அவர்கள் வாழ்க்கை இதே போல் தான் செல்ல ஆரம்பித்தது… வீட்டில் அனைவரும் அவள் மீது பாச மழையை பொழிய வாசுவோ அவளை நெஞ்சில் வைத்து தங்கினான்… இதுவரை அனுபவிக்காத பாசத்தை அவளால் எப்படி அனுபவிக்க வேண்டும் என்றே அவளுக்கு தெரியவில்லை… அவர்களின் பாசத்தில் அவள் தான் திக்குமுக்காடி போவாள்…
ஆனால் அவளுக்கு ஒன்று மட்டும் புரியாது… இரவு உறங்கும் போது அவளுடன் இருப்பவன் அவள் உறங்கிய பின் அவள் அருகில் இல்லாதது ஏன் என்று தான் அவளுக்கு தெரியவில்லை… அவனிடம் கேட்க தான் அவளுக்கு தயக்கமாக இருந்தது… ஒரு பதினைந்து நாள் இப்படியே இப்படியே செல்ல அவளின் குழப்பம் தான் தீர்ந்த பாடு இல்லை..
அவளின் முகத்தில் உள்ள குழப்பத்தை பார்த்த வாசு அன்று இரவு உறங்கும் போது “அம்மு என்ன கேட்கனும்… ஏன் என் முகத்தை பார்த்துட்டு இருக்க… எதுவா இருந்தாலும் வாயை திறந்து கேளு அம்மு..” என்று அவளை பார்த்து மென்மையாக கேட்டான்…
அவளோ “அ..அது ஏன் இங்க தூங்க மாட்டிங்குறீங்க.. நான் தூங்குற வர இங்க இருந்துட்டு நான் தூங்குறதும் உள்ள போய் தூங்குறீங்க… என்னை பிடிக்கலயா” என்று கேட்டாள்…
அவள் கேட்பது அவனுக்கு சந்தோசமாக இருந்தாலும் அவளின் மனநிலையை உணர்ந்து “அம்மு நீ இன்னும் சின்ன பிள்ளை தான் நமக்கு இன்னும் டைம் இருக்கு.. கொஞ்ச நாள் நாம புரிஞ்சிக்கலாம்… அது வரைக்கும் நமக்குள்ள இந்த கேப் எப்பயும் இருக்கும்… ஆனா என்னோட ஹக் அப்றம் குட்டி குட்டி முத்தம் இருக்கும்.. அதை மட்டும் பொறுத்துக்கோ இப்ப போய் தூங்கு அம்மு…” என்று கூறி அவளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு உறங்க சென்றுவிட்டான்..
அவளுக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை… அவள் அமைதியாக சென்று உறங்கி விட்டாள்… அடுத்த நாள் காலை விடிந்த பின்பும் சைந்தவி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க மற்றவர்கள் எழுந்து அவரவர் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தனர்…
அப்போது வசந்தி கொஞ்சம் தயக்கமாக உள்ளே நுழைந்தார்… முதலில் வாசு தான் பார்த்தான்… பார்த்ததும் கோவத்துடன் அருகில் இருந்த பிளவர் வாஷை போட்டு உடைத்தான்… அந்த சத்தத்தில் வேகமாக வெளியில் வந்த இளவரசி அங்கு தயக்கமாக நின்று இருந்த வசந்தியை பார்த்து வரவேற்க கூட தோணாமல் அமைதியாக நின்றுவிட்டார்.
வசந்தி இளவரசியிடம் சென்று “எல்லா தப்பும் என் பெரிய பொண்ணு மேல தான்.. அவளுக்காக என்னை மன்னிச்சுடுங்க… அவளை இனிமே நான் பாத்துக்குறேன்.. இந்த ஒரு தடவை மட்டும் அவளை மன்னிச்சிடுங்க.. அவ இனிமே எந்த தப்பும் பண்ணாம நான் பாத்துக்குறேன்…” என்று கூறி இளவரசியின் முகம் பார்த்தார்…
ஆனால் அவரின் முகமோ இறுகி இருந்தது… இளவரசி அவரிடம் “எப்படிங்க அவளோ ஈஸியா மன்னிக்க சொல்றிங்க… உங்க பெரிய பொண்ணு பண்ணது சின்ன விஷயமா… சொந்த தங்கச்சியை கடத்த சொல்லி இருக்கா… கொலை பண்ண சொல்லி இருக்கா அதை எப்படிங்க மனசாட்சி இல்லாம மன்னிக்க சொல்றிங்க… ஒரு நல்ல அம்மாவா இருந்தா உங்க பெரிய பொண்ணை போலீஸ்ல ஒப்படைச்சு இருக்கணும்… நீங்க இங்க வந்து மன்னிப்பு கேட்குறீங்க… சைந்தவி உங்க சொந்த பொண்ணு தானு… ஏங்க அவளை இப்படி வெறுத்து ஒதுக்குறிங்க… ஆனா உங்களை திட்டவும் முடியல… தயவு செஞ்சு கிளம்பிடுங்க… சைந்தவி இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிட்டு வரா..அவ வரதுக்குள்ள கிளம்பிடுங்க… அவளே கொஞ்சம் கொஞ்சமா மாறுவா… அப்போ நாங்க மன்னிக்குறோம்… இப்போ கிளம்பிடுங்க..” என்று கோவமாக கூறி முடித்தார்…
வசந்தி எதுவும் செய்ய முடியாமல் திரும்பி சென்று விட்டார்…. ஆனால் இளவரசி கேட்டது போல் சஹானாவை தண்டிக்க அவர் நினைக்கவில்லை… அவருக்கு அவளை காப்பாற்ற வேண்டும் எண்ணம் மட்டுமே இருந்தது….
வசந்தி சென்று சிறிது நேரம் கழித்து தான் சைந்தவி எழுத்து குளித்து வந்தாள்…அவள் வந்ததும் நால்வரும் அமர்ந்து காலை உணவை உண்டு விட்டு சக்ரவர்த்தியும் வாசுவும் வேலைக்கு செல்ல மாமியாரும் மருமகளும் கொஞ்ச ஆரம்பித்து இருந்தனர்…
இப்படியே நாட்கள் செல்ல ஒன்றரை வருடம் சென்று இருந்தது… திவ்யா ஆசிரியர் போட்டி தேர்வில் வெற்றி பெற்று திருச்செந்தூரில் வேலையில் சேர்ந்து இருக்க திலீப் அரசு மருத்துவராகி அரசு மருத்துவமனையில் சேர்ந்து இருந்தான்…
சஹானா அதில் இருந்து கொஞ்சம் தெளிந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்த இருக்க வாசுவிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி இருந்தாள்.. அவனின் நெருக்கம் அவளுக்கு பழகி இருந்தது.. முதலில் கொஞ்சமாக பழகியவள் நாட்கள் செல்ல செல்ல அவனில்லாமல் அவளால் இருக்க முடியாத நிலை வந்து இருந்தது…
இதற்கிடையில் சஹானா திருந்துவது போல் நடிப்பை போட்டு தன்னை நல்லவள் போல் காட்டி கொண்டு இருந்தாள்… இளவரசியே நம்பிவிட்டார் என்றால் பாருங்களேன்… வசந்தி இரண்டு நாள் ஊருக்கு செல்ல வேண்டியது இருந்தது… அதற்கு முதல் நாள் தனக்கு உடம்பு சரி இல்லை அவளால் தனியாக இருக்க முடியாது என கூறி வாசுவின் வீட்டிற்கு வந்துவிட்டாள்… முதல் நாள் இரவு நல்லவள் போல் இருந்தவள் அதன் பின் தன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டாள்…
யாருக்கும் தெரியாமல் சிறு சிறு வேலைகளை செய்து சைந்தவியை வாட்டி கொண்டு இருந்தவள் யாரும் இல்லாத போது குழந்தையை பற்றி பேசி அவள் மனதை களைத்து வீட்டை விட்டு அனுப்பியது எல்லாம்…
தற்போது இதை எல்லாம் நினைத்து பார்த்த வாசு தன்னவளை இறுக்கி அணைத்து கொண்டான்…. அந்த இறுக்கம் தந்த வழியில் மெல்ல கண் திறந்த சைந்தவி “மாமா வலிக்குது… ஏன் இந்த இறுக்கம்… என்ன கோவம்..” என்று கேட்டு அவன் சுருங்கிய நெற்றியை நீவி விட்டவாறு கேட்டாள்..
“ஒன்னும் இல்லை அம்மு சின்ன டென்ஷன் வலிக்குதா.. சாரி சாரி அம்மு… என்று கூறி அவளின் உச்சியில் முத்தமிட்டு குளியலறைக்கு சென்றுவிட்டான்..
சைந்தவி தான் போகும் அவனை யோசனை போங்க பார்த்து கொண்டு இருந்தாள்… நேற்று இரவே தங்கள் வீட்டிற்கு வரதராஜன் வீட்டில் இருந்து தங்கள் வீட்டிற்கு வந்து இருந்தனர்… இரவு உறங்கும் போது கூட அவனின் முகத்தில் இந்த இறுக்கம் இல்லை… ஆனால் தற்போது அவன் முகத்தில் இருந்த இறுக்கம் அவன் எதையோ நினைத்து வருந்தி கொண்டு இருக்கிறான் என அறிந்து அவனை மேலும் அதை கேட்டு வருத்தப்பட வைக்க கூடாது என அதை கேட்காமல் விட்டு விட்டாள்…
அவன் வரும் வரை பால்காணியில் நின்று இருந்தாள்… அவன் வந்ததும் குளியலறை சென்று குளித்துவிட்டு உடை மற்றும் அறைக்கு சென்று ஒரு காட்டன் புடவையை எடுத்து அழகாகி அதை உடுத்தி தலையை துவட்டியவாறு வெளியில் வந்தாள்… முடியை ஒரு கிளிப்பில் அடக்கி விட்டு கீழே ஹாலிற்கு வந்து இளவரசிக்கு காலை உணவு செய்ய உதவி செய்து விட்டு உணவு தயாரானதும் நால்வரும் அமர்ந்து சாப்பிட தயாரானார்கள்… இளவரசி அவளுக்கு ஊட்டி விட்டு கொண்டே தானும் சாப்பிட்டார்…
சைந்தவி இன்று முதல் கல்லூரி பொறுப்பை அவள் பார்த்து கொள்வதால் நால்வரும் தயாராகி கிளம்பினர்… இளவரசி சைந்தவியை கல்லூரியில் விட்டவர் அவளுடன் சிறிது நேரம் இருந்து விட்டு பள்ளிக்கு கிளம்பிவிட்டார்…
சைந்தவிக்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது… அவள் படித்த கல்லூரி தான் ஆனால் அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது… அவளுக்கு சொல்லி கொடுத்த ஆசிரிய ஆசிரியைகள் தான்.. இருந்தும் இதுவரை அவர்கள் சொல்லி கொடுத்து இவள் கேட்டு கொண்டு இருந்தவள் இப்போது இவள் உத்தரவு இடும் இடத்தில் இருக்கிறாள்… கண்டிப்பாக ஈகோ பிரச்சனை வரும் என்பது அவளுக்கு தெரியும்… அதை எல்லாம் சமாளித்து வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று உறுதி எடுத்து கொண்டு தன் பணியை ஆரம்பித்தாள்…
(அப்டியே படிச்சிட்டு லைக் அன்ட் கமெண்ட் பண்ணிட்டு போனா சூப்பர் ஹீரோ ஹாப்பி அண்ணாச்சி)