Loading

அத்தியாயம் 47

 

“ஹே எழில் என்னடி பண்ற?” என அவள் மூடிவிட்ட போர்வையை உதறிவிட்டான் ப்ரகலத்தன்.

 

“சும்மா இருங்க ப்ரெசிடெண்ட், வேர்க்கணும், ஸ்வட்டிங் தான் பாடியோட நல்ல ஹெல்த்க்கு பேஸ்” என மறுபடியும் மூடி விட்டாள்.

 

அவள் முகத்தையே பார்த்தான், அதில் தெரிந்த அதீத பயம், ஏன் வேர்க்கமாட்டேங்குது என்ற அதீத குழப்பம் இரண்டையும் கண்டு இதை வளர விட கூடாது என்று உடனடி முடிவுக்கு வந்தான்.

 

மறுபடியும் போர்வையை உதறி வேகமாக எழுந்து அறை வாசல் நோக்கி சென்றான், “எங்க போறீங்க? கொஞ்ச நேரம் பேசாம படுங்கன்னு சொல்லிட்டு இருக்கேன்ல” என தடுத்து நிறுத்த அவன் கையை பிடிக்க, அவள் பிடித்த கையை பிடித்து இழுத்தான், அவன் மேல் வந்து மோதி நின்றாள்.

 

அப்படியே பிடித்துக் கொண்டு எட்டி கதவை லாக் போட்டான். அதை கண்டு, “ஏன்?” என பார்த்தவளை, “நீதான் லூசு மாதிரி மூடி விடுவ, வெளில உன் அம்மாவும், என் அம்மாவும் அத பாத்து பயந்துட மாட்டாங்க, அதான் லாக் பண்ணிட்டேன்”.

 

“ஓ! சரி சரி வந்து படுங்க, இதுவும் நல்லது தான். இல்லன்னா உங்க பிள்ளைகங்ளே உங்கள படுக்க விடமாட்டாங்க, எதுக்கும் பேராசிட்டமல் ஒன்னு போட்டுக்றீங்களா? உடனே வேர்த்திடும்”.

 

“ஃபிவர்க்கு தான பேரசிட்டமால் ப்ரெஸ்க்ரைப் பண்ணிட்டு இருந்தாங்க, இப்ப மாத்திட்டாங்களா ௭ன்ன?” என பேசிக்கொண்டே அவளை அவள் இடுப்போடு இழுத்தணைத்தான்.

 

“விளையாடாதீங்க லைட் ஃபிவரா கூட இருக்கலாம் இல்லையா? அதான் ஸ்வட்டிங் இல்ல போல, த்ரோட் கூட கரகரனு பேசுறீங்க. பெருசா ஃபிவர் ஆகுமுன்ன டேப்லட் போட்டு அத ஆஃப் பண்ணிடலாம்ல?” ௭ன கேக்க.

 

“ரிலாக்ஸ், இப்ப என்ன எனக்கு வேர்க்கணும்?”

 

“ஆமா ஆமா” வேகமாக தலையசைத்தாள்.

 

“வேலை எதுவும் செய்யாம சும்மாவே இருந்தா எப்டிமா வேர்க்கும். ஹார்ட் ஒர்க் ஏதாவது பண்ணனும்னுல” என கட்டிப் பிடித்தவாறு தூக்கிக் கொண்டு கட்டிலில் விழுந்தான் அவள் கீழும், இவன் மேலுமாக. அவளை முழுதாக அழுத்தாதவாறு கை, கால்களால் தன்னை கட்டிலில் அவளின் இருபக்கமும் ஊனிக்கொண்டு.

 

“ஆசதான் ரெண்டு மாசமா தான் உங்க அம்மா மாசக்கணக்கு சொல்றதை விட்டுருக்காங்க, மறுபடியும் ஆரம்பிக்க வச்சுடாதீங்க. போய் கதவ திறங்க”.

 

“முடியாதுடி. சும்மா இருந்தவன் மூட மாத்தினது நீ, ஒழுங்கா கோ-ஆப்ரேட் பண்ணு, அப்ப தான் அதிக சேதாரம் இருக்காது” ௭ன கண்ணடித்தான்.

 

“ஆஹான்….நல்லா ரெண்டு பக்கமும் லாக் பண்ணிட்டு மிரட்றீங்களா?” எந்திரிங்க ப்ரெசிடெண்ட் சும்மா விளையாடாம”.

 

“ரொம்ப மெலிஞ்சு காத்து மாறி ஆகிட்டடி, கொஞ்சம் சத போடு அப்பதான பழைய மாதிரி மெத் மெத்துன்னு இருக்கும்”.

 

“ஏன் மெத்து மெத்துன்னு இல்லனா சார் கட்டிக்க மாட்டிங்களோ?”

 

“இன்னும் கொஞ்சம் கம்போர்ட்டபிளா இருக்கும்ன்னு சொன்னேன். இங்கப்பாரு வயிறு கூட வத்திட்டு, குட்டித் தொப்பையக் கூட காணோம்” என சோகமாக கூறியவனைக் கண்டு வாய்விட்டு சிரித்தாள்.

 

“ஏண்டி சிரிக்கிற” என கையில் இருந்த அவள் இடுப்பில் கிள்ள.

 

“ஹா ஹா” என கூச்சத்தில் மேலும் சிரித்தாள்.

 

அந்த சிரித்த முகத்தையே ஆசையாக பார்த்தான். இப்போதும் அவள் கவனம் மொத்தமும் அவனிடம் தான், ஆனால் முதலில் இருந்த பயம், குழப்பம் இப்போது இல்லை அந்த முகத்தில், அதை கண்டு தானும் மகிழ்ந்தான்.

 

“பார்ரா. ப்ரெசிடெண்ட் புதுசா சைட்லா அடிக்கிறாங்க”.

 

“அடிப்பாவி நா உன்ன சைட்டே அடிச்சதில்லன்னா சொல்ற?”

 

“எனக்கு ஞாபகம் இல்ல. ஸ்கூல் படிக்கும்போதுல இருந்து நா தான் உங்கள சைட் அடிச்சுருக்கேன், உங்களுக்கு மூஞ்ச திருப்பிட்டு போகத்தான தெரியும்”.

 

“நீ எப்பயும் முழுங்குற மாதிரி பாத்தா நா எப்டி பாக்க முடியும்”.

 

“இந்த கண்ல அப்படியே முங்கி போய்டணும்னு தோணும் தெரியுமா. இது ரெண்டும் என்ன பார்க்கும் போது ஹப்பா அப்படி ஒரு ஃபீல் கிடைக்கும் தெரியுமா, லவ் அப்படியே ஓவர் ஃப்லோ ஆகி கொட்டும். ப்ரகிக்கும், குணாக்கும் அப்டியே உங்க கண்ணு தான், ஆனா உங்க கண்ணுல இருக்கிற அந்த மேக்னட் அதுங்கட்ட இல்லங்க”.

 

“அது சரி நா உன் புருஷன்டி ௭ன் கண்ணுல உள்ள லவ் மேக்னட்ட பிள்ளைங்க கண்ணுல தேடுனா ௭ப்டி கிடைக்கும். எந்த நேரமு என் கண்ணையே சைட் அடிச்சிட்டுருந்து தான்டி பிள்ளைங்களுக்கு அதே கண்ணு வந்துட்டு”.

 

“ரொம்ப பெரும பட்டுக்காதிங்க”.

 

“அதான, இப்ப பெருமையும் வேணாம், பொறுமையும் வேணாம், வேர்க்கணும்ல அத மறந்துட்ட, வா அந்த வேலையப் பாப்போம்”.

 

“ஒன்னும் வேர்க்க வேணாம் எழும்புங்க” என அவனை தள்ள, ஊன்றியிருந்த கையை எடுத்து அவள் மேல் முழுவதுமாக படர்ந்தான்.

 

“அச்சோ எழுந்திருங்க யாரும் வந்து கதவ தட்டினா ஷேம் ஷேம் ஆயிடும்”.

 

“அப்டியே கதவ தொறந்தாதானடி ஷேம் ஷேம் ஆகும். நா தான் லாக் பண்ணிட்டேனே”.

 

“உங்களுக்கு வர வர கொழுப்பு அதிகமாகிடுச்சு விடுங்க”.

 

“முடியாது, இனி உன்ன விட்டு வைக்குறதாயில்லை” என அவள் கழுத்து வளைவில் மோப்பம் பிடிக்க, “அடி வாங்கப் போறீங்க ப்ரசிடெண்ட்” மிரட்டினாள் எழில்.

 

“சரி அதயும் எல்லாம் முடிஞ்சதும் வாங்கிக்கிறேன்” என இருந்த வாக்கிலேயே அவள் காதில் முனங்கி குறுகுறுப்பூட்ட, நெளிய ஆரம்பித்தாள். அவ்வளவுதான், இனி அவள் முழுவதும் அவன் கண்ட்ரோல் தான்.

 

இது அவனே அறிந்த ஒன்றுதான். அவனுக்கு..,வேண்டுமென்றால் எதையும் செய்வாள். அம்மாவிற்காக பயந்தாலும், அவனுக்கு வேண்டுமென்றால் தன் உடல்நிலையும் முக்கியமில்லை என மனதார கொடுத்து விடுவாள்.

 

‘அவள் அளவுக்கு தன்னால் இவளை காதலிக்கவே முடியாது’ என பலமுறை வியந்து பெருமைப்பட்டுக் கொள்வான் ப்ரகலத்தன். அதிக இடைவேளைக்கு பின்பு கூடி களைந்தது, இருவரிடமும் ஒரு வேகத்தையும் திருப்தியையும் கொடுத்திருக்க. “பேபி பார்மாகிட்டா நீங்கதான் ஆண்ட்டிய சமாளிக்கணும்” ௭ன்றாள் ஆறு.

 

“சரி நானே பேசிக்கிறேன் போதுமா?”.

 

“உங்ககிட்ட கேக்க மாட்டாங்கன்ற தைரியம், ப்ளானிங்னாலும் பண்ணியிருப்பேன் அதயும் பண்ண விடாம பண்ணிட்டீங்க, இப்ப என்ன பண்றது?”.

 

“நீ இங்க செக்கப்புக்கு போன கைனக்கிட்டயே நாளைக்கு போய் பேசி டேப்லெட் வாங்கிட்டு வரேன் டீல்?” ௭ன்றான் சமாதானமாக.

 

“வெளியில போக கூடாது, கொரோனா இருக்குல”.

 

“மறுபடியும் ஆரம்பிக்காத எழில் குட்டி, நீ அல்ரெடி டயர்டா தெரிற” என கன்னம் கிள்ள.

 

“நானா??? நா என்ன ஆரம்பிச்சேன்”.

 

“ஃபிவர், வேர்க்கல, பேராசிட்டாமல்ன்னு ஆரம்பிச்சு தான் இங்க வந்துவிட்டுருக்க, மறுபடியும் கொரோனால போய் நிப்பாட்டுற” என்றான்.

 

“ஆமா பின்ன கவனமா இருக்க வேணாமா? நீங்க கவனமா இருந்துருந்தா உங்களுக்கு கொரோனா வந்துருக்காதுல்ல??”.

 

“நெக்ஸ்ட் மந்த் நா வேலையில ஜாயின் பண்ணணுமே அப்ப என்னடி பண்ணுவ?”.

 

“கொரோனாலா முடிச்சப்புறம் வேலைக்கு போனா போதும்” என கட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் ஏறிப் படுத்து கொண்டாள். மீண்டும் யோசனையோடு, அவளை கட்டிக்கொண்டு அவள் உச்சியில் முத்தினான்.

 

சற்று நேரம் அமைதியாக இருவரும் படுத்திருக்க, பின் நேரமாவதை உணர்ந்து எழுந்து குளித்து வெளியே சென்றாள் ஆறு. வெளியே ராஜம் பிள்ளைகளை குளிப்பாட்ட, ஜெயந்தி துடைத்து, உடைமாற்றி மேக்கப் செய்ய என இருந்தனர். இரு அம்மாக்களும் திரும்பி அவளைப் பார்த்தனர்.

 

தலையை குனிந்து கொண்டு கிச்சனை நோக்கி நடந்தாள். “ப்பா ப்பா” என தத்தி தத்தி ஓடி வந்தான் ப்ரகி, அவ்வளவு நேரமும் ப்ரகலத்தனை கேட்டு அழுதவனை, “அப்பா தூங்குறாங்கடா குளிச்சுட்டுபோய் விளையாடு” என இவ்வளவு நேரமும் சமாளித்து வைத்திருந்தனர்.

 

ராஜம் இந்த முறை கொட்டி பேசவில்லை. அவள் அவனை தாங்கியதை இத்தனை நாட்களாக பார்த்துக்கொண்டிருந்தாரே. “அவ அவன அப்டிலா பார்த்துகிட்டா, அவனும் அவ்வளவு தாங்க தான செய்வான்!!. அதான் விடாம அவ பின்னாடியே சுத்துறான். இரண்டும் இப்டியே எப்பயும் இருந்துட்டா போதும்” என ஜெயந்தியிடமும் சற்றுமுன் சொல்லியிருந்தார். பெண்ணை புகழ்ந்தால் எந்த அம்மாவுக்கு கேட்க கசக்கும், ஜெயந்தியும் மனம் நிறைந்தார்.

‘இனி சிறு சிறு சண்டைகள் வந்தாலும் பெண்ணை குறை சொல்லும் முன் சற்று நிதானிப்பார்’ என நினைத்துக்கொண்டார்.

 

அடுத்தடுத்த நாட்களில் அவளை, அவனைப் பற்றிய கவலை இல்லாதவாறு பார்த்துக் கொண்டான். எந்த நேரமும் சீண்டி, தீண்டி கைக்குள்ளேயே வைத்துக்கொண்டான். பிள்ளைகளோடு விளையாடும் போதும் அவளையும் சேர்த்து உள் இழுத்து போட்டு விளையாடினான். அவளுக்குப் பிடித்த உணவாக ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து, வர வைத்து சாப்பிட வைத்தான். வைரம் வொர்க் ஆஃப் நாட்களில், இரவில் வைரம் லட்சுவை அழைத்து நால்வருமாக அந்த 6′ இன்ச் டிவியில் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம்கல் கனெக்ட் செய்து, புதிதாக வரும் படங்களை ஸ்பீக்கர் ௭ஃப்க்ட்டோடு பார்த்தனர். பின் இரவுகளில் அடுத்த அறைக்கு ௭ழிலை விடாமல் தன்னுடனேயே வைத்துக் கொண்டான். ப்ரகி சில நாள் இவர்களிடம் சில நாள் பாட்டிகளிடம் ௭ன தூங்கினான். தூங்காமல் அவனையே ஆராய்ந்து கொண்டிருப்பவளை, அவன் அவன் பாணியில் ஆராய்ந்து டயர்டாக்கி தூங்க வைத்து விடுவான். மன அழுத்தத்தில் விழ இருந்தவளை அவள் அறியாமலேயே வெளிக்கொணர்ந்தான் ப்ரகலத்தன்.

 

அவள் மீண்டும் கற்பம் ஆகாத காரணம் இரு அம்மாக்களே!!!, ‘தினமும் கஷாயம் குடிப்பது அவசியம், அதிலும் இஞ்சி மஞ்சள் இரண்டிலும் ௭திர்ப்பு சக்தி அதிகமென கூறி’ இஞ்சி கஷாயம் காட்டமாக குடிக்க வைத்தனர்.

 

ப்ரகலத்தன் வேலைக்கு ஜாயின் பண்ணும் முன் ஃபுல் பாடி செக்கப் செய்து கொண்டு, அந்த ரிப்போர்ட்டை கொண்டு வந்து அவளிடம் ஒப்படைத்து, அவள் முகத்தில் திருப்தியை கண்ட பின்பே அவன் வேலையை தொடர்ந்தான்.

 

அவள் காதல் ஒரு வகை என்றால், அவன் காதலும் ஒரு வகை. விரட்டி விரட்டி காதலித்து கைப்பிடித்தாள் ஆறெழில். கைப்பிடித்த பின் அவள் கொடுத்த மொத்த காதலையும் திருப்பிக் கொடுத்தான் ப்ரகலத்தன். இன்ப, துன்பங்கள் நிறைந்ததே வாழ்க்கை, கணவன் மனைவி இருவரின் ஒற்றுமையே துன்பங்களின் முடிவையும் இன்பமாக்கும்.

 

நண்பர்கள் அனைவரும் அவரவர் வாழ்க்கையில் பிஸியாகினர். குடும்பம், வேலை ௭ன வாழ்க்கை அவர்களை உள்ளிழுத்து கொண்டது. இருப்பினும் வருடம் ஒருமுறை கண்டிப்பாக சந்திக்கலாம் ௭ன முடிவு செய்திருக்கின்றனர். அது கொரோனா கையில் தான் இருக்கிறது. நாடு பழையபடி திரும்பிய பிறகே அவர்களால் சுற்றுலா பற்றியெல்லாம் சிந்திக்க முடியும்.

 

தாணு, அகத்தியன் கல்யாணமும் கொரோனா கையில் தான் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. லட்சு 2 நாட்கள் முன் தான் நேரில் வந்து “நா அம்மா ஆக போறேன்டி” ௭ன கட்டி அழுது சென்றிருந்தாள். வைரமும் லட்சுவும் இன்னும் 4 பிள்ளை பெற்றாலும் அவர்கள் ௭ன்றும் டாம் அண்ட் செர்ரியே. வாழ்க்கையின் சுழற்சியில் இவர்கள் நட்பு இப்படியே தொடரட்டும்.

 

பள்ளிப் பருவத்திலேயே தோன்றும் காதல் எதார்த்தம், பருவ வயதின் கோளாறுகள், ஆனால் காதல் இருந்தாலும் வாழ்க்கையை பற்றிய தெளிவோடு இருக்க வேண்டும். காதல் செய்யும் இருவரில் ஒருவரேனும் அந்த தெளிவில் இருக்க, மற்றவர் விட்டுக் கொடுத்துப் போகவே காதல் வாழ்க்கை, லட்சிய வாழ்க்கை என இரண்டிலும் ஜெயிக்க முடியும். தெளிவில்லையெனில், இரண்டில் ஒன்றில் மட்டுமே வெற்றி கிட்டும்.

 

ப்ரகலத்தனின் தெளிவிலும், ஆறெழிலின் பொறுமையிலுமே அவர்கள் காதல், லட்சியம் ௭ன இரண்டிலும் ஜெயித்தனர். இனி என்ன கஷ்டம் வந்தாலும் விட்டுக்கொடுக்காமல் ஒன்றாக நின்று ஜெயித்து காட்டுவர். அவர்கள் வாழ்க்கை என்றும் இதுபோல் சந்தோஷமாக இருக்க நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 35

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
32
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அழகான அருமையான காதல் கதை.. நெஞ்சில் என்றும் நிறைந்து இருக்கும்.. வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐 ❤️ ❤️. மீண்டும் உங்கள் படைப்பை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்…💕👍👏