13. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்
“பிளாக் நோஓஓ” என்று கத்திய மதுராவிற்கு அருகில் கேட்ட சத்தத்தில் உயிரே போய்விட்டது..
ஆனால் யார் உயிர் போக வேண்டும் என்று பெர்னாண்டஸ் குறிவைத்தானோ அவனோ தன்னுடைய சிறு விலகலால் மிக எளிதாகவே அவனின் குறியிலிருந்து தப்பித்திருந்தான்.
அங்கிருந்து அனைவரும் ஏதோ மாயாஜால வித்தையை பார்ப்பது போல் தங்களது விழிகளை ஊன்றி நடந்தது என்ன? என்று புரியாமல் பார்க்கும் அளவிற்கு அவனிடமிருந்த வேகம் இருந்தது.
மணமேடையில் மாலையும் கழுத்துமாய் இருந்தவன் அடுத்த நொடி மாலையை கழற்றி தூர வீசிவிட்டு குதித்திறங்கி கீழே வர, மதுராவோ அதிர்ச்சி கலந்த பயத்தின் பிடியில் அவளைத் தன்னந்தனியே மணமேடையில் விட்டுவிட்டு செல்லும் கணவனையே இமை விலகாது பார்த்திருந்தாள்.
அவள் மட்டுமல்ல மண்டபத்தில் இருந்து அனைவருமே அவளைப் போலத்தான் அவனையே ஆச்சரியமாய் திகைப்பாய் பார்த்தனர்.
இதில் பெர்னாண்டஸுக்கு உதவியாக அவனை காப்பது போல் அவனது ஆட்கள் அவனை சுற்றி வந்து நிற்க, அத்தனை பேரையும் பார்த்தும் பயப்படாமல்
கீழ் இறங்கி வந்து விட்ட கருப்பசாமியின் கூர்மையான விழிகளோ அடியாட்கள் புடை சூழ நின்ற பெர்னாண்டஸை ஆழ்ந்து நோக்கி மர்மமாய் ஒரு சிரிப்பை உதிர்க்க,
அது ஆத்திரத்தில் இருந்த அந்த சைக்கோ மடையனுக்கு புரியவில்லை.
மது..மது என்று மட்டுமே அவனின் நாடி நரம்பெல்லாம் நினைப்பில் இருக்க,
தன் முன்னால் நிற்பவன் சாதாரணமானவன் இவனே சமாளிக்க முடியாதா? என்று துச்சமாய் நினைத்தவன், “யூ ப்ளடி..****” என்று கத்திய கயவனோ, “மது எனக்கு மட்டும் தான் டா சொந்தம்.. அவள வேற யாருக்கும் சொந்தமாக விடமாட்டேன் டா ..உன்ன ஒரே புல்லட்ல கொன்றலாம்ன்னு நெனச்சேன் ஆனா நீ தப்பிச்சு தப்பு பண்ணிட்ட… இப்போ உன்ன துடிக்க துடிக்க அத்தனை பேரும் முன்னாடியும் அடிச்சு ரத்தம் தெறிக்க தெறிக்க கொல்லனும்ன்னு வெறியா வருது டா..” என்றவன்
“என்னடா வேடிக்க பாத்துட்டு இருக்கீங்க அவன புடிச்சு அடிங்கடா”என்றதும் அடியாட்கள் பலரும் தங்கள் கைகளில் ஏந்தி ஆயுதத்துடன் கருப்பசாமியை தாக்க ஓடி வர… தாக்க வரும் ஒவ்வொருவரையும் அடித்து அவர்களின் ஆயுதங்களாலேயே திருப்பி அடிக்க ஆரம்பிக்க, வந்தவர்கள் எல்லாம் அடிபட்டு கீழே விழ இங்கே பெர்னாண்டஸிற்கு அதை பார்க்க பார்க்க அத்தனை எரிச்சல்..! இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று தன் ஆள் ஒருவனுக்கு கண்ணை காட்ட அதைப் புரிந்து கொண்டவனாய் கருப்பசாமியின் பின்னால் வந்தவனோ தலையில் கனத்த கட்டையால் ஓங்கி அடிக்க, கருப்பசாமி கவனித்து விலகுவதற்கு முன் அடித்த வேகத்தில் குபு குபுவென்று பெருகிய ரத்தம் அவனின் அடர்ந்த சிகையை தாண்டி காது வழியாக வழிய ஆரம்பித்தது.
அதைப் பார்த்து வஞ்சமாய் பெர்னாண்டஸ் சிரித்துக் கொண்டிருக்க… அதுவரை எப்படியாவது தங்களை காப்பாற்றி விடுவான் என்று நம்பிக்கையில் இருந்த முத்துமாணிக்கமே கருப்பசாமி தாக்கப்பட்டதால் அதிர்ந்து தான் போனார்.
தன்னை தாக்கியவனை திரும்பி ரெண்டு எத்து எத்தி எளிதாக அடித்து வீழ்த்தி விட்டாலும் தலையில் ஏற்பட்ட ரத்தக் கசிவின் காரணமாக கருப்பசாமியிடம் சிறு தடுமாற்றம் வந்திருக்க… அவனின் தடுமாற்றத்தை அறிந்து அவனின் பக்க பலமாக அவனை பற்றிக்கொண்டது அவனுக்கு பழக்கப்பட்ட பட்டு போன்ற மிருதுவான கைகள்.
அவன் நிமிர்ந்துப் பார்க்க,
“பிளாக்..பிளாக்”என்ற அழுகுரல், பயத்தில் கைகள் நடுங்க அவனின் காயத்தையும் உதிரத்தையும் பார்த்து அவளுக்கு அழுகை தாங்கவில்லை.
அதுவரை மணமேடையில் பயமும் கலக்கமும் கலந்து அங்கு நடந்ததை பார்த்து இதய துடிப்பு அதிகமாக.. நடுங்கிக் கொண்டிருந்தவளை
மேலும் பயமுறுத்தியது அவனுக்கு ஏற்பட்ட தாக்குதலும் உதிரமும்.. அவனின் உதிரத்தை பார்த்ததும் அதற்கு மேல் அங்கேயே நிற்க முடியாமல் அவனிடம் விரைந்தோடி வந்திருந்தாள் போலும்… மேல் மூச்சு வாங்க தன் கைகளை பற்றி கொண்டிருந்தவளைப் பார்த்தவனுக்குள் சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வு… ஒருவேளை குற்ற உணர்வோ?
“ஐ அம் ஃபைன் மதுரா.. லீவ் மீ” என்று தன் கையை பரிதவிப்பான பார்வையுடன் பிடித்துக் கொண்டிருந்தவளிடம் சொன்னவன், அவளை விலக்கி விட முயல, அவளோ நான் போக மாட்டேன் உன்னை விட்டு ..
என்பது போல் மறுப்பாய் தலையசைத்தவள் சிறு பிள்ளையாய் அவனின் கையை இறுக்கமாய் பிடித்துக் கொண்டாள். ஜில்லென்று குளிர்ந்து போன அவளின் கைகள்... அவளின் பயத்தின் அளவை சொல்ல… அவளை ஆறுதல் படுத்த கூட நேரம் இல்லாமல் சூழ்நிலை தடுக்க,
முதலில் அவளின் கைகளை உதறி விட்டவன், அதில் தடுமாறி அவள் கீழே விழுந்து விட, அவளைத் தூக்க முயன்ற கைகளை கட்டுப்படுத்திக் கொண்டு…
“ப்ச்ச்..ஏய்ய் அறிவு இருக்கா இல்லையா? இன்னும் சின்ன புள்ள மாதிரி சுச்சுவேஷன் புரியாம நடந்துகிட்டு…ப்ச்ச் அழுது சீன் கிரேட் பண்ணாம ஓரமா போ…” என்று அழுத்தமாய் எரிச்சலாய் சொன்னவனின் குரலிலும் கீழே விழுந்ததில் அவளின் வளையல் ஒன்று அவளை மணிக்கட்டிலேயே ஆழமாய் குத்தி கிழித்திருக்க, அது தந்த வலியை விட அவனின் இத்தகைய பேச்சு தந்த வலியே அவளின் நெஞ்சத்தை கீறி உயிர் வலியை தர.. விழி நீர் நிறைந்து திகைத்து மலங்க மலங்க பார்க்கவும்.. அவனுள் இரக்கம் சுரக்க, அதை தனக்குள் மறைத்து பொய்யாய் முகத்தை திருப்பியவனுக்குள் சொல்ல முடியாத வலி..!
அதற்குள் ஓரமாய் நின்ற பிரகதீஷ் வேகமாய் வந்து மதுராவை தூக்கி விட்டவன் கருப்பசாமியை முறைத்தபடி அவளை இழுத்து ஓரமாய் நிற்க வைத்திருக்க,
இனி அவன் மதுராவை பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கையில்
கருப்பசாமியின் கண்கள் அவளை மறந்து பெர்னாண்டஸை விழியிடுங்க பார்த்தவுடன் கிரகித்து அவனின் அடுத்த செயலை உணர்ந்தவனின் இதழ்கள் மீண்டும் மர்மமாய் வளைந்தது.
தன்னை பொருட்டாகவே மதிக்காமல் மதுராவின் அவனுடனான நெருக்கத்தையும் அவர்களின் ஊடலையும் பார்த்துக் கொதித்துப் போன பெர்னாண்டஸோ, இதற்கு மேல் இவனை விட்டு வைக்க கூடாது.. என்று அவன் எதிர்பார்க்காத நொடி
மீண்டும் அவனை சுடும் நோக்கில் ஆயுதத்தை அவனை நோக்கி பிடித்து ட்ரிக்கரை அழுத்த போக துப்பாக்கி சத்தத்துடன் அவன் கையில் இருந்த பிஸ்டல் கீழே விழுந்தது ஆஆஆ என்ற அலறல் சத்தத்துடன்.
ஆம் இவன் சுடுவதற்கு முன்பே கருப்பசாமி அவனை தோள்பட்டையில் சுட்டிருந்தான்.
தோள்பட்டையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்க, வலியில் துடித்து போன பெர்னாண்டஸின் கண்களோ மிக லாபகமாக கால்சாராய்க்குள் மறைத்து வைத்திருந்த தன் கைத் துப்பாக்கியை பயன்படுத்தி அவனை சுட்டதும் இல்லாமல் இன்னும் மூன்று முறை வெவ்வேறு இடங்களில் குறிப்பார்த்து சுட்டு அதிலிருந்து வெளியேறிய புகையை ஸ்டைலாக உதடுகளை குவித்த ஊதிய கருப்பசாமியை பார்த்து விழியிடுங்க.. யோசித்தவனுக்குள் எச்சரிக்கை மணி அடிக்க..
தான் ஏதோ பெரிய வலைக்குள் சிக்கியதாக உணர்ந்தவன், ஆங்காங்கே நின்ற மீதம் இருந்த அடியாட்களிடம், “போய் கதவை ஓபன் பண்ணுங்க டா” என்று கத்திவிட்டு …டேக் டைவர்ஷன் எடுப்பது போல் ரத்தம் வழிந்த தோள்பட்டையை மற்றொரு கையால் அழுத்தி பிடித்தபடி தப்பிப்பதற்காக திரும்பி ஓட பார்க்க, அந்தோ பரிதாபம் அதற்குள் மண்டபத்தின் மேல் தளத்தில் இருந்தும் சமையல் பராமரிக்கும் இடத்திலிருந்தும் திபுவென திபுவென துப்பாக்கி ஏந்தியபடி சூழ்ந்த ஒரு கூட்டத்தால் சுற்றி வளைக்கப்பட்டான் அவனின் கூட்டத்துடன்..
இத்தனை பேர் எங்கிருந்து வந்தார்கள்? அதுவும் கல்யாண மண்டபத்தில் சமையல் வேலை செய்பவர்களிடம் அலங்கார வேலைகள் செய்தவர்களும் கூட துப்பாக்கி ஏந்தியபடி இருப்பதை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிதான்.
கருப்பசாமியோ, யாரின் பார்வைக்கும் அலட்டிக் கொள்ளாமல், தனது முழு உயரத்திற்கு நிமிர்ந்தவன்,
“மிஷன் ஓவர்..பாய்ஸ்.. அரெஸ்ட் ஹிம் ரைட் நவ்…அண்ட் இவங்கள வெளியே கொண்டு போற வர இங்கருந்து யாரு வெளியே போகக்கூடாது” என்று தனது அதிகாரமான குரலில் கட்டளையிட,
“எஸ்ஸ் சார்..”என்று அவனுக்கு சல்யூட் அடித்தவர்கள், அங்கிருந்தவர்களை கைது செய்ய ஆரம்பிக்க, எத்தனையோ அதிகாரிகளுக்கும் அரசுகளுக்கும் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த பெர்னாண்டஸ் இத்தனை எளிதாய் இங்கே வந்து மாட்டிக் கொண்டோமே! என்று அதிர்ச்சி கலந்த பழிவெறி மின்ன , “என்னடா போலீஸ் நாயா நீ? இப்ப என்ன அரஸ்ட் பண்ண போறியா? எனக்கு இருக்கிற பவருக்கு இன்னும் ஒரு நாள்ல வெளில வந்துடுவேன் டா.. அதுக்கப்புறம் இங்க இருக்கிற எல்லாரையும் வேட்டையாடுவேன்” என்று மதுராவையும் சுற்றி இருந்தவர்களையும் வன்மமாய் பார்த்தபடி கை விலங்கை போடவிடாமல் துள்ள,
அவனின் செயலில் கையில் இருந்த துப்பாக்கியால் நெற்றி பொட்டில் தட்டிக் கொண்ட கருப்பசாமியோ, கண்ணிமைக்கும் நேரத்தில் அவனின் காலில் சுட்டுவிட, வலியில் துடித்துப் போய் மடிந்து தரையில் விழுந்து துடித்தவனை புழுவை பார்ப்பது போல் பார்த்தவன், “வேட்டையாடுறதுக்கு முதல்ல நீ உயிரோட இருக்கணும்டா!”என்றவன் “அரெஸ்ட் ஹிம் சங்கர்” என்றவனின் குரலில் இருந்து கடுமையில் கீழே விழுந்து கிடந்தவனின் கண்களில் மரண பயம்.
மதுராவின் முகம் முழுவதும் அதிர்ச்சியும் பயமும் வியாபித்திருக்க, அடுத்தடுத்த நிகழ்வுகளின் விளைவால், கருப்பசாமி மீது அவள் வைத்திருந்த பிம்பம் சுக்கு நூறாய் உடைய அதன் கணத்தை தாங்காமல் தன் அருகில் நின்ற பிரகதீஷின் கைகளை இறுக்கமாய் பிடித்துக் கொண்டாள் அவள்.
பிரகதீஷிற்கும் இது அதிர்ச்சி தான் என்றாலும் ஒருவேளை இவன் யார் என்று தன் தந்தைக்கு முன்கூட்டியே தெரிந்திருக்குமோ? என்று சந்தேகத்துடன் அவரைப் பார்க்க, அவரோ ஜெகதீஷ் அருகில் அதிர்ச்சியுடன் தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். தன்னைப் பற்றிய உண்மையை ஓரளவு தெரிந்தவன் ஆயிற்றே! என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும் கூடவே இனி மகளுக்கு ஆபத்து இல்லை என்ற நிம்மதியும்! இருக்க..சரி அவனிடம் பேசலாம் என்று முன்னே வந்தார்.
தன் அருகில் வந்தவரை ஏறிட்டு பார்த்த கருப்பசாமியின் முகமோ, இறுக்கமாய் இரக்கமற்று இறுகிப்போய் இருக்க
அவனின் தோரணையில் அதிர்ந்தாலும் அவன் அருகில் வந்த முத்துமாணிக்கம்,
“நல்ல வேலை பண்ணின கருப்பசாமி… இவனெல்லாம் சும்மா விடக்கூடாது” என்று பயத்தை மறைத்து சாதாரணம்போல் பேசி வைக்க,
அழுத்தமாய் அவரை ஒரு பார்வை பார்த்தவன்,
“ஜெய்” என்று இன்னொரு காவலனின் பெயரைச் சொல்லி கையை நீட்ட,
ஒரு பெரிய ஃபைல் ஒன்று அவன் கைகளில் கொடுக்கப்பட்டது.
“மிஸ்டர் முத்துமாணிக்கம் ஹார்பர்ல நீங்க பண்ற ஆர்கன்ஸ் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் ட்ரக்ஸ் டிரான்ஸ்படேஷன் மாதிரியான இல்லீகல் ஆக்டிவிட்டீஸுக்கு உங்க அரசியல் அதிகாரத்த பயன்படுத்திய குற்றத்திற்காகவும் உங்களோட காலேஜ்ல ஸ்காலர்ஷிப்ல படிக்க வர ஆசிரம பெண்களை உங்களோட சுயநலத்திற்காக இந்த சைக்கோ கிட்ட கடத்தி அனுப்பின குற்றத்திற்காகவும்.. உங்கள கைது செய்றதுக்கான அரெஸ்ட் வாரண்ட்.. “
என்று வாளை விட கூர்மையான குரலில் ஒரு காகிதத்தை எடுத்து அவர் முன்னே நீட்ட, அரண்டு போய் நின்று விட்டார்.
எத்தனை வருட ரகசியம்… யாருக்கும் தெரியாது என்ற தைரியத்தில் எத்தனை எத்தனை குற்றங்கள்.. இன்று அனைத்தும் வெட்ட வெளிச்சமாகிவிட
வாய் திறந்து மறுப்பாய் கூட ஒரு வார்த்தை பேச முடியாத நிலை! சுற்றி இருந்தவர்களின் ஏளனம் கலந்த பார்வையோடு மகன்களும் மகள்களும், ‘அப்பா’ என்று கலங்கி போய் அவரைப் பார்த்த பார்வையிலேயே பாதி இறந்துவிட்டார் மனிதர்.
ஆனாலும் கடைசி முயற்சியாக,
“கருப்பசாமி நானே நேரடியா வந்து சரண்டர் ஆகிடுறேன் ஆனா இப்போ இங்க வேண்டாமே” என்று மெல்லமாய் சொன்னவரிடம்,
“லுக் மிஸ்டர் முத்துமாணிக்கம்.. நான் இப்போ உங்களுக்கு எந்த ஜாய்ஸும் தரல .. நீங்களே எங்களோட வந்துட்டா உங்களுக்கு மரியாதையா இருக்கும்.. இல்லனா உங்கள அடிச்சு இழுத்துட்டு போகவும் தயங்க மாட்டோம்” என்று எதற்கும் அசையாத கல்நெஞ்சக்காரனாய் சொல்லியவனின் கூனிக் குறுகிப் போனவரை, “ஜெய் இவர நம்ம டிபார்ட்மெண்ட் பீரோவுக்கு கூட்டிட்டு போங்க” என்றதும், அவனும் ஓகே சார் என்று சல்யூட் அடித்தபடி, “வாங்க சார்”என்று அழைத்தபடி நகர, யாரையும் பார்க்க துணிவில்லாமல் தலையை குனிந்தபடி போனார்
மண்டபத்தில் இருந்து அனைவருக்கும் அது சுட சுட பேச்சு பொருளாக மாறிவிட அனைவரும் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டனர். அத்தனை நாள் இல்லாத குறையை எல்லாம் அவர் மீது அடுக்கி அவர்களை நல்லவர்களாக காட்டிக்கொண்டனர்.
வினோதாவோ, தந்தை செய்த குற்றத்தை விட அவர் கைது செய்யப்பட்டால் சமூகத்தில் தனக்கு இருக்கும் மரியாதையும் தன் புகுந்து வீட்டில் இருக்கும் மரியாதைகள் அனைத்துமே பறிபோய் விடுமே என்ற கவலை தான் அவளுக்கு!
கணவனை பார்க்க அவனோ இதெல்லாம் உனக்கு முன்பே தெரியுமா? என்றபடி பார்த்துக் கொண்டிருந்தான்.
ஜெகதீஷ் ஏற்கனவே தந்தையின் வித்தியாசமான நடவடிக்கையின் மீது சந்தேகம் பட்டவன் தான்… ஆனால் அவரின் குற்றம் இத்தனை பெரிதாய் எண்ணிப் பார்த்ததில்லை. இந்த விஷயம் வெளியே வரும்போது தூற்றலும் அவமானமும் பிள்ளைகளான தங்களுக்கு தானே? அதை நினைக்க நினைக்கவே அத்தனை ஆத்திரம் அவனுக்கு..
பிரகதீஸும் முகம் சிவக்க அதையேதான் நினைத்தான்.
அதோடு இந்த கருப்புசாமி என்பவன் தந்தை அறிமுகப்படுத்தியவன் தானே? இவன் அடையாளத்தை மறைத்து வீடு வரை வந்திருக்கிறானே? இது கூட தெரியாமல் நாம் இருந்திருக்கிறோமே! என்று தங்கள் சிந்தனையிலேயே இருந்தவர்கள் மதுராவையும் கவனிக்கவில்லை. அவள் திருமணத்தைப் பற்றி எண்ணவும் இல்லை… தந்தையைப் பற்றியும் நாளை குற்றம் சாட்டும் சமூகத்தை எதிர்கொள்ள போகும் தங்களைப் பற்றிய பயம் மட்டுமே!
அந்த சமயத்தில் தான்
அத்தனை பேரையும் ஓரம் கட்டி விட்ட கருப்பசாமி மதுராவின் அருகே வந்தான்.
அவனைப் பார்த்தாலும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் முகம் துடைத்து வைத்தது போல் வெறித்த பார்வை பார்த்தவளைக் கவனித்தபடி இருந்தவன்,
“மதுரா” என்றான் பழைய குரலில்.
அவள் பதில் இல்லாமல் அவனையே பார்க்க,
“சாரி” என்றான் பொதுவாய்.
அவள் அப்பொழுதும் பதில் பேசாமல் அவன் முகத்திலேயே பார்வையை பதித்திருக்க,
“உண்மையிலேயே நான் ஒருத்தங்களுக்கு மன்னிப்பு கேட்கணும்னா அது உன்கிட்ட தான் மதுரா…தேவையில்லாம என்னோட மிஷன்ல உன்னையும் இழுத்து விட வேண்டியதா போச்சு… ஆனா இந்த கல்யாணம்.. நானே எதிர்பார்க்காதது…நீ என்ன தப்பா நினைச்சுக்காத… அண்ட் ஐ நோ இது உனக்கு இஷ்டம் இல்லாம நடந்த கல்யாணம் தான் பட்… எனக்கு எப்படி சொல்லன்னு தெரில…” என்றவனின் கண்கள் அவனையும் மீறி அவன் அவளுக்கு அணிவித்திருந்த பொன்னாலான மாங்கல்யத்தையே வெறித்துப் பார்க்க,
அவளோ அவனின் பார்வையை தொடர்ந்து தன் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை குனிந்து பார்த்தவளின் இதழ்கள் விரக்தியாய் ஒரு சிரிப்பை உதிர்க்க, அடுத்த நொடி தன் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை கழற்றி.. அதை அதிர்ந்து போய் பார்த்தவனின் கைகளில் கொடுத்தவள்…
“இட்ஸ் ஓகே பிளாக் நோ ப்ராப்ளம்.. அன்போட கட்டினா தான் இது தாலி இல்லனா அது ஜஸ்ட் எ கோல்ட் செயின் தானே!” என்றவள், அவன் பதில் பேசாமல் இருக்கவும்…
“ஓ சாரி ஆபிஸர் சார் நீங்க பிளாக் இல்ல ல ரியல் நேம் கூட வேறயா இருக்கலாம்… நீங்க என்ன பத்தி ஒர்ரி பண்ணிக்காதீங்க சார் உங்க கடமையை பார்த்துட்டு போங்க.. நான் உங்க லைஃப்ல குறுக்க வர மாட்டேன்” என்றவள் மிக சாதாரணமாக அவனை கடந்து சென்றாள்.
புன்னகையை தொலைத்து நடைபிணமாய் சென்றவளை பின் தொடர்ந்து சென்றனர் அவளின் சகோதரர்கள்…!
“சார் நம்ம ஃபோர்ஸ் எல்லாத்தையும் ஏத்தியாச்சு .. நீங்க வந்தா கிளம்பிடலாம்” என்று சீருடை அணிந்த காவலர் ஒருவர் அழைக்க,
தன் கைகளில் இருந்த தாலியை இறுக்கிப்பிடித்தவன் என்ன நினைத்தானோ? அதை தனது சட்டை பையில் வைத்துக்கொண்டு நிமிர்ந்து நடையுடனே மண்டபத்தை விட்டு கிளம்பினான்.
ஆனால் அவனின் முகம் வழக்கத்தை விட இறுகிப்போய் இருந்ததோ?
தொடரும்…
இந்த பதிவை பற்றிய தங்களது கருத்துக்களை பதிவிடவும் 😍🥰
போன பதிவிற்கு கமெண்ட்ஸும் லைக்ஸும் போட்டு குவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்😊♥️♥️
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
46
+1
1
+1
4
பிளாக் ஏன்டா உன்னை பிடிக்க வில்லை சொன்னவள் உனக்கு காயம் படவும் வந்தாளா?.
தேங்க் யூ சிஸ்டர் உங்க சப்போர்ட்டுக்கு 💖…மதுராவுக்கு அவ மனசே இன்னும் புரில🥰❣️
சூப்பர் எபி ♥️
தேங்க் யூ சிஸ்டர் 🥰
Avala ethiri partha episode sis… But ipati oru twist irukumnu ethiri pakala sis…
Black oru Police 🤩 super sis..
Pona epi la marriage.. intha epi la pirinjitanga… 😂😂
Waiting next episode sis… 🙂
Hehe…pirivu nirantharamanu poga poga paakalam sis ❤️😁Thank you so much sister unga comment ku❣️❣️🥰