காலையில் எழுந்த சைந்தவி தன்னை அணைத்து கொண்டு உறங்கும் வாசுவை பார்த்து சிரித்துவிட்டு அவன் நெற்றியில் முத்தமிட சென்றவள் நேற்று திருச்செந்தூர் வந்தது ஞாபாகம் வந்து அடித்து பிடித்து எழுந்து கண்ணை கசக்கி கொண்டு பார்த்தாள்…
அவனே தான்… அவளுக்கு தெரியும் அவன் கண்டுபிடித்து விடுவான் என…. ஆனால் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை அவள்….
அவள் அவனையே பார்த்து கொண்டு இருக்க “என்னை விட்டுட்டு போனவங்க எல்லாம் என்னை பார்க்க வேண்டாம்” என்று கூறி முகத்தை மறைத்து கொண்டான் வாசு…
அவள் அவனை பாவமாக பார்தது கொண்டே அவன் மீது ஏறி படுத்து கொண்டாள்… அவன் கை அவளை அணைக்கவில்லை… அவளே அவன் கையை எடுத்து அவள் மீது போட்டு கொண்டு கண்ணை மூடி இருந்த கையை எடுத்து அவன் கண்ணை பார்த்து கொண்டே “மாமா சாரி… தெரியாம கிறுக்குத்தனம் பண்ணிட்டேன்…. உன் அம்மு தானு நானு… திட்ட கூட செஞ்சிடு ஆனா பேசாம மட்டும் இருக்காத….” என்று கண் கலங்கி கூறினாள்…
அவள் கலங்கினால் வாசுவுக்கு பொறுக்குமா உடனே அவள் கண்ணை துடைத்து “அம்மு இதுதான் கடைசி இனிமே இப்படி கிறுக்குத்தனம் எல்லாம் எதுவும் பண்ண கூடாது…” என்று கொஞ்சம் கண்டிப்புடன் கூறினான்…
வாசு அதிகப்படியாக சைந்தவியிடம் காட்டும் கோவமே இந்த கண்டிப்பு மட்டும் தான்… எவ்வளவு கோவம் இருந்தாலும் அதை என்றுமே சைந்தவியிடம் காட்டியதே இல்லை… இது அவளுக்கும் தெரியும்…
ஆனால் இன்றும் கோவப்படாமல் அதே கண்டிப்புடன் விட்டது அவளுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது… அவன் அன்பில் அவளுக்கு இன்னும் அழுகை வருவது போல் தான் இருந்தது.. ஆனால் அழுதால் அவன் தாங்கமாட்டான் என நினைத்து அழுகையை அடக்கி கொண்டு அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்…
கொஞ்ச நேரம் அவளின் தலையை தடவி கொடுத்து கொண்டு இருந்தவன் “அம்மு நான் ஒன்னு கேட்பேன் உண்மையை மட்டும் தான் சொல்லனும்” என்று கூறினான்…
ஆனால் அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை…. அப்போது தான் அவள் முகத்தை பார்த்தான்… அவள் நன்றாக மீண்டும் உறங்கி இருந்தாள்…. அவள் தூங்குவதை பார்த்த வாசு “அம்மு சரியான குட்டி கும்பகரணி டி நீ…” என்று கூறி சிரித்துவிட்டு அவளை அணைத்து கொண்டு அவனும் சிறிது நேரம் கண் மூடினான்…
மற்றொரு அறையில் உறங்கிய திலீப் காலையில் எழுந்து முதலில் சக்ரவர்த்திக்கு தான் அழைத்தான்… நேற்று இரவே அவருக்கு செய்தி அனுப்பிவிட்டான் சைத்து இருக்கும் இடத்தை… எனவே காலையில் எழுந்ததும் அவருக்கு தான் அழைத்தான்….
“திலீப் பாப்பாவை பாத்திங்களா… பேசியாச்சா அவ கிட்ட…. என்ன சொன்னா” என கேள்வி கேட்டுக்கொண்டே போனார்….
“மாமா ரிலாக்ஸ் நானே என்ன ஆச்சுனு சொல்றேன்….” என்று கூறி நடந்த அனைத்தையும் கூறினான்… அதன் பின் “இதுக்குமேல என்ன ஆகும்னு உங்க அருமை மகன் வந்தா தான் தெரியும்… சரி ஓகே நான் போன் வைக்குறேன்… நீங்க டென்ஷன் ஆகாதீங்க… முக்கியமா அத்தைய டென்ஷன் ஆகாம ரிலாக்ஸா இருக்க சொல்லுங்க… நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன்” என்று கூறி இவனும் மீண்டும் உறங்கிவிட்டான்…
அங்கு சக்ரவர்த்தி இளவரசியிடம் “இளா பாப்பவை வாசு பாத்துட்டான்… இப்பயாச்சும் கொஞ்ச நேரம் தூங்கு… நான் காலேஜ் போறேன்… இல்லனா உன் அருமை புள்ள அதுக்கு ஒரு ஆட்டம் ஆடுவான்… நான் கீழே தங்கச்சி கிட்ட சொல்லிட்டு போறேன்… நீ கொஞ்ச நேரம் தூங்கு” என்று கூறி இளவரசியை தூங்க வைத்துவிட்டு கோகிலாவிடமும் வரதராஜனிடமும் கூறிவிட்டு அவர்களின் கல்லூரிக்கு சென்றுவிட்டார்..
வரதராஜனும் அவரின் அலுவலகத்திற்கு சென்று விட கோகிலாவும் அறைக்கு சென்று இளவரசியை பார்த்துவிட்டு தானும் காலை உணவை முடித்துவிட்டு தன் மகளுக்கு அழைத்து நடத்தை கூறினார்…
அவரின் மகளோ “அம்மா சைத்து கிட்ட பேசுனீங்களா என்ன சொன்னா… அவ ஓகே தானு…” என்று கேட்டாள்…
“அடியே நான் என்ன கதையா சொன்னேன்… நாங்க இன்னும் பேசல… திலீப் தான் போன் பண்ணி சொன்னான்னு சொன்னேன்ல திரும்பியும் சைத்து கிட்ட பேசுனியானு கேட்குற… நான் பாப்பா கிட்ட பேசிட்டு சொல்றேன்… நீ போய் பிள்ளைங்கள கவனி…” என்று கூறி வைத்துவிட்டார்..
வரதராஜன் கோகிலா தம்பத்திக்கு ஒரே மகள் தான்… அவள் வாசுவை விட பெரியவள்.. பெயர் காதம்பரி… திருமணமாகி சென்னையில் இருக்கிறாள்… அவளின் கணவன் கவின் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறான்… அவனுக்கு பெற்றோர்கள் என யாருமில்லை…
அவனை திருச்சியிலேயே தங்க சொல்லி வரதராஜன் கேட்டும் சிறிது காலம் சென்னையில் வேலை செய்துவிட்டு திருச்சி வருகிறேன் கூறிவிட்டான் கவின்….
கவின் காதம்பரிக்கு இரு குழந்தைகள்… முதலாமவன் கார்த்திக் இரண்டாமவன் க்ரித்திக்…
இளவரசி இரண்டு மணி நேரம் உறங்கியவர் குளித்துவிட்டு கீழே இறங்கி வந்தார்… அவரை பார்த்த கோகிலா “இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம் தானு… கண்டிப்பா நீ தூங்கி இருக்க மாட்ட அதுக்குள்ள ஏன் வந்த அரசி” என்று உரிமையாக கடிந்து கொண்டார்….
“இல்ல அண்ணி எனக்கு பாப்பாவை பாக்குற வர இப்படி தான் இருப்பேன்… அந்த பொண்ணு என்ன சொல்லி இருந்தாலும் என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல நம்ம மேல நம்பிக்கை இல்லாம தானு போயிட்டா… அது மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு அண்ணி…” என்று சைத்துவின் மீது கொஞ்சம் வருத்தத்துடன் கூறினார் இளவரசி…
“சரி விடு அரசி அந்த பொண்ணு என்ன பேசி பாப்பா மனசை கஷ்டப்படுத்தி இருந்ததோ நாம பாப்பாவை கைக்குள்ளயே வெச்சிட்டோம்… அவங்க வீட்டுலயும் பெரிய பொண்ணை பாத்து சின்ன பொண்ணை விட்டுட்டாங்க… சின்ன வயசுல இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கா பாப்பா… பெரிய பொண்ணு ஆகியும் பயந்துட்டே தானு இருந்தா… நாம பொத்தி பொத்தி பாத்துகிட்டோம்… ஆனா அதை எல்லாம் மீறி பாப்பாவோட அக்கா என்ன பண்ணிட்டா… பாப்பா எவ்வளவு வலியில துடிச்சா… விடு அரசி பாப்பாவை கொஞ்சம் தைரியமா பழக விடணும்… கண்டிப்பா கராத்தே கிளாஸ் அனுப்பனும்…” என்று கூறினார்…
கோகிலாவுடன் பேசியதும் கொஞ்சம் நார்மலான இளவரசி “அப்படியே உங்க மருமகன் விட்டுட்டு தான் வேற வேலை பாப்பான்… இனிமே பாப்பாவை அவன்கிட்ட இருந்து நகரவே விடமாட்டான்… நீங்க வேணா பாருங்க…. பாப்பா இங்க வந்த அடுத்த நாள் காலேஜ் பொறுப்பை குடுத்துட்டு இவன் வேற வேலை பாக்க போறான்…” என்று தன் மகனை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு கூறினார்….
அங்கு வாசுவும் இது தான் யோசித்து கொண்டு இருந்தான்… சைத்துவிடம் கேட்டாள் கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமாட்டாள்.. எனவே அவளிடம் கூறாமல் செய்ய வேண்டும் என்று நினைத்தவன் தன் மேல் சிறு குழந்தை போல் தூங்கி கொண்டு இருக்கும் தன்னவளை கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்..
நேரம் கடந்து இருக்க சைத்து பசி தாங்கமாட்டாள் என நினைத்து அவளை எழுப்பினான்… மெதுவாக கண்ணை திறந்தவள் அவனை கெஞ்சலாக பார்த்து விட்டு மீண்டும் தூங்க போனாள்… ஆனால் வாசு விடவில்லையே அவளை ஒற்றை கையால் தூக்கி சென்று குளியலறையில் விட்டவன் “அம்மு ஒழுங்கா குளிச்சிட்டு வா… நீ வரப்ப உனக்கு டிபன் ரெடியா இருக்கும்…” என்று கூறி வெளியேறிவிட்டான்…
அவன் சொன்னது போல் அவள் வெளியில் வரும்போது காலை உணவு தயாராக இருந்தது…. ஆனால் வாசுவை தான் காணவில்லை…
அவனோ திலிப்பை பாக்க சென்றான்…. அவன் இன்னும் நன்றாக தூங்கி கொண்டு இருக்க “டேய் திலீப் எந்திரி… என்ன உனக்கு இவ்வளவு நேரம் தூக்கம்… எந்திரி டா” என்று எழுப்பிவிட்டான்…
“ஐயா ராசா எந்திரிச்சிட்டேன்… போதுமா… இவ்வளவு நேரம் சார் என்ன பண்ணாரு இதை தானு பண்ணாரு நாங்க மட்டும் தூங்க கூடாதுனு சொன்ன எப்படி” என்று கூறிக்கொண்டே குளியலறைக்கு சென்று கதவை மூடிவிட்டான்…
அங்கே நின்று சொன்னால் அவனிடம் யார் அடி வாங்குவது… அது தான் சொன்னவுடன் உள்ளே ஓடிவிட்டான்…
வாசு இரு பக்கமும் தலையை ஆட்டிவிட்டு தங்கள் அறைக்கு சென்றான்… அங்கு சைத்து உண்டு இருப்பாள் என நினைத்து சென்றவன் அவள் உண்ணாமல் இருப்பதை பார்த்து தானே சென்று அவளுக்கு ஊட்டிவிட்டான்…
அவளுக்கு அவனின் பாசத்தை நினைத்து கண்கள் கலங்கியது… அவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவளின் அம்மா அவளுக்கு உணவை ஊட்டியது இல்லை… ஏன் அவளுக்கு யாருமே ஊட்டியது இல்லை அவளின் தந்தையை தவிர்த்து….
ஆனால் தற்போது வீட்டில் இருந்தால் வாசு தான் அவளுக்கு ஊட்டி விடுவான்… அவன் இல்லாத போது இளவரசி ஊட்டி விடுவார்… ஒவ்வொரு நாள் சக்ரவர்த்தி கூட அவளுக்கு ஊட்டி விடுவார்.. தற்போது கண் கலங்கினால் வாசு தாங்க மாட்டான் என நினைத்து கண்ணீரை அடக்கி கொண்டு அவனிடம் ஆசை ஆசையாய் உணவை வாங்கி கொண்டாள்.. நடு நடுவே அவளும் அவனுக்கு ஊட்டி விட்டாள்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
+1
2