நீல கண்களின் காதல் பயணம் 💙 4
அனைவர் முன்னிலையில் நின்றிருந்த கயல்
“ஹாய் எவ்ரியோன். ஐம் கயல்விழி. ஃப்ரம் சென்னை. இனிமேல் உங்க கூட தா படிக்க போறேன். கேன் ஐ ஜாயின் வித் யூ?” என்றாள் புன்னகையுடன்.
“வெல்கம். வெல்கம் “என கத்தினர் மாணவர்கள் அனைவரும்.
பாடம் நடத்த வந்த அமுதன்”சைலண்ட் காய்ஸ். நீ போய் உட்காருமா”என்றார்.
கயல் இசையின் அருகே அமர்ந்திட ஒருசில கண்கள் சிநேகமாய், ஒரு சில கண்கள் காதலாய், மேலும் ஒருசில கண்கள் பொறாமையாய் எனவித விதமான கண்ணோட்டத்தில் பார்த்தனர்.
இதில் அர்ஜூன் மட்டுமே மாறுபட்டவன். எவ்வித சலனமும் இன்றி பகுத்தறிய முடியாத பார்வை அது.
பாடம் நடத்தி கொண்டு இருந்தார் அமுதன். வகுப்பில் ஒரு மாணவன் அஜய் காதில் ஏதோ சொல்லிட, அஜய் விக்ரம் காதில் சொல்லிட, விக்ரம் கவினுக்கு சொல்ல என விஷயம் அனைவருக்கும் பரவியது. பெண்கள் மத்தியிலும் அதே சலசலப்பு தான்.
கடைசியில் கவின் அர்ஜுனிடம் “என்ன பங்கு இப்படி மோசம் பண்ணிடியே. நான் இதை எதிர் பார்க்கல பங்கு”என்றான் கோபமும் அல்லாத கவலையும் அல்லாத ஒரு சந்தோஷ தொனியில்.
“என்ன பண்ணேன் பங்கு. என்ன ஆச்சிடா.?”
“நான் யாருடா உனக்கு? சொல்லுடா நான் யாரு?..”என கவின் கேட்டிட அவன் நெற்றியில் கை வைத்து பார்த்த அர்ஜூன். ஒன்றுமில்லை என்றதும்
“நண்பேன்டா”என்றான்.
“மச்சான் மூளை ஏதாவது கொலம்பிடுசாடா. ஹாஸ்பிடல் போலாமா?.” கவின்.
“ஆமா டா உன்கூட சேர்ந்தா நேரா கீழ்பாகத்துக்கு தான் போகணும் போல . என்ன விஷயமுனு சொல்லுடா. ஏற்கனவே எனக்குள்ள மனசா மூளையா அப்டின்னு பட்டிமன்றம் நடக்குது இதுல நீ வேற.”என்றான் சிறு கடுப்போடு.
“நீ எங்களுக்கு அண்ணிய இன்ட்ரோ குடுத்திருந்தா நாங்களும் சந்தோஷ பட்டிருப்போம் ல.”என்றான் கவின் .
தலையும் புரியாது வாழும் புரியாது சொன்னவனை, வெட்டவா இல்லை குத்தவா என்று அர்ஜூன் பார்க்க ,
“அப்படி பார்க்காத மச்சி, வெக்க வெக்கமா வருது.”
“த்தூ. புரியுர மாதிரி சொல்லுடா பரதேசி.”
“மச்சி நீ லவ் பண்றத ஏன்டா எங்ககிட்ட இருந்து மறைச்ச?.” கேட்டுவிட்டான் கவின்.
“நான் லவ் பண்றேனா? யாரு டா சொன்னது?”அதிர்ச்சியின் சாயல் அவனிடம்.
“உன் ஆளுதான் டா. அக்கட சூடு.”என்று அவன் கழுத்தை பெண்கள் பக்கம் திருப்பினான் கவின்.
“யாருடா? அந்த நந்தினியா? அவள…. இருடா வரேன்.”ஆக்ரோசமாக எழுந்த அர்ஜுனை இழுத்து பிடித்த கவின்,
“நந்தினி இல்லடா புது பொண்ணு கயல்விழி. அவதான் நீங்க ரெண்டுபெறும் லவ்வர்ஸ் னு சொல்லிருக்கா.அதுவும் பிரபு கிட்ட.”
பிரபு என்ற பெயரை கேட்டதும் புரிந்துகொண்டான். அவள் தன்னை காத்து கொள்ள தான் தன் பெயரை சொல்லியிருக்கிறாள் என்று. இருந்தும் அவன் மனதில் மென் சாரல் தூவியது சுகமாய்.
அப்படியென்றால் தான் காலையில் அஞ்சலி இடம் பேசியதெல்லாம் இவள் கவனித்திருக்கிறாள். அதனால் தான் அவனிடம் தன் பெயரை பயன்படுத்தி எஸ்கேப் ஆகிவிட்டால் போல. என்று துல்லியமாய் கண்டுகொண்டான் அர்ஜூன்.
இருந்தாலும் அவளை சீண்ட வேண்டும் என்று தோன்ற, வகுப்பு முடிந்ததும் அவர்களின் பெஞ்ச் அருகே சென்றான்.
வகுப்பு முடிந்ததும் வெளியே சென்று வரலாம் என்று இசையின் கைபிடித்து கயல் இழுக்க, இருவரும் எழுந்து திரும்பி நிற்க எதன் மீதோ மோதினாள் கயல்.
நிமிர்ந்து பார்த்தால் ஆறடி ஆண்மகன்.
ஆனால் பாவம் அவளுக்கு தெரியவில்லை அது அர்ஜூன் என்று.
“ஹலோ மிஸ்டர். பனைமரத்துல பாதியா வளர்ந்து நிக்கிறீங்களே உங்களுக்கு மண்டையில மசாலா இருக்கா? இப்படி முன்னாடி வந்து சிலை மாதிரி நின்னா இடிச்சிட மாட்டோமா?. அப்புறம் நான் கீழ விழுந்துட்டா என்ன ஆகுறது?….”என சண்டைக்கு நிற்க.
“பயப்படாத குட்டச்சி. நீ விழுந்தா நான் தாங்கி புடிச்சிப்பேன்.”
“யாரபார்த்து குட்டச்சினு சொல்றீங்க?.. என்னோட ஹைட் 155 cm தெரியுமா?.”என்று உதட்டை சுழித்து கூற,அர்ஜுனுக்கு அவள் உதட்டை பிடித்து நிறுத்திட கைகள் பரபரத்தது.
இது நான்தானா என்ற கேள்வி அவனிடம். தனக்கு என்ன ஆனது, ஏன் இவளிடம் மட்டும் இப்படி என்று மனதோடு பேசிக்கொண்டிருக்க அவனின் கையில் இருந்த போனை பிடுங்கினாள் இசை.
அதில் தன்னுணர்வு பெற்றவன் “அதெல்லாம் சரிதான். நீ எப்படி இருந்தாலும் எனக்கு ஓகே. எனக்கு தான் உன்னை ரொம்ப பிடிக்குமே.நம்ம லவ்ல இதெல்லாம் பெரியவிஷியமே இல்ல.”
“எதே லவ் ஆ ? … .” கலகலவென சிரித்தவள், “நான் யாருனு தெரியுமா?.. தெரிஞ்சா இப்படியெல்லாம் நீ பேச மாட்ட.”என்றால் பெருமை மிளிரும் தோற்றதுடன்.
“அப்படி யாருமா நீ?…. ஐயோ பயமா இருக்கே, நான் என்ன பண்ணுவேன், யார் கிட்ட போய் சொல்லுவேன்”… என்றா ன் கலாய்க்கும் பொருட்டு போலி பயத்துடன்.
அவனை பக்கம் அழைத்தவள் மெதுவாக அவனதுக்காதின் அருகே சென்று “நான் அர்ஜுனோட ஆளு. வெளிய யார்கிட்டையும் சொல்லிடாத. இது எங்களோட ரகசியம்.”என்றால் ஹஸ்கி வாய்சில்.
“ஓ அப்படியா. நிஜமாதான் சொல்றியா. அப்டின்னா அர்ஜூன் யாருனு உனக்கு தெரியுமா?”
“நீ நம்பலையா? இரு.”என்றவள் அவளின் போன் எடுத்து டார்லிங் என்று சேவ் செய்யப்பட்ட எண்ணைக் காட்ட, தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் அர்ஜூன்.
ஏனெனில் அவன் அஞ்சலிக்கு அளித்த பெர்சனல் நெம்பரை அவளும் பதிவு செய்து வைத்திருந்தாள்.
இசை,கயலின் கையில் சேர்மன் கட்டிய வாட்ச் இன் கோட் (code) இணைப்பை அர்ஜூன் போனில் இணைத்து விட்டு அவன் தோளில் கைவைத்து ஸ்டைல் ஆக நின்றாள்.
“நீ அர்ஜூன் கூட பேசு நான் நம்புறேன்.”
“அவரு பிசி ஆ இருப்பாரு…. என அவள் சொல்லி முடிக்கும் முன்பே அவளின் போனை பறித்து டார்லிங் என பதிவு செய்திருந்த எண்ணிற்கு அழைத்துவிட்டான் அர்ஜூன்.
அழைப்பு மணி ஒலிக்க, அவளின் கைகளில் அவள் போனை கொடுத்தவன் அவளை பார்த்து சிரித்தான்.
“அன்பென்ற ஒற்றை சொல்லை போல் இங்கு வேறு இல்லை..
நீ காட்டும் பாசத்திற்கு தெய்வங்கள் ஈடு இல்லை…
என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முள்ளாய் சுத்தும்…
நொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும்…
என்ற ரிங்டோன் ஒலித்தது அர்ஜுனின் போனில். அழைப்பை ஏற்றவன் “ஹலோ”என்றிட, கயலின் போனிலும் கால் அட்டேன் செய்யப்பட்டு ஹலோ என்று கேட்டது.
என்ன பேசுவது என்று தெரியாத கயல் முழிக்க,இருப்பினும் முன்னாள் நிற்பவனிடம் மூக்குடைபட விரும்பாதவள்
“ஹலோ நான் கயல் பேசுறேன். பிசி ஆ இருக்கீங்களா இல்ல ப்ரீ ஆ”என்று ஏதோ பேசிட
“ப்ரீ தான் சொல்லுங்க ” என்றான் அர்ஜூன் .
அவன் நேரில் பேசுவதும் அவளுக்கு போனில் கேட்பதும் ஒன்றாக இருக்க, குழப்பமாய் அவனை ஏறிட்டு பார்த்தாள்.
சிரித்துகொண்டே அவன் தன் அலைபேசியை காட்டிட கயலின் எண் அர்ஜூன் போனில் ஒளிர்ந்தது.
“இப்போவாது புரியுதா குரு இது யாருன்னு.” இசை கேள்வியாய் கேட்டிட,
“அப்போ அர்ஜூன்…….”என கயல் இழுக்க….
“அது இவனே தான்… இந்த காலேஜ் ஓட ஹேன்ட்சொம் பையன்.என்னோட உயிர் இவன்.
அப்புறம்….. டேய் தடி மாடுங்களா கொஞ்சம் வாங்க என ஒளிந்துகொண்டு ஒட்டு கேட்போரை அழைத்தவள், அவர்கள் வந்ததும்,
இது அஜய், இது விக்ரம் அப்புறம்…… இது தான்….. க..கவின். நாங்களாம் தோஷ்துங்க.”என்றாள் கவினில் மட்டும் சற்று தடுமாற்றமாய் .
கயலுக்கு எங்கேயாவது சென்று முட்டிக்கொள்ளலாமா என்றிருந்தது.
அசட்டு சிரிப்பு சிரித்தவள் “சாரி “என்று சொல்லி சிட்டாய் பறந்து வெளியே ஓடிவிட்டாள்.
இதை பார்த்துக்கொண்டிருந்த பிரபுவின் மனம் நிம்மதி அடைந்தது எனில் நந்தினி முகம் கோபத்தில் சிவந்தது.
காற்றே என் வாசல் வந்தாய் என்ற பாடலை ஹம் செய்துகொண்டே அருகில் நின்ற அஜையை கட்டியணைக்க,
“ஒய் ஹம்மிங் ? வாட்ஸ் கோயிங் ஆன்?… இது நம்ம அர்ஜூன் இல்லையே “என்றான் கவின்.
“தெரியல மச்சி இவள சீண்டி பார்க்கணும்னு தோணுது. சம்திங் டிஃப்ரன்ட் பங்கு, வில் சீ” தாராளமான புன்னகை அர்ஜுனிடம்.
வெளியே ஓடிய கயல் என்ன உணர்வென்றே தெரியாது ஒரு மாதிரி சங்கடமான நிலையில் இருந்தாள்.
இப்படி மூக்குடைபட்டதே என்ற கவலையில் அருகில் இருந்த மரத்தின் அடியில் புல் தரையில் அமர்ந்திருந்தாள்.
அவள் அருகில் அமர்ந்த இசை, கயல் என்றழைக்க, திரும்பியவள்கண்களில் ஈரம். அதை பார்த்து சிரித்த இசை “அடபாருடா பிரபுவ தெறிக்கவிட்ட என் குரு இந்த சின்ன விஷயத்துக்கு அழுகுறத. இந்த துறுதுறு பொண்ணு அப்போ திருதிருனு முழிச்சது ரொம்ப நல்லா இருந்துச்சு “என காமெடியாக சொல்லி சிரிக்க அவளும் சிரித்துவிட்டாள்.
அருகில் சொடக்கிடும் சத்தம் திரும்பி பார்த்தால் ஃபேஷன் என்ற பெயரில் இடை தெரியும் டிஷர்ட் மற்றும் முட்டிக்கு கீழ் ஒரு ஸ்கர்ட் சகிதம் நின்றிருந்தாள் நந்தினி.
இரண்டு விரல்களை ஆட்டி இங்கே வா என்று நந்தினி அழைக்க,
கயல் “உனக்கு வேணும்னா நீதான் வரணும்” என்றால் சிறு அசைவும் இல்லாமல்.
அதில் இன்னும் எரிச்சல் அடைந்தவள் அவர்கள் அருகே வந்து”ஹே யாருடி நீ. எவ்வளவு கொழுப்பிருந்தா என் ஆள் கூட இழிச்சிட்டு இருப்ப நோன்சென்சீபிள் இடியட்” என்றால் முகம் சிவக்க.
இசை கயலை பார்க்க அவள்” உனக்கு காது இருக்கா இல்ல அவுட் ஆ?நான் யாருனு கிளாஸ் ல சொல்லும்போது தூங்கிட்டா இருந்த?..அதுயாருமா உன் ஆளு?….”என்றால் பொறுமையாக கேலி சிரிப்போடு.
இசை மெசுதல் பார்வை பார்க்க, நந்தினி
” ஏய்.என்ன நக்கலா. இன்னொரு தடவை உன்னை அர்ஜூன் கூட பேசுறத பார்த்தேன் என்ன செய்வண்ணு எனக்கே தெரியாது.மைண்ட் இட்”
“பார்த்தா என்ன செய்வனு யோசிச்சிட்டு வா .நா அர்ஜூன் கிட்ட கொஞ்சம் பெர்சனல் ஆ பேசணும்.கிளம்புறேன் “என்று இசையை இழுத்து சென்றாள் கயல்.
நந்தினியின் மனம் எரிமலையென கொதித்தது.அந்த எரிச்சலிலே கயலை அவமான படுத்த வேண்டும் என முடிவெடுக்க ,அடுத்த வகுப்பிற்கு மணி அடித்ததால் வகுப்பறை நோக்கி சென்றாள் நந்தினி.