Loading

காதல் -45

 

“லேடிஸ் அன்ட் ஜென்டில்மேன்.. நீங்க இவ்வளவு நேரம் காத்துட்டு இருந்த உங்கள் அபிமான எழுத்தாளர் தமிழ் காதலன் இன்னும் சற்று நேரத்தில் மேடையில் பிரவேசிக்க போகிறார்” என தொகுப்பாளர் கூறியதில் கீழே இருந்து அப்படி ஒரு கூச்சல் சத்தம் வந்தடைந்தது…

 

அந்த ஆடிட்டோரியம் முழுக்க அப்படி ஒரு கூட்டம்… கூச்சலும் சத்தமும் காதை பிளக்க.. அவர்கள் அனைவரும் ஒரே ஒரு நபருக்கு தான் காத்துக் கொண்டிருந்தனர். அதாவது இந்த வருடம் தமிழ் காதலன் எழுதிய புத்தகம் கின்னஸ் ரெகார்டை பிடித்து விட்டது..

 

அதற்காக விருதும்… மேலும் அந்த புத்தகத்தில் தமிழை வித விதமான முறையில் மெருகேற்றி சிறந்த முறையில் கொண்டு வந்ததற்கு அரசாங்கத்தில் இருந்து உயரிய விருதையும் வழங்க காத்துக் கொண்டிருக்கிறது..

 

” ஏண்டா அங்க எல்லாரும் வந்துட்டாங்க.. நீ தான் இன்னைக்கு அங்க ஹீரோ நீயே போகாம இருந்தா எப்படி ”  என சிந்தாமணி கத்திக் கொண்டே இருக்க…

 

” அட அவன் என்ன சின்ன பையனா… சரியான நேரத்துக்கு போயிடுவான்… நீ பேசாம வா ” என மூர்த்தி அடக்கினார்..

 

” ஆமா உங்க பிள்ளையை ஒன்னுமே சொல்ல கூடாது ” என வாய்க்குள் முனங்கி கொண்டே அமைதியாக ரோட்டை வெறிக்க ஆரம்பித்தார்.

 

தமிழ் மறவன் அமைதியாக காரை செலுத்தி கொண்டு அந்த ஆடிடோரியம் வந்தடைந்தான். முதல் முதலாக தற்போது தான் தமிழ் மறவன் வெளியே தன் முகத்தை காட்ட இருக்கிறான்….

 

உண்மையான தமிழ் காதலன் யாரென்று அனைவரும் ஒரு வித எதிர்பார்ப்போடு இருக்க.. அவர்களது எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் பொருட்டு காரில் இருந்து மூவரும் இறங்கினர்.

 

அங்கு ஏற்கனவே தேனு வாயிலில் நிற்க.. அவரையும் அழைத்து கொண்டு நால்வருமாக உள்ளே சென்றனர்.

 

” வெல்கம் சார்…” என பூங்கொத்து கொடுத்து அவர்களை குடும்பத்தோடு வரவேற்றனர் அங்குள்ள பங்குதாரர்கள்…

 

தமிழ் மறவன் தவிர்த்து மீதி மூவரையும் முதல் வரிசையில் அமர சொல்லி விட்டு .. அவனை அழைத்து கொண்டு ஸ்பெசல் ரூமிற்கு சென்றனர்.

 

” சார் ஜுஸ்.. ”

 

” நோ தாங்க்ஸ்” என நாகரீகமாக மறுத்து விட்டான்

 

” சார் ஷோ ஸ்டார்ட் பண்ணலாமா ?” என பணிவாக அவனிடம் கேட்க…

 

” அதுக்குத்தானே வந்திருக்கோம்… ஸ்டார்ட் பண்ணுங்க ” என அமைதியாக சுவரை வெறிக்க ஆரம்பித்தான் மறவன்.

 

இத்தனை நாளும் தமிழ் அகரன் எடுத்து கொண்ட பெயர் முழுவதுமாக இவன் பக்கம் வந்துவிட்டது… ஆனால் இதெல்லாம் கிடைக்க வைத்த அந்த ஒரு ஜீவனை மட்டும் காணவில்லை.. கண்டிப்பாக வரமாட்டாள்… என மனம் உறுதியாக கூற.. அதற்கும் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தான் மறவன்.

 

அகரன் பெயரில் இருந்த புத்தகத்தை எல்லாம் சட்டப்படி கோர்ட்டில் கேஸ் பைல் செய்து… அந்த புத்தகத்தின் ஒரிஜினல் ஆதர் காபியை அரசாங்கத்திடம் சமர்பித்து .. தமிழ் காதலன் புத்தகம் தமிழ் அகரனது இல்லை… அது முழுக்க முழுக்க தமிழ் மறவன் உடையது.. என நிரூபித்து இருந்தாள் சாயா…

 

இதெல்லாம் எப்போது நடந்தது… எல்லாம் அவள் மருத்துவமனை வாசம் துறந்த பின்பு தான் நடந்தது. அன்று மருத்துவர் முடியாது என கூறி விட்டு சென்ற பின்பு உச்ச கட்ட கோபத்தோடு அந்த அறைக்குள் நுழைந்தான் மறவன்.

 

அவன் கோபத்தை கண்டு தினேஷ் அவனை நெருங்க பார்க்க…. அவனை கண்களாலேயே தள்ளி நிறுத்தியவன், புயலென உள்ளே நுழைந்தான்.

 

கைகள் அறுக்கபட்ட இடத்தில் பெரிய கட்டிட்டு … சுவாசக் குழாய் வைத்து சோர்வாக கண் மூடி படுத்திருக்கும் சாயாவை பார்க்க கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது..

 

மனம் கனக்க அவள் அருகில் அமர்ந்தான்…  கண்மூடி படுத்திருந்தாலும் தான் பேசுவது எல்லாம் அவளுக்கு கண்டிப்பாக கேட்கும் என்பது தெரிந்தே பேசினான்.

 

” என்ன சாயா எங்களை எல்லாம் விட்டுட்டு போகலாம்னு முடிவு பண்ணிட்ட போல… ரொம்ப சந்தோஷம் , ஏன்னா இதுக்காக தானே நாங்களும் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.. உனக்கு எப்போ எல்லாம் உண்மையும் தெரியும் எப்போ நீ உயிரை விடுவன்னு இருக்கோம்.. இதோ அதே மாதிரி நடந்துடுச்சு ” என பெரும் மூச்சை விட்டவன்..

 

“என் வாழ்க்கையில மிக பெரிய பொக்கிஷம் என் தமிழ் காதலன் எழுத்து அதையே நான் விட்டு கொடுத்துட்டேன்… அடுத்து நீ வந்த .. நீயும் நிரந்தரம் இல்லனு தெரிஞ்சு போச்சு .. அதாவது எனக்கு வாழ்க்கை பாடம் கத்து கொடுத்திருக்கு..  உன் வாழ்க்கையில எல்லாம் பாதில வந்துட்டு பாதில போயிடும் மறவா.. எதுவும் நிரந்தரம் கிடையாது.. எது மேலும் ஆசை வைக்காதன்னு சொல்லிடுச்சு ”

 

” முதல்ல புத்தகம்… இப்ப நீ … இனிமே என்ன விட்டு போக என்ன இருக்கு சொல்லு .. அந்த சொத்தும் அகரன் பெயருக்கு முழுசா மாத்திட்டு .. நான் சீக்கிரம் வரேன் ” என்றவன்.. சிறிது இடைவெளி விட்டு ..

 

” எங்கன்னு கேட்குறியா… நம்ம முதல் முதல மீட் பண்ணோம் பாரு மலை உச்சி… அங்கதான் போக போறேன்… எல்லாத்தையும் இழந்துட்டு இங்க இருந்து நான் என்ன பண்ண… விட்ட வாழ்கையை உன் கூட மேலே வந்து தொடரலாம்னு இருக்கேன் ” என அமைதியாக அவளையே பார்த்தான்.

 

இவ்வளவு தூரம் பேசியும் சிறு அசைவு இல்லை அவளிடம்…  சோர்ந்து போனான் மறவன்.. ” நான் இவ்வளவு பேசியும் நீ அமைதியாக இருக்கன்னா என்ன அர்த்தம்… நீ முடிவுல இருந்து மாற மாட்ட அப்படித்தானே… அப்போ என் முடிவையும் கேட்டுக்கோ.. நீ போன அடுத்த நிமிஷம் என் சொத்து எல்லாத்தையும் அகரன் பேர்ல மாத்திட்டு… தமிழ் காதலன் புத்தகம் எல்லாத்துக்கும் ஆதர் காபியை அவன் கிட்ட கொடுத்துட்டு … நீ போன இடத்துக்கே நானும் வரேன் ” என மூச்சு திணற பேசி முடித்தான் மறவன்.

 

அவன் வாழ்க்கையிலேயே இவ்வளவு நேரம் பேசி இருக்கிறான் என்றால் அது சாயாலியிடம் மட்டுமே…வாய்க்கு வந்ததை எல்லாம் அவனும் பேசி பார்த்து விட்டான்… ஆனாலும் மனைவியின் முன்னேற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் போக.. இறுதியாக அவள் நெற்றியில் இதழை பதித்தவன்… ” ஐ லவ் யூ யாழி… உன் கூட ரொம்ப வருஷம் சந்தோஷமா வாழ ஆசை பட்டேன் .. இப்ப உனக்கு கொடுக்கிறது கூட கடைசி முத்தமா இருக்கலாம் .. உன்ன மிஸ் பண்ண மாட்டேன் யாழி… நீ எங்க இருந்தாலும் அங்கையும் நான் இருப்பேன் ” என அவளது மூச்சு குழாயை எடுத்து விட்டு அவளது பட்டு இதழ்களில் மென்மையாக முத்தமிட்டவன்…  மீண்டும் அதை பொறுத்தி விட்டு அறையில் இருந்து வெளியேறினான்.

 

” என்னாச்சு மறவன்… எதவாது முன்னேற்றம் இருக்கா ” என தினேஷ் கேட்க…

 

இல்லை என்பதாய் தலை அசைத்தவன்.. அமைதியாக அங்குள்ள கதிரையில் அமர்ந்து விட்டான்…

 

ஒரு மணி நேரம் கழித்து சிந்தாமணி தேனுவை அழைத்து கொண்டு மருத்துவமனை வந்தார்.

 

” டேய் என்ன டா ஆச்சு ” என சிந்தாமணி பதற… நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான் மறவன். தேனு தலையில் அடித்து கொண்டு அழுதார்.. முதலில் அவரது கணவர் தற்போது மகள் என வரிசையாக அவரை விட்டு செல்வதை எப்படி அவரால் தாங்கிக் கொள்ள முடியும்.. அதுவும் தவறே செய்யாத கணவர் தண்டனையை அனுபவித்து இறந்தது மேலும் ரணமாக வலித்தது..

 

” தம்பி நான் என் பொண்ண பார்க்க போகலாமா ” என கண்ணீர் மல்க கேட்க.. அவரை அழைத்து கொண்டு உள்ளே சென்றான் மறவன்.

 

மூச்சு பேச்சு இல்லாமல் துவண்ட கொடியாய் படுத்திருக்கும் தன் மகளை பார்த்தவர் கதறி அழுதார்… ” சார் பேஷண்டை டிஸ்டர்ப் பண்ணாம பார்க்க சொல்லுங்க ” என செவிலியர் சத்தமிட .. தேனு தன் மகளை நெருங்கி அவளது கையை இறுக்கமாக பற்றி கொண்டவர்.. ” உன் அப்பா விட்டுட்டு போன மாதிரி நீயும் போயிடாத டி.. உனக்காக தான் இவ்வளவு நாள் நானும் வாழ்ந்துட்டு இருக்கேன்.. எங்களை பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி ஒரு முடிவை எடுத்து வச்சுருக்கியே ” என அழுதவர்… ” அம்மா உனக்காக காத்திருக்கேன் சாயா நீ வரனும் ” என அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தேனு வெளியேறி விட்டார்..

 

அதன் பின் சிந்தாமணி தினேஷ் இருவரும் பார்த்து விட்டு வந்தனர். அன்று நாள் முழுக்க ஒரு அசைவும் இல்லை அவளிடம்…  இரவு வந்து அவளை பரிசோதித்த மருத்துவர் ” என்ன மிஸ்டர் மறவன் நீங்க யாரு பேசுனதையும் அவங்க காதுல வாங்குன மாதிரி எனக்கு தெரியலை.. கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்ல.. இப்படியே போனா சரி வராது.. ஆக்சிஜன் ரிமூவ் பண்ணிட்டா அவ்வளவு தான் ” என எச்சரித்து விட்டு செல்ல… மறவன் அமைதியாக அமர்ந்து விட்டான்.

 

காலையில் தன் தாயிடம் பேசியதோடு சரி… அதன் பின் ஒரு வார்த்தை பேசவில்லை.. பச்சை தண்ணீர் அருந்தவில்லை.. பித்து பிடித்தவன் போல அமர்ந்திருந்தான் .. அவனை இப்படி ஒரு நிலையில் சிந்தாமணி பார்த்ததே இல்லை.. அவனது புத்தகம் அவன் கையை விட்டு சென்ற போது கூட அவன் இவ்வளவு தூரம் சோர்ந்து போகவில்லை…. ஆனால் சாயாலி அவனது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளாள் என்பது இப்போது தான் அனைவருக்கும் தெரிந்தது..

 

அதே நேரம் மூர்த்தி, மறவன் பிஏ பிரீத்தியின் துணையுடன் அந்த மருத்துவமனை வந்தடைந்தார். அவரை அங்கு எதிர்பாராத சிந்தாமணி… ” ஏங்க உங்களை யாரு இங்க வர சொன்னது.. ” என்றதும்…

 

” என்ன பண்ணிட்டு இருக்க சிந்தாமணி… மருமகள் எங்க .. என்னமோ சொல்லுறா பிரீத்தி… நீ என்கிட்ட எதையும் சொல்லாம விட்டுட்டு வந்துட்ட ” என கடிந்து கொண்டார்

 

” அது இல்லங்க.. உங்களுக்கு இப்போதான் ஹார்ட்ல பிராப்ளம் சரி ஆகி  இருக்கு.. இந்த மாதிரி விஷயத்தை சொல்லி உங்களை கஷ்ட படுத்த வேணாம்னு தான் ” என இழுத்தவரிடம்… ” சும்மா இரு சிந்து… மறைக்க வேண்டிய விஷயமா இது …அவ நம்ம மருமகள் ” என்றவறது பார்வை அப்போது தான் தன் மகனின் மீது படிந்தது..

 

உணர்வற்று அமர்ந்திருந்த அவன் அருகில் சென்று அமர்ந்தவர்.. அவனது கையை இறுக்க பற்றிக் கொண்டார். அவருக்கு தானே தெரியும் இவன் சாயாலி மீது எவ்வளவு காதலை வைத்திருந்தான் என்று….

 

” மறவா … நம்ம சாயா நம்மளை விட்டு எங்க போக போறா… இந்த நேரத்தில தான் நீ தெம்பா இருக்கனும்… தைரியமா இரு எல்லாம் நல்ல படியா நடக்கும் ” என ஆறுதல் கூற… அவர் பற்றி இருந்த கரத்தை தற்போது அவன் இறுக்க பற்றி கொண்டு தந்தையின் தோள் சாய்ந்தான் மறவன்.

 

காதல் ஒரு மனிதனை எப்படி எல்லாம் ஆட்டி படைக்கிறது… கம்பீரமாக இருந்த ஆண்மகனை வேரோடு அல்லவா சாய்த்து விட்டது..

 

மருத்துவனையில் இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் மருத்துவர் சாயாலி குடும்பத்தினரை தனி அறைக்கு அழைத்தார்….

 

” டூ டேஸ் ஆச்சு… அதே ஸ்டேஜ்ல தான் இருக்காங்க… இப்போ நீங்களே சொல்லுங்க என்ன பண்ணலாம்… இப்படியே எத்தனை நாளைக்கு ஆக்சிசன் கொடுத்து வைக்கிறது.. நானும் காப்பாத்த முடியும்னு சொல்லி காசு பறிக்கிற ஆள் நான் கிடையாது.. தென் அடுத்த ஸ்டெப் என்ன பண்ணலாம் ” என மருத்துவர் கேட்டதும் அனைவரும் மறவனை தான் பார்த்தனர்.

 

முடிவுகள் எடுக்க வேண்டிய இடத்தில் மறவன் இருப்பதால் அனைவரும் அவனது பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தனர். ” இப்போ என்ன பண்ணலாம் டாக்டர் ” கிட்ட தட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு வாய் திறந்து பேசி இருந்தான் மறவன்.

 

அவனது வேதனை புரிந்தாலும் நிதர்சனத்தை கூற வேண்டும் அல்லவா.. “ஆக்சிசனை ரிமூவ் பண்ணிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போங்க ”

 

” வீட்டுக்கு கூட்டிட்டு போயி??? ” என பார்வையை எங்கோ வெறித்த வண்ணம் மறவன் கேட்க..

 

” ஐ திங்க் ஓபனா சொல்லனும்னா அதுவரைக்கும் கூட தாங்காது… ” என முடித்து விட, தேனு வாயை மூடிக் கொண்டு கதறி விட்டார்.

 

” அப்போ இப்போவே ரிமூவ் பண்ணிடுங்க டாக்டர் ” சட்டென்று மறவன் கூறிய பதிலை கேட்டு அனைவரும் திகைத்தனர்.

 

” டேய் மறவா ” என மூர்த்தி அழைக்க…

 

” முடியலை பா.. ரெண்டு நாளா நம்ம யார் பேச்சையும் கேட்காம .. இப்படியே இருக்கானா அவளுக்கு நம்ம கூட வாழ இஷ்டம் இல்லைன்னு தானே அர்த்தம்… அவளை ஏன் கட்டாய படுத்தி வாழ வைக்கனும்… இதுவரைக்கும் அவ வாழ்க்கைல கஷ்டம் மட்டும் தான் வந்திருக்கு.. சாவையாச்சும் அவ விருப்பப்படி வாங்கிட்டு போகட்டும் பா ” தீர்க்கமாக கூறும் மகனை இமை வெட்டாமல் பார்த்து வைத்தார் மூர்த்தி.

 

“நான் கடைசியாக அவளை பார்த்துட்டு வரேன் டாக்டர் ” என உடனே அங்கிருந்து வெளியேறி சாயாலியின் அறைக்குள் சென்று அங்குள்ள செவிலியரை வெளியே அனுப்பி விட்டு கதவை தாழிட்டான்..

 

எந்த மாற்றமும் இல்லாத அவளது அருகில் நெருங்கி அவளை சற்று தள்ளி படுக்க வைத்தவன்… அவள் அருகில் நெருங்கி படுத்துக் கொண்டான்.

 

ஐந்து நிமிடம் அவள் முகத்தையே பார்த்தவன்.. மேலும் அவளை நெருங்கி கட்டிக் கொண்டவன்… ” நினைச்சதை சாதிக்கிறியா யாழி.. ” என சிரிப்போடு கேட்டவன்… ” நீ சாக போறதை நினைச்சு நான் கவலை படுறேன்னு நினைக்கிறியா… அதுதான் இல்ல.. ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் அவ்வளவு பேசியும் நீ குணமாக முயற்சி செய்யலை… அப்போவே தெரிஞ்சு கிட்டேன்.. என் கூட வாழ உனக்கு விருப்பம் இல்லைனு .. உன்ன கட்டாய படுத்தி வாழ வைக்கவும் நான் விரும்பலை..அதுனால உன் இஷ்ட படியே உன்ன விடலாம்னு முடிவு பண்ணிட்டேன்… ” என பேசிக் கொண்டே அவளது கழுத்து வளைவில் முத்தம் பதித்தான்.

 

“ஆனால் ஒன்னு, என்கிட்ட இருந்து தப்பிச்சு போறன்னு மட்டும் நினைச்சுடாத… அதுல நான் தெளிவா இருக்கேன்… நீ எங்க போனாலும் நான் அங்க இருப்பேன் யாழி..”  என அவளது முகம் முழுவதும் முத்தமிட்டவன்.. இறுதியாக அவளது ஆக்சிஜனை விடுதலை செய்து இதழை கவ்வினான்…

 

இரண்டு நொடிகளில் அதை மீண்டும் பொருத்தி விட்டு … அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.. அதன் பின் ஒவ்வொருவராக அந்த அறைக்குள் சென்று அவளை பார்த்து வந்தனர்.

 

” நான் வீட்டுக்கு போறேன் பா… எல்லாம் முடிஞ்சுதும் என்ன கூப்பிடுங்க ” என மறவன் கூற.. ” டேய் மறவா அவசர படாத பா ” என மூர்த்தி வேதனையாக கூறினார்.

 

” என்ன புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க பா.. ” என வாசலை நோக்கி மறவன் சென்று விட்டான்..

 

” சார் உள்ள இருக்குற பேசன்ட்டுக்கு பல்ஸ் கொஞ்சம் கொஞ்சமா கூடுது சார்… நீங்க பார்த்துக்கோங்க நான் டாக்டரை வர சொல்லுறேன் ” என நர்ஸ் வேகமாக மருத்துவர் அறைக்கு செல்ல…

 

அவ்வளவு தான் மீண்டும் சாயாலி வந்து விடுவாள் என்ற நினைப்பில் அனைவரும் கடவுளை வேண்டிக் கொண்டு அவளது அறை வாசலில் நின்றனர். இதில் தினேஷ் தான் வேகமாக வெளியே ஓடி சென்று வீட்டிற்கு செல்லும் மறவனை வழி மறைத்து நின்றான்

 

மூச்சு வாங்க தன் முன் நிற்கும் தினேஷை கேள்வியாக பார்த்தான் மறவன்… ” வழி விடுங்க தினேஷ்… நான் போய் ஆகனும் ” என மறவன் நகர பார்க்க..

 

” அப்போ சாயாலி கூட வாழ வேணாமா மறவன்… கண்டிப்பா போக தான் போறீங்களா… ” என கேட்க.. அவனை புரியாத பார்வை பார்த்து வைத்தான் மறவன்.

 

” உங்களுக்காக அவ இறங்கி வரும் போது நீங்க அவளது விட்டு போறது நல்லாவா இருக்கு ” என தினேஷ் கூறிய மறு நொடி புயலென உள்ளே நுழைந்தான் மறவன்…

 

அவன் உள்ளே சென்ற நேரம் அவளை மருத்துவர் பரிசோதித்து விட்டு வெளியே வந்தார்… ” கடவுள் இருக்காருன்னு நீங்க கண்டிப்பா நம்பனும்… ஆபத்து கட்டத்தை தாண்டீட்டாங்க.. இனிமே பிராப்ளம் இல்ல… ரெகுலர் ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணலாம் ” என மருத்துவர் கூறவும் போன உயிர் திரும்ப வந்ததை போல உணர்ந்தான் தமிழ் மறவன்

 

இதற்கு மேல் அவனுக்கு எதுவும் தேவையில்லை.. அப்போது அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறி வந்தவன் தான்.. முழுதாக அவளை குணப்படுத்தி  வீட்டிற்கு அழைத்து வந்த போது எதிரில் வந்தவளை ஒரு பார்வை பார்த்ததோடு சரி

 

இதோ ஆறு மாத காலம் ஓடி விட்டது… இன்னும் அவளது முகத்தை பார்க்கவில்லை… இதோ இந்த விருது வழங்கும் விழாவிற்கு வந்திருப்பாள் ..மூன்று நாட்கள் மருத்துவனையில் அவள் படுத்திய பாட்டிற்கு மொத்தமாக திருப்பி கொடுத்து கொண்டு இருக்கிறான் தமிழ் மறவன்.

 

இனி… ????

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்