Loading

புயல் 9

 

காரில் செல்லும் போதே அவள் அமைதியாக வர அவனோ அவளையே பார்த்த வண்ணம் வந்தான்.

பட்டு லட்டுவை ஸ்பரிசிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது அவனுள் வேர்விட கையை அவள் வயிற்றின் மீது பதித்தான்.

அவள் தள்ளிவிட “ஏய் ஒரு நிமிஷம் டி” என சொல்லி கையை வைத்துக் கொண்டான்.

“உன் அம்மா அப்படியே சாந்த சொரூபிணியா இருப்பா டா. இப்போ என்னென்னா இந்த போடு போடுறா?” அவன் பேச்சை ஆரம்பித்தான்.

“அந்த மாதிரியே இருந்துட்டால் உன் அப்பனுக்கு அது ரொம்ப வசதியா போயிடும்ல குட்டீஸ். எல்லாத்தையும் மீறி உன் அப்பா தான் வேண்டும்னு நான் வந்ததுக்குத்தான் இப்போ இந்த நிலைமையில நான் நிக்குறேன். இதுக்கப்பறமும் தெளியாமல் பழைய மாதிரியே இருந்தால் உன் அப்பன் இன்னும் பல வீடு வச்சுக்கிட்டு போயிடுவான்..”

“ப்ச் குழந்தைங்க எல்லாத்தையும் கேட்கும்” முகம் மாறியது அவனுக்கு. இவள் இந்தப் பேச்சை எடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.

“கேட்கணும்னு தானே சொல்லிட்டு வர்றேன். அவங்களும் தெரிஞ்சுக்கட்டும் அவங்க அப்பாவோட வண்டவாளம் பத்தி”

“உமா பொறுமையை ரொம்ப சோதிக்கிறடி” என்றவனிடம் “ஏன் நீ தப்பு பண்ணியிருக்க தானே. இல்லைன்னு மறுக்க முடியாது இல்லையா?” என்றாள் அவள்.

“நீயே கேட்டுட்டு நீயே பதில் சொன்னால் பின்ன நான் என்ன சொல்லுறது?” அவன் வண்டியில் கவனமாகிவிட்டான்.

அந்த நேரத்தில் பாக்கெட்டில் இருந்த போன் அதிர்ந்தது. வைப்பிரேட்டில் இருக்க அந்த சத்தம் அவளையும் அண்டியது.

இதென்ன புதுப்பழக்கம் என்பது போல் பார்க்க அவன் அதைக் கவனிக்காதவன் போல வண்டியை ஓட்டினான்.

“போனை கொடு” அவள் கை நீட்டினாள்.

“என்னோட போனா?”

“ஆமா கொடு” அவள் குரலிலேயே கோபத்தின் அளவு தெரிந்தது.

“அதெதுக்கு உனக்கு?”

“தூக்கிப் போட்டு உடைக்க. இப்போ போனைக் குடுக்கப் போறயா? இல்லை கதவைத் திறந்து அப்படியே குதிக்கட்டுமா..?”

பதறிப் போனவன் அவனின் மொபைலை நீட்டினான்.

‘டார்லிங்’ என்ற பெயரோடு மூன்று மிஸ்டுகால் முகப்பில் பதிவாகியிருந்தது.

அவனிடமே நீட்டிவிட்டு அவள் பாட்டுக்கு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

என்னடா இது என்று அவனுக்கே அது பெரும் குழப்பமாக இருந்தது. அவள் இந்நேரம் எகிறி பேசுவாள் என்று எதிர்பார்த்திருக்க அவளிடம் இருந்து எந்தவித பதிலும் வராததே அவனுக்கு இது புயலை உள்ளடக்கிய அமைதி என்பதே புரிந்தது.

——————–

“ஏய் நீ என்னடி வாசல்லயே உக்கார்ந்துருக்க?” கவிதாவைக் கண்டுவிட்டு திகைப்புடன் கேட்டார் மணியம்மாள்.

“அவளுக்கு ரொம்ப திமிர் கூடிடுச்சும்மா. சிக்கன் செஞ்சாலே எனக்கு மூக்கு வேர்த்து திங்குறதுக்காகவே இங்க வந்துடுவேன்னு சொல்லுறா?” கவிதா பொரிய ஆரம்பிக்க

“உமாவா அப்படிச் சொன்னா?” என்றார் மணியம்மாள். அவ இப்படி எல்லாம் பேசுபவள் இல்லையே அதனால் நம்பிக்கை இல்லாமலே கேட்டாள்.

“ஆமாம்மா..” கவிதாவினை அப்படிச் சொல்லியதும் மணிக்குச் சுர்ரென்று ஏறியது.

“உன் மகனும் அவ பேசுறதைக் கேட்டுட்டு எனக்கென்னு தான் நின்னான்..” ருத்ரனையும் அவள் போட்டுத் தர மணியம்மாளுக்கு ஆத்திரம் தாளவில்லை.

“அவளை இப்பவே பேசுற பேச்சுல கடையில இருந்த வாக்குல அவங்க வீட்டுக்கு ஓடிப் போயிடணும்.. எங்க வந்து நின்னுட்டு யாரை பேசுறா?”  என்றவர் போனைப் போட “உன் மம்மி எதுக்கு எனக்குப் போன் போடுது” என்றாள் அவள் உதடு பிதுக்கியபடி.

“உமா அப்படியே அந்த உதட்டை கடிக்கணும்னு தோணுதுடி.. மாமன் பாவம்தானடி.. ஒரு தடவை மட்டும் ப்ளீஸ். என் தங்கம்ல” ருத்ரன் அழகு வடிய கெஞ்சத் தொடங்கினான் அவள் பேசியதை கவனத்திலேயே கொள்ளாமல்.

அதில் எரிச்சல் உற்றவள் போனை எடுத்துக் காதில் வைத்து “சொல்லுங்க அத்தை!” என்றாள் பவ்யமாக..

“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க உமா..”

“சத்தியமா உங்களை இல்லை அத்தை”

“ஏய் இந்த மாதிரி பேச்சை எல்லாம் வேற எங்கயாவது வச்சுக்கோ”

“அப்போ நீங்க போனை வச்சுட்டுப் போங்க. ஏன்னா நீங்க தான் என் பேச்சைக் கேட்கணும்னு ஆசையாய் போன் பண்ணிருக்கீங்க. கொஞ்சமாச்சும் லாஜீக்கோட பேசணும் அத்தை..” வார்த்தைக்கு வார்த்தை அத்தை போட அவன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டான்.

“என் பொண்ணை நீ எப்படிடி அப்படிச் சொல்லலாம்” அவனது அம்மாவின் குரல் நிசப்தத்தில் போனையும் மீறி அவன் செவியினை அடைந்தது.

“உங்க பொண்ணா? யாரு கவிதாவையா..அவங்களை நான் போய் என்ன அத்தை சொல்லப் போறேன். அது அவங்க வீடு. அவங்க வீட்டுக்கு வர்றதை நான் என்ன சொல்லிட முடியும் அத்தை. யாரோ உங்ககிட்ட தவறான வதந்தியைப் பரப்பிவிடுறாங்க அத்தை. நல்லா இருக்க குடும்பத்தை கும்மி அடிக்கப் பார்க்குறாங்க அத்தை. நீங்க அதையெல்லாம் நம்பாதீங்க அத்தை” அவள் கையை அவன் கிள்ள அதைத் தள்ளிவிட்டவள் போனினை ஸ்பீக்கரில் போட்டாள்.

“ஏய் இந்த மாதிரி நாடகம் ஆடுறதை நிறுத்து.. உன்னைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்டி.. ச்சே நான் கூட உனக்கு ரோஷம் லாம் இருக்கும்னு நினைச்சேன் வீட்டை விட்டுப் போனவே திரும்பியே வரமாட்டான்னு நம்புனேன். இப்போத்தானே தெரியுது.. நீ எதுக்காக இங்க வந்தேன்னு”

“எதுக்காக அத்தை” அசராமலே அடுக்கினாள் உமா. அம்மாவின் வார்த்தைகளில் சினம் கொஞ்சம் கொஞ்சமாய் அவனுக்குள் ஏறிக் கொண்டிருக்கிறது என்பதை அவனது முகம் காட்டிக் கொடுத்தது.

எந்தளவுக்கு தான் போவார்கள் என்று அவனுக்கும் அறிய வேண்டியிருந்தது. சமீபமாகத்தான் அவனைச் சுற்றியிருக்கும் உறவுகளின் உண்மை முகத்தினை அவன் அறிந்திருந்தான்.

இப்போது வாக்கு மூலமாகவே கேட்கையில் அவன் நிலை சொல்லவும் வேண்டுமா?

“புருஷன் எப்படிப் போனால் என்ன? காசு கிடைச்சால் போதும். நாம சொகுசா இருந்தால் போதும்ங்கிறதுதானே உன்னோட புத்தி. உன் அம்மா வீடு அந்த வசதியை உனக்குத் தந்திருக்காது. இதுக்காவே மறுபடியும் அவன் எப்போடா கூப்பிடுவான்னு கர்ப்பம் அது இதுன்னா கூட நீ சும்மா சொல்லி அவன் மூலமாவே மறுபடியும் வீட்டுக்கு வந்துருக்க” என்று சொல்ல..

பேச வாய் எடுத்தவனை கையமர்த்தியவள் “அத்தை! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்” என்றாள் அவள்.

“என்னடி உண்மை..”

“அதாவது இந்த புருஷன் எப்படிப் போனால் என்ன? புருஷனோட சொத்து தான் முக்கியம்னு நான் நினைச்சதா சொன்னீங்களே. இதே மாதிரி நினைப்போட எனக்கு முன்னாடி இருந்தே அந்த வீட்டுல யாரோ இருந்தாங்களாமே.. சாரி சாரி உங்க வீடுல அது.. மறந்துட்டேன்.. உங்க வீட்டுல இருக்கிறாங்களாமே.. நான் இப்போ என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்குப் புரியுதா அத்தை? என்ன இருந்தாலும் அவங்க என்னோட சீனியர்.. வழிகாட்டி. அவங்களையே பாலோ பண்ணால் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைச்சேன் அத்தை. தப்பா அத்தை” பாவமாய் பேசவும் போன் கட் பண்ணின சத்தம் மட்டுமே இப்போது எதிர்முனையில் இருந்துக் கேட்டது.

சிரிப்போடு அவள் ருத்ரனை ஏறிட அவனோ கண்கள் சிவந்து பார்க்கவே பயங்கரமாக இருந்தான்..

“ருத்ரா!” அவள் சன்னமாக அழைக்க அவன் திரும்பி அவளை முறைத்தான். அதில் பயம் வந்த போதும் அவளும் பெயருக்கு ஏற்றார் போல “என்ன இப்போ?” என்றாள் பயத்தினை மறைத்துக் கொண்டு.

“உனக்கு என்கிட்ட சொல்ல கேட்கன்னு எதுவுமே இல்லையா?” சீற்றத்துடன் கேட்டான்.

“என்ன சொல்லணும்? என்ன கேட்கணும்?” இப்போது அவளிடமும் அதே சீற்றம்.

“எல்லாரையும் பொறுத்த வரை நான் ஒரு இளிச்சவாயன் அப்படித்தானேடி”

“ச்சே ச்சே உன்னைப் போய் யாராவது அப்படிச் சொல்லுவாங்களா ருத்ரன். நீங்க யாரு?” அதில் நிச்சயம் உடைந்துதான் போனான். அவனுக்கு இப்போது உமாவின் மனம் என்ன பாடுபடும் என்பது புரிந்தது.

அவளைத் தொட வர அந்த கரத்தினை தட்டிவிட்டவள் “இந்த ஆறுதல் மண்ணாங்கட்டி எல்லாம் எனக்குத் தேவையில்லை ருத்ரன். என்னை என்னாலேயே ஆறுதல் படுத்திக்க முடியும். யாரையும் நான் எதிர்பார்க்கலை. அப்படி எதிர்பார்த்தால் அந்த எதிர்பார்ப்பு அர்த்தமே இல்லாததுன்னு பலமுறை நான் அனுபவரீதியாய் உணர்ந்திருக்கேன். சொல்லிக் குடுத்த பாடத்தை நீங்க மறந்துருக்கலாம். வலிக்க வலிக்க கத்துக்கிட்ட பாடத்தை நான் எப்பவுமே மறக்க மாட்டேன். உங்களோட அக்கறை எல்லாம் உங்களோட குழந்தைங்களுக்காக மட்டும் இருக்கட்டும். எனக்கு வேண்டாம்.. வேண்டவே வேண்டாம். இப்போ வண்டியை எடுங்க..” என்று சொல்ல அவன் உடனே நெருங்கி அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.

அவள் கரம் அணைக்கவில்லை என்றாலும் கூட அவனது தொடுகையில் அவள் ஆறுதல் பெற்றாள் என்பது உண்மைதான். எதிர்பார்க்காத போது அவளது எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறி இருந்தது.

“சாரி தங்கம். சாரி சாரி.. நிறைய விஷயங்கள் எனக்குப் புரியல. நான் உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன்ல. என்னை மன்னிச்சுடுடி.‌ என்னை வெறுத்து ஒதுக்கிடாத. என்னால நீயில்லாமல் இருக்க முடியாது”

“நான் இல்லாமல் இருக்க முடியாதுங்கிறது உண்மைன்னா எப்படி உனக்கும் எனக்கும் இடையில ஒரு பொண்ணு வந்துருப்பா. சும்மா டையலாக் பேசணும்னு பேசாத. விலகிப் போ. அவளையும் தொட்டுட்டு என்னையும் அதே கையால தொடுற..”

“அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்டி.‌ அப்படி இருந்தாலும் குளிச்சுட்டு வந்துதான் உன்னை…” விஷமம் அவன் வார்த்தைகளில் தெறிக்க

அவன் தலை அவள் பக்கம் இருந்த கண்ணாடியில் நச்சென்று மோதியதில் மூளை எல்லாம் குழம்பிப் போனது ருத்ர தாண்டவனுக்கு.

“என்ன சொன்ன? என்னடா சொன்ன?” அவளது அவதாரத்தில் இரத்தம் தாகம் கொண்டு அங்கும் இங்கும் அலையும் காளியாய் அவன் கண்ணுக்குத் தென்பட தலையைத் தேய்த்துவிட்டு உலுக்கி அவன் பார்த்தான். அப்போதும் அதே உணர்வுதான் அவனுக்கு.

சற்றுத் தள்ளி அமர்ந்தவன் தலையை முதலில் தேய்த்துக் கொண்டான். ஓரிரு நிமிடங்கள் கழித்துதான் பார்வையே தெளிவாக தெரிந்தது. தன்னை தேற்றியவன் இன்னும் கோபமாய் இருந்தவளின்

பாதங்களைப் பற்றி மென்மையாய் அதனைத் தூக்கி தன் நெஞ்சில் இருத்திக் கொண்டான்.

“உமாவோட கோபம் எல்லாம் ருத்ரன் நெஞ்சில கால் பதியிற வரைக்கும்தான்.. அதுக்கப்பறம் எல்லாம் கோபப் படக் கூடாது” அவனது வார்த்தைகளில் அவள் சலனமுற்று முகம் திருப்பினாள். இன்னும் பாதங்கள் இரண்டும் அவனது நெஞ்சில்தான் இருந்தது.

அதை வருடியவன் “பட்டு லட்டு பாவம்டி..” என்றான் மெல்ல..

மார்பிலேயே ஓங்கி மிதித்தவள்,

“மொதல்ல எல்லாம் உன் அம்மா பாவம்னு சொல்லுவ.. அப்பறம் உன் தொங்கச்சி பாவம்னு பில்டப் கொடுத்த. அடுத்து உன் தொம்பிகாரன் பாவன்னு சொன்ன. அடுத்து நீ பாவம்னு சொன்ன . இப்போ பட்டு லட்டு பாவம்னு உருட்டுற. இந்த லிஸ்ட்ல எங்கேயும் உமாங்கிற கேரக்டர் வரலையே மிஸ்டர் ருத்ரன். அவளும் பாவமேன்னு உங்களுக்குத் தோணலைல. தோணாது.. ஏன்னா என்னை மட்டும் எங்க அம்மா இரும்புல தானே பெத்துப் போட்ருக்காங்க. அதனால இவளுக்கு உணர்ச்சி எதுவும் இல்லை. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்னு நீங்களா நினைச்சுட்டீங்க.. இந்த மாதிரி பக்கம் பக்கமா புலம்பி என்னோட பலவீனத்தை யார்கிட்டயும் காட்டிடக் கூடாதுன்னு தான் நான் இங்க இருந்து போனேன். இப்போ மறுபடியும் கூட்டிட்டு வந்து உன்னால என்ன பண்ண முடியுமோ அதை சிறப்பா பண்ணிட்ட ருத்ரன்..” அவள் பேச பேச மனதுக்குள் இன்னும் நிறைய அடக்கி வைத்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.

“உமா” அவன் பேச ஆரம்பிக்கும் முன்னே போன் அதிர அதே டார்லிங் அழைப்பு..

கண்டு கொண்டாள்..

முகத்தினை அழுந்த துடைத்தவள், “என்னை விட்டுடு ருத்ரன் ப்ளீஸ்..” கதவைத் திறந்தவள் வெளியேறியிருந்தாள்.

 

புயல் தாக்கும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
18
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்