Loading

பயத்தில் வாசுவை அணைத்து கொண்ட சைத்துவின் உடல் இன்னும் நடுங்கி கொண்டு தான் இருந்ததுவாசுவும் அவளை அணைத்து கொண்டு ஆறுதல் படுத்தினான்சஹானா ஏற்பாடு செய்த ஆட்கள் கடத்தி கொண்டு வந்ததில் சைத்துவின் உடலில் நன்றாக அடிபட்டு இருந்தது.. அது வேறு அவளுக்கு வலித்தது.. காலிலும் அடிபட்டு இருந்ததுஅவளால் நடக்க முடியவில்லைவாசு அவளை தூக்கி கொண்டு ஊரை நோக்கி நடந்தான்இந்த நேரத்தில் மற்றவர்களும் அங்கு வந்து இருக்க அனைவரும் இருவருக்கு முன்னர் நடந்து சென்றனர்

இங்கு நீண்ட நேரம் சைத்துவை காணாமல் வசந்தியும் தேட ஆரம்பித்து இருந்தார்அவரும் தேடி கொண்டு இருக்கும்  போது தான் வாசுவின் குடும்பம் சைத்துவுடன் ஊருக்குள் நுழைந்தனர்அதை பார்த்து திகைத் சஹானா பின் மிகவும் கோவமடைந்து விட்டாள்.. அதுவும் வாசு அவளை தூக்கி கொண்டு வருவதை பார்த்து மிகவும் கோவமடைந்தாள்

சைந்தவியை அவமான படுத்த வேண்டும் என நினைத்து தனக்கு நெருக்கமானவர்களிடம் சைத்துவை அவமான படுத்த கூறி என்ன பேச வேண்டும் என கூறி அவர்களிடம் இருந்து தள்ளி நின்று கொண்டாள்

அவர்களும் அவள் கூறியதை போல் பேச ஆரம்பித்தனர்… “ஏய் வசந்தி உனக்கு தெரியாத திருவிழா முடியுற வரை சுத்தபத்தமா இருக்கனும்னுபுருஷன் கிட்ட கூட  நாங்க நெருங்க மாட்டோம் ஆனா உன் பொண்ணு யாரோ ஒரு பையன் கூட வரா.. அதுவும் அவன் தூக்கிட்டு வரான்அந்த குடும்பம் தான் வெளியூர் ஆனா உன் பொண்ணுக்கு தெரியாது இந்த ஊர் தானு பிறந்தாஇவளும் உன் புருஷன் போல தான் போலஅவனை மாதிரி தான் ஒருநாள் ஓட போறா.. பாத்து கவனமா இருந்துக்கோ” என்று கேலி போல் ஒருவர் கூறினார்

சைந்தவியை மட்டும் எதோ சொல்லி இருந்தால் அதிக கோவப்பட்டு இருக்க மாட்டார் வசந்தி.. அவரின் கணவனை பற்றி கூறியதும் அதிக கோவமடைந்து வாசுவின் அருகில் நின்று இருந்த சைந்தவியை அடிக்க ஆரம்பித்துவிட்டார்அவர் அடிப்பதை பார்த்த வாசு அவரை தடுத்து சைத்துவை தன் பின்னால் நிற்க வைத்து கொண்டான்

அதை பார்த்து இன்னும் கோவமடைந்தவர் வார்த்தையால் அவளை நோகடிக்க ஆரம்பித்துவிட்டார்… “ஏய் உனக்கு இந்த வயசுலயே ஒரு துணை வேணுமாகொஞ்சம் கூட கூச்சம் இல்லையாநான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டனாச்சே நீ இப்படி இப்னு நான் யோசிக்கவே இல்லை.. நீயும் உன் அப்பன் போல தானு.. அது தான் அவனை போல இருக்கஉன்னை எல்லாம் என் பொண்ணுன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு…” என்று கூறி அவள் மனது கஷ்டப்படுவது போல் இன்னும் பேசி கொண்டே போனார்

அதை கேட்டு சைந்தவி மிகவும் உடைந்து போனாள்அவர் பேசுவதை கேட்க முடியாத இளவரசி தன்னிடம் இருந்த தாலி கயிறை வாசுவிடம் கொடுத்து கட்ட கூறினார்.. வசந்தி அதற்கும் சைந்தவியை திட்ட வாசு தன் பின்னால் நின்று இருந்தவளை தனக்கு முன்னால் நிற்க வைத்து மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கி கொண்டான்

அதன் பின் இளவரசி சைந்தவியை தன் கைவளைவில் நிற்க வைத்து கொண்டுஇனிமே சைந்தவியை திட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லஅவ இனிமே எங்க குடும்பத்து ராணிஅவளை ஏத்தி பேசினீங்கனா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாதுஇனிமே அவளுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைஅவ இங்க வீடு பொண்ணு மட்டும் தான்இனிமே அவ இந்த ஊருக்குள்ள கூட வரமாட்டா.. அவளுக்கு இந்த மாதிரி ஆளுங்க இருக்க ஊரே வேண்டாம்.. இன்னொன்னு சொல்றேன்இனிமே இங்க நடக்குற எங்க கார்மெண்ட்ஸ் நடக்காதுஇந்த மாதிரி ஆளுங்க இருக்க ஊருல நான் நடத்த மாட்டேன்இன்னும் ரெண்டு நாள் எல்லாருக்கும் இதுவரைக்கும் செஞ்ச சம்பளம் வந்துரும்.. அதுக்கு அப்புறம் எனக்ளுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..” என்று கூறிவிட்டு அனைவரையும் அழைத்து கொண்டு திருச்சி கிளம்பிவிட்டார்….

சைந்தவி வசந்தி பேசியதிலேயே அதிர்ந்து இருந்தவள் வாசு தாலி கட்டியதும் மயக்கமே வருவது போல் இருந்ததுவாசு தனியாக சைந்தவியை ஒரு காரில் கூட்டி செல்ல மற்றவர்கள் வேறு கார்களில் வந்தனர்சைந்தவியின் ஊரை தாண்டி ஒரு ஓடை ஓரத்தில் வண்டியை நிறுத்திய வாசு சைந்தவியை தன்னை பார்க்க வைத்தான்….

அவனை பார்த்ததும்ஏன் என்….னை கல்யாணம் ப்….ப்..பண்ணீங்க… உ…உங்க கிட்ட இருந்து விலக தா….ன் நினச்சேன் ஆ….ஆனா நீங்க என்னை க்க்..கல்யாணம் பண்ணிட்டீங்கஉங்களை ரொம்ப பிடிக்கும்.. ஆனா நான் உங்களுக்கு வேணாம்இப்பயே என்னை கொண்டு பொய் எங்கேயோ விட்ருங்கநான் வேணாம் உங்களுக்குஎன்னை விட்ருங்கநான் வேணாம் உங்களுக்குஎன் முகத்தை பாருங்கஎன்னை கல்யாணம் பண்ணா உங்களால நிம்மதியா இருக்க முடியாது… வி…விவிட்ருங்க..” என்று திக்கி திக்கி கூறி முகத்தை மூடி அழுக ஆரம்பித்து விட்டாள்….

அவள் அழுகை முழுதாக நிற்கவில்லை என்றாலும் கொஞ்சம் நின்று இருக்க அவளை தன் பக்கம் திரும்பி உட்கார வைத்தவன் அவாளின் இரு கையையும் ஒரு கையால் பிடித்து அவள் கண்களை மறுகையால் துடைத்து விட்டுஅம்மு இங்க பாரு நீ என்ன சொன்னாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன்நீ மட்டும் தான் எனக்கு.. உனக்கு இதை விட மோசமா ஆனாலும் உன்னை தான் கல்யாணம் பண்ணி இருப்பேன்என்று கூறி இதுக்கு மண்ணடி கேட்டது தான் இதுவே எனக்கு ஆக்சிடென்ட் ஆகி எனக்கு கை கால் எல்லாம் போயிடிச்சுனா என்கூட இருக்க மாட்டியாஅதே போல உனக்கு இந்த மாதிரி ஆசிட் அட்டாக் எல்லாம் நடக்காம எனக்கு இந்த மாதிரி ஆகி இருந்தா விட்டுட்டு போய் இருப்பியா சொல்லு அம்முஎன்று கேட்டான்

அவன் கூற கூறவே மீண்டும் கண்களில் கண்ணீர் வர ஆரம்பிக்கப்ளீஸ் ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க உங்களுக்கு எதுவும் ஆகாது.. உங்களுக்கு சின்ன  காயம் கூட ஆகாது.. இப்படி மட்டும் இனிமே சொல்லாதீங்கஎன்னால கேட்க முடியல…” என்று அழுது கொண்டே கூறினாள்

அவனும்சரி அம்மு இனிமே அப்படி சொல்லலஆனா இனிமே நான் உங்களுக்கு வேணாம் என்னை விட்டுட்டு நீங்க போங்கனு சொன்னா நானே என் காரை எங்கேயோ கொண்டு போய் இடிச்சு கை கால் எல்லாம் உடைச்சி தான் வருவேன்…” என்று கூறினான்..

வாசு கையை லேசாக தான் பிடித்து இருக்க அவனிடம் இருந்து உருவி அவன் வாயில் கை வைத்துஇனிமே ..ப்படி சொ..ல் மா….ட்டேன் இப்படி மட்டும் சொல்லாதீங்க…” என்று கூறி மேலும் அழுதாள்..

அவளை மேலும் நெருங்கி அவளின் கண்ணை துடைத்து அவளை இறுக்கி அணைத்து கொண்டான்அவளின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக நின்று நிதானமானாள்

அவளை பேச வைக்கும் பொருட்டுஅம்மு நீ ஏன் என்னை வாங்க போங்கனு மட்டும் சொல்றஒன்னு பெரு சொல்லி கூப்பிடு.. இல்லை அத்தான் மாமா அப்படினு எதோ சொல்லு…” என்று கூறினான்

அவளோ அமைதியாகவே இருக்க அவனே மீண்டும்அம்மு நீ எதுவும் சொல்லாம இருந்தா நான் கார் எடுக்க மாட்டேன்.. நீ சொல்றவரைக்கும் கார் இங்க தான் இருக்கும்என்று கூறி சீட்டை சாய்த்து படுத்து கொண்டான்

அவளுக்கோ வாய் ஒட்டிக்கொண்டது அவளால் எதுவும் சொல்ல முடியவில்லைகூச்சம் அவளை பிடிங்க தின்றதுபத்து நிமிடம் ஆகியும் அவன் கார் எடுக்காம இருக்க அவளே கூச்சத்தை உடைத்து மெதுவாகமாமா க்..க்..காரை எடுங்கஎன்று அவளுக்கே கேட்காத குரலில் கூறினான்

அவன் அப்போதும் அமைதியாக இருக்க கொஞ்சம் சத்தமாகவேமாமா காரை எடுங்கஎல்லாரும் வெயிட் பண்ணுவாங்க..” என்று கூறினாள்.. அப்போது தான் எழுந்து அமர்ந்தான்ஆனால் அவன் முகத்தில் புன்னகை மலர்ந்து இருந்ததுஅவளை தன் பக்கம் இழுத்து அவளின் உச்சியில் முத்தமிட்டு காரை எடுத்தான்அவனின் முத்தத்தில் அவளின் உடல் சிலிர்த்து அடங்கியது….

 

 

(எல்லாரும் படிச்சிட்டு அப்படியே லைக் அன்ட் கமெண்ட் பண்ணிட்டு போனா ஹாப்பி 😁)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
9
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்