Loading

பிறை -61

 

கொடைக்கானல்

 

மூடுபனிக்குள் மறைந்த மௌன ரகசியம் நீ!

மலைமீதோர் மேகம் எழுதும் காதல் கவிதை நீ!

தொலைந்த மனதை தேடி சேர்த்திடும் தாயகம் நீ!

தொட்டவுடன் தங்கிவிடும் உயிரின் ஓய்வு நீ !

 

 

மலை உச்சியில் உள்ள பெரிய ரிசார்டில்… கண்ணெதிர இருக்கும் மேகக் கூட்டங்களையும், மலைகளின் அழகையும் ரசித்த வண்ணம் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

 

அவனது தோள் மீது சாய்ந்த வண்ணம் , விழிகளை இயற்கையின் மீது படர விட்டு.. ஏதேதோ எண்ணங்களில் இருந்தாள் பிறைநிலா.

 

நினைவுகள் எல்லாம் ஊரில் அவளது அன்னை வீட்டில் நடந்த சம்பவத்தில் வந்து நிலைத்தது.

 

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த பிறையை அனைவரும் கையில் வைத்து தாங்காத குறையாக பார்த்துக் கொண்டார்கள். இரண்டு மாத காலம் பிறையோடு மருத்துவகனையில் இருந்ததால், விடுமுறையை முடித்து விட்டு அவனும் வேலையில் சேர்ந்திருந்தான்.

 

இரவில் அவளுக்கு தேவையானதை அவன் பார்த்துக் கொள்ள.. பகலில் அவளை தாங்குவதற்கு மீனாட்சி, சிவகாமி , பார்கவி என மூவரும் அவளை சுற்றி இருந்தார்கள். சிவானந்தம் தோட்ட வேலைகளை கவனிக்க மகளிடம் இரண்டு நாட்கள் இருந்து விட்டு சென்றிருந்தார். திவாகரும் அலுவலகம் சென்றிருக்க.. மொத்தத்தில் ஆண்கள் வேலையில் கவனம் செலுத்த.. பெண்கள் பிறை மீது கவனம் வைத்தார்கள்.

 

அவள் முழுமையாக குணமடையும் வரையில் அவளை எந்த ஒரு சூழ்நிலையிலும் நெருங்கி விடக் கூடாது என்பதில், ஆதி மிகவும் கவனமாக இருந்தான்.

 

மருத்துவர் அவனை எச்சரித்து தான் அனுப்பி இருந்தார்கள். அவள் பூரணமாக குணமாகும் வரை அவளுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என கூறி இருந்தார்.

 

இரண்டு மாதமும் மனைவியை அருகில் வைத்து கொண்டு படாத பாடெல்லாம் பட்டு விட்டான். அவள் சாப்பிடும் மருந்துகளின் விளைவால், சற்றே உடல் பூசினார் போன்ற தோற்றம் உருவாகி விட.. மனைவியின் ஒவ்வொரு அசைவையும் வைத்த கண் வாங்காமல் பார்த்து வைத்தான்.

 

அவனது பார்வை புரிந்தாலும்.. அவன் ஏன் தன்னை நெருங்கவில்லை என்ற கேள்வி மட்டும் அவளது தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

 

அதற்கான விளக்கம் மட்டும் கொடுக்காமல் அவளை படுத்திக் கொண்டிருந்தான் ஆதி. ‘ ஒருவேளை என் மேல கோவமா இருப்பாரோ.. நான் தானே அவர் மேல கோவமா இருக்கனும்.. இவர் கிட்ட மட்டும் எல்லாம் தலைகீழா தான் நடக்குது.. ஏன் பக்கத்துல கூட வரல.. பிடிக்கலையா ‘ என இல்லாத மூளையை போட்டு கசக்கிக் கொண்டிருந்தாள் பிறை.

 

அவளுக்கு தேவையான அனைத்து பணிவிடைகளையும் சலிக்காது செய்பவன்.. கணவனாக அவளை நாடாமல் இருப்பதை நினைத்து பயந்து போனாள் பிறைநிலா.

 

திருமணம் முடிந்ததில் இருந்து பிரிந்து வாழ்ந்தவர்கள்.. அவளது கிராமத்திற்கு சென்ற அன்று தான் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். ஆனால் என்ன நேரமோ அதன் பின்பு அவர்கள் சேர்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்தேறி முடிந்து விட்டது. தற்போது இரண்டு மாதம் ட்ரீட்மென்ட் என்ற பெயரில் மருத்துவனையில் இருந்து விட்டாள். தற்போது தான் வீட்டிற்கும் வந்திருக்கிறாள். அவனிடம் வாய்விட்டு கேட்கவும் கூச்சமாக இருந்தது.

 

மனதிற்குள்ளேயே மருகிக் கொண்டிருந்தவளை அறிந்தாலும், அவன் அவளிடம் உண்மையை கூறவில்லை. அதற்கு காரணம், மருத்துவர் கூறியதை பிறையிடம் கூறினால், அதை ஏற்றுக் கொள்ளாமல் அவள் அவனுடன் நெருங்கி விட்டால் அதன் பிறகு அவளை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் மறைத்திருந்தான்.

 

நடுக்கம் எல்லாம் முற்றிலுமாக முடிந்த பின்னர் தான் அவளுடன் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.. அதற்கு முன்பு அவளை அணுகினால், உணர்வுகளின் தாக்கத்தில் அவளுக்கு வலிப்பு வரவும் வாய்ப்புகள் இருக்கும் என கூறி இருந்தார்கள். அதன் பிறகும் அவளை நாடுவானா ?

 

இரண்டு மாதங்கள் நடைப்பயிற்சி, உடல் பயிற்சி என பல பயிற்சிகளை செய்து கொண்டு, மாமியாரும், அம்மாவும் கொடுக்கும் சத்தான உணவுகளை சாப்பிட்டு, நாத்தியின் அனுசரணையாக பேச்சும்.. இரவில் கணவன் அருகில் அழகான தூக்கம் என பொழுது ஓடியது.

 

என்ன தான் பொழுதுகள் அழகாக சென்றாலும்.. கணவனது அருகாமைக்கு ஏங்கிக் கொண்டிருந்தாள் பிறை.

 

இடையில் மருத்துவமனை சென்று அவளை பரிசோதித்து கொண்டு வந்தார்கள். இரண்டு மாதத்திற்கு பின் இறுதியாக மருத்துவமனை சென்ற போது.. அவள் பூரணமாக குணமாகி விட்டதாக மருத்துவர் கூறினாலும்.. பல முறை அவளை பரிசோதித்து விட்டு, பல கேள்விகளை கேட்டு திருப்தியாக வீடு வந்து சேர்ந்தான் ஆதிதேவ்.

 

” என்ன பா சொன்னாங்க.. ” மொத்த குடும்பமும் அவனது பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தது.

 

” அவ நார்மல் ஆகிட்டா மா.. இனிமே எந்த மெடிசினும் கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க..   ஷீ இஸ் கம்ப்ளீட்லி ஆள் ரைட் ” என்றதும் தான் அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.

 

பார்கவி வந்து கட்டிக் கொண்டவள்.. ” எனக்கு இப்போதான் ரொம்ப நிம்மதியா இருக்கு அண்ணி.. ” என கண் கலங்கி இருந்தாள்.

 

” பாரு இப்பவும் சொல்லுறேன்.. நடந்த விஷயங்களுக்கு நீ காரணம் இல்ல ” என நாத்தியை தழுவிக் கொண்டாள் பிறை.

 

” அப்போ இன்னைக்கு விருந்து சமைக்கலாம்.. பிறை நீ களைப்பா இருக்க.. போய் ரெஸ்ட் எடு.. ” மீனாட்சி வழக்கத்தை ஆரம்பிக்க..

 

” ரூம்ல இருந்து போர் அடிக்குது அத்தை.. நான் உங்க கூடவே சமைக்கவா ” என கேட்டவளை மேலிருந்து கீழ் வரை முறைத்து வைத்தவன் அறைக்கு சென்றிருந்தான்.

 

மகிழ்ச்சியாக மருமகளை அழைத்து கொண்டு சென்றார் மீனாட்சி.. சிவகாமி ,மீனாட்சி, பிறை, பார்கவி என நான்கு பெண்களும் சமையலில் இறங்கி இருந்தார்கள்.

 

மேலே சென்றவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.. ‘ இப்போ இவ சமைக்கலைன்னு யாரு அழுதா.. இவளை என்ன பண்ணுறது ‘ என புலம்பி தீர்த்தவன்.. கால் மணி நேரத்தில் மாடியில் இருந்த வண்ணம் அவளை அழைத்திருந்தான்.

 

” மூன்… ” என்றதும் அடுக்களையிலுள்ள அனைவரும் இவளை பார்க்க.. அவளுக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது.

 

” நீ போய் என்னன்னு கேளு மா.. நாங்க பார்த்துக்கிறோம் ” என மீனாட்சி கரண்டியை வாங்கிக் கொள்ள..

 

தயக்கத்தோடு மாடி ஏறினாள் பிறை. அறைக்குள் வந்ததும் வேகமாக கதவடைத்து உள்ளே வந்தவள்.. ” என்ன வேணும் தேவ்.. நானே இவ்வளவு நாள் கழிச்சு இப்போதான் வேலை செய்யலாம்னு போனேன்.. இப்படி கூப்பிட்டா எல்லாரும் என்ன நினைப்பாங்க … ” இடுப்பில் கை வைத்து கேட்டவளை இமைக்காது பார்த்து வைத்தான்.

 

காய்கறியை சீவிக் கொடுத்தவள்.. அப்படியே வந்திருந்தாள். அழகான லைட் பிங்க் வண்ணம் பூனம் புடவை.. அதற்கு டார்க் வண்ணம் ராணி பிங்க் ஜாக்கெட்.. கீழே பரவி இருந்த புடவையை அள்ளி மொத்தமாக இடுப்பில் சொருகி இருந்தாள்.

 

ஜடையை எடுத்து அரை கொண்டையாக போட்டு.. பாதி கூந்தலை கீழே தொங்கும் படி போட்டிருக்க… அது பார்ப்பதற்கே அத்தனை அழகாக இருந்தது.

 

சேலைகள் மேலேறி வனப்பான, வழுவழுப்பான இடுப்பு அவனது கண்களுக்கு விருந்தாக.. அடுக்களையில் இருந்ததால் சற்றே வேர்த்து, அவளது முகத்திலும், கழுத்திலும், முதுகு புறத்திலும் வேர்வை துளிகள் .. பனி துளிகளாக காட்சி கொடுக்க.. அவளது மொத்த அழகிலும் சித்தம் கலங்கி போனான் ஆதி.

 

அவள் இத்தனை பேசியும் அவன் அசையாமல் இருப்பதை பார்த்து, அவன் பார்வை போகும் திசையை உணர்த்தவளுக்கு ஏதோ புரிந்தது. புரிந்த நிமிடம் அவளது கன்னங்கள் அவளது விருப்பதை காட்ட முன்வந்து சிவந்து விட.. அதையும் கண்டு கொண்டான் கள்வன்.

 

இத்தனை மாதத்திற்கு பிறகு கணவனது பார்வை தன்னை இவ்விதமாக தீண்டியதை நினைத்து சற்றே அமைதியாகிப் போனாள். பயந்து இருந்தவளுக்கு, சற்றே மன ஆறுதலாக இருந்தது அவனது பார்வை.

 

‘ பார்வை மட்டுமா.. இனிமேல் என்னுடைய நடவடிக்கையை பார் ‘ என்ற ரீதியில் இருந்தது அவனது பார்வை.

 

” தே… தேவ்…. எதுக்கு.. கூப்பிட்டீங்க ” குரல் திணறியது.

 

” என்ன விட சமையல் முக்கியமா மூன் ” ஒரு வித நயன குரலில் கேட்டான் ஆதி.

 

” அப்படியில்ல.. சரி உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க ” என மனைவியாக கேட்டு நிற்க..

 

விரலை அவள் பக்கமாக காட்டி… ” நீதான் மூன் ” என்றதும்… அவளது உடலில் மின்சாரம் தாக்கிய உணர்வு.

 

என்னதான் அவர்களுக்குள் ஒருமுறை கூடல் நடந்திருந்தாலும்.. தற்போது ஏனோ முதல் முறை போல அத்தனை பயமாக இருந்தது அவளுக்கு. ஹார்மோன்கள் எல்லாம் அவளது பேச்சை கேட்காமல் அவளது உணர்வுகளை எல்லாம் துல்லியமாக அவனுக்கு எடுத்து காட்டியது.

 

” தேவ்.. என்ன.. பேசுறீங்க.. கீழே எல்லாரும் இருக்காங்க.. ”

 

” சோ வாட் ” தோளை குலுக்கியவனை பார்த்து முட்டை கண்களை விரித்தவள்..

 

” தேடுவாங்க.. ”

 

” தேடும் போது போகலாம் டி.. ”

 

” அது… ”

 

” வேற காரணம் தேடுறியா என்ன ?”

 

” அது இல்ல…வெளிச்சமா இருக்கு ” தயங்கினாள்.

 

” தெளிவா பார்க்கலாம் இல்லையா ” கூச்சம் இல்லாது பேசியவனை பார்க்கவே அவளுக்கு அத்தனை கூச்சமாக இருந்தது.

 

மெல்ல நடையிட்டு அவளருகில் வந்தவன்.. குப்பென்று வேர்த்திருந்த அவளது கழுத்து பகுதியை நெருங்கி, ஆழ்ந்த மூச்சை இழுத்தவன்.. ” மூன்.. ”

 

” ம்ம்…. ” கரகரத்து வந்தது..

 

” ஓகே வா ”

 

” எதுக்கு…. ”

 

” இதுக்கு ” என பேசிய மாத்திரத்தில் அவளது கழுத்தில் முகம் புதைத்தவன்.. அதே நேரம் அவளது செழித்த இடையில் கரங்களை அலைபாய விட்டவனுக்கு , மனைவியின் மேல் வந்த நறுமணத்தில் போதையாகிப் போனான்.

 

” ஆ…. தேவ்… ” முரடனாக மாறிய கணவனை சற்றே அடக்கி இருந்தாள் ஒற்றை வார்த்தையில்.

 

அவளை அப்படியே அள்ளிக் கொண்டவன்… மெத்தைக்கு சென்று அவளை படுக்க வைத்த கையோடு, திரை சீலைகளை எல்லாம் மூடி விட்டு, கதவையும் தாழிட்டு வந்து அரை இருட்டில் தெரிந்த மனைவியின் உருவத்தை மோகத்தில் நெருங்கினான்.

 

இத்தனை நாளும் அடக்கி வைத்த ஹார்மோன்கள் எல்லாம் பேயாட்டம் போட்டு விட.. அதை அடக்க முடியாமல் மனைவியை தேடி இருந்தான் ஆதி.

 

மெத்தையில் அவளருகே சரிந்தவன்.. ” மூன்.. உடம்புக்கு ஓகே தானே ” என அவளது உடல்நிலையை கருத்தில் கொண்டு கேட்க.. வேகமாக தலை அசைத்தாள்.

 

” உனக்கு ஓகே தானே ” அவனது அடுத்த கேள்வியில், தலை குனிந்து வெட்கத்தோடு தலை அசைத்தாள்.

 

இதற்கு மேல் என்ன வேண்டும்.. அவளது உச்சியில் இருந்து முத்தத்தை தொடங்கியவன்.. இதழ்களில் வெகு நேரம் இளைப்பாறி இருந்தான்.

 

” கார்ஜியஸ் டி மூன்… ஐ ஃபீல் லைக் ஹெவன் ” என மீண்டும் அவளது இதழை கடித்து சுவைத்தவன்.. மெல்ல கீழிறங்கி அவளது கழுத்தில் அவன் கட்டிய மாங்கல்யதிற்கு ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு, மெருகேறி இருந்த பெண்ணவளின் வனப்பில் பித்தம் கொண்டு.. அவளை தீண்ட தொடங்க.. துடித்து போனாள் மங்கை.

 

மொத்தமாக விரல்களும், உதடுகளும் அவளது அழகை கொள்ளையடிக்க.. தவிர்க்கவும் முடியாமல், தவிக்கவும் முடியாமல் ஒரு விதமான உணர்ச்சியின் பிடியில் சிக்கி இருந்தாள்.

 

கொஞ்சம் கொஞ்சமாக அவளது உடல்நிலையை கருதியே அவளை மெல்ல மெல்ல அணுகி.. அவளை கொண்டாடிக் கொண்டிருந்தான் நாயகன்.

 

கணவனின் புதுவிதமாக அணுகுமுறையில் திக்கு முக்காடிப் போனாள் பிறை.

 

தாரமானவள் வெளியிடும் ராகங்கள் எல்லாம் அவனது உணர்வுகளை மேலும் தூண்ட… மனைவியின் முகத்தை பார்த்து அவளது மனநிலையை புரிந்தவனோ… அவளும் மெல்ல மெல்ல கலந்து போனான்.

 

கண்கள் சொக்கி, அவன் கொடுத்த மகிழ்ச்சியை தாங்க முடியாமல் அவனை கட்டிக் கொண்டு கண் மூடிக் கிடந்தாள் பிறைநிலா.

 

ஏனோ இத்தனை நாள் பட்ட துன்பத்திற்கு, இந்த தாம்பத்தியம் அவர்களை மகிழ்ச்சியாகவும், புத்துணர்வாகவும் வைத்தது.

 

ஆட்டங்கள் முடிந்து, சோர்வாக அவளை பார்த்து புன்னகைத்தான்.

 

” பிடிச்சிருக்கா டி ” கணவன் கேட்ட கேள்வியில் மீண்டும் சிவந்து போனவள்.. ” போங்க தேவ் ” என சிணுங்கிய வண்ணம் அவனது மார்பினுள் நுழைந்து கொண்டாள் பிறைநிலா.

 

சோர்வோடு இருவருமே எழுந்து குளித்து விட்டு கீழே சென்றனர்.. நல்ல பசி.. குடும்பத்தோடு உண்டு விட்டு ஹாலில் அமர்ந்தவன்.. ” மா ஒரு வாரம் லீவ் சொல்லியிருக்கேன்.. நான் மூனோட ஊருக்கு போயிட்டு வரேன்.. மாமாவை பார்த்து பேசிட்டு அங்க இருந்துட்டு வரோம் ” என்றதும் மீனாட்சி மருமகளுக்கு தேவையானதை எடுத்து வைக்க.. சிவகாமியும் அவர்களோடு ஊருக்கு சென்றிருந்தாள்.

 

காரில் வந்து மூவரும் இறங்க.. சிவானந்தம் மருமகனை வரவேற்றார்.

 

” வாங்க மாப்பிள்ளை.. வாங்க.. ” என அழைத்த கையோடு உள்ளே மின்விசிறியை போட்டு விட்டு, அமர.. அவர் அருகில் அமர்ந்து கொண்டான் ஆதி.

 

” என்ன மாமா வேலை எல்லாம் எப்படி போகுது… ”

 

” அதுக்கென்ன மாப்பிள்ளை நல்லா போகுது… சமைக்க தான் ஆள் இல்லை.. நானே சமைக்கிறேன்.. புதுசா சமைக்கவும் வாய்க்கு எடுக்கல ”

 

” அதுனால தான் அத்தையை உங்க கிட்ட கொடுக்கலாம்னு வந்துட்டேன்.. ” என சிரிப்புடன் கூறினான்.

 

மருமகனின் பதிலில் சிரித்தபடி தலை அசைத்தார். ” நீ எப்படி மா இருக்க.. உடம்புக்கு பரவாயில்லையா ” என மகளை விசாரித்தார்.

 

” நான் இப்போ நல்லா ஆகிட்டேன் பா.. டாக்டர் செக் பண்ணி சொல்லிட்டாங்க.. இனிமே எந்த பிரச்சனையும் இல்லைன்னு ”

 

” ரொம்ப சந்தோஷம் மா … கோழி அடிக்கிறேன் மா.. நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்தி வை ” என எழுந்து சென்றார். அவருக்கு பாசத்தை இப்படி தான் வெளிக்கட்ட தெரியும்.

 

” பிறை நீ தம்பி கூட ரூமுக்கு போ.. உங்க அப்பா சரியான சாப்பாடு இல்லாம வத்தி போய் இருக்காரு.. நான் அவருக்கு சமைக்கிறேன் ” என வேகமாக அடுக்களை சென்ற தாயை மனநிறைவுடன் பார்த்து வைத்தாள்.

 

” இந்த வயசுல கூட இவ்வளவு பாசமா இருக்காங்க தேவ் ” என தாயை பார்த்து ஆச்சரியம் அடைந்தவள்… கணவனை பார்க்க.. அவனோ வண்டி சாவியை எடுத்துக் கொண்டு தயாராக நின்றான்.

 

” எங்க கிளம்பிட்டீங்க.. ”

 

” நீயும் தான் வர.. ”

 

” எங்க …”

 

” வா சொல்லுறேன் ” என வீட்டை விட்டு வெளியேறி , அவளது தந்தையின் வண்டியை எடுத்துக் கொண்டு அவளை பின்னால் ஏற்றியவன்.. அந்த ஊர் முழுக்க சுற்ற ஆரம்பித்தான்.

 

பிறைக்கு அத்தனை மகிழ்ச்சி. ஊரில் உள்ளவர்கள் பேசிய வாய்க்கெல்லாம் பூட்டை போடும் விதமாக.. கணவனுடன் ஊரை சுற்றி வந்தாள்.

 

வாயில் கை வைக்காத குறையாக அனைவரும் அவர்களது ஜோடியை பார்த்து பேசிக் கொண்டார்கள்.

 

” சும்மா சொல்லக்கூடாது டி சிவகாமி மவ அவளுக்கு ஏத்த ஆளை தான் பிடிச்சிருக்கா.. ”

 

” ஆமா கா நல்ல ஜோடி ”

 

” அட நான் கூட இந்த அகிலாண்டம் பேசுனத வச்சு என்னமோ நினைச்சேன்.. அதெல்லாம் ரெண்டு பேரும் சந்தோஷமா தான் இருக்காங்க போலயே”

 

” பின்ன அந்த பொட்டாச்சி கட்டி பிடிச்சிட்டு போறத பார்த்தாலே தெரியலையா ”

 

” அதான் கா.. இவளோட அத்தைகாரிக்கு வயிறு எரிய போகுது”  என ஊரில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசினார்கள்.

 

மகள் வீட்டிற்கு சென்றிருந்த அகிலாண்டம்.. ஊரில் காத்து வாக்கில் வந்த செய்தியை அறிந்த அடுத்த நிமிடம் மகன் வீட்டிற்கு கிளம்பி இருந்தார்.

 

ஊரை உல்லாசமாக சுற்றி விட்டு , இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்த பத்தே நிமிடத்தில் அகிலாண்டம் உள்ளே நுழைந்தார்.

 

” அடடே… ஊர்ல இல்லாத மாப்பிள்ளைய கண்டுட்டா உன் ஆத்தாக்காரி.. கோழி அடிச்சு சமைச்சுகிட்டு இருக்காளாக்கும் ” வந்ததும் சண்டைக்கு இழுத்தார்.

 

இதுவரையிலும் எதிர்த்து பேசாத சிவகாமிக்கு மருமகனை கூறவும் கோபம் வந்தது. ” அத்தை வாய்க்கு வந்த படி பேச வேணாம்.. நம்ம வீட்டு மருமகனுக்கு மரியாதை இருக்கு ”

 

” எடு செருப்ப எதிர்த்து பேச எங்க இருந்து டி கத்துக்கிட்ட ” குரலை உசத்தினார்.

 

அதுவரை அமைதியாக இருந்த ஆதி… ” ஏன் எதிர்த்து பேசுனா என்ன தப்பு ” என முதல் முதலாக அவரை எதிர்த்து நின்றான்.

 

” யார் வீட்ல இருந்துகிட்டு யாரை பேசுறது.. இது என் மகன் வீடு.. எனக்கு தான் முழு உரிமையும் இருக்கு. ஒண்டி பிழைக்க வந்தவளுக்கு பேச்ச பாரு ”

 

கைகளை கட்டிக் கொண்டு அவரை அழுத்தமாக பார்த்தவன்.. ” இது யாரோட வீடுன்னு சொன்னீங்க ” என மீண்டும் கேட்டான்.

 

” என் மகன் வீடு ” சொல்லும் போதே அத்தனை கர்வம்…

 

” அதெல்லாம் பழைய காலம்.. இப்போ இந்த வீடு முழுக்க முழுக்க உங்க மருமகளோட வீடு.. பத்திரம் எல்லாம் மாத்தி பல நாள் ஆச்சு.. இந்த வீட்டோட மொத்த அதிகாரமும் இப்போ அவங்களுக்கு தான் இருக்கு. ஏன் உங்க மகன் இங்க இருக்கனுமா வேண்டாமான்னு முடிவு பண்ண வேண்டியது இவங்க தான். நீங்க உங்க நிலைமையை யோசிங்க ” என நக்கலாக கூறினான் ஆதி.

 

அதிர்ந்து போனவர்.. மகனை சத்தமாக அழைத்தார். பின் கட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்.. தாயின் குரலுக்கு உள்ளே வந்தார்.

 

” இந்த வீடு யார் பேர்ல இருக்கு ” அகிலாண்டம் கேட்டதும் ஒரு நொடி தயங்கியவர்.. ” சிவகாமி பேர்ல தான் இருக்கு மா ” என உண்மையை கூறி இருந்தார்.

 

” யாரை கேட்டு டா அவ பேருக்கு மாத்தின ”

 

” என்னோட வீட்டை என் பொண்டாட்டிக்கு மாத்த யார்கிட்ட மா கேக்கனும் ”

 

” என்கிட்ட கேக்கனும்.. கல்லு மாதிரி பெரிய மனுஷி நான் இருக்கும் போது எப்படி இந்த காரியத்தை பண்ண ”

 

” தெரியாம பண்ண கூடாதுன்னு இல்ல மா.. எனக்கு அவளுக்கு எழுதி வைக்க ஆசை.. அதான் பண்ணிட்டேன் ”

 

” அப்போ என் நிலைமை என்ன டா ”

 

” உங்களுக்கு என்ன மா.. நீங்க எப்பவும் போல இருங்க ”

 

” அடச்சே…  கேவலம்.. இனிமே இந்த வீட்ல ஒரு சொம்பு தண்ணி கூட குடிக்க மாட்டேன்..  இனிமே இது மகன் வீடு இல்ல.. இந்த சிறுக்கி வீடு.. இங்க இருந்தாலே எனக்கு அசிங்கம்… ” என கத்தியவர்..

 

” நல்லா அமைதியா இருந்தே என் மகனை கைக்குள்ள போட்டு சொத்தையும் உன் பேருக்கு மாத்திட்ட.. நல்லா இரு டி.. கைகாரி தான் நீ ” வஞ்சத்துடன் அவரை திட்டி விட்டு , துணிமணிகளை எடுத்து கொண்டு வெளியே வந்தார்.

 

” எங்க போறீங்க மா ”

 

” என் மக வீட்டுக்கு போறேன்.. இங்கே இந்த வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டேன்.. என்னோட செலவுக்கு நீ மாசம் மாசம் காசு கொடுத்திரு. நான் அங்கேயே இருந்துகிறேன் ”

 

” மகன் வீடு இருக்கும் போது மக வீட்டுக்கு எதுக்கு போகனும்”

 

” இப்போ இது உனக்கே சொந்தம் இல்லையே.. அப்போ நான் எப்படி உரிமையா இருக்க முடியும்.. நாளுக்கு இவளாம் என்னைய பேசுற அளவுக்கு வந்துட்டா.. நான் என்னைக்கு கீழ இறங்கி போக மாட்டேன்.. அதுவும் இவ கிட்ட முடியவே முடியாது.. ”

 

” அவளும் உங்க மருமக தான் மா.. எதுக்கு இவ்வளவு வஞ்சம்.. ”

 

” நேத்து வந்தவங்க எல்லாம் உனக்கு பெருசா போயிட்டாங்க .. ” என ஆதியை ஒரு பார்வை பார்த்தவர்.. ஒன்றும் பேசாமல் கிளம்பி இருந்தார்.

 

” என்ன மாப்பிள்ளை இப்படி ஆகிடுச்சு.. ” சிவகாமி பதறினார்.

 

” மக வீட்ல இருந்து பார்க்கட்டும்.. நீங்க போய் மாமாவுக்கு சமைக்கிற வேலையை பாருங்க.. ” என உள்ளே சென்று விட்டான்.  பத்திரம் மாற்றும் எண்ணம் சிவானந்தனுக்கு இருந்தாலும்.. அதை நடைமுறை படுத்தியது ஆதி தான். அதில் அவனுக்கு அதிக பங்கு இருந்தது.

 

அன்று நன்றாக சாப்பிட்டு உறங்கியும் போனவர்கள்.. மறுநாள் அங்கிருந்து கிளம்பி கொடைக்கானல் வந்து சேர்ந்தார்கள்.

 

இந்த கதையை தான் அவனது தோளில் சாய்ந்து நினைத்துக் கொண்டிருந்தாள் பிறை.

 

” உங்க அப்பத்தாவை பேசுன கோபமா மூன் ” அவளது எண்ணத்தை அறிந்தவனாக கேட்டான்.

 

மெல்ல அவன் முகம் நோக்கி அவனது நெற்றியில் முத்தம் வைத்தவள்.. ” ரொம்ப தாங்க்ஸ் தேவ்.. என் அம்மாக்கு உங்க மூலமா இந்த வீட்ல அங்கீகாரம் கிடைச்சிருக்கு.. அவங்க ரொம்ப பாவம்… இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு. எங்க அப்பத்தாக்கு எப்பவுமே அவங்களை பிடிக்காது.. இனிமேலும் அவங்களை மாத்த முடியும்னு தோணல . ஆனால் மக வீட்ல இருக்க இருக்க எங்க அம்மாவோட அருமை புரியும்னு நம்புறேன்.. எங்க அம்மா முகத்தில வந்த சந்தோஷத்தை நான் இத்தனை நாள்ல பார்த்ததே இல்ல.. இப்போ அவங்களுக்காக இத்தனை பேர் இருக்கோம். தாங்க்ஸ் தேவ் ” என அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

 

அவளது எம். பி. ஏ படிப்பிற்கான சான்றிதழும் வந்து விட்டது. அவள் நினைத்ததை போல அவளை ஒரு ஐடி அலுவலகத்தில் சேர்த்து விட பேசி இருந்தான். அதையும் அவளிடம் கூறி இருந்தான். அவள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

 

” எதுக்காக இவ்வளவு செய்யுறீங்க தேவ் ”

 

” தெரியல மூன் ”

 

” இதென்ன பதில் ”

 

” மத்தவங்க மாதிரி எல்லாம் ரோமியோ டயலாக் எல்லாம் எனக்கு பேசத் தெரியாது டி.. என்னோட காதலை கடமையிலையும், காட்டிலையும் தான் காட்ட தெரியும் ” என கண்ணாடித்தவனை பார்த்து வெட்கி சிவந்து போனாள்.

 

கொடைக்கானல் குளிருக்கு இதமாக அவளை அணைத்து கொண்டே மெத்தையில் சரிந்தான் ஆதிதேவ்.

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்