சைத்து பள்ளியில் சேர்ந்ததில் இருந்து தான் சந்தோசமாக இருந்தாள்… அவளுக்கு பிடித்தது செய்தாள்…. சுதந்திர பறவையாய் சுற்றி திரிந்தாள்…
என்றாவது ஒருநாள் பள்ளிக்கு வரும் இளவரசி தற்பொழுது எல்லாம் தினமும் பள்ளிக்கு வந்து சைத்துவிடம் பேசி விட்டு தான் செல்வார்…
அவள் வகுப்பில் ஒரு சிலர் திக்கி திக்கி பேசுவதால் அவளை கேலி பேசினாலும் அவள் நல்மனதை புரிந்து கொண்டு ஒரு சிலர் அவளிடம் நட்புணர்வுடன் தான் பழகினர்…
வாசுவிற்கு கல்லூரி இருந்தாலும் வாரம் ஒருமுறையாவது இளவரசியை பார்க்க வருவதை போல் வந்து அவளை பார்த்துவிட்டு சென்றுவிடுவான்…
விடுமுறை நாட்களில் வசந்தியின் சம்மதத்துடன் தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வார்… அவளுடன் திவ்யாவும் சென்று வருவாள்…
இதுவரை தாய் தந்தை பாசத்தை உணராத திவ்யா சக்ரவர்த்தி இளவரசியிடம் உணர்ந்தாள்…. அவர்களும் அவளை மகள் போல் தான் பார்த்தனர்…
இப்படியே நாட்களும் செல்ல சைத்து பத்தாம் வகுப்பு முடித்து இருந்தாள்… இந்த இடைப்பட்ட நாட்களில் விட்ட விடுமுறையில் ஒரு முறை கூட அவள் ஊருக்கு செல்லவில்லை…
அடிக்கடி எல்லாம் இளவரசியுடன் வீட்டிற்கு செல்ல மாட்டாள்…. தற்போது பதினொன்றாம் வகுப்பு ஆரம்பிக்க மூன்று மாதங்கள் மேல் ஆகும் என்பதால் ஊருக்கு போக தயங்கி கொண்டே இருந்தாள்…
அவளுக்கு ஊருக்கு செல்லவே பிடிக்கவில்லை… சஹானாவை நினைத்தாலே அவளுக்கு பயமாய் இருந்தது… அவளை நேரில் கண்டே பல வருடங்கள் பக்கம் ஆகி விட்டது…
வசந்தி அவளை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பார்த்து வருவார்… ஆனால் ஒருநாள் கூட வீட்டிற்கு வா என்று அவளை அழைத்தது இல்லை…
அப்போது வார்டன் அவளை பார்க்க வசந்தி வந்து இருப்பதாக கூற அவள் பயந்து கொண்டே தான் சென்றாள் எங்கு தன்னை ஊருக்கு அழைத்து சென்று விடுவாரோ என்று… ஆனால் வசந்தி அவ்வாறு எல்லாம் செய்யவில்லை…
“நீ இங்க ஹாஸ்டலயே இரு… இங்க டைப்பிங் கிளாஸ் சொல்லி குடுக்குறாங்களாம் நீ அதுல சேர்ந்து கத்துக்கோ… நான் பீஸ் கட்டிட்டேன்… நான் இந்த லீவ் முடியுற வர அடிக்கடி வந்து பாத்துட்டு போறேன் பத்திரமா இரு” என்று கூறி விடைபெற்று சென்றுவிட்டார்…
அன்று இரவு திவ்யாவை கட்டிக் கொண்டு அவ்வளவு ஆட்டம்… “திவி.. நா..நா..ன் எவ்.. எவ்ளோ பயந்து போயிட்டேன் தெரியுமா… அவங்க என்னை வீ…வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாங்கனு… ஆனா அவங்க கூட்டிட்டு போகல… நான் இங்கயே தான் இருக்க ப்..ப்..போறேன்….” என்று சந்தோசமாய் கூறினாள்…
திவ்யாவிற்கு அவர்கள் வீட்டில் நடந்தது எல்லாம் தெரியும்… அதனால் அவளின் சந்தோசத்தை தன் சந்தோசம் போல் கொண்டாடினாள்…
இருவரும் நல்ல முறையில் மதிப்பெண் எடுத்து இருக்க இருவரும் மேத்ஸ் கம்ப்யூட்டர் குரூப் எடுத்தனர்…
அடுத்த இரண்டு வருடமும் நன்றாக சென்று இருக்க திவ்யா சைத்து இருவரும் பிரியும் நேரமும் வந்தது… ஆம் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நேற்று தான் முடிந்து இருக்க வசந்தி சைத்துவை அழைத்து செல்ல வந்துவிட்டார்…
திவ்யா அவளை படிக்க வைக்கும் டிரஸ்ட் ஹாஸ்டல்லுக்கு சென்றுவிடுவாள்… இருவரும் அணைத்து கொண்டு அழுதுவிட்டனர்… வசந்தி சமாதானம் செய்து சைத்துவை வீட்டிற்கு அழைத்து சென்றார்…
வீட்டில் சஹானா இருப்பாள் என பயந்து கொண்டே சென்ற சைத்துவிற்கு அவள் அங்கு இல்லாததை கண்டு கொஞ்சம் நிம்மதியுற்றாள்…
ஆம் சஹானாவையும் வசந்தி ஹாஸ்டல்லில் சேர்த்துவிட்டார்… அவள் தற்போது சக்ரவர்த்தி குழுமத்தின் கல்லூரியில் தான் ஹாஸ்டல்லில் இருந்து படிக்குறாள்…
பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளும் வந்து இருக்க சைத்து பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று இருந்தாள்… திவ்யா மூன்றாம் மதிப்பெண் எடுத்து இருந்தாள்…
பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களை பள்ளியின் சார்பில் வாழ்த்தி பரிசு குடுத்தனர்….
சைத்து திவ்யா இருவரையும் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து அசத்திவிட்டார் இளவரசி…
திவ்யாவிற்கு ஆசிரியை ஆக தான் ஆசை எனவே அவள் பிஏ(BA) தமிழ் எடுத்து இருக்க சைத்து பி.டெக் ஆர்க்கிடெக்சர்(B. tech Architecture) எடுத்து இருந்தாள்… அவளுக்கு பெரிய பெரிய கல்லூரியில் சீட் கிடைத்து இருந்தாலும் அவள் சக்ரவர்த்தி குழுமத்தின் கல்லூரியில் தான் சேர்ந்து இருந்தாள்…
சஹானா அதே கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து கொண்டு இருக்க சைந்தவி இங்கு வந்து சேர்வது அவளுக்கு சுத்தமாக விருப்பமில்லை…
ஆனால் வசந்தியை எதிரித்து பேச தைரியம் இல்லாமல் இங்கு வந்து அவளை பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து விட்டுவிட்டாள்…
சைந்தவி கல்லூரியில் சேர்ந்து ஒரு வாரம் மேல் ஆகி இருக்க சஹானாவிற்கு அவளை பார்க்கவே நேரம் அமையவில்லை… ஒரு வாரம் கழித்து தான் சைந்தவியை பார்த்தாள்… பார்த்தவளின் காதுகளில் இருந்து அவளுக்கு புகை வராதது மட்டுமே குறை….
சைத்து ஏற்கனவே அழகாக இருப்பாள்… தற்போது தன்னிடம் அன்பு காட்ட நிறைய பேர் உள்ளனர் என்ற எண்ணத்தில் அவளின் முகம் கொஞ்சம் பலபலக்க ஆரம்பித்து விட்டது…
அதுவும் அன்று இளவரசிக்கு பிறந்தநாள்… எனவே அவளையும் திவ்யாவையும் காலையே வீட்டிற்கு வர சொல்லிவிட்டார்… இருவரையும் டிரைவர் வந்து அழைத்து சென்றார்…
அனைவருக்கும் கோவிலுக்கு சென்று கடவுளை தரிசித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினர்… இன்று இளவரசியின் வீட்டில் தான் அனைவருக்கும் காலை உணவு…
சைத்துவிற்கு நீண்ட நேரமாக தன்னை யாரோ பார்த்து கொண்டு இருப்பது போல் இருந்தது… ஆனால் யார் என்று அவளால் கண்டுக்கொள்ள இயலவில்லை…
நீண்ட நேரம் கழித்து தான் வாசு பார்ப்பதை கண்டறிந்தாள்… அவளுக்கு அவன் பார்வையை உணர்ந்தேதை படபடப்பாகி விட்டாள்…
இருவரும் காலை உணவு உண்டபின் கல்லூரிக்கு புறப்பட தயாராக வாசு நான் கல்லூரிக்கு தான் கிளம்புகிறேன் நானே விட்டுவிடுகிறேன் என்று கூறி இருவரையும் அழைத்து சென்றான்…
முதலில் திவ்யாவை அவள் கல்லூரியில் விட்டபின் சைந்தவியை அழைத்து கொண்டு அவளுடைய கல்லூரிக்கு சென்றான்….
இருவருக்குமான முதல் பயணம்… வாசு முகத்தை இறுக்கமாக வைத்து இருந்தாலும் உள்ளுக்குள் ஆசையாக ரசித்து வந்தான்…
சைத்து ஒருவித யோசனையிலேயே வந்தாள்… வாசு தான் தன்னை பார்த்தானா இல்லை… அது தன் கற்பனையா என்று யோசித்து கொண்டு வந்தாள்..
அவள் நீண்ட நேரமாக யோசித்து கொண்டு வருவதை பார்த்து “என்ன மேடம் அமைதியா வரீங்க… என் கூட வரது பிடிக்கலயா…” என்று கேட்டான்…
அவன் கேட்டதில் சுயம் வந்த சைத்து “இ….இல்ல அப்ப..டி எல்.. லாம் இல்ல… கொஞ்சம் தலைவலி அது தான்.. இப்போ சரி ஆகிடிச்சி…” என்று கூறினாள்…
மீண்டும் காரில் அமைதி நிலவ நார்மல்லாக கல்லூரி பற்றி பேச ஆரம்பித்தான்… “ஒன் வீக் காலேஜ் எப்படி போச்சு… காலேஜ் எல்லாம் பிடிச்சு இருக்கா…. எதோ சேன்ஞ் பண்ணனுமா… எதுவா இருந்தாலும் சொல்லுங்க சேன்ஞ் பண்ணிக்கலாம்” என்று கூறினான்…
“காலேஜ் எல்லாம் நல்லா இருக்கு… ஆ..னா ஹாஸ்டல்ல பூட் எல்லாத்தையும் சீனியரஸ் சாப்பிட்டு மிச்சம் தான் எங்களுக்கு தராங்க…” என்று கொஞ்சம் தயக்கமாய் கூறினாள்…
“ஓகே என்கிட்ட சொல்லிட்டீங்கல இனிமே நோ ப்ரோப்லம் நான் பாத்துக்கிறேன்…” என்று கூறி முடித்து காரை காலேஜில் நிறுத்தினான்…
வாசுவுடன் சைத்துவை பார்த்தவுடன் ஆள் ஆளுக்கு கதை கட்ட ஆரம்பிக்க சஹானாவும் அவர்கள் வருவதை கோவமாக பார்த்து கொண்டு இருந்தாள்…
சஹானா நீண்ட நாட்களாக வாசுவிடம் காதலை சொல்ல காத்து இருந்தாள்… அவளுக்கு அந்த சூழ்நிலையே வரவில்லை..
ஆனால் இன்று அவனை சைத்துவிடம் பார்த்து விட்டு பயங்கரமாக கோவப்பட்டு சைத்துவை நோக்கி வேகமாக சென்றாள்…
சைத்துவின் அருகிக் சென்று கோவமாக அடித்து விட்டு “அம்மா உன்னை அம்மா படிக்க அனுப்புனா நீ ஊர் சுத்திட்டு இருக்கியா” என்று இன்னொரு அடி அடிக்க போனாள்…
ஆனால் அதற்கு முன் சஹானாவின் கை பிடித்து “உங்க அக்கா தங்கச்சி சண்டையை வெளிய போய் வெச்சுக்கோங்க… இது காலேஜ்… இந்நேரம் கிளாஸ்ல இல்லாம உங்க என்ன பண்றிங்க…” என்று சஹானாவை கோவமாக திட்டி அவளை அனுப்பி வைதான்…
ஆனால் வாசு அவளை திட்ட காரணம் சைத்து என எண்ணிக்கொண்டு அவள் மேல் இன்னும் வன்மத்தை அதிகரித்து தான் இருந்தது…