எழில் தேவ்வை திட்ட..
பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு தேவ் ஓர வழி பார்வையால் குகனை காண , அவனோ, தனக்கும் ,இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல பல்லை இளித்துக் கொண்டு நின்றான்.
“பம்பரக்கட்டை மண்டையா உங்க தாத்தா கிட்ட என்ன போட்டு கொடுத்துட்டு நீ பல்ல இளிச்சிட்டு நிக்கிறியா ?”என்று குகனின் கழுத்தில் கை போட்டு இறுக்க வர..
” நான் இல்ல தேவ் நம்பு!” என்று தன் அப்பாவின் அருகில் சென்று பின்னாடி ஓடி ஒழிய,
” இப்ப மட்டும் எதுக்குடா என்கிட்ட வர , திருட்டுத்தனமா வாங்கி திங்க மட்டும் அவன் கூட போன இல்ல “என்று வேலு நகர..
” ப்பா” என்று சினுங்கினான்..
“சரி சரி நேரம் ஆகுது.. அப்புறமா நீங்க நாலு பேரும் உட்கார்ந்து கதை அடிங்க பசிக்குது” என்று விட்டு தனம் அனைவருக்கும் சாப்பாடு பரிமாற..
அவரும் ஒரு தட்டு சாப்பாடு போட்டு கொண்டு அனைவருடனும் உட்கார்ந்து கொண்டார்.
டைனிங் டேபிள் இருந்தாலும், அனைவரும் கீழே ஒன்றாக வட்டமாக உட்கார்ந்து தான் சாப்பிடுவார்கள்.. சிரித்து பேசிக்கொண்டே ,சாப்பிட்டுவிட்டு எழுந்து கொள்ள..
” அண்ணி நாளைக்கு ஏதும் பிளான் இருக்கா?” என்றான் தேவ்..
அவள் ஒரு சில நொடி கண்களை சுழல விட..
“சரி ஓகே.. ஓகே.. நான் அப்பா, அம்மா ,குகன் நாலு பேரும் கோவிலுக்கு போயிட்டு வரோம்.. ”
” என்னா டா.. திடீர்னு கோவிலுக்கு பக்தி பரவசம் முத்திருச்சா? கோவிலுக்கு எல்லாம் போற?”..என்று நக்கல் அடித்தான் வேலு..
“இல்ல டா எரும குட்டி..வேற எங்கயாச்சும் போகலாம் என்ற மாதிரி தான் நான் பிளான் வச்சு இருந்தேன்.. உங்க முழியே சரியில்லை..அதான்”..என்று சிரிக்க..
வேலு சிரித்துக் கொண்டே ,”எங்க போலாம்னு சொல்லுடா?”…
“இல்ல அண்ணி. ஏதோ யோசித்து வச்சிருக்காங்க போல ,விடு..நம்ப அதை நெக்ஸ்ட் வீக் பாத்துக்கலாம் ..”
“இல்ல தேவ் நீ சொல்லு” என்றாள் வித்யா..
“உங்க பிளானை நீங்க கேன்சல் பண்ண வேணாம் அண்ணி.. நீங்க போயிட்டு வாங்க.. நம்ப நெக்ஸ்ட் வீக் கூட போயிக்கலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல”..
“ஐ! ஜாலி! ஜாலி! நாளைக்கு நான் எங்கையோ போறேனே!” என்று குதித்தான் குகன்..
“அடிவங்க, நான் உன்னை கூட்டிட்டு போறேன்னு சொல்றேன்.நீ அவங்க கூட போக பிளான் பண்றியா? அவங்க வேற எங்கயாச்சும் போவாங்க”..
” என்ன விட்டுட்டு போவாங்களா?”என்றான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு,
“டேய் இம்புட்டு ஆக்ஷனை உலகம் தாங்காதுடா குகனு.. உனக்கு என்ன தியேட்டர் தானே போகனும் நான் கூட்டிட்டு போறேன் “.
“ஆமா.நீ தேவ் கூட போ..அம்மா கொஞ்சம் வெளிய வேலையா போறேன்”என்று வித்யா சிரிக்க …
“ஹேய்!அண்ணி சிரிச்சிட்டாங்க! அப்போ நம்ம வெளிய போலாம் ,நீங்க ?”என்று அம்மா அப்பாவை பார்த்தான்..
இருவரும் ,”கோவிலுக்கு மட்டும் நாங்க வறோம் டா.அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்துடுறோம். எங்களால எல்லாம் உங்க கூட மூணு மணி நேரம் ஒரே இடத்தில ஆடாம அசையாம உட்க்காந்து பார்க்க முடியாது “என்றார்கள்…
” ஓகே டன்!” என்று விட்டு குகனை தூக்கிக்கொண்டு எல்லாத்துக்கும் பாய் சொல்லிட்டு வாடா, போலாம் என்று அடுத்த நிமிடம் படி ஏறினான்..
“தேவ் “என்றாள் வித்யா..
அவன் அவளை பார்க்க..
“இன்னைக்கு எங்க கூட அவன் தூங்கட்டுமே?” என்றாள் கண்களை சுருக்கி,
ஒரு சில நொடி அவளை குறுகுறுவென பார்த்துவிட்டு,” ஓகே உங்க விஷ், உங்க பையன் நீங்க தூங்க வைக்க போறீங்க “என்று தோலை குலுக்கி விட்டு தூக்கிய குகனை கீழே இறக்கிவிட்டு ,”டேய் குகனு அட்டகாசம் பண்ணாம சமத்தா தூங்கு” என்று அவனது கன்னத்தில் இதழ் பதிக்க..
“சரி தேவ் குட் நைட் ,நீயும் சமத்தா தூங்கு” என்று அவனை குனிய சொல்லி அவன் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு, குடுகுடுவென ஓடி வந்து தனது அப்பா அம்மாவின் அறைக்கு சென்று விட்டான்..
அவர்களும், சிரித்து விட்டு, அவன் பின்னாடியே நுழைந்து கொண்டார்கள்.
“நேரம் ஆகுது போய் தூங்குங்க” என்று தனது அப்பா ,அம்மாவிடம் சொல்லிவிட்டு ,படி ஏறினான்..
அவனது ரூம் மேலே மாடியில் உள்ளது..
அன்றைய பொழுது அப்படியே கழிய,
மறுநாள் விடியலில் காலை சீக்கிரமாகவே எழுந்து வேலு,வித்யா இருவரும் வெளியே கிளம்பி இருக்க,
தனம் எழுந்து வரும்போது தான், வித்யா,”அத்தை டீ மட்டும் போட்டு வச்சிருக்கேன்.சாப்பாடு மட்டும் நீங்க செஞ்சுக்கோங்க “என்று அவரது கன்னம் கிள்ளி கொஞ்சி விட்டு முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வந்துருவேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப.
எங்கு செல்கிறீர்கள் என்று அவள் சொல்லாத ,காரணத்தினால், அவரும் எதுவும் பெரிதாக கேட்கவில்லை..
“சரிடா பாத்து பத்திரமா போயிட்டு வாங்க “என்று புன்னகைத்தார்.
“அ.. அது “என்று அவள் தயங்க.
” என்ன ஆச்சு வித்யா?”..
” எங்க போறோம்னு வந்து சொல்றேன் அத்தை”..
” சரி” என்று சிரித்து விட்டு, கன்னம் வழித்து நெற்றி முறிக்க,
அப்போது படிகளில் இருந்து கீழே இறங்கி வந்த தேவ்..” அண்ணி.. என்ன காலையிலேயே தனத்துக்கு ஒரு கூட ஐஸ் தலையில வைக்கிறீங்க போல?”என்று அவளை வம்பு இழுக்க..
” நீ வேற ஏண்டா ?”என்று நெளிந்தாள்
” ஏதோ இடிக்குதே! சம்திங் இஸ் ராங்” என்றான் பற்களை காட்டி,
“வந்து சொல்றேண்டா “என்று அவனது தலையை கலைத்து விட்டு ,”சரி பார்த்துக்கோங்க ” பாய் ” என்றாள்.
” அண்ணி இவ்வளவு காலையிலேயே வா?” என்றான் கேள்வியாக..
“டேய் தேவ்! போகும் போது என்னடா இது கேள்வி ?”என்றார் தனம்.
சங்கடமாக வித்யாவை பார்க்க ..
அவளோ, கண் மூடி திறந்து புன்னகைத்தாள்.
“ஓகே அண்ணி! பாய்” என்றான்..
அதன் பிறகு, வேலூவும் ,வித்யாவும் சொல்லிக் கொண்டு பைக்கில் புறப்பட்டார்கள்..
காலை 8 மணி போல் குகன் எழுந்து கொள்ள,
தனது அப்பா அம்மா இல்லை என்றவுடன் கண்ணை கசக்கி கொண்டு வெளியில் வந்தவன்.. ஹாலில் டிவி பார்த்துக்கொண்டு இருந்த தேவின் மடியில் வந்து உட்கார,
” குட் மார்னிங் குகன்” என்றான் முத்துப்பல் தெரிய புன்னகைத்துக் கொண்டே,
“குட் மார்னிங் தேவ். எங்க ?அம்மாவும் அப்பாவும் ?”..
“தெரியலையே?” என்று அவன் உதட்டை பிதுக்க..
” காலையிலேயே அதைக் கேட்டதுக்கு தான் ஓவரா சீன் போட்டுச்சு தனம்..போகும் போது எங்க போறீங்கன்னு கேட்க கூடாதுன்னு “என்றான் மெதுவாக ..
குகனும் அவனைப் போன்று சத்தத்தை குறைத்து “சரி சரி “என்று சொல்ல ..
“பிரஷ் பண்ணிட்டு வா காபி தரேன்” என்றார் தனம்..
” தோ வரேன் தனம் “என்றவன் வேகமாக பல் துலக்க சென்றான்.
தாத்தாவை மட்டும் தான் தாத்தா என்று அழைப்பான் குகன்..அதிக நேரம் தனது சித்தப்பா (தேவ்) உடன் சேர்ந்து தனத்தை தனம் என்று அழைக்க பழகிவிட்டான்..
ஆரம்பத்தில் வித்யா ,வேலுவும் கண்டித்தார்கள்.. பெரியவங்கள பேர் சொல்லி கூப்பிடக்கூடாது என்று..
“சின்ன பையன் தானே கூப்ட்டா போறான் டா. ஏழு கழுதை வயசு ஆகுது, இவனே இப்ப வரை அப்படித்தான் கூப்பிடுறான் இவன் கூப்பிட என்னடா? என்று தனது மகனை மட்டம் தட்ட…
அவனும் தன் தாயை முறைக்க,
” என்னடா?”என்றார்..
” என்ன இருந்தாலும் பெத்த புள்ளைய விட, பேரப் பிள்ளை தானே தனத்துக்கு ஒஸ்தி “என்றான் ஏற்ற இறக்கத்துடன் ..
அவனது ,முதுகில் இரண்டு போட்டவர்,” சொன்னாலும் சொல்லாட்டியும் எனக்கு என் பேர புள்ள தான்டா ஒஸ்தி “என்று மார்தட்டிக் கொள்வார் தனம்..
குகனும் சென்று பிரஷ் பண்ணிவிட்டு ,முகம் ,கை, கால் கழுவிக்கொண்டு வர ,
அதன் பிறகு, காபி கொடுத்தார் தனம்.
குடித்துவிட்டு இருவரும் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள் .
பிறகு காலை உணவை முடித்துக் கொண்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, தனது அப்பா அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு குகனுடன் படத்துக்கு சென்றான் தேவ்.
அவனுக்கு தேவையானதை எல்லாம் வாங்கி கொடுத்து, ஐஸ்கிரீம் கேட்டான்.
“நேத்து தான டா சாப்பிட்டோம். அடிக்கடி சாப்பிடக்கூடாது, அப்புறம் உங்க தாத்தா என்ன வச்சு செஞ்சிடுவாங்க” என்றான்..ஏதோ தன் தந்தைக்கு பயன்படுவது போல் ..
“நீ தாத்தாவுக்கு பயப்படுற ஆளா?”என்று அவன் காலை வார,
“நேத்து நீ என்ன போட்டு கொடுத்து மாட்டி விட்டுட்டு நைசா எஸ்கேப் ஆனியே அப்படியா?”என்றான் இவனும் விடமால்,
இப்படியே, இருவரும் ஒருவரை ஒருவரை மாற்றி கலாய்த்துக்கொண்டு ,காலை வாரி கொண்டு படத்தையும் பார்த்துவிட்டு ,வீட்டிற்கு வந்து ஒரு குட்டி தூக்கமும் போட்டு எழுந்தார்கள்.
இரவு 9 மணி போல் வித்யா , வேலு இருவரும் வீட்டிற்குள் நுழைய..
” எங்கடா போயிட்டு வரீங்க ?இவ்வளவு நேரம்..காலைல போனீங்க மணி இப்போ என்ன ஆகுது ?இப்போதான் வரீங்க ?மதியம் போன் பண்ணாலும் எடுக்கவே இல்ல, சாப்டீங்களா இல்லையா மதிய சாப்பாடு?என்றார் எழில்..
தன் தாயைப் பார்த்த, தேவ்”போகும் போது எங்க போறீங்கன்னு கேட்க கூடாதுன்னு சொன்ன ?வரும்போது எங்க போயிட்டு வரீங்கன்னு கேட்க கூடாதுன்னு உன் புருஷன் கிட்ட சொல்லிக் கொடுத்து வளர்க்க மாட்டியா தனம் ?”என்றான் நக்கலாக.. அவர் காதில் விழும் படியாக, ஆனால், மெதுவாக கேட்டான்….
அவரோ தனது தவப்புதல்வனை முறைக்க,
“இப்படி முறைச்சிட்டா மட்டும் பயந்து விடுவோமா? அவங்களே காலையில போய், இப்போதுதான் வராங்க, ஏதாவது வேலையா போயிருப்பாங்க , போன் பண்ணி போன் எடுக்கலைன்னா ஏதாவது முக்கியமான வேலையா இருந்திருப்பாங்கன்னு யோசிக்க வேணாமா? வீட்டுக்குள்ள வந்ததும் எங்க போன? என்ன? ஏதுனு ?கேள்வி கேட்டுட்டு “என்று முகத்தை சுழிக்க,
“அத சொல்ற கழுதையை பாரு “என்று நக்கல் அடித்தார் எழில்..
” அவர் அப்படித்தான் நீங்க போய் பிரஷ் ஆகுங்க டா” என்றான்.
“சரி “என்று இருவரும் ரூமுக்குள் சென்று தங்களை சுத்தப்படுத்தி கொண்டுவர ,
அதன் பிறகு, அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.
சாப்பிட்டு முடிக்கும் வரை யாரும் இந்த கேள்வியும் கேட்டுக் கொள்ளவில்லை..
சாப்பிட்டு முடித்த பிறகு, வேலு எழுந்து என்று ஒரு கவரை எடுத்துக் கொண்டு வந்து தேவ் கையில் தர.
“என்ன டா?” என்று கேட்டுக் கொண்டே அதை பிரித்தவன்.
கோபத்துடன் இருவரையும் பார்த்தான்..
செம.