி!”..
அவள் இப்போது, இளவரசனை பார்க்க,
“உன்னை அப்பா தைரியமான பொண்ணா தான வளர்த்து இருக்கேன் மித்து மா .. அப்போ உனக்கு ஒரு பிரச்சனை என்றால், உன்னால ஸ்ட்ராங்கா இருந்து அதை ஃபேஸ் பண்ண முடியாதா? தைரியமா எதையும் பேச முடியாதா? உன் பிரச்சனையை நீ தான் ஃபேஸ் பண்ணனும்.. ஆன, நாங்க எப்பவும் உனக்கு சப்போர்ட்டா தான் இருப்போம். சப்போஸ் நாங்க வர்றதுக்கு லேட் ஆகி இருந்தாலோ? இல்ல, எங்களுக்கு விஷயமே தெரியாம எங்களால் அந்த இடத்துக்கு வர முடியாமல் இருந்திருந்தாலோ அப்போ என்ன பண்ணுவ ?இந்த மாதிரி சூழ்நிலையில்? உன் மேல நாங்க நம்பிக்கை வச்சா போதும்.. நாங்க வர வரைக்கும் அங்க பயந்துட்டு இருந்தியே! அது எதுக்காக ? உன் மேல தப்பு இல்லன்றப்ப உனக்கு எதுக்கு பயம் ? இனி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் என் பொண்ணு தைரியமாக பேஸ் பண்ண பழகணும் இப்ப மட்டும் இல்ல அவளோ ட லைஃப் லாங்” என்றார்.. என்று சில வருடங்களுக்கு முன்பு நடந்த அனைத்தையும் கூறி முடித்து தேவின் முகத்தை ரியா பார்க்க.
“சரி ரியா. ஆனா அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம் ?”
“இருக்கு தேவ்.. நேத்து நைட் சாப்பிடும் போது தான் அப்பா அவளுக்கு அவரோட ஃப்ரெண்ட் பையன மாப்பிள்ளையா பார்த்திருக்கிறதை பற்றி சொன்னாரு.அப்போ நான் தான் அப்பா கிட்ட உங்க விசியத்தை சொல்றதா சொன்னேன்.அவ தான் இல்ல நான் தான் சொல்லணும்.. ஆனா,அதுக்கு முதல்ல உங்க கிட்ட பேசணும் என்ற மாதிரி சொன்னா , அவ தான் உங்கள இங்க வர சொல்லவும் சொன்னா, அவளே சொல்றதா தான் சொன்னா.. நான் தான் குகன் எப்படியும் உங்க கூட இருப்பான்னு அவன வச்சிகிட்டு பேசவும் முடியாதுன்னு நானும் வரேன்னு சொன்னேன். அவ வீட்ல உங்களை பத்தி பேசணும் என்றால்.. அப்பா கேட்பாங்க இல்லையா? இன்னொரு முறை அப்பா எந்த இடத்திலும் , எந்த சூழ்நிலையிலும் ,தன் மகள் இன்னமும் தைரியம் இல்லாமல் தான் இருக்கா என்று நினைச்சிட கூடாது என்பதற்காக தான் உங்ககிட்ட முதல்ல பேசணும்னு நினைச்சா ..மத்தப்படி உங்க காதல் மேல சந்தேகப்பட்டோ இல்ல…உங்க மேல சந்தேகப்பட்டோ அவ இன்னைக்கு வரல.. உங்களுக்கு அவ சூழ்நிலை புரியுதா? தேவ்”..
“ஹம்..ஃபர்ஸ்ட் எனக்குமே கோவம் இருந்துச்சு. எந்த இடத்திலுமே என்னோட செயலோ , பேச்சோ, பார்வையோ, அவளுக்கு என்னோட மனசை காட்டி கொடுக்கலையா என்று?ஆனா , அவ வார்த்தையா இல்லாம நான் அப்பாகிட்ட போய் எப்படி சொல்லனு சொல்லும்போது நானுமே உணர்ந்துட்டேன்.அதுவும் இவ்வளவு டீடெயிலா சொன்னதுக்கப்புறம் எனக்கு புரியாம போகுமா? அவளோட சூழ்நிலையில் எல்லாமே ஓகே தான்.ஆனா, நான் வீட்ல வந்து உங்க அப்பா ,அம்மா கிட்ட பேசட்டா?”
” இல்ல வேணாம் தேவ். அவளே பேசறதா சொல்லி இருக்கா. மேக்சிமம் இன்னைக்கு நைட் பேசிடுவா..நான் நைட் கால் பண்றேன் தேவ்”என்றாள் புன்னகையுடன்…
அவனும்”சரி” என்று தலையசைக்க…
அவர்கள் இருவரும் வரவும் சரியாக இருந்தது.. அதன் பிறகு, சொல்லிக்கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்று விட்டார்கள்.
வீட்டிற்கு சென்ற ,மித்ரா தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு, ஹாலுக்கு வந்து,” அப்பா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”
” சொல்லு மித்துமா “
“அ..அது”என்று லேசாக தயங்கினாள்.
ரியா தான்… ” நான் வேணா பேசட்டா?” என்றாள் அவள் காதை கடித்தபடி..
“கொஞ்ச நேரம் அமைதியா இரு ரியா..என் விருப்பத்தை பத்தி நான் தான் பேசணும் சொல்லணும் ..”என்றாள்.
அதன் பிறகு,ரியாவும் அமைதியாகி விட,
“அ..அப்பா அ..அது “என்று ஒரு சில நொடி தயங்கியவள்..
‘ இப்போதே பேசுவது தான் சரி ‘என்று எண்ணி தலையை உலுக்கி விட்டு , சுத்தி வளைக்காமல்”எனக்கு ஒருத்தரை பிடிச்சி இருக்கு பா” என்றாள் பட்டென்று..
சத்யா தான் அதிர்ச்சியாக..
” என்னடி சொல்ற? “என்று அவள் அருகில் வர ..
“சத்யா கொஞ்ச நேரம் சத்தம் போடாம அமைதியா இரு!” என்று தன் மனைவியை அடக்கிய இளவரசன் ..”சரி சொல்லு மித்து” என்று அவளை அமைதியாக பார்க்க…
அவளும் தேவை பற்றி தனக்கு தெரிந்த அனைத்தையும் கூற செய்தாள். இந்த இடத்துல இந்த வேலையில் இருக்காரு என்று ஒவ்வொன்றாக கூற..
” சரி உனக்கு எப்படி அந்த பையன தெரியும் ?”என்றார்.
” அ..அது “என்று தயங்கியவள் “எ…எங்க கிளாஸ்ல இருக்க குகன் என்ற பையனோட சித்தப்பா தான் அவரு “
“ஓ !”என்றவர் அமைதியாக இருக்க ..
சத்யா தான்.” என்னடி அந்த பையன் அவங்க அண்ணன் பையன ஸ்கூலுக்கு விட வந்தானா? இல்ல, உன் மனச கலைக்க வந்தானா ?” என்றார்..
“ம்மா ” என்றாள் வேகமாக மித்ரா..
“என்ன டி நொம்மா? நான் என்ன இப்ப தப்பா கேட்டேன் .. அதும் இவ்வளவு சத்தமா அம்மான்னு வர.. யாருன்னே தெரியாதவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு”..
“ஆமா. வக்காலத்து வாங்கிட்டு தான் வரேன்.. ஆனா , யாருன்னே தெரியாதவர் ஒன்னும் கிடையாது..எனக்கு அவரை தெரியும்..”
“என்னடி தெரியும் ?என்ன தெரியும்? எத்தனை நாளா தெரியும் உனக்கு அவனை? நீ அந்த ஸ்கூலுக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சே இன்னும் ஒரு வருஷம் ஆகல..”என்றார் ஆதங்கமாக..
“ப்ளீஸ் மா. நீங்களா தப்பு தப்பா வார்த்தையை விடாதீங்க! நான் அவரை விரும்புறேன்னு சொன்னேன். ஆனா ,நீங்க பேசுற விதம் வேற மாதிரி இருக்கு”
” என்னடி நான் இப்ப தப்பா பேசினேன்”என்று சண்டைக்கு வந்தார்.
” கொஞ்ச நேரம் கம்முனு இருன்னு சொன்னேன் சத்யா” என்ற இளவரசன்..
” சரி நீ சொல்லு ?”என்றார் மித்ராவை பார்த்து,
“அவ்வளவுதான் பா”.
” சரி .ஆனா, எப்போ இருந்து உனக்கு அந்த பையனை தெரியும்?”
” அ..அது அ..அப்பா … ஒரு எட்டு மாசமா”.
” எட்டு மாசமா தெரியும் !ஆனா, உனக்கு இப்பதான் எங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சா ?”
“இ..இல்லப்பா அதுக்குன்னு ஒரு நேரம் காலம் வரும்போது சொல்லிக்கலாம். இப்ப என்ன அவசரம் நெனச்சேன்”…
“அவசரமில்லையா?”
“அப்பா ப்ளீஸ்!. இப்போதைக்கு எனக்கு நீங்க கல்யாணம் பண்ண மாட்டீங்க என்ற மாதிரி நான் யோசிச்சேன். நீங்க திடீர்னு நேத்து அதுவும் உங்க பிரண்டோட பையன்னு சொல்லவும் எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு. சப்போஸ் நீங்க உங்க மனசுலையும் ஆசை வளர்த்து. அதே சமயம் அந்த அங்கிள் கிட்டயும் நீங்க இப்படி ஒரு வார்த்தை சொல்லி விடக்கூடாது இல்லையா? பின்னாடி நான் உங்க வார்த்தையை மீறின மாதிரியோ ,இல்ல நீங்க அவருக்கு வாக்கு கொடுத்து அதை மீறின மாதிரியும் ஆகிட கூடாதுன்னு தான் அப்பா. இப்பவே சரின்னு சொல்லிட்டேன்.”
“சரி அதை நேத்தே சொல்லி இருக்கலாம் இல்ல”.
“இ..இல்லப்பா அ..அது” என்று அவள் தயங்க…
அவரும் அவளை உற்றுப் பார்க்க ..
அவளும் இன்று நடந்ததை மேலோட்டமாக சொல்லி முடித்தாள்.
” அப்போ அந்த பையன் இன்னைக்கு தான் உன்கிட்ட விரும்புறதா சொல்லி இருக்கான் அப்படித்தானே?”.
“இல்லப்பா .ஆனா, அதுக்கு முன்னாடி அவரு..” என்று அவள் பேச முற்பட,
“வேண்டாம் “என்பது போல் கை காண்பித்தவர்.. “இது எனக்கு எப்பவோ தெரியும்!” என்று அவளுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
“அப்பா! ” என்றாள் அதிர்வாக..
‘அப்போ அப்பாவுக்கு தெரிஞ்சு தான் வேற மாப்பிள்ளை பார்த்து இருக்காருன்னா அப்பாவுக்கு தேவை பிடிக்கலையா?’ என்று மனதிற்குள் எண்ணினாள் ரியா அதிர்ச்சியுடன்..
செம