இளவரசி தன்னை அணைத்து கொண்டு அழுத சைத்துவை முதுகை தடவி சமாதானம் செய்து கொண்டு இருந்தார்… நீண்ட நேரம் அவள் சமாதானம் அடையவே இல்லை… நீண்ட நேரம் கழித்து தான் கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் அடைந்து அவர் கையை பிடித்து கொண்டு நின்று கொண்டாள்… அவளுக்கு வாசுவை பார்க்க ஆவல் பிறந்தாலும் வாசுவிற்கு தான் தகுதி இல்லை என நினைத்து கொண்டு பார்க்காமல் நின்று கொண்டாள்..
ஆனால் சஹானா அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள் … அது வாசுவிற்கு அருவருப்பாக இருந்தது… அதனால் எதுவும் கூறாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்… இளவரசியம் திவ்யாவும் கொஞ்ச நேரம் சைத்துவிடம் பேசிவிட்டு அவளை சமாதானம் செய்துவிட்டு அவளிடம் இருந்து விடைபெற்று கிளம்பினர்..
சைத்துவிற்கு அவர்களுடன் செல்ல ஆசை… ஆனால் அவளால் செல்ல முடியவில்லை… அவளின் ஆசை அவள் கண்ணில் தெரிந்தது.. இளவரசியும் வசந்தியிடம் “நான் சைத்துவை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு சாயந்திரம் கூட்டிட்டு வரேன்… உங்களுக்கு ஓகேவா… ஒன்னும் பிரச்சனை இல்லையே.. சைத்துவும் இப்படி ஆனதுல இருந்து வெளிய வரவே இல்ல… அதுனால இன்னிக்கு எங்க வீட்டுக்கு வரட்டுமே… அவளுக்கும் ஒரு மாற்றமா இருக்கட்டுமே…” என்று கேட்டார்…
வசந்தி நீண்ட நேர யோசனைக்கு பின் தான் ஒத்துக் கொண்டார்… உடனடியாக இளவரசி சைத்துவை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டார்… சைத்துவிற்கு வெளியே வர தயக்கமாக இருந்தது.. அவள் தன் தயக்கத்தை மீறி வர தயங்கினாள்… அதனால் தன் துப்பட்டாவால் தன் முகத்தை மறைக்க எண்ணினாள்… ஆனால் இளவரசி அதற்கு விடவில்லை…
அவளுக்கு மிகவும் தயக்கமாக இருக்க முதலில் அவள் மன அழுத்தத்தை நீக்க வேண்டும் என எண்ணிய வாசு “அம்மா விடுங்க… சவி உன் விருப்பம் தான் உன்னை யாரும் இங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க …. உனக்கு தயக்கமா இருந்தா உன் முகத்தை கிளோஸ் பண்ணிக்கோ… ஆனா இதையே கன்டினீவ் பண்ண விடமாட்டேன்…” என்று கூறினான்…
அவளும் நிம்மதியுடன் தன் முகத்தை மறைத்து கொண்டாள்… வாசு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என நினைத்து கொண்டு பெண்கள் மூவரையும் முன்னே நடக்க விட்டு அவன் பாதுக்காப்பாக பின்னால் நடந்து வந்தான்…
சைத்து சஹானாவால் காலை உணவை உண்ணாது இருக்க அவளின் பசியின் அளவு அவள் முகத்திலேயே தெரிந்தது… முதல் வேலையாக இளவரசி வீட்டிற்கு சென்றதும் சைத்துவிற்கு உண்ண உணவை தான் கொடுத்தார்… அதை அவரே ஊட்டியும் விட்டுவிட்டார்…
அவளுக்கு அவரின் பாசத்தில் கண்கள் எல்லாம் கலங்குவது போல் இருந்தது… இருந்தும் தன்னை மீட்டு கொண்டு அவர் ஊட்டும் உணவை ஆசையாய் வாங்கி கொண்டார்…
வாசுவிற்கு சைத்துவிடம் தனியாக பேச வேண்’டும் போல் இருந்தது… அதை உணர்ந்த இளவரசி “திவி ம்மா கொஞ்சம் உள்ள வரியா கொஞ்சம் வேலை இருக்கு.. சைத்து ம்மா கொஞ்சம் இங்கயே இரு.. வந்துடுறோம்..” என கூறி திவ்யாவை உள்ளே அழைத்து சென்றுவிட்டார்…
அவர் சென்றதும் வாசு சைத்து அமர்ந்து இருக்கும் சோபாவில் இடைவெளி விட அமர்ந்தவன் “அம்மு” என்று மென்மையாக அழைத்தான்.. அவள் அமைதியாகவே அமர்ந்து இருக்க வாசு மீண்டும் “அம்மு நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ.. எனக்கு எப்பயும் நீ மட்டும் தான்.. ஒருவேளை நான் சொல்றதை மாதிரி யோசிச்சிச்சு பாரு ஒரு ஆக்சிடென்ட்ல எனக்கும் இதே மாதிரி ஆகி இருந்தா என்னை விட்டு நீ போய் இருப்பியா” என்று கேட்டான்…
அவள் அமைதியாகவே இருக்க “சொல்லு அம்மு” என்று மீண்டும் மென்மையாக கேட்டான்… அவள் இல்லை என தலையாட்டினாள்…
“அப்புறம் நான் எப்படி உன்ன விடுவேன்… உன் அம்மாவை பத்தி கவலை படக்கூடாது அம்மு… அதை நான் பாத்துக்குறேன்… சரியா நீ எதை பத்தியும் யோசிக்காத… உனக்கு நான் இருக்கேன் அம்மு..” என்று அவளின் கையை பிடித்து அழுத்தி நான் இருக்கிறேன் உனக்கு என்று உணர்த்தி விட்டு தான் கூற வேண்டியதையும் கூறி விட்டு சென்றான்…
சைத்து போகும் அவனை தான் கலங்கிய கண்களுடன் பார்த்து கொண்டு இருந்தாள்… வாசு வெளியே செல்வதை பார்த்த இளவரசி வேறு எது பற்றியும் பேசாமல் அவளை உற்சாக படுத்தும் விதமாக வேறு எதையோ பேசி அவளை திசை திருப்பினார்.. சைத்துவும் கொஞ்சம் அனைத்தையும் மறந்து அவரின் பேச்சிற்குள் மூழ்கினாள்…
மாலை வரை அனைத்து கவலைகளையும் மறந்து இளவரசியுடனும் திவ்யாவுடனும் பேச்சில் மூழ்கி விட்டாள்… மதிய உணவை இளவரசிஏ சைத்து திவ்யா இருவருக்கும் ஊட்டிவிட்டார்… திவ்யாவிற்கு பி.எட்(பி.ED) சேர்ந்து இருக்க அடுத்த நாள் அவள் திருச்சி செல்ல வேண்டும்.. எனவே வசந்தியிடம் இன்று சைந்தவி தன்னுடன் உறங்கட்டும் என கேட்ட போது வசந்தி அதை மறுத்துவிட்டார்…
அவரே வந்து அவளை அழைத்தும் சென்றுவிட்டார்… திவ்யா இளவரசியிடம் “ம்மா இவங்க ஏன் இப்படி இருக்காங்க.. சைத்து ரொம்ப பாவம்” என்று கவலையாக கூறினாள்..
“விடுடா… கண்டிப்பா வாசு அப்படியே விட மாட்டான்… அவன் பாத்துப்பான்.. நீ வா நாம உள்ள போலாம்.. நாளைக்கு வேற நீ கிளம்பனும்.. வா தூங்கலாம்” என்று கூறி அழைத்து சென்றார்…
வாசு ஒரு அறையில் உறங்க இளவரசியும் திவ்யாவும் ஒரு அறையில் உறங்கினர்… அடுத்த நாள் காலை வாசுவே சென்று திவ்யாவை திருச்சியில் விட்டு வந்தான்… அங்கு பார்க்க வேண்டியதை வேலைகளை பார்த்து விட்டு மாலை தான் வீடு வந்து சேர்ந்து இருந்தான்..
இளவரசி அன்று இரவு அவனிடம் “தம்பி நீ திருச்சியிலேயே இரு.. இது கிராமம் திடீர்னு நீ இங்கேயே தங்கினா தேவை இல்லாத கேள்விகள் வரும்… வார வாரம் வந்து பாத்துட்டு போ.. நீ இங்கயே இருந்தா சைத்துவோட அம்மா அவளை இங்க அனுப்ப கூட யோசிப்பாங்க.. அதனால் நீ ஊருக்கு போயிடு..” என்று தயங்கி தயங்கி தான் கூறினார்… அவனுக்கு அவர் கூறுவது சரி என்று கூறி அடுத்த நாளே திருச்சிக்கு கிளம்பிவிட்டான்…
தினமும் இளவரசி சைத்துவை பார்க்க அவள் வீட்டிற்கு கிளம்பி விடுவார்… சஹானாவும் அடுத்த நாளே ஊருக்கு கிளம்பி இருக்க வசந்தியும் வேலைக்கு கிளம்பி இருந்தார்…
அதனால் சைத்துவிற்கு இளவரசி தான் துணை.. வசந்தியால் அவரை எதுவும் கூற முடியவில்லை… வாசு வராத வரை நிம்மதி என விட்டுவிட்டார்.. ஒரு மாதம் சென்று இருக்க இன்னும் இரண்டு நாட்களில் சைத்துவிற்கு நான்காம் ஆண்டு கல்லூரி தொடங்குகிறது… ஆனால் சைத்துவிற்கு கல்லூரி செல்ல தயக்கமாக இருந்தது…
வசந்தி வழக்கம் போல் வேலைக்கு சென்று இருக்க அன்று சைத்துவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்… அன்று வாசுவும் வீடு வந்து இருக்க அவளின் தயக்கத்தை அவனிடமும் கூறி விட்டார்… அவனும் அவரை ஊருக்கு போக தயாராக சொல்லிவிட்டு சைத்துவின் அருகில் நெருங்கினான்…
“அம்மு அவன் நீ வீட்டுலயே முடங்கி இருக்கனும்னு தான் உன்மேல ஆசிட் அடிச்சான்… இதுக்கு கரணம் உன் அக்கா அப்டினு உனக்கு நல்லா தெரியும்… அவங்க முன்னாடி நீ ஜெயிக்க வேண்டாமா… அதனால நீ கண்டிப்பா மன்டே காலேஜ் வர நீ வருவா அப்டினு நான் எதிர் பார்த்துட்டு இருப்பேன்… நீ வரலனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது அம்மு” என்று கூறி காருக்கு சென்றுவிட்டான்…
இளவரசியும் தயாராகி வர சைத்துவை அவள் வீட்டில் விட்டவுடன் அவளிடம் இருந்து விடைபெற்று கிளம்பினர் இருவரும்… வாசு அவளை பார்க்கவே இல்லை…
வாசு என்ன தான் கூறினாலும் அவளுக்கு கல்லூரி செல்ல தயக்கமாக இருந்தது…
(சைத்து கல்லூரி செல்வாளா மாட்டாளா அடுத்த பதிவில்… கதை பிடிக்கலைன்னா அதை சொல்லிடுங்க… நேத்து லைக்கே வரல மார்னிங் அதை பார்த்ததும் இந்த எபி எழுதவே தோணல… எதுவா இருந்தாலும் சொல்லிடுங்க… இந்த ஏபி எப்படி இருக்குனு படிச்சிட்டு லைக் அண்ட் கமெண்ட் பண்ணிட்டு போங்க…)