கண்ணாலம் 8
வெகு நாள்களுக்குப் பிறகு கிடைத்த முத்தம் அவன் உயிரை வாங்கியது. அதுவும் அவளாகச் சேர்த்துப் பிடித்துக் கொடுத்ததில் கூடுதல் இம்சை. ஊரே உறங்கச் செல்லும் வரை காதலியோடு நேரத்தைச் செலவழித்தவன் வீட்டிற்கு வந்து கண்களை மூடினான். படுத்தவனுக்குப் பிம்பமாய் கூடல் ஞாபகங்கள்.
இவன் அணைத்ததும், அவள் சிணுங்கியதும், இவன் நிறுத்தியதும், அவள் தொடர்ந்ததும் மாறி மாறி மண்டையைக் குடைந்தது. தாக்குப் பிடிக்க முடியாது புரண்டு படுத்தவன் மனம் காதலிக்கத் தூண்டியது. அதன் தொந்தரவு தாங்காது எழுந்தமர்ந்து நேரத்தைப் பார்த்தான். நள்ளிரவைத் தொடப் போகிறது. இந்நேரத்தில் வேண்டாம் என்று புத்தி கூறியும், கேட்காது அவள் வீட்டு முன்பு நின்றவனுக்கு உள்ளே செல்ல வழி தெரியவில்லை.
குறுக்கும் நெடுக்குமாக நடந்து, தன் எட்டாம் அறிவை உபயோகித்து மெல்லமாகக் கதவைத் தட்டினான். அவன் நேரம், ரங்கம்மாள் பாட்டி கதவைத் திறந்தார். இந்நேரத்தில் வந்து நிற்கும் பேரனை என்னவென்று விசாரிக்க, “உன் மவன் எங்க அத்தையச் சண்டை போட்டுகிட்டுக் கெடக்காரு. ஊரே அங்கதான் கூடி இருக்கு. எதுவும் தெரியாம நீ பாட்டுக்கு நிம்மதியா தூங்கிட்டு இருக்க…” என்றிடப் பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஓடினார்.
அவர் ஓடுவதைக் கண்டு குதூகலித்தவன், உள்ளே சென்று சத்தம் வராமல் கதவைச் சாற்றிக் கொண்டான். இவன் வரவை அறியாதவள், இருட்டில் சுகமாகத் துயில் கொண்டிருந்தாள். பூனை நடை நடந்து மெதுவாக அவள் முன் நின்றவனுக்குக் கண் குளிர்ந்தது. நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் அவளைக் கனிவோடு பார்த்தவன், எப்போது தன்னுடன் உறங்கும் அழகைப் பார்க்கப் போகிறோம் என்று ஏங்கினான். வழக்கம்போல் அணுவணுவாக ரசித்தான். மங்கலான வெளிச்சத்திலும், முகத்தில் சின்னக் கடுமை இருப்பது போல் தோன்றியது.
அன்று நடந்த பிரச்சினைக்குப் பின் தான் இப்படியான சிந்தனை அடிக்கடி வருகிறது சிங்காரவேலனுக்கு. இதற்கு முன், பூங்கொடி பக்குவமான குழந்தை அவனுக்கு. அவளுக்குள் இப்படியான பிடிவாதமும், கோபமும் இருப்பது கூட இப்போதுதான் தெரியும். இத்தனை வருடமாகப் பார்த்துப் பழகியவளுக்குள் இருக்கும் ஒன்றைப் புதிதாகப் பார்த்தவனுக்கு அவளும் புதிதாகவே தெரிந்தாள்.
“எம்புட்டு அழகாத் தூங்குறா பாரு…”
திருஷ்டி கழித்து அவள் மீது பட்ட கண் திருஷ்டியை விரட்டி விட்டவன், மெதுவாகப் பக்கத்தில் அமர்ந்தான். மின்விசிறியின் உதவியால் நடனமாடிக் கொண்டிருந்த நெற்றி முடிகளை அவள் அறியா வண்ணம் ஊதி விட்டான். கன்னத்தில் கை வைத்துக் கொண்டு இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். பூவைத் தீண்டிச் செல்லும் காற்றாக, அந்தப் பட்டுக் கன்னத்தைத் தீண்டியவன் உடலில் மின்சாரம் பாய்ந்தது. ஜிவ்வென்ற உணர்வில் சிக்கிக் கொண்டவனுக்கு அந்தப் போதை மீண்டும் தேவைப்பட்டது.
இந்த முறை அழுத்தமான காற்றாகத் தொட்டான். அந்த அழுத்தம் தாங்காத மென்மையான பூ சிணுங்கிச் சுருண்டு படுத்தது. அள்ளிக் கொஞ்சத் தோன்றிய உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நெருங்கி வந்தவன், பட்டும் படாமலும் முத்தம் ஒன்றை வைக்க, சுருங்கிய உடல் சிலிர்த்து நிமிர்ந்தது. மொட்டு விட்டு விரியத் தயாராக இருக்கும் பூவின் பிரசவத்தைக் கண் முன்னே கண்டான்.
ஆசை கொண்ட மனம் உரசாது பக்கத்தில் படுத்தது. ஆசைக்கு மேல் ஆசை உண்டாகி வலது கையை அவள் மீது போட்டான். அவளை நெருங்கி மூச்சுக்காற்றாய் மாறினான். மனம் கவர்ந்தவன் தன்னுடன் இருப்பதை அறியாது திரும்பிப் படுத்து அவன் மீது கை போட்டாள். அவள் ஸ்பரிசம் என்னவோ செய்தது. எதையோ சாதித்தது போல் உச்சி குளிர்ந்து போனான்.
செவ்விதழ்கள் நெருங்கி வா என்று கண்ணைக் காட்ட, அவனது ஆண்மை முந்திக்கொண்டு நின்றது. போர்வையை விலக்கித் தன்னைப் போர்வையாக்கினான் அவள் மீது படர்ந்து. காதலித்தவன் வாசத்தை மெல்ல உணர ஆரம்பித்தாள் பூங்கொடி. அவள் சிணுங்கலில் பயந்தவன், படர்ந்த உடலை விடுவித்துக் கொண்டு பதமாகப் பார்த்திருக்க, என்ன சிந்தனையில் இருந்தாளோ அவனோடு சேர்ந்து படுத்தாள்.
திடுக்கிட்டு முகத்தை ஆராய்ந்தான். நல்ல உறக்கத்தில் இருப்பதற்குச் சாட்சியாக இமைகள் இரண்டும் மூடிக் கொண்டிருந்தது. ஒரே ஒரு நொடி புருவம் சுருக்கிவிட்டு அவள் மீது கை போட்டான். உடனே இன்னும் உரசிக்கொண்டு படுத்தாள். ஒன்றும் புரியவில்லை சிங்காரவேலனுக்கு. முழித்து இருக்கிறாளோ? எனச் சந்தேகம் கொண்டவன், மெல்ல அவள் போட்ட கையை எடுத்து விட, “மாமா…” என்ற முனங்கல் சங்கீதமாக நிறைத்தது அவன் காதை.
“ஓய் லாலா!” ரகசியமாகக் கிசுகிசுக்க, “ம்ம்…” என ஓசை கொடுத்து உற்சாகப்படுத்தினாள்.
அவள் கொடுத்த ஓசையை வைத்துத் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாள் என உறுதி செய்து கொண்டவன், தூக்கத்தில் கூடத் தன் வாசத்தைக் கண்டுணரும் அவள் காதலில் மெய் மறந்து போனான். உள்ளுக்குள் இருந்த சின்னத் தயக்கத்தை உடைத்து எறிந்து, உரிமையோடு நெருங்கிப் படுத்துத் தன்னோடு சேர்த்துக் கொண்டான். முழு ஒத்துழைப்புக் கொடுத்தவள் அவன் இடையோடு கை நுழைத்தாள். மெல்லச் சிரித்து நெற்றி முட்டியவன்,
“என்னை மிஸ் பண்றியா?” கசிந்துருகிக் கேட்டான்.
“ரொம்ப…”
குரலின் தன்மையை வைத்து அவள் மனபாரத்தை உணர்ந்தவனுக்கு மனம் கசங்கியது. தன்னை மனதார நேசித்தவளுக்கு இப்படியான தண்டனை கொடுத்திருக்கக் கூடாது என்று வருந்தியவன், “சாரிடி!” மன்னிப்புக் கேட்டான்.
எந்தப் பதிலும் இல்லை அவளிடம். காதல் கொண்ட மனம் சோர்ந்து போய், “உன்னை விட்டு என்னால இருக்க முடியாது லாலா. பிரிஞ்சிருக்கற இந்த நாள்ல அதை நான் முழுசாப் புரிஞ்சுகிட்டேன். எப்படா உன் மனசு மாறும்னு ஏங்கிட்டு இருக்கேன். மாமனை இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சிடு, ப்ளீஸ்டா.” பேசிக் கொண்டிருந்தவன் இதழ்கள் மனநிறைவாகச் சிரித்தது அவளின்,
“ம்ம்.. .மாமா” என்ற வார்த்தையில்.
அதற்குப் பின்னும் ஒதுங்கி இருக்க அவன் மனம் விரும்பவில்லை. தாவியணைத்து முகம் முழுவதும் முத்தமிட்டான். முத்தத்தின் அழுத்தம் தூக்கத்தைக் கலைத்தது. இருட்டும், தனிமையும் அவளைக் கேட்டது. போதாக்குறைக்கு அவளாகவே சேர்ந்து கொண்டு மோகத்தைத் தூண்டி விட்டாள். இதுவரை இப்படியான நிலையில் அவளைக் கையாண்டது இல்லை சிங்காரவேலன். இந்தப் புது அனுபவத்தில் மனம் சிக்கிக் கொண்டு பேய் ஆட்டம் ஆடியது.
உறக்கத்தில் தான் தன்னுடன் சேர்ந்து இருக்கிறாள் என்பதை மறந்தவன் மூளை உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டது. திடமாக அவள் மீது படுத்தவன் நெற்றியில் ஆரம்பித்து ஒவ்வொரு இடத்திலும் அழியாத முத்தங்களைப் பதிக்கத் துவங்கினான். அரைகுறைத் தூக்கத்தில் இருந்தவள் முழுதும் துறந்து கண் திறக்க, சங்குக் கழுத்தில் முகம் புதைத்து முத்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
தன் மீது தான் அவன் இருக்கிறான் என்பதை வெகு நிமிடங்களுக்குப் பின் உணர்ந்தவளுக்கு, என்ன செய்வதென்று தெரியவில்லை. விழித்து விட்டதை அறியாது கழுத்தைக் கடந்து வந்தவனை இரு கைகள் தடுத்தது. நிமிர்ந்து முகம் பார்த்தவன் அக்கைகளைத் தட்டி விட்டுத் தனக்காகக் கட்டிய தாவணியை விலக்கி விட்டான். திகைத்த பூங்கொடி அவன் முகத்தில் தெரிந்த மோகத்தைக் கண்டு அதிர்ந்தாள். இதுவரை அவனிடம் பார்க்காத தீவிரம்.
தொட்டு மட்டுமே ரசித்த தொப்புள் குழியில் முகம் புதைத்தவனுக்குக் கட்டுக் கடங்காத மோகத்தீ. தடுத்துக் கொண்டிருந்தவள் கைகள் அவன் கொடுத்த கூச்சம் தாங்காது இறுக்கமாக முடியைப் பிடித்துக் கொண்டது. இறுக்கிப் பிடித்ததில் தீவிரம் அதிகமானது. மீசை விலக்கி இரு இதழ் குவித்து என்றும் மறக்காத முத்தத்தை அங்குப் பதித்தவன், தன்னைக் கட்டுப்படுத்த முடியாது தாவி அவள் இரு இதழ்களைச் சிறை எடுத்தான்.
கோபத்திற்கும், அவன் மீது கொண்ட ஆசைக்கும், நடுவில் சிக்கித் தவித்தவளுக்கு இது பெரும் தொந்தரவானது. முத்தத்தின் வேகம் கூடிக் கொண்டே சென்றது. அதன் வேகத்திற்கு ஏற்பக் கைகள் மேனியில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, தடுக்கவும் முடியாமல் சேர்த்தணைக்கவும் வழி இல்லாமல் திண்டாடிப் போனாள் பூங்கொடி.
தடுப்பது, சேர்த்தணைப்பது போல் இருந்தது அவனுக்கு. அத்தை மகளின் மனம் புரியாது, இருவருக்குள்ளும் இருக்கும் நிலை புரியாது சற்று எல்லை மீற ஆரம்பித்தான் சிங்காரவேலன். அதை உணர்ந்தவள் மனத்தில் திக் திக்! என்ற ஓசை. என்ன செய்து தடுப்பது என்று தெரியாமல் அவதிக்கு உள்ளானவளை விடுவதாக இல்லை. தாவணியை அவள் மேனியில் இருந்து முழுதாக உருவும் வரை தத்தளித்துக் கொண்டிருந்தவள் அதற்கு மேல் பொறுக்க முடியாது,
“மாமா…” சத்தமாகக் கத்த, உச்சி மண்டையில் பிடித்த பேய் பயந்து அடங்கியது. வெடுக்கென்று அவளை விட்டு எழுந்தவன், தன் கையில் இருக்கும் தாவணியைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டான். பக்கத்தில் இருந்த போர்வையைத் தன் மேனிமீது போட்டுக் கொண்டவள் ஓங்கி அவன் கன்னத்தில் அறைய, அமைதியாக வாங்கிக் கொண்டான்.
அவமானத்தில் தலை குனிந்தவனைப் பார்க்கப் பற்றிக் கொண்டு வந்தது. தாவி அவன் சட்டையைப் பிடித்தவள், ஆத்திரம் தீரும் வரை அடிக்க ஆரம்பித்தாள். அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டவன், “லாலா…” என கைப்பிடிக்க முயன்றான்.
மீண்டும் ஒரு ‘பளார்’ என்ற அறை கன்னத்தில்.
“இப்ப நீ இங்க இருந்து போகல, ஊரைக் கூட்டி அசிங்கப்படுத்திடுவேன்.” என்ற வார்த்தைக்குப் பின் அங்கு இருக்கவில்லை சிங்காரவேலன். பெருத்த அவமானத்தோடு அங்கிருந்துச் சென்றான். அவன் சென்றபின், குப்புறப் படுத்தவளுக்குக் கண்ணீர் கட்டுப்படவில்லை. மனம் வாடி இல்லம் வந்தவனுக்கு, உறக்கம் வரவில்லை. இரவெல்லாம் தூங்கா இரவாகிப் போனது இருவருக்கும்.
எப்பொழுதும், சேவலுக்கு முன் எழுந்து தயாராகி நிற்கும் மகனைக் காணாது அறைக்கு வந்த கோமளம் அதிசயமாகப் பார்த்தார். அன்னை செல்லும் வரை கண்மூடிப் படுத்திருந்தவன் கண் திறந்தான். நேற்று இரவு நடந்தது புத்தியைச் சுற்றி வந்தது. காலை எழுந்ததுமே ரங்கம்மாளை வாட்டி வதைத்து விட்டாள் பூங்கொடி. அவர் சொல்ல வருவதைக் கூடக் காதில் வாங்கிக் கொள்ளாமல்,
“இனி அவன் இந்த வீட்டுப் பக்கம் வந்தா, நான் இங்க இருக்க மாட்டேன். குடும்பத்தை விட்டு வந்தவளுக்கு, உன்னை விட்டுப் போவ ரொம்ப நேரம் ஆகாது.” என்று விட்டு வேலைக்குக் கிளம்பினாள்.
அவள் வீட்டு வாசலுக்கு நான்கடி தள்ளிக் குழாய் அமைக்கும் பணியில் நான்கு நபர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்க, “இங்க எதுக்குக் குழா போடுறிங்க?” விசாரித்தாள்.
“நீலகண்டன் அய்யா கடைசி மவன்தான் இங்க குழா போடச் சொன்னாரு.” என்பதை வேண்டா வெறுப்பாகக் கேட்டுக் கொண்டு அவன் போட்ட பந்தலில் ராணியாக நடந்தாள்.
பாதி வழி தூரம் நடந்து வந்தவள் தன் நடையை மெதுவாக்கினாள். கண்களைச் சுருக்கி இடம், வலம் பார்த்தவள் பெருத்த மூச்சை வெளியிட்டாள். திருவாரூர் தேரை ரசித்தபடி பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தவன் அந்த அசைவில் நிற்க, அவன் நிழல் தன்னைத் தொடர்வதைக் கண்டு வேகமாக நடந்தாள்.
அத்தை மகளின் கோபம் மலையளவு உயர்ந்திருப்பதை உணர்ந்தவன், தன்னைத் தானே கடிந்து கொண்டான். சம்பவத்தை நடத்திய தனக்கே இன்னும் அந்தச் சங்கடம் போகாமல் இருக்கும் பொழுது, பலியானவள் எப்படி மீண்டிருப்பாள்? இனி ஒரு முறை அதுபோன்று வரம்பு மீறி நடக்கக்கூடாது என்று தனக்குள் கடிவாளம் போட்டுக் கொண்டவன்,
“ஓய் லாலா!” என்றழைத்தான்.
சிறிதும் திரும்பிப் பார்க்காது நடந்து கொண்டிருந்தாள். மெதுவாக நடந்து கொண்டிருந்தவன் தன் வேகத்தைக் கூட்டி, “சாரி” என்றான்.
“இங்கப் பாரு, திரும்பவும் அதைப்பத்திப் பேசி என்னைக் கடுப்பாக்காத.”
“தெரியாம நடந்துடுச்சு.”
“வாயில எதாச்சும் வந்துடும்.”
“நீதான் தூக்கத்துல மாமான்னு கூப்பிட்டு உசுப்பேத்தி விட்ட, தெரியுமா?”
“வாயத் தொறந்தாலே பொய்!”
“சத்தியமா லாலா…”
இருக்கும் கடுப்பிற்கு எதுவும் பேச முடியவில்லை. உச்சி மண்டை சூடாகி இருப்பதால், அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்றிருந்தது. அதைப் புரிந்து கொள்ளாது விடாது இம்சை செய்து கொண்டு வந்தான். ஆத்திரத்திற்கு மேல் ஆத்திரம் பொங்க என்ன செய்வதென்று தெரியாமல் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள். அவள் நேரம் சரியாகப் பேருந்து வந்தது.
அவளுக்காகவே, அவள் ஒருத்தி அமருவதற்காகவே முழுப் பேருந்து காலியாக வந்து நிற்க, பைத்தியம் பிடிக்காத குறையாக உள்ளுக்குள் குமையத் தொடங்கினாள். அத்தை மகளை உரசிக்கொண்டு, “ஏறு!” அவள் தோளைத் தன் தோளால் தட்டினான்.
“ப்ச்!” எரிச்சலோடு விலகி நின்றாள்.
காதலியின் முகத்தைப் பார்த்தும், செயலைப் பார்த்தும், உள்மனதைப் படிக்கத் தவறியவன், “மாமா வேணா தூக்கிட்டுப் போகவா…” குண்டுக் கண்களை உருட்டிக் கேட்க, தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
பூக்குவியலைக் கையில் ஏந்தியவன் செயலை ஏற்க விரும்பாது, சாட்டையடியாகத் துள்ளிக் குதித்து இறங்கியவள், பின்னால் வந்த பேருந்தில் சென்று ஏறினாள். அதுவரை சாதாரணமாக இருந்தவன் முகம் சுருங்கியது. ஓரளவிற்குக் கூட்டம் உள்ள பேருந்தில் ஏறியவள் ஜன்னல் பக்கம் அமர, அவளையே தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இதுவரை தென்படாத கடுமை அவள் முகத்தில். தெளியவே தெளியாத குழப்பம் இவன் முகத்தில். இவர்களுக்காகக் காத்திருக்காத பேருந்து இயங்க ஆரம்பித்தது. மனம் கேட்காது துரத்திப் பிடித்து ஏறியவன், அவளுக்குப் பின் இருக்கையில் அமர்ந்து கொள்ளத் தலைவலி அதிகரித்தது பூங்கொடிக்கு.
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் அவள் கூந்தலை ரசித்தபடி பின்னால் அமர்ந்தவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பக்கத்து ஊரில் பேருந்து நின்றது. அவள் தோழிகள் நால்வரும் ஏறினார்கள். அவர்களைக் கண்டதும் பெயருக்கென்று சிரித்தவள் முகத்தைக் கண்டவனுக்கு ஏமாற்றம். அதை முகத்தில் காட்டுவதற்குள் வந்த நால்வரும், “ஹாய் அண்ணா…” என்றிட, கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது.
“காலையிலேயே ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா?”
“ம்ம்.”
“உங்க ம்ம் மே சரி இல்லயே. ஏதோ இருக்குன்னு தெரியுது. என்னான்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம்.
“இன்னைக்கு ஒரு முக்கியமான டே!”
“அதான…”
“இன்னைக்கு தான் என் பூங்கொடி வயசுக்கு வந்த நாள்…” என்றதும் அந்த நால்வர் மட்டுமல்ல, அவன் பேசியதைக் கேட்ட சிலரும் சிரித்தார்கள். அந்தச் சிரிப்புச் சத்தம் ஆக்ரோஷத்தைக் கொடுத்தது பூங்கொடிக்கு.
“இதையெல்லாமா முக்கியமான நாள்ல சேர்க்கிறது?”
“இதுதான் எனக்கு ரொம்ப முக்கியமான நாள்!”
“ஓஹோ…”
“எங்க அம்மா கூப்பிட்டு, உன் அத்தை மவளுக்குக் குடிசை கட்டுடான்னு சொல்லுச்சு. அதுவரைக்கும், இவ மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்ல. பாவாடை சட்டையில ஒக்காந்து கெடப்பான்னு பார்த்தா, புடவை கட்டிப் பெரிய மனுஷியா இருந்தா. ஒரு நிமிஷம் நானே அசந்துட்டேன். நம்ம லாலாவா இதுன்னு வாயப் பொளந்து பார்த்தன்னா பார்த்துக்கோங்க. அன்னைக்குத் தான் இவளை முதல் முதல்ல சைட் அடிச்சேன். அத்த மவ மேல ஆசை வந்த நாள் இது…” சிலாகித்துக் கூறிக் கொண்டிருக்க ரசிக்க வேண்டிய அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
“எம்புட்டு நாளைக்கு இப்படியே வரதா உத்தேசம்?”
“உங்க தோழி மனசு மாறுற வரைக்கும்.”
“மாறுறதுக்கான அறிகுறி ஒன்னும் தென்படலையே.”
“இப்பத் தென்படும் பாருங்க.”
லேசாகச் சட்டையை மேல் தூக்கி, ஒளித்து வைத்திருந்த ஒரு காகித அட்டையை எடுத்து தனக்கு முன்னால் அமர்ந்திருப்பவள் முன்பாக நீட்டினான். சுயம் புரியாத அளவிற்குக் கோபம் ஆட்கொண்டது அவளை. காளியாய் அமர்ந்திருக்கும் காதலியின் கோபம் அறியாது,
“இதுதான் என் லாலா எனக்குக் குடுத்த லவ் லெட்டர்!” என்றான்.
நால்வரில் ஒருத்தியான மணிமேகலை, காகித அட்டையை வெடுக்கென்று பிடுங்கிடக் கலவரம் வெடித்தது அங்கு. நான்கு பேரும் பூங்கொடியைக் கேலி செய்கிறேன் என்று கோபத்தைத் தூண்டி விட்டனர். தலைவலி வாட்டி எடுக்க ஆரம்பித்தது.
“லவ் லெட்டர்னு சொன்னீங்க, படம் வரைஞ்சு கெடக்கு.”
“அதெல்லாம் உங்களுக்குப் புரியாது.” என அதை வாங்கி நெஞ்சோடு வைத்தவனுக்கு அவ்வளவு சுகமாக இருந்தது.
மாமன் மீது ஆசை கொண்டவளுக்கு, அதை வெளிப்படுத்தப் பேராசையாக இருந்தது. எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவள் கண்ணில் என்றோ யாரோ வைத்துவிட்டுச் சென்ற திருமணப் பத்திரிகை விழுந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தவளுக்கு ரகசியப் புன்னகை. வேகமாக அவளுக்குத் தெரிந்தவரை ஒரு மண்டபத்தை வரைந்து அதில் மணப்பெண்ணாக அவளை வரைந்து வைத்தாள்.
கீழே திருமணப் பத்திரிகையில் இடம்பெறும் அனைத்தையும் நிரப்பி வைத்தவள், அவனுக்காக மாமரத் தோட்டத்தில் காத்திருந்தாள். அன்றைக்கு ரைஸ்மில்லில் வேலை அதிகம். என்றைக்கும் வரும் நேரத்தை விடத் தாமதமாக வந்தான். அவன் வரும்வரை நடையாக நடந்து காதலைக் கடத்தினாள். அலுப்பாக வீடு திரும்பியவன் குளிக்கப் பின்பக்கம் வந்தான். கதவைத் திறந்து உள்ளே நுழைவதற்கு முன், கைப்பிடித்த பூங்கொடி ஒரே இழுப்பாக இழுத்து வந்தாள்.
“என்னாத்துக்கு இப்புடி இழுத்துட்டுப் போற.”
“உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”
“இப்பதான் வேலை முடிச்சு வந்தேன். உடம்பு அலுப்பா இருக்கு, குளிச்சிட்டு வரேன்.”
“அதெல்லாம் வேணாம்.”
“அப்புடி என்னா விஷயம்?”
“எதுக்கு இப்பப் பறக்குற?”
“என்னான்னு முதல்ல சொல்லு.”
“நீ கோவமா கேட்டினா சொல்ல மாட்டேன்.”
“உஃப்! அசதியா இருக்கு பூவு. போட்டுப் படுத்தாம விஷயத்துக்கு வா…”
ஆசையாகக் காதலைச் சொல்ல வந்தவள், அவன் கொடுத்த உதாசீனத்தைத் தாங்க முடியாது, “சும்மாதான் கூப்பிட்டேன், நீ போ…” என்றாள்.
“கிறுக்குப் புடிச்சிருக்காடி கிறுக்கி!”
உடனே அவள் முகம் வாடிவிட்டது. அதைக் கண்டவன் நெற்றிச் சுருக்கங்களோடு தாடையில் கை வைத்து முகம் உயர்த்த, கண்கள் கலங்கி இருந்தது. பதறியடித்துக் கொட்டத் தயாராக இருந்த கண்ணீரை அழுந்தத் துடைத்து மறைய வைத்தான். மாமன் விரல் பட்டதும் மனம் கனிந்தாள். நொடிக்கு ஒருமுறை மாறும் அவள் முகமாற்றத்தில் யோசனைக்கு ஆளானவன் நிதானித்து என்னவென்று கேட்டான். சொல்ல வேண்டாம் என்ற சிந்தனை உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தாலும் எடுத்து வந்த காகித அட்டையை அவன் பக்கம் நீட்டினாள்.
திருமண மண்டபம் வரைந்து, சுற்றத்தார்கள் சூழப் பெண் மட்டும் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பார்த்தவன் புருவம் சுருக்கினான். நதி படலம் போல் வளைந்து நெளிந்திருக்கும் அந்தப் புருவத்தைப் பார்த்துக் கொண்டு, “பூங்கொடிக்குக் கண்ணாலம்! மாப்ள மட்டும் தான் இன்னும் வரல.” என்றாள் மொட்டையாக.
“பைத்தியம்! மாப்ள இல்லாம எப்புடிக் கண்ணாலம்?”
“அதத்தான் உன்கிட்டக் கேக்குறேன்.”
“ஹான்!”
“இல்ல… நீ வரன்னு சொன்னா சிரஞ்சீவி சிங்காரவேலனுக்கும், சௌபாக்கியவதி பூங்கொடிக்கும் கண்ணாலம்னு பத்திரிகை அடிக்கச் சொல்லிடலாம்.”
ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. வானத்திலிருந்து ஒரு கயிரும், பூமி பிளந்து ஒரு கயிறும் அவனைக் கட்டி இழுப்பது போன்று இருந்தது. எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் தலை சுற்றியது. மாயாஜால வலைக்குள் சிக்கிக் கொண்டவன், அதிலிருந்து மீளாமல் உறைந்து போனான். மாமனின் நிலையைக் கண்டு வெட்கம் ஆட்கொண்டது பூங்கொடியை. அவன் முகம் பார்க்க முடியாது ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள். அவள் விட்டுச் சென்ற அந்தக் காதல் சின்னம் மட்டும் அவனுடன்.
அதிலிருந்து ஒரு வாரம், பேய் பிடித்தது போல் அலைந்து கொண்டிருந்தான் சிங்காரவேலன். அடிக்கடி அவனையும் மீறி வெட்கம் வந்து அனைவரின் முன்பும் காட்சிப் பொருளாக நிற்க வைத்தது. தனக்குத் தானே சிரித்துக் கொண்டு பேச ஆரம்பித்து விட்டான். உலகையே வென்றதாகச் சுற்றித் திரிந்தான். காதலியைப் பார்க்கும்பொழுது முகம் சிவந்தது.
மாமனின் செய்கையில் மனம் குளிர்ந்து போனவள், தனக்கான பதிலை அதில் தேடிக் கொண்டாள். அங்கு ஆரம்பித்தது அவர்கள் காதல் பயணம். பயணங்கள் அழகானது தான். அதில் பயணிப்பவர்களின் புரிதலைப் பொறுத்தது. புரிதலோடு தொடங்கிய பயணத்தைக் கோபத்தால், முற்றுப்புள்ளியாக மாற்றி இருக்கிறான் சிங்காரவேலன். முற்றுப்புள்ளியே முடிவென்று பிடிவாதம் பிடிக்கிறாள் பூங்கொடி.
காதலி, காதலை வெளிப்படுத்திய தருணத்தைக் கூறியவன், “அவ மட்டும் லவ்வைச் சொல்லலனா, இப்ப வரைக்கும் நான் சொல்லி இருக்க மாட்டேன். என் லாலாக்கு என்னை விட தைரியம் ஜாஸ்தி. எப்புடிப் பட்டுன்னு போட்டு ஒடைச்சா தெரியுமா?” வெட்கம் சூழக் கூறிக் கொண்டிருந்தான்.
“ஊமை மாதிரி இருந்துட்டு எவ்ளோ வேலை பார்த்திருக்கா பாருங்கடி. பண்றதெல்லாம் பண்ணிட்டு, இவருக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி நம்மகிட்ட ரீல் ஓட்டி இருக்கா.”
“ஒத்தப் பேப்பரைக் குடுத்து ஆளைக் கவுத்து, இப்புடி நிதம் பின்னாடி வர வச்சிருக்கான்னா இவ எவ்ளோ பெரிய ஆளா இருப்பா…”
“அப்புடி என்னா சொக்குப் பொடி போட்டன்னு சொல்லுடி, நாங்களும் எங்க ஆளுங்களுக்குப் போடுறோம்.”
“கொடுத்து வச்ச மகராசியாட்டம் ஒய்யாரமா முன்னாடி போற. கூச்சமே இல்லாம இவரு பின்னாடி வர்றாரு. எங்களுக்கெல்லாம் இந்தக் கொடுப்பினை கெடைக்கல.”
நான்கு பேரும் ஆளுக்கு ஒன்றைப் பேச, கட்டுப்பாடு உடைந்தது பூங்கொடிக்கு. அவர்கள் பேச்சுக்கு மயங்கியவன், முன்னால் அமர்ந்திருக்கும் காதலியின் வலது காதில், “உஃப்!” என ஊதி விட்டு, “கேட்டியா அவங்க சொல்றதை. நீ குடுத்து வச்ச மகராசியாம். இப்பவாவது அய்யாவோட காதலைப் புரிஞ்சுக்க. என்னை மாதிரி ஒருத்தன் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் கெடைக்காது. டக்குனு முந்தானைல முடிஞ்சுக்க…” என்றவனை வெடுக்கென்று தள்ளி விட்டாள்.
சிரித்துக் கொண்டிருந்த தோழிகள் அதிர, சிலர் மத்தியில் காட்சிப் பொருளானான் சிங்காரம். ஆத்திரம் அடங்காது, “வண்டிய நிறுத்துங்க…” தொண்டை கிழியக் கத்தினாள். அவள் இட்ட சத்தத்தில் பேருந்து தன்னால் நிற்க, இறங்க நகரும் தன்னவளின் கைப்பிடித்தான்.