
பிறை -60
வாய் வார்த்தையால் பேசிக் கொண்டால் தான் காதலா !
இதழ்கள் பேசாத மொழியினை
விழிகள் இரண்டும் பேசிக் கொண்டது.
அவன் வந்து ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆகி விட்டது. அவள் அவனை பார்க்காது தலை குனிந்து அமர்ந்திருந்தாள். ஆனால் அவனோ வந்ததில் இருந்து பார்வையை மாற்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது பார்வை புரிந்தாலும், கணவனை பார்க்க முடியாது , ஒரு வித அவஸ்தையில் இருந்தவளோ .. “பிளீஸ் தேவ் … ” என அதற்கு மேல் அவனது பார்வை வீச்சை பொறுக்க முடியாது வாயை திறந்து விட்டாள்.
” எதுக்கு பிளீஸ்”
” அது.. அது.. அத்தையை வர சொல்லுறீங்களா ”
” அவங்க எதுக்கு.. அவங்க எல்லாரையும் வீட்டுக்கு போக சொல்லிட்டேன். என் பொண்டாட்டிய இந்த ரெண்டு மாசமும் நான்தான் பார்த்தேன். இனிமேலும் நான்தான் பார்ப்பேன் ” குரலில் இருந்த உறுதியில், இத்தனை நாளும் அவளருகில் இருந்த நிதர்சனம் புரிந்தது.
” கஷ்டம் கொடுக்கிறேன்ல ” தவிப்பாக கேட்டவளுக்கு பதிலாக.. ” ரொம்ப கஷ்டம் கொடுக்கிற டி மூன்.. என்னால இப்போ எதுவும் உன்ன செய்ய முடியல.. இல்லைனா நீ பண்ண காரியத்துக்கு உன்ன உண்டு இல்லைன்னு பண்ணிருப்பேன். யாரை கேட்டு டி மும்பை போன ” என அரட்டியவனை அதிர்ந்து பார்த்தாள்.
” உங்க கிட்ட கேட்டேன் தானே ”
” கேட்ட.. ஆனால் நான் சரின்னு சொல்லலையே ”
” ஆனால் பார்கவியை காப்பாத்தனும் தானே.. அதான் போனேன் ”
” இவ பெரிய ஜான்சிராணி.. காப்பாத்த போராளாம்… நீ மட்டும் போகாம இருந்திருந்தா நாங்க போட்ட பிளான் படி அவளை நிச்சயம் தூக்கிருப்போம். இதுல நீதான் இடையில புகுந்து ஆட்டைய கலைச்சிட்ட ”
” சும்மா சொல்லாதீங்க தேவ்.. நீங்க பேசும் போதே தெரிஞ்சது. உங்க தங்கச்சியை காணாத தவிப்பு. அதான் நான் துணிஞ்சு போனேன்.. அப்பறம் இன்னொரு விஷயம் எப்படியும் நீங்க எங்களை காப்பாத்திடுவீங்கன்னு தெரியும்.. அதான் நான் போனேன்.. ”
” இது என்ன சினிமாவா டி உன்ன ஹீரோ மாதிரி வந்து காப்பாத்த.. இந்த ரெண்டு மாசமும் என் உயிரே என் கிட்ட இல்ல டி ” பேசும் போதே அவனது குரல் தளர்ந்திருக்க.. கணவனையே இமைக்காது பார்த்து வைத்தாள் பிறைநிலா.
” இன்னொரு முறை இந்த மாதிரி என் பேச்சை மீறி ஏதாவது கிறுக்கு தனமா பண்ணனும்னு நினைச்சா.. உனக்கான தண்டனையை கண்டிப்பா கொடுப்பேன் மூன்… ” என எச்சரிக்கை செய்தவனை பார்க்க சற்றே கிலி பிடித்தது.
” தப்பு தான் சாரிங்க ” என உண்மையாக அவளது தவறை உணர்ந்து கூறினாள் பிறை. இந்த மருந்தின் வீரியத்தால் அவளும் எத்தனை தூரம் உடலாலும் மனதாலும் துன்பப்பட்டால் என்பதை அவளும் அறிவாள். அதை விட அவள் துடிப்பதை பார்த்து, அவளை சுற்றி உள்ள அனைவரும் துடித்து போனார்கள். அனைத்தும் தெரிந்தது தான்.. ஆனாலும் அந்த போதை மயக்கத்தில் இருந்து அவளால் வெளிவர முடியவில்லை.
” இப்போ நீ ஓகே தானே.. எதுவும் பண்ணுதா ”
” இல்ல ”
” அப்பறம் ஏன் டி நெளியுற ”
” அது.. வந்து.. பாத்ரூம் போகனும் ” என்றால் உதட்டை கடித்து கொண்டு…
” அப்போவே சொல்லுறதுக்கு என்ன ”
” இல்ல அது அத்தை… ”
” வா டி ” என அவளை கை தாங்களாக அழைத்துக் கொண்டு சென்றான். இன்னும் அவளால் நடுக்கம் இல்லாமல் நடக்க முடியவில்லை. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் சரியாகிவிடும் என மருத்துவர் கூறியதால் அதுவரை அவளை பார்த்துக் கொள்ள வேண்டிய கடமையில் இருக்கிறார்கள்.
” உள்ளே போ.. ”
” நீங்க எங்க வரீங்க.. ” பதறினாள்.
” கீழே விழுந்தா என்ன டி பண்ணுவ.. நீ போ.. நான் உன் பக்கத்துல நிக்கிறேன் ”
” ஐயோ பிளீஸ் தேவ்.. நீங்க போங்களேன்.. ”
” என்ன டி உன் பிரச்சனை.. என்னமோ நான் உன்ன பார்க்காத மாதிரி பேசுற.. நான் பார்க்காத இடம்னு ஏதாவது இருக்கா என்ன… சும்மா காத்தாம போ டி ” என எதிர்திசையில் திரும்பிக் கொள்ள.. அதற்கு மேல் வாதாட முடியாமல் அவளது கடமையை முடித்துக் கொண்டு அவனை அழைத்தாள். அவன் பேசிய வார்த்தையில் அவளது தேகம் கூச்சத்தில் சிலிர்த்து அடங்கியது.
அவளுக்கு தேவையான பணிவிடைகளை எல்லாம் செய்து முடித்தவன்.. அவளை அழைத்து கொண்டு வந்து மெத்தையில் படுக்க வைத்தான்.
” படுக்க வேண்டாம்.. உட்கார்ந்து இருக்கேன் ” என்றதும்.. அவளுக்கு வாகாக முதுகிற்கு தலையணை வைத்து விட்டான்.
” என்ன சாப்பிடற ”
” இப்போ பசியில்ல ”
” மாத்திரை போடனும் டி ”
” அப்போ ரெண்டு இட்லி மட்டும் ” என்றதும், அவளுக்கு பிடித்த கார சட்னியுடன் வாங்கி வந்தான்.
தட்டில் வைத்து உணவை அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான். முதலில் தயங்கினாலும், அவனது கையால் உண்பதற்கு ஏனோ அத்தனை தூரம் பிடித்திருந்தது.
இரண்டு இட்லியை உண்டு முடித்து விட்டு, போதும் என கூறியவளை தடுத்து மேலும் இரண்டு இட்லியை கொடுத்து விட்டே கை கழுவி வந்தான்.
” ஏற்கனவே என்ன மருந்து கொடுத்தாங்கான்னு தெரியல.. குண்டா ஆகிட்டேன்.. இப்போ நீங்க வேற சாப்பாட்டை அள்ளி அள்ளி கொடுத்தா வெடிச்சிடுவேன் போல ” என கவலையாக பேசி உடலை பார்த்தவளை, சின்ன சிரிப்போடு பார்த்தவன்…
” என்னமோ தெரியல டி.. முன்ன விட இப்போதான் ரொம்ப கும்முன்னு தெரியுற… இப்படியே மெயின்டெய்ன் பண்ணு.. ” என கண்ணடித்தவனை பார்க்க முடியாமல் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டாலும், கன்னங்கள் இரண்டும் அத்தனை சிவப்பாக மாறிப் போனது.
” பாரு எப்படி இருக்கா.. ”
” ம்ம் நல்லா இருக்குற மாதிரி நடிக்கிறா” என்றதும் அவனை புரியாமல் பார்த்தாள் பிறை.
நடந்த கதைகளை எல்லாம் ஒன்று விடாமல் கூறி இருந்தான். ” ஐயோ பாவங்க.. இப்போ அர்ஜுன் எங்க ”
” ஏன் ”
” இல்ல நீங்க என்ன பண்ணீங்கன்னு தெரியனும்ல ”
” தெரிய வேணாம்.. அர்ஜுன் என்ன ஆனான்னு யாருக்கும் தெரியாம இருக்கிறது தான் நல்லது.. ”
” அப்போ பாரு நிலைமை என்னங்க ”
” அவளை மாத்தனும் ”
” இல்ல .. அவளுக்கு அர்ஜுனை தானே பிடிச்சிருக்கு ”
” அதுக்கு ….. ” அவன் அழுத்தி கேட்ட விதத்தில் சற்றே நடுங்கியவள்..
” அது வந்து அர்ஜுனை மறக்க வச்சு.. அவளுக்கு சரண் அண்ணாவை கல்யாணம் பண்ணி வைக்கலானு சொல்ல வந்தேன்.. ”
” ம்ம் அதுக்கு முதல்ல அவ கூட்டுல இருந்து வெளிய வரனும்.. இனிமே உனக்கு அதான் வேலை.. பாருவை பழைய படி மாத்தி கொண்டு வா மூன்.. அவளோட முகமே வாடிப் போய் இருக்கு…” தங்கைக்காக மனம் வலித்தது.
” கண்டிப்பா பண்ணுறேங்க.. ”
சற்று நேரத்தில் மருத்துவர் வந்து அவளை முழுமையாக பரிசோதனை செய்தவர்.. ” அவங்க நார்மல் ஆகிட்டாங்க சார்.. இன்னும் அவங்க நார்மல் ஆகுறது உங்க கையில தான் இருக்கு.. டெயிலி எக்சர்சைஸ் பண்ண வைங்க.. கண்டிப்பா நடக்க வைக்கனும்.. அப்போதான் உடம்பு உதறாம ஒரு கண்ட்ரோல்கு வரும். தென் ரெகுலரா மெடிசின் எடுத்தாலும்.. அப்போ அப்போ செக் அப் வரனும்.. அது ரொம்ப அவசியம்.. தென் வேற ஏதாவது டவுட் இருந்தாலும் நீங்க கால் பண்ணி கேட்டுக்கலாம் சார் ” என மருத்துவர் கூறி முடிக்க.. அவரை தனியாக அழைத்து சென்று அவனது கேள்விகளை எல்லாம் கேட்டு தெளிவுப் படுத்திக் கொண்டவன் நிம்மதியுடன் மீண்டும் அறைக்குள் வந்தான்.
” எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல .. நம்ம வீட்டுக்கு போகலாமா ”
” ம்ம் இன்னைக்கு ஈவ்னிங் டிஷ்சார்ஜ் பண்ண சொல்லிட்டாங்க மூன்.. அப்பறம் நம்ம வீட்டுக்கே போகலாம்.. நான் ரூம், நம்ம பெட், பக்கத்துல நான்.. உனக்கு ரொம்ப கம்பர்ட்டா இருக்கும் ” என்றவனை ஓர விழிப் பார்வையுடன் பார்த்து வைத்தாள் பிறை.
மாலை ஆனதும் அவளை அழைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான் ஆதி. மொத்த குடும்பமும் அவளை கையில் வைத்து தாங்கியது. பாரு அவளை கட்டிக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்து விட்டாள்.
” நான் தான் திரும்ப வந்துட்டேன்ல பாரு ”
” என்னால தானே அண்ணி உங்களுக்கு இவ்வளவு கஷ்டமும் ”
” அதெல்லாம் உன் அண்ணன் பார்த்துப்பாரு.. நீ ஃபீல் பண்ணாத.. ”
” இப்போ உடம்புக்கு நல்லா இருக்கா அண்ணி ”
” ம்ம் பரவாயில்லை பாரு.. எனக்கு ஏதாவது பண்ணனும்னு தோணுச்சுனா போய் எனக்கு ஒரு ஜுஸ் போட்டு கொண்டு வரியா ” என்றதும் வேகமாக தலையசைத்து அடுக்குகளைக்குள் சென்று விட்டாள்.
” நீ வந்ததும் தான் மா பேசவே ஆரம்பிச்சிருக்கா.. எங்க யார்கிட்டேயும் பேசுறது இல்ல பிறை ” மாமியார் வருத்தம் கொள்ள.. அவளை சரிசெய்வதாக வாக்களித்தாள்
” ஆதி அவளை ரூமுக்கு கூட்டிட்டு போ ” என்றதும்.. அவளை கைதாங்களாக அழைத்து கொண்டு அறைக்கு செல்ல.. சிவகாமி மகளுக்காக சத்தான உணவுகளை சமைக்க தயாரானார்.
அறைக்குள் சென்றதும் அவளை மெத்தையில் அமர வைத்து விட்டு, கதவடைத்து உள்ளே வந்தவன்.. அடுத்த நொடி அவளை இறுக அணைத்திருந்தான்.
சட்டென கணவன் செய்த செயலில் திக்குமுக்காடி போனவள்.. ” தேவ்… ” குரலே வராமல், காற்றில் பேசினாள்.
” இந்த மாதிரி திரும்பவும் என் ரூமுக்கு நீ வருவியோ வரமாட்டியோன்னு ரொம்ப பயந்துட்டேன் மூன்… ” உணர்ச்சி வசத்தில் அவளை மிகவும் இறுக்கிக் கொண்டான்.
” தேவ்… மூச்சு விட முடியல..” என்றதும் தான் அவளிடம் இருந்து மெல்ல விலகினான்…ஆனால் முழுவதுமாக விலக வில்லை. அவளை கட்டிக் கொண்டே பேசினான்.
” அன்னைக்கு உண்மையாவே என்ன டி நடந்துச்சு ” என்றதும்.. பிறைக்கு வேர்த்து விட்டது.
” உண்மையை மட்டும் தான் சொல்லனும்”
” நீங்க ஊருக்கு கிளம்பி போனதும்.. நீங்க வாங்குனதா சொன்ன கிப்ட்டை பிரிச்சு பார்த்து, அது ரொம்ப பிடிக்கவும் போட்டுக்கிட்டேன்.. ஆனால் அப்போதான் எனக்கு கால் வந்தது.. அர்ஜுன் தான் பேசுனான். நீங்க பெரிய பெரிய பிளான் போட்டு அவனை பிடிக்க போறதா சொன்னான். அப்படியே அவனை பிடிச்சாலும் கண்டிப்பா பார்கவியை கண்டு பிடிக்கவே முடியாது. அப்படி ஒரு இடத்தில அவளை வச்சுருக்கேன்.. ” என கூறி இருந்தான்.
” பிளீஸ் அப்படியெல்லாம் பண்ணாதீங்க.. பாரு பாவம்.. அவளை விட்டுடுங்க.. ” என கெஞ்சினாள் பிறை.
” அப்படி நான் பண்ணாம இருக்கனும்னா நீ உடனே நான் சொல்லுற இடத்துக்கு வரனும் ”
” எங்க வரனும்”
” நீ வரேன்னு சொல்லு.. மத்ததை எல்லாம் நான் ரெடி பண்ணுறேன் ”
” உங்களை எப்படி நம்புறது ”
” வீடியோ கால் பண்ணி பார்கவியை காட்டவா ” என சொன்னதோடு இல்லாமல், அவளுக்கு அழைத்து பார்கவியை காட்டி இருந்தான்.
தலை சுற்றியது பிறைக்கு. ” உன் புருஷன் காதுக்கு போச்சுனா, அவன் தங்கச்சியை கடைசி வரைக்கும் பார்க்க முடியாது ” என எச்சரித்து விட்டே வைத்திருந்தான்.
அவள் கிளம்புவதற்கு தயாராகினாள்.. ஆனாலும் உள்மன உறுத்தல் காரணமாக அவளது கணவனுக்கு அழைத்து விஷயத்தை கூறி இருந்தாள்.
” அதெல்லாம் அவனை நான் பார்த்துக்கிறேன்.. நீ எங்கேயும் போகக் கூடாது.. ஏற்கனவே உன்னால தான் இந்த பிரச்சினை… மேற்கொண்டு எதாவது பிரச்சனையை கிளப்பாம ஒழுங்கா வீட்ல இரு டி .. பாருவை எப்படி காப்பாத்தி கூட்டிட்டு வரதுன்னு நான் பிளான் பண்ணிட்டேன் ” என போனை வைத்திருந்தான் ஆதி.
மீண்டும் மீண்டும் இந்த பிரச்சனைக்கு இவள் தான் காரணம் என்று கூறியதால், அவள் மனம் வெகுவாக சோர்ந்து போனது. எதையும் யோசிக்காமல் பார்கவியை காப்பாற்றி விட வேண்டும் என கிளம்பி இருந்தாள்.
கதையை கூறி முடித்தவளை அமைதியாக பார்த்திருந்தான் ஆதி.
” சத்தியமா இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் முன்னவே உங்க கிட்ட சொல்லியிருப்பேன்.. ஆனால் பாரு இவ்வளவு பெரிய முடிவு எடுப்பான்னு எனக்கு தெரியாம போச்சு. இப்ப உங்க தங்கச்சியை நான் திருப்பி கொடுத்துட்டேன் தேவ்.. நான் எதுக்கும் காரணம் இல்ல ” கூறும் போதே கண்கள் கலங்கிப் போனது .
தனது வார்த்தைகளால் எப்படியெல்லாம் அவள் காயப்பட்டிருப்பாள் என காலம் கடந்து உணர்ந்தவன்… அவளை மீண்டும் அணைத்து கழுத்தில் அழுந்த முத்தம் வைத்தவன்.. ” சாரி மூன் ” என மெல்லிய சத்தத்தோடு அவளது காதருகில் சென்று முத்தம் வைத்து கேட்க.. சாரி என்ற வார்த்தை எல்லாம் அவளது காதில் விழவில்லை . மாறாக அவன் வைத்த முத்தமும், அது கொடுத்த அழுத்தமும் தான் அவளது உடலை நிறைத்திருந்தது.
” தேவ்…. ” என சிணுங்கினாள் பிறை.
” பர்ஸ்ட் டைம் மாதிரி சிணுங்காத டி.. நமக்கு எல்லாமே முடிஞ்சிருச்சு ஞாபகம் இருக்கா.. இல்ல ஞாபக படுத்தட்டுமா ” விவகாரமாக கேட்பனை ரசிக்க கூட முடியாமல் கூச்சத்தின் பிடியில் சிக்கி கொண்டாள் பிறை.
” அண்ணி ஜூஸ்” என கதவை தட்டும் தங்கை கரடியை நினைத்து சலித்து போனவன்.. வேகமாக எழுந்து கதவை திறந்து அவள் கையில் வைத்திருந்த ஜூசை வாங்கிக் கொண்டவன்.. ” சப்பிட்டியா பாரு ” என கேட்க..
முழித்து வைத்தவள் ” ஆம் ” என தலை அசைத்தாள்.
பின் கதவடைத்து வந்தவனை பார்த்தவளுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் உதட்டை கடித்து சிரிப்பை அடக்க.. அவளது சிரிப்பை மொத்தமாக அடக்கி இருந்தான் காவலன்.
சனா💖

