
நதி 7
அன்று
கல்லூரியில் தேர்வு நடைபெறும் நாள், கல்லூரி முழுவதும் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது மாணவர்கள் புத்தகமும் கையுமாக அங்கும் இங்கும் அலைமோதிக் கொண்டிருந்த வேளையில், நிஹாவும் மலர்விழியும், அகரநதிக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.
“என்னடி இவளை இன்னும் காணலை.?” வருத்ததுடன் கேட்டாள் மலர்விழி.
“வருவாடி கார்த்திக் கூட வருவா பாரு” என நிஹா சொல்லிவிட்டுப் புத்தகத்தில் முழ்கி போனாள்.
அதே கல்லூரியின் மரத்தடியில் அமர்ந்தபடி கார்த்திக்கும் அகரநதியும் பேசிக்கொண்டிருந்தனர்.
“அதி ஆச்சா.?” அவன் கேட்டான்.
“என்ன ஆச்சா.? இது எவ்ளோ பெரிய வேலை ஈசியா ஆச்சா கேக்குற?”
“சரி சரி அப்படியே அந்தப் பொண்ண பார்றேன் அழகா இருக்குல” அவனைக் கடந்து சென்ற புயல் பெண்ணைப் பார்த்து சொல்ல, மெல்ல திரும்பி பார்த்துவிட்டு அவனைத் திட்ட ஆரம்பித்தாள்.
“உனக்கெல்லாம் அறிவே இல்லைல அவங்க நம்மளோட சீனியர்டா எருமை” எனத் திட்டிவிட்டு கோபத்தோடு தன் வேலையைத் தொடர்ந்தாள் அதி.
“சரி சரி கோபத்துல தப்பான பிட்ட எழுதிக் கொடுத்திறதாடி, நீ வேற எதுலையாவது என்ன பழிவாங்கிக்க, இதுல வாங்கிறாத” என அவன் பேசிக்கொண்டிருந்த போதே,
“இந்தா முடிஞ்சிருச்சு” எனச் சொன்னபடி சில காகிதங்களை அவன் முன் நீட்டினாள்.
“வாரேவா.! இப்படி ஒரு பிட்ட நான் எங்கேயுமே பார்த்தில்லை, மினி ஜெராக்ஸ் எடுத்தாக் கூட இவ்வளவு குட்டியா இருக்காதே, நீ மினி ஜெராக்ஸ்னு ஒரு கடை போட்டுறேன் அதி, நல்லா வியாபாரம் பார்க்கலாம் அதுவும் எக்ஸாம் டைம்ல, சேல்ஸ் பட்டைய கிளப்பும்” எனச் சில்லாகித்தபடி சொன்னவனைப் பார்த்து முறைத்தாள் அகரநதி.
“அதி ஏன் மொறைக்குற?”
“படிச்சுத் தொலைச்சா தான் என்ன? சரியான தண்டம் நீ, பொறுப்பே இல்லை, எனக்குன்னு ஃப்ரெண்டுன்னு வாச்சிருக்கப் பாரு, நாளைக்கு மட்டும் படிக்காமல் வந்தன்னு வையேன் நான் பிட்டெல்லாம் எழுதி தர மாட்டேன்” எனக் கோபமாய்ப் பேசியபடி, பரீட்சை நடக்கும் கட்டிடத்தை நோக்கி நடக்கத் துவங்கினாள்.
“நாளைக்குப் படிச்சிட்டு வந்தறேன் அதி, எங்க சிரி பார்ப்போம்”
“ஹி ஹி ஹி..! இதைத் தான் நேத்தும் சொன்ன, ஸ்டாஃப் கிட்ட மாட்டிக்காமல் எழுதிட்டு வா எருமை” எனப் பேசியபடி நிஹாவையும், மலரையும் நெருங்கிக்கொண்டிருந்தாள்,
பெண்களையே ஏறிட்டு பார்த்திடாதவன் போல் உடனே ஒதுங்கி நடந்தவன்.
“ஆல் தி பெஸ்ட் அதி..!” எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட, நண்பிகளோடு ஐக்கியமானாள் அகரநதி.
“என்னடா கார்த்திக் பிட்டு ரெடியா..?” அதே வகுப்பை சேர்ந்த அகிலன் கேட்டான். தோழானாக இல்லாவிட்டாலும் வாடா போடா என்று பேசும் அளவிற்கு உரிமை எடுத்துக்கொள்வான் அகிலன்.
“ம்ம் ரெடிடா! அதி தான் எழுதிக்கொடுத்தா, நல்ல பொண்ணுடா அவ” தோழியைப் பற்றிப் பெருமையடித்துக்கொண்டான் கார்த்தி.
“உனக்காக என்ன வேணும்னாலும் செய்வா போல” அவன் சொன்ன தொனியும், முகத்தில் வழிந்த நக்கலும் கண்டும் காணாதது போல், பதில் கொடுத்தான் கார்த்தி.
“அப்படிலாம் இல்லைடா எது சரி, எது தப்புன்னு எடுத்து சொல்ற வெல் விஷர்டா அவ, இன்னிக்கி கூடப் பிட் வைச்சு எழுதாத கார்த்தி, ஒழுங்கா நாளைக்குப் படிச்சிட்டு வான்னு சொல்லிருக்கா” என அவன் பேசிக்கொண்டிருந்த போதே அகிலனின் கன்னத்தில் பளாரென அடி விழுந்தது.
கண்கள் சிவக்க அகரநதியை முறைத்துக்கொண்டிருந்தான் அகிலன். அவனை துணிவோடு அடித்தது அவளே தான்.
“அதி என்ன தைரியமிருந்தால் என் மேல கை வச்சிருப்ப.?” கோபமாய்ச் சீறினான் அகிலன்.
“நீ என்ன கேட்ட கார்த்திகிட்ட? உனக்காக என்ன வேணும்னாலும் செய்வா போலன்னு கேக்குற” சிங்கத்தைப் போல் கர்ஜித்தாள் அதி.
“அதி என்னாச்சுடி? ஏன் பிரச்சனை பண்ணுற விடுடி” கார்த்தி அவளைக் கட்டுபடுத்த முயற்சிக்க.
காலில் போட்டிருந்த செருப்பைக் கழற்றி அகிலனை தாக்கினாள் அதி, அவர்களின் நட்பை தவறாய் பேசியதில் அப்படியொரு கோபம் அவளுக்குள் எழுந்தது. யாரென்று அறியாதவன் தான் கார்த்தி, ஆனால் கல்லூரி வந்த பின் அவனிடம் கிடைத்த நட்பு அதியை தனிமையிலிருந்து வெளியே கொண்டு வந்தது, அவனுக்காக எதையும் செய்ய துணிந்தவள் தான் அதி.
ஆண் பெண் நட்பென்றாலே, அவர்கள் காதலில் தான் இருப்பார்கள் என்ற கீழ்தனமான எண்ணம் அதிக்கு சுத்தமாய் பிடிக்காது, அப்படி இருப்பவர்களை அவள் தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்திக் கொள்வாள்.
“கார்த்தி என்னோட நண்பன், தப்பா பேசுற வேலை வச்சிகிட்ட கொண்ணுருவேன்” அத்தனை மாணவர்கள் எதிரே கர்ஜிக்கும் பெண் சிங்கமாய் மிரட்டினாள் அதி, இடமறிந்து அமைதிக் காத்து நின்ற அகிலனின் கரங்கள் அவனுடைய கன்னத்தைத் தாங்கி நின்றது. அவள் கையிலிருந்த காகிதத்தைக் கார்த்தியிடம் கொடுத்தாள் அதி.
“இதை மறந்துட்ட, இதைக் கொடுக்கத் தான் வந்தேன், அவன் தான் எதோ பேசிட்டு இருக்கான்னா நீயும் பல்லைக் காட்டி பேசிட்டு இருக்க, அவன் எந்த அர்த்ததுல சொன்னான்னு உனக்கு தெரியாதா? அந்த அளவுக்கு லூசாடா கார்த்தி நீ? இனி அவன்கிட்ட பேசுறதை பார்த்தேன் தொலைச்சிருவேன்” எனக் கார்த்தியை விரல் நீட்டி மிரட்டியவள் அங்கிருந்து நகர, பதில் பேச இயலாமல் நின்றிருந்த கார்த்தி, தங்களின் நட்பை எண்ணி கண்கள் கலங்கி போனான்.
அகிலனின் முகத்தில் பழியுணர்வு தேங்கி இருந்தது. அவன் அவமானபட்டதாய் உணர்ந்தான், இது தந்தைக்கு தெரிந்தால் தன் தந்தையின் அரசியல் வாழ்க்கை என்னாவது, இத்தனை பேர் மத்தியில் செருப்பால் அடித்துவிட்டாளே,என்ற கோபம் தலைக்கேறியது ஆனால் தன்னைக் கட்டுபடுத்திக்கொண்டான், இவன் என்ன செய்தாலும் தந்தையின் அரசியல் வாழ்வில் எதிரொலிக்கும், என்ற புரிதலுடன் தேர்வெழுதும் அறையை நோக்கி நடந்தான் அகிலன்.
பரீட்சைக்குச் செல்லும் அவசரத்தில் விரைந்து தனக்கான அறைக்குள் நுழைந்தாள் அதி. மூன்று மணி நேரம் கொண்ட பரீட்சையை ஒன்றரை மணி நேரத்தில் முடித்துவிட்டு கார்திக்கின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
“அதி..!” அவள் முதுகிலிருந்து குரல் கேட்டது பதறியபடி திரும்பி பார்த்தாள்.
“கார்த்தி நீயா..? எப்படா வந்த.?”
“நான் ஒரு மணி நேரத்துலையே பரீட்சைய முடிச்சிட்டு வந்துட்டேன்” எனச் சோகமாய் முகத்தை வைத்தபடி அமர்ந்திருந்தான்.
“எழுதி கொடுத்த பிட்டெல்லாம் கரெக்டா வந்துச்சா? ஏன்டா நீ மூஞ்சியை இப்படி வச்சிருக்க?”
“அதி உனக்கு இவ்ளோ கோபம் ஆகாதுடி, உன்னைக் கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிக்க, இது உனக்கு நல்லதுக்கு இல்லை”
“நான் என்ன கேக்குறேன் நீ என்ன பேசுற, அவனை அடிச்சது தப்புன்னு சொல்லுறீயா.? அப்போ நம்ம ஃப்ரெண்ட்ஷிப்பை பத்தி யார் வேணும்னாலும் கமெண்ட் பண்ணலாமா? அவன் பேசினது உனக்கு தப்பாவே தோணலையா..?” தன் முட்டை கண்ணை உருட்டி கேட்டாள் அவள்.
“நீ பொண்ணுடி, உனக்கு நியாபகம் இருக்கா.? இல்லையா..? பொண்ணுங்க சும்மா இருந்தாலே பிரச்சனை தலைக்கு மேல வந்து நிக்கும்டி, அவனை அடிச்சு நீ ஏன் உன்னை ட்ரபுல்ல தள்ளிக்குற.? இன்னொரு விசயம் நல்லா புரிஞ்சுக்க அதி நம்ம ரெண்டு பேரை பத்தி நமக்கு சரியான புரிதல் இருந்தால் போதும், எவனுக்கோ நம்ம ரீலேஷன்சிப் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப் தான்னு ஃப்ரூவ் பண்ண வேண்டிய அவசியமில்லை அதி.”
முதல் முறையாக சற்று கடுமையாய் சொன்னான் கார்த்தி.
“இப்போ நான் தப்பு பண்ணிட்டேன்னு தான இப்படித் திட்டுற?”
“அகிலன் யாரு தெரியுமா.?”
“தெரியுமே நம்ம க்ளாஸ் மேட்” அவள் சாதாரணமாய்ச் சொல்லிவிட.
“அவன் அமைச்சரோட பையன்டி”
“யார் பையனா இருந்தால் எனக்கென்னடா.? அவன் தப்பா பேசினான் அடிச்சேன்”
“எனக்கு அடிக்கத் தெரியாமால் தான் பொறுமையா பேசிட்டு இருந்தேன்னு நினைச்சியா அதி, எதுக்கு நமக்குத் தேவையில்லாத பிரச்சனை, இப்படிப் பண்ணிட்டியே அதி” என முகத்தை வாட்டமாய் வைத்து அவன் பேசிக்கொண்டிருந்த போதே, எப்போதும் சிரித்த முகத்துடன் தன்னைத் தேற்றும் நண்பன் இன்று பயத்துடன் சுணங்கி நிற்பதே அகரநதிக்குப் பயம் மெல்ல துளிர்க்க காரணமாகியது.
“கார்த்தி பார்த்துகலாம் வாடா.?” புன்னைகையுடன் அவள் சொல்ல,
“அதி அவனை கையால அடிச்ச சரி, மறுபடியும் ஏன்டி செருப்பால அடிச்ச”
“அவன் தான் திமரா நிக்குறானேடா, ஒரு சாரியாவது கேட்டானா.? அதான்” அவள் பேசிக்கொண்டிருந்த போதே அகிலனும் அங்கு வந்திருந்தான்.
“அதி..! ரியலி சாரி ஃபார் தெட்” அவன் இயல்பாய் பேசினான் அகிலன்.
“வாட்?” புரியாது விழித்தாள்.
“நானும் கோபத்துல அடிச்சுட்டேன் சாரி” என அதி மொழிய,
“ஃப்ரெண்ட்ஸ்” என நட்பாய் கரம் நீட்டினான் அகிலன்.
“ஃப்ரெண்ட்ஸ்” என இவளும் புன்னகைத்தபடி அவன் கை குலுக்கிவிட, அங்கிருந்து நகர்ந்து சென்றான் அகிலன்.
“நீ தான் பயந்து போய்ட்ட டா கார்த்தி, பாரு எவ்ளோ ஜென்யூனா ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டான் பாரு” அவள் பிரச்சனை முடிந்துவிட்டதாய் சொல்லி சிரித்தாள் அதி.
“அவன் அரசியல்வாதி பையன்டி, அவன் சாரி சொல்றான்னா நம்ம காலின்னு அர்த்தம்டி அதி” எனப் பயந்தபடி கார்த்திச் சொல்லி அதியை பார்க்க, அதே பயத்தோடு விழிகள் சிவக்க கார்த்தியை ஏறிட்டாள் அகரநதி
அந்த மௌனம் அகரநதிக்கு சாதாரணமாகத் தோன்றியது. ஆனால் கார்த்திக்குள் அது மெல்ல மெல்ல பயமாக மாறிக்கொண்டிருந்தது.
‘ஏதோ சரியில்லை’ என்ற உணர்வு முதல் முறையாக அகரநதி மனதில் கேள்வியாய் முளைத்தது.
அகிலன் மறைந்த பாதை வெறுமையாக இருந்தது.ஆனால் அந்த வெறுமை இருவரின் மனதையும் அச்சுறுத்தியது.
அமைதி சில நேரங்களில் போர் அறிவிப்பாக கூட இருக்கலாம். அகிலனின் செயலும் புயலுக்கு முன் அமைதி போன்றது தான் எனக் கார்த்தியின் மனம் நம்பியது.
அகிலன் மறந்துவிடுவான் என்று கார்த்தி ஒருபோதும் நம்பவில்லை. அவன் நச்சு பாம்பு. பழி தீர்க்க நினைத்தால் அதியை தான் நெருங்குவான் என்ற பயம் துளிர்க்க
“அவன்கிட்ட ஒரு முறை சாரி கேட்குறியா அதி” கார்த்திக் கேட்க,
“பயப்படாதே கார்த்தி” என்றாள் அமைதியாக அகரநதி .
“நான் சொல்ல வர்றதை புரிஞ்சுக்க அதி” என்றான்.
“அப்போ நான் என்ன பண்ணனும்? தப்பா பேசுறவங்களுக்கு எல்லாம் தலை குனிஞ்சு சரின்னு தலையாட்டவா?” சற்று கோபமாகவே பேசினாள் அவள்.
“நீ தைரியமாக இருப்பதெல்லாம் சரி தான்டி. கொஞ்சம் கவனமா டீல் பண்ணியிருக்கலாம்” என்றான் கார்த்தி.
“டேய் எப்பா முடியலைடா, அவனே சாரி சொல்லி மூவ் ஆகிட்டான். ஆனால் நீ இருக்கியே உயிரை வாங்காதேடா” சலிப்பாய் சொன்னாள்.
“சரி வா கேண்டீன் போகலாம்” கார்த்தி அழைத்தான்
“நான் வரலை” என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு.
“ஏன் அதி கோபமா?”
“அங்க க்ரீன் டீ இருக்காதே” அவள் சிரிக்காமல் சொல்ல ,
“உன்னை என்ன பண்ணலாம்” என அடிக்க துரத்தியவனை தள்ளிவிட்டு ஓடினாள் அகரநதி. இருவரையும் பழியுணர்வுடன் ஒரு ஜோடி விழிகள் பார்த்துக் கொண்டு இருந்தது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆண் பெண் நட்பை சுற்றம் பல நேரங்களில் தவறாகவே அர்த்தம் கொள்கிறது.
அகரநதி சிறிது அவசரப்படாமல் இருந்திருக்கலாம்.
கார்த்தி கூறுவது மிக சரி.
அவர்களுக்கு அவர்கள் உறவை பற்றிய தெளிவு இருந்தால் போதும். பேசுபவர் வாயையெல்லாம் சென்று அடைத்துவிட்டு வர இயலுமா?
மற்றவர்கள் கருத்துக்கும் பேச்சுக்கும் நாம் மதிப்பளிக்க தேவையில்லை.
அவர்கள் கருத்து நமது உறவை மதிப்பிளக்க வைக்க போகின்றதா என்ன?
அகிலனின் அமைதி ஆபத்தை தான் கொண்டு வரும்.
அப்போ அகிலன் தான் வில்லனா … ஆனா கார்த்தியை ஏன் மாட்டி விட்டான் … தீரன் இனி முழுமூச்சா கேஸ் ல இறங்கிடுவான் … கண்டுபிடிப்பான் … கார்த்தி வெளில வரணும் …