Loading

தினமும் நேரம் கிடைக்கும் பொழுது காலை மாலை இருவேளையும் மித்ரா,தேவ் இருவரும் பார்த்து பேசிக் கொண்டார்கள்.

அவ்வப்போது நேரில் பேச முடியவில்லை என்றாலும் ,இரவு வேளையில் மெசேஜில் பேசிக்கொள்வார்கள் ..போன் அவ்வளவாக பேச மாட்டான். “ஏன்?”என்று ஒருமுறை மித்ரா கேட்டதற்கு ,அவன் வாய் வழியாகவே கூறியிருந்தான்.

தன் மனதில் இருக்கும் எண்ணத்தை,” வயசு புள்ளையை வச்சுட்டு பேசுறது சரியா வராது ராங்கி நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன் “என்றவன் அமைதியாகி விட,

அவளும் அதை உணர்ந்து அமைதியாகி விட்டாள். அதன் பிறகு ,கேட்பதில்லை அப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்க,

ஒருநாள் மாலை குகனை அழைப்பதற்காக தேவ் வந்து கொண்டிருக்க, அப்போது அவனது போன் அலறியது .ஒரு இடத்தில் நின்று எடுத்துப் பார்க்க,

ரியாவாக இருந்தது.. அன்று ஐஸ்கிரீம் பார்லரில் முதல் முறை பார்த்து பேசிய பொழுதே போன் நம்பரை பரிமாற்றிக் கொண்டார்கள். 

ரியாவே கிளம்பும் முன் அவனிடம் கேட்டு வாங்கி இருந்தாள்.அவன் நம்பர் சொன்ன அடுத்த நிமிடம் அவள்  மிஸ்டுகால் கொடுத்திருக்க, அப்போதே பதிவு செய்து கொண்டான்.

இத்தனை நாட்களில் ரியாவும் இவனுக்கு அழைத்ததில்லை. அவனும் அழைத்ததில்லை. ஆனால் ,மெசேஜில் ஒரு சில நாட்கள் பேசியிருக்கிறார்கள். அவ்வப்பொழுது, அவனது ராங்கி மெசேஜ் செய்ய டைம் ஆகி இருந்தால், உன்னுடைய அக்கா எங்க? மெசேஜ் பண்ணா ரிப்ளை பண்ணல என்று அவளுக்கு மெசேஜ் செய்து கேட்டிருக்கிறான்  அவளும் சிரித்துக் கொண்டே ,அவள் ஹாலில் அப்பாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள், வேலையாக இருக்கிறாள் என்று கூறி இருக்கிறாள்.

அதே சமயம், ஒரு சில நாட்கள் அவர்களாக தங்களைப் பற்றியும் பேசி இருக்கிறார்கள். இப்பொழுது, முதல்முறையாக ரியாவிடமிருந்து போன் வர, யோசனையாக, புருவம் முடிச்சிட ‘என்னவாக இருக்கும்?’ என்று யோசித்துக் கொண்டே போனை எடுத்து காதுக்கு கொடுத்து, “சொல்லு ரியா” என்றான்.

“குகனை கூப்பிட வரும் போது ஸ்கூலுக்கு பக்கத்துல இருக்க அந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு வரீங்களா?”என்று கேட்டிருந்தாள்.

ஒரு சில நொடி யோசித்தவன் “ரியா ஏதாவது பிரச்சனையா ?”.

” இல்ல இல்ல தேவ் பிரச்சனை எல்லாம் இல்ல. ஆனா, கொஞ்சம் பேசணும் “

“இம்பார்ட்டனா ?”

” இம்பார்டன்ட் தான். கொஞ்சம் வரீங்களா ?ஏதாவது வேலை இருக்கா”

” இல்ல வரேன்” என்று வைத்திருந்தான்.

யோசனை உடனே,’ என்னவாக இருக்கும் ?’என்று யோசித்துக் கொண்டே சென்றான். ‘சரி எதுவாக இருந்தாலும், போய் தெரிந்து கொள்ளலாம். இன்னும் பத்து நிமிடம் தானே!’ என்று எண்ணிக் கொண்டே குகனை அழைத்துக் கொண்டு கிளம்ப,

“தேவ்  மிஸ் பாக்கலையா ?இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டோம்” என்றான் குள்ளன்.

அவன் தலையில் கொட்டியவன். “ஒழுங்கா வாடா! வேற ஒரு வேலை இருக்கு” என்று விட்டு அருகில் உள்ள ஐஸ்கிரீம் பார்லரில் வண்டியை நிறுத்த.

“ஐஸ்கிரீம் சாப்பிட போறோமா? வேணாம் “என்றான் பதட்டமாக..

” ஓவரா பயப்படாத வா! அன்னைக்கு தலைவலி இருந்ததால ஃபீவர் வந்துச்சு, ஐஸ்கிரீம் சாப்பிட்டதால இல்லை “.

‘ஆனாலும் ,அதில் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு அதுவரைக்கும் சந்தோஷம்.இனி ஐஸ்க்ரீம் வேணும்னு அடம் பிடிக்க மாட்டான் ‘என்று எண்ணிக் கொண்டே அவனை அழைத்துக் கொண்டு கடைக்குள் நுழைய ..

“எதுக்கு தேவ் இங்க  வந்திருக்கோம்?”

” வாடா சொல்றேன்! உள்ள போன தெரிய தான போகுது” என்றவன் கண்களால் சுற்றம் அலச..

ரியா இவனை பார்த்தவள்.”தேவ்” என்று கை காண்பிக்க,

இவனும் கை காண்பித்துக் கொண்டே அவ்விடம் நகர.

“மிஸ்ஸோட தங்கச்சி ரியாவை பார்க்க வந்திருக்கோமா ?”.

” ஆமாம் “என்று கண் சிமிட்டியவன். அவனை அழைத்துக்கொண்டு அவள் இருக்குமிடம்  செல்ல.

அப்போதுதான் ,அங்கு மித்ராவும் உட்கார்ந்து இருப்பதை பார்த்தவன். அவளை கேள்வியாக தான் பார்த்தான்.

அவளும் எழுந்து நின்று புன்னகைக்க.

“ராங்கி நீ என்ன இங்க பண்ற?”

அவள் அவனை கீழ் கண்ணால் முறைக்க,

” ஓகே. ஆனா, ரியா தான் ஏதோ பேசணும்னு சொல்லி வர சொன்னா. நான் ஏதோ இம்பார்ட்டனோ இல்ல, ஏதோ பிரச்சனையோ நினைச்சேன்” என்றான் சங்கடமாக ..

“நான் தான் வர சொன்னதே!”என்றாள் மித்ரா அவனை கீழ்க்கண்ணால் வருடியபடி.

” அதுக்கு ரியா எதுக்கு போன் பண்ணனும்?” என்று வினா தொடுத்தான்.

“கொஞ்சம் பேசணும் அதனாலதான்”

” அதுக்கு நீயே எனக்கு போன் பண்ணி இருக்கலாமே !”

“இப்படி நின்னுட்டே பேச போறீங்களா? உட்காருங்க”

என்றவள் .”என்ன வேணும் சொல்லுங்க ? குகன் ஐஸ்கிரீம் சாப்பிடுறியா ?” கண்கள் மின்ன ரியா கேட்க.

“இல்ல வேணாம்”என்றான் பயத்துடன் ..

“டேய்!” என்று அவன் தலையை ஆதுரமாக வருடியவள்.. “சரி ஓகே வேணாம். வேற என்ன வேணும் சொல்லுங்க” என்று கேட்டு ஆர்டர் செய்திருந்தாள்.

” சரி சொல்லு ராங்கி”.

” நான் சொல்றேன்” என்றாள் ரியா.

” புரியல. நீ போன் பண்ணி வான்னு சொன்ன ,இங்க வந்ததுக்கப்புறம் உன் அக்கா பேசணும்னு சொல்றாங்க. இப்போ நீ நான் சொல்றேன்னு சொல்ற?” என்று உதட்டை பிதுக்கியவன்..” சரி சொல்லு ?”என்று இருவரையும் மாறி மாறி பார்த்தான் .

இவர்கள் வரும்பொழுது அக்கா ,தங்கை இருவரும் எதிரெதிரே உட்கார்ந்து இருந்தார்கள்.தேவ் வந்த பிறகு தேவும், குகனும் அருகில் உட்கார்ந்து கொள்ள. தன் அக்காவின் அருகில் உட்கார்ந்து கொண்டாள் ரியா.

“சரி சொல்லு ரியா” என்று அவளைப் பார்க்க .

“தேவ் அ..அது” என்று ஒரு சில நொடி தயங்கியவள்..’ எப்படியா இருந்தாலும் சொல்லித்தான் ஆகணும். பேசுறதுக்காக தான் வர சொல்லி இருக்கு ‘என்று நினைத்து விட்டு ,”அது வீட்டில் மித்ராவுக்கு அப்பா மாப்பிள்ளை பார்த்து இருக்காரு”.

” என்ன?”என்றான்  அதிர்வாக.. எதிரில் உள்ள மித்ராவின் கண்களை ஊடுருவிய படி, 

“ஆமாம். அப்பாவோட ஃப்ரெண்ட் பையனாம். சோ அப்பாவுக்கு பிடிச்சிருக்கு .அதனால அவரை இவளுக்கு  பேசி முடிக்கலாம்னு   சொன்னாரு.அதான் ..”

அவனின் பார்வை சிறிதும் கண்ணெடுக்காமல் அவளிடமே நிலை குத்தி நிற்க.அவளோ, அவனை எதிர்கொண்டு பார்க்க முடியாமல் தடுமாற..

பேச்சு ரியாவிடம் இருந்தாலும், பார்வை முழுவதும் மித்ராவிடமே இருந்தது..

” சரி சொல்லு ரியா ?”என்றான் ஆற அமர,

“என்ன தேவ்  சொல்றது. இதான் விஷயம் “

“ஓ! இதை சொல்றதுக்கு தான் வர  சொன்னியா?” என்றான் ஏற்ற இறக்கமாக,

  மித்ரா வேகமாக நிமிர்ந்து அவனைப் பார்க்க.

அவனோ, பார்வையை இவள் புறம் இருந்து நகர்த்தாமல் இருக்க. ஒரு நிமிடம் அவனை நேருக்கு நேர் பார்த்தவள். இப்பொழுது குனிந்து கொண்டாள்.

“சரி உங்க அக்காவுக்கு கல்யாணம். வீட்டில் மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க ,அத சொல்றதுக்காக வர சொன்னியா? ஓகே! கங்கிராட்ஸ் மித்ரா மிஸ். எப்போ கல்யாணம்?  கல்யாண சாப்பாடு எப்போ போட போறீங்க ?”என்று அவளிடம் கை நீட்ட..

இப்பொழுது சிரித்து விட்டாள் ரியா.அவளை முறைத்துக் கொண்டு இருந்தாள் மித்ரா.

“என்ன முறைச்சா ?என்னடி அர்த்தம் ?”என்றாள் ரியா.

“இதுக்கு தான் நான் பேசுறேன்னு சொன்னேன்” என்றாள் பற்களுக்கு இடையில் வார்த்தைகளை துப்பியபடி.

“நான் என்ன வேணும்னா சொன்னேன். நீ சைலன்ட்டா இருந்த, சரின்னு நான் ஸ்டார்ட் பண்ணி விட்டேன்”.

” சரி சொல்லுங்க மித்ரா .எப்போ கல்யாண சாப்பாடு போட போறீங்க ?”என்று ராங்கியில் இருந்து மித்ராவிற்கு அவன் மாறி இருக்க.

அவனை பாவமாக பார்த்தாள் .

“தேவ் அ..அது” என்று அவள் தடுமாற,

” இரு மித்து” என்றவள். 

“கொஞ்சம் அப்படி கூட்டிட்டு போய் பேசுறீங்களா ? அவ உங்க கிட்ட தான் பேசணும்னு வந்திருக்கா”.

” ஆனா, உங்க அக்கா எனக்கு போன் பண்ணலயே ரியா! நீதான போன் பண்ணா, அப்போ நீ தானே பேசணும்”என்று கன்னத்தை தடவியபடி அவன் ஒரு மார்க்கமாக கேட்க, 

“தேவ் நான் தான் வர சொல்லி இருந்தேன்” என்றாள் வேகமாக அவனது ராங்கி.

இப்பொழுது மித்ரா வாய் திறந்து விட்டாள். ஆனால் அவன் அமைதியை கட்டிப்பிடித்தபடி,அவளை தான்  கூர் விழியால் தாக்கிக் கொண்டிருந்தான்.

ரியா தான் .குகன் இருப்பதை கண்களால் குறிப்பிட்டு காண்பிக்க ..சுற்றத்தையும் காண்பிக்க.. அதை உணர்ந்தவன். எதுவும் பேசாமல் அங்கு கப்பில்சாக ,ஃபேமிலியாக உட்காரும் இடத்திற்கு சென்றான்.

அவன் பின்னாடி மித்ராவும் செல்ல .

குகனுடன் ரியா அமர்ந்து அவனுக்கு ஸ்னாக்ஸ் வாங்கி கொடுத்து பேசிக் கொண்டிருந்தாள்.

உள்ளே சென்றவன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு, அவளை கூர் விழியால் தாக்க ..

“தேவ் நான் உங்ககிட்ட பேசணும்”என்றாள் பரிதவித்த படி அவனது பார்வையையும் எதிர்கொள்ள முடியாமல் தவித்தபடி, 

“சொல்லுங்க மித்ரா .நீங்க தான் வர சொல்லி இருக்கீங்க? சொல்லுங்க ? கல்யாணம் வேற.. எப்ப கல்யாண விருந்து வைக்க போறீங்க? மாப்பிள்ளை எப்படி இருக்காரு ?என்ன பண்றாரு ?என்ன ஊரு ?என்று அவன் பாட்டிற்கு கேட்டுக் கொண்டே செல்ல..

” என்ன தேவ் விளையாடுறிங்களா ?”என்றாள் சற்றே குரலை உயர்த்தி அவன் கேட்ட கேள்விகளில் எரிச்சல் மண்ட,

“என்னடி என்ன? குரலை உயர்தினா பயந்திடுவோமா?” இப்பொழுது அவனது உடல் மொழியும் மாறி இருந்தது ..

அவள் ஒரு சில நொடி பயந்து பின்வாங்கி அவனை மிரட்சியுடன் பார்க்க..

இப்பொழுது அவளது கையை கெட்டியாக பிடித்திருந்தான். சற்று கோபத்தை குறைத்தபடி,”சொல்லுடி என்ன சொல்ல அத சொல்லு ?”

“இ..இல்ல தேவ் அ..அது அ..அப்பா ” என்றவளுக்கு வார்த்தைகளை முடிக்க முடியாமல் நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ள.

அவளை கூர்மையாக பார்த்தான். ஆனால் ,அவள் கையை விடவில்லை. இன்னும் சற்று இறுக்கமாக தான் இறுக்கி பிடித்தான்.. 

“சொல்லு?”என்றான் புருவத்தை ஏற்றி இறக்கி முகத்தில்  அவனின் மொத்த உணர்வுகளையும் பிரதிபலித்தபடி..

“இ..இல்ல அ..அது அ..அப்பா அவரோட ஃப்ரெண்ட் பை..பையன கல்யாணம் பண்றத பத்தி நேத்து நைட் பேசினாரு”

” சரி அதுக்கு இப்ப நான் என்ன பண்ணனும் ?”

“தே..தேவ்” என்று அவள் தடுமாற,

அவளது தடுமாற்றத்தை உணர்ந்து, பார்வையை வேறு புறம் திருப்பி தன்னை சமன் செய்தவன். திரும்பி அவளை பார்க்க ..

திரும்பவும் அவன் மனம் முன்பு போல் முரண்டு பிடிக்க, அவள் கையின் இறுக்கத்தை கூட்டியவன்.. அவள் முகம் வலியில் சுருங்குவதை கண்டு, அதை காண இயலாமல், வேகமாக கையை உதறிவிட்டு,” அப்போ இந்த நிமிஷம் வரைக்கும் என் கண்ணு உனக்கு எதையும் காட்டிக் கொடுக்கல ?என்னோட ஒவ்வொரு செயலும் உனக்கு எதுவும் காட்டிக் கொடுக்கல?  என்ன  பார்த்தா இளிச்ச வாயன்  மாதிரி இருந்திருக்கா ?”என்றான் பற்களை நரநரவென கடித்தபடி, மொத்த கோபத்தையும் திரட்டி, 

“இ..இல்ல… அ..அது “என்று அவள் மீண்டும் தடுமாற,

“என்ன டி இல்ல நொள்ளனு.. தைரியமாவே உனக்கு எதுவும் பேச தெரியாதா? இல்ல என்ன பார்த்தா எப்படி தெரியுதுன்னு கேட்கிறேன். இந்த நிமிஷம் வரைக்கும் என்னோட  செயலோ, என்னோட பார்வையோ எதையுமே உனக்கு காட்டிக் கொடுக்கல?  அப்படித்தானே!” என்று இயலாமையில் ,பார்வையாலே அவளை எரித்து விடுவது போல் அவன் வதைக்க,

“தேவ் ப்ளீஸ்! நான் என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க”

” சொல்லுங்க மேடம்!” என்று கைகளை கட்டிக் கொள்ள..

“தேவ் ப்ளீஸ்! எப்பவும் போல பேசு. அப்ப தான் என்னால ஃப்ரீயா பேச முடியும்”

” எப்படி பேசணும்! நான் எப்படி உன்கிட்ட நடந்துக்கிட்டேன்னு உனக்கு இதுவரைக்கும் தெரியாது. ஆனால், நான் இவ்வளவு நாளா உன்கிட்ட பேசின மாதிரி பேசணும் அப்படியா” என்றான் புருவத்தை உயர்த்தி ஏற்ற இறக்கமாக ..

ஒரு சில நொடி பதட்டம் அடைந்தாலும், தன்னை சமன்படுத்திக் கொண்டவள்.’இன்றே பேசி விட வேண்டும் .நேரமும் இல்லை’ என்பதை உணர்ந்து,

” இல்ல நான் இப்ப வந்து இப்படி, அப்பா வீட்டுல மாப்பிள்ளை பாத்துட்டார்னு  சொன்ன உடனே உங்களுக்கு கோவம் வருது இல்ல. எந்த தைரியத்துல நான் எங்க அப்பா கிட்ட பேசுவேன் அதுக்கு மட்டும் எனக்கு பதில் சொல்லுங்க?” என்றாள் இப்பொழுது அவளும் வேகமாக..

“எந்த தைரியத்திலனா எனக்கு புரியலடி ?”..

“இந்த வாடிப்போடி என்ற வார்த்தையோ,இல்ல உங்க கண்ணோ, உங்க பேச்சோ எதுவுமே காட்டி குடுக்கலையான்னு கேட்டீங்க இல்ல? அதை நீங்க வாய் வார்த்தையா சொல்லாம எதை வச்சு நான் வீட்டில் பேச?”

“புரியலையே!” என்றான் இப்பொழுது அவளது கண்களை ஊடுறுவி ..

“அப்படி பார்க்காதீங்க!என்றவள் தன் தலையை உலுக்கிக் கொண்டு, எனக்கு தெரியும் ,என் மனசுக்கு தெரியும் .ஆனால், இத மட்டும் வச்சு நான் அப்பா கிட்ட பேச முடியாது இல்ல ? எனக்கு உங்களோட வாய் வார்த்தை வேணும். அப்படி எதுவுமே இல்லாம நான் அப்பாகிட்ட என்ன பேச ? “.

இப்போது ஒருவராக அவளது சூழ்நிலையை  புரிந்து கொண்டான். ஆனாலும், வீம்புக்கு அவளை குறுகுறு பார்வையோடு பார்க்க,

” இதுவரைக்கும் நீங்க வாய் வார்த்தையா எதுவுமே சொல்லலையே!”

“ஓ! மேடமுக்கு வாய் வார்த்தையா சொன்னா மட்டும்தான் புரியுமா? மேடம் இங்க இருக்கீங்கன்னு ” என்று … அவன் கையை உதறிவிட்டு ,தன் நெஞ்சை சுட்டிக்காட்டியவன். “இங்க நீ மட்டும் தான் இருக்கனு தெரியாது இல்லடி! என்ன பார்த்தா ஊர்ல இருக்க எல்லா பொண்ணுங்க கிட்டயும் பல்ல இளிச்சு பேசுற மாதிரி இருக்கோ?”

அவனை முறைத்தவள்..”அப்போ நானும் யார்கிட்ட வேணாலும் உரிமை எடுத்து பேசிடுவேன் நினைச்சீங்களோ ?”என்றாள் எரிச்சலாக,

“ஏய்!” விரல் நீட்டி எச்சரித்து விட்டு,அவளது கழுத்தை நெறிக்க வந்தவன்.. கையை உதற..

” ஏண்டி இப்படி கொல்ற ?” என்றான் அவள் வார்த்தையில் மனம் தாங்காமல்,

” நீங்க தான் இப்போ வார்த்தையை விட்டிங்க தேவ்! நான் இல்ல.. நான் கேட்டது ஒன்னே ஒன்னு, உங்க வாய் வார்த்தையா நீங்க சொல்லாத விஷயத்தை வச்சு நான் எப்படி வீட்ல பேச?  நான் உங்க மேல எந்த விதமான ஆசை வேணாலும் வளர்த்துக்கலாம். ஆனால் , வீட்டில் உங்களைப் பற்றி பேசுவதற்கு ஏதாவது வேணும்ல ..அப்பா கேப்பாங்க, எப்படி தெரியும் ?என்ன ஏதுன்னு? அப்போ நான் பதில் சொல்லணும் இல்ல? என்னன்னு சொல்ல? இதுவரைக்கும் வாய் வார்த்தையாவே நாங்க பேசிக்கல , எனக்கு அவரோட பார்வையும் ,செயலும்  உணர்த்துச்சுனு  சொல்ல முடியுமா ? இல்ல ,அத அப்பா தான் நம்புவாரா ? ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனா அதை ஏற்றுக் கொள்வாரா?”.

” சரி விடு! நான் உங்க வீட்டுல வந்து பேசுறேன்” என்றான் பட்டென்று ..

“இல்ல தேவ்.நான் முதல்ல பேசணும் அப்பா கிட்ட ..அதுக்கப்புறம் தான் ..”

“இப்ப நான் என்ன தாண்டி பண்ணனும்?” என்றான் சோர்வாக..

” நான் இப்போ உங்ககிட்ட என்ன கேட்டேன்.ஆனா நீங்க ?”என்றவள் வார்த்தையை நிறுத்த..

அவளை குறும்பு புன்னகையுடன், கள்ள சிரிப்பை உதட்டில் தேக்கி, நாக்கை உள் கன்னத்தில் வைத்து நாக்கை சுழற்சியபடி,ஒற்றை கண் சிமிட்டி,பார்வையாலே அவளை விழுங்கியபடி பார்க்க..

  அவனது பார்வையின் தாக்கத்தை , தாங்க முடியாமல்,அவள் வேறு புறம் பார்வையை பதிக்க..

அவள் கன்னங்களை கையில் ஏந்தி கொண்டு,நாடியை பிடித்து,

தன்னை பார்க்குமாறு செய்தவன்..தலையை அழுத்தமாக கோதியபடி,பார்வையாலே வருடியபடி,குறும்பு கொப்பளிக்க,இதழ்களில் மென் புன்னகையை தவழ விட்டவன்…குரலை செருமி கொண்டு,

உன் மைவிழி தீட்டிய விழியசைவில் ..

உள்ளம் இடறி விழுந்தேனடி ..

என் காதல் கண்மணியே..!கற்சிலை ஓவியமே..!

என்றவன் …அவளை தன் நெஞ்சில் அழுத்தமாக புதைத்து கொள்ள…

“தேவ்!”என்றாள் விழிகள் விரிய.. அவள் அவனை நிமிர்ந்து பார்க்க..

“என்னடி போதுமா? இல்ல இன்னும் தெளிவா சொல்லனுமா ? “என்று புருவத்தை உயர்த்தி, அவளை பார்வையால் தீண்டி… சிலிர்க்க வைக்க..

அவன் நெஞ்சில் சாய்ந்தபடி, கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய, இதழ்கள் சிரிக்க ,ஒரு சில அடிகளை பரிசாக வழங்கியவள்.. மனமெங்கும் மல்லிகை வாசம்..

இருவரும், ஒருவரை ஒருவர் அணைத்தபடி தங்களது உலகில் மெய் மறந்து சஞ்சரித்து கொண்டிருந்தார்கள் ..

அவள் நாடியை பிடித்து தன்னை பார்க்குமாறு செய்தவன் கண் சிமிட்டி சிரித்து ” என்ன?”என்று புருவத்தை உயர்த்தி பார்வையாலே கேள்வி கணையை வைக்க…

அவளுடன் சேர்ந்து அவளது முகமும் ,கண்களும் கூட சிரிக்க…அவன் பார்வை வீச்சை தாங்க இயலாது , உதட்டை கடித்த படி, தரையில் பார்வையை பதிக்க..

உன் உதட்டசைவில் உள்ளம் மறந்தேன்.. மைவிழியாலே..!

உன் இதழ்களுக்கு விடுதலை தர ஆசையடி பெண்ணே! 

ஆனால், உன் அனுமதி வேண்டி நிற்கிறேன் உன் காவல் காரன்..

“அச்சோ!” என்று அவள் கண்களை இரு கைகள் கொண்டு மூடி கொள்ள.. அவன் வாய்வழி உதிர்த்த வாக்கியத்தில் உள்ளம் நெகிழ்ந்து நெளிய.

அவள் வெட்கத்தில் உடல் சிலிர்க்க.. அதரங்களில் சிரிப்பை உதிர்தவன்..கன்னத்தை பற்றி நேருக்கு நேர் பார்க்க வைத்து , கண் சிமிட்டி சிரித்தபடி,அவளது நெற்றியில் தன் முதல் முத்திரையை பதித்து இருந்தான்.. அவளது “வாசியக்காரன் “தேவ்.. 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்