Loading

4. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்

அவன் கண் சிமிட்டலில் இன்னும் அதிர்ச்சியாய் மதுரா விழிக்க,
‘டேய் என்னடா நடக்குது இங்க? நான் இங்க தாண்டா இருக்கேன்’ என்பது போல் பத்ரிநாத் முழிக்க, இந்த ரணகளத்தில் மதுரா தன்னை பார்க்காமல் கருப்பசாமியை மட்டுமே பார்ப்பது வேறு பயங்கர எரிச்சலை கொடுத்தது.

“என்ன ரொம்ப ஹீட்டாகிட்டீங்க.. நான் யாருன்னு கேட்டீங்கல்ல அதான் சொன்னேன்.. ஜஸ்ட் ஃபார் ஃபன் மிஸ்டர்”என்று சிரிக்காமல் சொன்ன கருப்புசாமி, இன்னும் மதுராவிற்கும் அவனுக்கும் நடுவில் தான்  நின்றிருந்தான்.

அவனிடம் பேச விருப்பம் இல்லாமல் மதுராவின் பக்கம் திரும்பிய பத்ரிநாத்,
“மது நீயே சொல்லு உனக்கு ஓகேவா நம்ம ரெண்டு பேரும் தனியா பேசும்போது தேர்ட் பர்சனா இவன் இருந்தா?”என்று கேட்க,
மதுரா அவன் கேட்ட கேள்விக்கு ஆமாம் என்றும் சொல்லவில்லை இல்லை என்றும் சொல்லவில்லை.

நியாயமாக பார்த்தால் திருமண பந்தத்தில் இணைய போகிறவர்களுக்கு இதே போலான தனிமையான சந்திப்புகள் எல்லாம் சகஜம் தானே? யாருக்குத்தான் தனது வருங்கால மனைவியிடம் மனம் விட்டு பேசும்போது மூன்றாவதாக ஒருவன் கருப்பு கரடி மாதிரி குறுக்கே வந்தால் பிடிக்கும்? என்று பத்ரிநாத் பக்கம் இருந்த நியாயத்தை சொல்லத்தான் செய்தது மதுராவின் மனம்.

ஆனால் இந்த பத்ரிநாத் சரியில்லையே! அவனும் அவனின்  கண்ட மாதிரி அவள் மேனியில் அலைப்பாயும் கண்களும் ஏனோ மதுராவிற்கு ஒவ்வாத உணர்வை தான் ஏற்படுத்தியது. என்னதான் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள் என்றாலும் ஏன் இந்த மாதிரி பார்க்க வேண்டும்? ஏன் கண்ணோடு கண்ணோக்கி கண்ணியமாய் பார்த்து பேச முடியாதா? என்று யோசித்துக் கொண்டே கருப்பசாமியை பார்க்க, அவன் அவளின் கண்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவளின் உணர்வுகளை படிப்பவன் போல்.

அவனின் ஆழ்ந்த கருப்பு நிற கண்களோ கருத்துளை போல் மதுராவை உள்ளிழுக்க, கண்களைக்கூட சிமிட்ட முடியாமல் அவனைப் பார்த்தாள்.

இருவரின் கண்களும் ஒரு நொடி சிறையாகி விட,
“மது …மதுரா.. உன் கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லாமல் அவன எதுக்கு இப்படி பார்க்க? என்ன பாரு”என்று இப்பொழுது இருவருக்கும் நடுவில் கரடியாய் பத்ரிநாத் வந்து கத்த,

முதலில் தெளிந்தது கருப்பசாமி தான். கடமை தவறி என்ன காரியம் செய்து விட்டேன் என்று தன் மேலே கோபமானவன் முகம் இறுகி போய்விட, இருவரிடமிருந்து நகர்ந்தவன்,
“சரி மிஸ்டர்..இனி நான் உங்க ரெண்டு பேருக்கும் இடையிலேயும் வரல.. பட் அவங்க இஷ்டம் இல்லாம அவங்கள டச் பண்ணி பேசாதீங்க என் கண்ணு எப்பவும் உங்க மேல தான் இருக்கும்” என்று எச்சரிப்பாய் சொல்லியபடி அங்கிருந்து சென்றவன் மதுராவை திரும்பி கூட பார்க்கவில்லை.

மதுரா இன்னும் தெளியாமல் ஒரு மந்தமான மனநிலையில் தன் எதிரே நின்ற பத்ரிநாத்தை பார்க்க, அவனோ மதுராவின் கவனம் தன்மீது திரும்பிவிட்ட சந்தோஷத்தில்,
“மதுரா நம்ம ரெண்டு பேரும் மட்டும் தனியா அவுட்டிங் போயிட்டு வரலாமா? இந்த பாடிகார்ட் முன்னாடி ரிலாக்ஸா பேச முடியல.. உன்கிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு”என்று அவளை ஒரு மார்க்கமாய் பார்த்துக் கொண்டே கேட்க,

“இல்ல தோட்டத்துக்கு போகலாம் அங்க அமைதியா இருக்கும்” என்றாள் அவனுடன் வெளியே செல்ல பிரியப்படாதவளாய்.

“ஏன் மது? என்ன நம்பி நீ வெளியே வர மாட்டியா? நான் என்ன உன்ன கடிச்சா திங்க போறேன்?”என்று பத்ரிநாத் கோபம் போல் கேட்க,
அவள் அதற்கு பதில் சொல்ல வருவதற்கு முன்பே, முத்து மாணிக்கம் வந்துவிட்டார்.
பத்ரிநாத் உடனே தன் கோபம் முகத்தை மறைத்து அடக்கி தான் வாசித்தான் அவர் முன்னிலையில்…

முத்து மாணிக்கம் வந்ததும் மதுராவோ “நீங்க பேசுங்கப்பா” என்று உடனே உள்ளே சென்றுவிட, பத்ரிநாத் மட்டும் முத்துமாணிக்கத்திடம் தனியே பேசும் நிலை!

சரி இவரிடமே மதுராவை வெளியே அழைத்து செல்ல கேட்டுடுவோம் என்று நினைத்த பத்ரிநாத் மெதுவாய் அந்த பேச்சை ஆரம்பிக்க ஆரம்பத்திலேயே கல்யாணத்திற்கு முன் தனியாக வெளியே அனுப்ப முடியாது என்று கட் அண்ட் ரைட் ஆக சொல்லிவிட்டார் அவர்.

அதில் கடுப்பானவன் அதை முகத்தில் காட்டாமல் மறைத்து மதுராவிற்கு எதற்கு பர்சனல் பாடிகார்ட் என்று அந்த பேச்சை ஆரம்பிக்க,
அவரோ, “இங்க பாரு பத்ரி எனக்கு எதிரிகள் அதிகம் அதனால வீட்ல உள்ள எல்லாருக்குமே தனித்தனியா பாடி கார்ட்ஸ் இருக்காங்க.. நாளைக்கு நீ மாப்பிள்ளையா வந்தாலும் உனக்கும் பாடிகார்ட் தனியா போட தான் போறேன்”
என்று சமயோகிதமாய் விளக்கம் சொல்ல,

“எனக்கெல்லாம் எதுக்கு மாமா பாடிகார்ட்? நான் ஆம்பள சிங்கம்”என்று தற்பெருமையாய் அவன் பேச, முத்து மாணிக்கத்திற்கு அவனின் குணம் தெரியும் என்பதால் அதையெல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை.

சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு  விடை பெற்றான் பத்ரிநாத்.

அவன் சென்றதும் மதிய உணவை முடித்துவிட்டு அமர்ந்திருந்தவரிடம் கருப்பசாமி வந்தான். என்ன? என்பது போல் பார்த்துவிடும்,
எடுத்ததும்,
“சார் எனக்கு இந்த வேலை செட் ஆகாது நான் உங்க பொண்ணுக்கு வேற பாடிகார்ட் அரேஞ்ச் பண்றேன்” என்றான்.

“ஏன் கருப்பசாமி என்ன பிரச்சனை இன்னும் ஒரு வாரத்துல எங்கேஜ்மென்ட் அதுக்கு அடுத்த பதினைந்து இருபது நாளுக்குள்ள நாள்ல கல்யாணத்தையும் முடிச்சுடலாம்னு பாக்கறேன்.. அதுக்கப்புறம் ரெண்டு பேருமே அப்ராட் போய்டுவாங்க.. மிஞ்சி மிஞ்சி போனா இன்னும் ஒரு மாசம் தான் உனக்கு இந்த வேலை.. அதுவரை உன்னால செய்ய முடியாதா?”என்று கேட்டவருக்கு பதிலாய், “இல்ல சார் எப்பவும் இப்படி ஒரே இடத்துல இருந்து எனக்கு பழக்கம் இல்ல.. அதனாலதான்” என்றான்.

“உனக்கு இன்னும் என் பொண்ணு வாணிக்கு வந்து இருக்கறது எவ்வளவு பெரிய ஆபத்துன்னு தெரியல.. கருப்பசாமி அதான் இப்படி பேசுற?”என்றவர் “என்கூட வா” என்றபடி அவரின் தனிப்பட்ட அலுவல் அழைத்துச் சென்றார்.

அங்கிருந்த ஒரு ரேக்கில் மொத்தமாய் வைக்கப்பட்டிருந்த பைலில் இருந்து ஒன்றை எடுத்து அவனிடம் கொடுக்க,

அதை பிரித்து பார்த்தவனுக்கு அதில் ஒருவனின் புகைப்படம் இருக்க, கருப்பசாமியின் புருவங்கள் இடுங்கியது.

“இவன் தான் வாணிக்கு வந்திருக்கற ஆபத்து… இவனுக்கு நிரந்தரமா ஒரு பேரு கிடையாது ஒவ்வொரு இடத்துல ஒவ்வொரு பேர்ல இருப்பான்.. இவன் இந்திய அளவில் தேடப்படுற குற்றவாளி.. எங்களோட பார்ட்னர்”என்றவரை கருப்பசாமி கேள்வியாய் பார்க்க,

“உனக்கு தெரியாதது இல்ல இங்க அரசியல்வாதிகள் பெரும்புள்ளிகள் எல்லாருக்குமே அண்டர் கிரவுண்ட் தொழில்கள் இருக்கு அதுல இவன் முக்கியமான பார்ட்னர்… முதலில் என் நண்பனோட அறிமுகத்தால தான் அவன எனக்கு தெரியும்.. அவன் என் தொழில் சம்பந்தமா நிறைய யோசனைகள் சொன்னான் அது எனக்கு புடிச்சு போய் அவனையும் என் தொழில் வட்டாரத்துல பார்ட்னரா இணைச்சுக்கிட்டேன். ஆனா அது தான் நான்‌ பண்ண மிகப் பெரிய தப்புன்னு இப்ப நான் நினைக்காத நாளில்லை”

“அவன் ஒரு சைக்கோ.. அழகான பொண்ணுங்கள பார்த்து ரசிச்சு.. அணுவணுவாக சுகிச்சா மட்டும் அவனுக்கு போதாது.. அவங்க உயிரோட இருக்கும்போதே அவங்க பாடி பார்ட்ஸ கொஞ்சம் கொஞ்சமா வெட்டி சமைச்சு ருசிச்சி சாப்பிடுவான்” என்று சொல்லும்போதே அவர் முகத்தில் அப்படி ஒரு அருவருப்பு.
விட்டால் அங்கேயே குடம் குடமாக வாந்தி எடுத்து விடுவார்.

கருப்பசாமிக்கு அவரின் முகமாற்றத்தை பார்த்ததுமே தெரிந்து விட்டது கண்டிப்பாக அவர் அதை நேரடியாக பார்த்திருக்கிறார் என்று!

யோசனையோடையே அவரைப் பார்க்க, அவர் தன்னை சமாளித்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார்..
“அப்படிப்பட்டவன் திடீர்னு ஒரு நாள் சொல்லாம கொள்ளாம ஒரு முக்கியமான விஷயம் பேசுறதுக்காக என் வீடு வர வந்துட்டான் ..நான் அந்த சமயம் ஒரு கட்சி மீட்டிங்காக தலைமையகம் முடியும் போயிருந்தேன்… எனக்கு விஷயம் தெரியாது”

“வீட்ல நான் இல்லன்னு திரும்ப போக நெனைச்சவன.. உட்கார வச்சு விருந்தோம்பல் பண்ணி இருக்காங்க.. என்னோட முட்டாள் பசங்க..அவன் வீடு அழகா இருக்குனு சொன்னதும் வீட்டையும் சுத்தி காமிச்சி இருக்காங்க.. அந்த சமயம் வாணி ஸ்கூல் படிப்பு முடிச்சுட்டு.. சம்மர் ஹாலிடேஸ்க்கு அவ வீட்ல இருந்த சமயம்.. அப்போ அவள பார்த்தவன் தான்..”என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை. டேபிளில் இருந்த கண்ணாடி குவளையில் இருந்த தண்ணீரை நேரடியாக வாயில் சரித்தவர்,

“அவன பத்தி நல்லா தெரிஞ்ச ‌என்கிட்டயே வந்து உன் பொண்ண எனக்கு புடிச்சிருக்கு கல்யாணம் பண்ணித்தா‌ன்னு தைரியமா வந்து கேட்கறான்.. அதிர்ச்சியா பார்த்த என்கிட்ட கவலைப்படாத உன் பொண்ண கொல்ல மாட்டேன்னு வேற சொல்றான்…அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? யானை தன் தலையில தானே மண்ணள்ளி போட்டுக்குற மாதிரி.. என்னோட கேடுகெட்ட சகவாசம் எனக்கு எதிரா மாறிப்போச்சு “

“ஆனா அதை எதிர்த்து கேட்க முடியாம.. எங்க பார்ட்னர்ஷிப் என்னை தடுத்துடுச்சு”என்று சொல்லிக் கொண்டிருந்தவர், கருப்பசாமி புருவங்கள் இடுங்க அவரைப் பார்த்து முறைப்பதை உணர்ந்ததும்,

“நீ நினைக்கலாம் கருப்பசாமி பொண்ண விடவா பார்ட்னர்ஷிப் முக்கியம்னு? ஆனா அவன்கிட்ட என்ன பத்தின நிறைய ஆதாரங்கள் இருந்துச்சு ..அதனால என்னால அவன நேரடியா எதிர்க்க முடியல்ல.. ஆனாலும் அப்போதைக்கு சமாளிக்கறதுக்காக
அவ சின்ன பொண்ணு… கல்யாண வயசு கூட இன்னும் ஆகாதவ..
காலேஜ் படிக்கட்டும்னு சொல்லி சமாளிச்சுட்டேன்.. அவனும் அதுக்கப்புறம் அவள பத்தி பேசவே இல்லயா..சீக்கிரமா என் பொண்ண மறந்திடுவான்னு தான் நெனச்சேன்..ஆனா அவன் மறக்கல”
என்றவருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மீண்டும் தண்ணீரை தொண்டையில் சரித்தவர்,

“சரியா வாணிக்கு காலேஜ் முடிற சமயம் பொண்ணு கேக்கலாம்னு தான் அவன் இவ்வளவு நாள் அமைதியா இருந்திருக்கான் போல.. அவளுக்கு காலேஜ் முடிய போகுதுன்னு எப்படியோ தெரிஞ்சுகிட்டு போன வாரம் அவனோட ஆட்களோட வீட்டுக்கு வந்தவன்.. முத்துமாணிக்கம் கல்யாண வேலையை ஆரம்பிக்கலாமான்னு கேக்குறான்? எனக்கு பயங்கர கோபம்.. என் பசங்களுக்கும் கோபம் தான்..
இதுக்கு மேலயும் அமைதியா இருந்தா சரி வராதுன்னு நான் அவளுக்கு ஏற்கனவே மாப்பிள்ளை பேசி வச்சிருக்க விஷயத்தை சொல்லிட்டேன்.. அத கேட்டதும் அவன் முகத்தில் அப்படி ஒரு வெறி என்ன மீறி நீ என்ன பண்றன்னு பாக்குறேன்னு சொல்லிட்டு போய்ட்டான்”என்று மொத்த கதையும் சொல்லி முடித்த முத்துமாணிக்கம் கருப்பசாமியிடம்,

“இப்போ அவன் பெர்னாண்டஸ்ங்கற பேர்ல கடப்பால இருக்கான்னு கேள்விப்பட்டேன்… அவனால என் பொண்ணு வாணிக்கு எந்த ரூபத்தில் வேணாலும் ஆபத்து வரலாம்.. என்கிட்ட என் பொண்ணுக்கு பாதுகாப்பு குடுக்க ஆள் பலம் இருக்க … ஆனா அவன் நேரடியா மோத மாட்டான்..சூட்சுமகாரன்.. சூழ்ச்சி பண்ணுவான். அத தடுக்க நீ வேணும்.. இத நான் உதவியா தான் உன்கிட்ட கேட்கிறேன்” என்றார் வேண்டுதலாய்.

“உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சா மட்டும் அவனால எந்த ஆபத்தும் வராதுன்னு எப்படி நம்புறீங்க?”என்று கருப்பசாமி தனது அன்றைய சந்தேகத்தையும் கேட்டு வைக்க,

“அவன் இது வர கல்யாணமான பொண்ணுங்கள் எதுவும் பண்ணினதில்ல.. அவனுக்கு தேவையானது எல்லாம் கன்னித்தன்மைய இழக்காத வெர்ஜின் பொண்ணுங்க மட்டும் தான்” என்றார் சுருக்கமாக.

அதன் பிறகும் கருப்பசாமியினால் அவரின் வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. 

அவனைப் பற்றிய கூடுதல் விவரங்கள் சிலவற்றை அவரிடம் கேட்டுக் கொண்டான். மனதிலிருந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கியவன், முழு மனதுடன் கடமையை செய்ய தயாரானான்.

வெளியே வந்தவனின் கண்கள் எதையோ பார்த்து விட்டு, தான் கணித்தது சரிதான் என்று ஒளிர்ந்தது.

_________________________________

இங்கோ மாலை நேர குளிர் காற்று வீச அதைக் கூட உணராமல் தோட்டத்தில் அமர்ந்திருந்த மதுராவிற்கு வேர்த்து விறுவிறுத்து கை கால்கள் எல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது.

ஒரு முக்கியமான விடயம் பேசுவதற்காக தன் தந்தையின் அலுவலரை வாயில் வரை வந்துவிட்ட மதுரவாணி, எதிர்பாராத விதமாக தந்தை தனக்கு இருக்கும் ஆபத்தைப் பற்றி கருப்பசாமி இடம் பேசும்போது கேட்டுவிட, அதிலிருந்து அவளால் மீள முடியவில்லை.

இப்பொழுது தான் புரிந்தது.. தந்தை கல்லூரியிலிருந்து தன்னைக் கூப்பிட கருப்பசாமியை எதற்காக அனுப்பினார் என்று..

அவள் பள்ளி படிப்பை முடித்து வீட்டிற்கு வந்திருந்த சமயம் விருந்தினராய் வந்திருந்தவனை அவளுக்கு அரைகுறையாக ஞாபகம் இருந்தது. அவன் அப்பொழுதே முப்பதுகளின் இறுதியில் இருந்தவன் ஆயிற்றே! இப்பொழுது அவனுக்கு வயது நாற்பதாவது இருக்கும்
அவனா? தன்னை திருமணம் செய்ய கேட்டது? அதைவிட தந்தைக்கு அவனுக்கும் இடையே இருந்த தொடர்பு வேறு அவளுக்கு அப்படி ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தியது.

அரசியலில் நேர்மையை கடைப்பிடிப்பது கடினம் தான் ஆனால் தன் தந்தை பல தவறான செயல்களில் தவறான நபர்களுடன் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இப்படி தவறான தொழில் செய்து பொருள் சேர்த்தால் அந்த பாவம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தானே வந்து சேரும்?

இப்படி பல வகையான யோசனையில் மதுரா மூழ்கி இருக்க, அவள் பின்னால் நிழலாக கருப்பசாமி வந்ததைக் கூட அவள் அறியவில்லை.

வெகு நேரம் கழித்தே தன்னருகில் நிழலாடுவதை உணர்ந்து திரும்ப கருப்பசாமி கைகளை கட்டி அருகில் இருந்த மரம் ஒன்றில் சாய்ந்தவாறு அவளை தான் விழி இடுங்க பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் தன் பின்னால்  நின்றதை அதிர்ந்து பார்த்தவள் இன்னும் ஒரு மாத காலம் தனக்கு நிழலாய் இவன்தான் வரப் போகிறான் என்பது நினைவில் வரவும் பெருமூச்சுடன் அவனிடமிருந்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.

கருப்பசாமியும் ஏற்கனவே அவள் வந்து சென்றதை அறிந்திருந்தான். ஐம்புலன்களையும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக உபயோகப்படுத்தும் அவனுக்கு தெரியாதா? பேச்சில் மூழ்கி இருந்த முத்துமாணிக்கம் அதை கவனிக்கவில்லை. ஆனால் அவன் கண்டு கொண்டான்.. அப்போதைய கதவின் ஆட்டமும்… யாரோ அதன் அருகே வந்திருக்கிறார்கள் என்ற சிறு அசைவும்..அவன் வெளியே வந்தபோது கதவிடுக்கில் கண்ட உதிர்ந்த மல்லிகை இதழ்களும் வந்தது மதுரவாணி தான் என்று பட்டயம் போட்டு காட்டி விட, அவளைத் தேடி தான் அங்கே வந்திருந்தான்.

அவள் குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை அவளைப் பார்த்ததுமே அறிந்தவன் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. அதற்காக அவளை விட்டு தூரமும் விலகிச் செல்லவில்லை. அவளை மட்டுமே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

மாலை நேரம் இதமான காற்று பவளமல்லி மரம் அருகே கிடந்த கிரானைட் மேடையில் தலையில் பாதி உதிர்ந்த மல்லிகை பூவுடன் சல்வாரின் துப்பட்டாவை திருகியப்படி கண்கள் எங்கோ வெறித்துப் பார்க்க,

சோகப் பதுமையாய் அவள் அமர்ந்திருந்த விதம்…மனதை உருக்கி… அவன் நெஞ்சுக்குள் முடிந்து வைத்திருந்த ஏதோ ஒரு முடிச்சை அவிழ்த்து விட, அதுவரை விலகி நின்று பார்த்துக் கொண்டிருந்தவன்.. அவள் அருகில் இடைவெளி விட்டு அமர்ந்து,
“என்னாச்சு மதுரா?”என்றுக் கேட்டான் ஆதுரமாய்.

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
38
+1
3
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments