காலையில் கண் விழித்த வாசு தன் மேல் குழந்தை போல் உறங்கி கொண்டு இருக்கும் சைத்துவை தான் பார்த்து கொண்டு இருந்தான்… அவனின் எண்ணம் மீண்டும் சைத்துவை சந்தித்த நாட்களுக்கு தான் சென்றது…
அன்று விளையாடும் போது பார்த்தது தான் அதன் பின் வாசு அவளை பார்க்கவில்லை… பார்க்கும் வாய்ப்பும் ஏற்படவில்லை… அவளால் வெளியே வர முடியாத சூழ்நிலை…
சைந்தவி வயதுக்கு வந்து இருந்தாள்… பெரிதாக யாரையும் அழைத்து விஷேசம் எல்லாம் செய்யவில்லை… பக்கத்தில் இருக்கும் நான்கு ஐந்து பெண்களை மட்டும் அழைத்து தண்ணீர் ஊற்றி வீட்டில் உட்கார வைத்துவிட்டார்… ஒரு வாரம் கழித்து அவளை பள்ளிக்கு அனுப்பிவிட்டார்…
இரண்டு நாட்கள் இருந்து விட்டு வாசு ஊருக்கு கிளம்பி இருக்க அவனால் சைத்துவை பார்க்க முடியவில்லை… அவன் அங்கிருந்து கிளம்பினாலும் அவனால் அவளை மறக்க முடியவில்லை…
காதல் என்று எல்லாம் சொல்ல முடியாது… ஆனால் வாசுவின் மனதில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது… அவன் தூங்கினாலே அவளின் அந்த கோலி குண்டு போல் இருக்கும் அவள் கண்கள் தான் ஞாபகம் வந்து கொண்டு இருந்தது…. முயன்று அவளின் நினைப்பை மாற்றி தன் படிப்பில் கவனத்தை செலுத்தினான்…
மேலும் ஒரு வருடம் சென்று இருக்க இளவரசிக்கு அடிக்கடி வயிறு வலி வர ஆரம்பித்து இருந்தது… டாக்டரிடம் காட்டிய போது வயிற்றிக் கட்டி இருக்கிறது கொஞ்ச நாள் தள்ளி போனாலும் கேன்சர் வர வாய்ப்பு இருக்கிறது என்று கூறி விட்டார்…
இளவரசியின் அசைக்காக மட்டும் தான் சக்ரவர்த்தி அவரை வேலைக்கு செல்ல அனுமதித்தார்… அதனால் இனிமேல் வேலைக்கு செல்ல கூடாது என்று கண்டிப்பாய் கூறிவிட்டார்….
அவரை அழைத்து செல்ல தான் அன்று சக்ரவர்த்தி வாசு இருவரும் வந்து இருந்தனர்… இளவரசி ஊருக்கு செல்கிறார் என தெரிந்து கொண்ட ஊர் மக்கள் அவரை பார்க்க வந்து இருந்தனர்…
சைத்துவும் அங்கு தான் ஓரமாக நின்று இருந்தாள்…. அவளின் முகம் குழந்தைத்தனமாக தான் இருந்தது… ஆனால் அவள் கண் அவனை அவ்வாறு இல்லை உறுதி செய்ய கூறியது… அவளின் குழந்தைத்தனம் சுத்தமாய் மறைந்து சோகத்தை தத்து எடுத்து இருந்தது….
அது வாசுவை மிகவும் பாதித்தது… அதுவும் இளவரசி கிளம்பும் அவரை அணைத்து கொண்டு அவள் அழுத அழுகை இன்று வரை அவன் கண்களிலே நிற்கிறது…
அவளை சமாதானம் செய்து அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினார் இளவரசி… அவர் அந்த ஊரில் ஆசிரியராக மட்டும் இல்லை… அந்த ஊரில் அதிக பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி இருந்தார்… நன்றாக படிக்காத மாணவ மாணவியருக்கு தனியாக பள்ளி முடித்து வந்ததும் வகுப்பு எடுத்தார்… அதனால் தான் அவருக்கு பிரியாவிடை குடுத்து அனுப்பி வைத்தனர்…..
காரில் ஏறியவுடன் சக்ரவர்த்தி இளவரசியிடம் “அரசிம்மா ஏன் அந்த பொண்ணு உன்னை கட்டிப்பிடிச்சு அந்த அழுகை அழுதது… பார்க்கவே கஷ்டமா இருந்தது…” என்று கேட்டார்…
அவருக்கும் சைத்துவை பற்றி கூறியவர் “ரொம்ப பாவம்ங்க அந்த பொண்ணு… அந்த வயசுல அவ அனுபவிக்காத கஷ்டமே இல்லை… அவ பாசத்துக்காக ஏங்குற குட்டி குழந்தைங்க… அவங்க அம்மா அவரோட ஹஸ்பண்ட் போனதுல இருந்து ரொம்ப இறுக்கமாகிட்டாங்க… அந்த பொண்ணோட அக்காவுக்கு அவளை பிடிக்காது… ரொம்ப கஷ்டம் அவளுக்கு… அவளோட வலியை சொல்ல கூட ஆளு இல்லை.. ஒரு நாள் அழுதுட்டே இருந்தா… என்ன ஆச்சுனு கேட்டேன்… ரொம்ப வயிறு வலிக்குதுனு சொன்னா… நான் தான் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போய் என்னனு பார்த்தேன்… அவ மேல கொஞ்சமா பாசம் காட்டுனா போதும்… அவங்களுக்காக உயிரையே குடுப்பா… அந்த நாள்ல இருந்து என் மேல ரொம்ப பாசம் அவளுக்கு… இனிமே நான் அவ கூட இருக்க மாட்டேன்னு தான் அந்த அழுகை அவ… எனக்கும் அவளை அங்க விட்டுட்டு வர ரொம்ப கஷ்டமா இருக்குங்க… மாசத்துக்கு ஒரு தடவையாச்சும் போய் பாத்துட்டு வரணும்… என்று கூறி முடித்தார்… அவரின் கண்களும் அவளை பிரியும் ஏக்கம் பிரதிபலித்தது….
அவரின் ஏக்கத்தை பார்த்த சக்ரவர்த்தி மாதம் ஒரு முறை அவரை இங்கு அழைத்து வர வேண்டும் என முடிவு எடுத்தார்… அந்த முடிவை அவர் நடத்தியும் காட்டினார்…
இளவரசிக்கு அறுவை சிகிச்சை முடித்து இரண்டு மாதம் முடிந்து சைத்துவை பார்க்க அழைத்து சென்றார்… அவருடன் எதோ ஒரு காரணம் சொல்லி வாசுவும் அவருடன் சென்றான்… அன்று மட்டுமில்லை இளவரசி என்று அவளை பார்க்க சென்றாலும் வாசுவும் உடன் சென்றுவிடுவான்…
ஆனால் அவன் சைத்துவை பார்க்க வருவதை இளவரசிக்கு கூட தெரியாமல் பார்த்து கொண்டான்…
முதலில் சைத்து மேல் இருப்பது என்ன உறவு என்பதே தெரியாமல் இருந்தவன் மெது மெதுவாக அது காதல் என்பதை அறிந்து கொண்டான்… ஆனால் அவள் சிறு பெண் என புரிந்து கொண்டு தன் காதலை மறைத்து விட்டான்…
நாட்கள் அதன் போக்கில் செல்ல சஹானா சைத்துவிற்கு அதிக தொந்தரவுகளை செய்ய ஆரம்பித்து இருந்தாள்… இதனால் கவனம் படிப்பில் இருந்து விலக ஆரம்பித்தது…
வசந்தி அவளை அடித்து கேட்டும் அதற்கான காரணத்தை மட்டும் கூறவில்லை… இதற்கு காரணமும் சஹானா தான்… அவள் மிரட்டலுக்கு பயந்து மறைத்துவிட்டாள்…
ஒரு வாரம் வசந்தி அவளிடம் பேசவே இல்லை.. அவள் உறங்கிக் கொண்டும் இருக்கும் போது தூக்கத்தில் அழுது கொண்டே அனைத்தையும் உளறி கொண்டு இருந்தாள்…
சஹானாவை மிரட்டினாலும் அந்த கோவத்தையும் இவள் மீது தான் காட்டுவாள் என எண்ணிய வசந்தி அடுத்த கல்வியாண்டில் இருந்து சைத்துவை ஹாஸ்டலில் சேர்த்து விடலாம் என்று முடிவு செய்தார்..
அதை நடைமுறையும் படுத்தினார்… சஹானாவிடம் அவள் இங்கு இருந்தால் படிக்க மாட்டாள்… ஹாஸ்டல் போய் படிக்கட்டும் என்று கூறி அனுப்பிவைத்தார்…
முதலில் தனியாக இருக்க பயந்த சைந்தவியை தேற்றியது அங்கு ஏற்கனவே படித்து கொண்டு இருந்த திவ்யா தான்…. அந்த பள்ளியின் அறக்கட்டளை மூலம் படித்து கொண்டு இருக்கும் மாணவி…
மற்ற அனைவரும் சைந்தவியின் திக்கு வாயினால் அவளை கேலி செய்ய அவளுக்கு துணையாக இருந்தது திவ்யா தான்…
திவ்யாவிற்கு யாருமில்லை… அதனால் சைத்துவை தன் சகோதரி போல் பார்த்து கொண்டாள்… அவள் பள்ளியில் சேர்ந்து பதினைந்து நாட்கள் ஆகி இருக்க யாரையோ பார்த்து வேகமாக ஓடி போய் அவர்கள் முன் நின்றாள்…
தன் முன்னால் நின்றவளை பார்த்து முதலில் பயந்த அந்த நபர் சைத்துவை பார்த்து “பாப்பா நீ இங்க என்னடா பண்ற… கொஞ்சம் எனக்கு உடம்பு முடியல அது தான் உன்னை பாக்க முடியல… ஆனா நீ இந்த ஸ்கூல்ல என்ன பண்ற….” என்று கேட்டார் அந்த பள்ளியின் ஓனர் இளவரசி… ஆம் சைத்து சேர்ந்தது இளவரசியின் பள்ளியில் தான்…
சக்ரவர்த்தியின் அப்பா காலத்தில் இருந்தே பள்ளி கல்லூரி நடத்தி வருகின்றனர்…. சக்ரவர்த்தியின் தலையெடுப்பின் பின் அது இன்னும் வளர்ந்தது…. துணி கடை கார்மெண்ட்ஸ் என ஆரம்பித்து அது திறம்பட நடத்தவும் செய்தார்…
இளவரசியை அவருக்கு பெற்றோர் பார்த்த பெண்ணாக தான் தெரியும்… இளவரசி திருமணத்திற்கு முன்பே அரசு ஆசிரியையாக பணி புரிய ஆரம்பித்தார்… அவரின் ஆசைக்காக திருமணதிற்கு பிறகும் பணிக்கு அனுப்பினார்…
இளவரசிக்கு உடம்பு சரி இல்லாததால் வேலையில் இருந்து நின்ற பின் பள்ளியின் பொறுப்பை அவர் பார்த்து கொள்கிறாள்… ஒரு வாரம் அவருக்கு காய்ச்சல் அதனால் அவளை பார்க்க செல்ல முடியவில்லை… இந்த ஞாயிறு பார்க்க செல்ல வேண்டும் யோசித்து வைத்து இருந்தார்…
ஆனால் அவளை தங்கள் பள்ளியில் பார்த்தது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்…
அவளும் வீட்டில் நடந்த அனைத்தையும் கூறினாள்… வசந்தி நல்ல வேலை செய்துள்ளார் என எண்ணி சந்தோசப்பட்ட இளா அவளை தன்னுடன் தன் அறைக்கு அழைத்து சென்று கொஞ்சி தீர்த்துவிட்டார்…
அன்று வசந்தியை பார்க்க வந்த வாசு அங்கு சைத்துவை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தான்… ஆனால் அதை வெளிப்படுத்தவில்லை…
அதன்பின் நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது… சக்ரவர்த்தியிடம் கூறி இளவரசி மிகவும் சந்தோசப்பட்டார்….
இத்தனை நாள் அனுபவிக்காத பாசத்தை இளவரசியின் மூலம் அனுபவித்தாள்…. இளவரசி தன் அண்ணன் அண்ணியிடமும் கூறி இருக்க அவர்களும் இவளிடம் பாச மழையை பொழிந்தனர்…
ஆனால் அந்த பாசத்தை அவளால் அனுபவிக்க தான் தெரியவில்லை… சிறு வயதிள் இருந்து தாயிடம் திட்டு வாங்கி கொண்டு தந்தையின் பாசத்தையும் சரியாக அனுபவிக்காத அவளுக்கு இதை ஏற்றுக்கொள்ள தான் முடியவில்லை…
அவள் எதிரிபார்க்காத அளவு பாசத்தை பொழிந்தனர் அனைவரும்… தற்போது வரை அவள் மீது இருந்த அன்பு அதிகம் ஆனதே தவிர குறையவில்லை… அவள் தான் அந்த வீட்டின் செல்லப்பிள்ளை…
என்ன தான் காதம்பரியின் இரு பிள்ளைகள் இருந்தாலும் சைந்தவி தான் அந்தந்த செல்லபிள்ளை… இதில் காதம்பரிக்கு சிறு பொறாமை கூட இல்லை… சொல்லு போனால் அவள் தான் சைத்துவை தன் முதல் குழந்தை போல் பார்த்துக்கொள்வாள்…
நிகழ்காலத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்த சைந்தவி தன்னையே பார்த்து கொண்டு இருக்கும் வாசுவின் கன்னத்தை கடித்து விட்டு சிட்டாக குளியலறைக்கு ஓடிவிட்டாள்… அவளின் செயலை எண்ணி சிரித்த வாசு தானும் வேறு ரூமுக்கு சென்று பிரெஷாகி விட்டு வாக்கிங் நடக்க சென்றுவிட்டான்… சைத்துவும் குளித்துவிட்டு கீழே கோகிலா இளவரசி இருவருக்கும் உதவ வந்துவிட்டாள்…
மூவரும் சிரித்து கொண்டே வேலை செய்து கொண்டு இருக்கும் போது வீட்டிற்குள் நுழைந்த வசந்தியை பார்த்து அவள் உடம்பு நடுங்க ஆரம்பித்துவிட்டது….
(எல்லாரும் படிச்சிட்டு உங்க கருத்தையும் சொல்லிட்டு அப்படியே லைக்கும் பண்ணிட்டு போனா ஹாப்பி… 😁)
Story nalla pokuthu sis.. 🙂
Thanks ji 🤗