Loading

நன்றாக பேசிக் கொண்டு இருந்தவளின் உடலில் மெல்லிய நடுக்கத்தை உணர்ந்த மற்ற இருவரும் அவளின் பார்வை வாசலின் பக்கம் இருப்பதை பார்த்து அப்போது தான் வசந்தியை பார்த்தனர்….

அவர்கள் இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை… வசந்தி அதிகம் இங்கு வரமாட்டார்… வாசுவின் வீட்டிற்கே இந்த ஒன்றரை வருடத்தில் இரண்டு தடவை தான் வந்துள்ளார்… இன்று வரதராஜன் வீட்டிற்கு வந்தது அதிசயமாக பார்த்தனர்…

பின் சுயம் வந்து அவரை வரவேற்று குடிக்க காபி கொடுத்தனர்… சைத்து ஒரு வார்த்தை பேசவில்லை அவரிடம்… அதே போல் வசந்தியும் அவளிடம் பேசவில்லை…

இளவரசி சைத்துவின் கையை பிடித்தவர் விடவே இல்லை… அப்போது வாக்கிங் சென்று விட்டு வீட்டிற்கு வந்த வாசு வசந்தியை பார்த்து  “வாங்க” என்று மட்டும் கூறிவிட்டு “அம்மு ரூமுக்கு வா” என்று சைத்துவிடம் கூறி அறைக்கு சென்றுவிட்டான்…

 

சைத்து கொஞ்சம் பயந்து கொண்டே தான் அறைக்கு சென்றாள்….  அங்கு வாசு பால்கனியில் நின்று இருக்க ஓடி சென்று அவனை அணைத்து கொண்டாள்… அவளின் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டே இருந்தது…

 

 

வாசு சைத்துவின் திருமணம் வசந்தியின் சம்மதத்தில் நடக்கவில்லை… திருமண செய்தி அறிந்து வந்த வசந்தி செய்த செயல் சைத்துவின் மனதில் ஆழ்ந்து பதிந்துவிட்டது…. இருவரின் திருமணமும் மறுக்க முடியா சூழ்நிலையில்  தான் நடந்தது… அதை புரிந்து கொள்ளாமல் வசந்தி செய்த செயல் அவளை காயப்படுத்தி இருந்தது… ஏற்கனவே வசந்தி மீது எப்போது பயத்தில் இருக்கும் சைத்து இந்த செயலின் மூலம் இன்னும் பயந்துவிட்டாள்…

 

 

இன்று பார்த்ததும் பயந்து தான் அவள் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது… அவள் உடல் நடுங்குவதை உணர்ந்த வாசு அவளை தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டவன் அவள் முதுகில் தட்டி கொடுத்து சமாதானம் படுத்தினான்…

 

 

“அம்மு உன்கிட்ட நிறைய டைம் சொல்லிட்டேன் பயப்படக்கூடாதுனு ஆனா நீ இன்னும் பயந்துட்டே இருக்க… அவங்க அன்னிக்கு தெரியாம பண்ணிட்டாங்க… எத்தனை நாளுக்கு இப்படி பயந்துட்டே இருப்ப” என்று கூறி சமாதானம் செய்தான்…

 

 

அவளும் அவன் நெஞ்சில் முகத்தை பதித்து கொண்டே “மாமா நானும் ட்ரை பண்றேன் ஆனா அவங்களை பாத்தாலே எனக்கே தெரியாம பயம் வர ஆரம்பிக்குது….” என்று பாவமாக கூறினாள்…

 

 

“சரி அம்மு சரி பண்ணிக்கலாம் ஒரு பைவ் மினிட்ஸ் நான் குளிச்சிட்டு வரேன் கீழ போலாம்… அப்புறம் இன்னிக்கு காலேஜ் போறோம்… சோ பார்மல்லா ரெடி ஆகிட்டு வா” என்று கூறி குளிக்க சென்று விட்டான்…

 

 

அவளும் தன்னிடம் இருக்கும் புடவையை எடுத்து கட்ட ஆரம்பித்தாள்… இரண்டு நிமிடத்தில் ரெடியானவள் அவனுக்காக காத்து கொண்டு இருக்க ஆரம்பித்தாள்… அவனும் வந்தவன் தானும் தயாராகி அவளுக்கு நெற்றி முத்தமிட்டு இருவரும் கீழே சென்றனர்….

 

 

 

வழக்கம் போல் ஜோடியாக வரும் இருவரையும் இளவரசி தன்னை மறந்து ரசிக்க தான் செய்வார்… இது வீட்டில் தினமும் நடக்கும் விஷயம்… இன்றும் அப்படி தான் ரசித்து கொண்டு இருந்தார்…

 

 

கம்பீரமாக வாசு நடந்து வர அவன் கையை பிடித்து கொண்டு பூனைக்குட்டியாய் வரும் சைத்துவை வசந்தியே ஒரு நிமிடம் ரசிக்க தான் செய்தார்…

 

 

அதற்குள் சக்ரவர்த்தியும் வராதராஜனும் வந்து இருந்தனர்…. அனைவரும் வந்து இருக்க வசந்தி பேச ஆரம்பித்தார்…

 

 

“சஹானா செஞ்சது தப்பு தான் மன்னிச்சுடுங்க…. நான் இங்க அடிக்கடி வந்துட்டு போனா அவ ஆட்டம் அதிகமா இருக்கும் தான் அதனால தான் நான் வரது இல்ல… ஆனா அவ இங்க அதிக குழப்பம் பண்ணி இருக்கானு தெரியும்… அதுக்கு நான் மன்னிப்பு கேட்குறேன்…” என்று மனதார மன்னிப்பு கேட்டார்…

 

 

இளவரசி தான் “நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்குறீங்க… நீங்க என்ன தப்பு பண்ணீங்க… விடுங்க உங்க பெரிய பொண்ணு பண்ண தப்புக்கு நீங்க ஒன்னும் ப்பண்ண முடியாது… மன்னிப்பு கேட்டு சங்கட படுத்தாதீங்க…. கண்டிப்பா விடியகாலைல வீட்டுல இருந்து கிளம்பி இருப்பிங்க… ரூமுக்கு போய் பிரெஷாகிட்டு வாங்க” என்று ரூமை காட்டினார்…

 

அவர் மறுத்து எதோ கூற வர “கண்டிப்பா ஒரு நாளாச்சும் இருந்துட்டு தான் போகனும் மறுத்து பேசாதீங்க…” என்று அறைக்கு அனுப்பி வைத்தார் இளவரசி…

 

 

 

அவரும் பிரெஷாகி வர அனைவரும் காலை உணவை உண்டனர்…  அனைவரும் உண்டு முடித்ததும் வாசு “நான் இன்னிக்கு அம்முவை காலேஜுக்கு கூட்டிட்டு போறேன்… கொஞ்ச கொஞ்சமா பொறுப்பை பாத்துக்க ஆரம்பிக்கட்டும்…” என்று கூறினான்…

 

 

அனைவரும் அவனின் பேச்சுக்கு மறுப்பு கூறவில்லை… அனைவரிடமும் விடைபெற்று இருவரும் காரில் ஏறி கல்லூரிக்கு கிளம்பினர்….

 

 

முதலில் இருவரும் திருச்சியில் புகழ்மிக்க உச்சி பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பினர்…

 

 

சைத்து அவனையே திரும்பி திரும்பி பார்த்து கொண்டு வர “என்ன அம்மு எதுக்கு என்னை பாத்துட்டு வர… மாமா என்ன அவளோ இருக்கேனா என்ன..” என்று கண் அடித்து கேட்டான்…

 

“ப்ச் மாமா… நான் காலேஜ் வந்து என்ன பண்ண போறேன்…” என்று கேட்டாள்…

 

“அம்மு அம்மா ஸ்கூல் பாத்துக்குறாங்க… நீ காலேஜ் பாத்துக்கோ… அப்பாவும் நானும் வேற பாத்துப்போம்ல… நீ எனக்கே எவ்வளவு ஐடியாஸ் தர… அதை நீயே எக்சீகுட்(execute) பண்ணலாம்… எவ்வளவு நாள் வீட்டுலயே இருப்ப… நீ எங்க எல்லாரையும் விட நீ நல்லா பாத்துப்ப…  அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு… என் நம்பிக்கையை காப்பாத்துவல அம்மு” என்று எதிர்பார்ப்புடன் கேட்டான்…

 

 

அவளும் அவனின் எதிர்பார்ப்பை உணர்ந்து “கண்டிப்பா மாமா…” உறுதியுடன் கூறி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்…

 

அவனும் அவளுக்கு உச்சில் முத்தமிட்டு கல்லூரியில் கொண்டு போய் வண்டியை நிறுத்தினான்.. முதன்நாளில் அவளை கல்லூரியை சுற்றி பார்க்க கூறினான்… 

 

 

அவளும் ஒரு மேமின் உதவியுடன் சுற்றி பார்த்தாள்… அவள் படித்த கல்லூரி தான்… ஆனால் மீண்டும் ஒரு முறை தன்னைக்கு மறந்து சுற்றி பார்த்தாள்… இந்த கல்லூரி அவளுக்கு பல நல்ல நினைவுகளை தந்து இருந்தாலும் சில கெட்ட நினைவுகளையும் தந்து இருந்தது… 

 

 

இந்த ஒன்றரை வருடத்தில் மிகவும் மாறி இருந்தது…. அந்த கெட்ட நினைவுகளால் தான் அவள் கல்லூரிக்கு வந்தும் ஒன்றரை வருடம் ஆகி இருந்தது…

 

 

இன்னும் என்ன என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை மனதில் குறித்து கொண்டு வாசுவிடம் சென்றாள்…. அன்று அது மட்டும்  அன்று போதும்  என நினைத்து வாசு அவளை தன்னுடன் கார்மெண்ட்ஸ்க்கு அழைத்து சென்றுவிட்டான்…

 

 

 

வீட்டில் இருவரும் சென்றவுடன் இளவரசி வசந்தியிடம் “என்னடா இவ இப்படி சொல்றாளேனு  தப்பா நினைக்காதீங்க… உங்க பெரிய பொண்ணு பண்ணதுக்கு வாசு எதுவும் செய்யாம இருந்தது பெரிய விஷயம்… இனிமேலும் அப்படியே இருப்பானா தெரியாது… தயவு செஞ்சு உங்க பொண்ணை அமைதியா இருக்க சொல்லுங்க… அவன் அதிகமா கோவப்படுவான்… ஆனா அவன் அமைதியா அடங்கி இருக்க ஒரே ஆளு சைத்து மட்டும் தான்…  அவ விஷயத்துல யாரோ பிரச்சனை பண்ணா அவங்களை சும்மா விட மாட்டான்…” என்று வலியுறுத்தி கூறினார்….

 

 

வசந்தி அமைதியாகவே இருக்க மீண்டும் இளவரசியே “என்னடா பெத்த பையனை இப்படி சொல்றானு நினைக்காதிங்க… அவன் கோவம்னு வந்துட்டா யார் என்னனு பாக்க மாட்டான்… எங்களையே எத்தனை தடவ திட்டி இருக்கான் தெரியுமா… ஆனா அவன் அவனோட கோவத்தை சைத்து கிட்ட மட்டும் காட்ட மாட்டான்… அவளே தப்பு பண்ணி இருந்தாலும் காட்ட மாட்டான்… அவன் அவ மேல அவளோ ஆசை வெச்சு இருக்கான்.. அதனால உங்க பெரிய பொண்ணை அமைதியா இருக்க சொல்லுங்க” என்று கூறினார்…

 

 

வசந்தியும் புரியுது என்று தலை அசைத்து “வேலைக்கு பெர்மிசன் கேட்டுட்டு தான் வந்து இருக்கேன்… சைந்தவியும் மாப்பிளையும் வந்தா சொல்லிடுங்க… நான் கிளம்புறேன்” என்று கூறி கிளம்பிவிட்டார்… யார் கூறியும் கேட்கவில்லை…

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்