நீல கண்களின் காதல் பயணம் 💙
பெருமாளின் ஆட்கள் ஒவ்வொரு ஊரக அவளை தேடிட எங்கும் கிடைக்கவில்லை. தேடுதல் வேட்டையில் சோர்வுற்றவன் அந்தந்த ஊரின் ரவுடிகளுக்கு மதிநிலாவின் புகைப்படம் மற்றும் அவளின் மத்த அடையாளங்களை தெரிவித்தான். அதன் மூலம் காஞ்சிபுரம் காசிக்கும் தகவலை சேர்ந்திருந்தது.
காசி_ கொலை, கொள்ளை , வெட்டு, குத்து, அடிதடி ,கட்ட பஞ்சாயத்து என அனைத்தையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் ரவுடி கும்பலின் தலைவன். காசியின் ஆட்களுக்கு விஷயம் பகிரப்பட்டு அவர்களும் காஞ்சிபுரம் முழுவதும் தேட தொடங்கினர்.
கல்லூரியில். அர்ஜூன் பதறி கயலின் அருகே சென்றிட பிரபு தனது தலையை இருகைகளாலும் அழுத்தி பிடித்துகொண்டு அமர்ந்துவிட்டான்.
“என்ன ஆச்சி விழி? எதுக்காக இப்படி பண்ண ?”.
“அவன் என்கிட்ட என்ன கேட்டான்னு நீயே கேளு.”கலங்கிய கண்களுடன் அவனை நேருக்கு நேராக நிமிர்ந்து நின்று சொல்லிட, ஒரு நிமிடம் அவளை கட்டி அணைத்து ஆறுதல்படுத்த கைகள் பரபரத்த போதும் சூழல் கருதி தன் எண்ணத்தை பிரபுவின் பக்கம் திருப்பினான் அர்ஜூன்.
” என்ன டா?” என அவன் வினவ பிரபு மூர்ச்சையடைந்தான். உடனடியாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தவன், அவசர கதியில் பிரபுவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று காயத்திற்கு மருந்திட்டு அவன் வீட்டிற்கு அனுப்பிவைத்தான் அர்ஜூன்.
பின் அவன் மீண்டும் கல்லூரிக்கு வர, பிரின்சிபால் மணி இல்லாத காரணத்தினால் அவரின் அடுத்த அசிஸ்டன்ட் பிரின்சிபாலான அமுதன், கயலை அலுவலக அறைக்கு அழைத்திருந்தார்.
அர்ஜூன் வகுப்பிற்கு வர மேசை மீது தலைக்கவிழ்ந்து படுத்திருந்தாள் கயல்.அவளின் அருகில் சென்றவன் “விழி” என்றழைக்க எழுந்து அமர்ந்தவளின் முகத்தில் கிஞ்சிற்றும் அமைதி இல்லை.
கலங்கிய கண்களும் கசங்கிய முகமாக வாடி இருந்தாள். அவளின் கையை பிடித்து அழுத்தம் கொடுக்க கண்கள் கரித்தது மங்கைக்கு.
“விழி. என்ன ஆச்சின்னு சொன்னா தான தெரியும். சொல்லுமா”. பொறுமையாக அர்ஜூன் வினவிட பதிலே இல்லை அவளிடம். என்ன செய்வதென்று தெரியாது அவளின் முகத்தையே அர்ஜூன் பார்க்க.
“அவன் என்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணான். நான் நோ சொன்னதும், ‘காதல் தான் வேண்டாம்னு சொல்ற சரி பரவாயில்ல. கல்யாணம் பண்ணிகிறேன் ஒரு நைட்டு ஸ்டேண்ட் பண்ணிக்கலாமானு’ கேட்டான். நான் முறைச்சி பார்க்கவும், ‘பார்க்க பளபளனு இருக்க ஒருத்தர கூடவா மடக்கிருக்க மாட்டன்னு’ என்று அவள் அழுகையை அடக்க இயலாமல் தேம்ப . இதை கேட்டவனின் கழுத்து நரம்புகள் புடைத்து எழுந்தது. இந்நேரம் பிரபு மட்டும் அவன் கண்முன் இருந்திருந்தால் நேராக மார்ச்சூரிக்கு தான் சென்றிருப்பான். அவ்வளவு வெறி அவனிடம். யாரோ ஒரு பெண்ணை கலாய்ததற்கே அவனை அடித்தவன்,தான் நேசிக்கும் பெண்ணிற்கு ஒன்றென்றால் விடுவானா என்ன.
அவளின் கண்ணீரை துடைக்க அர்ஜுனின் கைகள் நீண்டிட அதை பார்த்தவள், அவளே முகத்தை அழுந்த துடைத்து விட்டு,
” இதனால தான் அடிச்சேன். என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம்” என்றாள் பேசில் எவ்வித பிசிறும் இன்றி.
கயலின் நிலையை கருத்தில் கொண்டு கோபத்தை ஒதுக்கி வைத்தவன், அவளை சகஜமாக்கும் பொருட்டு “அதான் பென்சிங்கம் மாதிரி அடிச்சி தூள் கிளப்பிட்டியே. பேசின வாயையும் ஒடச்சாச்சி அதை யோசிச்ச மண்டையையும் ஒடச்சாச்சி. இனி உன் வழிக்கே வரமாட்டான். அது சரி நீ எப்படி ஃபைட் எல்லாம் கத்துக்கிட்ட.”அர்ஜூன் கேட்டிட,
சன்னமாக சிரித்தவள் “நான் கராத்தே பிளாக் பெல்ட். இதெல்லாம் ஸ்வேதா ஓட வேலை. தனியா இருக்குற பொண்ணுன்னு அவதா கிளாஸ் ல சேர்த்து விட்டா.”என்றிட அமுதன் அவர்களை அழைத்ததாக தகவலும் வந்தடைந்தது.
இருவரும் சென்றிட, முதலில் கோபம் கொண்டு கத்திய அமுதன் நிலவரம் என்னவென தெரியவும் சற்று நிதானம் அடைந்தார்.நடந்த அனைத்தையும் விசாரித்தவர் அதனை அலைபேசியில் ரெகார்ட் செய்து கொண்டு அவர்களை வகுப்பிற்கு அனுப்பினார்.
பின் வகுப்பும் ஆரம்பித்துவிட, இருவரும் அவரவர் இருக்கைக்கு சென்றமர்ந்தனர். இருப்பினும் அர்ஜுனின் கவனம் முழுவதும் கயல் மட்டுமே.இன்னுமே தெளியாத முகத்துடன் இருந்தவளை பார்க்க அவனுக்கும் கஷ்டமாக தான் இருந்தது. இசை இருந்திருந்தால் இந்நேரம் அவளை சிரிக்கவைத்து கலகலப்பாக மாற்றியிருப்பாள். அவளும் இல்லாத கலக்கம் காயலிடம்.
வகுப்பு முடிந்து உணவு இடைவேளையும் வர அஜய், விக்ரம் ,கவின் ,அர்ஜூன் ,கயல் என ஐவரும் கேன்டீன் சென்றனர். கவின் உணவினை உண்ணாது அதில் உள்ள பருக்கைகளை எண்ணிக்கொண்டிருக்,
கயல் அஜயிடம், “அஜய் இந்நேரத்துக்கு இசையை பொண்ணு பார்த்திட்டு போய்ருப்பாங்க தான” என கவின் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே வினவிட,
“அப்படியா! அவள பொண்ணுபார்க்க வந்தாங்களா?. சொல்லவே இல்ல அந்த பக்கி பன்னாடை. வரட்டும்வெச்சிக்கிறேன்” என்றான் அஜய்.
“எனக்கு தெரிஞ்சி அவ ஓகே சொல்லிடுவான்னு தான்நினைக்கிறேன்.” என அர்ஜூன் கவினை நோட்டம் விட்டுக்கொண்டே சொல்லியதும் நிமிர்ந்து பார்த்த கவினுக்கு உள்ளுக்குள் ஏதோ நொறுங்கும் உணர்வு. இதயத்தை ஈட்டியால் குத்தி கிழித்தது போல் இருக்க எதையும் வெளிக்காட்ட இயலாமல் எழுந்து சென்றுவிட்டான்.
அதை பார்த்த கயல் “நாளைக்கு நம்ம கிளாஸ்ல ஒரு புரோபோசல் சீன் இருக்கு பா. எல்லாரும் ரெடி யா இருங்க. இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்.” கயல் வெட்க சிரிப்புடன் சொல்லிட,
விக்ரம் “பையன் போற ஸ்பீடை பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே. நடக்கும்னுநினைக்கிற?”
” நடக்கும். கவின் இல்லைனாலும் இசை நடத்துவா.” _கயல்.
” காமெடி பீஸ் எல்லாம் கமிட் ஆகுது கரெண்ட் ஹீரோ நானு கையிலாகாம உட்கார்ந்திருக்கேன். ம்ம்…..அதுக்கெலாம் முக ராசி வேணும் போல.” என பெருமூச்சி விட்ட அஜய் மற்றவர்களை திரும்பி பார்க்க குபீரென சிரித்தனர் அனைவரும்.
“உனக்காக தேன்மொழி யோ இல்ல கனிமொழி யோ, கண்டிப்பா வருவா பங்கு. அவ்வளவு ஏன் உனக்காகவே காத்திருக்காளே உன் அத்தை பொண்ணு அருக்காணி. அவளிருக்க உனக்கென்ன கவலை ” என்ற விக்ரமின் கழுத்தை நெறித்தான் அஜய்.
“அந்த கரடியை கல்யாணம் பண்றதுக்கு நான் பாலங்கெனத்துல விழுந்து சாவேன் டா குரங்கே.”என்றிட நொடியில்அஜையின் கைகளில் இருந்து தப்பித்தான் விக்ரம்.
இடைவேளை முடிந்து வகுப்பிற்கு வந்த இசை மேசை மீது அமர, அவளின் புத்தகத்தின் மீது இருந்தது ஒரு கடிதம் மற்றும் ஒரு பாதாம் சாக்லேட். பார்த்ததும் குழப்பம் அவளுக்கு. யார் இதை வைத்தது என்று. ஏனெனில் அவளுக்கு பாதம் ஃபிளேவர் பிடிக்கும் என இதுவரை யாரிடமும் அவள் தெரிவித்ததில்லை. அவளின் முன் அனுபவம் தனக்கு பிடித்தது பிடிக்காதது என எதையும் யாருக்கும் தெரிவிக்க விடவில்லை.
அந்த கடிதத்தை எடுத்து பிரித்து பார்த்தாள்.
“ஹாய் டிம்பிள்…..
உன் கவலை தோய்ந்த முகமும் கலையாக இருப்பின் ….
சிந்தாமல் சிதறாமல் உருகுதே என் உள்ளம்….
உன் சிரித்த முகமும் , கலையான கண்களும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறதே என்னை….
பை.. உன் ரசிகன்.
இதனை படித்தவள் எவ்வித உணர்வையும் பிரதிபலிக்கவில்லை . மாறாக சுற்றி தேடினாள். யாரேனும் தன்னை நோட்டம் விடுகின்றனரா என்று.அப்படி யாரும் தென்படவில்லை.
அதனை என்ன செய்வதென்று தெரியாமல் தன் பையில் வைத்துவிட்டு புத்தகத்தை படிக்கலானாள் கயல்.
காசியின் ஆட்கள் பாதி சிட்டியில் தேடுதல் பணியை நடத்தி இருக்க, யாரிடம் கேட்டாலும் “எனக்கு தெரியாது”.
“நான் பார்த்ததே இல்லை”
“நான் வெளியூர், இன்னைக்கி தான் வந்தேன்” போன்ற பல காரணங்களை சொல்லிட,
காஞ்சிபுரம் பஸ் ஸ்டேண்ட் அருகே உள்ள ஒரு STD பூத் நடத்தும் ஒருவன் மட்டும் அவளை பார்த்ததாகவும், நேற்று காலைதான் சென்னை பஸ்சில் ஏறியதாகவும் கூறிட, மீண்டும் மீண்டும் அவளின் புகைப்படத்தை காட்டி உறுதிப்படுத்திக் கொண்டவர்கள் காசிக்கு அறிவித்திட, காசி பெருமாளுக்கு தகவல் அளித்தான். அதன் படி சென்னையில் தேடுதலை தீவிரபடுத்தினர்.
அவன் சொன்னதை அவர்கள் நம்பியதற்கும் காரணம் உண்டு. என்னவென்றால் சென்னை தான் மதிநிலாவின் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும். சொத்து சுகம், தொழில், வீடு ,தோட்டம் துறவு என அனைத்தும் இருப்பது சென்னையில் தான். எவனோ ஒருவன் எப்படி சரியாக அவளின் பூர்வீகத்தை சொல்லிட முடியும். ஆதலால் அவன் சொன்னது உண்மை எனவே நினைத்தனர் காசியின் ஆட்கள்.
அவர்கள் சென்ற பின் ஒரு பெரியவர் STD நடதுபவனிடம் வந்து
” நாங்களாம் தெரியாதுன்னு சொன்னோம்.நீ மட்டும் ஏன் தம்பி அந்த பொண்ணை காட்டி குடுத்த?. பாவம். யாரோ எவரோ யார் பெத்த பிள்ளையோ இப்படி பண்ணிடியே பா” என்று வருத்தப்பட.
” ஐயோ தாத்தா. நான் அந்த பொண்ணை நான் இங்கபார்த்திருக்கேன். இந்த ஊருல தான் அந்த பொண்ணு இருக்கு போல. இவங்க இப்படி தேடுனா சீக்கிரமா கண்டுபிடிச்சிடுவாங்க. அதனால தான் சென்னை பஸ் ஏறினதா சொன்னேன்.”
“ஏன் பா அப்படி சொன்ன?. நீ சொன்னது பொய்யின்னு தெரிஞ்சா உன்ன கொன்னுடுவாங்க பா” பதறினார் பெரியவர்.
“இல்ல தாத்தா. அந்த பொண்ணு இங்க இல்லாம காசி தேடமாட்டான். கண்டிப்பா இங்கதான் அந்த பொண்ணு இருக்கணும்.இவங்க கையில சிக்கிக்க கூடாதுன்னு தான் பொய் சொன்னேன். “.
“உண்மை தெரிஞ்சா உனக்கேதாவது பிரச்சனை வராதா. ஏன்யா ? .இது தேவை இல்லாத வேலை உனக்கு.”
” எனக்குனு யாரும் இல்லை தாத்தா. நான் அனாதை. எனக்கென்ன ஆனாலும் கேட்க நாதி இல்ல. அந்த பொண்ணாவது இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லா இருக்கட்டும் தாத்தா.” என STD நடத்துபவன் சொல்லிட ,கண்கள் கலங்கியது பெரியவருக்கு.
” நீ எப்போதும் நல்லா இருக்கணும்யா”. மனதார ஆசீர்வதித்தார் அந்த பெரியவர்.தாராள சிரிப்பு அவனிடம்.
தன் உயிரை பொருட்படுத்தாமல் மற்ற உயிர்களை காக்கவேண்டும் என நினைப்பவர்கள் இப்புவியில் சிலர் மட்டுமே. அவர்களை காண்பது அபூர்வம். படத்தில் நடிப்பதற்கு இவை எளிமையாக இருப்பினும் நிஜத்தில் அவ்வாறு இருப்பதற்கு யாரும் எண்ணுவதில்லை. உள்ளம் போல் வாழ்க்கை என்பது போல அவரவரின் எண்ணங்களை போல தான் வாழ்க்கை அமைகிறது.
ஆனால் அவனின் இந்த முயற்ச்சி சிறிது காலம் மதிநிலாவை காப்பதற்காக என்றாலும் அதன் பின்னான விளைவுகளை அவள் எதிர் கொள்ளவேண்டிய நாலும் வரவிருக்கிறதே. இதை யார் அறிவது?…..
andha letter yaar yeludhunadhu?… Arjuna illa vera yaaravadhaaa? 💞💞💞 nice post sis