Loading

தேவ் ,குகன் இருவரும் வீட்டிற்குள் நுழைய,

 

வீட்டிற்கு சென்றவுடன், அது அவர்களது உலகமாகியது.

 

அதைப்பற்றி பெரிதாக யோசிக்கவில்லை இருவரும். 

 

குகனும் பள்ளியில் இன்று நடந்ததை ஒன்று விடாமல் அனைத்தையும் வித்யாவிடம் சொல்லி முடித்தான்.

 

தன் தாயிடம் அனைத்தையும் ஒப்புவித்து விடுவான். 

 

தேவும் அப்படித்தான் தனது அண்ணியிடம் எதையும் மறைக்க மாட்டான்.

 

இருவருக்குள்ளும் அப்படி ஒரு பாண்டிங்.அவள் இன்னொரு  அன்னையா?என்று கேட்டால் ,நிச்சயமாக ஆமாம் என்று எல்லாம் சொல்லி விட மாட்டான்..

 

முக்கால்வாசி நேரம், அவனுக்கு அவள் உற்ற தோழி என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வப்போது, தனது அண்ணியின் மடியிலும் படுத்து கொள்வான்..அவனது தலையை வருடி விட்டு அன்றைக்கு நடந்த விஷயங்களை பேசுவார்கள்..

 

அப்போது  வேலு,தேவ், குகனுக்கும் கூட இந்த விஷயத்தில் முட்டிக் கொள்ளும்.

 

“என் பொண்டாட்டி மடியில நீ ஏன்டா படுக்கிற ?”என்று வாதம் செய்வான்.. அப்போது எழில் ,தனம் இருவரும் அதை கண்டுகொள்ளாமல் தங்களுடைய வேலையில் கவனத்தை செலுத்துவார்கள்.

 

” இவர்களுக்கு வேற வேலையே கிடையாது .அப்பப்ப எதையாவது ஒன்னு சொல்லி சண்டை போடுவானுங்க அடுத்த அஞ்சாவது நிமிஷம் பல்லை இளிச்சுக்கிட்டு பேசுவானுங்க”என்று அவர்களுக்கு நடுவில் செல்ல மாட்டார்கள். 

 

” என்னுடைய அண்ணி  மடி நான் படுக்கிறேன். உனக்கு என்னடா வந்துச்சு ?உனக்கு வேணும்னா ரூமுக்குள்ள கூட்டிட்டு போய் உன் பொண்டாட்டியை கொஞ்சி குலாவு” என்பான்..

 

எழில் தான் ” இது என்ன டா பேச்சு “என்று சத்தம் போடுவார் ..

 

“ச்சை! இந்த ஹிட்லரை வைத்து சமாளிக்க முடியல டா சாமி “என்று முனகிக் கொள்வான்.

 

இப்படியே கேலியும் கிண்டலுமாக அவர்களது நாட்கள் செல்லும்.

 

இன்று காலையில் இருந்து நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் வரிசையாக குகன் சொல்லி முடிக்க,

 

“யாரு டா தேவ்! அந்த பொண்ணு பாக்க  நல்லா இருக்குமா ?” என்றாள் வித்யா.

 

தேவ் அவளை முறைக்க,

 

குகன் புறம் திரும்பி ,”உங்க மிஸ் எப்படி இருப்பாங்க?பார்க்க நல்லா இருப்பாங்களா ?நல்லா பேசுறாங்களா ?”.

 

 

அவனும் அவன் இஷ்டத்திற்கு அவளைப் புகழ்ந்து தள்ள,

 

இப்பொழுது குகனை முறைக்கும் முறையானது  தேவுக்கு..

அனைத்தையும்  சொல்லி முடித்து விட்டு  அசடு வழிய  தேவை பார்த்து ,”உண்மையாவே கிளாஸ் சூப்பரா எடுக்கிறாங்க தேவ். என்கிட்ட நல்லா பேசினாங்க கிளாஸ்ல தெரியுமா? என்னோட கன்னத்தை கூட கிள்ளி கொஞ்சினாங்க “என்று அவள் செய்த அனைத்தையும் செய்கையுடன் அவன் வரையறுக்க ,

 

தேவுக்கும் ,வித்யாவிற்கும் தான்  இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.

 

” சரி சரி ,ஓவரா புகழாத அந்த ராங்கியை”.

 

” தேவ்!” என்று முறைத்தான்.

 

” என்னடா உங்க மிஸ்சை ராங்கினு சொன்னா உனக்கு அவ்வளவு கோவம் வருது “.

 

“நீ ஏன் ஃபர்ஸ்ட் டைம் அவங்கள பாக்கும் போதே ,இப்படி பட்ட பெயர் வச்சு கூப்பிடுற” என்று முகத்தை சுறுக்கினான்.

 

“பாரு  டா..அப்போ அவ பண்ண எதும் உனக்கு தெரியாது அப்படி தான…ஏதோ , வண்டி ரிப்பேர் ஆகி வழியில ஒரு பொண்ணு நிக்குதேனு ஹெல்ப் பண்ணா…அதுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம திரும்பியும் பார்க்காம போற,நானா கேட்டதுக்கு கூட என்ன சொன்னா,நான உங்க கிட்ட  ஹெல்ப் கேட்டேன் தேங்க்ஸ் சொல்லுன்னு சொல்லிட்டு அவ்வளவு சிட்டா பறந்து போற “.

 

“அப்புறம்  அவங்க திரும்பி நின்னு தேங்க்ஸ் சொல்லிட்டு தானே போனாங்க” என்றான் குகன் குறுக்கே வந்து..

 

“அடிக்கடி, இந்த கௌஷிக் வேற குறுக்கா மறுக்கா வரான்” என்று அவன் தோளில் கை போட்டு கழுத்தை இறுக்க..

 

“மா” என்று சிணுங்கினான்.

 

“விடுடா அவன” என்று பிடித்து வைத்தாள்.

 

மறுநாள் போகும் வழியில் அவள் தென்படுகிறாளா? என்று தேவ் ஆர்வமாக பார்த்தான்.ஆனால், அவள் அந்த நேரத்துக்கு வந்திருக்கவில்லை.

 

‘ ஒருவேளை நேற்று லேட் ஆனதால், இந்நேரதுக்கு வந்திருக்கலாம்.இன்று சீக்கிரமாகவே கூட சென்றிருக்கலாம் ‘ என்று எண்ணிக் கொண்டே ஸ்கூலில் குகனை இறக்கி விட்டான்.

 

அப்பொழுதுதான் ,வேறொரு  டீச்சருடன் பேசிக்கொண்டு வந்த மித்ரா தேவையையும் ,குகனையும் பார்த்துவிட்டு ,”என்ன சார் இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க போல ?”என்றாள்.

 

” நக்கலு. இன்னைக்கு நீ சீக்கிரம் வந்துட்டேனு “என்றான் தேவ்.

 

” மிஸ் உங்களுக்கு தெரிஞ்சவங்களா?”என்றாள் அருகில் இருந்த டீச்சர். 

 

  அவளோ “ஆமாம்” என்று தலையசைக்க,

 

“சரி அப்போ நீங்க  பேசிட்டு வாங்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்று விட்டு நகர்ந்தாள் உடன் வந்த டீச்சர். 

 

அந்த மிஸ் போகும் வரை அமைதியாக இருந்த தேவ்.” நான் உனக்கு தெரிஞ்சவனா? சொல்லவே இல்ல?” 

 

அவனை முறைத்தவள்.”அவங்க கிட்ட போய் நீங்க யாருன்னு தெரியாதுன்னு சொல்ல முடியுமா? அப்புறம் ஏன்? இப்படி நின்னு பேசுறேன்னு கேட்டா என்ன பதில் சொல்றது ?”என்றாள்.

 

“தெளிவா தான் இருக்க”

 

“தெளிவா இல்லைனா. உங்கள மாதிரி ஆளுங்களை சமாளிக்க முடியாது  பாருங்க”என்றாள் அவளும் விடாமல்,

 

” அது சரி.இன்னைக்கு  நீ சீக்கிரம் வந்துட்டு ,நாங்க சீக்கிரம் வந்துட்டோம்ன்னு சொல்றியா? இது நாங்க டெய்லி வர நேரம் தான்.நேற்று வீட்டுல கொஞ்ச நேரம் ஆயிடுச்சு,ஆன நீ இன்னைக்கு எந்த கோவிலுக்கும் போகலையா ?” என்று இப்பொழுது அவள் காலை வார..

 

அவன் அவ்வாறு கேட்டவுடன், குகன் வாய் பொத்தி சிரிக்க,

 

” குகன்!” என்றாள் ஒரு கண்டிப்பான ஆசிரியராக..

 

 

அவனோ,” பார்ரா !கிளாஸ் ரூம்ல தான் நீங்க அவனுக்கு மிஸ். வெளியில இல்ல சரியா? உங்க டீச்சர் உத்தியோகத்தை வெளியே எல்லாம் காட்ட வேண்டாம், என் பிள்ளையை என் முன்னாடியே மிரட்டுறீங்களா?” என்று எகிறி கொண்டு  வர,

 

“உங்க புள்ளையை மிரட்டுறாங்க பாருங்க..அப்படியே மிரட்டினாலும் பயந்துருவான் பாருங்க உங்க பையன் குகன்”என்று அவன் தலையை கலைத்து விட..

 

குகன் கீழே இறங்கி, மித்ராவின் காலை கட்டிக் கொண்டான்.

 

” டேய் ஒரே நாள்ல அந்தர் பல்டி அடிக்கிற பத்தியா? ஸ்கூல் வந்தவுடனே அந்த ராங்கி பக்கம் போயிட்ட”.

 

” ராங்கி” என்றவுடன்,

 

“என்ன?” என்று அவள் முட்டக் கண்ணை போட்டு உருட்ட,

 

“முட்ட கண்ண உருட்டாத ராங்கி”

 

“தேவ்” என்றான் குகன்.

 

அவனும் ,” என்ன டா நேத்து இருந்து பாக்குறேன். ஓவரா உங்க மிஸ்ஸுக்கு சப்போர்ட் பண்ற டா. ஸ்கூல் வந்தவுடனே அந்த பக்கம் சாய்ந்திட்ட ,  கேடி “என்று அவன் தலையில் கொட்ட .

 

“இது என்ன  சின்ன பிள்ளையை கொட்ற பழக்கம்”என்று  அவன் தலையை தேய்த்து விட்டாள்.

 

“சரி நேரம் ஆகுது பாய்” என்றாள் நேரம் ஆகுவதை உணர்ந்து,

 

“ஹலோ மிஸ். ஒரு நிமிஷம் !”.

 

அவளும் திரும்பி பார்க்க,

 

” இன்னிக்கு நெற்றியில ஏதும் இல்ல?”

 

“என்ன நக்கலா?”

 

” ப்ச் !இல்ல. சீரியஸா கேட்டேன். சந்தனம் லைட்டா கீற்று போல டெய்லி வச்சிட்டு வரலாம் உங்க முகத்துக்கு நல்லா இருக்கும் “என்று கட்டை விரலையும் ,ஆள்காட்டி விரலையும் மடக்கி சூப்பரா இருக்கும் என்பது போல காட்டினான். 

 

“பாக்கலாம்”என்றாள்.

 

“பாய் டா குகன்” என்று அவன் அருகில் வந்து ,தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சீப்பு எடுத்து தலையை நேர்த்தியாக சீவி விட்டு, டிரஸை எப்பொழுதும் போல சரி செய்துவிட்டு, அவன் கன்னத்தில் இதழ் பதிக்க, குகனும் இதழ் பதிக்க ,கிளம்பினான் தேவ்.

 

அவன் சென்ற பின்,” உனக்கு உங்க சித்தப்பானா ரொம்ப பிடிக்குமோ? உங்க சித்தப்பாக்கு நீனா ரொம்ப பிடிக்குமோ?”..

 

” ரொம்ப ரொம்ப ரொம்ப” என்று கையை மார்பின் குறுக்கே வைத்து இறுக்கிக் காமிக்க ,

 

“சரிடா கிளாஸ்ல பாக்கலாம். எனக்கு நேரம் ஆயிடுச்சு பாய்” என்று கிளம்பினாள்.

 

மித்ரா தேவை திருப்பி பார்த்தாள். ஆனால், அவன் பார்க்கவில்லை. அவள் நேரமாகுவதை உணர்ந்து வேக எட்டுடுடன் நடக்க, அப்போதுதான், திரும்பிப் பார்த்தவன்.” ராங்கி” என்று முனகி கொண்டே தனது வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி இருந்தான்.

 

மாலை குகனை அழைக்க வர, அப்பொழுது அவனது ராங்கியை பார்க்க முடியவில்லை. 

 

கண்களை சுழல விட்டு தேட ,”என்ன தேவ்  மிஸ்சையா தேடுற? “

 

” இல்லைன்னு சொன்னா நம்பிடுவியா?”

 

” அவங்க ஸ்டாப் ரூம்ல இருப்பாங்க. வேலையா இருப்பாங்க”

 

“ஹம்” என்று அவனை வண்டியில் தூக்கி உட்கார வைத்தான். 

 

 

“ஆனாலும், நீ அவளுக்கு ரொம்ப சப்போர்ட் பண்றடா”

 

“பின்ன இல்லையா? எங்க மிஸ் எவ்வளவு க்யூட் தெரியுமா? ஜாலியா இருக்கு, டெய்லி கதை சொல்றாங்க தெரியுமா?”

 

” அவ பாடம் எடுக்க வரலையா?”

 

” மிஸ்  சொல்லு தேவ்” என்று அவன்  தொடையில் கிள்ள ,

 

“வலிக்குது டா”.

 

“வலிக்கட்டும். மிஸ் கிளாஸ்  எடுப்பாங்க..அதும் சூப்பரா. டெய்லியும் ஈவினிங் லாஸ் பிரியட் கதை சொல்றாங்க , அது மட்டும் இல்ல  நாளையிலிருந்து எங்களையும் டெய்லி ஒரு கதை சொல்ல சொல்லி இருக்காங்க”

 

“இது தான் உங்களுக்கு ஹோம் ஒர்க் அஹ. பாடம் படிச்சிட்டு வர சொல்லி சொல்லித் தரலையா ?அந்த ராங்கி “

 

குகன் அவனை திரும்பி பார்க்க, 

 

“சரிடா ஓவரா சப்போர்ட் பண்ணிட்டு போற. சரி வா “என்று வீட்டிற்கு அழைத்து சென்றான்.

 

இரவு வேலையில் சாப்பிட்டு தூங்கும் பொழுது, “எனக்கு ஒரு கதை சொல்லிக் கொடு தேவ்” 

 

“யானை, பூனை கதையா?” என்றான் நக்கலாக..

 

“ப்ச்!” என்று நொச்சு கொட்டியவன்.” இல்ல தேவ்,அர்த்தமுள்ள கதையா கேட்டுட்டு  வர சொன்னாங்க, யார் யாருக்கெல்லாம் தெரியுமோ ?சொல்லலாம் சொன்னாங்க,கம்பல்சரி கிடையாது, பேரன்ட்ஸ் சொல்லி கொடுத்தா ஓகே, அப்படி பேரன்ட்ஸ் ஏதாவது வேலையா இருந்தா ரொம்ப நச்சரிக்க வேண்டாம். நான் டெய்லி ஒரு கதை சொல்றேன்னு சொல்லி இருக்காங்க”

 

‘ நல்லா தான் கிளாஸ் எடுப்பா போல’ என்று மெச்சிக் கொண்டான் அவளை.

 

அதன் பிறகு ,குகனுக்கு நல்ல கதையாக ஒரு கதையை சொல்லி கொடுத்தான்.

 

“அவன் நான் சொல்றேன் கேளு தேவ்”என்க..

 

 

அதையும் ,ஒன்றுக்கு இரண்டு முறை தேவும், கேட்க. தனக்குள்ளே சொல்லிப் பார்த்துவிட்டு அதன் பிறகு தான் தூங்கினான் குகன்.

 

அவன் தூங்கி பிறகு, அவன் நெற்றியில் முத்தமிட்டு தலையை கலைத்து விட்டு, அவனை கட்டி அணைத்துக் கொண்டு தூங்கிவிட்டான்.

 

மறுநாள் காலை இருவரும் வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க,

 

“எதுக்கு  டா இவ்வளவு வேகமா சாப்பிடுறீங்க ?”என்றாள் வித்யா. 

 

“மா  நான் ஒரு ஸ்டோரி சொல்றேன் கேளு. நல்லா இருக்கான்னு பாரு “

 

“அது என்னடா ஸ்டோரி “என்று தேவை பார்க்க.

 

” அந்த ராங்கிகாக” என்றான் .

 

குகன் அவன் இடுப்பில் கிள்ளிவிட,

 

துளி குதித்தவன். “உங்க மகனை வச்சிட்டு மேய்க்க முடியல அண்ணி என்றவன்.. இவனோட மிஸ் இருக்காங்க இல்ல கிளாஸ் மிஸ் நியூ மிஸ் அவங்களுக்காக ” என்று இழுத்து ராகம் பாட..

 

வித்யா  சிரித்து விட்டாள் அவனது செய்கையில்..

 

“சரி டா அந்த மிஸுக்கு என்ன ?”..

 

“டெய்லி ஒரு ஸ்டோரி சொல்ல சொன்னாங்களாம். அதுக்காக உங்க பையன் பிரிப்பேர் ஆகி இருக்கான், அதைத்தான் இப்போ உங்ககிட்ட சொல்லனுமாம் “

 

” என்ன ஸ்டோரி டா “என்றாள் ஆர்வமாக..

 

” இரு மா” என்று கைகழுவிக்கொண்டு வந்து தனது தாயின் அருகில் உட்கார ,

 

அவனை தூக்கி தன்  மடியில் உட்கார வைத்துக் கொண்டாள் .”சரி சொல்லுடா கேட்போம்”  என்று,

 

அவனும் ஸ்டோரி சொல்ல, தேவை மெச்சுதலாக பார்த்தாள் வித்யா..

 

கிட்டத்தட்ட ,அவன் பிறந்து ஒன்பது மாதங்களில் இவன் கையில் ஒப்படைத்தவள். அதன் பிறகு, குகனின் முழு பொறுப்பையும் தேவ் தான் எடுத்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுது அவன் படிப்பு விஷயமாகட்டும் ,சிறு சிறு விஷயங்களிலிருந்து அனைத்துமே  தேவ்தான் குகனுக்கு..

 

அதுவும் நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில் தேவை மிஞ்ச முடியாது என்று எண்ணி அவன் தலையை கலைத்து விட்டு, அவன் தோளில் சாய்ந்தாள்.

 

“அண்ணி!   நல்லா இருக்கா” 

 

” நல்லா இருக்குடா.நீ சொல்லி கொடுத்தது நல்லா இல்லாம போகுமா”என்று தனது மகனின் கன்னம் வழித்து நெற்றி முறித்தவள் .”சரி நேரம் ஆகுது பாருங்க கிளம்புங்க, இப்படியே கதை பேசியே நேரத்தை ஒட்டிடாதீங்க. அப்புறம் நீ எப்போ ஸ்டோரி சொல்லுவ “

 

“எங்க.. அந்த ராங்கியே லேட்டா தான் வருவா”

 

“நீ ஏன்டா அந்த  மிஸ்ஸை வார்த்தைக்கு வார்த்தை ராங்கி ராங்கினு சொல்ற? நல்லா தானே கிளாஸ் எடுப்பாங்க போல.”

 

” அது சரி நீங்களுமா அண்ணி”

 

“சரி அண்ணி நேரமாயிடுச்சு “என்று பைக்  சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

 

போகும் தேவையும் குகனையும் பார்த்து கொண்டிருந்த வித்யாவின் அருகில் வந்த வேலு. தனது மனைவியின் தோளில் கை போட்டான்.” என்னடி ரொம்ப நேரமா அவனையே குறுகுறுனு பாக்குற?”

 

” எனக்கு ஏதோ ஒன்னு தோணுது. ஆனா ,சரியா தெரியல”

 

“அப்ப அந்த பொண்ண அவன் விரும்புறானா?” என்றான் ஆர்வமாக..

 

“அது தெரியல. அப்படி இருந்தா அவனே சொல்லுவான். ஆனா, ஏதோ வகையில் அந்த பொண்ணு நம்ம தேவை இம்ப்ரஸ் பண்ணி இருக்கா.எத்தனையோ பொண்ணுங்களை கடந்து வந்திருக்கான், எந்த பொண்ணுக்கும் பட்ட பெயர் வைத்ததே கிடையாது .முதல் முறையா ஒரு பொண்ணுக்கு பட்ட பெயர் வைத்து கூப்பிடுறான்”

 

” அவன் சாதாரணமா கூட கூப்பிடலாம் இல்ல”

 

“இருக்கலாம் தான்.இருந்தாலும்,அவ கிட்ட  இம்ப்ரஸ் ஆகி இருக்கான்.ஆனா அது லவ் வரைக்கும் போகுமான்னு தெரியாது” என்றவுடன் ..

 

எழிலும் , தனமும் தனது பெரிய மகனையும், மருமகளையும் முறைக்க..

 

அசடு வழிய சிரித்தவள்.” இப்ப உங்க பையன்  லவ் பண்ணா. வேணாம்னு சொல்லிடுவிங்களோ? ,நீங்களும் மாமாவும் ,எப்ப அவனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு யோசிச்சிட்டு உட்கார்ந்து இருக்கீங்க ?அவன் தான் பிடி கொடுக்காமல் ,இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு தள்ளி போட்டுட்டு இருக்கான் “

 

“அந்த புண்ணியவதி நம்ம வீட்டுக்கு வந்தா பரவா இல்லை தான்..”என்று எழில் சொல்ல..

 

  வித்யா வாய் விட்டே சிரித்து விட்டாள்.

 

தனம் தனது கணவனுடன் சேர்ந்து மூவரையும் முறைக்க.

 

தனது அத்தையின் தோளோடு கை போட்டவள் . “நம்ப தேவ் எதையும் யோசிக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செஞ்சிட மாட்டான் அத்தை. அந்த பொண்ணு கிட்ட ஏதோ புடிச்சிருக்கு .ஆனா, இப்பவும் அவன் அவளை லவ் பண்றான்னு நான் சொல்லல. சப்போஸ் லவ் பண்ணாலும் அந்த பொண்ண பத்தி முழுசா தெரியாம எந்த ஒரு விஷயத்தையும் செய்ய மாட்டான். முக்கியமா நம்ம குடும்பத்துக்கு செட்டாகாத எந்த ஒரு காரியத்தையும்  செய்யவே மாட்டான் “என்று சிரிக்க..

 

“பின்ன இல்லையா? உங்க விஷயத்திலேயே அதை கண் கூட பார்க்கலாமே” என்றார் எழில்.

 

“மாமா” என்று சிணுங்கினாள் 

 

“என்னதான் வேலு உன்னை லவ் பண்ணவே செஞ்சாலும். தேவ் தான உனக்காக வீட்டில் பேச செஞ்சான். அவனுக்கு தெரியாதா? நம்ம குடும்பத்துக்கு எது சரிப்பட்டு வரும் வராதுனு ” என்று சிரித்தார்.

 

” அப்புறம் என்ன விடுங்க!”என்று விட்டு வித்யா, வேலு இருவரும் வேலைக்கு சென்று விட்டார்கள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment