தேவ் மித்ராவின் நம்பரை சேவ் பண்ணி விட்டு தன் நெற்றியில் போனால் அடித்துக் கொண்டு புன்னகைக்க.
அங்கு மித்ராவும் “குகனின் சித்தப்பா” என்று தேவ் நம்பரை சேவ் செய்தவள்.ஒரு சில நொடி க்கு பிறகு அதை அழித்துவிட்டு வேறு ஒரு பெயர் டைப் பண்ணி சேவ் செய்து கொண்டு சிரிக்க,
” என்னடி லூசு போல சிரிக்கிற? யார்ட்ட பேசுன?”என்றாள் பிரியா.
“என் கிளாஸ் குகன் சித்தப்பா கிட்ட”.
“ஓ! போன் பேசுற அளவுக்கா?”என்று அவளை மார்க்கமாக பார்க்க,
” லூசு அவன் கிளாஸ் ஒர்க் நோட். கிளாஸ்லையே வச்சுட்டு போய்ட்டானாம். ஹோம் ஒர்க் கேக்குறதுக்காக கால் பண்ணாரு”
” ஓ !பாருடா.அப்படியா சங்கதி” என்ற பிரியா.. ஒரு சில நொடிக்கு பிறகு,”ஆமா உன் நம்பர் எப்படி அவருக்கு தெரியும்”என்றாள்
கேள்வியாக,
“இது என்னடி கேள்வி.நான் தான் அவன் கிளாஸ் டீச்சர்.சோ,என்னுடைய நம்பர் அவன் டைரியில் இருக்கும். அதை வச்சு கால் பண்ணி இருக்காங்க ,மத்தபடி அவரோட நம்பர் எனக்கு தெரியாது, என்னோட நம்பர் அவருக்கு தெரியாது,இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் கால் பண்றாரு”
“நான் உன்ன இவ்வளவு விளக்கமே கேட்கலையே?”
அவளும்,” நானும் சின்ன இன்ஃபர்மேஷன் சொன்னேன். அவ்வளவுதான்.மத்தபடி உனக்கு இங்க யாரும் புளி போட்டு விளக்கல “என்று விட்டு தன் வேலையில் கவனத்தை செலுத்தினாள்.
ஒரு சில நொடி அவளை குறுகுறுவென பார்த்த பிரியா எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டே படுத்து விட்டாள்.
மறுநாள் காலை மித்ரா ,தேவ் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.
குகனிடம் கிளாஸ் ரூமில் தான் கேட்க செய்தாள்.”கிளாஸ் ரூம்ல ஹோம் ஒர்க் குடுக்குற சப்ஜெக்ட் நோட் வச்சுட்டு, வீட்டுக்கு எதுக்குடா போன?” என்று ,
அவனோ, பேய் முழி முழிக்க.
“ஆவுன்னா இப்படி முழிச்சிட்டு கண்ணை போட்டு உருட்டுவதை விட்டுட்டு பதில் சொல்லு டா” என்று ஒரு டீச்சர் ஆக மிரட்டினாள்.
“மி..மிஸ் அ…அது ஏதோ ஒரு அ..அவசரத்துல..”
“அப்படி என்ன சாருக்கு அவசரம் ?”என்று அவன் சட்டையை பிடித்து இழுத்து அருகில் நிற்க வைக்க
“மி..மிஸ்”..
” ஒழுங்கா படிக்கிற வேலையை பாரு” என்று சட்டையை சரி செய்து விட்டு, உட்கார வைத்தாள்.
மாலைப் பொழுது, குகனை வண்டியில் தூக்கி உட்கார வைத்து, பைக் ஸ்டாண்டில் இருக்க, இவனும் ஒற்றைக் காலை கீழே ஊன்றி,பைக்கில் சாய்ந்து நின்றது போல அவனிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“தேவ் ஏன் வீட்டுக்கு கிளம்பாம இங்கேயே நின்னுட்டு இருக்கோம்” என்று கேட்டான் குகன்.
“இப்போ வீட்டுக்கு போய் என்ன பண்ண போற?”என்றான் நாக்கை உள் பக்கமா ஒரு கன்னத்தில் சுழற்றிய படி,
“லேட் ஆகும் இல்ல. வீட்டுல தத்தா திட்டுவாரு இல்ல” என்றான். அவனும் விடாமல்,
அவன் தலையில் நங்கென்று கொட்டியவன் .”அப்படியே இவரு தாத்தாக்கு பயப்படுற ஆள் பாரு. நேரத்துக்கு தான் தினமும் வீட்டுக்கு போவாரு” என்றான் புருவத்தை உயர்த்தி,
“இரு உன்ன வீட்டுல சொல்றேன்”என்றான் குழந்தை முகத்துடன் ஒற்றை விரல் நீட்டி மிரட்டியபடி,
“அச்ச அச்சோ அப்படியே பயந்து வருதுடா” என்று நெஞ்சின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு , “இருடா வீட்டுக்கு போய் அப்படி என்ன கிழிக்கப் போற? அப்படியே சார் போன உடனே ,எடுத்த புக்கை வைக்கிறது இல்ல பாரு அப்படித்தானே !”என்று அவன் கழுத்தில் கை போட்டு இறுக்கினான்.
அப்பொழுதுதான் வெளியில் வந்த, மித்ரா இருவரையும் பார்த்துவிட்டு அவர்கள் அருகில் நெருங்கி வந்து,”நீ இன்னும் வீட்டுக்கு போகலையா? குகன்.இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்றாள்.
“தோ பாரு டா..நாங்களும் இங்கதான் நிற்கிறோம். நான் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரிய மாட்டேனோ ?உங்க ஸ்டூடண்ட் மட்டும்தான் உங்க கண்ணுக்கு தெரிவானோ?”
” அப்படி எல்லாம் இல்ல. இந்நேரத்துக்கு மேக்ஸிமம் நீங்க வீட்டுக்கு போயிருப்பீங்களே?ஆன, இப்ப இங்க இருக்கீங்கன்னு கேட்டேன்”..
“அது” என்று அவன் வாய் திறப்பதற்கு முன்பாகவே,குகன் முந்திக்கொண்டு ,”உங்களை பாக்கறதுக்காக தான் மிஸ் “என்றான் ராகத்தோடு..
புரியாமல் குகனை பார்த்தவள். தேவின் புறம் திரும்ப,” இ…இல்ல சும்மாதான்.அவன் ஏதோ உளறுகிறான்”.
“ஓ!”என்றவள் “எதும் பேசனுமா? அதான் நிக்குறீங்களா?” என்றாள் கேள்வியாக,
“அப்படி எதுவும் இம்பார்டன்ட் இல்லையே” என்றான் தோள்களை குலுக்கி,
“இம்பார்ட்டன்ட் இல்லன்னா. அப்ப ஏதோ பேச தான் நிக்குறீங்களா?”என்றாள் ஏற்ற இறக்கமாக..
“இல்லை” என்பது போல் உதட்டை பிதுக்கினான்.
அவளோ, கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அவனை அமைதியாக பார்க்க.
“கிளாஸ் ரூம்ல குகன் எப்படி பிஹேவ் பண்றான்? நல்லா படிக்கிறானா ?”…என்றான்.
கலகலவென்று சிரித்தவள்.” தேவ் இத நீங்க எப்பவோ கேட்டு இருக்கணும். அதாவது, இத்தனை மாசம் கழிச்சு கேக்குறீங்க பாத்தீங்களா? இப்போ இத கேக்க தான் நீங்க வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க?அப்படியா?”என்றாள் பார்வையால் அவனை அளந்த படி,
“ஹலோ! பேரன்ட்ஸ் எப்ப கேட்டாலும் டீச்சர்ஸ் பதில் சொல்லணும் தானே”
” அது சரி “என்று இரண்டு மூன்று முறை தலை ஆட்டியவள் ,”பேரண்ட்ஸ் கிட்ட இன்பார்ம் பண்ணனும் தான்.அதுவும் உங்ககிட்ட கண்டிப்பா இன்பார்ம் பண்ணி தான் ஆகணும்” என்றாள் ஒருவித குரலில் சொல்லிகொண்டே,
அவள் அவனையே நோட்டம் விட,
ஒரு சில நொடிக்கு பிறகு, பார்வையை வேறு புறம் திருப்பி புன்னகைத்தாள் அவனின் விசித்திர செயலால்,
இருவரும் பேசிக் கொண்டிருக்க, அப்போது தேவுக்கு போன் வர, “உங்க அம்மா தான்டா” என்றான்.
“டெய்லி வீட்டுக்கு வர டைமுக்கு இன்னும் வரலன்னு தான் போன் பண்ணி இருப்பாங்க உங்க அண்ணி”என்றான் சிரித்துக் கொண்டே குகன்.
“இருடி உன்னை வந்து வச்சிக்கிறேன்”என்று குகனிடம் சொல்லிக்கொண்டே ,போனை அட்டென்ட் செய்து காதில் வைத்து, “சொல்லுங்க அண்ணி!” என்றான்.
“எங்கடா இருக்கீங்க? இன்னும் வீட்டுக்கு வரல இவ்ளோ நேரம் ஆகுது?”
“அது.அண்ணி”என்று அவன் நிறுத்த,
“என்ன டா டிராபிக்ல மாட்டிக்கிட்டீங்களா? இல்ல அவனை கூட்டிட்டு எங்கயாச்சும் வெளிய கிளம்பிட்டியா ? ,நீ வரலன்னு மாமா புலம்பிட்டு இருக்காரு டா, அவனுக்கு நீ ஏதாவது கண்டதையும் வாங்கி கொடுத்து , சளி பிடிக்கட்டும் அப்புறம் இருக்க உனக்குன்னு புலம்பிட்டு இருக்காருடா..நீ இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வரலனா என்னை வச்சு செஞ்சிடுவாரு டா நாலு நாளைக்கு.. அதுவும் அவனுக்கு சளி பிடிச்சுச்சு அதோகதி நானும் உன் கூட சேர்ந்து, ப்ளீஸ்டா அப்படி எங்கயாச்சும் இருந்தா வீட்டு பக்கம் சீக்கிரம் வந்து சேருங்கடா “என்றாள் பாவமாக ,
ஸ்பீக்கர் போடவில்லை தான் என்றாலும், வித்யா பேசியது அருகில் இருந்த மித்ராவின் காதில் விழ தான் செய்தது.
“அண்ணி எங்கயும் நான் கூட்டிட்டு போகல அவனை. ஸ்கூல்ல தான் இருக்கேன்”.
” ஏன்டா என்ன ஆச்சு? நீ லேட்டா போனியா ?ஆபீஸ்ல ஏதாவது முக்கியமான வேலையா?”
“ப்ச்! அப்படிலாம் எதுவும் இல்ல அண்ணி. ஸ்கூல்ல தான் இருக்கோம்.இன்னும் ஒரு 10 மினிட்ஸ்ல கிளம்பிடுவோம் “.
இப்பொழுது அவளது குரல் மாற்றம் அடைந்தது. நக்கலாக “ஓ! ஸ்கூல்ல இருந்து கிளம்பவே இன்னும் பத்து நிமிஷம் ஆகுமோ?”
“அ..அண்ணி” என்று குழைந்தான்.
” ஓவரா ஐஸ் வைக்காதே! சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேருங்க”
” நான் வர வரை உங்க மாமனாரை மட்டும் கொஞ்சம் சமாளிங்க ,அந்த ஹிட்லர் இந்நேரம் எண்ணெய் இல்லாமலே சட்டியில போட்டு என்னை வறுத்துட்டு இருப்பார்”
“அது என்னவோ உண்மைதான். சீக்கிரம் வாடா.. மாமாவை ஏதாவது சொல்லலைனா உனக்கு தூக்கம் வராதே!”..
” ஆமா ஆமா உங்க மாமாவை எதும் சொல்லிட்டாலும், என்ன எதுவும் சொல்லாம உங்க மாமாவுக்கு தூக்கம் வராதுனு வேன சொல்லுங்க”.
சிரித்துக் கொண்டே,” சரிடா சீக்கிரம் வாங்க” என்று பட்டென்று வைத்திருந்தாள்.
மித்ரா குகனிடம் கீழே குனிந்து, “உங்க அம்மாவும், உங்க சித்தப்பாவும் ரொம்ப க்ளோஸ்சோ ?ஜாலியா பேசிக்கிறாங்க ” என்று கேள்வி எழுப்பினாள்.
“ஆமாம் “என்று குதுகலித்தவன் “தேவுக்கு அம்மானா அவ்வளவு இஷ்டம், அம்மாவுக்கும் தேவுனா ரொம்ப ரொம்ப பிடிக்கும்”என்றான்.
அவனும் போன் வைத்துவிட்டு வந்து நிற்க..
“நீங்களும், உங்க அண்ணியும் பிரண்ட்லியா பேசிப்பிங்களோ ?”
அவளைப் பார்த்து புன்னகையை தவழ விட்டவன். “ஆமாம்”என்று சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு நேரமாகுவதை உணர்ந்து இருவரும் கிளம்பினார்கள்.
போகும்போது ,குகனின் தலையை கலைத்துக் கொண்டே ,”உன்னை யாரு டா. அந்த ராங்கி கிட்ட அவளுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு சொல்ல சொன்னா!”
“நீ அவங்களுக்காக தான தேவ் வெயிட் பண்ண” என்றான் அசட்டையாக,
“நான் உன்கிட்ட அப்படி சொன்னேனா?”என்றான் பைக் மிரர் வழியாக அவனைப் பார்த்து,
“பின்ன இல்லையா? அப்புறம் ஏன் ஸ்கூலுக்குள்ள நின்னுட்டு இருந்த? போற வழியில பேசி இருக்கலாம் .இல்லனா அம்மா சொன்ன மாதிரி எங்கேயாவது வெளியே போய் கூட சாப்பிட்டு பேசி இருக்கலாம
“அடி வாங்க போற டா நீ. இப்படியே பேசிட்டு இருந்தா”என்று அவன் தலையில் கொட்டி விட்டு, “வீட்டுக்கு வாடி உனக்கு இருக்கு” என்று அவனுடன் பேசி சிரித்துக்கொண்டே வீட்டிற்கு செல்ல.
தேவால், “ஹிட்லர் “என அழைக்கப்படும் எழில் .வெளியே சேர் போட்டு உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் .
இருவரும் வந்து இறங்க, இருவரையும் முறைத்தார்..
“ஹிட்லர் முறைக்கிறாருடா ! நீ வேகமா வீட்டுக்குள்ள ஓடிடு” என்க..
குகனும் தேவின் பேச்சை மீறாமல், வேகமாக உள்ளே ஓடி இருந்தான்.
அவனை எட்டிப் பிடிக்க முயன்றார் எழில்.” அவனை விடுங்க! இப்ப எதுக்கு அவனை பிடிக்கிறீங்க?” என்று சொல்லிக் கொண்டே அவரின் அருகில் வந்தான்.
” எங்கடா இவ்வளவு நேரம் போய் ஊர் சுத்திட்டு வரீங்க?ரெண்டு பேரும்.. என்ன என்ன தின்னுட்டு வந்தீங்க ?அவன் பேக்ல ஏதாவது துறுத்து கூட்டிட்டு வந்து இருக்கிங்களோ சார்”..
அவரை முறைத்து விட்டு ,”எதுவும் வாங்கித் தரல.கொஞ்சம் லேட்டாயிடுச்சு அவ்வளவுதான். மத்தபடி வேற எங்கேயும் அவனை கூட்டிட்டு போகல” என்று சொல்லிக் கொண்டே அவன் உள்ளே நடக்க ,
“இங்கு நான் ஒருத்தன் கேட்டுட்டு இருக்கேன்.நீ பாட்டுக்கு உள்ள போற?”
” பதில் சொல்லிட்டேன்ல ..அப்புறம் என்ன?”
“என்ன பதில் சொன்ன? எதுக்கு இவ்ளோ நேரம் ,எங்க போனீங்க?”
” நான் ஒன்னும் சின்ன பையன் இல்லை. எதுக்கு இப்ப நிக்க வச்சு கேள்வி கேட்டு இருக்கீங்க?நான் என்ன தப்பா செஞ்சேன்?”
” நீ தப்பு செஞ்சியா ?இல்லையான்னு நான் கேட்கல ?எங்க போயிட்டு வரீங்க ?இவ்ளோ நேரம் “என்றார் திரும்பவும்..அவர் அதிலே குறியாக இருக்க,
‘ இந்த நேரம் பார்த்து அண்ணி எங்க போனாங்கன்னு தெரியலையே ?இந்த ஹிட்லர் வெளியவே நிக்க வச்சு வேற கேள்வி மேல கேள்வியா கேட்கிறாரே ,இவர் கிட்ட நான் இப்ப என்னன்னு சொல்லுவேன் ‘என்று மனதிற்குள் புலம்பியவன்..
” அது “என்ற வாய் திறப்பதற்கு முன்பாகவே ,அங்கு வந்து நின்ற அவனின் காவல் தெய்வம்.. வித்யா.
“மாமா அவனே இப்பதான் வீட்டுக்குள்ள வரான். வரும்போதே நிக்க வச்சு கேள்வி கேட்கணுமா?”
” சப்போர்ட்க்கு வந்துட்டியா?”..
“அப்புறம் இப்படி வெளியவே நிக்க வச்சு கேள்வி கேட்டா?”
“ஆமாம் அப்ப மட்டும் அப்படியே உன் கொழுந்தன் பதில் சொல்லிட்டு தான் மறு வேலை பாப்பான் பாரு. என்னமோ போ! வேலு சொல்ற போல அப்பப்ப நீ தான் அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வர, இது எங்க போய் நிக்க போதோ?வர வர இவன் நடவடிக்கை கொஞ்சம் கூட ஒன்னும் சரியில்லை “என்று புலம்பிக் கொண்டே தன் கையில் இருக்கும் பேப்பரை உதறி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.
அவர் உள்ளே சென்றவுடன் தேவ் ,” காவல் காக்கும் தெய்வமே” என்று வித்யாவை பார்த்து கையெடுத்து கும்பிட ..
அவன் தோளில் தட்டியவள். “ஏன்டா இவ்வளவு நேரம்” என்றாள் புருவத்தை உயர்த்தி ,
“அண்ணி முதல்ல இருந்தா! இப்ப நீங்களுமா?”என்றான் பாவமாக,
“மாமா கேட்ட மாடுலேஷன் வேற..இப்ப நான் கேட்கிற மாடுலேஷன் வேற?”..
அசடு வழிய,காதின் பின்பு தலையை சொரிந்து கொண்டே ,”அது கொஞ்சம் லேட் ஆயிடுச்சு அண்ணி” என்றபடி அவன் புன்னகையுடன் வீட்டுக்குள் நுழைந்து கொள்ள முயல,
“என்னைக்கா இருந்தாலும் வெளியே வராமலா போயிடும் “என்று வாய்விட்டு சத்தமாக அவள் சொல்ல…
அவனும் திரும்பிப் பார்த்து புன்னகைத்து விட்டு ,படிகளில் ஏறி இருந்தான்.