Loading

புயல் 11

 

ஆத்விக் தான் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

“இவ்வளவு கோபமா முகத்தை வச்சுக்காத டா பாவி” ருத்ரன் அவனை வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டான்.

“அதை பாவம் பண்ணவன் சொல்லுறான் பாரு”

“ரொம்பப் பண்ணாத. நானும் நீயும் எப்படியெல்லாம் இருந்தோம். அதையெல்லாம் கொஞ்சம் யோசிச்சுப் பாரு”

“அசிங்க அசிங்கமாவே பேசாத”

“நான் எப்பவும் போலத்தான் பேசுறேன். நீதான் ஓவரா கற்பனை பண்ணிக்கிற. உனக்கே மாமா மேல ஆசைன்னு ஒத்துக்கோ டா. தப்பில்ல”

“இந்தாளு மேல ஆசைப்பட்டுட்டாலும். இங்க பாரு நான் எங்க அக்கா சொன்னதால தான் கூட வர்றேன்.  தொண தொணன்னு பேசிட்டே வந்தேன்னு வை எங்க அக்கா விதவை ஆனாலும் பரவாயில்லைன்னு வண்டியை மரத்துல மோதிடுவேன்டா”

“வாயில அடி வாயில அடி. அப்படியெல்லாம் பேசக் கூடாது ஆத்வி.. இது மட்டும் உமாவுக்கு தெரிஞ்சதுன்னு வை”

“உனக்கு அந்த கஷ்டம் வேண்டாம்டா தம்பி நானே முடிச்சுடுறேன்னு சொல்லுவா.. அதானே”

“அதென்னவோ உண்மைதான்டா. நான் அவளை லவ்வே பண்ணியிருக்க கூடாதுல. அவளுக்கேத்த மாதிரி ஒரு படிச்சவனா.. அவளை புரிஞ்சுக்கிட்டவனா பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சுருந்திருப்பீங்கள்ல. என்னை கல்யாணம் பண்ணி அவ ரொம்ப அனுபவிச்சுட்டாள்ல”

அவனைத் திரும்பி கேவலமாகப் பார்த்து “இந்த கருமத்தைத்தான் அவ காதல்னு வந்து நின்ன நாள்ல இருந்து நான் சொல்லிட்டே இருக்கேன் நீ என்னடான்னா இப்போ வந்து பெரிய இவன் மாதிரி பேசுற” என்றான்.

“எனக்கு உன்னை மாதிரி ஒரு தம்பி இல்லாமல் போயிட்டான் டா.. உன் அக்காவுக்கு ஒன்னுன்னா உனக்குத் துடிக்குதுல்ல அதுமாதிரி எனக்கொன்னுன்னா ஏன்டா என் தம்பிக்கு இந்த ஃபீல் வரமாட்டேங்குது” சோகமாய் சொன்னான் ருத்ரன். அவனும் நிறைய நாள் அது குறித்து ஏங்கியிருக்கான். என்ன அந்த ஏக்கத்திற்கான பிரதிபலிப்பு தான் எதிர்ப்புறம் இருந்து வந்ததே இல்லை.

“அந்த ஃபீல் வந்ததால தான் அவன் பீல் பண்ணுறதுக்காகவே ஏற்காடு போயிருக்கான் அதுவும் பொண்டாட்டி கூட. இப்படியும் கூட துடிக்கும் தெரியுமா? அதுவும் உன் தம்பிக்கு இப்படித்தான் துடிக்கும்” அவன் கிண்டலாக பேச “உமா மாதிரியே பேசாதடா.. கொஞ்சம் மாமன் பாவம்னு மனசுல வச்சுட்டு பேசு” என்றான் இவன்.

“யாருய்யா பாவம்.. நீயா? இன்னொரு பொண்ணு கூடவும் வாழ்ந்துட்டு வந்து நிக்குறயே. அப்படியென்னயா என் அக்கா உனக்குப் பிடிக்காமல் போயிட்டா. அப்படியே இருந்தால் அவளை முறைப்படி டிவோர்ஸ் பண்ணிட்டுக் கூட நீ பாட்டுக்கு போக வேண்டியதுதானே. உனக்குத் தெரியுமா? வீட்டுக்கு வந்து அவ நின்ன கோலம் இப்பவும் எனக்கு உறுத்துது.. உனக்குலாம் அப்படி எந்த உறுத்தலும் இல்லைல”

“அதை விடு மச்சான்” கேட் போட்டு அவன் பேச்சினை நிறுத்திவிட்டான் ருத்ரன்.

“எப்படி விட முடியும்” என்று சொல்லும் போதே அவன் “வேண்டாம் ஆத்வி. இதைப்பத்தி நானும் உமாவும் மட்டும் பேசி ஒரு முடிவுக்கு வந்துக்கிறோம். நீ தேவையில்லாத விஷயத்துல தலையிடாத” குரல் வேறு மாதிரியாக ஒலிக்க

“தேவையில்லாத விஷயமா? இது என் அக்காவோட வாழ்க்கை டா” சீறினான் தம்பிகாரன்.

“அதுல எந்த பிரச்சனையும் வராது”

“அவ அமைதியாய் இருந்தால் அப்படித்தானே”

“தப்புத் தப்பாவே புரிஞ்சுக்காத மச்சான்” சலிப்பாய் முகத்தினை திருப்பினான்.

“உன்னால எப்படி எதுவுமே நடக்காதது மாதிரி ரியாக்ட் பண்ண முடியுது. எனக்கு வெறியேறுது”

“வேணும்னா மாமாவை ஒரு கிஸ் பண்ணிக்கோ.. சரியாப் போயிடும்..” உடனே இயல்பு நிலைக்கு வந்தவனிடம்

“ச்சே! உன்னோட கடை வந்துடுச்சு. இறங்கிப் போ” என அவன் சொல்ல “அது உங்க அக்காவோடதும்தான்” என்றான்.

“பத்திரம் இருந்தால் காட்டு. அப்போ நம்புறேன். வந்துட்டான்.. போயா. இன்னும் என் கடைன்னு சொல்லிட்டு திரியுற பாரு.. உன்னையெல்லாம் இந்த கடை முன்னாடியே உக்கார வச்சு நாலு சாத்து சாத்தணும்” என்றவன் அக்காவைக் கூடப் பார்க்க நினைக்காமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

 

உள்ளே நுழைந்தவன் அங்கே உமாவைக் காணாமல் திரும்பி வெளியே வந்தான்.

“பழனி அண்ணே. உமாவை எங்க?”

“இப்போத்தானே தம்பி வெளிய போனாங்க”

 

உடனே அவளுக்கு அழைத்தான். அவள் போன் எடுக்கவே இல்லை. ஆத்விக்கு அழைத்தான். ஆத்வியும் போனை எடுக்கவில்லை.

ஆனால் ஆத்வி உமாவின் முன்னால் அமர்ந்திருந்தான். எதுவும் பேசாமல் இருந்த அக்காவினையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் “இப்போ எதுக்கு இப்படி உக்காந்துட்டு இருக்க.. அதையாவது சொல்லு?” என்றான்.

“வீட்டுக்குப் போகலாமா? எனக்கு பசிக்குது. அம்மா சமையல் சாப்பிடணும்னு தோணுது”

“இதை மொதல்லயே சொல்லுறதுக்கு என்ன?” என அழைத்தவன் அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான்.

 

அவள் அம்மா வீட்டிற்குத்தான் சென்றிருப்பாள் என்ற எண்ணம் ருத்ரனுக்கு. உடனே வண்டியை அங்கே திருப்பினான். கை வலி எல்லாம் இரண்டாம் பட்சம்தான். அதோடு வண்டியை ஓட்டி அவன் அங்கு வந்து சேர்ந்தான்.

 

அப்போதுதான் வெளியே வந்த ஆத்வி வீட்டின் முன் காரினை நிறுத்திவிட்டு இறங்கி வந்த இவனைக் கண்டதும் “அக்கா இப்போத்தான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கா. எதுவா இருந்தாலும் அதுக்கப்பறம் பேசுங்க. நீங்களும் நிம்மதியாய் இல்லாமல் அவளையும் நிம்மதியாய் இருக்க விடாமல் ஏன் இப்படிப் பண்ணுறீங்க. ப்ளீஸ் விட்டுடுங்களேன்” தன்மையாய் தனது அக்காவிற்காக அவனிடம் கெஞ்சினான் ஆத்விக்.

 

ஒவ்வொரு முறையும் ஆத்விக் அவனது மனதில் உயர்ந்த இடத்திற்குச் சென்று கொண்டே இருந்தான்.

“ஆத்வி! ஒரு நிமிஷம் டா இப்போ உன்னை கிஸ் பண்ணியே ஆகணும்னு தோணுது. நீ என்னை கேவலமாவே நினைச்சாலும் பரவாயில்லை.. ஒரே ஒரு முத்தம் மட்டும் மாமன் தர்றேன்” என்றவன் அவனது கன்னத்தில் ஆழ்ந்து முத்தமிட்டான்.

“உன்கிட்ட வந்தாலே என்னோட கற்புக்கு கேரண்டியே இல்லை. ச்சே..” என அவனைத் தள்ளிவிட்டவன் கன்னத்தினைத் துடைத்துக் கொண்டான். என் அக்கா பாவம் இதுவும் அவன் மனதுக்குள் ஓடியது.

 

வழியை விட்டு விலகாமலேயே முறைத்துக் கொண்டிருந்தவனிடம் “அவகிட்ட ஒரு ஐந்து நிமிஷம்  பேசணும். அதுக்கப்பறம் நான் எந்த வழியிலயும் அவளை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் ஆத்வி.. என்னை நம்புடா” என்றான்

ருத்ரனை இப்படிப் பார்க்க அவனுக்கே கஷ்டமாக இருந்தது. இருவரது காதலும் வீட்டிற்குத் தெரிந்த காலத்தில் ருத்ரனை முறைத்துக் கொண்டே திரிந்தவன்தான் ஆத்விக். கல்யாணம் முடிந்த கொஞ்ச நாட்கள் கழித்து ஓரளவிற்கு சகஜம் அவனிடம் வந்திருந்தது.

 

அதுவும் உமா வீட்டிற்கு வந்து நின்ற கோலத்தில் காணாமல் போய்விட்டது. நியாயத்திற்கு ருத்ரனின் முகரையை பேர்த்தெடுத்திருக்க வேண்டும். ஏனோ அதை உமா விரும்பவில்லை. அதனாலேயே அமைதியாக இருக்கிறான். அதுவும் அவளது மெசேஜ் கண்டபின் அவனால் எந்தவித எதிர்வினையும் ஆற்ற முடியவில்லை.

 

ஆத்விக்கின் நிலையை யூகித்தவன் அவனைத் தாண்டி உள்ளே சென்றான். அவளது அறைக்குள் சென்று நின்றவனை வெறுமையான விழிகளோடு பார்த்தாள்.

“தங்கம்”

“என்ன விஷயம்?”

“என்கூடவேதான் இருப்பேன்னு சொன்ன. என்னோட உரிமையை விட்டுட மாட்டேன்னு சொன்ன இப்போ என்னடி ஆச்சு?”

“உங்களுக்கே எந்தவித உரிமையும் இல்லை. பின்ன நான் எந்த உரிமையைக் கொண்டாட? எனக்கு மனசு வலிக்குது. தயவு செஞ்சு நீங்க கிளம்புங்க. உங்களைப் பார்க்க விருப்பமே இல்லை எனக்கு”

“என்னடி இது. நாம எல்லாத்தையும் பேசித் தீர்த்துக்கலாம்”

“பேசுறதுக்கு ஒன்னும் இல்லை ருத்ரன். உங்களுக்கு நிஜமாவே என்னைப் பிடிக்குமா?”

“உன்னை மட்டும்தான்டி பிடிக்கும்” உறுதியோடு வந்து விழுந்தது அவனது வார்த்தைகள்.

“அப்போ இங்க இருந்து கிளம்புங்க. என்னால அந்த வீட்டுல இருக்க முடியாது ருத்ரன். ப்ளீஸ் என்னை இந்த வலியில இருந்து காப்பாத்துங்க.‌ என்னை விட உங்களுக்கு பட்டு லட்டு ரொம்ப முக்கியம்தானே ருத்ரன். அந்த பட்டு லட்டுவோட நல்லதுக்காகத்தான் நானும் சொல்லுறேன். நாம ரொம்பவே ஆசையாய் எதிர்பார்த்த விஷயம். அதைக் கொண்டாடுற மனநிலையில இப்போ சுத்தமா நாம இல்லை. இதுக்கு யார் காரணம்? நீங்கதான். இப்படியே நாம சண்டை போட்டுட்டே இருந்தோம்னு வைங்க அவங்களுக்கு நல்லது இல்லை”

“கொஞ்ச முன்னாடி வரைக்கும் நல்லாத்தானே இருந்த. அதுக்குள்ள கடையில யாராவது மண்டையை கழுவி விட்டுட்டாங்களா? யாருடி அது?” அவனும் நிதானமிழந்தான்.

“ருத்ரன் உன் கையை கொடேன்” அவள் நிதானம் இழக்காது பேசினாள்.

 

அவன் வேகமாய் நீட்ட அதை வாங்கி அவள் வயிற்றில் வைத்துக் கொண்டாள்.

“புள்ளைங்க மேல சத்தியமா சொல்லுறேன். என்னை இங்க விட்டுட்டு நீ கிளம்பு. அங்க வந்தால் நீயும் நிம்மதியாய் இருக்க முடியாது நானும் நிம்மதியாய் இருக்க மாட்டேன். இவனுங்க பொறக்குற வரைக்கும் என்னை என் போக்குல விட்டுடு ருத்ரன். இதுக்கு மேல எனக்குக் கெஞ்ச தெரியல”

“இதுதான் உன்னோட முடிவா உமா”

“ஆமா ருத்ரன்”

“அப்போ நான் வேண்டாம்னு நீ சொல்லுற?”

“நான் இன்னும் அந்த முடிவை எடுக்கலை ருத்ரன். அங்கேயே இருந்தால் ஒருவேளை நீங்களாவே எடுக்க வச்சுருவீங்களோன்னு பயம் வருது. வேண்டாம் விலகியே இருக்கலாம். நான் இல்லைன்னாலும் உங்களுக்குத்தான் எந்த பிரச்சனையும் வராது இல்லையா?” அவள் விழிகள் அவனை அழுத்தமாய் ஊடுருவிட அவன் “நான் கொஞ்சம் பேசணும் உமா” என்றான்.

“இப்போ நீங்க சொல்லப் போற விளக்கம் எதுவும் எனக்குத் தேவையில்லை”

“அப்போ நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கே தெரியுது. இதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியாது. இங்க பாரு நான் உன்னை நம்ம வீட்டுக்கு..”

“திருத்தம் உங்க அம்மா வீடு”

“ப்ச் என்னதான்டி பிரச்சனை”

“நீதான்டா பிரச்சனை. என்னை ஏன்டா லவ் பண்ணித் தொலைஞ்ச. வேண்டாம்னு சொன்னவளை விடாமல் துரத்தி லவ் பண்ணி கல்யாணமும் பண்ணிட்டு இப்படி ஏன்டா நிக்க வச்ச.. என்னை பேச வைக்காத.. ” அவள் வயிற்றில் கைவைத்து மூச்சு வாங்க அதைத் தாங்க இயலாதவன் “நான் போறேன்” என்றதோடு நில்லாமல்  கிளம்பிச் சென்றுவிட்டான்.

 

அவன் செல்வதைப் பார்த்த உமாவிற்கு நிம்மதி வந்திருக்க வேண்டும். வரவில்லையே.. அதைத்தான் கையோடு எடுத்துச் சென்றுவிட்டானே ருத்ரன். மாடியில் இருந்து அவன் காரில் ஏறும் வரைப் பார்த்தாள்.

 

கடுகடுவென்று முகத்தினை வைத்துக் கொண்டு அவன் காரினை எடுத்தான். அவள் பார்ப்பாள் என்று அறிந்தும் அவன் நிமிர்ந்துப் பார்க்கவில்லை.

 

அவனது கார் வீட்டில் வந்து நின்றது. தங்கை கவிதா, அம்மா  இருவரும் அவன் வந்ததைக் கூட அறியாமல் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இதெல்லாம் அண்ணனுக்குத் தெரியாமலேயே பண்ணியிருக்க பாரும்மா அங்க இருக்க நீ?”

“பின்ன? என்னை என்னென்னு நினைச்சடி. அவனுக்காக எவ்வளவு பெரிய இடத்துல இருந்து எல்லாம் பொண்ணு பார்த்து வச்சுருந்தேன். அவன் என்னடான்னா இவளைப் போய் கை நீட்டுறான். அதான் பிடிக்கலை?”

 

“அதுக்குன்னு அண்ணன் மேல இப்படியொரு பழியைத் தூக்கிப் போட்டிருக்கயே. அண்ணன் எதுவும் உன்கிட்ட வந்து கேட்கலையா?”

 

“நான் என்ன இல்லாததையா பேசினேன்”

 

“அம்மா அப்போ அது உண்மையா?”

 

“அது உண்மையா என்னென்னு உன் இரண்டாவது அண்ணனைக் கேளு கவிதா. ஏன்னா அவனுக்குத்தானே அதைப் பத்தித் தெரியும்” ருத்ரனின் வெகுண்ட பேச்சில் கவிதா “அண்ணே” என நடுங்கியவாறு எழுந்து நின்றாள்.

 

புயல் தாக்கும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
19
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்