Loading

காதல் -44

 

ஏதோ ஒரு பிடியை வைத்து கொண்டு சாயா அங்கு தான் இருப்பாள் என மனதை தேற்றி கொண்டு தினேஷுடன் அந்த இடத்தை நோக்கி விரைந்தான் மறவன்.

 

சிறு பூச்சிக்கு கூட துரோகம் நினைக்க மாட்டாள்… மலை உச்சிக்கு அணில்களுக்காக பழம் எடுத்து செல்வாள், அப்படி பட்டவளை தப்பே செய்யாத அவள் தந்தையை கொலை செய்தது நீதான் என கூறினால் தாங்குமா அவளது நெஞ்சம்…

 

வாய் வார்த்தையாக அகரன் கூறி இருந்தால் கூட, அப்படி நடக்க வாய்ப்பில்லை என ஏதேனும் கூறி தட்டி கழித்து இருக்கலாம்.. ஆனால் அவன் நடந்ததை எல்லாம் வீடியோ காட்சிகளாக அல்லவா காட்டி விட்டான்.. இதற்கு மேல் மறுத்து கூறுவதற்கு வாய்ப்பு இல்லை என்பது ஆணித்தரமாக தெரிந்து போனது.

 

” இன்னும் எவ்வளவு தூரம் போகனும் மறவன் ” என தினேஷ் வண்டியை இயக்கிக் கொண்டே கேட்க..

 

” இன்னும் அரை மணி நேரத்துல போயிடலாம் தினேஷ்… வண்டியை கொஞ்சம் சீக்கிரம் ஓட்டுங்க ” என அவனிடம் கூறி விட்டு… தன் அன்னைக்கு அலைபேசியில் அழைத்தான்.

 

” மா…”

 

” சொல்லு மறவா… சாயா எங்க இருக்கா” என எடுத்ததும் கேட்டார் சிந்தாமணி.

 

வேதனையை முழுங்கி கொண்டு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அன்னையிடம் கூறியவன்… இதற்கு பின் அகரன் என்ற ஒரு பிள்ளை உங்களுக்கு இருக்கிறான் என்பதை முற்றிலுமாக நீங்க மறக்க வேண்டும் என்ற கட்டளையையும் சேர்த்தே கூறினான்.

 

நடந்த அனைத்தையும் கேட்ட சிந்தாமணி அதிர்ந்து தான் போனார். ” இப்போ எங்க இருக்க மறவா ”

 

” யாழியை பார்க்க போறேன் மா , அவ இருக்குற இடத்தை கெஸ் பண்ணிட்டேன்… அங்க அவ இருந்தா கண்டிப்பா உங்களுக்கு தகவல் சொல்லுறேன்.. நீங்க உடனே தேனு அத்தையை கூட்டிட்டு இங்க வந்திருங்க ” என்றதோடு தொடர்பை துண்டித்தான்…

 

அவன் கூறிய வழியில் வந்து சேர்ந்த தினேஷ்… “அடுத்து எப்படி போகனும்னு நீங்கதான் சொல்லனும் மறவன் ” என கேட்க… ” ரைட் கட் பண்ணுங்க தினேஷ் ” என்றவனுக்கு நெஞ்சம் திக் திக்கென்று அடித்தது…

 

பின்னே அவள் இருக்கும் இடத்திற்கு அவன் வந்துவிட்டான் அல்லவா.. அதே இடம்… சிந்தாமணியை ராஜ் பலாத்காரம் செய்த இடம்… சாயாலி தன் தந்தையை கொலை செய்த இடம்.. அதே பழைய வீடு … அந்த வீட்டின் முன்பு வந்து காரை நிறுத்தினான் தினேஷ்.

 

” சீக்கிரம் போங்க மறவன்” என தினேஷ் அவசர படுத்த.. வீடு வரை வந்தவனால் உள்ளே சென்று சாயாவை பார்க்க முடியவில்லை… அதற்கு தைரியமும் இல்லை… அமைதியாக காரில் கண் மூடி அமர்ந்து விட்டான்..

 

” நான் போய் பார்க்கவா ” என தினேஷ் தயக்கமாக கேட்டான்… ” ம்ம் ” என்றதோடு மறவன் முடித்து கொண்டான்..

 

உடனே காரில் இருந்து இறங்கிய தினேஷ் அந்த வீட்டிற்குள் மெல்ல அடியெடுத்து செல்ல… மறவன் நினைத்ததை போல சாயாலி அங்கே இருந்தாள்… ஆனால் அவள் இருந்த நிலை… ????

 

” மறவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்”  என தினேஷ் கத்திய கத்தில்… தான் நினைத்ததை போல ஏதோ நடந்து விட்டது என்று வெளியே குதிக்க இருந்த இதயத்தை பிடித்து கொண்டு காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் ஓடினான் மறவன்.

 

அவனால் சாயாலியை சந்திக்கும் தைரியம் அற்றவனாய் உள்ளே செல்ல… உன்னை சந்திக்க நானும் தயாராக இல்லை என்ற நிலையில் கிடந்தாள் சாயா…

 

அவள் தந்தையை எந்த இடத்தில் அடித்து கொலை செய்தாளோ … அதே இடத்தில் கைகள் அறுபட்ட நிலையில் மயங்கி கிடந்தாள் சாயாலி….

 

” முட்டாள்… அடியே யாழிழிழிழிழிழிழிழி…ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ….‌ அவசரப் பட்டியே டி….  ” என தலையை பிடித்து கொண்டு வெறி பிடித்தவன் போல கத்தினான் மறவன்…

 

“ஐயோ மறவன்… சீக்கிரம் சாயாவை தூக்குங்க… ஹாஸ்பிடல் போகலாம்… பிளட் வேற ரொம்ப லாஸ் ஆகிடுச்சு ”  என தினேஷ் பதற… பித்து பிடித்தவன் போல கத்தினான் மறவன்…

 

அதே கதறலோடு அவளை கைகளில் ஏந்தி கொண்டு காரை நோக்கி ஓடினான்… பின்னால் ஓடிய தினேஷ் வேகமாக காரை எடுக்க.. மூவரும் மருத்துவமனையை நோக்கி பறந்தனர்.

 

மடியில் படுக்க வைத்தவன் அவளை தலை முதல் கால் வரை கண்ணீர் மல்க பார்த்தான்… ” நீ உன் அப்பாவை கடைசியா பார்த்த இடத்துக்கு வருவன்னு தெரியும் டி… ஆனால் அவர் போன இடத்துக்கே போகனும்னு நினைச்ச பார்த்தியா.. என்ன பத்தி கொஞ்சம் கூட யோசிக்களையா டி… கடைசி வரைக்கும் மத்தவங்களுக்காக மட்டுமே வாழ்ந்துட்டு போகலாம்னு முடிவு பண்ணிட்டியா… உனக்காக நான் இருக்குறது மறந்து போச்சா யாழி ” என அவள் கை காயத்தை பார்த்து கதறினான்.

 

எத்தனை கதறினாலும் சிறிது கூட அசையாமல் படுத்திருந்தாள் சாயா. அவள் அசையாமல் இருப்பது மறவனுக்கு மேலும் பயத்தை கொடுத்தது… ” தப்பான முடிவை எடுத்துட்ட யாழி… நீ திரும்ப என்கிட்ட வரனும்… வந்ததும் இருக்கு டி உனக்கு ” என சினம் கொதிக்க பேசியவன்..  அவளை நெஞ்சோடு அணைத்து கொண்டு கண்ணீர் விட… முன்னாள் அமர்ந்திருந்த தினேஷிற்கு தான் அவர்களை பார்க்க மனம் கனத்தது…

 

சேர்ந்து வாழ ஆரம்பித்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில் , இப்படி ஒரு நிலை இவர்களுக்கு வர வேண்டுமா என பரிதவித்து போனான்.

 

நேற்று சாயா வீட்டில் இருந்து சென்றவன்.. அவளுக்கென்று அவள் கணவன் வந்து விட்டான்.. மாற்றான் மனைவியை பார்த்தது எத்தனை பெரிய தவறு என்று அவன் மனம் எடுத்துரைக்க… கலங்கி நின்றான்.

 

இருந்தும் கணவன் இல்லாமல் பிரிந்து வந்தவள்… அதுவும் விவாகரத்து நிலைக்கு சென்றவள் என அறிந்ததால் தான் அவன் காதல் மேலும் வலுப் பெற்றது. இப்போது அவள் கணவன் குடும்பம் என வாழ ஆரம்பித்ததை நினைத்து ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும்.. மற்றொரு பக்கம் இதயம் வலித்தாலும் .. இந்த வலியை கடந்து வர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தான்.. அதற்கான தீர்வையும் கண்டறிய எண்ணினான்.

 

இனி அவளை நினைக்க கூடாது என மனம் நினைத்தாலும் , உண்மையாக காதலித்து விட்டான்… மறப்பதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும்… என அவனது வேலையை கவனிக்க சென்ற வேளையில் தான் இந்த சம்பவம் அவனை உலுக்கியது…

 

இதோ மறவன் அவள் மீது எத்தனை பெரிய அன்பை வைத்திருக்கிறான் என்பதை கண் கூடாக பார்த்து விட்டான்.. இதற்கு மேல் என்ன வேண்டும்.. இனி சாயா பிழைத்து வருவது மட்டும் தான் வேண்டும்… மீதி இருக்கும் காலங்கள் இவனோடு வசந்தமாக இருக்கும் என எண்ணியவன்… மருத்துவமனை முன்பு காரை நிறுத்தினான்.

 

காரில் இருந்து அவசரமாக அவளை தூக்கி கொண்டு உள்ளே ஓடினான் மறவன்…

 

அவன் கையில் இரத்தத்துடன் சாயாவை ஏந்தி வருவதை பார்த்த செவிலியர்கள் அவர்களை அழைத்து கொண்டு அவசர சிகிச்சை அறையில் அனுமதித்து மருத்துவரை அழைத்து வந்தனர்.

 

” சார் என்னாச்சு அவங்களுக்கு ”

 

” கையை கட் பண்ணிட்டா” என மறவன் உயிரே இல்லாமல் கூறினான்.

 

” சார் போலீஸ் கேஸ்… இன்பார்ம் பண்ணுங்க சார் ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணலாம் ” என அந்த மருத்துவர் பேச.. அவரது சட்டையை பிடித்து விட்டான் மறவன்.

 

” ஐயோ என்ன பண்ணிட்டு இருக்கீங்க… அவங்க ரூல் படி தான் பண்ணனும் மறவன் ” என தினேஷ் அவர்களை விலக்கி விட்டு, ” சாரி சார் உள்ள இருக்குறது அவங்க மனைவி.. அதான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டாங்க ” என அவரை சமன் படுத்தி.. ” நான் போலீஸ்ல இம்பார்ம் பண்ணுறேன் சார் ” என மறவனை அழைத்து கொண்டு தள்ளி சென்றான் தினேஷ்.

 

” இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா மறவன்… நமக்கு இப்போ சாயா தான் முக்கியம் கொஞ்சம் பொறுமையா இருங்க .. நான் போலீஸ்ல இன்பார்ம் பண்ணுறேன் ” என்றதும் அவசரமாக அவனை தடுத்தான் மறவன்.

 

” இரு தினேஷ்.. எனக்கு தெரிஞ்ச ஆபிசர் கிட்ட பேசலாம்.. இல்லைனா யாழிக்கு தான் பிரச்சனை … திரும்ப இந்த கேசை தோண்டி எடுப்பாங்க .. அதுக்கு நம்மலே வழி வகுக்க கூடாது ” என தனது அலைபேசியை எடுத்து அவனுக்கு தெரிந்த உயர் அதிகாரியிடம் பேசி மருத்துவம் மேற்கொள்ள அனுமதி வாங்கினான்.

 

பின் நினைவு வந்தவனாக தன் அன்னைக்கு அழைத்து அவர்களை மருத்துவனைக்கு வர கூறியவன் அமைதியாக அங்குள்ள சேரில் அமர்ந்து விட்டான்.

 

கண்களை மூடியவன் முன்பு அவளது யாழியே வந்து நிற்க… உயிரை கையில் பிடித்து கொண்டு அமர்ந்திருந்தான்.. ” கார்ல வரும் போது எந்த உணர்வும் இல்லாம வந்தாளே.. அப்போ கையை கட் பண்ணி ரொம்ப நேரம் ஆகிடுச்சு போல.. நிறையா ரத்தம் போயிடுச்சு .. அதுனால தான் உணர்வு இல்லாம இருந்திருக்கா.. ” என மனதில் பேசிக் கொண்டான்…

 

” அந்த கிறுக்கன் சொன்னா உனக்கு எங்க டி போச்சு அறிவு ” என அவளை சாடியவனுக்கு அப்போதே நினைவு வந்தது.. ” இவனை எப்படி மறந்தேன்.. ” என வேகமாக தன் அலைபேசியை எடுத்தவன் யாருக்கோ அழைத்து சில பல தகவல்களை கூறி விட்டு அமைதியாக இருக்க… அவன் செயல் ஒவ்வொன்றையும் கவனித்து கொண்டிருந்தான் தினேஷ்.

 

உள்ளே இருந்து செவிலியர்கள் ஓடுவதும் வருவதுமாக இருக்க, அதையே பதட்டத்துடன் பார்த்து கொண்டிருந்தான். எப்படியும் தன் யாழிக்கு எதுவும் ஆகி விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

 

அவன் நினைத்தால் மட்டும் போதுமா, அவள் நினைக்க வேண்டுமே.. அதோடு கடவுள் நினைக்க வேண்டுமே…

 

அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர்… கழுத்தில் இருந்த செதஸ்கோப்பை கழற்றி கொண்டு.. அவன்  அருகில் வந்தார்.

 

” நீங்க தானே பேஷண்ட் ஓட ஹஸ்பண்ட்” என கேட்டு வைக்க…

 

” ஆமா சார்.. யாழி எப்படி இருக்கா.. கண்ணு முழிச்சுட்டாளா ” என ஆர்வமாக கேட்க… தினேஷும் அதே எதிர்பார்ப்போடு அவர்களை நெருங்கினான்.

 

“சாரி மிஸ்டர் .. அவங்க இப்போ நல்லா கண்டிஷன்ல இல்ல.. பிளட் ரொம்பவே லாஸ் ஆகிடுச்சு.. இப்ப பிளட் அரேஞ் பண்ணா கூட அதுக்கு அவங்க ஒத்துழைப்பு வேணும்.. அவங்களுக்கு வாழ விருப்பம் இருக்குற மாதிரி எனக்கு தெரியலை… கான்சியஸ் வரதுக்கு கொஞ்ச கூட அவங்க மைண்ட் ஒத்துழைக்க மாட்டிது… இப்படியே போனா .. ஷி வில் டை டெபனைட்லி  .. சாரி டூ சே திஸ்… நீங்க வேணும்னா பேசி பாருங்க .. லாஸ்ட் சான்ஸ் ” என அவர் வெளியேற… மறவன் அங்கேயே வேரூன்றி போனான்..

 

தினேஷ் கூட இப்படி

ஒரு பதிலை மருத்துவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை..

 

மீண்டும் வருவாளா யாழி ???

 

சனா 💖

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்