காலை உணவை முடித்ததும் அவளை தன் எதிரில் அமர வைத்த வாசு அவளிடம் “அம்மு நான் கேட்குறதுக்கு உண்மையை மட்டும் தான் சொல்லனும்… பொய் சொன்னா அவ்வளவு தான்… நேத்து என்ன ஆச்சு… அம்மா கிட்ட கூட சொல்லாம ஏன் வீட்டை விட்டு வெளிய வந்த… என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு” என்று கொஞ்சம் கண்டிப்புடன் கேட்டான்…
“அ….அ…து வ.. வ..ந்து மாமா… அ… அது நே..நே… த்து….” என்று கொஞ்சம் திக்கி திக்கி தான் பேச ஆரம்பித்தாள் சைந்தவி…
அவள் திக்குவதை பார்த்த வாசு அவள் கையை தன் கைக்குள் வைத்து கொண்டு “அம்மு என்ன நடந்துச்சோ அதை மட்டும் சொல்லு… என்கிட்ட மறைக்க நினைக்காத… நீயா சொன்னா பிரச்சனை இல்லை… ஆனா நான் கண்டுபிடிச்சா உன் அக்காவுக்கு தான் பிரச்சனை… உண்மையை மறைக்காம சொல்லு…” என்று கூறி கையை தட்டி கொடுத்தான்…
“மாமா… அது வேண்டாமே.. ப்ளீஸ் இ…து.. மட்டும் கே..த்(ட்)காதீங்க…” என்று கண்களில் நீர் தேங்க கூறினாள்…
“அம்மு சரி நான் எதுவும் பண்ண மாட்டேன்… என்ன நடந்ததோ அது மட்டும் சொல்லு… எதுக்கெடுத்தாலும் சின்ன பிள்ளை மாதிரி கண்ணு கலங்குது…” என்று கூறி கண்களை துடைத்து விட்டவன் அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான்…
அவன் நெஞ்சில் சாய்ந்து கண்களை இறுகி மூடி கொண்டு “நமக்கு இன்னும் குழந்தை பிறக்காதது பத்தி பேசுனாங்க… நீங்க என்னை பிடிக்காம தான் ஒதுக்கி வெச்சு இருக்கீங்க… இளா ம்மா சொன்னதுனால தான் என்கூட வாழுறிங்கனு சொன்னாங்க… அவங்க சொன்னதை எல்லாம் நான் நம்பல.. எனக்கு என் மாமாவை பத்தி தெரியும்… ஆனா நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் மேல ஆகுது… நீங்க இது வரைக்கும் பொண்டாட்டியா பார்த்ததே இல்ல… எனக்கும் உங்களை மாதிரி ஒரு குழந்தை வேணும்னு ஆசையா இருக்கு… நான் அதை உங்க கிட்ட பேச ஆரம்பிக்கும் போது நீங்க அதை பேச விடமா பேச்சை மாத்துவிங்க… உண்மை சொல்லுங்க மாமா… எனக்கு உடம்புல எதோ பிரச்சனை இருக்கா… அது தான் என் கூட சேராம இருக்கீங்களா” என்று அவனை பார்க்காது அனைத்தும் கூறி தன் சந்தேகத்தையும் கூறி முடித்தாள்…
குரலில் கண்டிப்புடன் “சைந்தவி நிமிர்ந்து என்னை பாரு” என்று கோவமாக கூறினான்…
அவனின் கோவத்தில் ஏற்கனவே பயத்தில் இருந்தவள் அவன் பெயர் சொல்லி அழைத்ததில் கண் கலங்கியவாறே உதட்டை பிதுக்கி அவனை பார்த்தாள்…
“உனக்கு என்ன வயசு ஆகுது… நான் நம்ம கல்யாணம் அப்பயே உன்கிட்ட சொன்னேன் தானு உனக்கு இன்னும் வயசு ஆகல… ரெண்டு மூனு வருஷம் போகட்டும்னு… இருந்தும் அதை நினைச்சு வீட்டை விட்டு வந்து இருக்க.. உன் அக்காவை ஒரு அறை விட்டுட்டு வீட்டை விட்டு அனுப்பாம நீ வீட்டை விட்டு வந்து இருக்க… கொஞ்சமாச்சும் உன் இளா அம்மாவை பத்தி யோசிச்சியா… நீ காணாம போனதுல இருந்து அழுதுட்டே இருக்காங்க…” என்று கடுமையுடன் கேட்டான்…
“சாரி மாமா என்…னால அப்…ப அப்…ப அதை யோசிக்க முடியல… என் மைண்ட் பிளாங்கா இருந்தது.. நீங்க கண்டுபிடிச்சிடுவீங்க தெரியும்… அது தான் ரெண்டு நாள் தனியா இருக்கலாம்னு வந்தேன்…” என்று தலையை குனிந்து கலங்கிய குரலில் கூறினாள்…
அந்த குரல் அவனை அசைத்தாலும் கடுமையாக தான் முகத்தை வைத்து இருந்தான்…
“சரி குழந்தை பேச்சுக்கே வருவோம்… குழந்தை பெத்து தந்தா தான் வீட்டுல இருக்கனும்னுஎங்க வீட்டுல யாரோ சொன்னாங்களா…. உனக்கு என்ன வயசு ஆகுது…. அதுக்குள்ள குழந்தை வேணும்னு சொல்ற…” என்று கோவமாக கேட்டான்…
அவள் வாயே திறக்கவில்லை… அவனும் எதுவும் கூறாமல் வெளியில் சென்றுவிட்டான்… அவன் செல்வதையே அழுது கொண்டு பார்த்து கொண்டு இருந்தாள் சைந்தவி…
அவள் அழுவது அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவளுக்கு அவளின் தவறு புரிய வேண்டும் என்று நினைத்து அவளை தனியாக விட்டு வந்து விட்டான்… ஆனால் அவனுக்கு யார் சொல்லுவது தற்போது தவறை புரிந்து கொண்டாலும் சிறிது நாட்களுக்கு பிறகு அதே தவறை தான் அவள் செய்ய போகிறாள் என…..
திலீப் அவனின் அறையில் இருக்க வேகமாக வந்த வாசு அவனின் கட்டிலில் தானும் விழுந்தான்… அவன் விழுந்ததில் பயந்த திலீப் “டேய் அறிவு இருக்கா இல்லையா இப்படியா வந்து விழுவ..” என்று திட்டியவன் வாசு இறுக்கமாக இருப்பதை பார்த்து அமைதியாகி அமைதியாகி விட்டான்…
“டேய் ஜிவி(gv) என்ன ஆச்சு.. ஏன் கோவமா இருக்க… எதோ பிரச்சனையா…” என்று கேட்டான்…
“ஆமா டா உன் தங்கச்சி தான் பிரச்சனை… அவளுக்கு குழந்தை வேணுமாம்… நான் எப்படி டா சொல்லுவேன்… அவளோட கர்ப்பப்பை வீக்கா இருக்குனு… அவளால குழந்தையை தாங்க முடியாது டா… என் அம்மு டா அவ அவளை எப்படி டா நான் கஷ்டப்படுத்துவேன்… இதை சொன்னா உடைஞ்சி போயிடுவா டா… அவ அவளோ ஆசையா கேட்குறா டா… எனக்கு உன்னை போல குழந்தை வேணும் மாமானு என்னால உண்மையை சொல்ல முடியல டா… அதை எப்படி சொல்றதுனு தெரியாம அவளை திட்டிட்டு வந்துட்டேன் டா… உனக்கு என்ன வயசு ஆகுது அப்படி இப்படி கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன் திலீப்… கஷ்டமா இருக்கு…” என்று இறுக்கமாக கூறினான்…
“டேய் இது பாப்பாவுக்கு மட்டும் தெரிய கூடாது டா… இப்போ எவ்ளோ பெசிலீட்டிஸ்(facilities) வந்துருச்சு… பாத்துக்கலாம்… இப்போ ரூமுக்கு போ பாப்பா அழுதுட்டு இருப்பா” என்று அவனை கட்டாய படுத்தி சைந்தவி இருக்கும் அறைக்கு அனுப்பிவிட்டான்…
அங்கு அவளோ அழுது கொண்டே மீண்டும் தூங்கி இருந்தாள்…. அவள் அழுது கொண்டு இருப்பாளோ என்று கவலையாய் வந்த வாசு அவள் தூங்கி கொண்டு இருப்பதை பார்த்து “அட என் குட்டி கும்பகர்ணனி” என்று செல்லமாக திட்டி அவளை ஒழுங்காக படுக்க வைத்தான்…
அவனின் அருகாமையை உணர்ந்த அவளோ “சாரி மாமா… இனிமே இப்படி பண்ண மாட்டேன்” என்று தூக்கத்தில் உளறி கொண்டே உறங்கினாள்…
அவளின் உளறல் அவனுக்கு கண்ணீரை தான் வர வைத்தது… எப்படி அவளிடம் உனக்கு குழந்தை பிறக்க வாய்ப்புகள் குறைவு என்று கூறுவது என்று மனதின் உள்ளேயே அழுது கொண்டு இருந்தான்…
அரை மணி நேரம் அவன் பார்க்க வேண்டிய வேலைகளை முடித்து விட்டு அவளை சீண்ட முடிவு எடுத்தான்…. மெதுவாக அவளின் அருகில் சென்று பாதத்தை உரசி கூச செய்தான்… அவளோ “மாமா ப்ளீஸ் கூசுது… அமைதியா இருங்க” என்று கூறி மீண்டும் உறங்க ஆயத்தமானாள்….
அவளின் வாயை பொற்றி அவளின் கன்னத்தை பல் தடம் தெரிய கடித்து வைத்துவிட்டான்…. அவளோ கத்தவும் முடியாமல் கண்கள் எல்லாம் கலங்கி விட்டு இருந்தது…. இரண்டு நிமிடம் கழித்து தான் அவள் வாயில் இருந்து கையை எடுத்தான்…
அவளோ அவன் கடித்த கடுப்பில் அவனின் கன்னம் கழுத்து தோள் என அவள் வாயிற்கு கிடைத்த இடத்தில் கடித்து கொண்டு இருந்தாள்… அவனோ கொசு கடிப்பது போன்று சிரித்து கொண்டு அமர்ந்து இருந்தான்…
அவன் சிரித்து கொண்டு இருப்பதை பார்த்து “ஏன் டா மாமா கடிச்ச… வலிக்குது… உனக்கு வலிக்கலயா….” என்று கோவம் பாதி கொஞ்சல் பாதி என கலந்து கேட்டாள்…
“என் அம்மு கடிச்சா வலிக்குமா…. அவ தான் குட்டி பிள்ளை ஆச்சே” என்று கேலி கலந்து கூறினான்…
அவனின் கேலியில் கோவமுற்றவள் ஜன்னல் அருகில் சென்று நின்று கொண்டாள்… அவளை பின்னிருந்து அணைத்தவன் “அம்மு குயிக் ரெடி ஆகு… போய் உன் பிரெண்டை பாத்துட்டு ஊருக்கு கிளம்பலாம்….” என்று கொஞ்சலாக கூறினான்….
அவளோ அமைதியாக நிற்க அவளை ஒற்றை கையில் தூக்கியவன் குளியலறையில் விட்டவன் தானும் ரெடியாக சென்று விட்டான்…
இருவரும் தயார் ஆனதும் திலீப்பையும் அழைத்து கொண்டு திவ்யா வீட்டிற்கு கிளம்பினர்.. சிறிது நேரம் திவ்யாவிடம் பேசி விட்டு அவளிடம் விடைபெற்று வாசுவும் தீலிப்பும் கிளம்ப திவ்யா சைத்துவிடம் “சைத்து இனிமே லூசு மாதிரி இப்படி பண்ணாத…. அண்ணாவோட கோவம் எவளோனு உனக்கு தெரியும் பட் உங்கிட்ட அதுல பத்து பெர்ஸன்ட் கூட காட்டல… உங்க அக்கா என்ன பிரச்சனை பண்ணாலும் ஒழுங்கா அண்ணா கிட்ட சொல்லு… இப்படி வீட்டை விட்டு வெளிய வரக்கூடாது…” என்று தாயை போல் கண்டிப்புடன் கூறி வழியனுப்பி வைத்தாள் அந்த பாசமிகு தோழி..