நீல கண்களின் காதல் பயணம்.
காஞ்சிபுரம்.
காலை 7.30 மணி….
“அன்பென்ற ஒற்றை சொல்லை போல் இங்கு வேறு இல்லை………
நீ காட்டும் பாசத்திற்கு தெய்வங்கள் ஈடு இல்லை……..
என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முள்ளாய் சுத்தும்….
நொடிநேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும்…..”
என்ற அழைப்பேசியின் ரிங்டோன் அறைமெங்கும் எதிரொளிக்க தன் கண்களை மெல்ல திறந்தான் அவன். அர்ஜூன். இவனே நம் கதையின் நாயகன்.
அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் தூக்க கலக்கத்தில் “ஹலோ” என்றிட,
“இன்னுமாடா தூங்கிட்டு இருக்க? இன்னைக்கு என்ன நாள்னு மறந்துட்டியா?”……என்று கடிந்தாள் இசை.
நம் அர்ஜூனின் ஆருயிர் தோழி. பள்ளி பருவம் முதல் இன்று வரை தன்னுடன் உறவை தொடர்பவள். இசை கேட்டாள் எதையும் செய்திடுவான் அர்ஜூன். அந்த அளவிற்கு தோழமை கொண்டுள்ளனர்.
“ஹே.ஒய் காலையிலேயே டென்சன்?சில் பங்கு. கூல் டவுன் . நைட்டு கொஞ்சம் வேலை அதிகமா இருந்துச்சு. முடிச்சிட்டு தூங்க லேட் ஆகிடுச்சி.”
“அதுசரி. உனக்குத்தா லேப்டாப்ல மூழ்குனா நேரம் போறதே தெரியாதே. ரெண்டு நாளா ஒரு கால் கூட பண்ணல. அவ்வளவு பிஸி சார்.”என கோபம் கொண்டல் இசை.
“அப்படி எல்லாம் இல்ல பங்கு. கொஞ்சம் ஒர்க் டென்ஷன். சரி இன்னைக்கு என்ன நாள் பங்கு? எனிதிங் ஸ்பெஷல்?”
“அட பைத்தியமே ! பூமி மேலதா இருக்கியா ? இல்ல வேற உலகத்துல இருக்கியா பங்கு ?.. அடேய் இங்க எல்லாரும் பரபரப்பா சுத்திக்கிட்டு இருந்தா நீ என்னடா கஜினி சூர்யா மாதிரி எல்லாம் மறந்து தூங்கிட்டு இருக்க?….
“பிசாசே. என்ன விஷியம்-னு சொல்லு. காலையிலேயே உன் திட்ட என்னால வாங்க முடியல.காது கொய்யிங்குது” .என காதில் சுண்டு விரல் விட்டு ஆட்டி கொண்டு கூலாக பதில் சொன்னான் அர்ஜுன்.
“பங்கு இன்னைக்கு நமக்கு காலேஜ் லாஸ்ட் வருஷத்தோட முதல் நாள்டா. நம்ம காலேஜ் லைப் இந்த வருஷத்தோட முடியப்போகுது பங்கு.இன்னைக்கு காலேஜ்க்கு Fresher’s வருவாங்க. நம்ம ஜாலியா சைட் அடிக்கலாம்.”
“ஐயோ பங்கு!…நீதா எல்லாருக்கும் சீனியர். எப்படி சின்ன பசங்கள சைட் அடிப்ப? நல்லாவா இருக்கும்”…
“சீனியர் ஆ இருந்தாலும் ஜூனியர் ஆ இருந்தாலும் அழகான பசங்கள சைட் அடிக்கலாம். தப்பில்லை.கல்யாணம் தா பண்ண கூடாது.”
“என்னமோ பண்ணி தொலை.சரி எல்லாரும் எங்க மீட் பண்ணலாம்?”
“கே.வி.பாதம் ஸ்பெசல் கடையில மீட் பண்ணலாம். உன்னோட பாச மலர்கள கொஞ்சிட்டு சீக்கிரமா வந்துசேரு. இன்னும் அந்த பைய்தியங்க என்னபண்ணுதோ?”.
“டோன்ட் வொரி பங்கு. இன்னைக்கு எல்லாரும் மீட் பண்றோம் ரகளையோட ஸ்டார்ட் பண்றோம். டன்னா?”
“ம்ம்.”எனக் கூறி அடுத்த நண்பனுக்கு அழைப்பு விடுத்தாள் இசை.
மெத்தையில் இருந்து துள்ளிகுதித்து எழுந்தவன் புது உற்சாகத்துடனே தயாரானான் கல்லூரிக்கு. குளித்து முடித்து இடுப்பில் துண்டுடன் வந்தவன், தனக்கு பிடித்த நீல வண்ண சட்டை மற்றும் ஜீன்ஸ் சகிதம் உடையணிந்து ஆளுயர் கண்ணாடியின் முன்பு நின்றான் அர்ஜூன்.
ஆண்மை மிளிரும் தோற்றம் கொண்டவன். அவனின் கட்டுக் கட்டான சதையை பார்த்தாலே தெரிந்துவிடும் தவறாமல் உடற்பயிற்சி செய்பவன் என்று.
அலை அலையான கூந்தல், கூர் நாசி, சிவந்த இதழ்கள், அளவான மீசை, இவை அனைத்தையும் தாண்டி பார்ப்போரை நொடியில் ஈர்க்கும் காந்த விழிகளை உடையவன். இவன் விழிகளுக்கென தனி ரசிகர்கள் படையே உண்டு.
தன் தோற்றத்தை கண்ணாடியில் பார்த்தவனின் இதழ்களில் புன்முறுவல். அதன் காரணம் அவன் மட்டுமே அறிவதாய்.
என்ன நினைத்தானோ? அடுத்த வேளையாக உயர்க பெட்டி ஒன்றை திறந்து, அதில் இருந்த கருப்பு மற்றும் பழுப்பு நிற ‘ஐ.லென்ஸ்’யை எடுத்து அவனின் கண்மணிகளில் பொருத்தி கொண்டான். பின் டேபிள் மேல் இருந்த தோள் பையை எடுத்தவன் படிகளில் இறங்கி கீழே வர வீட்டினில் யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லை.
திரும்பி உணவு மேசையை பார்த்திட அங்கு ஒரு கடிதம் மற்றும் அவனுக்கான உணவு இருந்தது.
கடிதத்தை பிரித்து படித்தவனின் இதழ்கள் முத்து பற்கள் தெரிய சிரித்தது.
காரணம் தங்கையின் கைவண்ணக் கடிதம்.
“அஜீ அண்ணா! நீ இன்னைக்கி ரொம்ப அழகா இருப்பனு எனக்கு தெரியும். உன் அழகை கொஞ்சம் கம்மி பண்ணு.இல்லனா காலேஜ் பொண்ணுங்க ரொம்ப பாவம் .
அப்புறம் அம்மா அப்பாவா நான் தா கோவிலுக்கு இழுத்துட்டு வந்திருக்க. சோ, எங்களை தேட வேண்டாம். நாங்க இல்லாதனால நீ சாப்பிடாம போகக்கூடாதுனு சாப்பாட்டை டேபிள் மேல வெச்சிருக்கேன். கண்டிப்பாக சாப்பிடு.
பத்திரம் அஜூ. மிஸ் யூ
இப்படிக்கு உன்
வாலு தங்கை சுவாதி.”
இதை படித்தவன் மனம் பூவைப் போல மலர்ந்தது தங்கை தன் மீது கொண்ட பாசத்தில்.
கடிதத்தை பையில் வைத்துவிட்டு உணவினை முடித்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினான் அர்ஜூன்.
அம்மா -லட்சுமி, அப்பா -ஆதித்யன், தங்கை -சுவாதி.இதுவே ஆர்ஜூன் குடும்பம்.
ஆதி டெக்ஸ்டைல்ஸ், ஆதி காஸ்மெடிக்ஸ், ஆதி ஸ்டோர், ஆதி ஸ்டுடியோ, ஆதி கம்பெனி , ஆதி கன்ஸ்ட்ரக்ஷன் என அனைத்திலும் கொடி கட்டி பறந்தவர் ஆதித்யன்.
அம்மா லட்சுமி ,ஒரு ரஷ்ய நாட்டு பெண். சுற்றுலாவிற்காக காஞ்சிபுரம் வந்திருந்த போதுதான் ஆதியின் நட்பு கிடைத்தது. நட்பு நாளடைவில் காதலாகி, காதல் திருமணத்தில் முடிந்தது.
லட்சுமி தன் வீட்டின் எதிர்ப்பையும் மீறியே ஆதியை மணம்புரிந்தார்.
லட்சுமிக்கு பழுப்பு மற்றும் லேசான நீலம் கலந்த கருவிழி. அதில் கவரப்பட்டவர்தான் ஆதி. குடும்பம்தான் அவரின் உலகம்.
வெளியில் கடினத்தன்மை கொண்டாலும் ,வீட்டில் பாச மலர்களாக தான் இருப்பார்.
பணபலம், பதவிபலம் என அனைத்தும் உடையவர். இரண்டு வருடம் முன்பு, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் ஒருமாத காலம் ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலை. அச்சமயத்தில் தொழில் சாம்ராஜியத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு, தொழில் முடங்கும் அபாயம்.. குடும்பமே கலங்கி நின்றது. ஆனால் அர்ஜூன் தைரியமாக
“நான் இருக்கிறேன், நான் தொழிலை பார்த்துக் கொள்கிறேன்”
என்று இருபது வயதில் தந்தைக்கு வாக்களிதவன், அவர் தொழிலை தன் கைளில் எடுத்தான்.
சரிவை சந்தித்த தொழில்களா இது! என்று வியக்கும் அளவில் வெற்றியை மட்டுமே கொடுத்திருந்தான் அர்ஜூன். அதுவும் அடுத்த மூன்று மாதங்களில். ஆதியே வியக்கும் அளவில் அவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தான்.
தன் இருபது வருட அனுபவத்தில் ஆதி பெறாத தொழில் நுணுக்கங்களை அர்ஜூன் செயல்படுத்தி காட்டி இருந்தான்.
கல்லூரி படிக்கும் காலத்தில் தொழிலிலும் நுழைந்து இரண்டையும் சரிவர பார்த்துக்கொண்டான்.வாரத்தில் நான்கு நாட்கள் கல்லூரி என்றால் மூன்று நாட்கள் தொழில்என்று நிற்காமல் ஓடுபவன்.
தந்தை உடல் நலம் பெற்று வந்த பின்பும் தந்தையிடம் தொழில் பாரத்தை கொடுக்காமல் ஓய்வெடுக்க வேண்டும் என அன்பு கட்டளை வழங்கியவன், மேற்பார்வை பார்க்க மட்டுமே அனுமதித்தான்.
மகனை எண்ணி அவ்வளவு பூரிப்பு ஆதிக்கு. இந்த வீட்டிற்கு அர்ஜீன் சொல்வது தான் கட்டளை. அவன் கட்டளையே சாசனம்.
_______________________
அழகான படுக்கை அறை. சுவரின் நிறம் முதல் சீப்பின் நிறம் வரை அனைத்து பொருளும் நீல நிறத்தில் இருந்தது.
யார் சொன்னது பெண்கள் என்றாலே பிங்க் என்று? …….
இவள் மாறுபட்டவள் -நீல நிறத்தின் காதலி. அதன் காரணம் அவளின் காதலே.
அறை முழுவதும் தேன் குரலில் பாடல் சத்தம்…
“என் ஜன்னல் வந்த காற்றே ஒரு தேனீர் போட்டு தரவா….
உன் வீட்டில் வந்து தங்க பெண் தோழியாய் நானும் வரவா…..
என் வாசல் கோலம் பார்த்து புது கவிதை சொல்லும் வானம் ….
என் கைகள் கோர்த்து கொள்ள அட காற்றுக்கென்ன நாணம்…..”
என பாடிக்கொண்டே வார்த்தைகளுக்கு ஏற்ப கை கால்களை அசைத்து ஆடித் கொண்டு இருந்தாள் கயல் என்கின்ற கயல்விழி.
அவ்வளவு உற்சாகம் மற்றும் சந்தோஷம் அவளிடம். ஏனெனில் நேற்று தான் அவளின் தங்க கூண்டில் இருந்து தப்பிப்பிழைத்து இங்கு வந்து சேர்ந்திருந்தாள்.
கஷ்டங்களை எண்ணி தன் இஷ்டங்களை தொலைத்தவள். கொடுமை என்பதன் பொருளை கடந்த ஆறு வருடங்களாக அனுபவித்தவள்.
ஆனால் இப்பொழுது தன் இஷ்டப்படி பாடிக்கொண்டு, ஆடிக்கொண்டு, என சுதந்திரப் பறவையாக இருக்க போகிறாள்.
அதுவும் இன்னும் ஒரு வருடம் மட்டுமே. அதன் பின் மீண்டும் அந்த கூண்டுக்குள் செல்ல வேண்டுமே. நினைக்கையிலே மலைப்பாக இருந்தது. ஏனெனில் காலங்கள் தந்த ரணம் அவளின் மனதில் அழியாத ஆழமான ஒன்றாக பதிந்துள்ளதே.
அன்பை காட்ட அம்மாவும் இல்லை. அக்கறை கொள்ள அப்பாவும் இல்லை. அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக தான் இருக்கின்றாள்.
அவளின் பாதுகாப்பிற்காக வீட்டு வேலை மற்றும் சமையல் செய்யும் பெண்ணின் குடும்பத்தை கயலின் வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறாள் ஸ்வேதா.
ஸ்வேதா. அன்பை ஆழ்கடலின் அளவில் அளிக்க முடியவில்லை என்றாலும் அடைமழையாக கயலின் மீது பொழிபவள் . காயலுக்கு தன் உயிரினும் மேலாக கருதும் ஒரு உறவு என்றாள் அது ஸ்வேதா.
அவளிடம் மட்டுமே கயல் திறந்த புத்தகமாக இருப்பாள். தன் சந்தோஷத்தின் முதல் படி அவள். அவளின் மூலம் தான் சென்னையில் இருந்து விடுதலை பெற்று காஞ்சிபுரத்தில் இப்போது சுதந்திரம் ஆக இருக்கின்றாள்.
கயல்விழி. பேரைப் போல் மீன்விழிகள், கூர்நாசி,பிறை நிலவு நெற்றி, கோவை பழ உதடு, சந்தன மேனி, இடையை தண்டிய கருங்கூந்தல், ஒல்லியான உடல்வாகுவிற்கு சொந்தக்காரி. எந்த அழகுசாதன பொருட்களின் தேவையும் இன்றி நிலவு போல் ஜொலிப்பவள்.
எல்லாத்தையும் விட அவளின் சிரிப்பினால் உருவாகும் கன்னக்குழி மிகவும் அழகு.
மேலும் சிறப்பு அம்சமாக, ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இருக்கும் கிரீடம் வடிவ மச்சம் அவளின் வலது கைபெருவிரலின் பின்பக்கம் இருக்கும்.
ஒரு கையில் பிராண்டட் வாட்ச் (ம) மறுகையில் தங்க வளையல்கள், கழுத்தில் மெல்லிய தங்க செயின் அதில் இதய வடிவில் பென்டண்ட். அதே டிசைனில் தங்க தோடு என மிளிர்பவள்.
இவளுக்கு பிடித்த நீல நிறத்தில் சுடிதார் அணிந்து.கருங்கூந்தல் ஐ பின்னலிட்டு மல்லிப்பூ சரடை சூடிக்கொண்டு தேவதையாக தயாராகினாள் முதல் நாள் கல்லூரிக்கு.
இதுவும் ஸ்வேதாவின் ஏற்பாடு தான். சென்னையிலேயே தன் கடைசி வருட படிப்பையும் முடிப்பதாக இருந்தவளை அவளின் கூண்டில் இருந்து விடுதலை வாங்கி காஞ்சிபுரம் கல்லூரிக்கு மாற்றி விட்டால். தன் தந்தையின் நண்பர் மற்றும் அவளின் பாசமான சிவபிரகாஷ் மாமா, காஞ்சிபுரம் அண்ணா யுனிவர்சிட்டி பல்கலைக்கழகத்தின் சேர்மன் ஆக இருக்கின்றார் . எனவே அவரிடம் ஸ்வேதா உதவி கேட்டு கயலை அங்கு அனுப்பிவிட்டாள். அது மட்டும் இன்றி அவளின் வாழ்வில் நடந்தது (ம) அவளின் பிரச்சனை என அணைத்தையும் தெரிவித்து ஆயிரம் பத்திரங்களை சொல்லி
அந்த கல்லலூரியில் சேர்த்திருத்தாள்.
அதனுடன் சேர்த்து வேண்டுகோள் ஒன்றும் வைத்திருந்தால். எப்பொழுதும் கல்லூரியில் அவளுடனே ஒருவர் இருக்க வேண்டும் என்று.ஏனெனில் அவளின் உடல்நிலை மற்றும் மனநிலை இன் காரணமாக.
கல்லூரியின் முதல் நாள்.கண்ணக்குழி தெரியும் வண்ணம் சிரித்த முகத்துடன் – தன் நீல நிற ஸ்கூட்டியை இயக்கி கல்லூரிக்கு செல்கிறாள் கயல். _______________________
அன்பிற்காக ஏங்கும் கயல் மற்றும் அன்பின் மறு உருவமாக நிற்கும் அர்ஜீன்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைத்துள்ள அண்ணா யூனிவர்சிட்டி பல்கலைக்கழகம், இரு வேறு திசைகளாக இருக்கும் இவர்களை ஒரு நேர்கோட்டில் இனைக்கவிருக்கிறது.
இவர்களின் கல்லூரி மற்றும் காதல் பயணத்தில் நாமும் பயணித்திடுவோம்.
/(இக்கதையில் வரும் அனைத்தும் எனது கற்பனையே .கதைக்காக மட்டுமே சூழ்நிலையை அமைந்திருக்கிறேன். வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல. வாசகர்களுக்கு எனது நன்றிகள்.)/
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
21
+1
1
+1
3
Nice post