Loading

அத்தியாயம் 3

பரிதியும் இனியனும், தொழிற்சாலையில் இருந்து கிளம்பு அலுவலகற்கு வந்து சேர்ந்தனர்.

வைஷுவிடமும் ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்ததைக் கூறி விட்டு, இந்த நற்செய்தியை அலுவலக ஊழியர்களிடமும் பகிர்ந்து கொண்டனர்.

பின் மாலை போல மூவரரும் கிளம்பி வீட்டிற்கு வந்து சேர, வைஷு அவளது அறைக்குச் சென்று விட்டாள்..

இனியனும் அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டே அவனது அறைக்குச் சென்று விட்டான்.

பரிதி தான் தன் அன்னையை தேடிச் சென்றான்.

அவரது அறைக்குச் சென்று பார்க்க, அவர் இல்லாமல் போக, சமையல் அறையில் எட்டிப் பார்த்தான். அங்கும் தென்படவில்லை..

தோட்டத்து பக்கம் வந்து பார்க்க, அங்கு ஒரு மரத்தின் அடியில் போடப்பட்டிருந்த ஊஞ்சளில்  கண்ணை மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தார்.

அவரை ஒரு புன்னகையுடன் பார்த்துக் கொண்டே அவரது அருகில் சென்ற பரிதி, அருகில் இருந்த சேரில் அமர்ந்து, “அம்மா..” என்று அழைத்தான்..

அவரும் அவனது சத்தம் கேட்டு, கண் திறந்து பார்த்தவர், அங்கே பரிதியைக் கண்டதும், அவரது இதழ்கள் தானாக விரிந்தன..

“என்ன ப்பா.. இன்னைக்கு மீட்டிங்  எப்படி போச்சி…” என்று அவர் கேட்க,

“எல்லாம் நல்ல படியா முடிஞ்சிருச்சு ம்மா..” என்றான்.

“ம்ம்ம். சந்தோசம் ப்பா… நீ எல்லாத்தையும் நல்ல படியா முடிச்சிருவேன்னு நம்பிக்கை இருக்கு.” என்றார் அவனைப் பார்த்து.

” எல்லாம் நீங்க எனக்கு கத்துக் கொடுத்தது தான்ம்மா. உங்ககிட்ட இருந்து தான் நான் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.. அதோட பிரதிபலிப்பு இது எல்லாம்.” என்றான்..

அவரும் ஒரு புன்னகையுடனே வாஞ்சையாக அவன் தலையை வருடிக் கொடுத்தார்..

“வாங்கம்மா… உள்ள போகலாம். ” என்று அவரையும் சேர்த்து உள்ளே அழைத்துச் சென்றான்..

நான் ஹால்ல இருக்கேன்ப்பா. நீ போய் ரெப்பிரேஷ் ஆகிட்டு வா.” என்று அவனை அவனது அறைக்கு அனுப்பி வைத்தார்.

சிறிது நேரத்தில் வைஷு அங்கே வர, “என்ன அத்தை… உங்க புள்ள என்ன சொல்லிட்டு போறாரு… ” என்று கேட்டாள்.

“அவன் மட்டும் தாண்டி டெய்லியும் ஆபீஸ்ல என்னென்ன நடக்குதுன்னு என்கிட்ட சொல்லிட்டு போவான். உங்களுக்கு எல்லாம் என்கிட்ட சொல்லணும்னு தோணுமா… அதுவும் இன்னொருத்தன் இருக்கானே.. அவனுக்கு எல்லாம் நான் முன்னாடி இருந்தா கூட கண்ணு தெரியாம போவான்..” என்று தன் இளைய மகனை நினைத்து குறை பட்டுக் கொண்டார்.

” என்ன அத்தை பண்றது… மூத்த புள்ள ராமனாவும், இளைய பிள்ளையை கிருஷ்ணனாவும் பெத்துட்டீங்க.. கிருஷ்ணன் என்ன பண்ணுவான். கோபியர் கூட்டதோட தானே இருப்பான். வேற வழி இல்லை உங்களுக்கு..” என்று அவளும் தன் பங்குக்கு சேர்த்து இனியனை வாரி விட,

அவரும்  “ஹ்ம்ம்ம்.. எல்லாம் அவன் நேரம்..” என்று ஒரு பெருமூச்சுடன் சொல்லிக் கொண்டார்.

பின் இனியனும் வந்து சேர, “என்ன.. என்னை பத்தி ஏதோ பேசுன மாதிரி சத்தம் கேட்டுச்சு..” என்று அவன் கேட்க,

“ஆமா. உன்ன பத்தி தான் பேசிட்டு இருந்தோம். இப்போ அதுக்கு என்ன.. ” என்று அவள் எடக்கு மடக்காக பேச,

” ஆஹான்.. இருடி உன்ன தனியா கவனிச்சிக்கிறேன்..” என்று தன் அன்னையின் முன் அவளை ஒன்று செய்ய முடியாததால் வெறும் மனதினில் மட்டும் நினைத்தவன்,

“நீ பேசு.. பேசாம கூட போ.. எனக்கு என்ன வந்தது… போவியா..” என்று நீ என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள் என்பது போல அவன் சென்றுவிட,

அவனை ஒரு மார்க்கமாக பார்த்தாள் அவள்.

இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க, சத்தம் கேட்டு விநாயம் மற்றும் மல்லிகாவும் இணைந்து கொண்டனர்.

பரிதி தன் அறையில் வேறு ஒரு வேலை விஷயமாக அலை பேசியில் பேசிக் கொண்டிருந்ததால், இவர்களுடன் இணைந்து கொள்ள முடியவில்லை..

இரவு நேரம் நெருங்கவும், பசி எடுக்க ஆரம்பிக்க பரிதி தன் வேலையை முடித்துவிட்டு கீழ் இறங்கி வந்தான்.

எல்லாரும் பேசிக் கொண்டே, சாப்பாட்டு மேசையில் உணவு உண்டு கொண்டிருந்தனர்..

இதில் இனியன் வைஷுவிடம் வம்பு அளத்துக் கொண்டே இருக்க,

அவளோ ” அத்தை பாருங்க அத்தை.. எப்போ பாரும் என்கிட்ட வம்பு பண்ணிட்டே இருக்கான்.. ” என்று தன் அத்தையிடம் அவனைப் பற்றி புகார் அளிக்க,

” டேய்.. இனியா.. எதுக்கு டா எப்போ பாரும் அவகிட்ட வம்பு பண்ணிகிட்டே இருக்க. சும்மா இரு டா.. ” என்று அவர் அவனிடம் கேட்க,

” ஏன் மா.. நான் தானே முறைப் பையன். அப்போ நான் தான் பண்ணனும். வேற யாரு பண்ணுவா.. எப்படியும் அண்ணன் பண்ண மாட்டான்.. என் இம்சையை இவ தாங்கி தான் ஆகணும்… வேற வழியே இல்லடி உனக்கு.. ” என்று தன் தாயிடம் ஆரம்பித்து வைஷுவிடம் முடித்தான்.. 

இத்தனை எல்லாம் பார்த்து சிரித்துக்கொண்ட வாரே, அங்குவந்த பரிதி, “என்ன டா.. உன் மேல கம்பளைண்டா வருது போல..” என்று அவன் கேட்க,

” ஆமா.. இவ ஒரு ஆளுன்னு இவ சொல்றதையும் நம்பிட்டு என்கிட்ட கேக்குறீங்க பாருங்க…” என்று அவன் அப்பொழுதும் அவளை வாரி விட,

” டேய்.. போதும் டா இன்னைக்கு கோட்டா…பாவம் அழுதுற போறா .. ” என்றான் பரிதி..

” இவன் ஒரு மூஞ்சி.. இவன் சொல்றதுக்கு வேற நான் அழுகனும்.. நீங்க வேற ஏன் மாமா… ” என்று இவள் தன் பங்குக்கு அவனை வாரினாள்..

” ஸ்சப்ப்பா … இவங்க சண்டை ஓயாவே ஓயாது… ” என்று மற்றவர்கள் ஒவ்வொருவராக சாப்பிட்டு விட்டு கிளம்பி விட,

இப்பொழுது இளையவர்கள் மூவர் மட்டுமே அமர்ந்து இருந்தனர்..

“டேய்.. கொஞ்சம் நேரம் அமைதியா இருந்து என்னை சாப்பிட விடுறீங்களா.. இல்லை நான் எந்திரிச்சி போகவா..” என்று பரிதி சற்று தன் குரலை உயர்த்தி சத்தம் போட்டதும் தான் இருவரும் அமைதி ஆனார்கள்..

பின் மூவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பி விட, போகும் போது அவளது முடியை இழுத்து விட்டுச் சென்றான் இனியன்..

“இவன் சும்மாவே இருக்க மாட்டான் போல..” என்று இரு பக்கமும் தலையை ஆட்டிய படி சிரித்துக்கொண்டே சென்றான் பரிதி..

**************

“டேய்.. எதுக்கு டா இப்படி குடிச்சிக்கிட்டே இருக்க.. அவன் மேல இருக்குற கோபத்தை எல்லாம் இப்படி குடிச்சி குடிச்சி உன் உடம்பை தான்டா கெடுத்துகிற..” என்று தன் மகன் அளவுக்கு அதிகமாக குடிப்பதை பொறுக்க முடியாமல் கேட்டார் மகாலிங்கம்.

“அவன் மேல இருக்குற கோபத்தை எப்படி அடக்குறது..அதான் இப்படி.. அவ்ளோ வெறி இருக்கு எனக்கு அவன் மேல.. ” என்றான் சஞ்சய்.

“அதுக்கு அவன் கூட போட்டிப் போட்டு முன்னேற பாரு.. இப்படி குடிச்சா உனக்கு தான் ஏதாவது வந்து சேரும்.” என்று அவர் அவனுக்கு அறிவுரை வழங்க,

“அவன் இருக்குற வரைக்கும் என்னால முன்னேற முடியாது.. அவனுக்கு ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்.” என்று சொல்ல,

அதை கேட்ட அவனது தந்தைக்கோ பதறி விட்டது.

“டேய்.. சஞ்சய்.. என்ன டா குடிச்சிட்டு ஏதோ உளறிக்கிட்டு இருக்க.. என்ன பண்ண போற அவனை.” என்று அவர் பதறிக் கொண்டு கேட்க,

அவரைப் பார்த்து ஒரு வன்ம புன்னகையை சிந்தியவன், ” அவனை இல்லாமலே ஆக்கப் போறேன்.. ” என்றான் ஒரு மார்க்கமான குரலில்.

“என்னது.. அவனை கொலைப் பண்ண போறியா..” என்று அவர் அதிர்ச்சியுடன் கேட்க,

” அதே தான். நான் சொல்ல வரத்தை கரெக்ட்டா பிடிச்சிட்ட தகப்பா… ” என்றான் வாய் உளறியவாரு.

“எனக்குன்னு இருக்குறது நீ ஒருத்தன் தான். உங்க அம்மா உன்னை என் கைல கொடுத்துட்டு போய்ட்டா. இப்போ நீ மட்டும் தான் இருக்க. நீயும் அவனை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்ட்டா, எனக்கு யாரு டா இருக்கா..” என்று வருத்தத்துடன் பேசினார் அவர்.

“இங்க பாரு தகப்பா.. நான் அவ்ளோ சீக்கிரம் மாட்டிக்க மாட்டேன்.. நான் மாட்டிக்காம அவனை எப்படி கொல்லணுமோ அப்படி தான் கொல்லுவேன்…” என்றான் வஞ்சத்துடன்.

“உங்க அம்மா இருந்து உன்ன வளத்து இருந்தா உனக்கு நல்ல புத்தி சொல்லி  வளத்து இருப்பா. நான் தான் உன்ன சரியா வளக்கல போல.. அதான் குடி.. கொலைனு போய்ட்டு இருக்க..” என்றார் ஆதங்கமாக..

“ஆஆஆஆ.. கொஞ்ச நேரம் என்னை தனியா விடு.. முதல்ல இங்க இருந்து கிளம்பு..” என்று சத்தம் போட்டு கத்த,

அவரும் அங்கு இருந்து சென்று விட்டார்..

அவனும் வன்மத்துடனே, அவனை எப்படி போட்டுத் தள்ளலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

**********

“அக்கா.. வா க்கா… எவ்ளோ நேரம் தான் நான் வெயிட் பண்றது.. நீ வர்றதுக்குள்ள அங்க முடிச்சிட்டு கிளம்பிருவாங்க போல..” என்று விக்ரம் தன் அக்காவை குறைபட்டுக் கொண்டிருந்தான்.

“டேய்.. இரு டா. இந்த ஒரு வேலை மட்டும் தான். இதை முடிச்சிட்டு கிளம்பலாம். ” என்று நிரஞ்சனா சொல்ல,

“இப்படி தான் காலையில இருந்து சொல்லிட்டு இருக்க…” என்றான் அவன்.

“தோ.. அவ்ளோதான் வந்துட்டேன்..” என்று பையில் எடுத்து வைத்து இருந்த அனைத்தையும் மீண்டும் ஒரு முறை சரி பார்த்து விட்டு, எடுத்துக் கொண்டு வந்து விட்டாள்.

“அப்பாடா.. இப்போயாவது வந்தியே.. ” என்று அவன் சலித்துக் கொல்ல,

“டேய்… நேரம் இருக்குடா. இப்போதான் மணி 10 ஆகுது. நமக்கு 12 மணிக்கு தான் அப்பாயின்மென்ட் கொடுத்து இருக்காங்க..” என்று சொல்ல,

“நம்ம அங்க போய் வெயிட் பண்றதுக்கு சரியா இருக்கும் ” என்று அவன் தம்பி விக்ரம் கூற,

“ம்ம்ம். ஆட்டோக்கு போன் பண்ணிருக்கேன்.. 5 நிமிஷத்துல வந்துருறேன்னு சொல்லி இருக்காங்க. வந்ததும் நம்ம கிளம்பிறலாம்..” என்றாள்.

அவனும் “சரிக்கா..” என்றவன், இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு, வெளியில் வந்து நிற்க, ஆட்டோவும் சரியாக வந்தது..

ஆட்டோவில் தன் தம்பியை முதலில் ஏற்றி விட்டவள், பின் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

ஆட்டோ, அவர்களது நகருக்கு அருகில் உள்ள புகழ் பெற்ற கண் மருத்துவமனையை நோக்கிச் சென்றது.

முக்கால் மணி நேர பயணத்திற்கு பின்  ஆட்டோ மருத்துவமனையை அடைய, அவர்களும் இறங்கி விட்டு, “அண்ணா.. கிளம்பும் போது கால் பண்றேன். வந்துருங்க ண்ணா..” என்று சொல்ல, ஆட்டோக்காரரும் சரி என்றார்.

விக்ரமை கை பிடித்து அழைத்துச் சென்று, அவன் பெயரை பதிவு செய்து விட்டு, தங்களின் அழைப்புக்காக காத்து இருந்தனர்.

நித்தமும் வருவாள். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்