இப்பொழுது இருவரையும் பார்த்த ரியா”ஹே தேவ்! என்றவள் ..
“நான் உங்களை தேவ்னு கூப்பிடலாம் இல்ல “என்றாள் சிரிப்புடன்..
அவனும் புன்னகை முகத்துடன்.. “கூப்பிடலாம் ஒன்னும் பிரச்சனை இல்லையே!”
அவள் கையில் கிள்ளிய மித்ரா. “இது என்னடி பழக்கம். வயசுல பெரியவங்களை பேர் சொல்லி கூப்பிடறது”
“மிஸ்! நானே தேவை பெயர் சொல்லி தான் கூப்பிடுறேன். இவங்க என்ன விட பெரியவங்க தான இதுல என்ன இருக்கு?” என்று முந்திக்கொண்டு பெரிய மனிதன் போல குகன் தலையை ஆட்டி ஆட்டி கேட்க..
ரியா சிரிக்க …இப்பொழுது கண்டிப்பான ஆசிரியராக ..”குகன்” என்றாள்..மித்ரா
” ஹலோ மிஸ் கிளாஸ் ரூம்ல மட்டும் மிஸ் மாதிரி நடந்துக்கோங்க. வெளிய வந்ததுக்கப்புறம் அவன் உங்க ஸ்டூடண்டா இருந்தாலும் அவன் என் பையன் மறந்துடாதீங்க “என்றான் இப்பொழுது தேவ் மிரட்டுவது போல் …
கலகலவென்று சிரித்து ரியா! “ஹேய் தினமும் உங்களுடைய இந்த மாதிரி பேச்சு வார்த்தையே மித்ரா மூலமா கேட்டு கேட்டு பழகின எனக்கு நேர்ல பார்க்கும்போது அவ்வளவு ஜாலியா இருக்கு “என்று குதுகலிக்க..
இப்போது மித்ராவை பார்த்து முறைத்து பார்த்தான்,’எல்லாத்தையும் அவ கிட்ட உளருவியா டி ‘என்பது போல் இருந்தது அவன் பார்வை..
ரியா தான்..” சாரி சாரி அவளுக்கும் ,எனக்கும் பெருசா எந்த ஒளிவு மறைவும் கிடையாது. ரெண்டு பேரும் ரொம்ப கிளோஸ், அக்கா, தங்கச்சியை தாண்டி பிரண்ட்லியா தான் பேசிப்போம். சோ உங்கள பத்தி எனக்கு தெரியும். அதனால தான் நான் உங்க கிட்ட சகஜமா பேசினேன். தப்பா எடுத்துக்காதீங்க அவளை”..
குகன்,” அப்ப நீங்க என்ன எப்படி கூப்பிடுவீங்க?” என்றான்..
“வாவ் பாரு டா குட்டி கண்ணனை “என்று முத்து பற்கள் தெரிய சிரித்தவள்..”குகன் குட்டியை எப்படி கூப்பிடணும் சொல்லுங்க அப்படியே கூப்பிடலாம்” என்றாள்..
” நீங்க என்ன குகன்னே கூப்பிடுங்க!. நான் உங்களை எப்படி கூப்பிட?”என்றான் கன்னத்தில் கை வைத்து யோசிப்பது போல்..
“உனக்கு எப்படி கூப்பிட புடிச்சிருக்கோ, அப்படி கூப்பிடு..”
அவனோ,வேகமாக “ரியானு கூப்பிடுறேன்.உங்க பேரு பிரியா தானே!”என்றான் கண் சிமிட்டி ..
அவனை அள்ளி எடுத்து கொஞ்சியவள்.. தூக்கிக் கொண்டு “உனக்கு என்ன வேணும் சொல்லு. நான் வாங்கி தரேன் “
“இல்ல வேணாம் ரியா”என்ற தேவை பார்த்து புன்னகைத்தவள்.
“ஏன் தேவ் நாங்க எல்லாம் அவனுக்கு எதுவும் வாங்கி தர கூடாதா?”என்றாள் கேள்வியாக..
அவனும் வேகமாக, தேவை முறைத்துவிட்டு,” எனக்கு ஐஸ்கிரீம் வேணும் ரியா” என்றான் பட்டென்று..
தேவ், அவனை முறை, “என்னடா பழக்கம் இது” என்றான் பற்களை கடித்துக் கொண்டு,
“சின்னப் பையன் தானே! ஒரு நாள் தானே சாப்பிட போறான்”
மித்ராவும், ‘குகன் தங்களிடம் கேட்பதால் தான் அவனை திட்டுகிறான் என்று எண்ணி “ஏன்?தேவ் நாங்க அவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி தர கூடாதா ?”என்றாள் கண்களை சுருக்கி,
“நீங்க அவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருவதால் ஒன்னும் இல்ல ராங்கி. ஆனா..” என்றவனின் வார்த்தை அருகில் உள்ள ரியாவால் தவிர்க்கப்பட்டு “இ..இல்ல மிஸ்” என்றான் .
சிரித்த ரியா, “நீங்க ராங்கினே சொல்லலாம்” என்றாள் சிரிப்புடன்..
அவன் அதிர்வாக அவளை பார்க்க. கண்சிமிட்டி ,”எனக்கு அதுவும் தெரியுமே!” என்றாள் தலை சாய்த்து..
அவளது வார்த்தையில் புன்னகைத்தவன். மித்ராவை முறைத்து விட்டு ,”இல்ல வேணாம் ரியா அவனுக்கு வீசிங் ப்ராப்ளம் இருக்கு.லைட்டா கோல்டு கூட இருக்கு அதான்”..
“ஒருநாள் ஐஸ்கிரீம் சாப்பிடறதால ஒன்னும் ஆகாது தேவ்..ஹாட் வாட்டர் குடிச்சா பெருசா ஏதும் பிராப்ளம் ஆகாது என்றவள்.நீ என்ன குகன் சொல்ற ?”என்று அவனிடம் வினா தொடுக்க..
குகன் தேவை பார்த்தான். அவன் வேண்டாம் என்பது போல் குகனிடம் தலையசைக்க..
” ப்ளீஸ் தேவ்!ஒரு நாள் சாப்பிடுவதால் ஏதாவது ஆயிடுமா? ரியா சொல்ற போல ஹாட் வாட்டர் குடிக்க வைக்கலாம். ஒன்னும் பிரச்சனையாகது தேவ்”..
“இ…இல்லை “என்று தேவ் ஆரம்பிக்கும் முன்,
“வீட்டில் ஏதாவது பொய் சொல்லி சமாளிச்சுக்கலாம் தேவ்” என்றான்.. அவனுக்கு முன்பாகவே குதுக்கலித்துக் கொண்டு குகன்.
அவனை முறைத்துக் கொண்டு நிற்க.
அப்பொழுது அவன் போன் அலறியது ..
அவனை முறைப்புடன் பார்த்துவிட்டு,போனை அட்டென்ட் செய்ய ..
அடுத்த நொடியே,அது வீடியோ கால் ஆகி இருந்தது ..தன் தலையில் கை வைத்துக் கொண்டான் ..
“நினைச்சேன் டா. ரெண்டு பேரும் வராம இருக்கும்போதே” என்றாள் அந்த பக்கம் வித்யா ..
“இ..இல்ல அ…அண்ணி! அ..அது “என்று அவன் தடுமாற,
” எங்கடா அவன் …நீ மட்டும் இருக்க?”
“இங்க தான் இருக்கான் அண்ணி”என்று அவன் புறம் போனை திருப்ப..
ஒரு சில நொடி குகனை தூக்கி வைத்துக் கொண்டு இருந்த ரியாவை குறுகுறுவென பார்த்த வித்யா ஏதோ பேச வாய் திறக்க…
அவளின் எண்ணம் புரிந்தவன்..வேகமாக போனை தன் பக்கம் திரும்பி…”அவங்க குகன் கிளாஸ் மிஸ் மித்ரா ஓட தங்கச்சி பிரியா அண்ணி” என்றான் அவரசமாக..
இங்கு ,பிரியா வாய்க்குள் தன் சிரிப்பை அடக்கி கொண்டாள்.
அவளுக்கு புரிந்து போனது.. மித்ராவை தேவின் அண்ணிக்கு தெரிந்திருக்கிறது.. என்று,ஆகையால் தான் இவ்வளவு அவசரமான வார்த்தை என்றும்..
ஆனால் ,புரியாத பார்வையுடன் மித்ரா தான் அவனைப் பார்க்க..
இப்பொழுது சங்கடமாக அவளை பார்த்தான்..
“ஓ! குகன் மிஸ் ராங்கியோட தங்கச்சியா?” என்று அவள் இழுத்து கேட்க..
இப்போது ,”நாக்கை கடித்துக் கொண்டு போட்டு கொடுத்துட்டீங்களே அண்ணி” என்றான் ..
இப்பொழுது அவள் குற்றம் சாடினாள் ..’அப்போ நீயும் வீட்ல போய் உங்க அண்ணிகிட்ட தினமும் அனைத்தையும் ஒப்புவித்துக் கொண்டு தானே இருக்கிறாய் ? ‘என்பது போல் ..
அவன் ஒற்றைக் கண்ணை சுருக்கி ..”சாரி” என்பது போல் ஒற்றை காதில் கை வைத்து சொல்ல ..
“என்னடா பண்றீங்க இன்னமும் ரெண்டு பேரும் ..தேவ் இன்னைக்கு உங்க அண்ணன் வந்துருவாரு, நீங்க வர்றதுக்குள்ள.. ஏதோ மாமா இல்ல ..அதனால தப்புச்சாச்சு, ப்ளீஸ்டா சீக்கிரம் வந்து சேருங்க, உன்கிட்ட டெய்லி முடியல, நான் தான் மாட்டிட்டு முழிக்கிறேன் உங்களால”
” இல்ல அண்ணி சீக்கிரம் வந்துடுவேன் இதோ கிளம்பிட்டேன்”என்றான்..
அப்போது,அவனது பின்பு வந்து நின்று ஸ்கிரீன்ல தெரியும் வித்யாவிடம்..ரியா..” அக்கா ஒரு டென் மினிட்ஸ் ஆகும் அவங்க இங்க இருந்து கிளம்ப..அதுவரை எப்படியாச்சும் உங்க ஹஸ்பண்ட்டை ..என்றவள் டார்லிங்கை சமாளிங்க”என்றாள்.
“ஓய்! யாருக்கு யார் டார்லிங் ?”என்று வித்யா சண்டைக்கு வருவது போல் புன்னகையுடன் அவளை குறுகுறுவென பார்க்க ..
அவளும் கண் சிமிட்டி,”என்னோட டார்லிங் ..எனக்கு டார்லிங்..”என்று சிரித்தாள்…
“அது சரி.. “என்று புன்னகைத்த வித்யாவும்..சீக்கிரம் அனுப்பி விடுங்க” என்று ஃபோன் வைத்து விட்டாள்.
இப்பொழுது, மித்ரா ரியாவை முறைக்க..
“இது என்ன பழக்கம் ரியா? “என்றாள் கோபமாக ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது இடையே புகுந்து அவள் பேசுவது தவறு என்பதை சுட்டிக்காட்டி..
ரியாவோ,அசட்டையாக தோலை குலுக்கி விட்டு ,”நான் பேசுனதுல அவங்களே தப்பா எடுத்துக்கல நீ ஏன் துள்ளுற”
இப்போது மித்ராவின் முறைப்பு தேவிடம் தாவியது ..
அவனும் தோலை குலுக்க ,
ரியா மித்ராவிடம் குகனை கொடுத்துவிட்டு தானே அனைவருக்கும் ஐஸ்கிரீம் ஃபலூடா என்று ஆர்டர் செய்து கொண்டு வந்தாள்..
” இல்லை எனக்கு வேண்டாம் என்றான் தேவ்…
“ஏன் தேவ்..வேணாம்னு சொல்றீங்க?”
‘ எனக்கு தலைவலிக்கிது ‘ என்று எப்படி சொல்வது என்று சங்கடமாக உணர்ந்தவன்..” சரி “என்று சாப்பிட செய்தான்.
சொன்னது போல், குகனுக்கு ஹாட் வாட்டர் அங்கே வாங்கி கொடுத்திருந்தார்கள்.
நேரமாவதை உணர்ந்து , சொல்லிக்கொண்டு ஆளுக்கு ஒரு புறம் வீட்டிற்கு கிளம்பினார்கள் .
இருவரும் வீட்டிற்கு செல்லும் பொழுது ,ஹாலில் டிவி ரிமோட்டை கையில் தட்டிக்கொண்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான் வேலு.
” போச்சு! உங்க அப்பா வந்துட்டாரு டா, இன்னைக்கு” என்றான் தேவ்..
தன் தந்தையை பார்த்தவுடன் தப்பித்து ஓட அவன் முயல,
அவனை எட்டிப் பிடித்தவன்.
“படவா! வேணாம் வேணாம் என்று சொல்ல,கேட்கத் தெரிந்தது இல்ல..இப்போ மரியாதையா வா, அப்படியே உங்க அப்பா கிட்ட என்ன மட்டும் கோர்த்து விட்டுட்டு நீ எஸ்கேப் ஆகலாம்னு பிளான் பன்றியா ?விடமாட்டேன் வாடா மகனே!”என்று அவனை இழுத்துக்கொண்டு தன் அண்ணன் இருக்கும் இடம் வந்து நிற்க ..
“எவ்வளவு சொன்னாலும் திருந்தவே மாட்டீங்க இல்லடா”..
” அ..அது “என்று தேவ் பேச முயல..
“பல நாள் சொல்லியாச்சு, அவனுக்கு வீசிங் ப்ராப்ளம் இருக்கு ,அப்பா ஒன்னும் விளையாட்டுக்கு சொல்லல, எதையாவது செஞ்சு அப்பா கிட்ட தினமும் திட்டு வாங்கல என்றால் உனக்கு தூக்கம் வராதா?”
“ஆமாமா .. நான் அமைதியா இருந்தாலே உங்க அப்பா திட்ட தான் போறாரு ,உங்க அப்பாவுக்கு தான்டா என்னை திட்டலனா தூக்கம் வராது.இன்னைக்கு அந்த மனுஷன் வீட்டுல இல்ல..இன்னைக்கு அந்த மனுஷன் வேலையை நீ எடுத்துக்கிட்ட அவ்வளுவு தான்” என்று தேவ் தோலை குலுக்க,
“இனி இவனை உன் கூட ஸ்கூலுக்கு அனுப்பக்கூடாது, நானே கூட்டிட்டு போகணும்னு நினைக்கிறேன்.. உன் கூட சேர்ந்து இவனும் வர வர கெட்டு போறான்..”
குகன் அவனை பாவமாக பார்க்க..
குறும்பு புன்னகையுடன்.. கள்ள சிரிப்பை உதட்டில் தேக்கி ,நாக்கை உள் கன்னத்தில் வைத்து ஒற்றை கண் சிமிட்டி,” கூட்டிட்டு போங்க எனக்கு என்ன வந்துச்சு? உங்க பையன் நீங்க கூட்டிட்டு போக போறீங்க? உங்க ஆபீஸ் ஒரு மூலையில இருக்கு,இவன் ஸ்கூல் ஒரு மூலையில இருக்கு. இங்க இருந்து நீ கெளம்பி ,ஸ்கூல்ல இவனை கொண்டு போய் விட்டுட்டு, நீ அதுக்கப்புறம் ஆபீஸ் போயி..போற வழியில டிராபிக் வேற சிக்னல் விழ “என்று அவன் இன்னும் சொல்லி கொண்டு செல்ல..
” போதும் நிறுத்து !” என்றான் வேலு…
வித்யா வாய் விட்டே சிரிக்க ..
தேவ் பேசியதில் மூச்சு வாங்க தனது அண்ணனை பார்த்துக் கொண்டு நிற்க.
வேலு தன்னவளை முறைத்தவன்..
” அவனுக்கு சப்போர்ட் பண்ணி பல்ல காட்டுடி” என்றான் பற்களுக்கு இடையில் வார்த்தைகளை துப்பினான் ..
அவள் அப்பொழுதும் அவனைப் பார்த்து சிரித்துவிட்டு திரும்பிக் கொள்ள ,
“இவனுங்க கெட்டுப் போறதுக்கு முழு காரணம் நீ தாண்டி”
” எதே நானா? நான் என்ன பண்ணேன்.. உங்க தம்பி, உங்க பையனை வெளிய கூட்டிட்டு போனா, அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்”…
“ஓ ! என் பையன் ..என் தம்பி! இப்போ மட்டும்…அது சரி”..
வேலுவின் சலித்துக் கொள்ளும் விதத்தில்,சித்தப்பனும், மகனும் சிரித்து விட்டார்கள்.
வித்யாவும் உடன் சேர்ந்து சிரிக்க..
“ச்சை! இவனுங்கள எப்படி தான் சமாளிக்கிறதுனு தெரியல” என்று புலம்பிக்கொண்டே தலையில் அடித்துக் கொண்டு உட்கார்ந்தவன்..
” ஐஸ்கிரீம் இல்ல ,கூலிங்கா எதும் சாப்பிட்டு தொலையில இல்ல.. என்னால ராத்திரி நேரத்தில இவனை இழுத்துட்டு அலைய முடியாதுடா ..உன் அண்ணி என்ன தான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணி இவ்வளவு பேசினாலும், இவனுக்கு ஒன்னுன்னா முதல்ல துடிக்க போறது அவ தான் டா..வீசிங் வந்தா எப்படி இருப்பான்னு உனக்கே தெரியும். இந்த விஷயத்துல மட்டும் நீ விளையாட மாட்டேன்னு நம்பிக்கை இருக்க போய் தான் அமைதியா இருக்கோம் நானும் ,அப்பாவும்.. “
இவ்வளவு நேரமாக சிரித்த முகமாக வேலுவிடம் வம்பு இழுத்து கொண்டிருந்தவன்..அவனது கடைசி வார்த்தையில் தேவுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது..