
காதல்-9
“சாயா தம்பி வந்துட்டாங்க வெளியே வா ” தேனு உள்ளே இருக்கும் மகளை அழைக்க…
அமைதியின் மொத்த உருவமாய் அத்தனை பாந்தமாய் , ஆழகு பதுமையாய் வெளியேறி வந்தாள் சாயாலி.. காரை நிறுத்தி விட்டு அதன் மேல் சாய்ந்து போனை பார்த்து கொண்டிருந்தான் தமிழ்மாறன்..
கண்ணாடி வளையல்கள் சத்தத்தில் ஏதோ ஒரு ஊந்துதலில் எதற்சியாக நிமிர்ந்து பார்த்த மறவன் உறைந்து போனான்.
எப்போதும் ஒரு பாவாடையும் மேலே ஆண்கள் அணியும் சட்டையும் அணிந்து கொண்டு வருபவளை தான் பார்த்திருக்கிறான். இன்றோ வெள்ளை நிற சல்வாரில் மஞ்சள் பூக்கள் அழகாக படர்ந்திருக்க .. அதே நேரம் இரண்டு கைகளிலும் இரண்டு வளையல்கள் , பின் காதை ஒட்டிய சின்ன காதணி, கருப்பு வண்ண பொட்டு அவ்வளவு தான் தன் அலங்காரம் என்பதை போல் வெளியே வந்தவளை கண் இமைக்காமல் பார்த்து வைத்தான்.
எல்லாம் தேனுவின் மிரட்டலில் அணிந்து கொண்டது. இன்று அதே பாவடையை அணிய போனவளை தடுத்து ஒரு சல்வாரை நீட்டினார். சாயாலி புரியாமல் பார்க்க.. ” நான் தான் நம்ம பழனி கிட்ட சொல்லி ஒரு செட் எடுத்துட்டு வர சொன்னேன், இதே பாவாடை சட்டைய போட்டு அந்த தம்பி கூட போனா நல்லாவா இருக்கும் இதை மாத்திகிட்டு போ” என்று உறுதியாக கூற… மறுப்பு தெரிவிக்காமல் வாங்கி அணிந்து கொண்டாள்.
முழுதாக ஆடையை அணிந்து வந்து கண்ணாடியின் முன்பு நின்று தன் பிம்பத்தை பார்த்தவளின் உதடுகள் மென்மையாக வளைந்து கொடுத்தது.
மறவனுக்கு இப்போது தான் மண்டையில் உரைத்தது. அவளை நான்கு மணிக்கு தயாராக இருக்க கூறி விட்டு அவளுக்கான ஆடை இருக்கா என்பதை யோசிக்க தவறி இருந்தான்.
“போகலாமா சாயாலி ”
“கூட்டிட்டு போங்க தம்பி ” என்று தேனு வழி அனுப்பி வைத்தார். ஏற்கனவே தேனுவையும் அழைத்து விட்டு , அவர் மறுத்து விட சாயாலியை மட்டும் அழைத்து செல்வதாக முடிவெடுத்தான்.
மறவன் காரில் ஏறி விட.. சாயாலி சற்று தயங்கி பின் பக்கமாக எற போனாள் ” சாயாலி முன்னாடி வா ” என்றவனது மிடுக்கான குரலில் அமைதியாக வந்து முன்னே அமர்ந்து கொண்டாள்.
கார் துணி கடையை நோக்கி சீறி பாய்ந்தது. இருவருக்குள்ளும் அப்படி ஒரு அமைதி, கடை வரும் வரை அவனும் அமைதியையே கடைபிடிக்க.. சாயாலி சற்றும் அவன் பக்கம் திரும்பாமல் வெளியே உள்ள கடைகளை வேடிக்கை பார்த்த வண்ணம் வந்து கொண்டிருந்தாள்.
மிக பெரிய ஜவுளி வளாகத்திற்குள் அவன் வண்டியை விட, அந்த கடையையும் அவனையும் அதிர்ந்து பார்த்தாள் சாயாலி. அவளது மனவோட்டத்தை நன்றாக புரிந்து கொண்டவன் .. ” இங்க தான் உனக்கு புடவை வாங்க போறோம் யா… சாயாலி… சீக்கிரம் இறங்கி வா ” என்று அவன் காரை விட்டு இறங்க… சாயா முழித்து கொண்டே கீழே இறங்கினாள்.
அவளுக்கு இந்த இடமெல்லாம் புதிது.. பிறந்ததில் இருந்து வறுமை தான்.. இப்படி கடைகளை போகும் போதும் வரும் போதும் பார்ப்பது உண்டு.. இன்று தான் கடைக்கு உள்ளே சென்று பார்க்க போகிறாள். ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும் அவள் நிலையை நினைத்து வருத்தமாகவும் இருந்தது.
நேராக புடவை இருக்கும் செக்ஷன் அருகில் சென்றவன், முகூர்த்த பட்டு இருக்கும் இடத்தை கேட்டுக்கொண்டு அங்கே அழைத்து சென்றான்.
விலை வாரியாக புடவைகள் ஜொலித்த வண்ணம் இருக்க , கண்களை அகல விரித்து அந்த புடவைகளை எல்லாம் பார்த்து கொண்டிருந்தாள் சாயாலி.
“மேடம்க்கு பர்ச்சேஸ் பண்ணுற மாதிரி ஐடியா இருக்க ?” என்ற கேள்வியை சட்டென்று தன் பார்வையை மாற்றி அவன் அருகில் வந்து புடவையை பார்க்க ஆரம்பித்தாள்.
அவள் முன் விரித்து காட்டிய அனைத்து புடவைகளுமே அழகாக இருந்தது. ” உனக்கு எது பிடிச்சு இருக்கோ அதை எடு ” என்று மறவன் தள்ளி நிற்க.. புடவைகளை ஒரு அரை நொடி வெறித்து பார்த்தவள்.. மறவனை நேராக பார்த்து ‘ இங்க பாருங்க எனக்கு புடவை கட்டி பழக்கம் இல்ல, இதெல்லாம் தெரியலை நீங்களே எடுங்க ‘ என்று விடாது சைகையில் செய்து விட.. எப்போதும் போல் மீண்டும் அவள் சைகையை ரீடேக் போட்டு பார்த்தவன் அவளை முறைத்து விட்டு புடவைகளை பார்க்க ஆரம்பித்தான்.
அவனுக்குமே அவன் முன்னால் இருந்த புடவைகள் அனைத்தும் அழகாக இருப்பதாக தோன்ற.. அதிலிருந்த ஒரு புடவையை எடுத்து சட்டென்று அருகில் இருக்கும் சாயாலியின் மேல் வைத்து பார்க்க.. அதிர்ந்து போனாள் பெண்ணவள்.. ” இந்த கலர் இந்த கருவாச்சிக்கி நல்லா இல்ல ” என்று புடவையை வைத்தவன் வேறு புடவையை தேர்ந்தெடுக்க.. முதலில் அவன் புடவையை வைத்து பார்த்ததில் அதிர்ந்தவள் அதன் பின் அவளை கருவாச்சி என்று கூறியதும் கோபம் வந்துவிட அவனை வெறியாக முறைத்து வைத்தாள்.
அடுத்த புடவையை எடுத்து அவள் மேல் வைக்க போக சட்டென்று விலகி கொண்டவள் , அவள் அருகில் இருந்த ஒரு சந்தன நிற புடவையை கையில் தூக்கி கொண்டு அந்த இடத்தை விட்டு நகர, கோபத்துடன் போகும் தன் வருங்காலத்தை பார்த்து புன்னகைத்தவன், அங்குள்ள மற்றொரு புடவையை வாங்கி கொண்டு அவள் பின்னே வந்தவன் அவள் வாங்கிய புடவைக்கும் சேர்த்தே பணத்தை செலுத்தி விட்டு , அவளுடன் சுடிதார் இருக்கும் செக்ஷனுக்குள் செல்ல.. சாயாலி கையை கட்டி கொண்டு அவனையே பார்த்தாள்.
“என்ன நடக்க முடியலையா தூக்கிட்டு போகனுமா” என்றவனது கேலி பேச்சில் அவளுக்கு மேலும் கோபம் வர , ” கிளம்பலாம் ” என்பதை போல் வாயிலை நோக்கி கை காட்டினாள்.
“இங்க எனக்கு கொஞ்சம் ட்ரெஸ் வாங்கனும் வா ” என்று சல்வார் செக்ஷனுக்குள் சென்றவனை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தாள் சாயா.
உள்ளே சென்று அழகாக இருந்த ஐந்து செட் சல்வார், தனியாக டாப்ஸ் லெகின்ஸ், பேண்ட், பலாசோ என்று அனைத்தையும் வாங்கி கொண்டு பில் பே செய்து விட்டு, அங்கிருக்கும் ஒரு பெண்ணிடம் எதையோ கூறி சாயாவை அழைத்து செல்ல கூறினான்.
ஒன்றும் புரியாமல் சாயா அவர்களுடன் சென்று அங்கு இருந்த ஐட்டத்தை பார்த்தவள் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள். பின்னால் திரும்பி அவனை பார்த்து நெற்றி கண்ணை திறக்க போனவளுக்கு வெற்று இடமே காட்சி அளித்தது.
பின் அவளுக்கு தேவையான உள்ளாடைகளை வாங்கி கொண்டு .. அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.
” ஆள் செட், வேற எதுவும் மிஸ் ஆகிடுச்சா” என கேட்டு வைத்து, அவளிடம் கனல் பார்வையை வாங்கி கொண்டான்.
” இட்ஸ் ஓகே சாயா… கூல் ” என முன்னால் குறுஞ் சிரிப்புடன் நடையை காட்டினான் மறவன்.
வாயில் வரை அமைதியாக வந்தவன்… “அடுத்து நகை கடைக்கு போகனும் அதுக்காக தான் உங்க அம்மாவை கூப்பிட்டேன் அவங்க வரலை… உனக்கு தாலி வாங்கிட்டு போகலாம் ” என காருக்குள் ஏற.. அதுவரை அமைதியாக இருந்தவள்.. ‘ எனக்கு மஞ்சள் கயறு போதும் ‘ என சைகை செய்ய…
அதை புரிந்து கொண்டவன் ” தாலி வாங்கியே ஆகனும் டாட் ” என்றதோடு அடுத்து நிறுத்திய இடம் நகை மாளிகை முன்பு தான்.. ‘ என்ன இவரு இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணுறாரு ‘ என பொறுமி கொண்டே அவனுடன் நடந்தாள்.
உள்ளே சென்றவன் தாலி இருக்கும் செக்ஷன் நோக்கி அவளை அழைத்து சென்று.. அங்கிருக்கும் மாடல்களை எல்லாம் அவர்கள் முன் அடுக்கி வைத்து அந்த கடைக்கார்கள் காட்ட… தன் கண் முன் ஜொலிக்கும் அந்த தாலி சரடையே விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
” சார் இது எழு பவுன், இது ஒன்பது, இது பதிமூனு இதுக்கு மேல வேணும்னாலும் எங்க கிட்ட இருக்கு ” என கூற சாயாவிற்கு தலையே சுற்றியது.
தாலியையும் அவளையும் ஒரு பார்வை பார்த்தவன்… ” நான் செலக்ட் பண்ணுறதை எல்லாம் ட்ரயல் காட்டுங்க ” என ஒன்பது பவுனில் இருக்கும் அந்த தாலி கொடியை எடுத்து அந்த பெண் ஊழியர் கையில் கொடுக்க… ஐஸ்கிரீம் மாடலில் முகப்பில் அழகான சின்ன கல் மயில் வைத்து நேர்த்தியாக இருந்தது. அதை எடுத்து அந்த ஊழியர் சாயாவின் கழுத்தில் போட்டு காட்ட… அவளுக்கு அந்த தாலி சரடு அத்தனை லட்சணமாக இருந்தது.
மறவன் கண் இமைக்காமல் அவளையே பார்த்து வைத்தான்.. முதல் தாலி கொடியே அவளுக்கு அத்தனை பாந்தமாய் பொருந்தி விட.. ” fantstic ” என அவனது இதழ்கள் முணு முணுக்க.. ” மேடம் நீங்க இந்த கண்ணாடில உங்களுக்கு பிடிச்சு இருக்கானு பாருங்க ” என அவள் முன் கண்ணாடியை வைக்க.. அதில் தன் கழுத்தில் பாந்தமாய் பொருந்தி இருந்த அந்த தாலி கொடி மின்னுவதை மிரட்சியுடன் பார்த்தவள்… பின் மறவனை பார்க்க… அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏனோ முதல் தாலி கொடியே இருவரது மனதையும் நிறைக்க.. அந்த ஒன்பது பவுன் தாலி சரடை வாங்கி விட்டு, அவர்கள் வழக்கப்படி மாங்கல்யம் வாங்கி கொண்டு.. அதற்கான பில்லை கட்டி விட்டு மேலே உள்ள தளத்திற்கு சென்றனர் இருவரும்..
அவனுக்கு தான் ஏதோ வாங்க போகிறான் போல என நினைத்து கொண்டு அவளும் மேலே செல்ல … ” வெடிங் செட் காமிங்க ” என சாயாலியை காண்பித்து கூற… அதிர்ந்து போனாள் சாயாலி.
கோபம் உச்சிக்கு ஏற… ‘ யாரை கேட்டு இவன் இதெல்லாம் செய்து கொண்டிருக்கிறான் .. ‘ என சிவந்து போன மூக்கோடு…
” என்ன பண்ணிட்டு இருக்கீங்க .. இது எதுக்கு தேவை இல்லாம… நான்தான் கொஞ்ச நாள்ல அங்க இருந்து விவாகரத்து ஆகி வர போறேன்ல ” என வேகமாக கையை ஆட்ட… வழக்கம் போல அவளது சைகையை உள்வாங்கி கொண்டவன்…
” என் காரியம் முடியுற வரைக்கும் நீ தான் என் பொண்டாட்டி அதை மறக்காத… மறவன் பொண்டாட்டி எப்படி இருக்கணும்னு ஒரு வரைமுறை இருக்கு… அதுபோல தான் நீ இருக்கனும்.. இல்ல என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது நான் என் இஷ்ட படி தான் இருப்பேனு துள்ளுனா அப்பறம் நான் யாருன்னு காட்ட வேண்டியது இருக்கும் ” என மறவன் விம் போட்டு விளக்க.. அதன் பின் வாயை திறப்பதற்கு அவள் என்ன முட்டாளா ??
இருவரும் தேவையானதை எல்லாம் வாங்கி கொண்டு வீடு வந்து சேர… அங்கு அவர்களுக்கான அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
சனா💖

