Loading

 

நதி 8

இன்று

அதியின் விழிகளில் இருந்து கோடுகளாய் கண்ணீர் வழிய அதைப் பார்த்த கோபாலனும், வசந்தியும் கேவி அழ ஆரம்பித்தனர்.

“உன் மனசுக்குள்ள இவ்வளவு ஆசையை வச்சிருந்தீயாம்மா? ஏன்மா என்கிட்ட சொல்லலை” எனத் தேம்பி அழுத கோபாலன் அகரநதியின் கைபற்ற, எந்த எதிர் விணையும் வரவில்லை, அவள் கண்களில் வழிந்துக் கொண்டிருந்த விழிநீர் நின்றபாடில்லை.

“ஏங்க அழாதீங்க நம்ம பொண்ணு சரியாகிருவா, நீங்களே இப்படி அழுதா நான் என்னங்க பண்ணுறது” வசந்தியும் அழ துவங்க. கையில் வைத்திருந்த டைரியுடன் உறைந்து போய் நின்றான் தீரா.

“தீரா எங்க அந்த டைரிய கொடு” என வினோதா வாங்கி அவரும் வாசித்துப் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்தே போன வினோதா.

“தீரா இந்தப் பொண்ணு உன்னைத் தான வரைஞ்சு வச்சிருக்கா?” சந்தேகமாய் மகனின் முகத்தை ஏறிட்டார்.

தீராவிற்கு வார்த்தைகள் வர மறுத்தது.

“நீ தான் அந்தப் பொண்ண தூக்கி விட்டியா.? சொல்லு தீரா”

“ம்மா வாங்க, வீட்டுக்குப் போகலாம்” என அன்னையைத் துரிதபடுத்தினான்.

“உன்னை உருகி உருகி காதலிச்ச பொண்ண அப்படியே விட்டுட்டுப் போகப் போறீயா தீரா” என வினோதா கேட்க, அதைக் காதில் கேட்ட நொடி கோபாலன் அந்த டைரியை வாங்கிப் பார்த்தார்.

அதில் வரைந்திருந்த படமும், தீராவின் முகமும் அப்படியே ஒத்துப் போனது, அவன் கட்டியிருந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை கூடத் தத்ரூபமாக வரைந்து வைத்திருந்தாள் அதி.

கழுத்தில் அணிந்திருந்த செயின், அதில் தொங்கிக்கொண்டிருந்த சூலயுத டாலர், அனைத்தையும் உன்னிப்பாய் கவனித்து வரைந்திருந்தாள் அதி.

“என் பொண்ணு மனசுல இருக்குறது நீங்க தானா?” சந்தோசமும் சோகமும் ஒரேடியாய் வர, ஒருவித அதிர்வுடன் கேட்டார் கோபாலன்.

“ஆம் எனத் தலையசைத்தான் தீரா”

“தீரா அந்தப் பொண்ணுகிட்ட நீ பேசி பார்றேன்டா, அவ ரெஸ்பான்ஸ் பண்ண சான்ஸ் இருக்குல” தீராவின் தாய் வினோதா பரிந்துரைக்க,

“சார் என் மகளை மீட்டு தாங்க ப்ளீஸ்” என வசந்தி கைகூப்பி நின்ற காட்சி தீரா மனதை அசைத்துப் பார்த்தது, இன்னொரு புறம் தன்னை ஒரு தலையாகக் காதலித்த பெண், இப்போது சுயநினைவின்றிக் கிடக்கிறாள், அவளுக்கு என்ன நேர்ந்தது, என்று அவனின் போலீஸ் மூளை யோசிக்க, மனதில் எதையோ முடிவு செய்தான்.

அவனுடைய நதியை நெருங்கினான் தீரா. அவள் விழிகளை உற்று நோக்கினான். அதே விழிகள் அவனுக்கு நன்றி சொல்லி சிரித்த அதே விழிகள் இன்று சோர்வாய் இமை மூடிக்கிடந்தது. அவளின் கலைந்த கேசம், வரண்டு போன இதழ்களும், அவள் படும் துன்பத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

“நதி!” அவள் கைப்பற்றி முதல் முறை அழைத்தான் தீரா.

“நதி இது உனக்குக் கேக்குதா இல்லையான்னு எனக்குத் தெரியலை, ஆனா எதோ ஒரு நம்பிக்கையில தான் நான் உன்கிட்ட இப்போ பேசிட்டு இருக்கேன். உன்னோட டைரியில் முதல் பக்கத்தைப் படிச்சேன், அதுல நீ எழுதியிருக்கக் காதல் வந்த தருணம்னு, உன் விழி மேல் சலனம் வந்த தருணமும் அதுதான், இவ்வளவு நாள் நீ என்ன மறைஞ்சு மறைஞ்சு காதலிச்சது போதும் நதி, எழுந்து வா உன்னைக் காதலில் திக்குமுக்காட வைக்கக் காத்திட்டு இருக்கேன் உன் தீரா. தீராநதியாவோம் வா நதி!” என அவன் கைகளில் அழுத்தம் கொடுக்க, அவளின் விரல்கள் அவன் கரங்களை இறுக பற்ற துவங்கியது.

அவளின் இமைகள் பட்டாம்பூச்சியாய் படபடக்க ஆரம்பித்தது, கருவிழிகள் தாறுமாறாய் அலைமோத, அவன் கைகளை இறுக பற்றியவளின் உடலின் உஷ்ணம் ஏற, அவளின் உஷ்ணத்தை உணர்ந்தவன்.

“நதி ஆர் யூ ஆல்ரைட்.?” என அவன் கேட்டபோது அவளுக்கு வலிப்பு வர துவங்கியிருந்தது, என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க, உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து, மருத்துவமனையில் அதியை அட்மிட் செய்திருந்தனர், வலிப்புக்கு உண்டான மருந்துகள் கொடுக்கபட்டு தனிமையான அறையில் இருந்தாள் அகரநதி, மருத்துவர் நடந்தேறியவற்றை விசாரித்துத் தெரிந்துக்கொண்டார்.

“இட்ஸ் எ குட் சைன் கோபாலன், பயப்பட எதுவுமே இல்லை” மருத்துவர் விவரிக்க,

“அப்போ என் பொண்ணு கோமா ஸ்டேஜை தாண்டிட்டாளா.?இனி எழுந்து நடமாட ஆரம்பிப்பாளா..?” ஆர்வத்தோடு கேட்டார் கோபாலன்.

“அப்படி இல்லை கோபாலன், உங்க பொண்ணு குணமாகுற மருந்து கிடைச்சிருச்சுன்னு சொன்னேன்”

“நிஜமாவே சொல்லுறிங்களா டாக்டர்.? அந்த மருந்தோட விலை எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை வாங்கிரலாம் டாக்டர், என்னடி வசந்தி சரிதானே” என மனைவியின் புறம் திரும்பி அவர் கேட்க,

“ஆமா டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எங்க பொண்ணு எழுந்து நடமாடனும் பழையபடி இருக்கணும், அதுக்கு எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை, அந்த மருந்தை கொடுங்க டாக்டர்” என வசந்தியும் மொழிய,

“உங்க பொண்ணு பழையபடி ஆகுறது அவரோட கையில தான் இருக்கு, அவரு மனசு வச்சா உங்க பொண்ணு அகரநதியோட ஹல்த் இம்ப்ரூவ் ஆகவும் சான்ஸஸ் இருக்கு” எனத் தீரேந்திரனை கைக்காட்டினார் மருத்துவர். அதை ஏற்கனவே அறிந்தவன் போல் புன்னகையாய் தலையசைத்தான் தீரா.

“நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க சம்மந்தி, மருமகளைக் குணபடுத்துறது என் மகனோட பொறுப்பு” என வினோதாவும் சொல்ல,

“என்னது மருமகளா.?” என வியப்பில் ஆவென்றார் கோபாலன்.

“அம்மா அதெல்லாம் சொல்லாதீங்க, நதி என்னை ஒரு தலையா காதலிச்சிருக்கா அவ்வளவு தான், அதுக்காக கல்யாணம்லாம் பேசாதீங்க, நதி குணமாகட்டும், இந்த டைரி எப்போவோ எழுதியிருக்கா, இடைபட்ட காலத்துல அவ வாழ்க்கையில வேற யாராவது வந்து இருக்கலாம், அதனால கல்யாண பேச்சை இங்கேயும் ஆரம்பிக்காதீங்க” என உறுதியாய் அவன் சொல்ல,

“என்னடா தீரா.? அப்போ அவ கை பிடிச்சு நீ பேசினதெல்லாம்..?”

“ம்மா எனக்கு நதி கண்ணு முழிக்கணும், என்னோட கேஸ்க்கு அவ வாக்குமூலம் தேவை அதுக்காக பேசினேன், மத்தபடி என் மனசுல யாரும் இல்லை” தெளிவாய் சொல்லி முடித்தான் தீரா.

“சார் சொல்றதும் சரி தான் மேடம், அவ குணமாகட்டும், அதுக்கு உங்க உதவி கண்டிப்பா எங்களுக்கு வேணும் தீரா” என கோபாலன் சொல்ல சரியென சிறிய தலையசைப்புடன் அங்கிருந்து நகர்ந்தான் தீரா.

********************************************************

.

மருத்துவரின் அறையில் ரகசியமாய்ச் சில விவரங்களைக் கேட்டறிய முற்பட்டான் தீரேந்திரன்.

“டாக்டர் உங்க அப்ஸர்வேசன்ல இருந்தப்போ அகரநதி கண் முழிச்சாங்களா?”

“இல்லையே தீரேந்திரன் எதுக்காக உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டுச்சு.?” மருத்துவர் ஓம்கார் சொல்ல,

“சம்திங் இஸ் சஸ்பீசியஸ் டாக்டர், அதை க்ளரிஃபை பண்ணணும்”

“உங்களையே ஒரு தலையா காதலிச்சிட்டு இருந்த பொண்ணு உங்க கையில கிடைச்சிருக்கா, அதை விட்டுட்டு, எதுக்காக, பாதாளத்துக்குப் போன கேஸை தோண்டி எடுக்குறீங்க தீரேந்திரன்” என அழுத்தமாய்ச் சொல்ல,

“என்ன டாக்டர் ஓம்கார், இந்தக் கேஸை டீல் பண்ணாதன்னு மறைமுகமா மிரட்டுற மாதிரி இருக்கே”

“நான் எதுக்கு சார் மிரட்ட போறேன், நேரடியாவே சொல்லுறேன் இதோட இந்தக் கேஸ்கு முற்றுபுள்ளி வச்சிட்டு உங்க வாழ்க்கைக்குத் தொடக்கப் புள்ளிய வையுங்க சார், அப்பறம்” என மருத்துவர் இடைநிறுத்த,

“நான் யாரையோ கல்யாணம் பண்ணிக்குறேன் இதுல நீ ஏன் இவ்ளோ ஆர்வமா இருக்க?”

“அப்பறம் என்ன? அழகான காதலி, பாசமான அம்மா, உங்களை ஏத்துகிட்ட மாமனார் மாமியார், எவ்வளவு அழகான குடும்பம்ல, நீ உயிரோட இருப்ப, உன்னை சார்ந்தவங்க யாரும் உன் பேர் சொல்ல கூட இருக்க மாட்டாங்க” என மிரட்டும் தொனியில் மருத்துவர் பேசிக்கொண்டிருந்த போதே,

“இங்க பாருங்க டாக்டர், உங்க மேலே எனக்கு ஆரம்பத்திலையே சந்தேகம் இருந்துச்சு, ஆனா கன்ஃபார்ம் பண்ணலை, நீ ஒரு கைகூலின்னு எனக்குத் தெரியும், உனக்குப் பின்னாடி இருக்கத் திமிங்கலத்தைப் பிடிச்சு காட்டுறேன்” சவாலாய் தீரா பேச,

“இளம் ரத்தம் சூடேறி தான் இருக்கும், வருங்கால மனைவி வேற கோமால இருக்கா, சோ காளை மாடு மாதிரி திமலை தூக்கிட்டு தான் நிப்ப, உன்னால அந்தத் திமிங்கலத்தை நெருங்க கூட முடியாது” என மேலும் சூடேற்றிய மருத்துவரை முறைத்தபடி அங்கிருந்து வெளியே வந்தவன் நதியை அனுமதித்திருந்த அறைக்குள் நுழைந்தான்.

“எனக்குத் தெரிஞ்ச ஒரு பெரிய ஹாஸ்பிட்டல் இருக்கு அங்க நதிக்கு டீரீட்மென்ட் கொடுக்கலாம்” என வந்த வேகத்தில் சொல்ல,

“ஏன் தீரா..! இங்க எதாவது பிரச்சினையா? வினோதா அவசரமாய் கேட்டார்.

“இல்லைமா, அங்க கொஞ்சம் சேஃபா இருக்கும், அதோட சீக்கிரமே குணமாக வாய்ப்பும் இருக்கு அதுக்காகச் சொன்னேன்” என அவன் சொல்லி விட அனைவரும் அதற்குச் சம்மதிக்க, வேறு மருத்துவமனையில் சேர்த்தவன், தொடக்கத்திலிருந்து அனைத்து விதமான பரிசோதனைகளையும் மீண்டும் புதிதாக எடுக்கச் செய்தான்.

அதை ரகசியமாகவே செய்தான், பரிசோதனையின் முடிவுகள் அவனுக்கு அதிர்ச்சி தந்ததோடு. குற்றவாளியை நெருங்கும் வழியை காட்டியதால், அதை ரகசியமாக வைத்துக்கொண்டான்.

மற்றவர்களைப் பொறுத்தவரை கார்த்திச் சிறைக்குச் சென்று விட்டான், வழக்கு முடிந்துவிட்டதென்ற எண்ணம், ஆனால் இதை ஒரு மறைமுகமான வழக்ககாகத் தீரேந்திரன் நடத்தி தான் வருகிறேன், ரகசியமாய் நடத்தும் காரணத்தை அவன் மட்டுமே அறிவான்.

மருத்துவர் சொன்ன திமிங்கலம் என்ற வார்த்தை, இந்தச் சம்பவத்திற்குப் பின் பெரிய இடம் இருப்பதை உறுதி செய்துக்கொண்டான் தீரா. அந்தத் திமிங்கலத்தை வலையில் சிக்க வைப்பதா, துண்டில் போடுவதா என்ற யோசனை செய்துக்கொண்டிருந்த போதே, கோபாலன் வந்தார்.

“சார் எதோ சிக்கல் இருக்குறது தெரியுது,எப்போ வேணும்னாலும் நீங்க விசாரணைக்கு வரலாம், நான் உங்களுக்கு உதவி செய்யுறேன்” என அவன் முதுகின் பின்னிருந்து பேச,

“நதியோட ஃப்ரெண்ட்ஸை பார்க்கணும்” எனத் தீரா நேரடியாய் விசயத்திற்கு வந்தான்.

“எனக்குத் தெரிஞ்சவரைக்கும் நிஹாரிகா, மலர், அப்பறம் அந்தக் கார்த்தி. இவங்க மூணு பேரும் தான் அதிக்கு க்ளோஸ்” என விளக்கினார் கோபாலன்.

அவர் சொன்ன பிறகு முதலில் தீரேந்திரன் மத்திய சிறைக்குத் தான் சென்றான் கார்த்தியை சந்திக்க.

“கார்த்தி உன்னை பார்க்க தீரேந்திரன் சார் வந்திருக்காரு” சிறையின் வார்டன் கார்த்தியிடம் தகவலை சொன்னார்.

“அவரைப் பாக்குறதுக்கு எனக்கு விருப்பம் இல்லை” சட்டமாய்ச் சொன்னான் கார்த்தி.

“நீ இப்படிச் சொல்லுவன்னு தெரிஞ்சு தான் ஸ்பெசல் பர்மிசன் வாங்கிட்டு வந்திருக்கேன் கார்த்தி” எனச் சொன்னபடி தீரேந்திரன் சிறைக் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

“என்ன மிஸ்டர் தீரேந்திரன் இந்தக் கேஸை விட்டா, வேற எந்தக் கேஸூம் கிடைக்கலையா..? என்னையே சுத்தி வர்றீங்க” கார்த்தியின் பேச்சில் தெரிந்த மாற்றம் சொல்லாமல் சொல்லியது அவனுக்குக் கொடுத்த கவுன்ஸ்லிங்கில் அவன் மனம் தேறி இருப்பதையும் தீரேந்திரன் உணர்ந்தான்.

“குட் கார்த்தி வெரி குட், என்னை எதிர்த்து பேசுற அளவுக்காவுது வாய் திறக்குறீயே அதுவே போதும் எனக்கு” எனச் சொல்லியபடி மென்னகைத்தான் தீரேந்திரன்.

“வந்த விசயத்தைச் சொல்லுங்க தீரா” திமராய் பார்த்தான் கார்த்தி. அதற்குத் தீரேந்திரன் கொடுத்த பதிலை சற்றும் கார்த்தி எதிர்பார்க்கவில்லை, அவன் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மை அவனைச் சுக்கு நூறாய்க் கிழித்தெறிந்தது.

“உன்னோட ரகசியம் இப்போ எனக்கும் தெரியும் கார்த்தி”

“சார் நீங்க நினைக்குற மாதிரி எதுவும் இல்லை சார், உங்க கிட்ட யாரோ தப்பா சொல்லியிருக்காங்க சார்.”

“கார்த்தி நான் முட்டாள் இல்லை, நான் சொல்றது உண்மைன்றதுக்கும், நீ சொல்றது பொய்ன்றதுக்கும், இதோ ஆதாரம்” எனச் சில காகிதங்களில் அவன் முன் நீட்டினான். அதைப் பார்த்தவுடன் கார்த்தி

“நோ..!” என்று அலறினான்.

“இப்போ சொல்லு என்ன நடந்திச்சு..?” கூர்மையான பார்வையுடன் கார்த்தியை நெருங்கினான் தீரேந்திரன்.

“சொல்ல முடியாது உங்க போலீஸ் மூளையை வச்சு என்ன கண்டுபிடிக்க முடியுமோ கண்டுபிடிச்சுகங்க, ஆனா கடைசி வர உங்களால ஒரு ஆணியும் பிடுங்க முடியாது” எனச் சொன்னவன் நக்கலாய் சிரித்தான்.

“உன்னை ஒருவழி பண்ணுறேன் கார்த்தி, இதுக்கு நீயும் உடந்தைன்னு மட்டும் தெரியட்டும் அப்பறம் இருக்கு கார்த்தி உனக்கு”

“என்ன பண்ண முடியும் உங்களால, உங்க ஸ்டேசன்ல தான் நான் இருந்தேன் அப்போவே உங்களால கண்டுபிடிக்க முடியல, அட்லீஸட் சம்பவம் நடந்த ஸ்பாட்டுக்குப் போய்ப் பார்த்திங்களா.? வேற எந்தக் கேஸூம் இல்லைன்னு இங்க வந்துட்டாரு” தீராவுக்கு அவனுடைய பேச்சு எரிச்சலை மூட்டியது.

“நான் இதோட நின்னு போகமாட்டேன் கார்த்தி என்னோட கேஸ்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன், உன்னை மாதிரி கொசுக்கு பின்னாடி ஒழிஞ்சிருக்க அந்த மிருகத்தைக் கண்டுபிடிப்பேன்” உறுதியாய் சொல்லி நகர்ந்தபோது தான் கவனித்தான், கார்த்தியின் முகம் பளபளபளத்தது, இத்தனை நாளில் கார்த்தியை அப்படி அவன் பார்த்ததில்லை அதை அலட்சியம் செய்தான் தீரேந்திரன்

“இங்க பாருங்க சார், நீங்க யாரை விசாரிச்சாலும் உங்களால இதுக்குப் பின்னாடி இருக்க மர்மத்தை கண்டுபிடிக்கவே முடியாது, நீங்கலாம் போலீஸ்காரங்க கும்பிடு போடுட்டு போய்கிட்டே இருப்பீங்க”

“இப்படியே பேசிட்டு இருந்த உன்னை இங்கேயே சுட்டுருவேன்டா கார்த்தி” என்றவன் துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றி பொட்டில் வைத்தான்.காவல் அதிகாரி ஆக வேண்டும் என்பது அவனின் கனவு, அப்படியொரு உத்யோகத்தை தவறாய் பேச, பட்டென கோபம் வந்து சட்டென மறைந்தது.

“இப்ப நீங்க சுட்டு நான் சாகப் போறதில்லை, நான் ஏற்கனவே செத்துட்டேன், எனக்காக உங்க புல்லட்டை வேஸ்ட் பண்ணாதீங்க சார், உங்க புல்லட்டுல வேற பேர் எழுதியிருக்கு, அந்தப் பேர் என்னன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்” என்றவன் சிறையே அதிரும் அளவிற்குச் சிரித்தான்.

“அந்தப் பேரை மட்டும் சொல்லு உன்னோட அதிக்காக” அவன் விழியைப் பார்த்தபடி சொல்ல,

“என்னோட அதியா யாரு அவளா? அவளைப் பத்தி என்கிட்ட எதுவும் கேட்காதீங்க” அவன் தடுமாற்றமாய்ச் சொல்ல.

“என் கையில இருக்க இந்தப் பேப்பர்ஸ் போதும் உனக்கும், அகரநதிக்கும் இருக்குற உறவை பத்தி சொல்றதுக்கு, என்கிட்ட நீ நடிக்க வேண்டிய அவசியமே இல்லை கார்த்தி, நீயும் நானும் ஒரே விசயத்துக்குத் தான் போராடுறோம்”

“ஆமா அகரநதிக்கு” எனத் தனக்குள் முணுமுணுத்தான் கார்த்தி.

“அடுத்தத் தடவை வரும் போது நதி கூடத் தான் உன்னை பார்க்க போறேன், அப்போ என்னை நீ ஏமாத்த முடியாது கார்த்தி” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் தீரேந்திரன்.

தீரா தேடலும்..!

தீரா காதலும்..!

அவளுக்காக..!

நதியாய் அவள்..!

கரையாய் நான்..!

தீருமோ தேடலும்..!

சேருமோ காதலும்..!

தீராநதியாவோம்..!

தீராவின் நதியே..!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. தீராவோட அந்த புரோபசல் அழகா இருந்தது … ஆனா அடுத்து என் மனசுல யாரும் இல்லைன்னு சொல்லிட்டானே … இப்போ தீரா வோட கவிதையா இது …

    பெரிய பெரிய ட்விஸ்ட் எல்லாம் இருக்கும் போலயே … பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன தான் நடக்க போகுதுன்னு …

  2. தீரா மீதான அகரின் காதலை அவன் அறிந்து கொண்ட விதமும் சூழ்நிலையும் வித்தியாசமாக, அழகாக, உணர்வுபூர்வமாக இருந்தது. ❤️

    தீராவின் தொடுகை மற்றும் சொல்லிற்கு அகரின் அசைவுகள் அவளது ஆழ்மன காதலின் அளவை படம் போட்டு காட்டுவதாக.

    அவளிடம் வாக்குமூலம் வாங்குவதற்காகவா அவளை தீராநதி ஆக அழைத்தாய் தீரா? நம்பும்படி இல்லையே!

    கார்த்தி தீராவிடம் பேசிய விதம் அவனிடம் தீவிரமான தேடலை தூண்டி விடுவதாக.

    விறுவிறுப்பாக செல்கின்றது. ❤️