அத்தியாயம் 7
அன்று, இளா காஸ்மெடிக்ஸ் அண்ட் லெதர் பேக்டரிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.
அதற்காக ஒரு வாரம் கடந்த நிலையில், இன்று நேர்முகத் தேர்விற்கு ஆட்கள் வந்து இருந்தனர்.
அவர்களை நேர்காணல் எடுக்கும் பொறுப்பை வைஷுவும் இனியனும் எடுத்துக் கொண்டனர். பரிதியோ அன்று அவன் அலுவலகத்திற்கு வரவில்லை. இவர்கள் இருவரை மட்டும் அலுவலத்திற்கு அனுப்பி வைத்து விட்டு நேராக அவன் தொழிற்சாலைக்குச் சென்று விட்டான். அங்கு நடக்கும் வேலைகளை மேற்பார்வையிட.
ஒவ்வொருவராக நேர்காணல் எடுக்க, இறுதியாக பத்து பேரை தேர்வு செய்து இருந்தனர்.
அவர்களின் விவரங்களை பத்திரமாக சேகரித்துக் கொண்டனர்.
“நீங்க நாளைல இருந்து வேலையில ஜாயின் பண்ணிக்கலாம். இங்க வந்து அப்பொய்ன்மெண்ட் ஆர்டர் வாங்கிட்டு அதுக்கு அப்புறம் பேக்டரிக்கு நீங்க போகலாம். அங்க இருக்கிற மேனேஜர் உங்கள கெயிடு பண்ணுவாரு..” என்றான் இனியன்.
“ஓகே சார்..” என்று தேர்வு செய்யப்பட்டவர்கள் அவர்களிடம் நன்றியையும் சேர்த்துச் சொல்லி விட்டு கிளம்பிச் சென்றனர்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்த பத்து பேரும், அவர் அவர் வாகனங்களில் புறப்பட, ஒருவன் மட்டும் வெளியே வந்து யாருக்கோ தொடர்பு கொண்டான்.
” சார்.. நீங்க சொன்ன மாதிரி இன்டெர்வியூக்கு வந்து செலக்ட் ஆகிட்டேன். நாளைக்கே வேலைல ஜாயின் பண்ணிக்க சொல்லிட்டாங்க சார். ” என்றான் அவன்.
“வெரி குட் .. இனி நான் நெனச்சதை உன் மூலமா நடத்திக் காட்டுறேன்.” என்று சொல்லி விட்டு, சத்தம் போட்டுச் சிரித்தான் அவன்.
“சார். அதான் நீங்க சொன்ன மாதிரி நான் செலக்ட் ஆகிட்டேன்னே.. அதுக்கு ஏதாவது..” என்று இழுத்து பேசியப்படி காதை சொரிந்தான்.
“ம்ம்ம். அக்கௌன்ட்க்கு அனுப்பி விடுறேன். ” என்றான் அந்த பக்கம் பேசியவன்.
“சரிங்க சார்.. ரொம்ப நன்றி சார்..” என்று ஆள் நேரில் இருப்பது போல குனிந்து நிமிர்ந்து பதில் கூறினான்.
“நீ முதல்ல நாளைக்கு ஜாயின் பண்ணு. அப்புறம் நான் எப்போ என்ன சொல்றேனோ அதைப் பண்ணு..” என்றான் வன்மமான புன்னகையுடன்.
” ஓகே சார்.. ” என்றவன், “சரிங்க சார்.. நான் வைக்கிறேன்.” என்று அழைப்பைத் துண்டித்தான்.
அந்தப் பக்கம் பேசியவனோ, வன்மமாக சிரித்துக் கொண்டான்.
அதே சமயத்தில், பரிதியின் புகைப்படத்தை காளி தன் அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தவன், தன் அடியாட்களுக்கு அதைக் காண்பித்தான்.
“இதோ பாருங்க டா. ஆளு இவன் தான். இவனை தான் நம்ம போடணும். என்கிட்ட சொல்லி பத்து நாள் ஆகப்போகுது.. இந்த பத்துனாலும் அவன் என்ன பண்றான்.. எந்த வழியா போறான் வர்றான் அப்டின்றதைத் தான் நான் வாட்ச் பண்ணிட்டு இருந்தேன். அவனை மர்டர் பண்றது ஏதேர்ச்சியா நடந்த போல இருக்கனும். அவனும் பெரிய இடம். போடச் சொல்லி சொன்ன ஆளும் பெரிய இடம். அதுனால இதை நம்ம ஜாக்கிரதையா தான் ஹேண்டுல் பண்ணனும்..” என்று அவர்களை எச்சரித்துக் கொண்டிருந்தான்.
“அண்ணே.. இதுக்கு நம்ம முனியன் தானே சரியா இருப்பான். ” என்று அவர்களின் கூட்டத்தில் இருந்த ஒருவன் கூற,
“நானும் அதான் நெனச்சேன். அவன்கிட்ட இந்த வேலையைச் சொன்னால், நீட்டா முடிச்சி விட்டுருவான். எந்த வித சந்தேகமும் வராது..” என்றான் அவர்களை பார்த்து கேவலமாகச் சிரித்தபடி.
அடுத்த சில நொடிகளில் முனியன் என்பவனுக்கு அழைத்து விஷயத்தைக் கூறினான்.
அவனும், “அண்ணே அவன் போட்டோ அப்புறம் அவனைப் பத்தி டீடெயில்ஸ் எல்லாம் அனுப்பி விடுங்க. நான் பார்த்துகிறேன்.” என்றவன் அழைப்பைத் துண்டித்த சமயம் அவனது புலனத்தில் குறிஞ்செய்தி வந்ததற்கான சத்தம் கேட்டது.
உடனே அதை திறந்துப் பார்க்க, புகைப்படத்துடன் விவரங்கள் எல்லாம் தெளிவாக அனுப்பப்பட்டு இருந்தது.
அதோடு இன்று அவன் அலுவலகம் வரவில்லை என்பதையும் அவன் மட்டும் தொழிற்சாலை சென்று இருக்கின்றான் என்பதையும் கூடுதல் விவரமாக அனுப்பி வைத்து இருந்தனர்.
அந்த தொழிற்சாலை இருக்கும் பகுதியையும் அவனுக்கு அனுப்பி வைத்து இருந்தனர்.
“ஓ… இவன் இந்த வழியா தான் போவானா. நம்ம ஏரியா.. பார்த்துக்கலாம்..” என்றவாரு அவனும் வெற்றிக் களிப்பைச் சிந்தினான்.
கூடவே, அவனது வங்கிக் கணக்கிற்கு முன் பணம் வேறு வந்து சேர்ந்தது.
******************
நிரஞ்சனாவும் விக்ரமும் சுவற்றில் மாட்டப் பட்டிருந்த அவனது தாய் தந்தையின் புகைப் டத்திற்கு முன் நின்று இருந்தனர்.
விக்ரம் அமைதியாக நின்று இருக்க, நிரஞ்சனாவோ, விளக்கு ஏற்றிக் கொண்டிருந்தாள்.
அது முடிந்ததும், “விக்ரம், அம்மா அப்பாவை கும்பிட்டுக்கோ..” என்று அவள் தம்பியிடம் கூற, அவனும் அவர்களிடம் தங்கள் கோரிக்கைகளை வைத்தனர்.
“அம்மா.. அப்பா.. இன்னைக்கு தம்பிக்கு ஆபரேஷன் பண்ண போறாங்க. அவனுக்கு நல்ல படியா கண் பார்வை கெடச்சி, திரும்பவும் அவன் இந்த உலகத்தைப் பாக்கணும். நீங்க எங்க கூடவே துணைக்கு இருந்து எங்களுக்கு நல்ல வழி காட்டணும்..” என்று வேண்டிக் கொண்டாள் அவள்.
விக்ரமும் அதே போல தான் வேண்டிக் கொண்டான். என்ன அவனின் குழந்தை தனம் மாறாமல் வேண்டுதல் வைத்தான் அவன் பெற்றோரிடம்.
தான் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை பத்திரமாக எடுத்துக் கொண்டு அதனுடன், அவனுக்கு அங்கே தங்குவதற்கு தேவைப்படும் பொருட்கள் மட்டும் உடைகளை எடுத்துக் கொண்டாள்.
வழக்கமாக கூப்பிடும் ஆட்டோக்காரருக்கு அழைத்து, வரும்படி சொல்லிவிட்டு, இவர்கள் இருவரும் வாசற்கதவை பூட்டி விட்டு வெளியில் வந்து நின்றனர்.
சில நிமிடங்களில் ஆட்டோக்கார அண்ணாவும் வந்து சேர, பக்கத்து வீட்டு பெண்மணியிடம் கூறி விட்டு, இருவரும் சென்றனர்.
இவர்கள் மாலை நான்கு மணி போல கிளம்பினர். ஆதவன், எப்பொழுதோ கிளம்பிச் சென்று விட்டான் போலும். அப்பொழுதே மந்தமான வானிலை தான் காணப்பட்டது.
எப்படியும் மருத்துவமனையை அடைவதற்குள் நான் கீழிறங்கி விடுவேன் என்று கருமேகம் மிரட்டிக் கொண்டிருந்தது ஒரு பக்கம்.
“விக்ரம்.. என்ன டா.. மழை வரும் போல தெரியுதே.. இப்பவே இருட்டிகிட்டு வருது. ரொம்ப பெரிய மழை வந்தால் போக முடியாதே அந்த பக்கம்..” என்று ஒரு பக்கம் அதனை எண்ணி கவலை கொண்டாள் பெண்ணவள்.
இவர்கள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, பரிதியோ அங்கு வேலைகளை எல்லாம் பார்த்து விட்டு தொழிற்சலையில் இருந்து அலுவலகம் செல்லலாம் என்று எண்ணி வெளியே வந்து பார்த்தவன், மழை வரும் அறிகுறி வெகுவாக தென்பட்டதால் வீட்டிற்கே செல்லலாம் என்று முடிவு எடுத்து காரை வீட்டை நோக்கிச் செலுத்தினான்.
அவன் வருவதற்காகவே காத்து இருந்தான் முனியன்..
ஆட்டோவில் சென்று கொண்டிருந்தவர்களுக்கு திடீரென இடி சத்தம் கேட்டதும் அதனை தொடர்ந்து மழை விழுகத் தொடங்கியதையும் உணர்ந்தனர்.
ஆரம்பிக்கும் போதே பெரிதாக விழ, மழையின் வேகம் இருக்க இருக்க கூடிக் கொண்டேத் தான் சென்றது.
அவர்கள் செல்ல வேண்டிய சாலையில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கேடுத்து ஓடிக் கொண்டிருந்தது..
அதனை கவனித்த ஆட்டோக்காரர், “இந்த பக்கம் போக முடியாது மா இப்போ. நான் வண்டியை ஓரமா அந்த பக்கம் நிப்பாட்டுறேன். மழை கொஞ்சம் குறைஞ்சதும் நம்ம போகலாம் ” என்றார் அவர்.
இப்படி இருக்கும் பட்சத்தில் அவரிடம் கண்டிப்பாக போயே ஆக வேண்டும் என்றும் கூற முடியாது. மழையின் வேகம் சிறிது குறைந்த பிறகு செல்வது தான் சரி என்று அவளும் எண்ணியதால், அவர் கூறியதற்கு “சரி அண்ணா.” என்று கூறி விட்டு அமைதி ஆனாள்.
அதே சமயம் பரிதியும் மழையின் வேகத்தைக் கண்டு காரை மெதுவாகவே ஓட்டினான்.
ஒரு இடத்தில் முனியாண்டி பரிதியை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்க, சரியாக பரிதியின் காரும் அந்த இடத்தை கடந்து சென்றது.
அந்த காரின் இலக்கத்தைக் கண்டதும் அவன் தான் என்று ஊகித்து, அவனின் பின்னாலேயே தனது லாரியை ஓட்டுக் கொண்டுச் சென்றான் முனியன்.
இனியன் மற்றும் வைஷ்ணவி என்று இருவரம் பரிதி உடன் இல்லாமல் இருப்பது முனியனுக்கு சாதகமாக போய் விட்டது.
அவனை ஒரேடியாக தட்டித் தூக்கி விட்டுப் போக.
மழையின் வேகம் ஒரு பக்கம் மிரட்டிக் கொண்டிருக்க, முனியனோ பரிதியின் காரை விரட்டிக் கொண்டிருந்தான்.
சரியாக ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வளைவு ஒன்று வர, அந்த இடத்தில் பரிதி அவனது காரின் வேகத்தை இன்னும் குறைத்து, மெல்லமாக திருப்ப முயன்றான்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பின்னால் இருந்து வேகமாக வந்து அவனது காரை இடித்துத் தள்ள, அதில் நிலை தடுமாறி கார் தலைக் குப்புற கவிழ்ந்து விழுந்தது.
முனியனோ, நிற்காமல் அப்படியே லாரியை ஓட்டிச் சென்று விட்டான்.
எப்படியும் இந்த விபத்தில் அவன் உயிருடன் இருக்க போவது சாத்தியம் இல்லை என்றும் அப்படியே இருந்தாலும் தானாகவே அவனது உயிர் சிறிது நேரத்தில் பிரிந்து விடும் என்று அவன் நினைத்ததை முடித்து விட்ட பெருமிதத்தில் காளிக்கு அழைத்து தகவலைக் கூறி விட்டான்.
ஆனால் அதற்கு தள்ளி சிறிது தூர இடைவெளியில் தான் நிரஞ்சனாவும் விக்ரமும் வந்த ஆட்டோ நின்று இருந்தது.
பெருத்த சத்தம் கேட்டு என்னவென்று வெளியே எட்டிப் பார்க்க, கார் ஒன்று கவிழுந்து கிடந்ததில் இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
அந்த கண நேர அதிர்ச்சிக்கப் பிறகு ” அண்ணா.. அந்த கார்ல வந்தவரு என்ன ஆனாருனு தெரியல. நம்ம போய் பார்ப்போம்.. ” என்று படபடப்பாகவும் பதட்டமாகவும் அந்த ஆட்டோக்காரிடம் கூற, அவரும் அவளுக்கு துணையாக வந்தார்.
அருகில் இருந்த விக்ரமிடம் நிலவரத்தைக் கூறி விட்டு இருவரும் அவசரமாக இறங்கி மழையில் நனைந்த படியே ஓடினர்.
காரின் அருகில் வந்து உள்ளே எட்டிப் பார்க்க, பரிதியோ தலையில் பலத்த அடிப் பட்டு, ரத்தம் வெள்ளத்தில் கிடந்தான்.
“அய்யோ.. ரொம்ப அடிப்பட்டு இருக்கு. உயிர் இருக்கானு தெரியலயே..” என்று ஆட்டோக்காரர் அவனின் நிலைமையை பார்த்துச் சொல்ல அவளுக்கோ என்ன செய்வதேன்றே தெரியவில்லை.
உடனே சற்றும் தாமதிக்காமல், அவனது இதயத்தில் கையை வைத்துப் பார்க்க, அது லேசாக துடித்து, தன் இருப்பை காட்டிக் கொண்டிருந்தது.
“அண்ணா.. அவருக்கு உயிர் இருக்கு போல. நம்ம சீக்கிரம் அவரை ஹாஸ்பிடல் கொண்டு போகலாம். வேற வண்டி இந்த மழையில வருமானும் வேற தெரியல.. ஆட்டோவில கூட்டுட்டு போயிரலாம்..” என்றவள் எப்படியாவது உயிருக்கு போராடும் அந்த நபரை காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பதட்டத்துடன் ஆட்டோக்காரரை அவசரப்படுத்த, அவருக்கும் அந்த அவசரம் தொற்றிக் கொண்டது போல.
அவரும் சரிம்மா என்றவர், அவனை வண்டியில் இருந்து வெளியே கொண்டு வர, இருவரும் வெகு சிரமப் பட்டு போயினர்.
அதுவும் மேலும் அவனுக்கு காரின் உடைந்த பாகங்கள் மூலம் அடி எதுவும் பட்டு விடக்கூடாது கூடாது என்று கவனமாக செயல் ஆற்றினர்.
ஒரு வழியாக அவனை வெளியே இழுத்து கீழேப் படுக்க வைக்க, “நான் ஆட்டோ எடுத்திட்டு வந்துருறேன். இரும்மா..” என்று அவளிடம் கூறி விட்டு, உடனே ஓடிச் சென்று ஆட்டோவை ஸ்டார்ட் செய்து அவளின் அருகே கொண்டு வந்து நிறுத்தினார்.
பின் இறங்கி வந்து இருவருமாக சேர்ந்து அவனை ஆட்டோவில் படுக்க வைத்து மருத்துவமனை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.
நித்தமும் வருவாள்..