
காதல் -46
” நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த தருணம் இதோ… உன் மனம் கவர்ந்த எழுத்தாளர் மிஸ்டர் தமிழ் காதலன் மேடைக்கு வர இருக்கிறார்… லெட்ஸ் வெல்கம் மிஸ்டர் தமிழ் காதலன் ” என தொகுப்பாளர் அழைக்க…
கருப்பு நிற சட்டையில் பிஸ்கட் நிற பேண்டும்.. சட்டையில் கூலர்சுடன் மிடுக்காக மேடையை வந்தடைந்தான் தமிழ் மறவன்.. கீழே இருந்த கூட்டத்தை பார்த்து முதலில் பிரம்மித்தாலும்… அந்த கூட்டத்தில் தன்னவள் இருக்கிறாளா என்று அவன் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது…
அவன் கண்களுக்கு எட்டிய வரை அவள் இல்லை… ஏமாற்றம் தான்… தாங்கிக் கொண்டான்.. அதன் பின் முக்கிய பங்குதாரர்கள் வந்து தமிழ் மறவன் கைகளில் விருதை வழங்க சின்ன சிரிப்போடு அதை பெற்றுக் கொண்டான் மறவன்.
விருது வாங்கும் மகிழ்ச்சியை கூட அவனால் கொண்டாட முடியவில்லை.. இந்த மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் அவனது ஆருயிர் மனைவி இல்லையே… மருத்துவமனையில் இருந்து வந்த நாள் அவளை பார்த்தது.. அதன் பின் சிந்தாமணியிடம் கறாராக கூறி விட்டான்… ” அவ எந்த காரணத்துக்காகவும் என் முகத்துல முழிக்க கூடாது மா.. அப்படி அவ வந்தா நான் இந்த வீட்டை விட்டு போயிடுவேன் ” என அவன் பேசியது அவனது அன்னைக்கு மட்டும் இல்ல … அவரை தேடி அறைக்கு வந்த சாயாவின் காதுகளிலும் அது தெளிவாக விழுந்தது.
உண்மை தான் சற்று சுயநலமாக சிந்தித்து விட்டாள். தற்போது இவள் உயிரை மாய்த்து இருந்தால் அவளது தந்தை அவளுக்கு மீண்டும் கிடைக்க போகிறாரா.. அப்படி உயிரை கொடுத்து ஒரு உயிர் வரும் என்றால் தந்தைக்காக செய்யாலாம் என்று கூட வைத்திருக்கலாம்.. ஆனால் அவள் செய்தது முட்டாள் தனமான செயல்.. மீண்டும் வராத உயிருக்காக அவள் உயிரை விட துணிந்து விட்டாள்…
இத்தனை நாளும் இவழுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்த அவளது அன்னையை மறந்து விட்டாள்… காதல் இருபக்கமும் மலர்ந்து சேர்த்து வாழ போகும் நேரத்தில் அவனை தவிக்க விட்டு அவனையும் மறைந்து போனாள்..
அவன் கோபம் சரியானதாக இருக்க, அவனது விருப்பப்படி அவன் முன் வராமல் ஆறு மாதங்களை கடத்தி விட்டாள் சாயா.. ஏதோ கோபத்தில் கூறி விட்டான் தான்.. ஆனால் அப்படி கூறி ஒரு வாரத்திலேயே அவனது கோபம் இருந்த இடம் தெரியாமல் போக… வழக்கம் போல காதல் கொண்ட மனது அவனை ஆட்டி படைத்தது…
அவனாக சென்று அவள் அறையில் சந்திக்க ஈகோ தடுக்க… தற்போது எங்காவது தென் பட மாட்டாளா என தவித்து கொண்டிருக்கிறான் மறவன். அவனது எண்ணவோட்டம் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் அவன் முன்பு வந்து மேலும் அவனுக்கு வேதனையை கொடுக்க கூடாது என்று அவளும் அவனை தவிர்த்து வந்தாள்.
மருத்துவமனையில் இருந்து டிஷ்சார்ஜ் ஆகி இருபது நாட்கள் அந்த ஊரில் உள்ள வீட்டில் இருந்தனர். பின் சாயா சற்று நன்றாக தேறியதும் தினேஷின் உதவியுடன் அவர்களது பழைய ஊருக்கே அனைவரும் திருப்பினர். அவர்களது வீடு வரை வந்து , விட்டு விட்டே தினேஷ் அவனது ஊருக்கு சென்றான். அவனை வருத்தி விட்டது வேறு ஒரு பக்கம் சாயாலிக்கு மனம் கிடந்து அடித்து கொள்ள.. அவன் கிளம்பும் சமயத்தில் அவனிடம் தனியாக பேசினாள்..
” அப்பறம் ”
” அப்பறம் என்ன சாயா… நல்ல லைப்.. மறவன் உன்ன நல்லா பார்த்துக்குவாரு… கவனமா இருங்க.. நான் கிளம்புறேன் ” என மேலோட்டமாக சொல்லி விட்டு அவன் கிளம்ப…
” அவ்வளவு தானா ” என்றதும் அவளை புரியாமல் பார்த்தான் தினேஷ்.
” இல்ல உங்க கல்யாணத்துக்கு கண்டிப்பா என்ன இன்வைட் பண்ணுங்க ” என மறைமுகமாக அவளை மறந்து அவன் மனம் மாறி வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கூறி விட்டாள்..
சிறிய புன்னகையுடன்… “கண்டிப்பா பண்ணிக்குவேன் சாயா.. நான் கல்யாணம் பண்ணாம இருந்தா என் அப்பா என்ன சும்மா விட மட்டாரு ” என்றதும் சிறு புன்னகையுடன் அவனை வழி அனுப்பி வைத்தாள் சாயா…
அதன் பின் எப்போது போல தேனு வீட்டில் அவர் இருக்க .. மறவன் வீட்டில் சாயாலி இருந்தாள் ..
” என்ன நினைச்சுட்டு இருக்க நீ… மறவன் உன்ன தேடுவான் .. உனக்கு புரியுதா இல்லையா… ”
” உங்களை விட அவரை நான் நல்லா புரிஞ்சு வச்சுருக்கேன்.. அதான் இப்ப போகலை.. டீவில போடும் போது பார்த்துக்கிறேன் .. ”
” ஆனாலும் இப்படி ஒரு கல் மனசு உள்ள பொண்ணை இப்போதான் பார்க்கிறேன் ” என அகரன் புலம்ப அவனுக்கு பதில் கூறாமல் அவனை அழைத்து கொண்டு மலை உச்சிக்கு சென்று கொண்டிருந்தாள் சாயா.
” இங்க உனக்கு எப்படி பொழுது போகுது ” என சுற்றி இருந்த இடத்தை பார்த்தான் கேட்டான் அகரன்…
” ஏன் போகாது, பிள்ளையார் இருக்காரு, அருவி இருக்கு, செடி கொடி மரம் இருக்கு, நான் கூப்பிட்டா ஓடி வர என் நண்பர்கள் இருக்காங்க ” என்றதும் வியப்பில் கண்களை விரித்து, ” எது இந்த காட்டுல உனக்கு ஃப்ரெண்ட்ஸா ” என வியப்பாக கேட்டவன்… சுற்றி முற்றி பார்க்க கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருவரும் தென்படவில்லை…
” எனக்கு யாரையும் தெரியலையே”
” இங்கேயே அமைதியா உட்காருங்க… இப்போ வருவாங்க ” என அங்குள்ள கல்லில் அமர்ந்து அவள் கொண்டு வந்த கொய்யா பழங்களை எல்லாம் கத்தியில் வெட்டி அந்த கல்லில் வைக்க ஆரம்பிக்க.. அதை எடுத்து உண்ண சென்ற அகரன் கையில் அடித்தவள்… ” அமைதியா இருங்க.. அவங்க வரவும் சேர்ந்து சாப்பிடலாம் ” எனவும் அவனும் கொய்யா பழங்களை பார்த்து கொண்டே அமர்ந்திருந்தான்.
சிறிது நேரத்தில் சர சரவென சத்தம் கேட்க.. திரும்பி பார்த்த அகரன் அதிர்ந்து போனான்.. சாயாவை சுற்றி அணில் கூட்டம்… அவள் மேல் ஏறவும் இறங்கவும் என அவர்களது இத்தனை நாள் பிரிவை போக்கி கொள்ள … வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் .
” இதுதான் உன் நண்பர்களா” என நம்ப முடியாமல் கேட்டவனை பார்த்து ஆம் என தலை அசைத்தாள்.
” ஓ ” என்றதோடு அவர்களது பாச பிணைப்பை பார்த்தவன் மனதில் ஒரு வித வெறுமை பரவுவதை தடுக்க முடியவில்லை… சிறு வயது முதலே தனியாக இருந்தவன்… பெரியவன் ஆன பின்பும் சேர கூடாத இடத்தில் சேர்ந்து குடும்பத்தையே நிலை குழைய வைத்து விட்டான்.. இப்போது வரை அவனை வீட்டில் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை… சாயா மட்டும் தான் அவனுக்கு தற்போது இருக்கும் ஒரே ஆதரவு.
சாயா மருத்துவமனையில் இருந்த போதே மறவன்.. தனக்கு தெரிந்த ஆட்கள் மூலம் அகரனை தூக்கி அவனது கஸ்டடிக்கு கொண்டு வந்திருந்தான். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சாயாவின் நிலையை பொறுத்து அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற முடிவோடு இருந்தான்.
உண்மையை கூறினால் மறவனை விட்டு சாயா பிரிந்து சென்று விடுவாள்… அந்த நேரத்தில் மறவன் கவனம் சிதறும் நேரத்தில் சொத்தை கை பற்றி விடலாம் என்ற நட்பாசையில் இருக்க… அவனுக்கு இடியென வந்து விழுந்த செய்து என்னவோ சாயாவின் தற்கொலை முயற்சி தான்.. தற்போது மிகவும் சீரியசாக மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வர அதிர்ந்து போனான் அகரன்.. சிசிடிவி காட்சிகளை காட்டியது இவ்வளவு பெரிய தவறு என்பதை நொடியில் யூகித்து கொண்டான். இவனுக்கு இந்த ஆதாரம் சாயாலியின் தந்தையை நல்லவர் என நிரூபிக்க… சிந்தாமணிக்கு மருத்துவர் நிரூபித்து இருந்தார்… அதுவும் காலம் கடந்து கூறி இருந்தார்.
அவரை சோதனை செய்த பின்பு ஒருவர் மட்டுமே அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூற.. அது ராஜ் தான் என்பது தெளிவாக தெரிந்தது… அப்போது தான் அவருக்கே சாயாலியின் தந்தை நல்லவர் என்பதே தெரியும்…
சொத்தை கைபற்றி சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் … பேர் புகழோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் தானே தவிர்த்து அவர்கள் யாரும் இந்த அளவிற்கு போக வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு துளி அளவும் இல்லை…
தற்போது மறவா எந்த நிலையில் இருப்பான் என யோசித்தவனால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை…
மறவன் கஸ்டடியில் இருந்தாலும் எப்போது அவன் வருவான் … அவனிடம் சாயாலியை பற்றி கேட்க வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் துடித்து கொண்டிருந்தான்.. தான் ஒரு சாவுக்கு காரணம் ஆகி விட கூடாது.. அதன் பின் தன் மனசாட்சியே தன்னை கொன்று விடும் என்ற பயம் வந்தது.
கண் விழித்த சாயா ஒரு மணி நேரத்தில் கேட்டது என்னவோ அகரனை பற்றி தான்.. தன்னை இந்த அளவிற்கு கொண்டு வந்தவனை தன் கணவன் ஒரு போதும் சும்மா விட மாட்டார் என்பதை அறிந்தே கேட்க… அவர்கள் தெரியாது என பதில் அளித்தனர்.
” அத்தை கண்டிப்பா உங்க பிள்ளைக்கு தெரியும்… இப்போவே நான் அகரனை பார்க்கனும் ” என பிடிவாதம் பிடித்தாள். மருத்துவரும் தற்போது அவர்கள் கேட்பதை செய்து கொடுக்க வேண்டும்… கூடுதல் மன உளைச்சல் வேண்டாம் அது அவளது உடலுக்கு நல்லது அல்ல என கூறி விட… மூர்த்தி தன் மகனை அழைத்து விஷயத்தை கூற… பல்லை கடித்தவன் தன் கோபத்தை எல்லாம் கட்டுப் படுத்திக் கொண்டு அகரனை தன் ஆட்களோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான்
அங்கிருந்த யாரும் அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை… பேசவில்லை என்பதை விட அவனை ஒரு ஆளாக கூட கருதவில்லை.. அதுவே அவனுக்கு அப்படி ஒரு ஏமாற்றமாக போக… தான் செய்த செயலுக்கு தேவை தான் என்று நினைத்து கொண்டான்.
அப்போது இருந்து அகரன் சாயாலி கூட்டணி நடந்து கொண்டு தான் இருக்கிறது… வீட்டில் யாரும் பேசாவிட்டாலும் .. சாயா எப்போதும் அகரனை விடாமல் பார்த்துக் கொண்டாள்.
ஆனால் என்ன இருந்தாலும் தாய் தந்தை கூட பிறந்த தமையன் என அனைவரது ஒதுக்கமும் அவனது மனதில் நெருஞ்சி முள்ளாக குத்தியது. இப்போது கூட அவனை வைத்து தான் தமிழ் காதலன் புத்தகம் தமிழ் மறவனுடையது என நிரூபித்தது இருந்தாள்.
தன் அண்ணனிடம் கூட்டு சேர்ந்து அனைத்தையும் செய்கிறாள் என தெரிந்தாலும் .. கண்டும் காணாமல் இருந்து கொண்டான் மறவன்.
சொந்த வீட்டிலேயே அந்நியனாக வாழ்வது எத்தனை கொடுமையான விஷயம்… இதை விட பெரிய தண்டனை என்ன இருக்க போகிறது என வீட்டில் இருப்பவர்களும் அவனுக்கு தண்டனையை கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அணில்கள் எல்லாம் பழத்தை உண்ண ஆரம்பிக்க.. அகரன் சாயா இருவரும் அவர்களோடு பங்கிட்டு பழத்தை சாப்பிட்டு அருவியில் தங்களை சுத்தப் படுத்திக் கொண்டனர்.
” உங்களுக்கு ஒன்னு தெரியுமா … உங்க தம்பியை முதல் முதலா நான் இந்த மலை உச்சியில தான் பார்த்தேன்.. அதுனால எனக்கு இது கூடுதல் ஸ்பெசல்.. ” என கண்கள் மின்ன கூற.. அவள் கண்களில் தெரியும் காதலில் .. தன் தம்பியை பார்த்து கொள்ள இவளை தவிர யாரால் இருக்க முடியும் என்ற பெருமிதமும் இருந்தது.
” என்ன ஒன்னுமே பேசல ”
” அது நீ இங்க உன் ஆளை பார்த்துட்ட… அதே மாதிரி உச்சிக்கு போனா எனக்கு என் ஆளு கிடைப்பாளா ” என கேட்டு வைத்தவனை அதிர்ந்து பார்த்தாள் சாயா.
” உடனே வீட்ல சொல்லனும்… உங்களுக்கு கல்யாணம் பண்ணனும் ” என அவளது பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு கீழே இறங்க ஆரம்பித்தாள்.
” ஹேய் சும்மா சொன்னேன்”
” இல்ல இல்ல உங்களுக்கு வயசு ஆகிடுச்சுல அதான்… நாங்க யாருமே யோசிக்கலை பாருங்க ” என்றதும் அவளை முறைத்து பார்த்தவன்… ” ஹேய் என்னைய பார்த்தா வயசானவன் மாதிரியா தெரியாது ”
” பின்ன… ஏழு கழுதை வயசாகுது சீக்கிரம் வாங்க மாமா… வீட்டுக்கு போகனும் ” என்றதும்… ” என்னது மாமாவா ”
” பின்ன என் புருஷனுக்கு அண்ணன் எனக்கு மாமா தானே ”
” ஆனால் இத்தனை நாளா என்ன அப்படி கூப்பிடவே இல்லையே.. ”
” வயசு ஆகுதுல… பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கனும் ”
” சாயா இது டூ மச்…” என இருவரும் சண்டையிட்டு கொண்டே வீட்டை அடைந்தனர்.
வீட்டில் அனைவரும் நடு கூடத்தில் அமர்ந்திருக்க… அப்போது தான் சாயா அகரன் இருவரும் உள்ளே நுழைந்தனர். அகரன் அமைதியாக அறைக்குள் செல்ல பார்க்க.. ” மாமா ” என வீம்பாக அழைத்தாள் சாயா..
கீழே கூடத்தில் சத்தம் கேட்டு .. மாடியில் தன் அறையில் இருந்த மறவன் தன் மனைவியாக இருக்குமோ என ஆசையுடன் வெளியே வந்தவன் கேட்டது சாயா அழைத்த மாமா தான்…
சிந்தாமணி மூர்த்தி இருவருமே அவள் அழைப்பில் முழிக்க… ” எங்க போறீங்க… வாங்க உங்களை வச்சு தான் ஒரு முக்கியமான விஷயம் பேசனும் “என அவனை வலுக்கட்டாயமாக அழைத்து வைத்தாள்…
” அத்தை மாமா… உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் ” என்றதும்.. ” சொல்லு சாயா ” என மூர்த்தி கேட்க… அப்போது தான் மறவன் இறங்கி கீழே வந்தான்..
கிட்ட தட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு தன் மனைவியை பார்க்கிறான்… அவன் வருவது தெரிந்தாலும் அவன் பக்கம் பார்வையை கொஞ்சமும் திருப்பாது அமர்ந்திருந்தாள். ” அது நம்ம அகரன் மாமாவுக்கு வயசு ஆகிடுச்சு… சட்டுனு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா அவங்க வாழ்க்கையும் நல்லா இருக்கும் ” என்றதும்..
“ஹேய் சாயா மறுபடி அதையே சொல்லாத … எனக்கு ஒன்னும் வயசு எல்லாம் ஆகல… ”
” சொட்டை விழுறதுக்குள்ள கல்யாணம் பண்ணனும் மாமா இல்லைனா பொண்ணு கிடைக்காது ” என்றதும் அங்குள்ள அனைவருக்கும் சிரிப்பு தான் வந்தது.. முயன்றும் அதை கட்டுப் படுத்திக் கொண்டனர்.
” இந்த விஷயத்துல தலையிட நாங்க யாரு சாயா ” என மூர்த்தி கேட்டதும்.. இதற்கு மேல் இங்கு இருக்க வேண்டுமா என மனம் தாங்காமல் அங்கிருந்து எழுந்து சென்று அறைக்குள் முடங்கி விட்டான் அகரன்…
அவன் சென்றதும்… ” எதுக்கு மாமா இப்படி பேசுறீங்க.. தப்பு பண்ணாத மனுஷங்க யார் இருக்கா .. நீங்க இப்படி பேசினா எப்படி… அவருக்கு இப்போ நம்மளை விட்டா யார் இருக்கா ”
” உன்னால மட்டும் தான் இப்படி பேச முடியும் சாயா… உனக்காக பண்ணுறேன் ” என மூர்த்தி எழுந்து கொள்ள… அவர் கூடவே சிந்தாமணியும் எழுந்து சென்று விட்டார்.
தற்போது கூடத்தில் இருப்பது மறவன் சாயாலி மட்டுமே.. அவன் இருப்பது தெரிந்தாலும் கண்டு கொள்ளாமல் கதிரையில் இருந்து எழுந்தவள்.. நேராக அறைக்கு செல்ல போக….
” ஊருக்கு தான் உபதேசம்… சொந்த வாழ்க்கையில இல்ல ” என்ற மறவன் குரலில் அப்படியே நின்று விட்டாள்..
” தியாகி பட்டம் மட்டும் போதுமா… புருஷன் கூட வாழுற எண்ணம் இல்லையா ” மறவன் கேட்டதும் அமைதியாக தரையை வெறித்தாள் சாயா.
” உனக்கு விருப்பம் இல்லாத வாழ்க்கையை எதுக்கு வாழ்ந்துட்டு… அதான் நம்ம முன்ன எடுத்த முடிவா டிவோர்ஸ் பண்ணலாம்னு இருக்கேன் ” என கூலாக கூறி விட்டு மறவன் மேலே உள்ள அவனது அறைக்கு செல்ல.. அவனது மனைவியோ ஆணி அடித்ததை போல நின்று விட்டாள்.
ஐந்தே நிமிடம் தான்… பெரிய பால் டம்ளரை கையில் தூக்கி கொண்டு அவனது அறைக்குள் நுழைந்தாள் சாயா. சத்தியமாக இப்படி ஒரு கோலத்தில் தன் அறைக்குள் அவள் வருவாள் என எதிர்பார்க்காத மறவன் அதிர்ந்து போனான்.
‘ என்ன உடனே வாழ முடிவு பண்ணிட்டா போல… பரவாயில்லை டா மறவா உன் ஸ்பீச் ஒர்க் அவுட் ஆகிருக்கு ‘ என மனதிற்குள் குதிகளித்து கொள்ள… அவன் முன்பு பாலை நீட்டினாள் சாயா…
கையில் பாலை வாங்கிக் கொண்டவன்… ” நல்ல முடிவு தான் எடுத்திருக்க” என பாலை வாயில் வைக்க போக…
” குடிக்குறதுக்கு முன்னாடி நான் சொல்ல வரத கேட்டுட்டு குடிங்க… பால்ல விஷம் கலந்து இருக்கேன்… சோ குடிச்ச அரை மணி நேரத்துல தொண்டை அடைச்சு ரத்த வாந்தி எடுத்து மேல போயிடுவீங்க… ” என அமைதியாக அவனை பார்க்க… பயத்தில் பால் டம்லரை கீழே விட்டான் மறவன்.
பால் சிதறி கீழே கொட்டியது… ” என்ன விளையாட்டு சாயா… ” என மறவன் அதிர்ச்சியாக கேட்டான்….
” முதல்ல என்ன பார்க்க விருப்பம் இல்லனு தான் நினைச்சேன்… சரி கொஞ்ச நாள்ல சரியா போயிடும்னு நினைச்சேன்.. இப்போ திரும்ப முதல்ல இருந்து வருது… இப்படி ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் வாழாம இருக்குறத்துக்கு எதுக்கு இந்த வாழ்க்கை ” என தீர்க்கமாக பேசுபவளை கண் சிமிட்டாமல் பார்த்து வைத்தான் மறவன்.
“அதான் மொத்தமா முடிச்சு விட்டுடலாம்னு இருக்கேன் ”
” அதுக்கு என்ன விஷம் கொடுக்கனுமா ”
” பின்ன நீங்க பண்ண காரியத்துக்கு பாதாம் பாலா கொடுப்பாங்க… ”
” இன்னைக்கு ஏன் அவார்ட் கொடுக்குற அப்போ வரலை ”
” நீங்க கூப்பிடவே இல்லையே ” என கூறும் போதே அவள் எந்த அளவிற்கு தன்னை எதிர்பார்த்து இருப்பாள் என்பது அவனைக்கு நன்றாக புரிந்தது.
” இப்போ என்ன செய்யலாம் ”
” எனக்கு தூக்கம் வருது … ” என அவனது மெத்தையில் பாதி இடத்தை அடைத்து கொண்டு படுத்தவளை சின்ன சிரிப்புடன் பார்த்தவன்…
” உன் ரூம்ல பெட் இல்லையா ” என வெறியாக்கி பார்க்க… அவ்வளவு தான் அவள் பார்த்த பார்வையில் கப் சிப் என விளக்கை அணைத்து விட்டு அவளுக்கு மறுபக்கம் படுத்துக் கொண்டான்.
பத்து நிமிடம் , பதினைந்து ஆனது.. அரை மணி நேரம் ஆனது இருவரும் முழித்து தான் இருந்தார்கள் ஆனாலும் ஒரு வார்த்தை பேசவில்லை..
மெதுவாக தலையை திருப்பி பார்த்தான்… இன்னும் உறங்காமல் விட்டத்தை வெறித்து கொண்டிருந்தாள்… ” யாழி ”
” ம்ம்”
” தூங்களையா ”
” தூக்கம் வரல.. ”
” எனக்கும் தான் ”
” என்ன பண்ணலாம் ”
” என்ன வேணாலும் பண்ணலாம் ” என இரட்டை அர்த்தத்தில் பேசியவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள் அமைதியாக இருக்க ..
” அப்ப ஓகே வா ” என மீண்டும் முயற்சித்து பார்த்தான்..
” என்ன ஓகே வா ” தெரியாததை போல அவள் கேட்க… முகத்தை சுருக்கி ” ஒன்னும் இல்ல ” என அமைதியாக படுத்து விட்டான் மறவன்.
அதில் அவளுக்கு சிரிப்பு வந்தாலும்.. அடக்கி கொண்டு படுத்திருந்தாள்… அவன் மீண்டும் ஏதேனும் பேசுவான் என அவள் எதிர்பார்த்து இருக்க.. அவனோ கண்களை மூடி படுத்து விட கடுப்பாகி போனாள் சாயா.
” தூங்கியாச்சா ” இம்முறை அவள் கேட்க… அடுத்த நொடி அவள் மீது படர்ந்திருந்தான் மறவன்… இதை சற்றும் எதிர்பார்க்காத சாயா அதிர்ந்து கண்களை விரிக்க…
” போதுமா.. வந்துட்டேன் யாழி… உன்கிட்ட பேசுனதுக்கு அப்பறம் என் கோவம் போக சப்புனு ஒன்னு கன்னத்துல வைக்க நினைச்சேன்… ஆனால் உன் முகத்தை பார்க்கவும் முடியாம போயிடுச்சு… ” என அவன் அவளது முகத்தை அளக்க… சாயாவிற்கு தான் நெஞ்சு கூடு ஏறி இறங்கியது.
” போதும் இப்படி மூச்சு விடாத… எனக்கு பார்க்க பார்க்க என்னமோ போல இருக்கு ” என மறவன் பேச்சில் சட்டென்று துப்பட்டாவை எடுத்து மேலே மூடினாள்…
அதில் நக்கலாக அவளை பார்த்து சிரித்தவன்.. ” ரொம்ப கஷ்ட படாத யாழி… இங்க உச்சந்தலையில இருந்து உள்ளங்கால் வரைக்கும் எனக்கு தான் சொந்தம்.. என்ன மூடி வச்சாலும் வெளிச்சத்துக்கு வந்து தான் ஆகனும் ” ஆணவனின் பேச்சு அவளுக்கு அதிர்வை தான் கொடுத்தது…
இத்தனை நாளும் இப்படி பேச்சுகளை எல்லாம் எங்கே ஒளித்து வைத்திருந்தான் என்ற கேள்விக்கு தான் விடை தெரியவில்லை… வெளியே கண்ணியமாக இருந்தாலும் கட்டிய மனைவியிடம் கண்ணியம் காட்டினால் அந்த வாழ்க்கை ருசிக்கிமா என்ன….
இப்படி சின்ன சின்ன கொஞ்சல்களும், இரட்டை அர்த்த பேச்சுக்களும், அவ்வப்போது தழுவும் கைகளும் தான் கணவன் மனைவியின் இடையே நெருக்கத்தையும் அன்னியோனியத்தையும் கூட்டும்… இதை மனைவியிடம் செய்வது தவறேதும் இல்லையே… ஏன் அவர்களே இப்படி சில்மிஷங்களை தான் எதிர்பார்ப்பார்கள்…
கணவன் பேசும் பேச்சில் தன்னை இழந்தவள்… கண் சிமிட்டாமல் அவனையே பார்க்க… அவனையே இமை வெட்டாது பார்த்து கொண்டிருந்த கண்களுக்கு தன் முதல் முத்திரையை பரிசாக அளித்தான்.
“யாழி ”
” ம்ம்”
” அது ”
“ம்ம் ”
” வந்து ”
“ம்ம்”
” பால்ல உண்மையாவே விஷம் கலந்தியா டி ” என கேட்டவுடன் அதுவரை இருந்த மோன நிலை கலைந்து அவனை தீயென முறைக்க….
” அப்போ உண்மையாவே கலந்து இருக்கனும் போல ” என பல்லை கடித்தவளை ஒரு நமட்டு சிரிப்புடன் பார்த்தான்…
” முதல்ல இறங்குங்க மூச்சு வாங்குது ” என அவள் மேல் படர்ந்து இருந்தவனை தள்ளி விட.. அவன் மெத்தையில் விழுந்த அடுத்த நொடி அவளை இழுத்து அவன் மேல் தாங்கி கொண்டான்.
” நான் தாங்குவேன்… ” என மறவன் கூறினாலும்… அவளது மொத்த மேனியும் அவன் மேல் இருப்பது அவளுக்கு வெகுவாக கூச்சத்தை உண்டு பண்ண நெளிந்து கொண்டே அவன் மீது படுத்திருந்தாள்.
” என்கிட்ட எதுவுமே கேட்க இல்லையா ”
” இப்ப பேசுறதுக்கு நேரம் இல்லையே ”
” ஓ அப்படி என்ன வேலை ”
” ஏன் என் வேலையை பார்க்கனுமா ” என்றதும் அவசரமாக ஆம் என தலையாட்டி பின் இல்லை என ஆட்டினாள்.
” அப்படியே எடுத்துக்க ஆசை.. ஆனால் சிக்னல் கிடைக்காம நிற்கிறேன் ” என அவளது அனுமதி வேண்டி நிற்பவனை பார்க்கவே முடியாமல் தலையை தாழ்த்தி கொள்ள…
” இதுக்கு பதில் இது இல்லையே யாழி ” என்றதும் அவனை இழுத்து அணைத்து கொண்டாள் நங்கை…
இனிமேல் சிக்னல் தேவையில்லை.. அதான் மொத்த சிக்னலையும் உடைத்து விட்டாளே… இனி வாகனம் எந்த வழியில் வேணாலும் சென்று கொள்ளலாம்….அனுமதி கொடுத்த தன் மனைவியை அணு அணுவாக ரசிக்க ஆரம்பித்தான் மறவன்.
” லைட் ஆப் பண்ணுங்க மறவன் ”
” ஏன் ”
” இதென்ன கேள்வி எனக்கு கூச்சமா இருக்கு,…”
” இதுக்குமேலயும் கூச்சம் இருக்கனுமா என்ன ” என கேள்வியுடன் விளக்கை அணைத்தவன் அவனது தேடலை தன் மனைவியிடம் தொடங்கினான்
திருமணம் ஆகி இத்தனை வருட பிரம்மச்சாரிய விரதத்தை முற்றிலுமாக துறந்தவன்… தன் மனைவியை ஆசை தீர ஆள தொடங்கினான்.
” மறவன்……. ” என அவள் முனங்கல் கேட்கும் நேரத்தில்… ” கொஞ்சம் பொறுத்துக்கோ யாழி… ” என அவளது உச்சியில் முத்தம் பதித்து அவளை ஆசுவாசம் செய்து தன் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டான் மறவன்.
மொத்தமாக அவளுள் கலந்து அவனது உயிர்நீரை அவளுள் கலக்க செய்து… களைப்பாக அவளிடம் இருந்து பிரிந்து அருகில் படுத்தவன் தன் மனைவியை பார்க்க… அவளோ கண் மூடி மூச்சு வாங்க அருகில் கிடந்தாள்…
அவளை இழுத்து தன் நெஞ்சில் போட்டு கொண்டு .. அவளை சமன் செய்து கொஞ்ச கொஞ்சமாக தட்டு கொடுத்து உறங்க வைத்தான்.
***
“போன் பண்ணா எடுக்க மாட்டியா ”
” நான் பல தடவை சொல்லிட்டேன்.. எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை ”
” அப்போ உன் எண்ணத்தை மாத்திக்கோ ” என அசால்டாக கூறும் பிரீத்தியை முறைத்து பார்த்தான் தினேஷ்.
” எனக்கு டைம் வேணும் ”
” ம்ம் இப்ப தான் என் வழிக்கு வந்திருக்க.. நல்லா யோசிச்சு எப்போ கல்யாணம் வச்சுக்கலாம் சொல்லு ” என போனை வைத்து விட்டாள் பிரீத்தி. தன் கையில் இருக்கும் அலைபேசியை சின்ன சிரிப்போடு பார்த்து வைத்தான் தினேஷ்.
எத்தனை பிடிவாதம்.. அவன் வேண்டும் என்பதில் அத்தனை பிடிவாதமாக இருந்தாள் பிரீத்தி. அவளது வாழ்வில் காதலித்த பெண்ணிற்காக அவன் செய்த அனைத்தையும் பார்த்து அவன் மேல் காதல் கொண்டது கன்னியின் மனது. அதை வெளிப்படையாகவும் கூறி விட்டாள். முதலில் மறுத்து வந்தவன்… தற்போது தான் நேரம் வேண்டும் என்றே கேட்டு இருக்கிறான்.. இதுவே நல்ல முன்னேற்றம் அல்லவா.
**
இதோ அதோவென்று மூன்று மாதங்கள் ஓடி விட்டது. மறவன் வெளியூரில் உள்ள பிஸ்னசை பார்த்துக் கொள்ள… உள்ளூரில் இருக்கும் எஸ்டேட்டை எல்லாம் அகரன் மற்றும் சாயாலி இருவரும் சேர்ந்து தான் பார்க்கிறார்கள். கூடலுக்கு பின்னே கணவன் மனைவி இருவரும் ஒன்றாக அலைவதை பார்த்து குடும்பத்தில் உள்ளவர்கள் புரிந்து கொண்டனர்.
” ஏன் மாமா இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம்… நமக்கு இந்த வேலை தேவைதானா ”
” நீ எல்லாம் பேசுவ.. நாளைக்கு உன் புருஷன் வந்து கணக்கு கேட்டா நான் என்ன பண்ணுறது ”
” அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் ”
” அவ்வளவு தான் முடிஞ்சு போச்சு சாயா ” என வேலைகளை எல்லாம் முடித்து விட்டு சாயா அகரன் இருவரும் கிளம்பினர்
சிந்தாமணிக்கு தூரத்து சொந்தத்தில் தான் பெண் பார்த்து உள்ளார்கள்… இருவருக்கும் பிடித்தே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.. இதோ இரண்டு நாட்களில் திருமணம்.. திருமண வேலைகளில் மறவன் பிஸியாக அலைந்து கொண்டிருந்தான்
தற்போது அண்ணனுடன் கொஞ்சமாக பேசுகிறான். நன்றாக ஒட்டவில்லை என்றாலும் என்ன எதற்கு எப்படி என்ற பேச்சாவது இருவருக்குள்ளும் உள்ளது.. அதற்கு காரணம் சாயா தான்…
காலை பொழுது அழகாக விடிய … பிரம்ம முகூர்த்தத்தில் அகரன் அவனுக்கு பார்த்த பெண் மாலினி கழுத்தில் மஞ்சள் கயிற்றை முடிந்து தனது சரி பாதி ஆக்கி கொண்டான்.
தேனு வழக்கம் போல வாரத்தில் ஒரு நாள் வந்து மகளை பார்த்து கொள்வார். என்ன சொல்லியும் மகள் வீட்டில் தங்க அவர் சம்மதிக்கவில்லை… அவரை மேலும் சங்கட படுத்த விரும்பாமல் அவர் போக்கிலேயே விட்டு விட்டனர்.
இரவு…
பௌர்ணமி ஒளியில் ஒருவரை ஒருவர் அணைத்த வண்ணம் அந்த பால்கனியில் அமர்ந்திருக்க… அவர்களது மடியில் தமிழ் காதலன் புத்தகம் தவழ்ந்து கொண்டிருந்தது…
” எப்பவுமே நான் மட்டும் தனியா தான் பிரிச்சு பார்ப்பேன்… இன்னைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து பார்ப்போம் மறவன் ” என தன் ஆசையை கேட்க… இவ்வளவு தூரம் அவள் கேட்ட பின்பு வேண்டாம் என்றா சொல்ல போகிறான்…
” ஒரு பக்கத்தை ஓபன் பண்ணி பாரு யாழி ” என அவன் சம்மதம் கூற… அவன் கைகளோடு கைகள் கோர்த்து ஒரு பக்கத்தை திறந்தாள் சாயா… பக்கம் எண் 143… அதில் இருந்த வாசகம்…
தன் துணையை காதலிப்பது
மட்டும் காதலல்ல…
அவன(ள)து காதலையும்
காதலித்து பார்…
காதல் எத்தனை அழகானது
என்பது புரியும்..
என்ற வாசகத்தை மீண்டும் படித்தவள்… “அப்படியா ” என மறவனை பார்த்து கேட்க… அந்த பனியில் துடித்து கொண்டிருந்த அவளது இதழ்களை அழகாக சிறை பிடித்தான் தமிழ் மறவன்…
புத்தகத்திற்கும் வெட்கம் வந்ததோ … தாள்களை எல்லாம் மூடி கொண்டு உள்ளே ஓடியது.. தமிழ் காதலனும் அவர்களது காதலுக்குள் அடங்கி போனான்.
சுபம்
கதை பிடிச்சதா… கண்டிப்பா கதையை பத்தின உங்களது கருத்துக்களை சொல்லுங்க… ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்க.. எதுவும் மிஸ் ஆச்சுன்னா சொல்லுங்க மக்களே… டாடா போயிட்டு வரேன்…
அன்புடன் சனா💖

