Loading

என் உயிர் – 23 🧬

ஐந்து மணி அளவில் பனி மூட்டம் நிறைந்து இருக்க, வண்டிகளின் ஒலி எழுப்புகள் சூழ்ந்து இருக்க , அடுப்பறையின் பாத்திரங்களை உருட்டும் சத்தத்தில்  கண்களை கடினப்பட்டு திறந்தான் சஞ்சய்.

அவனின் அருகில் பார்க்க, செல்வி இல்லை. அவன் எதிர்ப்பார்த்தது தான். அவளின் வாழ்க்கை முறையை நன்றாக அறிந்து இருப்பதால் தான் அவனும் எழுந்து மனைவியை தேடிச் சென்றான்.

அவன் வெளியே வர அதற்கு முன்பே நிலவன் லிவிங் அறையில் நாளிதழை புரட்டி கொண்டிருந்தான். அடுப்பறையில் உள்ள செல்வியிடம் “செல்வி எனக்கு ஒரு காபி ” என்று கூவிக் கொண்டே நண்பனின் அருகில் தோளில் கை போட்டு அமர்ந்தான் .

அதில் நிமிர்ந்தவன் “என்னடா வரவர ஜிம்மை ரொம்ப கட் பண்ணுற ? “

” இல்லைடா நேத்து என்னமோ தூக்கமே வரல? ” சஞ்சய்

“மச்சான்….. “

” நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லை. அவ உங்க ரெண்டு பேரையும் சொல்லி என்னை தனியா படுக்க வைச்சுட்டா ! இருந்தும் நானும் மனுஷன் தானடா ! பிடிச்சவளை பக்கத்துல வச்சுட்டு நல்லவன் பட்டம் வாங்குறது ரொம்ப கஷ்டம் டா ! அதான் தூக்கம் வரல ! கவி என்ன சொன்னுச்சு? “

” அவளை இன்னைக்கு ஜாயின் பண்ண சொல்லிருக்கியாம் ! “

“ஆமாடா ! நீ வந்து டிராப் பண்ணிட்டு போ! நான் கிளாஸ்லாம் காமிச்சுட்டு செல்வியை வெளிய கூட்டிட்டு போகனும் ! அவ காலேஜ்ல ஃபீஸ் கட்டிட்டு திங்க்ஸ்லாம் வாங்க போகனும் ! ஓகே மச்சான் நான் கிளம்புறேன் ! கொஞ்சம் சீக்கிரம் ரெண்டு பேரும் வந்து சேருங்க ” என அவனே கூறி விட்டு எழுந்து சென்று விட்டான்.

நிலவனும் கவியிடம் கூறி விட்டு ரெடியாக சென்று விட்டான். சஞ்சய் கிளம்பி கொண்டிருக்க, செல்வி பரபரவென உள்ளே நுழைந்தவள் கதவை அடைத்தாள்.
வேகமாக கப்போர்டில் எதையோ தேட , ஐந்து நிமிடமாகியும் அவ்விடத்தை விட்டு அவள் நகரவே இல்லை.

அவளை கவனித்துக் கொண்டே இருந்தவன் அவளுக்கு உதவி செய்ய அருகில் வந்தான். சட்டென்று திரும்பி அவனின் அதரங்களோடு தன் அதரத்தை உறவாடினாள். கண்கள் இறுக்கி கொண்டாள். ஆனாலும் கருவிழி அலை பாய்ந்தது.

ஒரு நொடி அதிர்ந்தாலும் அவளின் செய்கை அனைத்தையும் மனதில் படம் பிடித்துக் கொண்டான். அவளின் முயற்சி புரிந்து இவனும் இசைந்தான். ஆனாலும், அவளின் ஆதிக்கம் அவனுக்கு அதிக இன்பத்தை கொடுத்தது. அதனால், இவன் அவளுக்கு இசைந்து மட்டுமே கொடுத்தான் . ஒரு கட்டத்திற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் அவள் விலக , இவன் பயணத்தை தொடர்ந்தான் அவளின் முதுகில் கைகளை படர விட்டு.

இருவரும் வேறு உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்த சமயம், சட்டென்று கதவை அடைக்கும் சத்தம் கேட்டு தான் நிதர்சனத்திற்கு வந்தனர்.

அவள் சட்டென்று ஓடி விட்டாள். அவளை பிடிக்க அவனுக்கும் மனசு வரவில்லை . அவனுக்கும் நேரம் தேவைப்பட்டது. ஒரு சில நொடிகளுக்கு பின், கண்ணாடியில் தன் பிம்பத்தைக் காண, அவனின் உதட்டில் குறுகுறுப்பு இருப்பது போன்றே தோன்றியது. சிரித்துக் கொண்டே வெளியில் வர, வாசலிலேயே பரமேஸ்வரி கையில் தோசை வார்க்கும் கரண்டியை தோளில் தட்டிக் கொண்டு அவனை முறைத்துக் கொண்டிருந்தார்.

அவன் அவரையும் அவரை தாண்டி நின்று கொண்டிருந்த தனது மனையாளையும் மாறி மாறி பார்த்தான். ஆனால், அவளோ அவன் அங்கு நிற்கிறான் என்பதை கருத்தில் கூட வைக்கவில்லை. அவள் எண்ணம் எல்லாம் கவி கூறிய செய்தியும், தனது கணவனுக்கு கொடுத்த முத்தம் தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

அதே நினைப்போடு வெளியில் சென்றுவிட்டாள். பரமேஸ்வரி அவனின் தலையில் நன்கு அடித்து விட்டு முடிந்தளவு முறைத்து விட்டே சென்றார். செல்ல திரும்பும் பொழுது நிலவன் அவனின் அறையில் இருந்து வெளியில் வர, அவனையும் முறைத்து கொண்டே செல்ல, கவனியாதது போல் தலையை கோதி கொண்டே வெளியில் சென்றான்.

“ஒன்னுக்கு ஒன்னு சலச்சது இல்லை ! ச்சை…. ” பரமேஸ்வரி புலம்பி கொண்டே செல்ல, அடித்த வலியோடு அனைத்தும் குழப்பமாக இருந்தது. தலையை தேய்த்துக் கொண்டே கல்லூரிக்கு சென்றான்.

🏛️👨🏻‍🏫📚

எம் சி ஜெனிடிக்ஸ் இன்ஸ்டிடியூட் என்று பொறித்த கட்டிடத்திற்கு கம்பீரமாக தனது பி எம் டபுள்யூ காரில் உள்ளே நுழைந்தான். சேர்மன் என்று பெயரிடப்பட்ட அறைக்கு உள்ளே சென்று டீனை அழைத்தான். தீரன் இல்லாத சமயம் ஆக்டிங் டீன்னை நியமித்து இருந்தனர். அவரின் கையெழுத்துடன் கவியை பி . டெக் ஜெனெடிக்கல் துறையில் சேர்ந்தாள்.

அவள் வந்தவுடன் அவளின் வகுப்பிற்கு அனுப்பி வைத்தவன். நிலவனையும் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான்.

வகுப்புக்கு சென்றவுடன் சுற்றி உள்ள அனைவரையும் கண்டு அனைவருக்கும் உரித்தான பயம் அவளுக்கும் இருந்தது. அவ்வகுப்பில் இவளையும் சேர்த்து மொத்தமே இருபது பேர் தான் இருந்தனர். பெண்கள் பன்னிரெண்டு பேரும், ஆண்கள் மீதமும் இருந்தனர்.

உள்ளே நுழையும் பொழுதே மாலிகுலர் பையாலஜி வகுப்பு நடைபெற்று கொண்டிருந்தது. அதுவும் சிறு வயது பெண்மணி வகுப்பு எடுத்து கொண்டிருந்தார். அவரை அழைத்து தன்னை அறிமுகப்படுத்த , “ஓகே மா ! நான் அன்வி ! மாலிகுலர் பையாலஜி சப்ஜெக்ட் எடுக்குறேன் ! உன் பெயர் டீடெய்ல் எல்லாம் சொல்லுங்க ! …  எல்லாருக்கும் சேர்த்தே சொல்லுங்க ! அவங்கலாம் உங்க ப்ரெண்ட்ஸ் தான் “

அவளும் அனைவரின் புறம் திரும்பி ” ஹாய்….. ஐ ஆம் கவிதாயினி !  கம்மிங் ஃப்ரம் தமிழ்நாடு ! ஐ லவ் ஜெனெடிக்ஸ் எஸ்பெசல்லி (முக்கியமா ) க்ரோமோசோம்ஸ் “

“ஓ….. அப்போ சைடோஜெனெடிக்ஸ் படிக்க ஆசையா ? “

“எஸ் மேம் ….. “

“சரி போய் உட்காருங்க …… ” என கூறி அவரும் பாடத்தை ஆரம்பித்தார்.

” மாலிக்குலர் பையலாஜி அப்படினா  மரபணுக்கள் அதாவது டி என் ஏ  மாலிக்குள்ல்ஸ் அமைப்பையும், செயற்பாடுகளையும் ஒவ்வொரு ஆர்கனிஸம்ஸ்லையும் ஆய்வு செய்யுறது. இது ஒரு பையலாஜி துறை .இது மரபணுக்கள் (டிஎன்ஏ)  எப்படி ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது என ஆய்வு செய்கிறது. இத்துறை ஆய்வுகளுக்கு, ஜெனெடிக்ஸ் , மாலிக்குலர் பையாலாஜி  பயன்படுத்துறாங்க. மாலிக்குலர் பையாலஜில உள்ள முக்கிய பகுதிகளில் ஒன்று மூலக்கூறுகளை மரபுவழிக் கோலங்களைத் அதாவது ஜெனெடிக் ம்யூசேன்னு சொல்லுவாங்க அத வச்சு தீர்மானிப்பாங்க. அதோட இது ஆர்.கனிஸம்ஸ் சரியான அறிவியல் வகைப்பாடு செய்வதற்கும் பயன்படுகிறது. சோ, இந்த டி என் ஏ வோட ப்ரோடின்ஸும் சேர்ந்தது தான் க்ரோமோசோம்ஸ் “

🏬

நிலவனையும் இழுத்து கொண்டு சஞ்சய் வீட்டிற்கு வந்து செல்வியையும் அழைத்துக் கொண்டு மாலிற்கு சென்றான்.

செல்வி முன்பே நிலவன் “ஏன்டா அவ கூட தனியா போகாம என்னையும் ஏன்டா இழுத்துட்டு போற ? “

செல்வி இதற்கு பெரிதாக எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அமைதியாக நிற்க , சஞ்சய் தான் செல்வியை பார்த்துக் கொண்டே “எனக்கு ஒரு விஷயம் தெரியணும் ! தெரியாமல் இருக்கிறது ரொம்ப மண்ட கசாயமா இருக்கு அதான் ! நீ டிரஸ் சூஸ் பண்ணிக்கிட்டே இரு ! நான் பத்து நிமிஷத்துல பேசிட்டு வந்துறேன் ! ” என கூறினான்.

செல்வியும் சரி என்று கூறி ஒரு துணி கடைக்குள் நுழைந்தாள் . நிலவனை  தரதரவென இழுத்து வந்தவன் ஒரு இடத்தில் அமர்ந்து “காலையில அத்தை என்ன அடிச்சாங்க ! ஆனா உன்னையும் முறைச்சாங்க ஏன் ? “

“எது அடிச்சாங்களா எதுக்கு ? “

“அது….. மச்சான்…. அது “

“டேய்….. மச்சான் ….. கன்னி கழிஞ்சுட்டியா ? “

” அட அவ்வளவுலாம் இல்லை…… ஒரு கிஸ் ஸீன் ஓடுனுச்சு அதுக்கு தான் …… “

” கிஸ்ஸா ! “

“டேய் தப்பா நினைக்காதடா ! ஏதோ ஒரு வேகத்துல …. “

எச்சிலை முழுங்கிய நிலவன் “மச்சான் நீயும் என்னை தப்பா நினைக்க மாட்டீல ….. “

“நான் எதுக்கு அப்படி நினைக்க போறேன் ?  சொல்லுடா ? ” எங்கு நிலவன் தன்னை தப்பாக நினைத்துக் கொண்டானோ என நினைத்து மருகிக் கொண்டு கேட்டான் சஞ்சய்.

“முத்துத்துக்கே உன் அத்தை தோசை கரண்டியால அடிச்சாங்களே ! மொத்தமா கன்னி கழிச்சாச்சுனு சொன்னா என்ன பண்ணுவாங்க ? “

“அட அதெல்லாம் ஒன்னு ……… 😮😦 என்னது ? “

படபடவென எழுந்து வேகமாக கடைக்குள் நுழைந்து செல்வியை பிடித்து இழுத்து ” நான் தான் சொன்னேன்ல , அவன் சான்ஸ யூஸ் பண்ணிக்குவானு ! பாரு அவங்க சேர்ந்து வாழ ஆரம்பிச்சுட்டாங்க ! “

“அதான் நம்மளும் வாழ ஆரம்பிச்சுட்டோம்ல “

“எதே …… “

“அதான் ….. கிஸ்ஸு “

“என்னது….. அப்போ தெரிஞ்சு தான் முத்தம் கொடுத்தியா ? நீயா கொடுக்கலையா ? அடிப் படுபாவி …… “

கீர்த்தி ☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்