Loading

குரு வசந்தி இரண்டாவது மகள் தான் சைந்தவி…   குண்டு கன்னகளுடன் பார்க்க அள்ளி அணைத்து கொஞ்சுவது போல் இருப்பாள்… அந்த அழகு தான் அவளுக்கு விணையாகி போனது…

சைந்தவிக்கு மூத்தவள் ஒருத்தி உள்ளாள்… அவளும் சைத்து போல அழகாக தான் இருப்பாள்.. ஆனால் கொஞ்சம் திமிர் அதிகம்… முக அமைப்பு சைந்தவிக்கு குருவின் அம்மா போல் இருக்கும்… அதுவே வசந்தி  சைந்தவி மேல் கோவப்பட காரணமாக இருக்கும்….

தான் மட்டும் ராணியாய் இருந்த வீட்டில் தனக்கு அடுத்த பிறந்த சைந்தவியை அனைவரும் கொண்டாடுவதால் சைந்தவியின் அக்கா சஹானாவுக்கு சைந்தவியின் மேல் வெறுப்பு வர காரணமாக இருந்தது… 

வசந்தி எப்போதும் சைந்தவி மேல் வெறுப்பை காட்ட மாட்டார்… எப்போது குருவுடன் சண்டையோ அன்று சைந்தவிக்கு அடி தான்… அது அவளுக்கு பழகி இருந்தது…

சஹானா சைந்தவியை திட்டு வாங்க வைப்பாள்… ஆனால் வசந்தி கோவப்பட்டு அனைத்துக்கும் திட்ட மாட்டார்… விசாரித்து தான் திட்டுவார்… அந்த தவறை சைந்தவி செய்து இருந்தாள் அவளுக்கு கண்டிப்பாக அன்று திட்டு விழும்…. 

குருவும் வசந்தியும் காதல் திருமணம் செய்தவர்கள் தான்… ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல இருவருக்கும் சிறு சிறு விஷயத்துக்கு எல்லாம் பெரிய சண்டை வர ஆரம்பித்து இருந்தது…

சைத்துவிற்கு ஒரு பத்து வயது இருக்கும்…. அப்போது குரு வசந்தி இருவருக்கும் பயங்கர சண்டை வர வசந்தியுடன் வாழ பிடிக்காத குரு யாரை பற்றியும் கவலைப்படாமல் வீட்டை விட்டு சென்று இருந்தார்…

இரண்டு நாளில் திரும்பி வராமல் இருந்த குருவை பார்த்து வசந்திக்கு பயமாகிவிட்டது… என்ன தான் அவருடன் சண்டை என்றாலும் குரு அவரின் காதல் கணவன் அல்லவா… வசந்திக்கும் குருவை விட்டால் யாருமில்லை…

ஆனால் குரு வசந்திக்கு தேவையான அனைத்தையும் செய்து விட்டு தான் சென்று இருந்தார்…. அவருக்கு பொருளாதார சிக்கல் இல்லாமல் செய்துவிட்டு தான் சென்று இருந்தார்…

ஒரு வாரம் கழித்து வசந்திக்கு ஒரு லெட்டர் வந்தது… அதில் “இனிமே நம்ம ரெண்டு பேருக்கும் சரி வராது வசு… ரெண்டு பேருக்கும் ஈகோ அதிகமா இருக்கு… இனிமே ஒன்னா வாழ்ந்தா  சண்டை அதிகம் தான் ஆகும்… நீயும் நிம்மதியா இருக்க முடியாது… என்னாலையும் முடியாது… அதனால் நாம பிரியுறது நல்லது…. நான் உன்னை விட்டு பிரிஞ்சு போனாலும் என்னிக்கும் நீ மட்டும் தான் என் மனைவி…. உனக்கு எந்த பிரச்சனையும் வராது… பணப்பிரச்சனையும் உனக்கு வரவே வராது… அதுக்கான ஏற்பாடு பண்ணிட்டேன்…  அன்னிக்கு நடந்த சண்டைல என்னை ரொம்ப காயப்படுத்திட்ட நீ… என்னால அதை தாங்கவே முடியல… நீ என்னை திட்டுனா கூட பரவாயில்ல… ஆனா நீ நம்ம காதலை அசிங்க படுத்திட்ட… அது தான் உன்னை விட்டுட்டு வர காரணம்… திரும்பியும் சொல்றேன்… நீ மட்டும் தான் என் மனைவி… என்னை மறக்க மட்டும் செய்யாத” என்று கூறி எழுதி முடித்து இருந்தார்…

அதை பார்த்து வசந்தி கண்ணீர் எல்லாம் விடவில்லை… முன் இருந்ததை விட இன்னும் இறுகி தான் போனார்… அந்த இறுக்கம் அதிகம் பாதித்தது சைந்தவியை தான்…

அவள் எப்போதும் அப்பா செல்லம்… அப்பா இல்லாமல் அதிகம் பாதிக்கப்பட்டாள்…. அழுது கொண்டே இருந்த சைந்தவியை பார்த்து கோவமடைந்த வசந்தி குருவின் மேல் இருந்த கோவத்தையும் சேர்த்து சைந்தவியின் மேல் தான் காட்டினார்…

சைந்தவி சிறு வயது முதலே கொஞ்சம் திக்கு வாய்… அது மட்டும் இல்லாமல் எழுத்து உச்சரிப்பு சரியாக வராது…

சஹானா அதை வைத்து எப்போதும் கேலி செய்து கொண்டே இருப்பாள்… முதல் மூன்று மாதம் குரு இல்லாமல் மிகவும் அழுத சைந்தவி அதற்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக குரு இல்லாமல் வாழ பழகி இருந்தாள்…

வசந்தி வேலைக்கு செல்ல ஆரம்பித்து இருந்தார்… அதனால் வீட்டு வேலை இருவரின் தலை மீது விழுந்தது… ஆனால் சஹானா சைந்தவியை அடித்து தன் வேலையையும் அவள் மீது கட்டிவிட்டு ஜாலியாக இருந்து விடுவாள்…

அதனால் சைந்தவியின் மதிப்பெண்கள் குறைந்து விட்டது…. அன்று சைந்தவி வாங்கிய அடிக்கு அளவே இல்லை… 

பக்கத்து வீட்டு பெண்மணி தான் வீட்டில் அனைத்து வேலையும் சைந்தவி தான் செய்கிறாள்… அதனால் தான் அவளுக்கு மதிப்பெண் குறைந்து இருக்கும்… உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் ஒருநாள் நீயே பார் என்று கூறி சென்றுவிட்டார்…

அடுத்த நாள் வசந்தியும் பார்த்தார்… அன்று சஹானாவை போட்டு அடி வெளுத்து விட்டார்… அதனால் அவளுக்கு மேலும் மேலும் சைந்தவி மீது வெறுப்பு அதிகமாகியது….

அதனால் வசந்திக்கே தெரியாமல் சைந்தவியை காயப்படுத்த ஆரம்பித்தாள்…  

அதை இளவரசி  வாசுவிடம் கூறினார்…. “அவங்க கொஞ்சம் கோவக்காரங்க தம்பி… அந்த குட்டி பொண்ணு ரொம்ப பாவம் தெரியுமா… என் மேல ரொம்ப பாசமா இருக்கும்.. எப்பயும் ஸ்கூல்ல என் பின்னாடியே சுத்தும்… எனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிக்கும்… கண்டிப்பா அந்த பொண்ணோட அக்கா தான் இப்பயும் எதோ பண்ணி இருப்பா… அது தான் இப்படி அடிச்சி இழுத்துட்டு போறாங்க….” என்று கவலையுடன் கூறினார்…

“அவங்க அப்பா திரும்பி வரவே இல்லையா…” என்று கேட்டான் வாசு 

“இல்லை டா… ரெண்டு வருஷம் ஆயிடுச்சு…  இன்னும் திரும்பி வரல…. அவங்க கோவத்தை பார்த்து  இங்க யாரும் அவங்க கிட்ட பேசவும் முயற்சி பண்ணல… அவங்களை நிறைய பேரு தப்பா பேசுனாங்க…. ஆனா அவங்க அதை கண்டுக்கவே இல்லை… ஆனா அவங்க கோவம் எல்லாத்தையும் சைந்தவி மேல தான் காட்டுவாங்க… சரி தம்பி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… நீ போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா… உனக்கு சாப்பிட எடுத்து வைக்குறேன்” என்று கூறி உள்ளே சென்றுவிட்டார்…

வாசு சைந்தவி பற்றி தான் யோசித்து கொண்டு இருந்தான்… அந்த முகத்தை பார்த்தாலே யாருக்கும் அவளை கஷ்டப்படுத்த முடியாது… ஆனால் சொந்த அக்காவே அவளை கொடுமை செய்வது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை….  

அவனை அதன்பின் இளவரசியின் குரல் தான் மீட்டது… 

இளவரசி தான் சைந்தவிக்கு  முதலில் அறிமுகமனார்… அதுவும் அவளின் வகுப்பாசிரியராக…. ஆம் இளவரசி கொஞ்ச நாட்கள் அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிந்தார்….

அதன்பின் தவிர்க்க முடியாத காரணத்தால் வேலையில் இருந்து நின்று கொண்டார்…

முதன் முதலில் அவளை பார்த்த முகம் வாசுவின் நெஞ்சில் இன்று வரை ஆழ்ந்து நின்று இருக்கிறது… அந்த குழந்தை முகம் பதிந்து போனதால் தான் அவளை தற்போதும் குழந்தை போல் பார்த்துக்கொள்கிறானோ என்று தெரியவில்லை…

தற்போது சைந்தவி தூக்கத்தில் வாசுவை தேடினாள்… அவளின் அரவத்தில் யோசித்து கொண்டு இருந்தவன் தன்னிலை மீண்டும் அவள் அருகில் உறங்க சென்றான்….

அவளை தூக்கி தன்மேல் போட்டு கொண்டவன் அணைத்து கொண்டு உறங்கிவிட்டான்… அவளும் அவனின் அருகாமையில் நன்றாக உறங்க ஆரம்பித்து இருந்தாள்….

இங்கு சைந்தவியின் தாய் வீட்டில் வசந்தி சஹானாவை தான் திட்டி கொண்டு இருந்தார்… “ஒழுங்கா இருந்துக்கோ… அவ உன்னை என்ன பண்ணா… அவளை இப்படி வெறுக்குற… நல்லா இருக்க பிள்ளையோட வாழக்கையை அழிக்க பாத்தா பெத்த பொண்ணுனு பாக்க மாட்டேன் சோத்துல விஷத்தை வெச்சு கொன்னுடுவேன்… பண்ண மாட்டேன்னு நினைக்காத… கண்டிப்பா பண்ணிடுவேன்…” என்று மிரட்டி விட்டு உறங்க சென்றுவிட்டார்…

ஆனால் சஹானா திருந்துவது போல் தெரியவில்லை… அவள் மேலும் மேலும் சைந்தவி மேல் வன்மத்தை வளர்த்தி கொண்டாள்…

தற்போதே வசந்தியின் பேச்சை கேட்டு இருந்தாள் நன்றாக இருந்து இருக்கும்… ஆனால் திருந்தாமல் அவள் செய்ய போகும் செயலால் இதுவரை அவள் செய்த அனைத்து செயலுக்கும் பலனை அனுபவிக்க போகிறாள் விதி யாரை விட்டது….

(சைத்து பத்தி இன்னிக்கே எல்லாத்தையும் சொல்லிட்டா மீதி கதைக்கு நான் எங்க போவேன்… சோ பொறுமையா சொல்றேன்… 😁  எல்லாரும்  மறக்காம அப்படியே லைக் போட்டுட்டு கமெண்ட் பண்ணிட்டு போனீங்க இந்த சூப்பர் ஹீரோ ஹாப்பி அண்ணாச்சி…)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
5
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்