
அத்தியாயம் 45
தலையையும், முதுகையும் தடவி ஆறுதல் படுத்தியவன், “எழில் குட்டி, ஹாஸ்பிடல்ல இருந்து வர்றேன், குளிக்கணும், பசிக்குது வேற. நா தான் உன்ட்ட சொன்ன மாதிரி சரியாகிட்டேனே, பின்ன எதுக்கு இவ்வளவு அழுக. எனக்கு உடம்பு சரி இல்லயா? இல்ல உனக்கா? ஒரு வாரத்துல இவ்வளவு இளச்சுட்ட. நா முன்ன கட்டி புடிச்சா என் கைக்கு அடக்கமா இருப்ப, இப்ப பாரு எலும்புகூட கட்டி பிடிச்சாக்குல இருக்கு. ஒரு ஃபீலே இல்ல” என்றவன் மேலும் குனிந்து ரகசியமாக அவள் காதில் ஏதோ சொல்ல, அவள் சிரித்து அவன் நெஞ்சில் அடித்து விலகி நின்றாள்.
“என்னடி?” என்றான் அவன் மேலும் சலுகையாக.
அவளோ பேச்சை மாற்றி, “நம்ம ரூம்ல, அடுப்பில வெண்ணி வச்சு ஒரே வெண்ணியா எடுத்து வச்சிருக்கேன், பச்ச தண்ணி கலக்காம நல்லா அலற குளிங்க, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என உள் அழைத்து சென்றாள்.
ராஜமும் வேகமாக வந்து கண்ணீர் மல்க அவன் கன்னத்தை தடவி முத்தமிட்டு ஒதுங்கி நின்றார். அவர் கையிலிருந்த மகளை தொடாமல் பார்த்துக் கொண்டான். அது வெகு நாள் கழித்து தந்தையை காணவும் பொக்கை வாயை காட்டி சிரித்து கையை தூக்கி கொண்டு அவனிடம் பாய, ராஜம் பிடித்துக்கொள்ள, “அப்பா அப்றமா தூக்குறேன்டா செல்லம், குளிச்சிட்டு வர்றேன்” என்ற சொல்லுடன் விலக, அது வாயை பிதுக்கிக் கொண்டு அழுகையை பிடித்தது தந்தை தூக்கவில்லை என்ற கோபத்துடன்.
ராஜம், ஆறுவை பார்த்து, “இனியாவது பிள்ளைக்கு பால் குடுடி” என்று நீட்ட.
நின்று திரும்பி முறைத்தவன் “குளிச்சுட்டு பிள்ளையை தூக்கு” என முறைப்பாகவே சொல்லிவிட்டு சென்று விட்டான்.
ப்ரெசிடெண்ட்டிடம் போட்டுக்கொடுத்த மாமியாரை, ஆறு முறைக்கவும் முடியாத திட்டவும் முடியாத பார்வை ஒன்றை பார்த்தவள் பிள்ளையை வாங்கிக்கொண்டு பிள்ளைகள் அறை சென்று பால் புகட்ட, குழந்தை குஷியாகி, தாய் முகம் பார்த்து அழ விட்ட தந்தையை மறந்து பொக்க வாய் காமித்து கையையும், காலையும் ஆட்டி ஆட்டி சிரித்தது.
அதை ரசித்து தானும் சிரித்தவள், “சாரி கண்ணம்மா, அப்பாக்கு உடம்பு சரி இல்லயா அதான் கொஞ்சம் அப்செட், இனி ப்ராப்ளம் இல்ல நம்ம அப்பா தான் வீட்டுக்கு வந்துட்டாங்களே, உன்ன அம்மா பாத்துக்குறேன் செல்லம்” என தூக்கி முத்தினாள். குணவான்மதி கிளுக்கி சிரித்தாள் தாயின் முத்தத்திலும், ஏதோ தன்னிடம் பேசுகிறாள் என்ற புரிதலிலும்.
மகன் ப்ரகியைப் பொறுத்தவரையில் இரு பாட்டியுமே போதும், தன்னை பெரிதாக தேடமாட்டான். இப்போது வைரமும் கூட இருக்க இன்னமும் கொண்டாட்டமே, ஆனால் ப்ரகலத்தனை பார்த்தால் பாய்ந்து விடுவான். இரண்டு வயதுதான், ஆனாலும் தந்தை வேலைக்கு சென்றிருக்கிறான் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையே வீடு வருவான் என புரிந்திருந்தான். ப்ரகலத்தனுடன் அதிக நேரம் அவனால் இருக்க முடிந்ததில்லை, இருந்தும் தகப்பன் வீட்டிலிருந்தால் அவன் கவனம் மொத்தமும் இவனிடம் இருக்குமாறு நடந்து கொள்வான். இப்போதும் உள்ளுக்குள் ப்ரகலத்தனை நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பான். ஆனாலும் அப்பாவை போலவே அழுத்தம், எதையும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. மனதிலேயே வைத்திருந்து நேரில் பார்த்ததும் விடாமல் பிடித்துக் கொள்வான் மடியை விட்டு இறங்க மாட்டான்.
இப்படி யோசனையில் இருந்தவளை, “போய் அவனுக்கு என்ன வேணும்னு பாரு எல்லாத்தையும் சொல்ல ஒரு ஆள் வரணும். ஒரு கூறு இல்ல, இவகிட்ட என்ன புடிச்சதுன்னு இவள கட்ட ஒத்தக் கால்ல நின்னானோ!!!!!” என திட்டியவாறு அவள் மடியிலிருந்த பிள்ளையை தூக்கி கொண்டார் ராஜம்.
“ஐயோ சாப்பிட கொடுக்கணுமே….” என அவன் நினைவில் அவரை கண்டுக்காமல் வெளியேறினாள். அவன் குளித்துவிட்டு வந்து தலையை துவட்டி கொண்டிருந்தான். கையில் நரம்பில் ஊசி ஏற்றிய இடத்தில் வைத்திருந்த பேண்டேஜ் கிழிந்து ரத்தம் வர, அந்த இடமும் நன்றாக வீங்கியிருந்தது.
“கொண்டாங்க நா துவட்டுறேன் உங்களுக்கு டயர்டா இருக்கும்” என வாங்கும் போது தான் அவன் கையை கவனித்தாள். அதை பார்த்ததும் கண் கலங்கிவிட்டது. நன்றாக மெலிந்திருந்தான், கைவிரல்கள் குச்சி குச்சியாக சத்தின்றி தெரிந்தது, மெதுவாக அவன் கையை தடவி விட்டவள், “வலி தெரியலையா? இதோடவா துவட்டுவாங்க” என கண்ணீரைத் துடைக்க, அது மறுபடியும் மறுபடியும் பெருக்கெடுத்தது.
“எனக்கு ஏற்கனவே அந்த இடம் வலிதான்மா, அதுதான் இப்பயும் வலிக்குது போலன்னு நினைச்சேன், ரத்தம் வர்றத கவனிக்கல. நீ அழாத. என் விஷயத்துல நீ இவ்ளோ வீக்கா இருக்காத எழில் குட்டி, நம்ம பாப்பா கூட கவனிக்காம இருந்திருக்க. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா” என்றான் மறு கையால் அவள் கன்னம் துடைத்து.
தன் கையிலிருந்த அவன் கையை விட்டவள் சென்று ஃபர்ஸ்ட் அய்ட் பாக்ஸ் எடுத்து வந்து ரத்தத்தைத் துடைத்து, மறுபடியும் பேண்டேஜ் கட்டினாள்.
“இதுக்கு பதில் நா இப்ப சொன்னா புரியாதுங்க, என் இடத்துல நீங்களும் உங்க இடத்துல நானும் இருக்கும் போது புரியும். நீங்க இல்லாத மிச்ச வாழ்க்கைன்னு நினைச்சு நினைச்சு நா பயந்த பயம் என் மனசுக்கு மட்டும் தான் தெரியும்” என பேசிக் கொண்டே அவனை கட்டிலில் அமர்த்தி நன்றாகத் துவட்டினாள்.
ஹேர் டிரையர் போட்டாள், “இத்துனூண்டு முடிக்கு எதுக்குடி ஹேர் டிரையர்?” என தடுத்தவனை கண்டுக்காமல், “சளி பிடிக்கக் கூடாது இருமல் குறையணும்” என முடித்துவிட்டாள்.
“14 நாள் குவரண்ட்டைன் இருக்க சொல்லிருக்காங்க, நீ அசால்டா இருந்து மத்தவங்களுக்கு ஸ்பிரட்டாகிடாமம்மா”.
“உங்ககிட்ட இருந்து எனக்கு வராது, அப்டி வந்தா தான அவங்களுக்கு ஸ்பிரட்டாகும். இங்கிருந்து போனதும் கைய கழுவிட்டு தான் எதையும் தொடுவேன் போதுமா?” என வெளியேறினாள்.
“ஒரு வாரமா பேசாம படுத்திட்டு இன்னைக்கு மொத்தமா பேசுறா” என சிரித்துக் கொண்டான்.
சாப்பாடு எடுத்து வந்து தானே ஊட்டியும் விட்டாள். “நா இப்ப நல்லா இருக்கேன்டி” என்றவனை “அத நான் கன்ஃபார்ம் பண்ணிக்கிறேன்” என சாப்பாட்டை வைத்து வாயை அடைத்தாள்.
‘நிறைய தேடி இருக்கிறாள்’ என நினைத்துக் கொண்டான். வைரம் ப்ரகியை அழைத்து வர, அவனுக்கு தெரியாமல் ப்ரகலத்தனை அறையை அடைத்தே வைத்தனர்.
ப்ரகியை அவன் அறையில் விட்டு விட்டு வந்து ப்ரகலத்தனை பார்த்தான், “ஆறு மேடம் ரியாக்சன் எப்டி?” என்றான்.
“சாப்பாடு ஊட்ற அளவுக்கு தரமான கவனிப்பு” ௭ன ப்ரகலத்தன் சிரிக்க.
“அது உங்க மேல உள்ள பாசத்துலயா? இத்தன நாள் நர்ஸ் ஊட்டி விட்டு சாப்பிட்டதுல பொசசிவ்வா இருக்க போது சீனியர்” என்க.
சிரித்தவன், “இப்டி வேற கதை விட்டுருக்கியா நீ. என் பொண்டாட்டி அவளவிட என்ன அதிகமா நாம்புவாடா”.
“அது சரி, ஏன் சீனியர் ஆறுவோட ஃப்ரண்ட்டா இருந்துகிட்டு இந்த லட்சு மட்டும் எப்டி இப்டி இருக்கா?”,
“எப்படி இருக்கா?”.
“என்னைய இந்த லீனா காக்கா வடையை கொத்தின மாதிரி கொத்திட்டு போயிடுவாளாம், அதனால அவள நா வேற இடத்துக்கு மாத்தி விடுணுமாம். அவ என்னைவிட சீனியர் வயசுலயும், வேலைலயும்னு சொல்றேன், நம்பவே மாட்டேங்கிறா. அவள நா டிரான்ஸ்பர் பண்ணி விடணுமாம். நா என்ன சொந்தமாவா அந்த ஏர்லைன்ஸ வச்சு நடத்துறேன்” என புலம்ப.
ப்ரகலத்தன் பின்னால் கண்ணைக் காட்டினான், உடனே சுதாரித்த வைரம், “நா அவள எவ்வளவு லவ் பண்றேன் சீனியர். இவள தவிர வேற எந்த பொண்ணுட்டயாது இந்த ஆறு வருஷத்துல கடல போட்டு பாத்துருக்கீங்களா? இவ இல்லாதப்ப ஒழுங்கா இருந்தவன், இவ வந்ததுமா வேற பொண்ண பாக்கப்போறேன், ஹர்டிங்ஹா இருக்கு சீனியர்” என வைரம் பேசிக்கொண்டே போக.
“டேய் அவ இங்கதான் நிக்றது தெரிஞ்சுதான் டயலாக்கா போட்டு தாக்குற. ஓவரா நடிக்காத உனக்கு இது செட்டே ஆகல” என வந்தாள் ஆறு.
“நீ ஒருத்தி கூடவே இருந்து அவள என் லவ்வ புரிஞ்சுக்க விடாமலேயே பண்றது. நீ மட்டும் உன் ஆத்துகாரர உருகி உருகி லவ் பண்ணுவ, நாங்க பண்ணா மட்டும் உனக்கு சினிமாட்டிக்கா தெரியுதோ, இன்ன லட்சு ௭ன்னன்னு கேளு அவள” என லட்சு தோளில் கையை போட….
அதை வெடுக்கென்று தட்டி விட்டவள், ஆறுவிடம் “உன் புருஷன உன்கிட்ட இருந்து பிரிச்ச்சுட்டானு ஒரு வாரமா பேசாம இருந்த, இப்போ பேசிட்ட அப்போ இவன மன்னிச்சிட்டியா?” என்றாள்.
“ஏய் லூசு அலங்காரி அவளே மறந்துட்டான்னு நெனச்சு லவ் மோடுக்கு அவள டைவர்ட் பண்ணேன் உள்ள புகுந்து கெடுத்துட்ட, பொண்டாட்டியா நீ”.
“ஏன்? அந்த லீனாவ பாத்துட்டு வந்தியா? அவள பாத்துட்டு வந்தா தான நான் பொண்டாட்டியான்ற சந்தேகம்லா வரும் உனக்கு” என்றாள் லட்சு.
“ஆத்தி எங்கிருந்து எங்க போயிட்ட??. இது சரிபட்டு வராது, நாங்க வீட்டுக்கு கிளம்புறோம் சீனியர். இவதான் என் பொண்டாட்டின்னு நிரூபிக்கணும், அவ மனசுல ௭ன்ன அழுத்தமா பதிய வைக்கிற வேலைய பாக்கணும். போய் கெளம்புடி” வைரம் சொல்ல.
“ஹேய் என்ன அரட்டுற. என் மாமனாருக்கு போன் போடுவேன் பாத்துக்க”.
“போடு நானும் என் மாமனாருக்கு போன் போட்டு உங்க பொண்ணு ஒழுங்கா பொண்டாட்டி மாதிரி நடந்துக்க மாட்டேங்குறா, என்ன பொண்ணு வளத்து வச்சிருக்கீங்கன்னு கேக்குறேன்”.
“ஓ! அந்த அளவுக்கு ஆகிட்டா, பாத்துக்கலாம்டா உன் மாமனாரா என் மாமனாரான்னு ஒரு கை பாத்துடலாம். இன்னைக்கு ஒரு முடிவு தெரியாம இத விடப் போறதில்ல” லட்சுவும் தயாராக.
“அதேதான் ஆனா எதுனாலும் நம்ம வீட்ல போயி வச்சுக்கலாம், உடம்பு சரியில்லாத மனுசன கஷ்டப்படுத்த நா விரும்பல”.
“எனக்கும் அந்த ஆச இல்ல, கிளம்பு இதுக்கெல்லாம் அந்த லீனா தான காரணம், அவளுக்கு இருக்கு” என்றாள் லட்சு முகத்தைத் திருப்பிக் கொண்டு வெளியேறி.
“சீனியர் அந்த மெடிக்கல் ரெப் நாளைக்கு வர சொல்லிருக்கேன் வந்ததும் எல்லாருக்கும் செக் பண்ணிடலாம். டேக் கேர், காலைல வரோம். பாத்துக்கோ ஆறு” என கிளம்பினான். இருவரும் தலையசைத்து விடை கொடுத்தனர்.
“இதுங்க என்னைக்கு திருந்த. லீனா மேட்டர உண்மையாவே இவங்களுக்கு நடுவுல இருக்கா என்ன?” என்றான் ப்ரகலத்தன்.
“அதெல்லாம் சும்மா, அவன வெறுப்பேத்த அப்டி பேசுறா, அவனுக்கும் அது தெரியும். சண்ட போட்டே பழகிட்டாங்க அதனால அதுலயிருந்து திருந்த வாய்ப்பு இல்ல. நீங்க டேப்லெட்ட போட்டு தூங்குங்க, எதுனாலும் எனக்கு மிஸ்டுகால் கொடுங்க வரேன். சத்தம் போட்டு ப்ரகிகிட்ட மாட்டிக்காதீங்க”,
“சரிடி” என படுத்து உறங்கியும் விட்டான்.

