Loading

அத்தியாயம் 2

ஒரு காரில் பரிதியும் இனியனும் புறப்பட, இன்னொரு காரில் இன்வெஸ்டர்ஸ் புறப்பட்டுச் சென்றனர்..

நகர பகுதியின் நெடுஞ்சாலையில் இருந்து   கார் சீறிப் பாய்ந்து புறநகர் பகுதிக்குச் சென்று கொண்டு இருந்தது..

காரின் வேகம் குறைக்க பட்டு, மெதுவாக ” இளா லெதர் அண்ட் காஸ்மெடிக்ஸ் பேக்டரி.. “ என்று பெரிய தங்க நிற எழுத்துகளால் பொறிக்க பட்ட வாயிலினுள் நுழைந்தது..

நடுவில் சாலை இருக்க, இரு பக்கமும் மூலிகை தோட்டம் அமைக்கப் பட்டிருந்தது..

பயணம் செய்து கொண்டிருக்கும் போதே, மூலிகை செடிகளின் நறுமணமே, வந்திருந்த இன்வெஸ்டெர்ஸ்களை கவர்ந்தது என்றே கூறலாம்..

சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த தொழிற்சாலையில் ஒரு பக்கம், தோல் பொருட்கள் செய்யப்பட, இன்னொரு பக்கம் அழகு சாதன பொருட்கள் தயாரிக்க படுகின்றன..

பரிதி அங்கு இருந்த ஆபீஸ் ரூம் அருகில் காரை நிறுத்திவிட்டு இறங்க,

பின்னால் வந்தவரகளும் காரை நிறுத்தி விட்டு இறங்கி அவன் அருகில் வந்தனர்..

வந்ததுமே, அதில் இருந்த ஸ்டீபன் என்ற ஒருவர் ” வாவ்… பரிதி.. இட்ஸ் லுக்கிங் வெரி நைஸ் அண்ட் திஸ் பிராகிரன்ஸ் இஸ் வெரி அட்ரேக்டிவ் டு மீ.. ” என்றார்.

பரிதி சிரித்துக்கொண்டே ” இங்க இருக்கிற மூலிகை செடிகள், அப்புறம் பூக்களை பயன்படுத்தி தான் பெரும்பாலும் நாங்க பொருட்களை தயாரிக்கிறோம்.. சில வகை செடிகள் எங்களுக்கு இங்க விளைவிக்க முடியாது. அது எல்லாம் எங்க கிடைக்குதோ அங்க இருந்து நாங்க அதை கொண்டு வந்து உபயோக படுத்துவோம்… ” என்றான்..

பின் அவர்களை தொழிற்சாலைக்கு உள்ளே அழைத்துச் சென்றான்..

இனியனோ, அவர்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வர சொல்லலாம் என்று அங்கு வேலை செய்யும் பணியாளரிடம் தெரிவிக்க சென்றான்..

முதலில் தோல் பொருட்கள் தயாரிக்க படும் பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு தரம் பிரித்து ஒவ்வொரு பொருளாக செய்ய படுவதையும், காண்பித்தான்..  

பொதுவாக தோல்கள், கால்நடைகள், ஆடுகள், செம்மறி ஆடுகள், குதிரைகள், பன்றிகள் மற்றும் பிற விலங்குகளிடம் இருந்து பெறப்படுகின்றன..

அப்படி பெறப்படும் தோலை உளற வைத்து, பின் தோலை பதினிடும் முறையில் பதனிட்டு, அதன் பிறகு அதனை நம் விருப்பத்திற்கு ஏற்ப அதனை உபயோக படுத்திக் கொள்ளலாம்..

உலர வைத்து வரும் தோலை இங்கே பதனிட்டு,  காலிணிகள், கைப் பைகள்,வாலெட்டுகள், பெல்ட்டுகள், ஜாக்கெட்டுகள் மற்றும் கடிகார பட்டைகளாக செய்கின்றனர்..

இந்த தோல் தயாரிப்புகள் அவற்றின் ஆயுள், நெகிழ்வுத்தன்மை மற்றும் ஸ்டைலான தோற்றத்திற்காக செய்யப்படுகின்றன.. அவற்றின் செயல்பாடு மற்றும் ஃபேஷன் நோக்கங்களுக்காக பிரபலமாகின்றன.

இந்த தோல் பொருட்கள் மென்மையான அல்லது மெல்லிய தோல் போன்ற பல்வேறு வழிகளில் செய்யப்படுகின்றன.. மேலும் பல வண்ணங்களில் சாயமிட்டு அதனை கண்களை கவரும் பொருளாகவும் மாற்றுகின்றனர்.. 

இப்படி அதன் செயல் முறையைத் தான் ஒவ்வொன்றாக காண்பித்துக் கொண்டு இருந்தான் பரிதி..

இதற்கு இடையில் இனியனும் அவர்கள் அருந்துவதற்கு எதுவும் கொண்டு வருமாறு பணிந்து விட்டு, இவர்களுடன் சேர்ந்து கொண்டான்..

அவர்களும் ஒவ்வொன்றாக கவனித்துக் கொண்டே வர, அதனை அடுத்து காஸ்மெடிக்ஸ் பக்கம் சென்றனர்.

அங்கே சரும பராமரிப்பு மற்றும் முடி பாராமரிப்புக்காக பொருட்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.

அதை தான் அவர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர்..

சரும பாராமரிப்புக்காக, மாய்ஸரைசர் , கிளீன்சர்ஸ், பேஸ் மாஸ்க் மற்றும் சீரம் தயாரிக்க பட்டுக் கொண்டு இருந்தது..

இவை ஒவ்வொன்றும் முகத்திற்கு ஒவ்வொரு வகையில் பயன் அளிக்கக் கூடியவை…

இவற்றிற்காக, கற்றாழை,  மஞ்சள், வேம்பு, ரோஜா பூவின் இதழ்கள், கேமோமில், குங்குமப் பூ, வெள்ளரி மற்றும் லேவேண்டர் மலர் என்று இன்னும் சில மூலிகை செடிகளும் உபயோக்கின்றனர்..

தலை முடி  பராமரிப்புக்காக, கற்றாழை , தேங்காய் எண்ணெய், ரோஸ்மரி, லெவண்டர், வேம்பு, பிரிங்கராஜா, செம்பருத்தி போன்ற தாவரங்களும், ஆலிவ் விதைகள், வெந்தயம் போன்ற விதைகளை கொண்டு ஹேர் ஆயில், ஹேர் ஷாம்பு, சீரம் மற்றும் ஹேர் மாஸ்க் போன்ற பொருட்கள் தயாரிக்க படுகின்றன..

இவை அனைத்தும் பாரம்பரிய முறையில் தயாரிக்கப் படுவதால் எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை..

அதனாலயே, இதை அறிந்து இதில்

முதலீடு செய்ய முன் வந்து இருந்தனர்..

இவர்களின் தயாரிப்பு முறை, அவர்களுக்கு பிடித்து போனதால் அவர்களும் ஒப்புக் கொண்டு அக்ரீமெண்ட் பத்திரத்தில் கை எழுத்து இட்டு, முதலீடு செய்வது மட்டும் அல்லாமல் இவர்களுடைய தயாரிப்பு பொருட்களை அவர்கள் நாட்டில் இறக்குமதி செய்து விற்பனை செய்யவும் அக்ரீமெண்ட் போட்டுக் கொண்டனர்..

நல்ல படியாக முடிந்ததில் இரு தரப்பினருக்குமே மகிழ்ச்சி..

பணியாள் ஒருவர், அவர்களுக்கு பழச்சாறு கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கி பருகினர்.

பின்னர் அவர்களுக்கு தடல் புடலாக விருந்து ஏற்பாடு செய்து அவர்களுக்கு மன நிறைவு மட்டும் அல்லாமல் வயிரையும் குளிர வைத்து அனுப்பி வைத்தனர்..

இங்கு இவர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருக்க, அங்கு ஒருவன் தன் மேசையின் மீது இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வீசிக் கொண்டு இருந்தான் கோவத்தில்..

” டேய்.. இப்போ எதுக்கு டா.. எல்லாத்தையும் கீழ போட்டு உடைச்சிட்டு இருக்க.. இது எல்லாம் உடைச்சா நமக்கு போன ஆர்டர் கெடச்சிருமா.. ” என்று மகாலிங்கம் அவரது மகன் சஞ்சய் இடம் கேட்டார். 

” நானும் ஒவ்வொரு தடவையும் பாக்குறேன்.  நமக்கு கிடைக்க போற ஆர்டர் எல்லாம் கை நழுவி அவன்கிட்ட தான் போகுது.. ” என்று ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தான்..

” சரி.. அதுக்கு என்ன பண்ண முடியும்.. அடுத்த ஆர்டர் பார்த்துக்கலாம்.. விடு.. ” என்று அவன் தந்தை சொல்ல,

” இப்படியே எத்தனை நாளைக்கு தான் விட முடியும்.. இதுக்கு ஒரு வழி பண்றேன்.. ” என்று சொன்னான்.

” என்ன டா பண்ண போற.. ” என்று அவன் தந்தை மகாலிங்கம் கேட்க,

” பொறுத்து இருந்து பாருங்க.. ” என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.. 

************

” நிரஞ்சனா.. அம்மாடி நிரஞ்சனா.. ” என்று ஒரு பெண்மணி வீட்டின் வாசலில் இருந்து அழைக்க,

” யாரது… ” என்று கேட்டுக் கொண்டே உள்ளே இருந்து ஒருவன் வந்தான்..

” தம்பி.. அக்கா இல்லையா பா.. ” என்று அந்த பெண்மணி கேட்க,

” இல்லை ஆன்ட்டி… அக்கா பக்கத்துல கடை வரைக்கும் போய் இருக்காங்க.. என்ன விஷயம் ஆன்ட்டி..” என்று அவன் கேட்க,

” ஒன்னும் இல்லை ப்பா… இந்த மாசம் டியூஷன் பீஸ் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்.. ” என்று அவர் கையில் இருந்த பணத்தை அவனிடம் கொடுக்க,

” ஆன்ட்டி.. நீங்க அந்த பாபு ஓட அம்மா தான.. ” என்று அவன் கேட்க,

” ஆமாம் ப்பா.. அக்கா கிட்ட மறக்காம சொல்லிரு.. ” என்று அந்த பெண்மணி கூறிவிட்டு சென்று விட்டார்.

அந்த பையன், அந்த பெண்மணி கொடுத்த பணத்தை பத்திரமாக வைத்துக்கொண்டு திரும்பி மெல்ல தன் கையில் இருந்த குச்சியை வைத்து தட்டிக் கொண்டே உள்ளே சென்றான்.

சிறிது நேரத்தில் யாரோ வீட்டுக்குள் வரும் அரவம் கேட்டதும், ” அக்கா.. ” என்று அழைத்தான்..

” ஹான்.. சொல்லு விக்ரம்.. ” என்று அவனது அக்கா நிரஞ்சனா கேட்க,

” அந்த பாபுவோட அம்மா வந்து டியூஷன் பீஸ் கொடுத்துட்டு போனாங்க க்கா.. ” என்று தன் கையில் பத்திர படுத்தி வைத்து இருந்த பணத்தை எடுத்து தன் தமக்கையிடம் நீட்டினான்.. 

” ம்ம். சரி டா.. ” என்று அந்த பணத்தை வாங்கிக் கொண்டு, கடையில் இருந்து வாங்கி வந்த பொருளை அடுக்களையில் சென்று வைத்தாள் நிரஞ்சனா..

நிரஞ்சனா, 25 வயது மங்கை.. அவளுக்கு என்று துணையாக இருப்பது அவனது தம்பி விக்ரம் மட்டுமே..  அவனும் கூட பார்வையற்றவன்.. அதுவும் சிறிது வருடங்களுக்கு முன்பு, கண்ணில் தீப் பொறி பட்டு கண் பார்வை இழந்தவன்.

அவளது தந்தை இவள் சிறு வயது இருக்கும் போதே இறந்து விட, அவளது தாயோ சிறிது வருடங்களுக்கு முன்பு உடல் நிலை சரி இல்லாமல் இறைவனடி சேர்ந்து இருந்தார்..

இருப்பதோ ஒரு படுக்கையறை கொண்ட சிறிய வீடு.. சொந்த வீடாக இருப்பதால் அவளுக்கு அதில் பெரும் நிம்மதி..

படித்து முடித்து விட்டு, அருகில் இருந்த ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்தாள் ..

ஆனால் விகரமிற்கு இப்படி ஆகவும் தன் அம்மாவும் இல்லாமல் அவன் தனியாக கஷ்டப்படுவான் என்று கருதி அவள் அந்த வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்தே தன் தம்பியையும் பார்த்துக் கொண்டு, டியூஷன் எடுத்துக் கொண்டு இருக்கின்றாள் ..

தன்னால் முடிந்த அளவுக்கு பணத்தை சேமித்து வைத்து சிக்கனமாக வாழ்க்கையை நடத்துகிறாள்.. 

விகரமிற்கு அடிக்கடி கண் பரிசோதனைக்கு செல்வதால், அவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் பார்வை வந்து விடும் என்று மருத்துவர்கள் கூறியதால், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று எண்ணி அறுவை சிகிச்சைக்காக சிறிது சிறிதாக பணத்தை சேர்த்து வைத்துக்கொண்டு இருக்கின்றாள் ..

சமையல் அறையில் இருந்து வெளி வந்தவள்,  படுக்கை அறையில் நுழைந்து பணத்தை பத்திரமாக வைத்து விட்டு, சமைத்து வைத்து இருந்த உணவை தனக்கும் தன் தம்பிக்கும் எடுத்து வைத்துகொண்டு, இருவரும் சேர்ந்து உணவு உண்டனர்..

பின் மாலை போல, வழக்கம் போல, டியூஷன் எடுக்க ஆரம்பித்து, இரவு அக்காவும் தம்பியும் சேர்ந்து உணவு உண்டு தூங்கச் சென்றனர்..

இது தான் இவர்களின் வாழ்க்கையில் எந்த வித மாற்றமும் இன்றி தினசரி நடக்கும் வாடிக்கை…

ஆனால் பரிதியால் அவள் வாழ்க்கையில் நிகழ போகும் மாற்றங்களை அறியாமல் நிம்மதியாக துயில் கொண்டிருந்தாள் பாவை..

நித்தமும் வருவாள்… 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
16
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்