Loading

புயல் 3

“அக்கா! வா போகலாம்” எடுத்த எடுப்பிலேயே அவள் கைப்பிடித்து ஆத்வித் இழுக்க “அட கோச்சுக்காதீங்க மச்சான்” என அவன் கையைத் தடுத்தான் ருத்ரன்.

“ஆத்வி போகலாம் டா” இவள் அவன் பேச்சினையே கருத்தில் எடுக்காமல் விலகப் பார்க்க “இருங்க பொண்டாட்டி பேசுவோம். பஞ்சாயத்து பண்ணலாம்னுதானே நானும் சொன்னேன்” என்றான் ருத்ரன்.

தவறையும் செய்துவிட்டு தெனாவெட்டாக அவன் நிற்கும் தோற்றத்தில் ஆத்விக் பல்லைக் கடித்தான்.

“உன்கிட்ட பஞ்சாயத்து பண்ண எதுவும் இல்லை. நான் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டேன். அது மட்டும் உனக்கு மறந்துடுதா என்ன?” உமா சீறிட,

“நீ மட்டும் தனியாய் இருக்குறதா இருந்தால் வேண்டாம்னு சொல்லலாம் தங்கம். இப்போ அப்படிச் சொல்ல முடியாதா.. மாமன் இரட்டை உசுரா மாறி உனக்குள்ளே இருக்கேன்ல அப்பறம் எப்படி நீ எப்படியோ போன்னு விட முடியும்” என்றான்.

“வாரிசுதான் பிரச்சனைன்னா அதை இல்லாமலே பண்ணிடலாமே” ஆத்விக் வார்த்தையில் சுர்ரென்று கோபம் எகிற, அந்த கோபம் அவன் கன்னத்தில் தனது வேலையைக் காட்டியிருந்தது. அதில் நிலை தடுமாறி ஆத்விக் படியில் விழப் பார்க்க, உமா பதறித் தாங்கிப் பிடிக்கும் முன்னமே ருத்ரனே பிடித்து நிலை நிறுத்தினான். ருத்ரனின் கண்கள் சிவந்திருந்தது. அந்த கணம் ஆத்விக் ஆடிப் போய்விட்டான்.

அதீத பதட்டம் உமாவிற்குள்.. நொடியில் நிகழ்ந்ததில் அவள் கால்கள் நடுங்க கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது‌.

ஆத்விக்கைத் தாங்கி இருந்தவன் உமாவினைப் பார்த்து “ஏய் உமா.. என்னடி செய்யுது?” என்றவாறே அவனை விட்டு இவளிடம் வந்து நின்றான்.

அவளைத் தாங்கிக் கொண்டு அறைக்குள் செல்ல வழியை மறித்து நின்றான் ஆத்விக்.

“மொத அவ கண்ணு முழிக்கட்டும் இல்லைன்னு வை மனுஷனாவே இருக்க மாட்டேன். தேவையில்லாமல் பிரச்சனை பண்ணாத ஆத்விக். தள்ளிப் போடா..” உறுமிட அவனும் விலகி நின்றான்.

அதற்கு அவசியமே இல்லாமல் அவளே விரைவில் கண்விழித்துவிட்டாள். அவன் தோளில் இருந்து தலையை எடுத்தவள்

தன் கண் முன்னேயே தம்பியை இப்படி அடித்ததும் “ஹவ் டேர் யூ..” என ஆரம்பிக்க, “அப்படின்னா?” எனக் கேட்டான் நிதானமாக..

“ஓஹ் காட்.. ஆத்வி வலிக்குதாடா” பதறிப்போய் அவனின் கன்னத்தினை தொடப் போக, வலியில் முகம் சுருக்கினான் அவன்.

“ஓஹ். இதுவே வலிக்குதுன்னா நீங்க இரண்டு பேரும் மாத்தி மாத்தி என் பட்டு லட்டுவை இல்லாமல் ஆக்கிடுறேன்னு சொல்லும் போது எனக்கு எப்படி இருக்கும். யோவ் மச்சான் என்னை விட எட்டுக்குத்துக்கு இளையவன் டா.  நீயெல்லாம் என் முன்னாடி பேசுற அளவுக்கு ஆகிடுச்சு பார்த்தியா என் நிலைமை. எல்லாம் உன்னால தான் டி” உமாவை காட்டத்துடன் ஏறிட்டவனை அவளும் சளைக்காமல் ஏறிட்டாள்.

“கடைசி வரைக்கும் நீ பண்ணது தப்புன்னே ஒத்துக்க மாட்டுற பார்த்தியா அங்க இருக்கடா நீ. நீ ஒழுங்கா இருந்தால் இந்த நிலைமை உனக்கெதுக்கு வரப் போகுது. நீ ஊர் மேஞ்சுட்டு வந்தாலும் பரவாயில்லைன்னு நான் உன்கூட குப்பை கொட்டணுமா என்ன? அந்த அளவுக்கா நான் இருக்கேன்.. என் தம்பியைவே அடிச்சுட்டலே. உன்னை பார்க்குற இடத்துல பார்த்துக்கிறேன்.. வாடா போகலாம்..” தம்பியை இழுத்தபடி நகர,

“இன்னும் பஞ்சாயத்து முடியல தங்கம். இவன் பொறக்கப் போற நம்ம பட்டு லட்டு வுக்கு தாய்மாமனா இங்க வந்து போகட்டும். நான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன். பட் உன்னை கையோட கூட்டிட்டுப் போறது எல்லாம் நடக்காது. என்னை மீறி அதை அவனாலும் செய்யவும் முடியாது. என்னோட ஒத்த அடிக்குத் தாங்குவானாடி உன் தம்பி. இவன்லாம் ஒரு ஆளா.. அவனைப் போகச் சொல்லிட்டு நீ உள்ள வா.. சாப்பிடலாம்.. மயங்கி மயங்கி வேற விழுற. இன்னும் சரியாவே சாப்பிடலையே நீ. அதான் இப்படி இருக்கு. இப்படிச் சாப்பிட்டால் பட்டு லட்டு எப்படி புஸ்டிக்கா வளருவாங்க” அவன் பேச்சில் ஆத்விக் முறைத்தான். அவனின் அடி வாயை திறக்க கூட முடியாத அளவிற்கு வலியைக் கொடுத்தது.

“என்ன மச்சான் முறைப்பு.. அப்பா ஆகப்போறேன்னு முழுசாவாவது சந்தோஷப்பட விடுறீங்களா. அதை அழிக்கணும்னே கங்கணம் கட்டிட்டு வந்துடுறீங்க”

“ஒட்டுமொத்தமா என் அக்காவோட சந்தோஷத்தை அழிச்சவனே நீதான்டா..” வலியையும் மீறி ஆங்காரத்துடன் வெளிவந்தது ஆத்விக் குரல்.

“மரியாதை ஆத்விக்”

“அது ஒன்னுதான் உனக்குக் கேடா.. “

கண்களை மூடிக் கட்டுப்படுத்தியவன் “பட்டு லட்டு உன் மாமனுக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வருது.. அதுசரி உன் அம்மாவோட ஒத்தை உடன்பிறப்பு. அவ புத்தி அவனுக்கும் இருக்கும் தானே. என்ன உன் மாமனுக்கு ஒரு கன்னத்துல வாங்குனது போதது போல. மறுபடியும் கன்னம் வீங்குற அளவுக்கு வாங்கிட்டுத்தான் போவான்னு நினைக்கிறேன்.. அப்பா ரொம்ப நல்ல பையனா சொல்லும் போதே அவனை இடத்தைக் காலி பண்ணிடச் சொல்லுங்க. பிறகு நடக்குற எதுக்கும் நான் பொறுப்பில்லை” அவளின் வயிற்றைப் பார்த்து அவன் சொல்ல

“என் அக்கா பசங்களுக்கு நான் தாய்மாமன்தான். ஆனால் அப்பாங்கிற உரிமை உனக்குக் கிடையாது. அவளே உன்னை வேண்டாம்னு தூங்கிப் போட்டுட்டா. அது உனக்கு மறந்துடுச்சா. இத்தனை நாளும் இல்லாமல் இன்னைக்கு வந்து அப்பா புருஷன்னு உரிமை கொண்டாடுறயா.. நீ சொன்னது சரிதான் உன்னை விட வயசுல சின்னவன்தான். ஆனால் உன்னை மாதிரி தறி கெட்டு சுத்துற ஆள் இல்லை. நேரத்துக்குத் தகுந்த மாதிரி பொண்ணுங்களை மாத்துற உன் வீட்டுல என் அக்கா இப்போ இருக்குறதை நினைச்சாலே எனக்குப் பதறது. நீ வா அக்கா. குழந்தைகளை எப்படி வளர்க்குறதுன்னு எங்களுக்குத் தெரியும். நீ பார்த்துக்கிறதுக்கான தகுதியை இழந்துட்ட” அவள் கரத்தினைப் பற்றி இழுக்க அவளது மறுகரம் ருத்ரனின் கரத்தில் சிக்கிக் கொண்டது.

“ஆத்விக்! ரொம்பவே பொறுமையாய் பேசிட்டு இருக்கேன். எவ்வளவு தூரம் அது தாக்குப் பிடிக்கும்னு தெரியல. தேவையில்லாமல் உள்ள வந்து உன் முகரையை உடைச்சுட்டு போயிடாத. அக்கா அக்கான்னு பேசுற நீ தான் அவகூட கொஞ்ச நாளா பேசுறதையே விட்டுருந்த ஞாபகம் இருக்கட்டும்”

“பேசுறதை விட்டுருந்தேன் தான். அதுக்காக அவளை அப்படியே விட்டுடுவேன்னு அர்த்தமா. அவ பண்ண வேலை எனக்குப் பிடிக்கல. எந்தவிதத்துலயும் தகுதியே இல்லாத உன்னை லவ் பண்ணிட்டு வந்து நின்னாளே அப்போ அவளை வெட்டிப் போடணும்னுதான் கோபம் வந்தது. இவன் உனக்கு வேண்டாம்னு நான் சொன்னதை அவ எங்க கேட்டாள்? அந்த கோபத்துல தான் பேசாமல் இருந்தேன். இப்போ அவளுக்கே அது புரிஞ்சுடுச்சு. நான் அப்பவே சொன்னேன் கேட்டயான்னு இந்த சமயத்துல சொல்லிக் காட்டுற  நார்மல் பெர்ஷன் நானில்லை. அவ என்னோட அக்கா. அவளுக்கு ஒன்னுன்னா நான் முன்னாடி வந்து நிப்பேன். ஒரு தம்பியா அவளுக்கு என்ன தேவையோ அதை நான் செய்வேன். இவ்வளவு ஏன் அவளே அவளோட வாழ்க்கையைப் பார்த்துப்பா. அவளுக்கு யாரோட தயவும் தேவையில்லை. எல்லாத்தையும் மறந்து அவ தேறும் போதுதான் இந்த குழந்தை விஷயம் அவளை சறுக்கிடுச்சு. அதுக்காக அதை நீ அட்வான்டேஜா எடுத்துக்காத. வாங்குன அடியை திருப்பித் தர எனக்கும் ஒரு செகண்ட் ஆகாது. இருந்தும் அமைதியாய் நிக்குறது இப்போ எனக்கு அவதான் முக்கியம்ங்கிறதால. இன்னும் பிறக்காத அந்த இரண்டு உசுருக்காக நீ இவ்வளவு யோசிக்கிறயே.. உன்கிட்ட இருந்த இந்த பெரிய உசுரு அரை உசுரா எங்க வீட்டுக்கு வந்து நின்னாளே அப்போ எங்க போன? உன் இரத்தம்ன உடனே உனக்கு துடிக்குதா! அப்படித்தானே எனக்கும் இருக்கும்.. இவ என்னோட இரத்தம். இப்போதைக்கு தாய்மாமனை விட தம்பிங்கிற பொறுப்புத்தான் எனக்கு முக்கியம்” அவன் பேச்சில் முதிர்ச்சி இருந்தது. கல்யாண வாழ்க்கையினால் அடிபட்டு வந்த தமக்கையை தாங்கும் தகப்பனாய் ருத்ரன் கண்ணுக்கு ஆத்விக் தெரிந்தான். ருத்ரன் ஆத்விக்கை மெச்சுதலாகப் பார்த்தான்.

தம்பி என்ற உறவின் அர்த்தம் அவனுக்கு சிலிர்ப்பினைத் தந்தது. தம்பின்னா இப்படித்தான் இருக்கணும் நினைத்தவன் “எல்லாம் சரிதான். நான் எதையும் மறுக்கல. ஆனால் என் பக்கத்து விளக்கத்தையும் கேட்கணும்னு உங்க யாருக்குமே தோணலையே” என்னும் போதே நக்கல் சிரிப்பு உமாவிடம்.

“விளக்கம் கேட்கணுமா? இல்லை விளக்குப் பிடிச்சுப் பார்க்கணுமா?”

“நிறுத்து உமா.. இப்படியெல்லாம் பேசுறதுக்கு எங்க இருந்துடி கத்துக்கிட்ட. நீ இப்படி இருந்தது இல்லையே” அவனுக்கு வேதனையாக இருந்தது.

“இல்லைதான் என்னைத்தான் மாத்திட்டீங்களே எல்லாரும் சேர்ந்து. இங்க பாரு. நீ உனக்குப் பிடிச்ச பொண்ணுங்க எத்தனை பேர் கூட வேணும்னாலும் இருந்துக்கோ. என்னை விட்டுடு. ஆத்வி ரொம்ப பசிக்குதுடா. என்னை இங்க இருந்துக் கூட்டிட்டுப் போடா” குழந்தைகளை சுமப்பவளே குழந்தையாய் தம்பியிடம் கேட்க

ரௌத்திரத்துடன் ஏறிட்டான் ருத்ரனை.

“எங்க அக்காவை இப்படிக் கெஞ்ச வச்சுட்டேல. உன்னை பார்க்குற இடத்துல பார்த்துக்கிறேன்டா” அவள் தோள் தொட்டு நகர்த்தப் போக,

“அவளை விட்டுட்டு நீ கிளம்பு ஆத்விக். உங்க அக்காவையும் பசங்களையும் நான் பார்த்துக்கிறேன்” அவன் குரலினை அலட்சியம் செய்து ஆத்விக்கும் உமாவும் வாசலை நோக்கி நடக்க,

“ஒரு நிமிஷம்” என்றான்.

ஆத்விக் மட்டும் திரும்பிப் பார்த்தான். “எனக்கு என்னோட பட்டு லட்டு முக்கியம். அவளுக்குத் தான் நான் தேவையில்லையே. அவளே சொல்லிட்டாளே. அதனால அவளும் எனக்கு வேண்டாம். ஆனால் குழந்தை பொறக்குற வரைக்கும் நான் அவளை இங்க இருந்து அனுப்ப மாட்டேன். மாறி மாறி நீங்க இரண்டு பேரும் பேசுறது வேற சரியில்லை. கோபத்தைக் காட்ட பட்டு லட்டுவை என்ன வேணும்னாலும் நீங்க பண்ணுவீங்க. இந்த குழந்தைங்கதான் இனி வரும் காலத்துல எனக்குன்னு இருக்குற ஆறுதல். அதனால உன் அக்கா இங்க தான் இருப்பா.. உன் அக்கா கஷ்டப்படுவாளேன்னு நீ கவலைப்படாத. வேணும்னா நீயும் இங்கேயே தங்கிக்கோ. எனக்குப் பிரச்சனை இல்லை. குழந்தையைப் பெத்துக் கொடுத்துட்டு அவள் கிளம்பிடட்டும். நான் அடுத்து தடுக்கப் போறதே இல்லை. இதுக்கு மேல பேச எதுவும். இதுதான் என்னோட முடிவு. அவ இதுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆகணும்.. ச்சே ச்சே இது ரொம்ப பழைய டையலாக்கா இருக்குல ஆத்விக்.. ருத்ரனுக்கு இதெல்லாம் செட்டாகுமா? நாம வழியே வேற. உன் அக்காவுக்கு என்னைப் பத்தி நல்லாவேத் தெரியும்‌ அப்படியிருந்தும் வீம்பு பிடிக்குறான்னா… அப்போ எனக்கும் வேற வழியே இல்லை. நான் நினைச்சதை அடைய எந்த எல்லைக்கும் போவேன். அது அவளை கல்யாணம் பண்ணுனதுலேயே உங்க எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும். அவ என்கூடத்தான் இருக்கணும்.  இருப்பா.. இருப்பதானே உமா மகேஷ்வரி.. இருப்படி” அவனே அவளுக்கான முடிவையும் எடுத்துவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான். வாகாய் சாய்ந்தவன் “அம்மா” என சத்தமிட,

அதுவரை நடந்ததை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவர் “ருத்ரா” என ஓடி வந்தார்.

“அவ பசிக்குதுன்னு சொன்னது கேட்டுச்சா இல்லையா.. சாப்பாடு எடுத்துட்டு வாங்க” எனச் சொன்னான்.

“நானா..”

“என்ன நானா.. நீங்கதான். எடுத்துட்டு வாங்க” அவரிடம் எகிறி விட்டு ஆத்விக் புறம் திரும்பியவன் தன் தாடையை தடவிக் கொண்டே “நீ கிளம்பு” என்றான். அவன் பார்வையை அவளால் சகஜமாக புறந்தள்ள முடியவில்லை.

“அந்தாளு மிரட்டுறதுக்கு எல்லாம் பயப்…” அவன் வாயை அழுத்தி மூடியவள் “நீ வீட்டுக்குப் போ ஆத்வி” என்றிருந்தாள். அதில் நொடியில் முகம் மலர்ந்துவிட தங்கம் தங்கம் செல்லத் தங்கம் தங்கம்.. அந்த பாடலை விசிலடித்துக் கொண்டே ஆத்விக்கை மார்க்கமாக பார்த்து வைத்தான் மாமன்காரன்..

புயல் தாக்கும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
26
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Dei visham bayangaramana aala irukiye da😍 emma uma ma Avan solratha than kelen.. athu sari ketuta than end card potruvangale😂 dei aathvi Neeyum nalla perform pandra man… Cha pasatha ippadi poliyirangale.. athu enna da akkaalum thambiyuma sernthu pullaiya kalaikurim solringa.. 😬 ippadi pesuna ruthran treatment than saripattu varum. Super episode writer ji😍 sekiram adutha episode venum😂