சஹானா வாசு தன்னை அவமான படுத்தியத்தை எண்ணி கோவமடைந்து சைத்துவை எதோ செய்ய வேண்டும் என்று எண்ணி வசந்திக்கு அழைத்தாள்…
“அம்மா சைந்தவி இன்னும் திருத்தல ம்மா… யாரோ ஒரு பையன் கூட வந்து கார்ல இருந்து இறங்குறா…. அவளும் அவனும் லவ் பண்றாங்க போல… நான் போய் அம்மா உன்னை நம்பி இங்க அனுப்பி வெச்சதுக்கு இப்படி பண்ணலாமா அப்டினு கேட்டேன் ம்மா… அதுக்கு அவ நீ யாரு என்னை கேள்வி கேட்க நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்…. அப்டினு திமிரா சொல்றா ம்மா…” என்று அப்படியே மாற்றி கூறினாள்…
வேறு யாரவது இருந்தால் அவள் கூறியதை நம்பி இருப்பர்… ஆனால் வசந்தி நம்பவில்லை… அது மட்டுமில்லாமல் சைத்து வாசுவுடன் தான் சென்றாள் என ஏற்கனவே இளவரசி அவரிடம் கூறிவிட்டார்..
என்ன தான் சைத்துவை அவர்கள் வீட்டு பெண்ணாக பார்த்தாலும் சைத்து வசந்தியின் பெண்ணல்லவா…. சைத்துவை வீட்டிற்கு அழைத்து வரும் போது வசந்தியிடம் கூறிவிட்டு தான் வீட்டிற்கு அழைத்து செல்வார்…
இன்றும் அப்படி தான் அவரிடம் கூறிவிட்டார்… அதனால் வசந்தி சஹானாவிடம் “அவ என்கிட்ட சொல்லிட்டு தான் வெளிய போனா… நான் தான் அவங்க கூட போக சொன்னேன்… நீ எதுக்கு அங்க போனியோ அத மட்டும் செய்…. தேவ இல்லாத வேலை செஞ்சி எதோ பிரச்சனை வந்தா நான் உனக்காக எல்லாம் வந்து பேச மாட்டேன்… ஒழுங்கா இருந்துக்கோ…” என்று கூறி வைத்துவிட்டார்…
“ச்சே இவ எப்படி இவரு கூட…. இவளால நான் வாசு கிட்ட திட்டி வாங்கிட்டேன்…. இவளை வாசு கிட்ட இருந்து தள்ளி இருக்க சொல்லனும்… ஹாஸ்டல்ல தானு இருப்பா நாம பாத்துக்கலாம்…” என்று நினைத்து வகுப்புக்கு சென்றுவிட்டாள்…
நல்லவேலையாக சைத்துவுக்கு வேறு பிளாக் ஒதுக்கப்பட்டது… அதனால் சஹானாவின் தொல்லை இல்லாமல் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள்… ஆனால் உணவு எல்லாருக்கும் ஒரே இடத்தில் தான் கொடுக்கப்பட்டது… அதனால் தான் இன்று சைத்து வாசுவிடம் கூறியது…
காலேஜ் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதால் சஹானாவால் சைத்துவை எதுவும் செய்ய முடியவில்லை…
நாட்கள் அதன்போக்கில் செல்ல சைத்து அந்த கல்லூரியில் கொஞ்சம் பிரபலம் ஆகி கொண்டு வந்தாள்…. அவளின் படிப்பு முக்கிய காரணமாக இருந்தாலும் அவளின் ஓவியம் மிகவும் பிரபலமாகியது…
அவளின் பெயரை கேட்டாலே சஹானா கோவமடைந்து விடுகிறாள்… தற்போது எல்லாம் அதிகம் சைத்துவின் பெயர் அவள் காதில் விழுகிறது…
சைத்து இப்போது தான் கல்லூரி சேர்ந்தது போல் இருந்தது ஆனால் அதற்குள் அவள் முதல் வருடபடிப்பை முடித்து இரண்டாம் வருடத்திற்கு சென்று இருந்தாள்…
கல்லூரியில் நிறைய பேர் அவளிடம் பேசினாலும் திவ்யா மட்டும் தான் அவளின் தோழி… அன்று நடந்ததை அவளிடம் சொல்லாமல் உறங்க மாட்டாள்…
திவ்யாவும் அப்படி தான் விடுமுறை நாள் என்றால் இருவரும் கல்லூரி அருகில் இருக்கும் பார்க்கில் சந்தித்து பேசிக் கொள்வர்…
விடுமுறை நாளில் சஹானா சைத்துவை தேடுவாள்… ஆனால் அவள் கண்ணில் சிக்க மாட்டாள்… ஏன் என்றால் அவள் தான் திவ்யாவை பார்க்க சென்றுவிடுவாளே… ஆனால் சஹானா அதை தவறாக புரிந்துகொள்வாள்… அவள் வாசுவை பார்க்க தான் போகிறாள் என்று எண்ணி சைத்துவின் மேல் வன்மத்தை இன்னும் வளர்த்து கொண்டாள்…
இத்தனை நாள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளவே இல்லை… ஆனால் இன்று சஹானா நடந்து வந்து கொண்டு இருக்க சைத்து ஆசிரியர் அழைத்தால் வேகமாக படியில் நடந்து வந்து கொண்டு இருந்தாள்…
சஹானாவின் மூளைக்கு கேவலமான விஷயம் ஒன்று தோன்றி அதை நடைமுறையும் படுத்தினாள்…
வேகமாக வந்தவளை தெரியாமல் கால் தவறி இடிப்பதை போல் வேகமாக இடித்து படிக்கட்டில் இருந்து கீழே தள்ளி இருந்தாள்… சைத்து கால் தவறி படியில் உருண்டு தலையில் அடிப்பட்டு மயக்கமடைந்து இருந்தாள்…
அவளும் காலில் அடிபட்டதை போல் நடித்து தன் மேல் தவறு இல்லதை போல் காட்டி அங்கு இருந்து தன் தோழியின் உதவியுடன் நொண்டி நொண்டி நடந்து சென்று விட்டாள்…
மயக்கமடைந்த சைத்துவை கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து இளவரசியிடம் தகவல் கூறினர்…
இளவரசி அன்று கோவிலுக்கு சென்று இருக்க அவர் போனை எடுக்கவில்லை… சக்ரவர்த்தியும் அவருடன் இருந்ததால் அவரும் எடுக்கவில்லை…. அதனால் வேறு வழி இல்லாமல் வாசுவிற்கு அழைத்து விவரத்தை கூறினர்…
அன்று அவனுக்கும் முக்கிய மீட்டிங் இருக்க முதலில் காலை எடுக்கவில்லை… கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அழைத்த போது தான் காலை எடுத்தான்…
அவனிடம் கூறிய பத்து நிமிடத்தில் மருத்துவமனையில் இருந்தான்…. சைத்து இன்னும் மருத்துவமனையில் இருக்க எப்படி கீழே விழுந்தால் என மற்றவர்களிடம் கேட்டு சிசிடிவியை செக் செய்து பார்த்தான்…
மற்றவர்களுக்கு பார்த்தால் அவள் கால் தவறி தான் சைத்து மீது விழுந்து இருப்பாள் என கூறுவர்…
ஆனால் வாசுவிற்கு தெரியுமே அவளை பற்றி அவளின் கண்களை பார்த்தே அவள் வேண்டுமென்று தான் செய்தாள் என நன்றாக தெரிந்தது…
ஆனால் அவளை இதில் யாரும் குற்றம் கூற மாட்டார்கள்…. அந்த அளவிற்கு உடனடியாக பிளான் செய்து அவள் மேல் தப்பு இல்லாததை போல் செய்து விட்டாள்…
கல்லூரியில் இருப்பது சிறிய மருத்துவமனை தான் எனவே அவளை தங்கள் மருத்துவமனைக்கு மாற்றிவிட்டான்… அனைவருக்கும் ஆச்சர்யம் வாசு அதிகம் பேச மாட்டான் அவனின் கோவத்தை பற்றியும் தெரியும்… ஆனால் மருத்துவரிடம் கேள்விகளை கேட்டு தள்ளிவிட்டான்… அவன் கண்களில் சிறு பதட்டம்… அந்த பதட்டம் கூறியது சைத்து அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை…
இளவரசிக்கு தகவல் சென்று அவரும் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்…
அவரிடம் சஹானா தள்ளி விட்டதை கூறி “ம்மா அந்த பொண்ணு இனிமே இப்படி பண்ணதுனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது… சவி மேல சின்ன காயம் பட்டாலும் அந்த பொண்ணு அவ்வளவு தான்…. அவ அம்மா கிட்ட சொல்லிடுங்க” என்று கூறி சென்றுவிட்டான்…
இளவரசி சக்ரவர்த்தி வரதராஜன் கோகிலா நால்வரும் அங்கு தான் இருந்தனர்… இப்போது அவன் சைத்து என்னவள் என மறைமுகமாக கூறி சென்றானா இல்லை அந்த பெண்ணை அமைதியாக இருக்க சொன்னானா என்று பார்த்து கொண்டு இருந்தனர்…
வாசு சிசிடிவி வீடியோவை இளவரசிக்கு அனுப்பி இருக்க அவர் அதை வசந்திக்கு அனுப்பிவிட்டு “உங்க பொண்ணு என்ன பண்ணி இருக்கானு பாருங்க… சொந்த தங்கச்சியையே கீழே தள்ளி விட்டு இருக்கா… இனிமே இந்த மாதிரி பண்ணா காலேஜை விட்டு டிஸ்மிஸ் பண்ணிடுவேன்..இன்னும் சைத்து கண்ணு முழிச்சு பாக்கல… அவளுக்கு எதோ ஆச்சுனா சைத்துவோட அக்கானு கூட பக்கம் மாட்டேன்” என்று கூறி மிரட்டி வைத்துவிட்டார்…
வசந்தி சஹானாவிற்கு அழைத்து திட்ட “ம்மா நிஜமா கால் தவறி தான் கீழ விழுந்து தான் அவ மேல விழுந்தேன் அவ மேல எனக்கு என்ன கோவம்…. எனக்கும் கால்ல அடிபட்டு இருக்கு… என்னை பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சியா….” என்று நீலி கண்ணீர் வடித்தாள்…
ஆனால் வசந்தியோ “உன்னை பத்தி எனக்கு தெரியும் சஹானா… நீ வேணும்னு தான் பண்ணி இருப்பேன்னு…. நீ உண்டு உன் வேலை உண்டுனு இருந்தா உனக்கு பிரச்சனை இல்லை… தேவ இல்லாத வேலை பாத்தா நானே உன்னை கொன்னுடுவேன்…” என்று கூறி வைத்துவிட்டு அப்போதே சைத்துவை பார்க்க கிளம்பிவிட்டார்…
அவர் வரும் போது சைத்து கண் முழித்து இருக்க இளவரசி அவளை அணைத்து கொண்டு அழுது கொண்டு இருந்தார்… சைத்து அவரை சமாதானம் செய்து கொண்டு இருந்தார்… வாசு இதை ஓரமாக நின்று பார்த்து கொண்டு இருந்தான்…
வசந்து வந்தவர் அவளின் கட்டை வருடி விட்டு “பாத்து இருக்கனும் சைந்தவி முக்கியமா உன் அக்கா கிட்ட… அவ கிட்ட பேச கூட செய்யாத… ஜாக்கிரதையா இரு..” என்று கூறினார்…
அதற்குள் மருத்துவர் வந்து தலையில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறி சைத்துவை அழைத்து சென்றுவிட்டார்…
ஸ்கேன் எடுத்து பார்த்துவிட்டு மருத்துவர் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என கூறியவுடன் தான் வாசு நிம்மதி அடைந்தான்…
வசந்தி அவளை தான் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூற இளவரசி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி விட்டார்… வசந்து வயசு பையன் இருக்கும் வீட்டில் தன் பெண்ணை விட யோசிக்க வாசு தான் வரதராஜன் வீட்டில் தங்கி கொள்வதாக கூறிவிட்டான்… அதன்பின் தான் வசந்தி சம்மதம் கூறினார்…
இளவரசியும் சைத்துவை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்… திவ்யாவும் செய்தி அறிந்து சைத்துவை பார்க்க வந்துவிட்டாள்.. அவளும் அணைத்து கொண்டு அழுக தற்போது இளவரசியே அவளை சமாதானம் செய்து சைத்து இருக்கும் வரை வீட்டில் இருக்க கூறினார்… அவள் தயங்க அவளை பேசி பேசியே ஒத்துக்கொள்ள வைத்துவிட்டார்…
(எல்லாரும் படிச்சிட்டு அந்த லைக் பட்டனை தட்டிட்டு போனா ஹாப்பி அண்ணாச்சி… அப்படியே கமெண்ட்டும் சொல்லிட்டு போனா டபுள் ஹாப்பி 😁)
Story supera pokuthu sis…
Thanks ji 🤗