அத்தியாயம் 3
இதோ அனைவரும் சாப்பாடு மேசையில் உணவுக்காக வந்து அமர்ந்தனர். ஏய் என்று கல்யாணி கூப்பிட்ட சத்தத்திற்கு ஓரமாய் நின்றிருந்தவள் விறுவிறுவென்று வந்து அனைவருக்கும் உணவை பரிமாறினால். அதில் கல்யாணியின் கணவர் கருணாகரன் மட்டும் ஏன்மா நீ சாப்டாச்சா என்று கேட்க அவளோ கல்யாணியை நிமிர்ந்து பார்த்தாள் கல்யாணியோ அவளுடைய கணவரை முறைத்து கொண்டிருந்தார். ரித்திகா தான் அப்பா இந்த அனாதை நாயி தின்னா என்ன திங்களான என்னப்பா உங்களுக்கு என்று முகத்தை அருவருப்புடன் வைத்துகொண்டு கேட்க. நிலாவுக்கு தான் கண்களில் இருந்து நீர் வந்து கொண்டிருத்தது. கருணாக்கு தான் அதை பார்த்து பாவமாக போய்விட்டது. இதுகள பத்தி தெரிஞ்சும் இந்த புள்ளைகிட்ட கேட்டு இவளுங்க வாயில விழ வச்சுட்டேன் என்று மனதிற்குள் நினைத்து கொண்டார். வெளியே பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டார். பின் யார் இருவரிடமும் வாங்கி கட்டிக்கொள்வது. இதோ கல்யாணி சாப்பிட்டு கொண்டே ஏய் தண்டசோறு என்று அழைக்க அவளோ அம்மா என்று நிமிர்ந்து பார்த்தாள்
கல்யாணி, காலையில் இருந்து ஏதாவது சாப்டடியா என்று கேட்க
நிலா, இல்லை அம்மா தண்ணீர் கூட குடிக்கல
கல்யாணி, ம்ம் சரி போ போயி நேத்து மீந்துபோன சோறு இருக்கு அத போய் வேலை எல்லாம் முடிச்சிட்டு சாப்டு. சாப்டுட்டு மேலை ரூம்ல என்னை வந்து பாரு சரியா என்று விட்டு எழுந்து விட்டார்.
அனைவரும் எழுந்த பின்னர் கருணா மட்டும் அம்மாடி வேற ஏதாது வேலைக்கு போறியானு நான் உன்னைய அங்க வச்சே கேட்டமலாம்மா. நீ ஏன்மா இங்க இருந்து கஷ்ட படுற என் lறு அவர் கேட்க.
நிலா, ஐயா இந்த கஷ்டம் கூட பரவாயில்லை அய்யா. ஆனா ஏன் மானத்துக்கு ஒண்ணுன்னா நான் என்னய்யா பண்றது. முன்னாடி இருந்த வீட்ல இத விட ரொம்ப கஷ்ட பட்டுருக்கேன் அய்யா. இருந்தாலும் இங்க அந்த மாதிரி எதுவும் இல்லை. அதான் ஐயா உங்க கூடவே கிராமத்துக்கு கிளம்பி வந்துட்டேன். இங்கயே இருக்கேன் ஐயா நானு என்று சொல்லிவிட்டு அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு. அப்படியே முந்தைய நாள் பழைய சோற்றை சாப்பிட்டு விட்டு மேலே கல்யாணியின் ரூமிற்கு சென்றாள். வெளியில் இருந்து கதவை தட்ட. ம்ம் உள்ளே வா என்று அவர் குரல் கொடுக்க நிலா உள்ளே சென்றாள். உள்ளே கல்யாணி சாய்வு நாற்காலியில் கண்ணை மூடி உட்கார்ந்து இருந்தார். நிலா அம்மா என்று அழைக்க ம்ம் நீ இப்போது என்ன பண்றனா நாளைக்கு நல்ல விருந்து சமைக்கணும் புரியுதா. கோழி நண்டு இறால்ணு எல்லாம் சமைச்சுருக்கணும். நாளைக்கு முக்கியமான ஆளுங்க வராங்க எல்லாம் நல்லபடியா நடக்கணும் புரியுதா.
நிலா, ம்ம் எனக்கு புரியுது அம்மா
கல்யாணி, இந்தா பணம் நீ போயி நாளைக்கு சமைக்க என்னலாம் தேவையோ எல்லாம் வாங்கிட்டு வா புரியுதா. ஒரு குறை வந்துர கூடாது என்று அவர் சொல்ல சரி அம்மா என்று சொல்லிக்கொண்டு வெளியில் வந்தாள்.
வந்தவள் சந்தைக்கு செல்வதற்கு தேவையான பையை எடுத்துக்கொண்டு வெளியில் நடக்க ஆரம்பித்து விட்டாள்.
இதோ ஊருக்கு வெளியில் வேந்தனூர் மற்றும் அதற்கு பக்கத்தில் உள்ளே அணைத்து ஊர்களுக்கும் பொதுவான சந்தை போடப்பட்டிருக்கும். சுத்துபட்டில் உள்ளே அனை lத்து கிராம மக்களும் அங்கு வந்து தான் பொருட்களை வாங்குவார்கள். இதோ நம் நிலாவும் அங்கு தான் வந்தாள். இந்த ஊருக்கு வந்ததிலிருந்து இவள் இங்கு வந்து கொண்டிருப்பதால் அனைத்து வழியுமே இவளுக்கு பழக்கப்பட்டது தான். இந்த ஊரில் அவளுக்கு நட்பு என்று யாருமே இல்லை. அவள் வெளி ஆட்களுடன் பழகுவதற்கும் அனுமதியும் இல்லை.
அவள் சந்தை போடப்பட்டிற்கும் இடத்திற்கும் வந்து அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்கிகொண்டிருந்தாள். அதே சந்தைக்கு தான் சிவகாமியும் ரேணுகாவும் கிருஷ்ணாவை கூட்டிக்கொண்டு வந்திருந்தார்கள்.