ஒரு வழியாக வாசுவும் சைந்தவியும் திருச்சி வந்து சேர முதலில் அவளை ஹாஸ்பிடல் அழைத்து சென்று அவளுக்கு சிகிச்சை அளித்து அதன் பின்னர் தான் வீட்டிற்கு அழைத்து வந்தான்… அவர்கள் வந்ததும் அவர்களை வெளியில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து அதன் பின் தான் இருவரையும் இளவரசி உள்ளே விட்டார்…
ஹாஸ்பிடல் சென்று வந்ததால் சைந்தவியை ஒரு அறைக்கு சென்று குளித்து விட்டு வர கூறி அவளை அனுப்பி வைத்தார்… அந்த நேரத்தில் வாசுவும் குளித்து வர இருவரையும் அழைத்து கொண்டு பூஜை அறை சென்று விளக்கு ஏற்ற கூறினார்…
முதலில் தயங்கிய சைத்து வசுவின் பார்வையிலும் இளவரசியின் சந்தோச பார்வையிலும் வீட்டில் உள்ளோர் முகத்தில் தெரிந்த ஆசை பார்வையிலும் சாமியை நன்றாக வணங்கி விட்டு விளக்கை ஏற்றினாள்…
அவள் வணங்கி விட்டு வந்ததும் இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்து சாப்பிட வைத்தனர்… அதன் பின் கொஞ்ச நேரம் இருவரையும் உட்கார வைத்து கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருந்தவர்கள் சைந்தவியின் முகத்தில் தெரிந்த சோர்வில் அவளை உறங்க கூறினர்…
சைந்தவி எங்கு உறங்க வேண்டும் என தெரியாமல் முழித்து கொண்டு நிற்க வாசு அவளை அலேக்காக தூக்கி கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்… அனைவரும் கண்டும் காணாமல் இருந்து விட்டனர்…
ஆனால் சைந்தவிக்கு தான் கூச்சம் பிடிங்கி தின்றது… அவன் அனைவரின் முன்பும் இப்படி தூக்கி கொண்டு வருவான் என அவள் எதிர்பார்க்கவில்லை…. அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை… அவனிடம் கேட்கவும் முடியவில்லை… அவன் அறையில் விட்டதும் விட்டால் போதும் என தூங்க சென்றுவிட்டாள்… போர்வையால் முழுவதும் போர்த்தி கொண்டு தூங்குவது போல் நடித்தவள் சிறிது நேரத்தில் நன்றாக உறங்கி இருந்தாள்…
அவள் நன்றாக உறங்கியதை உறுதி செய்த வாசு அவளுக்கு வாகாக போர்த்தி விட்டு ஏசி ஆன் செய்து விட்டு அவளின் உச்சியில் முத்தமிட்டு விட்டு வெளியில் வந்தவன் முகம் மொத்தமாக மாறி இருந்தது…
கோவமாக கீழே சென்றவன் “அம்மா அம்மு உள்ள தூங்கிட்டு இருக்கா… பாத்துக்கோங்க… நான் வந்துறேன்…” என்று கூறி வேகமாக காரை எடுத்து கொண்டு சென்று விட்டான்…
அவன் கோவமாக போவதை பார்த்த இளவரசி “என்னங்க வாசு வேற கோவமா போறான் என்ன பண்ண போறான்னு தெரியல… ஏற்கனவே அந்த ஆசிட் அடிச்சவன் என்ன ஆனான் அப்டினு யாருக்குமே தெரியல… அப்பவும் இதே மாதிரி தான் போனான்… இப்பவும் கோவமா போறான்.. அந்த அடியாளுங்க என்ன ஆக போறாங்க தெரியல… அவனுக்கு வேற இப்போ எல்லாம் கோவம் அதிகம் வருது” என்று புலம்பி கொண்டு இருந்தார்…
கதம்பரியின் கணவன் கவினோ “அம்மா ஏன் கவலை படுறிங்க… வாசு எங்க போனாலும் அவனோட நட்பை விட்டுட்டு போவானா அவன் பாத்துப்பான்… நானும் அவன் கிட்ட எங்க இருக்காங்கனு கேட்டுட்டு கிளம்புறேன்… நீங்க கவலை படாதீங்க… முக்கியமா பாப்பா கிட்ட சொல்லாதீங்க” என்று கூறி அவனும் திலீப்பிடம் இடத்தை கேட்டு அவனும் வேகமாக காரை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டான்…
கவின் அங்கு செல்லும் போதே வாசு அனைவரையும் போட்டு அடி வெளுத்து கொண்டு இருந்தான்… கவின் வேகமாக சென்று வாசுவை பிடித்து இழுத்து “வாசு கொஞ்சம் அமைதியாகு இவனே எல்லாம் செய்யலனு உனக்கே தெரியும்… அது யாருனு தெரிய வேண்டாமா இவனை போட்டு அடிச்சு கொன்னுட்டா அது யாருனு எப்படி தெரியும்” என்று கூறி அமைதி படுத்தி அவனை உட்கார வைத்தான்…
பின் கவின் அந்த மூவரின் முன்பு நின்று “உங்களை யாரு அனுப்புனாங்கனு சொல்லிட்டா உங்க உயிராச்சும் மிச்சம் இருக்கும்.. இல்லனா உங்க உயிருக்கு நான் பொறுப்பு இல்லை…” என்று கூறினான்…
ஒருவன் பயத்தில் எதோ கூற ஆரம்பிக்க இன்னொருவனின் கண் அசைவில் அமைதியாகிவிட்டான்… யாரும் சொல்லாததை பார்த்த கவின் “சரி உங்க உசுருக்கு நான் இனிமே பொறுப்பு இல்ல…” என்று கூறி அவன் ஒருவனை அடிக்க ஆரம்பிக்க திலீப் ஒருவனை போட்டு அடிக்க மாட்டான்…
பயத்தில் கூற வந்தவனை விட்டு விட்டு மற்ற இருவரையும் அடித்து அரை உயிராக்கினர்… அதில் இன்னொருவனுக்கு பயத்திலேயே செத்து விடுவான் போல அந்த அளவிற்கு பயந்து நடுங்கி கொண்டு இருந்தான்… இருவரையும் அடித்து நொறுக்கி விட்டு இவனிடம் திரும்ப அவன் பயத்தில் சஹானா அழைத்ததில் இருந்து அனைத்தையும் கூறிவிட்டான்…
அதை கேட்டு வாசு மிகவும் கோபமடைந்து விட்டான்… அவன் அப்போதே கோவத்தில் கிளம்ப திலீப் கவின் இருவரும் தான் அவனை அமைதியாகி உட்கார வைத்தனர்… வாசு இருவரையும் உதறி விட்டு கோவமாக கிளம்பிவிட்டான்… திலீப் மூவருக்கும் வைத்தியம் பார்க்க கவின் அவனிடம் இருந்து விடைபெற்று வாசுவை பின் தொடர்ந்து சென்றான்…
கவின் நினைத்தது போல் சைந்தவியின் ஊருக்கு தான் சென்று கொண்டு இருந்தான்… அவனை விட கோவமாக சென்ற கவின் அவனின் கார் முன்பு சென்று தன் காரை நிறுத்தினான்..
அதில் இன்னும் கோவமடைந்த வாசு “அண்ணா நகருங்க… கோவத்துல உங்களை எதோ சொல்லிட போறேன்..” என்று முயன்று நிதானமாக கூறினான்….
“வாசு கொஞ்சம் அமைதியா இரு… இப்போ நீங்க அங்க போனா நாம சொல்றதை யாரும் அங்க நம்ப மாட்டாங்க… ஆசிட் அட்டாக்லேயே அந்த பொண்ணு அவங்க அம்மாவை எப்படி நம்ப வெச்சதுனு தெரியும் உனக்கு… இப்பவும் எதாவது பண்ணிடும்.. அந்த ஆளுங்களை யாருனே தெரியாதுனு சொல்லிடும்… பொறுமை ரொம்ப முக்கியம் வாசு.. இப்போ முன்னாடி மாதிரி இல்ல.. சைந்தவி உன் மனைவி உன் முன் கோவம் அந்த பொண்ணை தான் பாதிக்கும்… அதனால உன் கோவத்தை கம்மி பண்ணு… இன்னிக்கு ஒரு நாள் நான் சொல்றதை கேளு சரியா…” என்று கூறி வாசுவை சமாதானம் செய்து வீட்டிற்கு அவனை அழைத்து சென்றான்…
அங்கு வசந்தியின் வீட்டில் சஹானா அவளின் அறையில் தானே கத்தி கொண்டு இருந்தாள்.. அங்கு இருக்கும் பொருட்களை எல்லாம் உடைத்து “ஏய் சைந்தவி நீ மட்டும் என் கைல கிடைச்ச அவளோ தான்… நீ எப்படிடி உயிரோட வந்த… உன் ஆயுசு கெட்டி தான்டி… ஆனா உன்னை நிம்மதியா விட மாட்டேன்டி… உனக்கு எவளோ திமிரு இருந்தா வாசுவை கல்யாணம் பண்ணி இருப்ப… அந்த அம்மா என்ன சொன்னது அந்த வீடு ராணியா அவங்களே அந்த வீடு அசிங்கம்னு சொல்லி உன்னை வீட்டை விட்டு அனுப்ப வைக்கல… நான் சஹானா இல்லை…” என்று பிதற்றி கொண்டு இருந்தாள்…
அவள் கூறியதை ஆரம்பத்தில் இருந்து கேட்ட வசந்தி அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்ற விட்டார்…
வாசு வீட்டிற்கு செல்ல அங்கு சைந்தவி இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்… குழந்தை போல் உறங்கி கொண்டு இருக்க அவளை கொஞ்ச நேரம் ரசித்தவன் பின்பு அவனுக்கு கொஞ்ச நேரம் ஓய்வு தேவை பட அந்த அறையிலேயே இருக்கும் இன்னொரு அறையில் சென்று உறங்க சென்றுவிட்டான்….
அவனுக்கு ஆவலுடன் உறங்க தான் ஆசை… ஆனால் சைந்தவி இன்னும் ஆசிட் வீச்சில் இருந்து வெளியே வரவில்லை… அவள் என்ன தான் கல்லூரி வந்து சென்றாலும் அவளின் அந்த பயம் மட்டும் அவளை விட்டு நீங்கவில்லை…
அதுவும் இன்று நடந்த சம்பவம் அவளை இன்னும் பயம்புறுத்தி இருந்தது… எனவே அவளை விட்டு கொஞ்சம் விலகி இருக்க நினைத்து தான் அவளிடம் உறங்காமல் தனியாக உறங்க சென்றுவிட்டான்…
(படிச்சிட்டு அப்படியே லைக் அன்ட் கமென்ட் பண்ணிட்டு போனா இந்த சூப்பர் ஹீரோ ஹாப்பி… 😁)