திவ்யா தன் வீட்டில் வண்டியை நிறுத்தியவள் எதுவும் பேசாமல் தனக்கு பின்னால் அமர்ந்து இருந்தவளை முறைத்து பார்த்தாள்… அவள் இருக்கும் கோலத்தை பார்த்து பயங்கரமாக முறைத்தவள் “சைத்து என்ன கோலம் இது….” என்று கோவமாக கேட்டாள்….
“அது அது…. யாரும் என்னை பாக்க கூடாதுனு தான்… என்னை யாரும் பரிதாபமா அருவருப்பா பாக்க கூடாது… அது தான் வண்டில ஏறுனதும் மாஸ்க் போட்டு ஷால் வெச்சு மறைச்சுட்டேன்” என்று திக்கி திக்கி கூறி முடித்தாள்…. அதுவும் அவள் அழுது கொண்டே கூறியதால் ஒரு சில வார்த்தைகள் அவளுக்கு சரியாக பேச வரவில்லை…. வேறு யாரவது இருந்தால் சைந்தவி இப்படி பேசியதற்கு சரியாக பேச தெரியாதா என திட்டி இருப்பர்…. சைந்தவியை பற்றி நன்றாக அறிந்த திவ்யா அவள் பேசுவதை புரிந்து கொண்டு அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தாள்….
“லூசு சைத்து… நீ ஏன் இப்படி இருக்க… உன்னை என்ன சொல்றதுனே தெரியல… எதுவும் பேசாத.. ஒழுங்கா சாப்பிட்டு தூங்கு எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்…. நான் போய் பால் எடுத்துட்டு வரேன்… நீ பிரெஷாகிட்டு வந்து சாப்பிடு” என கூறி சமையலறைக்கு சென்றாள்….
சைத்து உள்ளே சென்றவள் ஷாலை எடுத்து பெட்டில் போட்டவள் மாஸ்க்கை கழட்டினாள்… கழட்டியவள் தன் முகத்தை கண்ணாடி வழியே பார்த்தாள்… ஒரு பக்க முகம் கொஞ்சம் சிதைந்து இருந்தது… தன் முகத்தையே பார்த்தவள் என்ன நினைத்தாளோ குளியலறை சென்று குளித்துவிட்டு திவ்யாவின் உடையையே போட்டு கொண்டு வெளியே வந்தாள்…
அவளுக்கு திவ்யா உணவை எடுத்து வைத்து இருக்க அமைதியாக உண்டவள் திவ்யா குடுத்த பாலை குடித்துவிட்டு கொஞ்ச நேரம் அமர்ந்து இருந்தாள்… தூக்கம் கண்களை சொக்கியது அவளுக்கு… எனவே திவ்யாவிடம் கூறிவிட்டு உறங்க சென்றுவிட்டாள் சைந்தவி….
சைந்தவி நன்றாக உறங்கியதை உணர்ந்த திவ்யா முதலில் அழைத்தது வாசுவிற்கு தான்… முதலில் கவனிக்காதவன் அடுத்த தடவை கவனித்து போனை எடுத்தான்… எப்போதும் அதிகமாக திவ்யா வாசுவிற்கு அழைக்க மாட்டாள்… இன்று இந்த இரவு நேரத்தில் அழைப்பதை பார்த்து ஜீப்பை நிறுத்தி போனை ஆன் செய்தான்…
“சொல்லு திவி ம்மா எதோ பிரச்சனையா…” என்று அக்கறையாக கேட்டான்…. ஆனால் குரல் இறுக்கமாக தான் வந்தது…
அந்த குரல் அவளுக்கு பழக்கம் தான்… எனவே அவனிடம் “அண்ணா சைத்து இங்க திருச்செந்தூர் வந்து இருக்கா… வந்து அரை மணிநேரம் ஆகுது… சாப்பிட வெச்சு பால் குடுத்து தூங்க வெச்சிட்டேன்… பால்ல ஸ்லீப்பிங் டேப்லெட் குடுத்து தான் தூங்க வெச்சு இருக்கேன்… என்ன பிரச்சனை தெரியல… நானும் எதுவும் கேட்கல…. முக்கியமா உங்ககிட்ட சொல்ல கூடாதுனு சொல்லி இருக்கா… ஆனா நான் உங்ககிட்ட சொல்லிட்டேன்… அவ திருச்சில இருந்து இங்க ஸ்ட்ரயிட்(straight) பஸ்ல வரல பஸ் மாத்தி மாத்தி வந்து இருக்கா… அவளுக்கு எப்படி இந்த தைரியம் வந்தது தெரியல ஊரு ஊரா சுத்தி வந்து இருக்கா…. நீங்க பயப்படாம பொறுமையா வாங்க…” என்று கூறினாள்….
“சரி திவிம்மா நான் காலைல விடியுற அப்ப அங்க இருப்பேன்… கொஞ்சம் அவளை பாத்துக்கோ டா… நீ பாத்துப்பனு தெரியும்… ஆனாலும் பத்திரமா பாத்துக்கோ டா…” என்று கூறி வைத்துவிட்டான்…
திவ்யாவிற்கு தெரியும் இரவே இங்கு வாசு வந்து விடுவான் என… எனவே தூங்காமல் தான் அமர்ந்து இருந்தாள்….
போனை வைத்த வாசுவின் முகம் கொஞ்சம் கடுமையாக இருந்தது… “அம்மு தனியா திருச்செந்தூர் போற அளவுக்கு பெரிய ஆள் ஆகிட்டியா…. நாளைக்கு அங்க வரேன்… என்ன பண்றனு பாக்குறேன்…” மென்மையும் இறுக்கமும் கலந்து கூறினான்…
அவன் பேசியதை கேட்ட திலீப் “ஜிவி(GV) தங்கச்சி திருச்செந்தூர்ல இருக்காளா….யார் பேசுனா இப்போ…” என்று கேட்டான்…
வாசுவோ “அம்முவோட ப்ரெண்ட்… என் அம்மு எனக்கு கிடைக்க முக்கிய காரணத்துல இவளும் ஒன்னு தான்… திருச்செந்தூர்ல டீச்சரா இருக்கா… ரொம்ப நல்ல பொண்ணு…. இப்போ இந்த மேடம் அங்க தான் இருக்கா… எவ்வளவு தைரியம் பாரேன்… இங்க வீட்டுல இருந்து பக்கத்துல இருக்க நம்ம காலேஜுக்கு வரமாட்டா… ஆனா இன்னிக்கு திருச்செந்தூர் வரைக்கும் போய் இருக்கா… என்னை விட்டு போறதுக்கு அவ்வளவு அவசரம் போல… இது வரைக்கும் செய்யாத வேலை எல்லாம் செய்யுறாங்க…” என்று கேலியாக கூறி முடித்தான்…
“ஐயா ராசா ரொம்ப தைரியம் தான் உன் அம்முவுக்கு… அது தான் திருச்செந்தூர்ல இருக்கானு தெரிஞ்சு போச்சுல கொஞ்சம் நேரம் போய் பின்னாடி ரெஸ்ட் எடு…. நான் டிரைவ் பண்றேன்… இவ்வளவு நேரம் உசுரை கைல பிடிச்சிட்டு இருந்தேன்… இப்போ தான் இருக்குற இடம் தெரிஞ்சு போச்சுல… நீ தூங்கு… நான் ஓட்டுறேன்…. இனிமே மெதுவா போனா போதும்… இதுக்குமேல என் உசுரை பணயம் வைக்க முடியாது….” என்று கேலியாக கூறியவனை முறைத்து கொண்டே இறங்கியவன் பின்பக்கம் சென்று உறங்க ஆரம்பித்துவிட்டான்…
அவன் திட்டாமல் உறங்கியவனை பார்த்து பெருமூச்சு விட்டவன் காரை திருச்செந்தூர் நோக்கி விட்டான்….
இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் திருச்சியில் இருந்து கிளம்பினர்…. இரவு உணவு முடித்துவிட்டு திலீப் ஜீப்பை ஓட்ட வாசு பின்பக்கம் உறங்கியவாரு வந்தான்….
அவன் உறங்கிவிட்டாலும் அவனின் நினைவு எல்லாம் அவனின் அம்முவின் மேல் தான் இருந்தது….
அவளின் அந்த கண்கள் எப்போதும் அவனை மயங்க வைக்கும்… அதுவும் அவனோடு இருக்கும் போது அவளின் காதல் பார்வை எப்போதும் அவனை பித்தம் கொள்ள வைக்கும்….
அரை மணி நேரம் உறங்கியவன் அதற்கு மேல அவனால் முடியாமல் தீலிப்பை மாற்றி அமர கூறிவிட்டு திருச்செந்தூருக்கு ஜீப்பை விரட்டினான்…
மூன்று மணி நேரத்தில் செல்ல கூடிய தூரத்தை ஒன்றரை மணி நேரத்தில் வந்து சேர்ந்து இருந்தான்….
திலீப் எல்லாம் அவனிடம் “நீ எல்லாம் மனுஷனே இல்லை தெரியுமா” என்று கூறிவிட்டான்… ஆனால் வாசு தான் அவனை கண்டுகொள்ளவில்லை….
திலீப்பால் புலம்ப மட்டுமே முடிந்தது….
“டேய் அர்த்த ராத்திரில எப்படிடா ஒரு பொண்ணு வீட்டுக்கு போறது… வீட்டுல யாரவது பெரியவங்க இருந்தா என்ன நினைப்பாங்க…. காலைல போலாம்… இப்போ பக்கத்துல இருக்க ஹோட்டல்ல தூங்கலாம்….” என்று கூறினான்…
அவன் அவ்வாறு கூறிக்கொண்டு இருக்கும் போதே திவ்யா கதவை திறந்து இருந்தாள்… வாசு தான் ஏற்கனவே அவளுக்கு செய்தி அனுப்பி இருந்தானே… தற்போதும் வந்ததும் செய்தி அனுப்பி இருக்க பார்த்துவிட்டு கதவை திறந்து இருந்தாள்…
திவ்யா வாசுவை பார்த்து”உள்ள வாங்க ண்ணா…” என்று கூறியவள் திலீப்பை பார்த்து “நீங்களும் வாங்க” என்று கூறி உள்ளே சென்றாள்…
இருவரும் உள்ளே செல்ல திவ்யா இருவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்…. வாசு தண்ணீர் குடித்தாலும் அவனின் பார்வை சைத்து இருக்கும் அறையை தான் தேடியது….
“அண்ணா சைத்து இந்த ரூம்ல இருக்கா…” என்று ஒரு அறையை காட்டினாள்.. அடுத்த நொடி அவன் அந்த அறையின் முன் நின்றான்…
உள்ளே சென்றவன் கண்டது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் சைந்தவியை தான்…. உறக்கத்தில் இருப்பவளை பூ போல் தூக்கி கொண்டவன் வெளியே வந்தான்…
திவ்யா இதை எதிர்பார்த்து தான் இருந்தாள்…. திலீப் தான் “டேய் தூங்குற பிள்ளையை ஏன்டா தூக்கிட்டு வர…” என்று கடிந்து கொண்டான்…
அதை கண்டுகொள்பவனா இவன்… அதை கவனிக்காமல் “நாளைக்கு மதியம் உன்னை வந்து பாக்குறேன் ம்மா… எழுந்தா வரமாட்டா… அதுனால இப்பயே கூட்டிட்டு போறேன்… டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரிம்மா… நீ கதவை லாக் பண்ணிட்டு தூங்கு…” என்று கூறிவுட்டு “டேய் திலீப் வந்து ஜீப் எடு… திருச்செந்தூர் அடிக்கடி வரதுனால இங்க ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு.. நான் ரூட் சொல்றேன்… நீ போ” என்று கூறி திவ்யாவிடம் இருந்து விடைபெற்றனர்..
கெஸ்ட் ஹவுஸில் திலீப் ஒரு அறைக்கு சென்று உறங்கி இருக்க சைந்தவியை குழந்தை போல் தூக்கி கொண்டு தங்கள் அறைக்கு சென்றான்….
அவளை படுக்க வைத்தவன் தானும் ரெபிரேஷ் ஆகி அவள் அருகில் படுத்தவன் அவளை பார்த்து “உனக்கு அவ்வளவு தைரியம் வந்துருச்சா அம்மு… நாளைக்கு உனக்கு இருக்கு… என்கிட்ட செமையா வாங்க போற நீ” என்று கூறிவிட்டு அவளை அணைத்து கொண்டு உறங்கிவிட்டான்…
அவளும் அவனின் வாசம் உணர்ந்து அவனை அணைத்து கொண்டு உறங்கிவிட்டாள்…