Loading

அவளைப் புன்னகையுடன் பார்த்தவன்.” இப்போ ஓகே ராங்கி ஃபீவர் விட்டுருச்சு!” என்று தோலை குலுக்க.

 

” நேத்து குகன் ரொம்ப பயந்துட்டான் தேவ்” ..

 

“ஓ !அவன் மட்டும் தான் பயந்தானோ ?”என்று ராகம் இழுத்தபடி கீழ் கண்ணால் அவளை பார்க்க..

 

அவனை பார்த்தவள் உதட்டை கடித்த படி இருக்க..

 

“சரி சரி ஓகே விடு!” என்றான்..

 

“என்ன?”என்று அவள் அதிர..

 

“உன் லிப்க்கு தான் வலிக்கும் மா எனக்கு என்ன வந்துச்சு?”என்று தலையை கோதியபடி புன்னகைக்க,

 

குகன் அங்குள்ள ஊஞ்சலில் விளையாட சென்று இருந்தான்.

 

” சரி தேவ்  நேரம் ஆகுது “என்றாள் தடுமாற்றமாக,

 

அவளது தடுமாற்றத்தை உணர்ந்தவன் ..தன் சிகையை வருடியபடி புன்னகைக்க,

 

” இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க?”

 

“ஒன்னும் இல்லையே !”என்று தோலை குலுக்க, 

 

“சரி வரேன்”என்று அவனை திரும்பி பார்த்துக் கொண்டே நகர்ந்தாள் ..

 

அவள் இப்படி நகர்ந்த உடனே, தேவ் மெசேஜ் செய்திருந்தான் ..

 

“ராங்கி உண்மையா ஃபீவர் இல்ல. நீ தொட்டுப் பார்த்து இருந்தாலும், ஃபீவர் இருந்திருக்காது சரியா? ஏன் ?உன் ஃபேஸ் அதுக்குள்ள டல் ஆயிடுச்சு ?தொட்டுப் பார்க்க வந்து நீயே விலகிட்ட, ஒன்னும் இல்ல என் உடம்புக்கு ,உண்மையா ப்ரீ ஆயிட்டேன் .நேத்து கொஞ்சம் டயர்டா இருந்துச்சு, இப்போ  லைட்டா டயர்ட் மட்டும் இருக்கு.. டிரிப்ஸ் போட்டதால நேத்தே ஓகே ஆகிட்டேன் ஓகே வா.. லைட்டா அசதியா இருக்கிறதால முகம்  வாட்டமா இருக்கு ..ஃப்ரீயா இரு, கிளாஸ் ஒழுங்கா எடு! ஹாப்பியா இரு!  ஈவினிங் பார்க்கலாம் “என்று மெசேஜ் அனுப்பி இருக்க ,

 

அந்த மெசேஜை படித்தவள். சிரித்துக் கொண்டே ,அவனை திரும்பி பார்க்க, அவனும் ஒரு தலையசைப்பை கொடுக்க, இவளும் ஒரு தலையசைப்புடன் கிளம்பி இருந்தாள். 

 

தேவ் குகனுக்கு பாய் காண்பித்து அவனை கிளாசுக்கு  அனுப்பிவிட்டு , தன் வேலைக்கு சென்று இருந்தான்.

 

மாலை இருவரும் பார்த்துக் கொள்ளும் படியாக நேரம் அமையவில்லை. ஒரு சில நொடி நின்று பார்த்தான் .அப்பொழுது மித்ராவே மெசேஜ் செய்திருந்தாள் .

 

“எனக்கு கொஞ்சம் இம்பார்டன்ட் ஒர்க் இருக்கு. இப்ப பார்க்க முடியாது, நீங்க வீட்டுக்கு கிளம்புங்க!” என்று ,அதை பார்த்தவன் சிரித்துக் கொண்டே “ஓகே பாய் ராங்கி “என்று தானும் அனுப்பிவிட்டு நானும் சிரித்துக் கொண்டே தலையை கோதியபடி வீட்டிற்கு வண்டியை விட்டான் ..

 

அவன் மனம் முழுவதும் அவனது ராங்கியை தான் எண்ணி புன்னகைத்தது.

 

மாலை வீட்டிற்கு சென்ற பிறகு, சிறிது நேரம் தன் அப்பா, அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தான்..

 

  அப்பொழுதுதான் கணவன், மனைவி இருவரும் பேசிக் கொண்டே வீட்டிற்குள் நுழைய,

 

“என்ன டா? புருஷன் , பொண்டாட்டி ரெண்டு பேரும் ஒன்னா வரீங்க ?”என்றான் கண் சிமிட்டி,

 

“என் பொண்டாட்டி கூட நான் வரேன். உனக்கு என்ன வந்துச்சு ?”

 

அவன் கழுத்தை இருக்கியபடி தோளில் கை போட்ட தேவ்.. “உன்னை போட்டு கொடுக்க சொன்னாங்களா ?”என்றான் பற்களை கடித்த படி,

 

“இல்லடா உன்னோட ராங்கி தான் போன் பண்ணுச்சு!”  என்றான் புன் சிரிப்புடன், 

 

” ஏய்!” என்று நாக்கை மடக்கி தேவ் எச்சரிக்கை விட,

 

” ராங்கி தானே! நீ தான சொல்வ!.. சாரி சாரி ராட்சசி !”என்று அவன் கண்களும் சேர்ந்து சிரிக்க ,

 

இப்பொழுது கண்ணை உருட்டியபடி, தனது அண்ணனையும் ,அண்ணியையும் தேவ் மாறி மாறி பார்க்க..

 

” எப்படா பார்த்த?” என்றவன் கீழே குனிந்து காதில் ரகசியம் போல ,”அண்ணிக்கு தெரியுமா ?”என்றான் ..

 

” பார்த்ததே உன் அண்ணி தாண்டா!”என்றான் இதழ்களில் மென் புன்னகையை படரவிட்டவாறு,

 

” என்ன?” என்று நாக்கை கடித்தபடி, தலையை சொரிந்து கொண்ட வித்யாவை திரும்பிப் பார்க்க ..

 

அவளோ,சிரித்துக் கொண்டே நகர்ந்தாள்.

 

“அ..அண்ணி” .

 

” டேய் எனக்கு நேரம் ஆகுது  நான் ரெஃப்ரெஷ் ஆகணும். அவர் கிட்ட பேசிட்டு இரு!” என்று விட்டு அவள் ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.

 

” வேலு அண்ணி என்ன சொன்னாங்க?”

 

“உங்க அண்ணி  எதுவும் சொல்லல ?..ஆனா ,நேத்து உன்னோட ராங்கி என்ன சொல்லுச்சுன்னு கேட்க மாட்டியோ ?”தன் தம்பியை குறுகுறுவென பார்த்தபடி,

 

“ஆமாண்டா. நேத்து எனக்கு போன் பண்ணிட்டு நான் எடுக்கலன்னு பயந்து அண்ணிக்கு போன் பண்ணுதா சொன்னா.ஆன அத பத்தி மேற்கொண்டு நேத்து நைட்டும் பேச முடியல ,இன்னைக்கு காலைலயும் அவ்ளோவா டைம் இல்ல. அவ என்ன சொன்னா? அண்ணி என்ன பேசினாங்க”

 

வேலு, சிரித்துக் கொண்டே நேத்து நடந்ததை சொல்ல..

 

அவன்  முதுகிலே இரண்டு மூன்று அடிகளை பரிசாக வழங்கியவன்..

“அண்ணி கிட்ட தானே பேசிட்டு இருக்கா. நீ மூடிட்டு இருக்க வேண்டியதுதானே” என்று எகிறினான்.

 

” ப்ச்! அக்கறை உன்மேல மட்டும் இல்லடா ,என் புள்ள மேல கூட அக்கறை தான் போல”

 

  அவனை மேலும் கீழும் பார்த்தவன்..” ஏன் உனக்கு அதுல என்ன பிரச்சனை”

 

 

“பிரச்சனை இல்ல.. ஆனாலும் பரவால்ல உனக்கு வாச்சது இப்பவே உன் மேல இவ்ளோ அக்கறையா இருக்கு.. ஆனா எனக்கு வாச்சது “என்று அவன் கையை விரிக்க,

 

“ஏன் அண்ணிக்கு என்ன?”என்றான் புருவம் உயர்த்தி,

 

“உன் அண்ணிக்கு என் மேல பாசமும் இல்ல, அக்கறையும் இல்லை “என்று உதட்டை  பிதுக்கினான் பாவம் போல.

 

தேவ் சிரித்து கொண்டே,ஹாலில் இருந்து வேகமாக குரல் கொடுத்தான்.” அண்ணி உங்க ஹஸ்பண்ட் ஏதோ சொல்றாரு பாருங்க என்னன்னு கேளுங்க?”

 

” என்னடா “என்று கேட்டு கொண்டே வந்தவள் வேலுவின் அருகில் உட்கார்ந்து ,அவன் தோளில் கை போட்டு கொள்ள,

 

” உங்க ஹஸ்பண்டுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சா பரவாயில்லையாம் ..லவ் பண்ணனும் போல இருக்காம் சாருக்கு.. உங்க மேல லவ் கொறஞ்சிடுச்சாம் லவ் பீலே வரமாட்டேங்குதா உங்கள பார்த்தா” என்று ஏற்ற இறக்கமாக கூறி வேலுவை வித்யாவிடம் மாட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு நழுவி இருந்தான் தேவ் .

 

” டேய் நான் எப்படா அப்படி சொன்னேன் ?”என்று கத்திக்கொண்டே எழுந்த வேலுவின் தொடையில் கை வைத்து அவனை உட்கார வைத்தவள்.. தொடையில் கிள்ள,

 

” நீ வேற ஏண்டி. அவன் தான் ஏதாவது சொல்லி  என்ன உன்கிட்ட கோர்த்து விட்டு போறான், நீயும் இது தான் சாக்குனு கிள்ளுற” என்று துள்ளினான்..

 

எதிரில் எழில் வருவதை உணர்ந்து அவள் கையை எடுத்து விட்டு  நகர்ந்து உட்கார,

 

எழில் வந்த வேகத்தில் ரூமுக்குள் நுழைந்து இருக்க,

 

தன் காதல் மனைவியின் கன்னத்தில் பட்டும் படாமல் இதழ் பதித்து விட்டு” ஐ லவ் யூ டி பொண்டாட்டி” என்று காதில் கிசுகிசுவிட்டு ரூமுக்குள் நுழைந்து இருந்தான்..

 

“வேலு, உங்கள வச்சுக்கிட்டு!” என்று  காலை உதறி இந்த பக்கம் திரும்பி புன்னகைத்துக் கொண்டாள்..

 

அவனது செயலில் தன் தலையில் தட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டே அவள் கிச்சனுக்குள் நுழைய,

 

 

” வித்யா டயர்டா இருந்தா  கொஞ்ச நேரம்  ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு.இங்க பெருசா எதுவும்  வேலை இல்ல நான் பாத்துக்குறேன்” என்றார் தனம்.அவள் சிரித்துக் கொண்டே வருவதை உணர்ந்து ..

 

தலையிலேயே தட்டிக்கொண்டு, ‘மனுஷன் என்னை இப்போ அத்தை கிட்ட கோர்த்து விட்டுடாரு ‘என்று சிரித்தவள்.. “இல்லத்தை நானும் வேலையை பாக்குறேன்” என்று வேலையில் கவனத்தை செலுத்தினாள்.

 

இரவு சாப்பிட்டு குகனுடன் ,தேவ் வேலுவின் ரூமுக்கு சென்று, இன்று காலையில் நடந்ததை வித்யாவின் மடியில் படுத்துக்கொண்டு சொல்ல..

 

தன் தம்பியை குறுகுறுவென பார்த்துக்கொண்டு இருந்தான் வேலு.

 

“என்ன டா உன் பார்வையே சரியில்ல?”என்றான் தேவ்..

 

” முதல்ல எழுந்துடுடா ..எப்ப பார்த்தாலும் என் பொண்டாட்டி மடியில படுத்துக்கிற, அவ என் பொண்டாட்டின்னு மறந்திடாத”

 

” அவங்க என் அண்ணி”..

 

  குகனும்  உடன் சேர்ந்து,”அவங்க என் அம்மா” என்று சொல்ல.

 

மூவரையும்  பார்த்தவள் புன்னகைத்துக் கொண்டிருக்க..

 

மூவரும் மாற்றி மாற்றி அடித்து சண்டை இட்டு போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

 

“என்ன டி சிரிக்கிற. நாங்க  அடிச்சிக்கிறதுல அவ்வளவு சந்தோசமோ ?”என்றான் கண்களை சுருக்கி, வேலு.

 

“ஆமா! ரொம்ப சந்தோஷம்.. போட்டி மட்டும் போடுங்க, ஆனா எனக்கு ஒன்னும் எவனும் செய்யாதீங்கடா”என்று புலம்பிக்கொண்டே அவள் படுக்கப் போக..

 

” என்ன செய்யல ?” என்று மூவரும் வர..

 

“ஒன்னுமே செய்யலடா  ..சீக்கிரம் கல்யாணம் பண்ண சொன்னா  நீ  கேட்க மாட்ட ..இவனை ஐஸ்கிரீம் சாப்பிட வேணாம்னு சொன்னா இல்லனு வீட்டுக்கு தெரியாம  உன்னை இழுத்துட்டு போய் உன்ன பிரைன் வாஷ் பண்ணி எப்படியாச்சும் சாப்பிடனும், எவனும் சொல்ற பேச்சு கேக்குறது கிடையாது இதுல பேச்ச பாரு” என்று  அவள் முறுக்கி கொள்ள..

 

“மா.நான் இனிமே ஐஸ்கிரீம் சாப்பிட மாட்டேன் நம்பு” என்று அவள்  மீது குகன் சாய.

 

தன் மகனை தூக்கிக் கொஞ்சியவள்..” இப்ப மட்டும் நீ  உனக்காகவா வேணாம்னு சொல்ற. தேவுக்கு உடம்பு சரியில்லை என்றதால சாப்பிடாம இருக்க போற குள்ள வாண்டு  உன்ன பத்தி எனக்கு தெரியாது” என்று அவன் பட்டு கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்ச..

 

” அப்போ நானு “என்றான் வேலு..

 

“அது எல்லாம் உங்களுக்கே தெரியும். வீண் பிடிவாதம் பிடிச்சிட்டு இருக்கீங்க” என்று முகத்தை திருப்பினாள்.

 

“அ..அண்ணி..அ..அது “என்றவன் தடுமாற,

 

“இதுக்கு மேல என்ன டா சொல்லணும் கிளம்புங்க டா வந்து உட்கார்ந்துட்டு என் நேரத்துல “என்று வேலு புலம்ப.

 

கணவன் ,மனைவி இருவருக்கும் தனிமை கொடுத்து குகனை தூக்கிக்கொண்டு தேவ் நகர்ந்தான்..

 

இருவரும் சென்றதும், தன்னவளின் புறம் திரும்பிய, வேலு,”என்ன மேடம் கேட்டு நான் செய்யல?” என்றான் ஏற்ற இறக்கமாக, கதவை தாழ் இட்டுக்கொண்டு அவன் ஒரு மார்க்கமாக கேட்டுக் கொண்டே அவளிடம் நெருங்க..

 

” ஒன்னும் இல்ல  தூங்குங்க!”என்று திரும்பி படுத்துக் கொள்ள..

 

” என்ன பார்த்து பதில் சொல்லுடி!” என்று அவளை பின்பக்கம் இருந்து அணைத்தபடி ,அவள்  காது மடலை உரசியபடி கிசுகிசுக்க,

 

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று முகத்தை திருப்பினாள்.

 

“வேற என்னத்துக்கு குறைச்சல்!”என்றான் புருவத்தை உயர்த்தி, 

 

“குகனுக்கு வயசு ஆகிட்டே போகுது தானே! ஆனா ,”என்றவளின் வார்த்தை அவனது இதழுக்குள் அடங்கி இருந்தது .

 

சிறிது நேரத்திற்கு பிறகு, அவளை விடுவித்தவன்.” தானா இருக்கும் போது இருக்கட்டும். நான் என்ன வேணாம்னா சொல்றேன்”

 

அவனை முறைத்த வித்யா.”நீ தான் வேலு இப்போ வரை வேணாம்னு சொல்லிட்டு இருக்க.அதை மறந்துடாத”.

 

“நீ என்ன வேலுனு கூப்பிட்டாலே எனக்கு அடியில இருந்து மேல வரைக்கும் ஜிவ்னு ஏறுதுடி ” என்று அவள் நெற்றியில் படர்ந்த முடிக்கற்களை காதின் ஓரம் தள்ளிவிட்டு,விரல்களால் முகத்தில் கோலமிட..

 

அவன் கையை தட்டி விட்டவள். “ஆவுன்னா நான் இதைப் பத்தி பேச வந்தாலே, என்ன பேச விடாம வாயை அடைக்கிற போல ஏதாவது பண்றீங்க ” என்றாள் கோபமாக அதே சமயம் வேதனையாக..

 

” இப்போ ஒன்னும் அவசரம் இல்லடி “

 

“என்ன அவசரம் இல்லை! அத்தையும் பல வருஷமா கேட்டுட்டு இருக்காங்க”

 

” இப்ப உங்க அத்தை கேக்குறாங்க என்றதுக்காக குழந்தை பெத்துக்கணுமா டி”என்றான் எரிச்சலாக,

 

 

“ப்ச்! எனக்கும் தான் ஆசையா இருக்கு எனக்கும் குழந்தை வேணும்!”

 

“அதான் குகன் இருக்கானே! பின்ன என்ன?.. அது இல்லாம வளர்ந்த மாடு ஒன்னு இருக்கே அப்புறம் என்ன?”

 

“வேலு…”எரிச்சலில் பற்களுக்கு இடையில் வார்த்தையை துப்பினாள்.

 

“குகனே ஆப்ரேஷன் தாண்டி.எனக்கு அப்போ உன்ன அப்படி பார்த்ததில் இருந்து இன்னொரு குழந்தை பற்றி யோசிக்க முடியல டி புரிஞ்சுக்கோ”

 

“அதுக்குன்னு எத்தனை வருஷம்?”

 

” பொறுமையா பெத்துக்கலாம் டி .ஒன்னும் அவசரம் இல்லை. இன்னும் உனக்கும் வயசாகல. எனக்கும் வயசாகல “என்று சிரித்துக் கொண்டே அவள் காதில் சமரசம் பேசி.. எப்படியோ அவளை சரி கட்டி,தனக்கு தேவையானதையும் எடுத்துக்கொண்டு, அவளுக்கு தேவையானதையும் கொடுத்து அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் அவளவன்.

 

வித்யாவிற்கு முதல் பிரசவம் சிசேரியனாக இருக்க, அதுவும் பணிக்குடம் தண்ணீர் கம்மியாக இருக்கிறது என்று சொல்லி ஒன்பதாவது மாதம் ஆரம்பத்திலேயே ஸ்கேன் செய்ய சென்றிருந்தபோது, சிசேரியன் செய்திருக்க, ரத்தமும் கம்மியாக இருக்க, ரத்தம் ஏற்றி சிசேரியன் செய்யப்பட்டது.

 

அப்பொழுது அவள் பட்ட வலியையும் ,வேதனையும் உணர்ந்தவன். அடுத்த குழந்தைக்கு அவள் எவ்வளவு கெஞ்சியும், இப்பொழுது வரை  வேண்டாம் என்று வருடங்களாக தள்ளிப் போட்டுக் கொண்டே செல்கிறான்.

 

  அதும் இப்பொழுது இரண்டு வருடமாக வேலை வேலை என்று ஓடி அவள் தன் உடல் நலனை கவனிக்க தவறுகிறளோ ? என்ற எண்ணம் ஏற்பட்டு இரண்டு வருடங்களாக வேலைக்கும் போக வேண்டாம் என்றும் சொல்லிப் பார்த்து விட்டான் .

 

அப்பொழுது அவள் சண்டைக்கு வந்து நின்று விட்டாள்.” என்ன நினைச்சுட்டு இருக்கீங்க வேலு ? வேலைக்கு போகமா வீட்டோட இருக்க சொல்றீங்களோ ?”

 

” லூசு மாதிரி பேசாதடி உன்னை வேலைக்கு போக வேணாம்னு சொல்லல .ஆனா” என்று அவன் ஆரம்பிக்க..

 

“அப்ப என்ன  சொல்ல வரீங்க? நம்ம ஒன்னும் பரம்பரை பணக்காரங்க கிடையாது சரியா ? அன்ன அன்னைக்கு வேலைக்கு போன தான் சோறு.அதுக்கு தான் வேலைக்கு போறேன்.இன்னும் தேவுக்கு கல்யாணம் ஆகல, அத்தையும் அப்பப்ப கை, கால் வலிக்குதுன்னு படுத்துடுறாங்க,மாமா கால் வலியோட வீட்டுக்காக ஏதாவது வேலை செய்யணும் நினைக்கிறாரு இந்த வயசுல,உங்க ஒருத்தர் சம்பளத்தை வைத்து என்ன பார்ப்பீங்க? “

 

“தேவ் வேலைக்கு போறானே டி பின்ன உனக்கு என்ன பிரச்சனை?”

 

“அவன் வேலைக்கு போறான் தான் யார் இல்லனு சொன்னா,அவன் கல்யாணம் பண்ற வயசுல இருக்கான், அவனுக்கு பிற்காலத்தில் குடும்பம் புள்ள குட்டின்னு குடும்பம் பெருசாகும்,அது மட்டும் இல்லாம அவனுடைய லட்சியமும் நமக்கு தெரியும் இல்ல, பணம் செலவு பண்ணி படிக்க முடியாத பசங்களை படிக்க வைக்கணும்னு யோசிச்சிட்டு இருக்கான் இல்ல.. இதுக்கெல்லாம் எங்க இருந்து காசு வரும் ? மரமா வச்சிருக்கோம் பணம் காய்க்கிற மாதிரி”என்று எகிறி கொண்டு வந்தாள்.

 

“என்னால உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுடி “என்று அமைதியாக விட்டான் .

 

ஒருமுறை அவள் வேலை முடிந்து அசதியில் வந்து வீட்டு வேலைகளையும் செய்ய,தேவும்  இதே போல் கேட்டிருந்தான்.

 

“தேவ் வீட்டிலேயே என்னால அடஞ்சி இருக்க முடியாது, காலைல எப்படியும் எவ்ளோ மெதுவா செஞ்சாலும் பத்து பதினொரு மணிக்கு எல்லா வேலை முடிஞ்சிடும். இன்னும் சொல்லப்போனா நீங்க எல்லாம் வீட்டை விட்டு வெளியே போற நேரத்துக்கு முழுசா முடிஞ்சிடும்..அதுக்கப்புறம் பொழுதுக்கும் என்ன சும்மா வெட்டியா உட்காந்து இருக்க சொல்றியா ? நானும் என்னால முடிஞ்ச ஒரு சிறு உதவியாவது  செய்யணும்னு நினைக்கிறேன். தடுக்காதீங்க அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்” என்று அவன் வாயையும் அடைத்து விட்டாள்.

 

தனது மாமியார் ,மாமனாரிடமும் சென்று ,”நான் வேலைக்கு போறதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா ?”என்று கேட்டிருக்க,

 

இருவரும் ,”இல்லமா. இருந்தாலும்” என்று அவர்கள் பேச முற்பட,

 

“அத்தை வேலைக்கு போனா என்னால வீட்டு வேலை செய்ய முடியாதுன்னு யோசிக்கிறீங்களா?”

 

“நாங்க எப்போ வித்து மா அப்படி சொன்னோம். இப்போ வரைக்கும் காலையிலையும் சாயங்காலமும் எல்லா வேலையும் நீ தான இழுத்து போட்டு செய்யற ?நான் காய்கறி மட்டும் தான் நறுக்கி தரேன்”என்று அவள் தலையை வருடி விட்டார் தனம்.

 

அவளது கையைப் பிடித்துக் கொண்டு,” நீ வேலை செய்ய மாட்டேன்னு நாங்க சொல்லல வித்யா. ஆனா உனக்கு ரெஸ்ட் வேணும் இல்ல,அவன் பீல் பண்ற மாதிரி இப்ப எல்லாம் நீ ரொம்ப சோர்வா தான் இருக்க”

 

” அப்படி எல்லாம் இல்ல அத்தை”.

 

” அங்கயும் வேலை செஞ்சுட்டு வந்து, வீட்டிலும் நீ வேலை செய்யறது எனக்கே கஷ்டமா தான்  இருக்கு” 

 

“அப்படி எனக்கு எந்த கஷ்டமும் இல்லை அத்தை. குகனை நீங்க பாத்துக்குறீங்க அப்புறம் என்ன ? சொல்லுங்க”என்று அனைவரையும் சரி கட்டி வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள்.

 

குகன் பிறந்த இரண்டு வருடத்தில் எழிலுக்கு காலில் லேசாக பிராக்சர் ஆகி இருக்க,

 

அவர் ரொம்ப நேரம் நின்று கொண்டு இருக்க முடியாது. ஒரே இடத்தில் ரொம்ப நேரம் உட்கார்ந்து இருப்பதும் கடினம். என்பதால் மகன்கள் இருவரும் நாங்கள்தான் வேலைக்கு செல்கிறோமே நீங்கள் இனி செல்ல வேண்டாம் வீட்டில் இருந்து ஓய்வு எடுங்கள் என்று அவரை வீட்டில் இருக்க வைத்து விட்டான்கள்.

 

இப்பொழுது கொஞ்ச நாட்களாக தான் வீட்டில் சும்மா இருக்க முடியாமல், அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு அவர்களை சிரிக்க வைத்து மகிழ்ச்சியடைய வைப்பதற்காக ,சிறு சிறு கதைகள் காமெடிகள் சொல்லி அவர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார். பணத்திற்காக செய்யவில்லை. வீட்டிலும் இருக்க முடியாமல், பெரியவர்களுக்கு உதவிகரமாகவும் இருக்கும் அவர்களின் தனிமையை போக்கும் வண்ணமாகவும் இருக்கும் என்பதால் இச்செயலை செய்ய சொல்லி அவரின் மகன்களும், மருமகளும் தான் அவரை அனுப்பி வைத்தார்கள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
21
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment