அத்தியாயம் – 9
இரண்டு வாரங்கள் வேகமாகக் கடந்தன.
அவர்களது களப்பயணத்தின் தகவல்கள் வெளியானது.
இடம்: மகாபலிபுரத்திற்கு அருகில் உள்ள “சாந்தி மறுவாழ்வு மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையம்”
நேரம்: இரண்டு நாட்கள், ஒரு இரவு.
தங்குமிடம்: கடற்கரை விடுதி அருகே
முக்கிய குறிப்பு: M.Sc. இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் கட்டாயம் வரவேண்டும்.
அமுதினிக்கு இந்த சுற்றுலா பற்றி யோசிக்கும் போதெல்லாம், பதட்டம் ஏற்பட்டது. இரண்டு நாட்கள் ஆரவுடைய முகத்தைப் பார்க்க வேண்டும்.
ஒரே பேருந்தில் பயணம், ஒரே மையத்தில், ஒரே விடுதியில் தங்குதல் என்று எல்லாமே அவளது நிம்மதியை கெடுத்தது.
எப்படி தன்னை தானே கையாள்வது? என்று அவளுக்கு கவலையாக இருந்தது.
“அமுது, நாம எல்லாரும் ஒரு கூட்டமா போறோம்… ஏற்கனவே 25 ஸ்டூடண்ட்ஸ் கன்பார்ம் பண்ணியிருக்காங்க… இத்தன பேர் இருக்கும் போது… அவர் உன்னை மட்டும் தனியா கவனிக்க மாட்டார்… நீ சும்மா மற்றவங்களோட இருந்துட்டு வந்துடு… விட்டு தள்ளு டி” என்று சுருதி அவளை ஆறுதல்படுத்தினாள்.
“ஆமா சுருதி… நீ சொல்றது தான் சரி…” அமுதினி பெருமூச்சு விட்டாள்.
“ஆனா… அவரை பார்க்கிறதே எனக்கு வலிக்குது. அவர் என்னை முட்டாள் மாதிரி நடத்துறார்… அது எனக்கு ஹர்ட் ஆகுது…”
சுருதி அவள் கையைப் பிடித்து, “அமுது, நீ ஒண்ணு புரிஞ்சிக்கணும். அவர் உன்னை திரும்ப திரும்ப ஹர்ட் பண்ணுறாரு… அவர் உன் ஃபீலிங்-ஐ ரெஸ்பெக்ட் பண்ணல… நீ எதுக்கு அவர் மேல இவ்வளவு யோசிக்கிறே?”
“ஏன்னா சுருதி… நான் அவரோட வலியை பார்த்துட்டேன்… அவர் காயப்பட்டு இருக்கார்… அவர் தன்னை தானே அடக்கிட்டு இருக்காரு. ‘நீங்க தனியில்ல’ன்னு – யாராவது அவருக்கு சொல்லணும்… ஆனா, சொன்னாலும் அவர் என்னை கேட்க மாட்டார்… அவர் யார் பேச்சையும் மதிக்க மாட்டார்…” என்று அமுதினி வருத்தமாக சொன்னாள்.
“அப்போ, நீ அவரை அவரோட முடிவுல விட்டுடு, எல்லாரையும் நீ சேவ் பண்ண முடியாது அமுது… அதுக்கு நீ ஆளும் கிடையாது…”
“ஆஸ் அ ஃப்யூச்சர் தெரபிஸ்ட்-அ, எனக்கு சட்டுன்னு விட்டுத் தள்ளிட மனசு வர மாட்டேங்குது சுருதி…”
“அமுது… நீ வருங்காலத்துல தெரபிஸ்ட் ஆனாலுமே, நீ உன் கிட்ட வர பேஷண்ட்டை மட்டும் தான் பார்ப்ப… நீயா வீதி வீதியா போய்ட்டு யாருக்கு என்ன ஆச்சுன்னு கேட்ட மாட்ட… ரைட்டா?”
“ம்ம்…”
“அவ்வளவுதான்… சிம்பல்… ஆரவ் சார்… தொந்தரவு செய்யாதே-ன்னு முடிவு சொன்ன பிறகு, அவரை தொல்லை பண்ணிட்டு இருந்தா நல்லது இல்ல அமுது…” என்று அவளுக்கு புரியும்படி சொன்னாள் சுருதி.
அமுதினி சரியென்று தலையசைத்தாள். ஆனால், அவள் இதயமோ வேறு மாதிரி சொல்லிற்று.
*******
களப்பயணத்தின் முந்தைய நாள்.
துறையில் ஒரு வழிகாட்டுதல் கூட்டம் நடத்தப்பட்டது. அனைத்து மாணவர்களும், ஆரவ், டீன் மீனாட்சி மேடம், சரண்யா மேடம் மற்றும் சில பேராசிரியர்களால் அந்த கலந்தாய்வு அறை நிரம்பியிருந்தது.
ஆரவ் முன்னால் நின்றான். அவன் வழக்கம்போல் சாதாரண உடையில் – வெள்ளை ஷர்ட், கருப்பு பேண்ட். அவனது முகம் இறுகி போய் இருந்தது. அவன் ஒரு கோப்பை கையில் வைத்திருந்தான்.
“குட் ஈவ்னிங் எவ்ரிவன்… நாளைக்கு காலையில ஏழு மணிக்கு நாம கிளம்புவோம்… நம்ம பஸ் காலேஜ் கேட்-ல இருக்கும். எல்லாரும் டைமுக்கு வரணும்… நான் யாருக்காகவும் வெயிட் பண்ண மாட்டேன். லேட்-ஆ வந்தா, நீங்களே உங்க சொந்த ஏற்பாட்டில வரணும்…”
அவன் குரல் அழுத்தமாகவும் கட்டளையாகவும் வர, மாணவர்கள் அமைதியாகக் கேட்டார்கள்.
“நாம போறது சாந்தி மறுவாழ்வு மையம்… அங்க ட்ராமா சர்வைவர்ஸ் இருக்காங்க – விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பியவர்கள், PTSD நோயாளிகள்… நீங்க அவங்களை ஆழமா அப்சர்வ் பண்ண போறீங்க… ஆனா, கவனமா இருங்க – அவங்க பாதிக்கப்படக்கூடிய மக்கள்… நீங்க அவங்கள எந்த விதத்திலும் தொந்தரவு பண்ணக்கூடாது. அவங்களோட பவுண்டரிஸ்-அ ரெஸ்பெக்ட் பண்ணுங்க… எந்த ஊடுருவும் கேள்விகளையும் கேட்காதீங்க…” என்று கண்டிப்புடன் சொன்னான் ஆரவ் கிருஷ்ணா.
அவனது பார்வை அறையை ஸ்கேன் செய்தது. அமுதினியின் மீது ஒரு நொடி பதிய, உடனே அவன் பார்வையைக் கண்டு திருப்பிக்கொண்டாள்.
“இன்னொரு முக்கியமான விஷயம். இது ஒரு புரொபஷனல் ட்ரிப்… நீங்க கேம்ஸ், என்ஜாய்மெண்ட், ஃபன்-க்காக போகல… இது சீரியஸ் அகாடமிக் வொர்க்… எல்லாத்தையும் நீங்க நோட்ஸ் எடுப்பீங்க, கேஸ் ஸ்டடிஸ் அப்சர்வ் பண்ணுவீங்க, ரிப்போர்ட் எழுதுவீங்க… நான் அன்புஃரோபஷனல் பிஹேவியரை டோலரேட் பண்ண மாட்டேன்… எல்லாருக்கும் கிளியரா?” என்று கேட்டான் ஆரவ்.
அதற்கு மாணவர்களும் ஒருமித்த குரலில், “யஸ் சார்..” என்றனர்.
துறைத்தலைவர் மீனாட்சி எழுந்து, “ஸ்டூடன்ட்ஸ், இது உங்களுக்கு ஒரு சிறந்த லேர்ணிங் ஆப்பர்ச்சுனடி… நீங்க பிராக்டிகலா ட்ராமா கேரை பார்க்கப் போறீங்க… தெரபிஸ்ட்’ஸ் எப்படி கிளையண்ட் உடன் வொர்க் பண்றாங்கன்னு அப்சர்வ் பண்ணுவீங்க… இது உங்க ஃப்யூச்சர் கேரியருக்கு ரொம்ப வேல்யூபலா இருக்கும்…” என்று சொன்னார்.
சரண்யா மேடமும், “நீங்க கொஸ்டீன்ஸ் கேட்கலாம், நோட்ஸ் எடுக்கலாம்… ஆனா, எப்பவுமே ரெஸ்ப்பெக்ட்-ஆ இருங்க… ட்ராமா சர்வைவர்ஸ் உடைய டிக்னிட்டியை மெயின்டெய்ன் பண்ணுங்க…” என்று மென்மையாக சொன்னார்.
அனைவரும் பேசி முடித்ததும், மாணவர்கள் வெளியேற ஆரம்பித்தார்கள்.
அமுதினியும் எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
“அமுதினி, ஒரு நிமிஷம்…” ஆரவின் குரல் கேட்டது.
அமுதினி திடுக்கிட்டு, திரும்பிப் பார்க்க ஆரவ் அவளை அழைத்தான். மற்ற மாணவர்கள் அவர்களைப் பார்த்தாலும், யாரும் அங்கே வேடிக்கை பார்த்து நிற்காமல் வெளியேறினார்கள்.
சுருதி அமுதினியை கவலையாக பார்த்தாள்.
அமுதினியும் அவளிடம், “நீ போ, நான் வர்றேன்…” என்று விட்டாள்.
அந்த இடத்தில் இப்போது ஆரவும் அமுதினியும் மட்டும் இருக்க, டீன் மீனாட்சி மற்றும் சரண்யா மேடமும் வெளியேறி இருந்தார்கள்.
ஆரவ் அமுதினியை நேராகப் பார்த்து, “நாளைக்கு ட்ரிப்ல நீ என்னை அவாய்ட் பண்ண வேண்டாம்… அது மற்றவங்களுக்கு வித்தியாசமா தெரியும். நாம புரோபஷனல்ஸ் மாதிரி நடந்துக்கணும்… புரிஞ்சுதா உனக்கு?” என்று மீண்டும் கேட்க,
அமுதினி குழப்பமாக பார்த்து, “சார், நான் உங்களை அவாய்ட் பண்ணல. நீங்க தான் என்னை அவாய்ட் பண்ண நினைச்சீங்க… அதனால தான் நான் விலகிப் போறேன்…” என்கவும் ஆரவின் முகம் கடினமானது.
“நான் யாரையும் அவாய்ட் பண்ணல அமுதினி… நான் என் வொர்க்க பண்றேன்… நீ என்னை பார்த்ததும் வேற திசையில திரும்புறே… கேம்பஸ்-ல நீ என்னை கடந்து போறப்போ, ஒளிஞ்சு மறைஞ்சு போற… அது சின்னப்பிள்ளை தனமா இருக்கு…”
அதில் அமுதினிக்கு கோபம் வர, “சார், நீங்க தான் என்னை உங்க கிளாஸ்லிருந்து விரட்டினீங்க… நீங்க தான் என்னை முட்டாள்-னு சொன்னீங்க… நீங்க தான் என்னை உங்க வாழ்க்கையிலிருந்து கிட்டேயே சேர்க்காம தூக்கி எறிஞ்சீங்க… இப்போ நான் உங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, உங்களை தொந்தரவு பண்ணாம, நான் உண்டு.. என் படிப்பு உண்டுன்னு இருக்கேன்… இதுல என்ன தப்பு?” என்று பயமின்றி பேசவும்,
ஆரவ் ஒரு அடி நெருங்கினான். அவனது குரல் மெலிதாக இருந்தாலும் தீவிரமாக இருந்தன.
“நான் உன்னை என் வாழ்க்கையை விட்டு தூக்கி எறிஞ்சேன்னு பேசாத… நீ என்கிட்ட படிக்குற பெண்… அந்த எல்லையில தான் நீ இருக்கணும்… அதான், நான் உன்னை என் பர்சனல் ஸ்பேஸ்-லிருந்து தள்ளி வெச்சேன். அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்கு…”
“என்ன வித்தியாசம்?” அமுதினி ஆத்திரத்தில் கேட்டு,
“நீங்க என்னை உங்க கிளாஸில் வேண்டாம்னு சொன்னீங்க.. நான் அதை அக்செப்ட் பண்ணிட்டேன்… இப்போ நான் என்ன பண்ணனும்னு நினைக்கறீங்க?”
ஆரவ் ஒரு நிமிடம் அவளையே பார்த்தான். அவனது கண்களில் ஒரு முரண்பாடு தெரிந்தது. அவன் எதோ சொல்ல நினைப்பது போல் இருந்தது. ஆனால், அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
“நான் நினைக்கிறது, நீ நாளைக்கு சில்லியா பிஹேவ் பண்ணாம புரோஃபஷனலா நடந்துக்க… நாம கலீக்ஸ்… அவ்ளோதான்… எனக்கு உன்னோட தேவையில்லாத டிராமா வேண்டாம். எனக்கு ஆவ்வேர்ட்னெஸ் வேண்டாம்… கிளியரா?”
அமுதினி ஆழமாக சுவாசித்து, “கிளியர் சார்… நான் புரோஃபஷனலா நடந்துக்குவேன்… நீங்க கவலைப்பட வேண்டாம்… போய்ட்டு வாங்க…” என்று அழுத்தமாக சொல்லி திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
ஆனால், கதவருகே நின்று, அவள் திரும்பாமலேயே, “ஒண்ணு மட்டும் சொல்றேன் சார்… நீங்க என்கிட்ட எவ்வளவு தான் கடினமா நடந்துக்கிட்டாலும், நீங்க ஹர்ட்டாகி இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்… அது என்னை பாதிக்காம இருக்க முடியாது… ஆனா, நான் என் அக்கறையை உங்க மேல திணிக்க மாட்டேன்… நீங்க சொன்னது போல், நாம கலீக்ஸ்… அவ்ளோதான்!” என்று சொல்லி விட்டு வெளியேறினாள்.
ஆரவ் அங்கேயே நிற்கஃ கைகள் நடுங்கின. அவளது வார்த்தைகள் அவனது மனதை துளைத்தது.
“நீங்க ஹர்ட்டாகி இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்…”
‘எப்படி அவளுக்கு இவ்வளவு கிளியரா தெரியும்? எப்படி அவள் என் கடுமையான குணத்தை உடைக்க நினைக்கிறா?’ என்று நினைத்தான்.
அமுதினியின் மீது கோபமாக இருந்தான். ஆனால், அதே சமயம், குழப்பமாகவும் இருந்தான்.
ஆரவுக்கு அவள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு இருக்கிறது என்று புரியவில்லை.
மற்ற மாணவர்கள் அவனைக் கண்டு அஞ்சி, அவனை தவிர்த்து வருகிறார்கள். ஆனால், அமுதினி… அவள் அவனது செயல்களை, உணர்வுகளை எல்லாம் கண்காணித்து கொண்டே இருக்கிறாள்.
அது அவனுக்கு அசௌகரியமாக இருக்கிறது. அது அவனை பலவீனமாக உணர வைக்கிறது.
‘நான் அவளை என் வாழ்க்கையிலிருந்து நிரந்தரமா விலக்கி வைக்கணும்… ஆனா எப்படி? அவள் எப்பவும் என் சிந்தனையில வந்துட்டே இருக்கா…’
அவன் கலந்தாய்வு அறையிலிருந்து வெளியேறினான். அவனது முகம் வழக்கம்போல் இறுகி போயிருந்தது. ஆனால், அவன் மனமோ உள்ளுக்குள்ளே கொந்தளித்துக் கொண்டிருந்தது.
*******
அன்று இரவு, அமுதினி தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். இரண்டு நாட்களுக்கான உடைகள், புத்தகங்கள், குறிப்பேடுகள், பேனா, தண்ணீர் குப்பி எல்லாம் எடுத்துக் கொண்டாள்.
அவள் மனதில் பதட்டம் நிரம்பி இருக்க, நிம்மதியின்றி தவித்துப் போனாள்.
சுருதி அவளை ஃபோன் செய்து, “அமுது, நீ ரெடியா? நாளைக்கு நாம பஸ்ஸில் சேர்ந்து உட்காரலாம்…நீ தனியா இருக்க வேண்டாம்…” என்று சொன்னாள்.
தோழியின் அக்கறையில் புன்னகைத்து, “நான் ரெடி ஆகிட்டேன் சுருதி… நாம ரெண்டு பேரும் ஒன்னாவே இருக்கலாம்…” என்றாள் அமுதினி.
ஆனால், உண்மையில், அவள் மனம் தயாராக இல்லை. அவளுக்கு ஆரவுடன் இரண்டு நாட்கள் எப்படி இருக்குமோ என்று பயம் அதிகமிருந்தது.
அவன் அவளை மீண்டும் காயப் படுத்துவானா? அவன் அவளை கண்டுக் கொள்ளாமல் கடந்திடுவாளா? அல்லது… ஏதாவது மாற்றம் நிகழுமா?
அவள் தன் சாராளத்தின் வெளியே பார்த்தாள். அந்த இரவில் ஆகாயம் முழுவதிலும் சின்ன சின்ன நட்சத்திரங்கள் நிரம்பியிருந்தது.
எங்கோ தூரத்தில், ஆரவும் அதே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அழுதினி அவளுடைய நாட்குறிப்பில் எழுதினாள்:
“நாளை எல்லாரும் மகாபலிபுரம் போகிறோம்… ஆரவ் சாரும் உடன் வராங்க.. இரண்டு நாட்கள், நான் எதை எதிர்பார்க்கிறேன் என்று தெரியல… ஆனால், ஒன்று தெரியும் – நாம விலகி போக நினைச்சாலும் விதி நம்மை மறுபடியும் ஒன்றாக கொண்டு வந்திருக்கிறது. ஏதோ ஒரு காரணம் நிச்சயமா இருக்கும்னு என் மனசு சொல்லிட்டே இருக்கு!”
அவள் முழுமையாக எழுதி விட்டு நாட்குறிப்பை மூடினாள். அவள் படுக்கையில் பொத்தென்று விழ, தூக்கம் தான் வர மறுத்தது. அவள் மனதில், ஆரவின் முகம் நிழலாடியது.
******
அதே நேரம், ஆரவ் தன் அடுக்குமாடிக் குடியிருப்பில், மடிக்கணினியில், நாளைய கள பயணத்துக்கு தேவையான திட்டத்தை உறுதிப் படுத்திக் கொண்டிருந்தான். ஆனால், அவனால் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை.
அமுதினியின் வார்த்தைகள் அவனது மனதை வேட்டையாடிக் கொண்டிருந்தன.
“நீங்க ஹர்ட்டாகி இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்… அது என்னை பாதிக்காம இருக்க முடியாது.”
‘ஏன் அவள் என்னைப் பற்றி இவ்வளவு கவலைப்படுகிறாள்? அவளுக்கு என்ன வேண்டும்? அவள் என்னை சரிசெய்ய விரும்புகிறாளா? அல்லது அவளுக்கு உண்மையிலேயே என் மீது அக்கறை இருக்கா?’
அவன் தன் மடிக்கணினியை மூடி, பால்கனிக்கு சென்றான். சிங்கார சென்னைமின் இரவு விளக்குகள் மின்மின்யாக ஒளிந்துகொண்டு இருந்தது. போக்குவரத்து வாகனங்களின் சத்தம் தூரத்தில் கேட்டது.
ஆரவ் அந்தப் புகைப்படத்தை எடுத்து பார்த்தான், அதைக் கண்டு அவனது வதனத்தில் பல்வேறு உணர்வுகள் வெளிவந்தன.
பின்னர், தன்னைதானே வெறுத்து அதனை மூடிவைத்தவன் மீண்டும் தன் இருளுக்குள் மூழ்கி போனான்.
‘நாளைக்கு நான் புரோஃபஷனலா நடந்துக்குவேன். அமுதினியை மொத்தமா இன்னோர் பண்ணுவேன்… அவளை என் கிட்ட வர விடமாட்டேன்… எனக்குள் இருக்கும் பாதுகாப்பு கோட்டையை உடைக்க விடாமல் பார்த்துப்பேன்…’
ஆனால், அவனது மனமோ வேறு மாதிரி சொல்லிற்று.
‘ஆனா அவள் ஏற்கனவே அந்த கோட்டையை உடைச்சிட்டா… அதனாலதான் நீ அவளை பார்த்து பயம் விலக்கி வைக்கிற!’
ஆரவ் அந்த குரலை திட்டி அடங்கிவிட்டு உள்ளே செல்ல, அவனால் தூங்க இயலவில்லை!
பின்னர், தூங்கினாலும் கனவுகளிலும் அமுதினி தோன்றினாள்.
அவளது கண்கள், அவளது குரல், அவளது வார்த்தைகள் – எல்லாம் அவனை தொந்தரவு செய்தன.
மறுநாள் காலை ஏழு மணி.
அவர்களின் பயணம் ஆரம்பமாகப்போகிறது.
ஆனால் இது வெறும் ஒரு களப்பயணம் அல்ல. இது ஆரவ் மற்றும் அமுதினியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக மாறப் போகிறது.
மகாபலிபுரத்தில் என்ன நடக்கப்போகிறது என்று
அவர்கள் இருவருக்கும் இன்னும் தெரியவில்லை!
விதி அவர்களை நெருக்கமாக்க முயன்று வருகிறது.
அந்த விதியை அவர்கள் எதிர்க்க நினைப்பார்களா? அல்லது சரணடைந்து விடுவார்களா?
காலம் தான் பதில் சொல்லும்!
********
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
1
+1