அத்தியாயம் 1
“டேய்! குகன் எங்க டா இருக்க?” என்று கைகளை காற்றில் பறக்க விட்டவாறு கண்களை சிறிய துணி கொண்டு கட்டிக்கொண்டு தனது அண்ணன் மகன் குகனை தேடிக்கொண்டு இருந்தான் தேவா.
“இங்க பாரு! இங்க இருக்கேன் தேவ்!இங்க!..இங்க!…” என்று அவனும் அவனை அலை மோத விட்டுக் கொண்டு இருந்தான்.
” ரொம்ப நேரமா ஆட்டம் காட்டுற டா படவா!என் கையில சிக்கின அதுக்கப்புறம் இருக்கு டா உனக்கு” என்று பல் வரிசை தெரிய சிரித்தபடியே, குகனை அவன் இருக்கும் இடம் தெரியாதவன் போல தேடிக்கொண்டு இருந்தான்.
அவனது குரலை வைத்தே அவன் இருக்கும் திசையை கண்டுபிடிக்க முடியும். கண்டு பிடித்தும் இருந்தான்,இருந்தாலும், அவனது ஆசையை நிறைவேற்ற , அவன் அருகில் வந்து தன்னை தொட்டு தொட்டு திரும்பி செல்லும் பொழுதும் அவனைத் தொடாமல் ஆட்டம் காட்டிக்கொண்டு விளையாடினான்.. அவனது சந்தோஷத்திற்காக,
அப்போது எதிரில் வந்த அவனது அப்பா எழில் மீது மோதி விட,
“தடிமாடு! தடிமாடு! தடிமாடு! தண்ட சோறு! ஏழு கழுத வயசாகுது! இன்னமும் கண்ண கட்டிக்கிட்டு, கண்ணாமூச்சி ஆடிட்டு இருக்கு பாரு! இதெல்லாம் எங்க இருந்து திருந்த போது, உருப்பட போகுது!”என்று திட்ட..
இவ்வளவு நேரம் சிரித்த முகத்துடன் அவனிடம் ஆட்டம் காட்டிக்கொண்டு இருந்த குகன். “தாத்தா இப்ப எதுக்கு தேவ் வை திட்டுறீங்க? “என்றான் வேகமாக..
“இதோ வந்துட்டான் பாரு பெரிய மனுஷன்! அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு,வீட்டில் இருக்கிறவங்க சின்னதுல இருந்து பெரியவங்க வரைக்கும் செல்லம் கொடுத்து தான் இவன் இப்படி இந்த வயசிலையும் நடு கூடத்தில நின்னு ஆடிட்டு இருக்கான்”என்று முனக,
“இந்த வயசுல தான் விளையாடனும்னு எதுவும் இருக்கா என்ன தாத்தா? விளையாட்டு யார் வேணாலும் எந்த வயசுல வேணாலும் விளையாடலாம். நீங்களும் வாங்க விளையாடலாம்!” என்று குகன் அவரையும் அழைக்க,
அவனையும் முறைத்தவர்.” இவன் வளர்த்த புள்ள தான பின்ன எப்படி இருக்கும்? இவன மாதிரியே தானே இருக்கும்!” என்று முனகி கொண்டே நகர,
தன் கண்ணில் கட்டி இருந்த கட்டை அவிழ்த்தவன்.” இதோ பாருங்க! என்னை திட்டுறதோட நிறுத்திக்கோங்க! அவன் கிட்ட எல்லாம் பாயாதிங்க!” என்று குகனை தூக்கி கொண்டு வெளியில் செல்ல,
தன் தலையிலே தட்டிக் கொண்ட எழிலரசன்.” தனம் தனம்” என்று வரவேற்பறையில் இருந்து கூச்சலிட,
“என்னங்க “என்று சமையலறையில் இருந்து வெளியில் வந்த தனம் கேட்க,
” ஏண்டி உன் பையனுக்கு என்ன வயசாகுது? காலா காலத்துல கல்யாணம் பண்ணி வச்சி இருந்தா ரெண்டு ,மூணு பிள்ளையே பெத்திருப்பாண்டி !இப்ப என்னடி , சின்னப் பையன் குகன் கூட சேர்ந்து விளையாடிட்டு இருக்கான்!”.
“உங்களுக்கும் விளையாடனும்னு ஆசையா இருக்கா? எங்க கூட சேர்ந்து விளையாட முடியலைன்னு பொறாமையா இருக்கா?உங்க பேரனே உங்களை நீங்க விளையாட வரிங்களா ? என்று கேட்க தானே செஞ்சான், வர வேண்டியதுதானே! இதுக்கெல்லாம் யாராவது கூச்சப்படுவாங்களா! என்று அவரை வம்பு இழுத்தான் அவரின் தவப்புதல்வன்.
“அடிவங்க!கொஞ்ச நேரம் ஆச்சு அமைதியா இருக்கா வீடு! அவன் கூட சேர்ந்து அந்த குகனும் ஆட்டம் போட்டுட்டு இருக்கான்!”என்றார் எரிச்சலாக..
“இது வீடா என்னது! மியூசியமா இது அமைதியா இருக்க எந்த நேரமும்!” என்ற வெளியில் இருந்து குரல் கொடுத்தான்.
” அடங்குறானா பாரு !”என்று வேகமாகவே குரல் கொடுத்தார்.
” இங்க இருந்தா இந்த ஆளு ஏதாவது சொல்லிட்டே இருப்பார், நம்ப வாயும் சும்மா இருக்காது, அப்புறம் கடைசியா நமக்கு தான் குடும்பத்தோட உட்கார வைத்து அட்வைஸ் பண்ணுவாங்க!வா டா குகன் நம்ம மாடியில போய் விளையாடலாம்.அங்க தான் எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்காது, எந்த காண்டாமிருகமும் இருக்காது” என்று வேகமாகவே தனது அப்பாவிற்கு கேட்பது போலவே சொல்லிவிட்டு படிகளில் ஏற,
“அடிவங்க! எவன்டா காண்டாமிருகம்! “… என்று எட்டிப் பார்த்து மேலே குரல் கொடுத்தார்.
“நீங்க தான் வேற யாரு ?வீட்டுக்குள்ள நுழைஞ்சதிலிருந்து விடாமல் கத்திக்கிட்டே இருக்கீங்களே! காண்டாமிருகம் , காண்டாமிருகம்!” என்று கூச்சலிட ,அவனுடன் சேர்ந்து குகனும் முத்துப்பற்கள் தெரிய சிரித்துக் கொண்டே கத்தினான்.
இருவரின் கூச்சலிலும் தன் காதை குடைந்து கொண்டே , அவர்களை எண்ணி சிரித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் எழில்.
அவரை புன்னகையுடன் பார்த்த தனம் “இப்போ அவனுக்கு பின்னாடி சிரிக்கிறதுக்கு பதிலா,அவனுக்கு முன்னாடி சிரிச்சா என்ன? எதுக்கு வீட்டுக்குள்ள வரும்போதே, அவனை திட்டி கிட்டே வரீங்க? எந்த நேரம் பார்த்தாலும் அவனை திட்டவே செய்றீங்க?”என்றார் ஆதங்கமாக.
” எல்லா நேரமும் அதுக்குன்னு சிரிச்சிகிட்டே இருக்க முடியுமா டி. வெளியே இருந்து வரும்போதே, ஆயிரம் கவலை யோடும் டென்ஷனோடும் வந்தாலும், வீட்டுக்குள்ள நுழைஞ்ச அடுத்த நிமிஷம் நம்மளை சிரிக்க வைத்து விடுறான்”என்று சொல்லி புன்னகைக்க,
“அப்புறம் ஏன் அவன் முன்னாடி மட்டும் எரிஞ்சு விழுறீங்க?”என்றார் கேள்வியாக,
“இது என்னடி கேள்வி! என் புள்ள நான் திட்டுறேன்,என்ன இருந்தாலும், அவன் பண்ற எல்லாத்தையும் அமைதியா கடந்து போக முடியாதுடி! அவன் பண்றது எல்லாமே சிரிக்கும் படியாக ரசிக்கும் படியாக இருக்கிறது என்பதற்காக, அமையாக இருப்பாங்களா?வீட்டுல இருக்க யாருக்குமே அடங்காம இருந்தா சரியா வருமா டி !”..
” ஏன்? அப்படி என்ன ?அவன் வீட்ல இருக்கவங்க பேச்சை கேட்காமல், யாருக்கும் அடங்காமல் இருக்கிறான். என் புள்ளைக்கு என்ன குறை சொல்லுங்க? படிப்பு இருக்கு? நல்ல வேலைக்கு போறான்? அப்புறம் என்ன?, மத்த பிள்ளைங்க மாதிரி வேலை வெட்டிக்கு போகாம ,அப்பா, ஆத்தா காசுல உட்கார்ந்து தின்னுட்டு ஊதாரியாகவா திரிய செய்றான்?”.
“ஏண்டி உன் மவன் கல்யாணம் வேணாம்னு தள்ளி போட்டுட்டே போறானே ! அது உன் கண்ணுக்கு தெரியலையோ?”..
“இதுக்கு நான் என்ன சொல்றது, நானும் கேட்க தான செய்யுறேன். ஒரு வருஷமா பொண்ணு பாக்குறேன்னு சொல்ல தான் செய்றேன், நம்ம வித்யாவும் அவளால முடிஞ்ச அளவுக்கு கேட்டு பார்த்துட்டா, ஆனா, அவன் பிடி கொடுத்தே பேச மாற்றான். வேலுவும் இத பத்தி அவன்கிட்ட பேச தான் செய்தான். யார் கேட்டாலும் வாயவே திறக்க மாற்றான்” என்று ஆதங்கமாக வருத்தத்துடன் அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே , வீட்டுக்குள் நுழைந்த வித்யா.
“என்னத்த என் பேரு அடிபடுது !”என்று கேட்டுக் கொண்டே வந்து நின்றாள்.
“வா மா! எங்க வீட்டுக்கு விளக்கேத்த அந்த மகாலட்சுமியே!” என்றார் எழில்.
சிரித்துக் கொண்டே “மாமா” என்ற சினுங்களுடன் “என்ன மாமா என் பெயர் அடிபடுது, என்ன பஞ்சாயத்து இன்னைக்கு? நீங்க பெத்ததும், நான் பெத்ததும் என்ன பண்ணுச்சுங்க?”என்றாள்.
“என் மருமக தான் என்னை நல்லா புரிஞ்சி வச்சிருக்கா!”.
” மாமா” என்றாள் உதட்டில் மென் புன்னகையுடன்.
“ரெண்டும் கண்ண கட்டிட்டு நடு கூடத்துல ஓடிப் பிடிச்சு விளையாடிட்டு இருக்குங்க!”.
” சரி விடுங்க மாமா! இன்னைக்கு லீவு இல்ல, அதான் ரெண்டும் ஆட்டம் போட்டு இருக்கும். ஐயாவுக்கு இன்னைக்கு சனிக்கிழமை லீவு இல்லையா? அதான் “என்றவள் தனது ரூமுக்குள் நுழைந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து, கீழே இருந்தே “குகன்..குகன் ” என்று இரண்டு முறை குரல் கொடுக்க,
” உங்க அம்மா வந்துட்டாங்க டா! வா!”என்று அவனை தூக்கிக் கொள்ள,
“தேவ்! இப்போ அம்மா ஏதாவது , கேட்பாங்களே!என்ன பண்ணலாம்?” என்று யோசிப்பது போல் கன்னத்தின் மீது கை வைக்க,
“இப்ப உங்க அம்மா பேசுவாங்கன்னு அப்படியே என் பக்கம் திருப்பி விடுற பாத்தியா? கேடி டா நீ வா!” என்று அவனது தலையை கலைத்துக் கொண்டே தூக்கிக்கொண்டு கீழே இறங்கி வர,
” ஏன்டா தேவா! மாமாவ எந்த நேரம் பார்த்தாலும் கத்த வச்சுக்கிட்டே இருக்க?”என்றாள்.
“அதுக்குள்ள போட்டு கொடுத்துட்டாரா?” என்ன? உங்க மாமானாரு?” என்று சொல்லிக் கொண்டே குகனை கீழே இறக்கி விட்டவன்.
” அப்ப தான அண்ணி சுகர் ,பிபி எல்லாம் இல்லாம ரிலாக்ஸா இருப்பாரு! உங்க மாமனார் கிட்ட சொல்லி வைங்க! எந்த நேரம் பார்த்தாலும் டென்ஷனாவே இருந்தா பிபி எக்கச்சக்கமா எகிரிடுமாம்.. சிரிச்சு பேசி பழக சொல்லுங்க! அப்ப தான் சந்தோஷமா இன்னும் பத்து பதினைந்து வருஷம் நோய் ,நொடி இல்லாமல் இருக்க முடியும் !”என்று சிரிக்க!
“என்ன டா பேச்சு!”என்று அவனது தலையில் ஒரு கொட்டு வைக்க.
” போங்க அண்ணி! நீங்க வேற!” என்று தலையை தேய்த்தான்..
“இப்போ நான் கொட்டுனது உனக்கு வலிக்குது!” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவளது கணவன் வேலு வந்து நின்றான்.
“ஐ… ஜாலி!.. ஜாலி! அப்பா ஒரு ரவுண்ட் போலாமா?” என்று குதூகலித்தான் குகன்.
“ஆமா நீ ! உன் சித்தப்பா கூட காலையில இருந்து எங்கவும் ஊர் சுத்தமா தான் இருந்து இருப்ப பாரு!” என்று சொல்லிக்கொண்டே தனது தம்பி இடம் பைக் சாவியை தூக்கி போட்டவன்..
” எனக்கு ஒரு மாதிரி இருக்குடா! அசதியா அவனை கூட்டிட்டு போ!” என்று சொல்லிக் கொண்டே அவன் வீட்டுக்குள் நுழைய.
” என்ன அண்ணி !உங்க புருஷன் ரொம்ப வெட்டி முறிச்சிட்டு வர மாதிரியும், நாங்க பொழுதுக்கும் வேலை வெட்டி இல்லாம வீட்ல உட்கார்ந்து இருந்தோம்னு சொல்லி காமிச்சிட்டு போறாரோ?”,
வீட்டுக்குள்ள நுழைய இருந்த வேலு, வெளியே எட்டிப் பார்த்து, “அட பாவி! நான் எப்படா அப்படி சொன்னேன். இப்போ அவ கிட்ட என்ன கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கணும் உனக்கு அப்படித்தானே!”..
” கேட்டீங்களா?அண்ணி. என்னால தான் உங்களுக்குள்ள சண்டை வருதா?”என்றான் பாவமாக முகத்தை வைத்து கொண்டு..
“டேய்!நடிக்காத! டா”..
“ஏங்க !நீங்க போங்க! நீங்களும் அவன் கூட சின்ன பிள்ளை மாதிரி அப்பப்ப ஏட்டிக்கு போட்டி சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க!”..
“அடிப்பாவி அவன் சின்ன புள்ள, அப்ப எனக்கு என்ன ?ஏழு கழுதை வயசாகுதா?”என்க..
குகனும் ,தேவாவும் வாய் பொத்தி சிரித்தார்கள்..
” இங்க பாரு ரெண்டும் பல்லை காட்டுது . என் கூட பொறந்ததும் விஷம் !,நான் பெத்ததும் விஷம்! ரெண்டும் விஷம்! விஷம்!” என்று சொல்லி புலம்பி விட்டு,”எதையோ பண்ணுங்கடா போங்க!” என்று ரூமுக்குள் நுழைந்து கொண்டான்.
“ஏன் டா வரும் போதே,அவரை வம்பு இழுகுற!”.
“விடுங்க அண்ணி! சும்மா விளையாட்டுக்கு தான! அவனே ஏதோ டென்ஷன்ல வந்து இருக்கான் போல, நீங்க அவனை பாருங்க! சரி அண்ணி அதை விடுங்க!உங்களுக்கு ஏதாவது வேணுமா ?வெளிய போறோம் வாங்கிட்டு வருவோம்”.
“எனக்கா “என்று லேசாக தலையை சொரிந்து கொண்டே உள்ளே எட்டிப் பார்த்தாள்..
“அதெல்லாம் உங்க புருஷன் போயாச்சு! உங்க மாமனாரை எல்லாம் கண்டுக்காதீங்க! உங்களுக்கு என்ன காலிஃப்ளவர் பக்கோடா வேணும் ஆதானே!” என்று அவனாகவே தனது அண்ணி விரும்பி உண்ணும் தின்பண்டத்தை சொல்லி விட்டு நகர்ந்தான்..
அவள் விரும்பியதை சாப்பிட வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை.ஆனால்,அதிகமாக எண்ணெய் பொருள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லி இருந்ததால் , தான் யோசிக்க செய்தாள்.
“பாய் அண்ணி! “என்று கை காண்பித்து விட்டு ,குகனையும் வண்டியில் தூக்கி முன்னாடி உட்கார வைத்துக் கொண்டு வண்டியை பறக்க விட்டான்..
அவர்கள் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி இருக்கும் கடையில் வண்டியை நிறுத்தி விட்டு, குகனுக்கு ஐஸ்கிரீமும், இவனுக்கு ஒரு ஃப்ரூட் சாலட்டும் வாங்கி சாப்பிட்டு விட்டு ,வீட்டில் உள்ளவர்களுக்கும் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு ,தனது அண்ணிக்கு காலிபிளவர் சில்லியும் ,தனது தந்தை, தாய்க்கு என்று உளுந்த வடையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து பைக் சாவியை வரவேற்பு அறையில் உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டிருந்த வேலுவிடம் தூக்கி போட,
” ஏண்டா அத கையில தான் கொடுத்தா என்ன?” என்றான் .
” சாரி பிரதர் .எங்களுக்கு எங்க கிட்ட ஒருத்தர் எப்படி நடந்து கொள்கிறார்களோ அப்படி நடந்து கொள்ள தான் தெரியும் “என்று முத்துப்பல் தெரிய சிரிக்க,
“ராமா!” என்று தலையில் தட்டிக் கொண்டான் வேலு.
கண்களை சுழல விட்டுக்கொண்டு தனது அண்ணியை தேடினான்.
” என்ன கேட்டா கேடி!”என்றான் தம்பியின் பார்வையை உணர்ந்து,
” உதட்டை பிதுக்கியவாறு ஒன்னும் இல்லையே!”.
” நடிக்காதடா! நீ கண்ணை உருட்டி உருட்டி பார்க்கும்போதே தெரியுது! போ அவ கிச்சன்ல தான் இருக்கா”
” ஓகே பிரதர்!” என்று தோலை குலுக்கி விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தான் .
அங்கு ,வித்யா மாமியாருடன் சேர்ந்து இரவு உணவு தயாரித்துக் கொண்டிருக்க,
“ஹலோ மிஸ்ஸஸ் வேலு! “என்றான் குறும்பாக..
அவள் முறைப்புடன் திரும்ப.
“உங்க ஹஸ்பண்ட் , அதாவது என்னுடைய பிரதர் உங்கள கூப்பிட்டாங்க!” என்றான் பல்லைக் காட்டியபடி ,
அவனது செய்கையில் வாய் பொத்தி சிரித்தான் குகன்.
“போ. உன் கொழுந்தனார் ஏதோ உனக்கு வாங்கிட்டு வந்து இருக்கான். அதுக்காக தான் உன் புருஷன் கூப்பிடுறான் என்று பிட்டு வேற போடுறான், எனக்கு தெரியாதா உங்களை பத்தி” என்று விட்டு தனம் சமையலில் இறங்க,
” உனக்கு இருக்க அறிவு வேற யாருக்குமே இருக்காது தனம்! உன்னை அடிச்சுக்க இந்த ஜில்லாவில் ஆளே கிடையாது!ஆன,அப்போ அப்போ இந்த மூஞ்ச மட்டும் தூக்கி வச்சுக்காதா! பாக்க சகிக்கல! சிரிச்ச முகமா இரு! உன் புருஷன் மாதிரி மூஞ்ச எந்த நேரமும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி உர்ன்னு வச்சுட்டு இருக்காத! அப்ப தான் என் தனம் பார்க்க அழகு!” என்று அவரது இரு கன்னங்களையும் பிடித்து கில்லி கொஞ்ச,
“என்னடா ஓவர் கொஞ்சலா இருக்கு! ஆனாலும்,என் புருஷனை வம்பு இழுக்கலனா உனக்கு தூக்கம் வராதே!” ..
“ஆமா,இவங்க புருஷன் பேரழகன் பாரு! அவர அப்படியே வம்பு இழுத்துட்டாலும்!”..
“என்ன இருந்தாலும், எனக்கு என் புருஷன் பேரழகன் தான்டா!”
“தோ பாரு டா! வயசானாலும் எங்க தனதுக்கு மட்டும் அவங்க புருஷன் மேல இருக்க லவ் கொஞ்சம் கூட குறையாதே!” என்று கைத்தட்டி விசில் அடித்து விட்டு,அவரின் முன்பு ஒரு கவரை நீட்ட ,
“எனக்கு எதுக்குடா !, என்று அந்த கவரை பிரித்துப் பார்க்க, ஐஸ்கிரீம்! உங்க அப்பா திட்ட போறாரு!”.
” அதெல்லாம் உன் புருஷன் வருஷம் ஃபுல்லா திட்ட தான் செய்வாரு! திட்டாத நாள் இருக்கா என்ன?” என்று தன் தாயிடம் கவரை ஒப்படைத்து விட்டு , தனது அப்பாவின் ரூம் கதவை தட்டினான்..
” வாடா !”என்றார்.
அவன் உள்ளே நுழைந்து அவரிடமும் ஒன்றை நீட்ட,
“அவனுக்கு ஐஸ்கிரீம் தான் வாங்கி கொடுத்தியா ?ஜில்லுனு.. உடம்பு சரியில்லாமல் போகிட போகுது .. அப்புறம் அர்த்த ராத்திரில அவனை இழுத்துக்கிட்டு அலையணும்!”..
“உங்களுக்கு தான். நீங்க எதுக்கு எடுத்தாலும் ,இப்படி கத்திட்டு இருந்தீங்கன்னா சீக்கிரம் பிபி, சுகர் வந்துரும் புடிங்க!” என்று அவரது கையில் வடையையும் ஐஸ்கிரீமையும் திணித்தவன். “இரண்டு வடைக்கு மேல எடுத்து சாப்பிடாதீங்க! இந்த நேரத்தில் ஜீரணம் ஆகாம போய்டப்போது சரியா ?”என்று சொல்லி கொடுத்துவிட்டு வெளியில் வர,
வரவேற்பறையில் உட்கார்ந்து காலிஃப்ளவர் சில்லி தனது கணவனுக்கும் ஒன்று இரண்டு கொடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் வித்யா.
“அண்ணி எதுக்கு அவனுக்கெல்லாம் தரீங்க ?அவன் ஒன்லி போண்டா கேஸ், அவனுக்கு எல்லாம் மத்த ஐட்டம்ஸ் எல்லாம் பிடிக்காது, அவனுக்கு காலிஃப்ளவர் சில்லி ஓட அருமை தெரியுமா என்ன?” என்று முகத்தை கோணலாக வைத்து கொண்டு சொல்ல ,
“ஏன்டா உன் மூஞ்சி போற போக்க பாத்தா தின்ன தோணுமா?”..
“ஆமா இல்லனா மட்டும் சார் திங்காம விட்ருவாரு!”என்று சொல்லிவிட்டு, “குகன் குட்டி அப்பா வந்துட்டாங்க, அம்மா இருக்காங்க,அவங்க கூட விளையாடு தேவ் 2 ஹவர்ஸ் கழிச்சு வரேன். ஓகே டைம் என்னனு பாரு 7 ஆகுது. 9 ஓ கிளாக் தான் வருவேன். பாய் !பாய் !”என்றவன் வேகமாக தனது வண்டி சாவியை எடுத்துக் கொண்டு யாரையும் திரும்பியும் பாராமல் வேகமாக வெளியில் ஓடிவிட்டான்..
“அவ்வளவுதான் கிளம்பிட்டான்!” என்று சமையலறையில் இருந்து தனமும் ,அறையிலிருந்து எழிலும் ஒரு சேர வெளியில் வந்தார்கள்.
” விடுங்க மாமா! விடுங்க அத்தை! அவனே வாரத்துல ரெண்டு நாள் தானே வெளியே போறான்” என்றாள் வித்யா.
“அவனுக்கு சப்போர்ட்க்கு மட்டும் வந்துரு! எப்ப பாரு !எந்த நேரத்துல வெளிய போறான் பாரு!”என்றார் தனம்.
“அத்தை! நம்ம தேவாவுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.அது உங்களுக்கும் தெரியும் ,இவன் வயசுல இருக்க பசங்க எல்லாம் எப்படி ஊர் சுத்திட்டு இருக்காங்கன்னு நம்ப கண்ணு முன்னாடியே பார்க்க தான செய்றோம். நம்ம தேவா சனி ,ஞாயிறு இரண்டு நாள் லீவுல மட்டும்தான் வெளியே போறான், விடுங்க! அவன் சொன்னது போல ஒன்பது மணிக்கு எல்லாம் வீட்ல இருப்பான்!”.
” அவனையும் திருத்த மு
டியாது! அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வர உங்களையும் திருத்தவே முடியாது!” என்று சொல்லிக்கொண்டே தனம் சமையல் அறைக்கு செல்ல,
எழில் வரவேற்பறையில் வந்து உட்கார்ந்து தனது பேரனுடன் விளையாட ஆரம்பித்தார்.
சூப்பர் ஹீரோ
Very nice… Starting super…