Loading

அத்தியாயம் – 8

 

“ஆதும்மா, நிஜமாவே எனக்கு விகா மாதிரி நடிச்சு, அகி உன்னை ஏமாத்திட்டு இருக்கானு முன்னாடியே தெரியாது. எந்த ஒரு ஆதாரமும் இல்லாம எப்படி ஒருத்தர் மேல நான் பழி போட முடியும்.” என்று ஆதிராவின் காலைப் பிடித்தவாறு பேசினார் ராமச்சந்திரன்.

“நடந்ததைப் பத்திப் பேசி என்ன ஆகப் போதுப்பா, இதுல உங்க தப்பு என்ன இருக்கு?”

“முன்னாடியே சொல்லியிருந்தா நீ இவ்வளவு காயப்பட்டிருக்க மாட்டியே ஆது?”

“கையை மீறிப் போன விசயம் அப்பா இது. நம்மள ரொம்ப யோசிக்க விடாம அடுத்தடுத்து எல்லாம் நடந்து போயிருச்சு. இப்போ இதைப் பத்திப் பேசியோ, நினைச்சு வருத்தப்பட்டோ, ஒன்னும் ஆகப் போறது இல்லை. அடுத்து என்ன நடக்கப் போகுதோ அதைப் பத்தி மட்டும் பேசலாமே.”

“இல்லை ஆது, இது இப்படியே முடியப் போற விசயம் கிடையாது.”

“அவனைத் தூக்கி வச்சுப் பேசி என்னைக் கீழ தள்ளுறிங்க. நான் பார்த்துக்கிறேன், நீங்க கவலைப்படாதிங்க.” என்றவள் அவர் அடுத்து சொல்ல நினைப்பதைக் கேட்க விருப்பமில்லாமல் அவள் அறைக்குச் சென்று விட்டாள்.

செல்லும் ஆதிராவைப் பார்த்தவருக்கு மனம் பிசைந்தது, “இவளுக்கு எதுவும் ஞாபகம் இல்லையா சீதா?”

“எனக்கும் அந்தச் சந்தேகம் இருக்குங்க?”

“சொல்ல வர்றதை முழுசாக் கேட்காமல் போயிட்டா. அடுத்து என்ன நடக்கப் போகுதோன்னு எனக்கு ஒரு மாதிரி மனசு தவிக்குது.”

“நீங்க எதையாவது போட்டு மனசை உழற்றிக்கிட்டு இருக்காதிங்க. நான் விக்கியைப் பேசச் சொல்லுறேன். அவன் பேசுறதைக் கொஞ்சமாச்சும் காது கொடுத்துக் கேட்பா”

“சரிமா, நீ விக்கினு சொன்னதும் தான் ஞாபகம் வருது. மதியம் போய் குழந்தையைப் பார்க்க நினைச்சேன். ஆதுகூட இந்த நேரத்தில் இருக்கணும்னு நேரா வீட்டுக்கு வந்துட்டேன். நீயும் வரியா, ஆறு மணிக்குப் போய் பார்த்துட்டு வரலாம்.”

“ம்ம் வரேங்க, குழந்தை முகம் கண்ணுக்குள்ளயே நிக்குது.”

“சரி, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போகலாம்.” என்று அவர்களது அறைக்குச் சென்றார்.

அதே வேளை, ஆதிராவின் அலுவலகத்திற்குச் சென்றான் விகர்ணன். அவன் அங்கே வருவான் என்று முன்பே ஆதிரா கூறி இருந்ததால், அவனுக்காகக் காத்திருந்தார் வினோத். நாற்பதின் தொடக்கத்தில் இருக்கும் வினோத், கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக ஆதிராவின் அலுவலகத்தில் வேலை செய்கிறார். கடைநிலை ஊழியனாகத் தனது பணியை அங்கே ஆரம்பித்தவர், இன்று அந்த ஒட்டுமொத்த அலுவலகத்திற்கும் மேலாளராக உயர்ந்துள்ளார்.

உள்ளே விகர்ணன் வந்ததும் நேராக அவனிடம் வந்த வினோத், “ஹாய் சார்.” என,

“ஹாய் வினோத் , ஆதிரா வரச் சொல்லி இருந்தாங்க.”

“மேம் என்னை டீல் பண்ணச் சொல்லி எனக்கு அசைன் பண்ணிருக்காங்க. நம்ப கான்பிரன்ஸ் ஹால் போகலாம்.” என்று விகர்ணனுடன் கான்பிரன்ஸ் ஹாலுக்குச் சென்றார் வினோத்.

“டேக் யுவர் சீட் சார்.” என்று அவனை அமர வைத்தவர் அவனது ப்ராஜெக்டில் வேலை செய்யும் நபர்களை அலைபேசியில் அழைத்தார்.

அனைத்தையும் அமைதியாகப் பார்த்தவனுக்கு நன்றாகப் புரிந்தது. இவர்களுடனான ஒப்பந்தத்தை ஆதிரா முறிக்க நினைக்கிறாள் என்று. எதற்கும் தான் தயாராக இருப்பதாக முகத்தை வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தான்.

அனைவரும் வந்துவிட விகர்ணனிடம் வந்த வினோத், “சார், ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று கேட்க,

“யா ப்ரோசீட்!” என்று சாவகாசமாக நாற்காலியில் சாய்ந்து அவர் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தான்.

“குட் ஈவ்னிங் ஆல். ரெண்டு மாசமா ஏ.வி குரூப் ஆப் கம்பெனியோட ப்ளெக்ஸ் ப்ராஜெக்ட்ல, நம்ப டை அப் பண்ணி வேலை பார்த்துட்டு இருக்கோம்.

மொத்தமா ஏழு மாசம் காண்ட்ராக்ட் போட்டிருக்கோம். அதுக்குள்ள முடிக்கச் சொல்லி ஏற்கெனவே பேசி வச்சு இப்போ நாற்பது சதவீதம் முடிஞ்சுருச்சு.

இந்த ப்ராஜெக்ட்ல இதுவரை நம்ப சைடுல இருந்து ஏழு பேரும், அவங்க சைடுல இருந்து ஒன்பது பேரும் வேலை பார்த்துட்டு இருக்கீங்க.

ப்ராஜெக்ட் டைம் ரொம்ப டிராக் (drag) ஆகுறதுனால, ஆதிரா மேம் நம்ப சைடு இருக்கற மேன் பவரை இன்க்ரீஸ் பண்ணச் சொல்லி, நேத்து லிங்கம் சாருக்கு பர்சனலா ரெக்வஸ்ட் பண்ணி அப்ரூவ் வாங்கிருக்காங்க .

இன்னும் நாலு பேர் உங்க டீம்ல ஜாயின் பண்ணுறாங்க. அவங்க டீடைல்ஸ் இன்னும் ஒன் ஹவர்ல எல்லாருக்கும் மெயில்ல இன்பார்ம் பண்ணுவோம். அண்ட் ப்ராஜெக்ட் முடியும் வரை எல்லாருக்கும் வொர்க் பிரம் ஹோம் கொடுக்குறோம். ஹாவ் அ நைஸ் டே!” என்று அவர்களை அனுப்பிவிட்டு விகர்ணனைப் பார்த்தார்.

“எல்லாம் ப்ரீ-பிளான் பண்ணி உங்க மேம் பண்ணிருக்காங்க போல.” என்று நக்கலாகக் கேட்டான்.

“சார், எனக்குக் கொடுத்த வேலையைத் தான் செய்யறேன் மத்தபடி எனக்கு ஒன்னும் தெரியாது. இது நியூ காண்ட்ராக்ட் சார். அதுக்கான பேப்பர்ல சைன் பண்ணத்தான் உங்களை வரச் சொல்லி இருந்தோம்.

இனி உங்களுக்கு அலைச்சல் இருக்காது சார். கால்ஸ் அண்ட் மெயில் மூலமா எம்ப்ளாய்ஸை கான்டாக்ட் பண்ணிக்கலாம்.

நீங்க விருப்பப்பட்டா, உங்க ஆபீஸ்ல அவங்களுக்கு ரூம் கொடுத்து அங்க வந்தும் வேலை செய்யச் சொல்லலாம்.

டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் படி, உங்க ஆபீஸ் அல்லது அவங்க கன்வினியன்ட் வொர்க் பிளேஸ்ல அவங்க வொர்க் பண்ணிக்கலாம் சார்.”

“பைன், வேற ஏதாவது இருக்கா?” என்று எரிச்சலோடு கேட்டவனைப் பார்த்தவர்,

“நெக்ஸ்ட் உங்ககூடப் பண்ண இருந்த ப்ராஜெக்ட் அப்ருவ் ஆகல. சாரி சார்.” என்று அவர் கூற அவனுக்கு எரிச்சலாக இருந்தது.

“தேங்க்ஸ் போர் தி இன்ஃபோ” என்று வேகமாக எழுந்தவன் அந்த இடத்தை விட்டு வெளியேறும் நோக்கத்தில் விறுவிறுவென நடக்க, எதிரே வந்தவளைக் கவனிக்காமல் இடித்துவிட்டு விருட்டென்று அந்த இடத்தைக் காலி செய்திருந்தான் .

மின்னல் போல இடித்ததும் தெரியாமல், சென்றதும் தெரியாத அளவிற்கு வேகமாகச் சென்றவனை, “அறிவுகெட்ட தடிமாடே, கண்ணு என்ன பின்னாடி வைச்சுட்டு நடப்பியா?” என்று அவள் திட்டியது அவன் காதை அடையும் முன்பே வாசலிற்குச் சென்றிருந்தான் விகர்ணன்.

தான் திட்டியும் அவன் நிற்காமல் செல்ல அது மேலும் அவளைக் கோபமூட்டியது.

“மலமாடு மாறிப் போறான் பாரு. கண்ணும் தெரியல, காதும் கேக்கல. இவனையெல்லாம் எவன் வேலைக்கு வைச்சது?” என்று பல்லிடுக்கில் திட்டியபடி, அவள் தவறவிட்ட அவளது பைலுடன் ஹெச்.ஆர் அறைக்குச் சென்றாள்.

முறையாக அனுமதி வாங்கி உள்ளே சென்றவள், “ஹாய் ஐ ஆம் மென்னிலா!” என்று ஹெச்.ஆரிடம் அவளை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“ஹாய். டேக் யுவர் சீட். மோர்னிங்ல இருந்து உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணுறேன். ஹவ் இஸ் யுவர் ஜெர்னி?”

“லாஸ்ட் மினிட்ல நீங்க சொன்னதால் என்னால கரெக்ட் டைமுக்கு ரிப்போர்ட் பண்ண முடியல. அட் அ ஸ்ட்ரெச்ல கார் டிரைவ் பண்ணி வந்திருக்கேன். கொஞ்சம் டயர்டா இருக்கு. பட் அது ப்ராப்ளம் இல்லை. இதெல்லாம் எனக்குப் பழக்கமானது தான்.”

“இம்மீடியட் ரீசோர்ஸ் தேவை. அதான் உங்களை உடனே வரச் சொல்லி சொன்னாங்க. ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. அங்க நீங்க ஸ்டே பண்ணிக்கலாம்.”

“நோ இஸ்யூ. நான் வரும்போது அதெல்லாம் ரெடி பண்ணிட்டேன். வினோத் சார் கிட்ட ரிப்போர்ட் பண்ணனும்.”

“அவர் பிளேஸ்ல இருப்பாரு. நீங்க எதுக்கும் கால் பண்ணிக் கேட்டுக்கோங்க. அண்ட் தேங்க்ஸ் உடனே வந்ததுக்கு.”

“வித் பிளசர்!” என்று வினோத்திற்கு அழைக்க, அவரோ பத்து நிமிடத்தில் அவள் இருக்கும் இடத்திற்கு வருவதாகச் சொல்லி அழைப்பைத் துண்டித்தார்.

அப்போது தான் கவனித்தாள். அவள் கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய சங்கிலி அறுந்து ஒரு பக்கமாகத் தொங்கிக் கொண்டிருந்ததை. பதறி விட்டாள்.

அவளுக்காக, அவளே வடிவமைத்துக் கடையில் செய்து வாங்கியது. அதுவும், ஆசை ஆசையாக வாங்கியதாலோ என்னவோ, அது அவளைச் சற்று வருந்தச் செய்தது.

எல்லாம் அவன் இடித்ததால் தான்… என்று மொத்தக் கோபத்தையும் அவன் பக்கத்திற்குத் திருப்பினாள்.

‘ச்ச! முதல் நாளே என்னை மூட் அவுட் பண்ணிட்டான்.’ என்று சில பல பீப்களில் மனத்தில் அவனை வறுத்தெடுத்தவளுக்கு மனம் கொஞ்சமும் ஆறவில்லை. செயினை கைப்பையில் வைத்தவள், நேராகச் சென்றது என்னவோ செக்யூரிட்டி செக்சனிடம் தான்.

நடந்ததை அவர்களிடம் கூறி சிசிடிவி பார்க்கக் கேட்டாள். முதலில் அவர்கள் மறுத்துவிட, பேசிப் பேசியே அவர்களைக் கரைத்து அவளை இடித்துச் சென்ற நேரத்தைக் கூறி, வீடியோவைக் காண்பிக்க ஒத்துக் கொள்ள வைத்து விட்டாள். அவர்கள் காண்பித்ததைப் பார்த்தவள், புருவம் உயர்த்தி அவனை மனத்தில் பதிய வைத்துக்கொண்டு, அவனைப்பற்றிச் சில தகவல்களைச் சேகரித்துக்கொண்டு, வினோத்தைப் பார்க்க மீண்டும் அவள் நின்றிருந்த இடத்திற்குச் சென்றாள் மென்னிலா.

 

****

 

அகர்ணன் வீட்டிற்கு வந்துவிட்டதை அறிந்த லிங்கத்திற்கு, உடனே அவனைக் காணவேண்டும் என்று ஆவல் எழுந்தாலும், அதை அவனிடம் காண்பிக்கப் பிடிக்காமல் எப்பொழுதும் செல்லும் நேரத்திற்கு வீட்டிற்குச் சென்றார்.

அவரின் எண்ணத்தைக் கல்யாணி உணர்ந்ததாலோ என்னவோ, அவரைச் சீக்கிரம் வரும்படி வற்புறுத்தவில்லை. அவர் வீட்டிற்கு வந்த நேரம் அகர்ணன் அவனது அறைக்குச் சென்றிருந்தான். வந்தவர் கண்களைச் சுழற்றி அவனைத் தேடியபடி கல்யாணியிடம் தேநீர் கேட்டார்.

“அவன் டிரெஸ் மாத்தப் போயிருக்கான், இப்போ வந்திருவான்.” என்று அவர் கேட்காமலே பதில் கொடுத்துச் சமையலறைக்குள் புகுந்தார்.

சற்று நேரத்தில் அகர்ணன் கீழே வர, அவனைப் பார்க்காதது போல் அலைபேசியைப் பார்த்திருந்தார் லிங்கம்.

அவரது செய்கை அவனுக்குச் சிரிப்பைக் கொடுக்க, விரிந்த புன்னகையுடன் அவர் அருகே அமர்ந்தவன், “எப்படி இருக்கீங்க டாடி?” என்றான்.

அவனை அப்போது தான் பார்ப்பதாகக் கண்ணில் வியப்பைக் கூட்டி, “நான் எப்பவும் போலத்தான் இருக்கேன். நீ ஏன் டா இப்படி ஆகிட்ட?”

“எப்படி டாடி?”

பெருமூச்சு விட்டவர் நொடியில் தன்னைச் சரி செய்து கொண்டு, “எப்போ இந்தியா வந்த?”

“கொஞ்ச நாள் ஆகுது. எனக்கு முடிக்க வேண்டிய வேலை கொஞ்சம் இருந்தது. எல்லாம் முடிச்சுட்டு வந்தேன்.” என்றான்.

ஆற்றாமையாக இருந்தாலும், நடந்து முடிந்த எதற்கும் அவனிடம் விளக்கம் கேட்கவில்லை. எதைக் கேட்டாலும், அதற்குக் குதர்க்கமாக ஒரு பதிலை வைத்திருப்பவனிடம், பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்று அதைத் தவிர்க்க முடிவு செய்துவிட்டார்.

“என்ன பண்ணலாம்னு இருக்க. எங்க கூட ஆபீஸ் வரியா?”

“யோசிச்சு சொல்லுறேன் அப்பா…”

“சரி டா,நான் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்.” என்று உடை மாற்றி மாலைச் சிற்றுண்டி அருந்த, உணவு மேடையில் அனைவரும் கூடியிருக்க, சோபாவில் அலுவலகப் பையை விட்டு எறிந்த விகர்ணன், நேராக லிங்கத்திடம் சண்டைக்கு வந்தான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்