நீல கண்களின் காதல் பயணம் 💙
அர்ஜூன் என்றாலே அவனின் பலம், அறிவுதிறன், நேர்மை,எதிரியை வீழ்த்தும் பாங்கு என அனைத்தையும் அறிந்தவர்கள் இக்கல்லூரி மாணவர்கள்.
ஏனெனில் தன் டிகிரியையும் இங்குதான் முடித்தான்.மேலே படிக்க உம் இங்கு தான் சேர்ந்திருந்தான்.
ராகு, பிரபு, குகன், மூவரும் ஓடிவிட, அந்த பெண் இன்னும் அழுதுகொண்டு இருப்பதை பார்த்த அர்ஜூன்
“யாராவது ஏதாவது சொன்னா இப்படி தா அழுதுட்டு நின்னுட்டு இருப்பியா? அவன் முத்தம் கேட்கும் போதே அவன் கன்னத்துல நீ சத்தமா ஒரு அரை அறைஞ்சிருந்தா பாரவால. அத விட்டுட்டு ஓன்னு ஒப்பாரி வெச்சிகிட்டு இருந்தா இதுமட்டும் இல்ல இதுக்கு மேலகூட போயிருப்பாங்க.”
“சாரி அண்ணா. இனிமே இப்படி இருக்கமாட்ட”.
“ம். பொண்ணுங்கன்னா கெத்தா இருக்கனும். இப்படி அழுமூஞ்சியா இருக்கக்கூடாது. தைரியமா எதுவா இருந்தாலும் பேஸ் பண்ணனும். புரியுதா?”
“ம். சாரி அண்ணா.”தன் கண்களை துடைத்து விட்டு நிமிர்ந்து நின்றாள் அவள்.
“சரி உன் பேர் என்ன?”
“அஞ்சலி அண்ணா.”
“அஞ்சலி. இனி யாரவது உங்கிட்ட வம்பு பண்ணா “நான் அர்ஜூன் அண்ணாவோட தங்கச்சின்னு” சொல்லு. OK. “
“ம்.சரி அண்ணா. ரொம்ப தேங்கஸ்ண்ணா”. அர்ஜுனிடம் ஒரு புன்சிரிப்பு.
அனைவரும் களைந்து சென்றிட கயல் மட்டும் நின்று இருந்தால். ஏனெனில் அர்ஜூன் அளுக்கு பின்புறம் மட்டுமே தெரியும்மாறு நின்றிருந்ததால், அவனின் முகம் காண முடியாமல் போனது.
அதீத ஆர்வம் அவளுக்கு அவனின் முகம் காண. ஆனால் அர்ஜூன் அப்படியே சென்றுவிட்டதால் ஆசையில் ஆசிட் ஊற்றிய உணர்வு. அதைதவிர்த்து அவனின் பெயர் அவளின் ஆழ்மனதில் பதிவாகிவிட்டது.
அதே ஆர்வதுடன்
“யார் அது… யார் அது… யார் அது… யார் யாரது….
சொல்லாமல் நெஞ்சத்தை கொள்ளை கொள்வது……..
மூடாமல் கண்ரெண்டை முடிச் செல்வது ….-
யார் அது….. யார் அது….”.-என பாடிக்கொண்டே சேர்மன் அறை நோக்கி சென்றாள்.
“Excuse me Sir”.. என கேட்டு உள்ளே சென்றாள் கயல்.
“என்ன கயல் நீ. நாம தனியா இருக்கும் போது அங்கிள் சொல்லியே கூப்பிடு. சார் லாம் வேண்டாம்.”
“சரி அங்கிள்.நல்லா இருக்கீங்களா?. ஆண்டி எப்படி இருக்காங்க?”
“எல்லாரும் நல்லா இருக்கோம். உன்னோட ஹெல்த் கண்டிஷன் ஓகே வா மா.”
“ம்ம் . ஓகே அங்கிள். ஸ்வே எல்லாமே சொல்லிட்டலா அங்கிள்.?”..என கவலை நிறைந்த குரலில் கேட்க.
“சொல்லிருக்கா . ஆயிரம் பத்திரம் சொல்லி, எனக்கே கண்டிஷன் போட்டு தான் உன்னை ஜாயின் பண்ணவெச்சா. அதனால நீ கவலையே படாத. I will take care of you.”என சேர்மன் சிவப்பிரகாஷ் சொல்லிட மென்சிரிப்பு அவளிடம்.
சேர்மன் சிவா பிரின்சிபால் மணிகண்டனை அழைதிட, உள்ளே வந்தவர் மரியாதை நிமிதம் வணக்கம் சொல்லிவிட்டு, பணிவாக நின்றார்.
“மணி இவங்க தான் கயல்விழி. நான் சொன்னேன் ல அது இவங்கதான். இனிமேல் இவங்க உங்களுடைய பொறுப்பு. உங்க பொண்ணு இசை படிக்கிற கிளாஸ் தான் இவங்களும் ஜாயின் பண்ணிருக்காங்க.so இசையை கூடவே இருக்க சொல்லுங்க.be careful.”என்றவர் கயலிடம் …
“உன்னோட போன் குடுமா.”
சேர்மன் மற்றும் பிரின்சிபால் இருவரின் தொலைபேசி எண்ணையும் பதிவு செய்து கொடுத்து விட்டு, மேலும் இதய வடிவ கைக்கடிகாரம் ஒன்றையும் அவளின் கையில் அணிவித்தார்.
“இந்த வாட்ச் எப்போயும் உன்னோட கையில தா இருக்கணும். எக்காரணம் கொண்டும் கழட்ட கூடாது”என்ற அன்பு கட்டளை வழங்கி மணியுடன் அனுப்பினார்.
அவர் உடன் சென்றவள் நேரே போய் நின்றது இசையின் முன்னால் தான். இசை அவளை பார்த்து வாய் பிளக்க, அவள்” ஹாய்”என்று புன்னகை செய்தாள்.
மணி தன் மகளிடம் “இவங்க தான் கயல்விழி. நான் சொன்னேன்ல. நீ எப்போதும் கயல் கூட தா இருக்கணும். உனக்கு உதவிக்கு உன்னோட ஃப்ரெண்ட் ஆ கூப்டுகோ.” என்றவர் கயலிடம்
“உனக்கு என்ன உதவி வேண்டும்னாலும் என்கிட்ட தயங்காம கேளுமா. உனக்கு நான் இருக்கேன். அப்படி இல்லனா இவ கிட்ட சொல்லு. எல்லாமே செஞ்சி தருவா. சரி க்ளாஸ் ரூம் போங்க. பத்திரம் ” என கூறி வெளியேறினர்.
அதிர்ந்து நின்றிருந்த இசை ” என் தந்தையா இது? இல்லையே. ஒரு வேலை மாறுவேசம் போடுற மாயாண்டியா இருக்குமோ”என்றெல்லாம் யோசித்து கொண்டு இருந்தால்.
திடீரென தன் கன்னத்தில் ஈரம் படிவதை உணர்ந்து திரும்பி பார்க்க, இசையின் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் அவள்.
“ஹே. சீ சீ என்ன பண்ற நீ ? நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல”.. கன்னத்தில் கை வைத்து கொண்டு கேட்டிட,
“என்ன ஸ்ட்ரைட் ஆ கனவுக்கே போய்டியா? எத்தனை முறை உன்னை கூப்பிடுறது. நீ திரும்பி கூட பார்க்கல. அதான் சின்ன ஷாக் ட்ரீட்மெண்ட் குடுத்தேன்.”கன்னங்குழி தெரியும் முத்து பல் சிரிப்பு அவளிடம்.
“தாயே நீ ரெண்டடி தள்ளியே நாம வா மா.” இசை கூறிய தொனியில் வெடித்து சிரித்தாள் கயல்.
“உன்னோட பேர் என்ன”இசை கேட்டிட “ஐம் கயல்விழி. உன் பேர் என்ன?”
“நான்தான் இசை. இசைகளின் அரசி.”
“ஹே. ஐ லவ் யூ இசை. ஐ லவ் லாட்ஸ் ஆஃப் மியூசிக். எனக்கு பாடுறது ரொம்ப பிடிக்கும் தெரியுமா. உன்னோட பேர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சோ உன்னையும் புடிச்சிடுச்சி.”என கூறி இசையை கட்டி அனைத்துக் கொண்டால் கயல்.
அவளின் துறுதுறு பேச்சு இசைக்கு பிடித்துவிட கயலுடன் ஐக்கியமானாள் இசை.
திடீரென காதை கிழித்தது ஒரு கட்டை குரல். பாட்டு பாடுகிறேன் பேர்வழி என கத்திக்கொண்டிருந்தான் பிரபு .
“மல்லிகை மல்லிகை பந்தலே..
என்னை மயக்கும் மல்லிகை பந்தலே…
கொஞ்சம் மயங்கி போக வந்தேன் பின்னாலே….”
திரும்பி பார்த்தவர்கள் இவனா என அலட்சியமாக மீண்டும் நடந்து செல்ல,
பிரபு “ஹே. மிஸ் மல்லிப்பூ காரி, கொஞ்சம் நில்லுமா. எனக்கும் பூ கொடுத்துட்டு போறது. நானும் வாசனை புடிச்சிபேன் ல.”என்றான் கிறக்கமாக.
இசை ஏதோ சொல்ல வர, வேண்டாம் என்பது போல கயல் தடுத்துவிட்டு, அவன் அருகே சென்றால் கயல்.
ஒரே புன்னகை பிரபுவுக்கு. ஆனால் கயல் ” உனக்கு மல்லிப்பூ தான வேணும். என்னோட ஆளு கிட்ட சொல்லி ஒரு கூடை நிறைய வாங்கித்தர சொல்றேன். நான் சொன்னா என்னோட அர்ஜூன் கேட்டுப்பார். ம்ம்”என்றால் அவன் தலையில் இடியை இறக்கி.
பின்னே, ஏதோ ஒரு பெண்ணை கலாய்ததற்கே உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று எச்சரிசவன், தன் காதலியை கலாய்தால் சும்மாவா இருப்பான். கதையே முடிந்துவிடுமே.
கயல் இசையை பார்த்து “அஜு குட்டிக்கு கால் பண்ணு”என்றிட , பிரபு ஓடியவிட்டான்.
கலகலவென சிரித்தாள் கயல்.
அதிர்ந்து நின்றது என்னவோ இசை தான்.
அவளின் சிரிப்பில் தன்னுணர்வு பெற்றவள் “என்னையே மிஞ்சிடுவ போல, இப்படி தெறிக்க விடுரியே. எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க குரு”என்றால் காமெடி தொனியில்.
“கயலா கொக்கா, இன்னும் நிறைய வித்தை இருக்கு. அப்பப்போ இறக்குறேன் வா கிளாஸ் ரூம் போகலாம். டைம் ஆகுது “என இழுத்து சென்றாள் கயல்.
“Excuse me Sir “என்ற தேன் குரல் வகுப்பறையில் கேட்டிட அனைவரும் திரும்பி பார்த்தனர்.
நீல நிறத்தில் சுடிதார் அணிந்து அழகியாக இருக்கும் புதிய பெண் தங்களின் வகுப்பில் சேர்ந்த சந்தோஷம் ஆண்களிடம் என்றால் அழகியை கண்ட பொறாமை பெண்களிடம். அதும் அவளின் நீண்ட கூந்தல் அசரவைத்தது.
எல்லோரின் எண்ணம் இப்படி இருக்க , ஏதோ ரேஸ் ஓடுவதை போல் ஓடிக்கொண்டு இருந்தது ஒருவனின் இதயம். அர்ஜூன் தன் இதயத்தை சமாதான படுத்த அதை அதிகரிக்கும் விதமாய்,
அனைவரையும் திரும்பி பார்த்த கயலின் பார்வை ஒரு நொடி அர்ஜூன் மீது படிய கன்னக்குழி தெரிய சிரித்திருந்தாள்.
அவ்வளவுதான் அந்த குழியில் விழும் நிலையில் தன்னை நிதானித்தவன் மௌனமாக கண்மூடி தன்னை கட்டுப்படுத்தினான்.
அர்ஜூன் பார்வை முழுவதும் கயலின் மீதே.
ஆனால் கயலின் முகத்தில் இருந்த சிரிப்பு அடுத்த நொடி மறைந்து மெல்லிய பதட்டம் தொற்றிக்கொண்டது.
ஏனெனில் பிரபு இரண்டாவது பெஞ்சில் முதல் ஆளாக அமர்ந்திருந்தான்.
அவனிடம் அர்ஜூன் தன் காதலன் என்று கூறியவளுக்கு அர்ஜுனின் முகம் கூட தெரியாதே.மாட்டிக்கொண்ட உணர்வு.இருப்பினும் தைரியமாகவே நின்றிருந்தாள் இனி வரப்போகும் காலங்களில் பொய் உண்மையாகும் என்று தெரியாமல்.
காரணம் அர்ஜூன் முதல் பிரபு வரை அனைவரும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள்.
MBA கடைசி வருடம்.