திங்கள் அன்று சீக்கிரமாகவே வாசு தயாராகி கல்லூரிக்கு சென்றுவிட்டான்.. என்ன தான் சைத்துவிடம் கண்டிப்பாக கல்லூரி வர வேண்டும் என கூறிவிட்டு வந்து இருந்தாலும் அவனுக்கு சைத்து வருவாளா என்பது சந்தேகமாகவே இருந்தது…
கல்லூரி ஒன்பதரை மணிக்கு ஆரம்பிக்கும்… மணி ஒன்பது ஆகி பத்து நிமிடம் ஆகி இருக்க இன்னும் அவள் வரவில்லை… மாணவ மாணவியர் ஓரளவுக்கு எல்லாம் வந்து இருக்க அவள் வராமல் இருப்பது அவனுக்கு கஷ்டமாக இருந்தது..
“அம்மு நான் அவளோ சொல்லியும் நீ வரலல… என் வார்த்தை மேல உனக்கு நம்பிக்கை இல்லையா…” என்று அவன் தன்னக்குள் பேசி கொண்டு இருக்கும் போதே சைந்தவி அவசர அவசரமாக கல்லூரிக்குள் நடந்து வந்து கொண்டு இருந்தாள்..
அவனால் நம்ப முடியவில்லை… மீண்டும் ஒரு முறை அவள் தானா என்று பார்த்து விட்டு அவள் அருகில் சென்றான்… ஆனால் முகத்தை மாஸ்க் போட்டு மூடி இருந்தாள்..
மற்றவர்களுக்கு அவளை தெரியவில்லை.. ஆனால் வாசுவிற்கு தெரியாமல் இருக்குமா பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்டு அவளிடம் சென்றான்…
இவனை பார்த்த பின் தான் அவள் கண்களில் கொஞ்சம் பயம் நீங்கி இருந்தது… அவளுக்கு கல்லூரி வர தயக்கமாக இருந்தது… ஞாயிறு இரவு போக வேண்டாம் என முடிவு எடுத்து கொண்டு தான் உறங்கினாள்.. ஆனால் வாசு “என் மேல நம்பிக்கை இல்லையா அம்மு” என்று கேட்டது அவளுக்கு கஷ்டமாகி இருந்தது.. அவனுக்காகவே செல்ல வேண்டும் என முடிவு எடுத்து காலையில் கிளம்பிவிட்டாள்…
வழக்கம் போல் ஹாஸ்டலில் தங்கி கொள்கிறேன் என்று கூறி விட்டு கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்… வசந்தி எதுவும் சொல்லவில்லை… அது மேலும் மேலும் சைத்துவிற்கு மன வருத்தத்தை கொடுத்தது…
ஹாஸ்டல் சென்று தன் துணியை வைத்து விட்டு அவசர அவசரமாக கல்லூரிக்கு கிளம்பி சென்றாள்.. அவளுக்கு இன்னும் தயக்கம் இருக்கிறது தான்… ஆனால் வாசுவிற்காக கல்லூரி வந்துவிட்டாள்… கல்லூரி வந்த அவளால் வகுப்பறைக்கு செல்ல முடியவில்லை…
தன் அருகில் வரும் வாசுவை பார்த்த பின் தான் அவளின் தயக்கம் கொஞ்சம் குறைந்தது…அவள் உள்ளே வந்த பின்பும் அவளுக்கு தயக்கம் குறையாததை பார்த்த வாசு “இங்க வரைக்கும் வந்துட்டு ஏன் தயக்கம்.. இது உன் காலேஜ் அம்மு… உன்னை யாரும் இங்க எதுவும் சொல்ல மாட்டாங்க.. அதையும் மீறி யாரோ சொன்னா நீ பேஸ் பண்ணி தான் ஆகனும் அம்மு… எல்லார் வாயையும் அடைக்க முடியாது… பட் நீ ஓவர் கம் பண்ணி வரலாம்… உன்னை மாதிரி தயக்கமாகவே இருந்தா பல பெண்கள் வெளியவே வந்து இருக்க மாட்டாங்க… இப்பயும் சொல்றேன் என் மேல நம்பிக்கை வை அம்மு.. உனக்காக உன் கூட எப்பயும் நான் இருப்பேன்.. உன் சந்தோஷத்துல உன் கூட நின்னா உன் பிரச்சனைல உனக்கு முன்னாடி நான் இருப்பேன்… கொஞ்ச நாள் உனக்கு தயக்கமா தான் இருக்கும்.. பட் நீ பழகிடுவ.. ஆல் தி பெஸ்ட் அம்மு…” என்று கூறி அவளின் தலையை கலைத்து விட்டு அலுவல் அறைக்கு சென்றுவிட்டான்…..
போகும் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தவள் தன்னிலை வந்து வகுப்புக்கு சென்றாள்…
பயந்து பயந்து தான் வகுப்பறைக்கு சென்றாள்… ஆனால் அங்கு அவள் நினைத்ததுக்கு மாறாக அவளை உற்சாகமாக வரவேற்றனர் அவளின் வகுப்பு தோழர்கள்… அதுவே அவளுக்கு ஒரு புத்துணர்ச்சியாக இருந்தது….
அவளுக்கு இருந்த தயக்கமும் அவளின் வகுப்பு மாணவ மாணவியர் செய்த செயலால் சுத்தமாக நீங்கி இருந்தது… அவர்கள் அவளை கொண்டாடவும் இல்லை… ஒதுக்கவும் இல்லை… அவளை எப்போதும் போல் நடத்தினர்… எப்போதும் போல் பேசினர்…. அவளை எப்போதும் போல் வைத்து இருந்தனர்…
இதற்கு வாசு தான் காரணம் ஏற்கனவே இவர்களிடம் காலை வந்ததும் அவளின் மனநிலையை சொல்லி அவளை எப்போதும் போல் நடத்துங்கள் அவளை அதிகமாக தாங்கவும் வேண்டாம்… ஒதுக்கவும் வேண்டாம்… சாதாரணமாக பேசுங்கள் என கூறி இருந்தான்… அதே போல் அவர்களும் நடந்து கொண்டனர்….
அடுத்து அடுத்து வந்த நாட்கள் அவளுக்கு நன்றாக தான் சென்றது…. வாசுவின் பக்கம் சாயும் தன் மனதை அடக்கி கொண்டு படிப்பில் மட்டும் தன் கவனத்தை வைத்தாள்… எப்போதும் போல் விடுமுறை நாளில் வாசுவின் வீடு… திவ்யாவுடன் பேச்சு என நன்றாக தான் சென்றது… என்ன ஒரு குறை எப்போதும் இல்லாதது போல் வசந்தி அவளிடம் அதிக ஒதுக்கத்தை காட்டினார்… அது தான் அவளுக்கு கஷ்டமாக இருந்தது…
ஆனால் அது அவளை அதிகம் பாதிக்கவில்லை… இந்த ஒதுக்கம் அவளுக்கு பழக்கம் தானே… ஆனால் அவளுக்கு அவளின் அப்பா ஞாபகம் அதிகம் வந்தது… ஆனால் அவரை தான் பார்க்க முடியாதே… எங்கு இருக்கிறார் என்று கூட அவளுக்கு தெரியாது…
அந்த ஒரு வருடமும் வேகமாய் சென்று இருக்க சைத்து தன்னுடைய கடைசி தேர்வையும் வெற்றிகரமாக முடித்து இருந்தாள்… அடுத்த வாரம் சைத்துவின் ஊரில் திருவிழா…
சைத்துவுடன் இளவரசியும் ஊருக்கு சென்றுவிட்டார்… அந்த ஒரு வாரமும் வேகமாக சென்று இருக்க அன்று திருவிழா வாசு சக்ரவர்த்தி வரதராஜனின் குடும்பம் திவ்யா என அனைவரும் வந்து இருந்தனர்…
சைத்து வசந்தியுடம் கோவிலுக்கி சென்று இருக்க வாசுவின் குடும்பமும் கோவிலுக்கு வந்து இருந்தனர்… சஹானா தனியாக வந்து இருந்தாள்…
சேலை அணிந்து நகை எல்லாம் போட்டு கொண்டு அவள் வந்து இருக்க சைத்து எப்போதும் போல் சுடிதார் போட்டு கொண்டு எப்போதும் போல் தான் வந்தாள்…. அதுவே வாசுவை ரசிக்க வைத்தது… இவ்வளவு அழகாக தயாராகி வந்த தன்னை பார்க்காமல் முகம் சிதைந்து இருக்கும் இவளை பார்க்கிறானே என்று கோவத்துடன் பார்த்து கொண்டு இருந்தாள்…
அதுவே அவளுக்கு சைத்துவின் மேல் இன்னும் கோவத்தை வர வைத்தது…
எனவே தனியாக சென்று யாருக்கோ அழைத்து எதுவோ கூறி விட்டு எதுவும் தெரியாதது போல் நின்று கொண்டாள்…
அவள் அழைத்த நபர் மேலும் இருவருடனும் வந்து சைத்துவை கடத்த தான் வந்து இருந்தான்…
எப்போது சைத்து தனியாக வருவாள் எப்போது கடத்தலாம் என்று பார்த்து கொண்டு இருந்தான்…. அதே போல் வசந்தியும் சைத்துவும் கூட்டத்தில் தனி தனியாக பிரிய அதை பயன் படுத்தி கொண்டு அவளை கடத்தி இருந்தனர்….
வாசுவும் இரண்டு நிமிட கவன குறைவால் அவளை பார்க்காமல் இருந்து விட்டான்… அவனுக்கு அந்த நேரம் போன் வந்து இருந்தது…. போன் பேசி முடித்ததும் அவளை காணாமல் அனைத்து இடத்திலும் தேடி பார்த்தான்… அவள் எங்கும் இல்லாமல் வசந்தியிடம் கேட்டான்… அவரோ “இங்க தான் எங்கேயோ இருப்பா” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்…
வாசு பெரு மூச்சு ஒன்று விட்டு அவளை கோவிலின் பின்பக்கம் இருக்கும் காட்டில் தேட சென்றான்… அவன் வீட்டில் இருப்பவர்களும் திவ்யாவும் காட்டில் தேடி பார்த்தனர்…
கவினும் காதம்பரியும் தேட சென்ற இடத்தில் தூரமாக சைத்துவை இழுத்து சென்று கொண்டு இருப்பதை பார்த்து அனைவருக்கும் தகவல் சொல்லி விட்டு அவர்களை நோக்கி ஓடினர்…
அங்கு அவர்களோ ஒரு காட்டுக்குள் இருக்கும் கோவிலில் கட்டி வைத்து இருந்தனர்… அதில் சஹானா போன் செய்தவன் சைத்துவிற்கு தாலி கட்ட செல்ல அதே நேரம் வாசு ஒரு பக்கமும் கவினும் காதம்பரியும் ஒரு பக்கம் நுழைந்தனர்…
அவர்கள் இருவரும் இருவரை பார்த்து கொள்ள வாசு சைத்துவின் அருகில் சென்றான்… அவள் அருகில் நிற்பவனோ சைத்துவின் கழுத்தில் கத்தியை வைத்து பின்னாடி போ என்று மிரட்டினான்..
ஆனல் வாசு அவனை ஒரே அடியில் வீழ்த்தி சைத்துவின் கட்டை அவிழ்த்து தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து இருந்தான்… சைத்து மிகவும் பயந்து போய் இருந்தாள்… எனவே வாசுவை இறுக்கி அணைத்து கொண்டாள்… அவனும் அவளை அணைத்து ஆறுதல் படுத்தி கொண்டு இருந்தான்…
(கொஞ்ச சின்ன எபி தான்… அட்ஜஸ்ட் கரோ… படிச்சிட்டு லைக் அன்ட் கமெண்ட் பண்ணிட்டு போனா நான் ஹாப்பி 😁)