நீல கண்களின் காதல் பயணம் 💙
கனமான கல்லை தூக்கி தன் தலை மேல் வைத்தது போல தலை பாரமாக இருந்தது கயல்விழிக்கு.
இதே போல் அவள் ஏற்கனவே மூன்று நான்கு முறை மயங்கியிருக்கிறாள் தான். ஆனால் அப்போதெல்லாம் இதுபோல் இருந்ததில்லை. ஆனால் இன்று தலைவலியின் உச்சத்தில் இருந்தது.
கம் போட்டு ஒட்டியது போல் இமைகள் இரண்டும் ஒட்டியிருக்க அதனை பிரித்து கண் திறப்பதற்குள் பாதி ஜீவன் போன உணர்வு.
கயல்விழி மெல்ல கண்களை திறந்து சுற்றி முற்றி பார்க்க, அங்கிருந்த பொருட்களை வைத்தும், தன் கைகளில் ஏறிக்கொண்டிருந்த குளுக்கோஸ் டிரிப்ஸ் வைத்தும், தான் இருப்பது மருத்துவமனை என்பதை புரிந்துகொண்டாள்.
என்ன நடந்தது என யோசித்தவளுக்கு நினைவுகள் மெல்ல வர தொடங்க, ஏதோ இருவரின் பேச்சி சத்தமும் அதை தொடர்ந்து கதவு திறக்கும் சத்தமும் வர, கயல்விழி திரும்பி பார்த்திட அசையா சிலையானால் அவள்.
கண்ணிமைக்க வில்லை, காதுகள் கேட்கவில்லை, எந்த பொருளும் அசைய வில்லை, எல்லாம் அவளை போல் உறைநிலையில் இருப்பதாய் அவள் பிம்பம். நடப்பது உண்மைதானா இல்லை என் கனவா என்று புரியாத நிலை அவளுக்கு.
ஏனெனில் அங்கு வந்துகொண்டிருப்பது இசை மற்றும் அர்ஜூன்.
அவன் இப்போது சாதாரணமாக இல்லையே,
தன் வேஷத்தை கலைத்த கள்வனின் இரு கண்களும் நீல நிறத்தில் பளிச்சென மின்னுகிறதே .
அவள் அருகில் வந்தவன்,
” ஹே விழி ஆர் யூ ஓகே? உனக்கு ஒன்னுமில்லையே?… கொஞ்சநேரத்துல என்னை ரொம்ப பயமுறுத்திட்டடி நீ. “
எவ்வித பதிலும் இல்லை அவளிடம். ஆனால் அவளின் கண்கள் மட்டும் அவன் கண்களை விட்டு அகலவே இல்லை.
” ஹே லூசு, என்ன அப்டி பாக்குற, சைட் அடிக்கலாம் அதுக்காக இப்படியா? ” என இசை அவளின் தலையில் தட்டிட நிகழ் உணர்ந்தவள்,
” அர்ஜூன் நீ….. உன்னோட….உனக்கு…”.
” என்னடி சொல்லவர, ஏதோ இன்ஸ்டால்மென்டல பேசுற மாதிரி கட் அடிச்சி சொல்ற?.. மண்ட கொலம்பிடுச்சா என்ன?”
“நீ ஏன் திடீர்னு கண்ணு கலர்லாம் மாத்திருக்க?”.
” கலரா?”
நிமிட நேர யோசனைக்கு பிறகுதான் புரிந்தது லென்ஸ் இல்லாமல் வந்திருப்பதை அவள் கேட்கிறாள் என்று.
“ஏன்? இது நல்லா இல்லையா?”
ஏதோ ஓர் வலி இருந்தது அவன் குரலில். திடுக்கிட்டவள் என்ன சொல்வதென தெரியாமல்
” இல்ல அர்ஜூன், உனக்கு ரொம்ப நல்லா இருக்கு.அதான் கேட்ட.” என்றவளுக்கு தெரியவில்லை இதுதான் அவனின் நிஜம் என்று.
இத்தனை நாள் பழுப்பு கருப்பு கலந்த கண்களை பார்த்தவளுக்கு இது பொய் என்றுதான் தோன்றியது.
இருப்பினும் உள்ளுக்குள் ஒரு குஷியான கூக்குரல் கொக்கரிக்க, இவன் அவனா இல்லை வேறொருவனா என்றே எண்ணியது மனம்.
” ம்ம்… சரி இப்போ எப்படி ஃபீல் பண்ற.. ஓகே வா.”
” ம்ம் .. பைன் அர்ஜூன்.”
” என்ன ஆச்சி? உன்னை அப்படி பார்த்ததும் உண்மையிலேயே பயந்துட்டேன். அடுத்து என்ன பண்றதுனே தெரியல. டோட்டல் பிளாங்க்.”
” சாரி பா…சடன்னா கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன். அப்பப்போ இப்படிதான் ஆகும்.”
” ஏன் இப்படி ஆகும்? உனக்கு என்ன பிரச்சனை”
” அதை மட்டும் கேட்காத, நேரம் வரும்போது நானே சொல்றேன். பிளீஸ் பா” என முட்டை கண்களை சுருக்கி அவள் கேட்டிட, மேலும் குழப்பமே அவனுக்கு.
எதையோ மறைகின்றாள் என்ற உணர்வு.
“உங்க கன்வர்சேஷன் முடிஞ்சதுனா நானும் கொஞ்சம் பேசலாமா?” என்ற இசை இருவருக்கும் நடுவில் வந்து நிற்க,
” கரடிக்கெல்லாம் இங்க இடம் இல்ல. வெளிய போறியா?.” என சொல்லி அறையினுள் நுழைந்தான் அகிலன்.
“அண்ணா இதெல்லாம் ரொம்ப மோசமாக்கும். உனக்கு இங்க எவ்ளோ உரிமை இருக்கோ அதே உரிமை எனக்கும் இருக்கு. அர்த்தமாய்யிந்தா கண்ணா?..” என இல்லாத சுடிதார் காலரை இசை தூக்கி விட அகிலன் அவளின் காதை திருகி
” உன்னோட சேட்டையெல்லாம் வீட்டுல வெச்சிக்கோ இது ஹாஸ்பிடல். ஒழுங்கா இல்லனா பேஷன்ட் ஆக்கி பெட்ல படுக்கவெசிடுவேன் ஜாக்கிரதை.” என்றான்.
இன்னமும் கயலின் பார்வை அர்ஜுனை விட்டு விலகாமல் இருக்க
” உங்க ரொமான்ஸ் எல்லாத்தையும் வீட்டுல வெசிக்கிறீங்களா? இது ஹாஸ்பிடல்.” என்ற அகிலன் கயலிடம் “உங்களோட medical reports எனக்கு வேணும்” எனக் கேட்டதும் ஒரு ஆழ்ந்த அமைதி அவளிடம்.
” எதுக்காக அகி எந்த பிரச்சனையும் இல்லன்னு சொன்ன” dடிஇதிரென ஒரு பதட்டம் அவனிடம்.
” ரிலாக்ஸா இரு அர்ஜூன் ஜெஸ்ட் ஒரு கிளாரிபிக்கேஷன் காக தான் கேட்கிறேன்”
” அதெல்லாம் வேண்டாம் டாக்டர்.நான் நல்லாதான் இருக்கேன். நோ தேங்க்ஸ் ” என்று சொல்லிய கயல் விறுவிறுவென வெளியேறி விட்டாள்.
இசை ” அண்ணா ஏன் அவளோட ரிப்போர்ட் கேட்கிற? எனிதிங் சீரியஸ்?” அவளிடமும் சற்று படபடப்பு இருந்தது.
” ஹே வாலு அதெல்லாம் ஒன்னுமில்ல. அப்பா கொஞ்சம் டீடெயில் சொன்னாரு அதான் கேட்டேன். ” ஆசுவாசமான காற்றை இப்போதுதான் வெளியே விட்டனர் இருவரும்.
பின் அகிலனுடன் பேசிவிட்டு வெளியே வரவும் கயல் அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அர்ஜூன் ஆட்டோவில் வந்ததால் அவனின் வண்டி கல்லூரியில் இருந்தது. இசையிடம் கயலை வீட்டிற்கு “அழைத்து செல்” என்று பொறுப்பை அவளிடம் ஒப்படைக்க, வெகுவாக தயங்கினாள் இசை.
அதற்கும் காரணம் உண்டு. ஏனெனில் கயலை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டுமென அவளின் தந்தை கூறிய அனைத்தும் இப்போது அவளை தனியாக அழைத்து செல்வதில் தயங்க வைத்தது.
அர்ஜூன் அலைபேசி தான் இருக்கிறேன் என்று உணர்த்திட எடுத்து காதில் வைத்த 2 நிமிடத்தில் அங்கு என்ன சொல்லப்பட்டதோ
” இசை நீ இங்கேயே இரு நான் கயலை வீட்டுல விட்டுட்டு வந்துடுறேன்.” என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்துகொண்டு அவளுடன் கிளம்பிவிட்டான்.
“ஏன் டென்ஷன் ஆ இருக்க. உனக்கு என்ன பிரச்சனை? ஆமா இது என்ன கோலம்” என்றால் அவனின் பதட்டத்தை போக்கும் பொருட்டு.
” அதை நான் கேட்கணும், மனுஷனை பதறவிட்டுடு நீ கூலா இருக்கியா?, ஆமா நான் என்ன ஜோக்கர் மாதிரியா இருக்கேன்? என்ன கோலம் nu கேட்கிற, நீ இருந்த கோலத்தை நினைச்சா தான் இன்னும் கைகாலெல்லாம் நடுங்குது.”
” சாரி. ரொம்ப பயந்துடிங்களா? அது…..வந்து… கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன் அதான்.”
” நல்லா ஆன போ, பிரபுவ பறக்க விட்ட விழி இது இல்லையே, காலைல அடிச்சி பறக்கவிடுற, ஈவினிங் மயங்கி பெட்ல சேர்ந்திருக்க, உன்ன புரிஞ்சிக்கவே முடியலையே.”.
” அது இருக்கட்டும் என்ன திடீர்னு கண்ணுல கலர் எல்லாம் மாத்திருக்க. ப்ளூ லென்ஸ் ஏன் செலக்ட் பண்ண?”
” ஏன் உனக்கு பிடிக்கலையா? திரும்ப திரும்ப ஏன் அதையே கேட்கிற?”
“அச்சோ அப்படி இல்லை, எனக்கு ப்ளூ ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்களுக்கும் ரொம்பவே நல்லா இருக்கு.” கடைசி வரையில் மட்டும் இருந்த தடுமாற்றத்தை அவன் உணர்த்துக் கொண்டானோ என்னவோ சில்லென சிலிர்ப்பு அவனிடம்.
வீடும் வந்துவிட்டது அவளை இறக்கி விட்டவன், “பத்திரமா இரு” என்று சொல்ல ,
“உள்ள வாங்க.” என அழைத்தால் கயல்.
” இப்போ வேண்டாம். இசை இருக்கும்போது ஒருநாள் கண்டிப்பா வரேன்.” என்றவன் திரும்பி சென்றுவிட்டான்.